கடைசியாக எனது பர்ஸ் எப்போது தொலைத்தேன் என்று நினைவில் இல்லை…ஒரு சின்ன பாக்கெட் சைஸ் நோட்டு புத்தகம் அதில் போன் நம்பர் நடுநடுவே ஐம்பது, நுறு ருபாய் தாள்கள்… சில்லரைகள் பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்வேன்…
பாக்கெட் சைஸ் நோட்டு புத்தகம் நைந்து போனால் அதில் ஒரு ரப்பர் பேன்ட் போட்டு அதனை கட்டுக்குள் வைத்துக்கொள்வேன்…
ஒரு முறை பாக்கெட்சைஸ் நோட் புக்கை இப்படி கட்டுக்குள் வைத்த ஒரு நாளில் என் காதலியான என் மனைவி முறைத்தாள்…
என்னடி முறைக்கிறே…