இரவு மணி ஒன்பதரைக்கு, அந்த கடைசி லெவன் எச் பேருந்தை நான் சென்னை பூக்கடை பேருந்து நிறுத்தத்தில் நின்று கை கட்டிய போது,ஷேர் ஆட்டோ தொந்தரவு இல்லாத காரணத்தால் சத்தியத்துக்கு கட்டுபட்டது போல மிக சரியாக அந்த வழித்தடத்துக்கு ஒதுக்கபட்ட நிறுத்தத்தில் அந்த பேருந்து நின்றது.
பேருந்தில் ஏறி முன்பக்கம் போய் டிரைவர் சீட் பக்கம் உட்கார்ந்து சாலையை வேடிக்கை பார்த்தேன்... என்ஜீன் இரைச்சல் அதிகமாக இருந்தது... கண்டக்டர் வருவார் என்று காத்து இருந்தேன்.. திரும்பினால் அவர் அரசமர பிள்ளையார் போல அவர் சீட்டில் குந்திக்கொண்டு இருந்தார்...
நான் காலையில் இருந்து படபிடிப்புகாரணமாக கால் வலியில் தவித்தேன்.. அதனால் அந்த என்ஜீன் சத்தம் என்னை டிஸ்டர்ப் செய்தது. பேருந்தில் என்னையும் சேர்த்து 4பேர் மட்டுமே...என்ஜீன் இரைச்சல் ரொம்பவும் கர்ணகொடுரமாக இருந்த காரணத்தால் நான் இந்த பயணத்தை இன்னும் ரசனையாக கழிக்க, பின்பக்கம் கண்டக்டர் சீட்டுக்கு எதிரில் இருந்த காலி இருக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டேன்.
அவர் நாசாவில் ராக்கெட் அனுப்புவது போல் சில பொத்தான்களை அழுத்த, கிருக் கிருக் என்ற கோஷத்துடன் அந்த கையடக்க எந்திரம் டிக்கெட்டை துப்பியது... கொடுத்த காசுக்கு கண்டக்டர் என்னிடம் டிக்கெட் கொடுத்து சில்லரையும் கொடுக்க, அதனை பர்சில் பத்திரபடுத்தினேன்...
அதற்குள் பேருந்து சென்ட்ரல் எதிரில் நின்றது.. இரண்டு பேர் ஏற.. பேருந்தில் அவர்கள் ஏறியதை பார்த்து உறுதி செய்துவிட்டு கண்டக்டர் விசில் கொடுக்க... பேருந்து தன் பயணத்தை தொடர்ந்தது..
இப்போது பேருந்தில் 6பேர் மட்டுமே...ஒரு பெண்மணி லேடிஸ் சீட்டில் முன் பக்க படி அருகில் உட்கார்ந்து இருந்தார்...ஏதோ ஸ்லோக புத்தகம் படித்துக்கொண்டு இருந்தார்.. மற்றவர்கள் எல்லோரும் ஆண்கள்....
பேருந்து புதிய தலைமைசெயலகத்து பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது...எப்போதோ திறந்து வைத்த புதிய தலைமைசெயலகத்தில் இன்னும் இரவு வேலைகள் நடந்து கொண்டு இருந்தது. ரிச்சி ஸ்டிரிட்சில் வேலை முடித்த பையன்கள் நாலு பேர் பேருந்தில் ஏறினார்கள்...
அந்த நாலில் ஒருபையன் கையில் வைத்து இருந்த சைனா மொபைலில் ,சத்தமாக..
என்னத்தர? என்னத்தர? ஐத்தானே, நீ என்னதரே என்று தில் படத்தின் பாடலை சத்தமாக பாட வைத்துக்கொண்டு இருந்தான்...
பேருந்து மவுன்ட்ரோட்டில் வேகமெடுத்தது டிவிஎஸ் நிறுத்தத்தில் நிற்கும் முன், ஒரு பைக் பேருந்தை மறிப்பது போல நின்றது, அதில் இருந்து இறங்கிய ஒரு நவநாகரிக பெண் கோபத்தில் இருந்தாள். உடையில் பயங்கர கவர்ச்சி தூக்கலாக இருந்தது...கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கி அவருக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்தாள். நான் பின்னால் வந்து உட்கார்ந்த செயலுக்கு என்னை நானே பாராட்டிக்கொண்டேன்.
ஆலையில்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பது போல அந்த பெண்னை கவனித்தேன். இறக்கிவிட்டவனுக்கும் அவளுக்கும் ஏதோ கோபம் போல.....அவள் உட்கார்ந்த நேரம் முதல் அவளுக்கு செல்போனில்
’“அழகாய் பூத்ததே சுகமாய்தாக்குமே அடடா காதலின்“
என்று பாடும் முன் அந்த செல்போனில் குரல் வலை நெறிக்கபட்டது. அழகாய் பூத்ததே...சுகமாய் தாக்குதே கட் செய்தாள்..திரும்பவும் செல்போன் அழகாய் என்று ஆரம்பிக்க, வெறியோடு கட் செய்து போனை சுவிட்ச் ஆப் செய்து தனது கைபையில் போட்டு உட்கார்ந்து கொணடாள்.
கலைந்த தலையை சரி பண்ண அவள் இரண்டு கைகளையும் தலைக்கு பின்னே இருக்கும் கிளிப்புக்கு அவளது கையை கொண்டு போகும் போது அவள் போட்டு இருக்கும் பனியனை மீறி அந்த முழு பரிமானமும் தெரிய அவள் என் பக்கம் தலை திருப்ப, நான் அவசரமாக தலை திருப்பிக்கொண்டேன்.
அப்படி சட்டென நான் தலை திருப்பியது அவளுக்கு என்னை பிடித்து விட்டது என்பதை அவள் கண்களில் பார்த்தேன்...கொஞ்சநேரம் கழித்து தனது குழலை சரிசெய்வது போல, அவள் என்னை கேஷுவலாக பார்த்துவிட்டு,நான் அவனை கவனிப்பது தெரிந்து சட்டென தலைதிருப்பிக்கொண்டாள்.
எனக்கு முன் இருக்கையில் ஒரு பெரியவர் உட்கார்ந்து இருந்தார். அவரை எந்த சவுண்டும் டிஸ்டர்ப் செய்யவில்லை.. அவர் பாட்டுக்கு மதிய இரண்டு மணிக்கு வெளிவந்த தமிழ் முரசுவை, இரவு பத்து மணிக்கு வரிக்குவரி கூர்மையாக படித்துக்கொண்டு இருந்தார்...
பேருந்து ஒன்வேயில் போய் பாண்டிபஜாரின் பாதிதெருவில் தன் தடத்தினை பதிக்க, பிக்பஜார் ஸ்டாப்பில் பேருந்து நிற்க்க.. நிறைய கூட்டம் ஏறியது....
காலி பேருந்து என்பதால் கூட்டம் முதலில் ஏறி எந்த சீட்டில் உட்காருவது என்று முடிவு செய்ய முடியாமல் இந்த பக்கமும் அந்த பக்கமும் அலை பாய்ந்தது , கூட்டம் ஓட்டமும் நடையுமாக பரபரத்து, கடைசியில் கிடைத்த சீட்டில் அதிஷ்ட்டம் இட்ட கட்டளைபடி உட்கார்ந்தார்கள்...
ஒரு பெண்மணி ஜன்னல் சீட்டை டார்கெட் வைத்து முன்னால் போக,அந்த இடத்தில் இரண்டு பெண்கள் வந்து உட்கார்ந்து விட சீட் இல்லாமல் பாவமாய் நின்று கொண்டு இருந்தார்...
நான் ஜன்னலோரம் உட்கார்ந்து இருந்தேன்.... எனக்கு பக்கத்தில் ஒரு எந்திரன் காதில் ஹெட்போனுடன் எந்த சலனமும் இல்லாமல் வந்து உட்கார்ந்தான்.
கடைசி பேருந்து என்பதேலோ என்னவோ பேருந்தில் கூட்டம் பிதுங்கியது..எனக்கு முன் உட்கார்ந்து இருந்த பெரியவர் தமிழ் முரசுடன் பாண்டிபஜாரில் இறங்கிவிட அந்த இடத்தில் ஒரு சின்ன பையன் வந்து உட்கார்ந்தான்...
எனக்கு பக்கத்தில் தீபாவளி பர்சேஸ் என்று நினைக்கின்றேன்.. ஒரு பெண்மணி நிறைய பொருள் வாங்கி, கால் இடுக்கில் பாதியும், கையில் பாதி பிடித்துக்கொண்டும், ஒரு கையால் மேல் கம்பியை பிடித்துக்கொண்டு இருந்தார்... அவர் ஜாக்கெட்டில் அக்குள் பகுதியில், ஷாப்பிங் வியர்வை, ஆமீபா படம் வரைந்து வைத்து இருந்தது...நான் அவர் கையில் இருந்த பொருளை வாங்கி வைத்துக்கொண்டேன்...என்னை நன்றி பார்வை பார்த்தார்.... இப்போது கொஞ்சம் ரிலாக்சாக நின்றார்...
பேருந்து போத்திஸ் எதிர் புறம் இருக்கும் பேருந்து நிறுத்ததிற்க்கு போய் நிற்பதற்குள் பேருந்து படாதபாடு பட்டது.. பாம் என்று ரொம்ப நேரமாக ஹாரன் அடித்தும் கூட, ஒரு ஆட்டோ ஜீன்சிடம் ரொம்ப சாவகாசமாக ரேட் பேசிக்கொண்டு இருந்தது....நானும் பேருந்து ஜன்னலோரம் எட்டி பார்த்தேன்...பொறுத்து பார்த்த டிரைவர் தலைநீட்டி,
போறம்போக்கு என ஆட்டோவை கத்த, ரேட் படிந்த அந்த ஜீன்ஸ் ஆட்டோவில் ஏறியதும், தரையில் பட்டாசு திரியை மட்டும் தரையில் கொளுத்தி போட்டால் இலக்கு இல்லாமல் சர் புர் என்று திரி எறிந்தபடி பறக்குமே அது போல அந்த ஆட்டோ ஜீன்சோடு காணாமல் போனது...
இப்போது திநகர் பர்சேஸ் கூட்டம் ஏற பேருந்தினுள் காற்று மெல்ல அடைபட்டு, வியற்வை நாற்றமும், சூட சூட வீட்டுக்கு கிளம்பும் போது, அவரவர்கள் அடித்துக்கொண்ட, அக்குள் நாற்ற மட்டுறுத்தல் வாசனை திரவியங்கள், அவரவர் சக்திக்கு ஏற்றது போல பலவாறாக இருந்த காரணத்தால், அதன் மிக்சிங் மற்றும் வியர்வை நாற்றம் எனது வயிற்றை புரட்டியது.. நகைகடையிலோ அல்லது துணிக்கடையிலோ காலையில் இருந்து, வாயிலில் நின்று கை கூப்பி ஒரே கலர் சேலை அணிந்தகொடியிடை பெண்கள், தங்கள் வேதனை மறக்க சத்தமாக சிரித்து ரசித்தபடி இருந்தனர்...
கண்டக்டர் டிக்கெட் டிக்கெட் என்று கத்தியபடி பெவிக்கால் இணைப்பில் இருந்து விடு பட்டு எழுந்து, பேருந்து உள்ளே நடந்தபடி டிக்கெட் கொடுத்தபடி விசிலடிக்க, பேருந்து புறப்பட்டு சின்ன குலுக்கலோடு சடன் பிரேக் அடித்து நின்றது.
ஒரு பாட்டி தனது மகளுடனும். பேரனுடன் பேருந்தில் அவசரமாக எறி எனக்கு பக்கத்தில் நின்றார்கள்....எனக்கு முன் சீட்டில், ஒரு சின்ன பையனும் , ஒரு ஆளும் உட்கார்ந்து இருந்தார்கள்....நான் பொதுவாக எழுந்து பெரியவர்களுக்கு சீட் கொடுக்கும் ரகம்தான், இருந்தாலும் அன்று காலையில் இருந்து படபிடிப்பில் அதிக வேலை காரணமாக எனக்கு அசதி மிகுதியாய் இருந்தது. எழுந்து எப்படி ? அந்த பாட்டிக்கு இடம் கொடுப்பது என்று இரண்டு மனதாய் நான் யோசித்து கொண்டு இருக்கும் போது, எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்து இருந்த கிராமத்து சின்ன பையன் எழுந்து பாட்டிக்கு சட்டென இடம் கொடுத்தான்....
அந்த பாட்டி உட்கார்ந்து கொண்டார் . எழுந்து இடம் கொடுத்த அந்த பையன் ஏதோ கடையில் வேலை செய்பவன் என்பதை அவன் உடுத்தி இருந்த சீருடை வெளிபடுத்தியது... அந்த பையன் எழுந்து இடம் கொடுத்தாலும், அந்த பையனின் கண்களில் அசதி நன்றாக தெரிந்தது... பாட்டிக்குமுன் இருக்கும் சீட்டின் கைப்பிடியில் அந்த பையன் உட்கார்ந்து இருப்பவருக்கு எந்த பிரச்சனையும் வராத வண்ணம் சீட்டின் கைபிடியில், சாய்ந்து நின்றுகொண்டான்...
அவனுக்கு இரண்டு பேர் தள்ளி பாட்டியின் மகளும், பேரனும் நின்று கொண்டு எங்காவது சீட் கிடைக்குமா? என்று பருந்து இரைதேடுவது போல பார்த்துக்கொண்டு இருந்தார்கள்..
பேருந்து நல்ல வெயிட்டோடு அதிக சத்தத்தை வெளிபடுத்தி துரைசாமி சப்வேயில் முக்கி முக்கி ஏறிக்கொண்டு இருந்தது... ஆயில் சரியாக மாற்றவில்லை போலும், ரோடு லாரி போல புகை கக்கியது... கண்டெக்டர் எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருந்தார்..
எனக்கு பின்னால் இருந்தவர் லொக் லொக் என பேருந்து வெளிபடுத்திய புகைக்கு இருப்பினார்.. உடனே கை குட்டை உதறும் சப்தம் கேட்க திரும்பி லோக்கினவனை பார்த்தேன்... கண்டக்டர் பண பையை கொள்ளை அடிக்க முயற்சி செய்பவனை போல, முகத்தில் முகமூடி கட்டி ஷோ காட்டிக்கொண்டு இருந்தார்...
பேருந்து லாங்விசில் அடித்து ஆரிய கவுடா ரோட்டில் நிற்க்க, இப்போது பாட்டி பக்கத்தில் உட்கார்ந்து இருந்த அந்த ஆள் இறங்கியதும் அந்த இருக்கை காலியாகியது....இடம் கொடுத்த அந்த பையன் உட்காரலாம் என்று எத்தனிக்க.. அந்த பாட்டி அவனை உட்கார விடாமல் தடுத்து விட்டு, தனது பேரனையும் மகளையும் பேர் சொல்லி அழைத்து தனது பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டது....சீட் கொடுத்த அந்த கிராமத்து பையன் அந்த பாட்டியை இது என்ன பிறப்பு என்று வித்யாசமாக பார்த்தான்.
எனக்கு கோபம் என்றால் கோபம் அப்படி ஒரு கோபம்... நறுக் என்று ஒங்கி பாட்டி நடுமண்டையில், நங் என கொட்ட வேண்டும் என்ற கோபம்... நறுக்கென கொட்டினால் எப்படி கத்தும் என்பதை கற்பனையில் நினைத்து பார்த்து சிரித்தேன்....
என்னால் அந்த செயலை பொருக்க முடியவில்லை எனக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவனிடம் இந்த செயலை சொல்லாம் என்றால்... அவ்ன் எந்திரனாக மாறி எந்த அசைவும் இல்லாமல் பாட்டுகேட்க்கொண்டு இருந்தான்.
சரி என பொறுக்க முடியாமல் அந்த பாட்டியிடம் கேட்டு வைத்தேன்...
ஏன் பாட்டி உனக்கு சீட்டு இல்லைன்னு நீ நின்னு தவிச்சப்ப... அந்த பையன் எழுந்து இடம் கொடுக்கலைன்னா? இன்னும் நீ நின்னுக்குனதான் வரனும்...
அவன் சின்ன பையனா இருந்தாலும் எவ்வளவு நல்ல பையனா நடந்து கிட்டான்... உன் பக்கத்துல சீட் கிடைச்சதும், உன் ரத்தம்னு உன் மகளையும், உன் பேரனையும் கூப்பிடுறியே???? உன்னை போல சயநலமா அந்த பையன் நினைச்சு இருந்தா? நி உட்கார்ந்து வரமுடியுமா? என்று கேட்டேன்...அந்த டிவிசீரியல் சுயநல பாட்டியிடம் பதில் இல்லை...
பாட்டிக்கு அவமானமாக இருந்தது. பேருந்தில் எல்லோரும் அவரையே பார்ப்பது பாட்டிக்கு பிடிக்கவில்லை... பாட்டிக்கு உறுத்தி இருக்க வேண்டும்... இதில் எனக்கு வருத்தம் என்னவென்றால் அந்த பாட்டியின் மகள் கூட உதவி செய்த பையன் உட்காரட்டும் என்று சொல்லாமல் உட்கார்ந்து கொண்டதுதான்...
அந்த பாட்டி ஏதோ சொல்ல வாய் எடுக்க அந்த பையன்...என்னிடம் விடுங்க சார்...இத்தனை வயசாயிடுச்சி... அவுங்களுக்கு அவ்வளவுதான் தெரியும் போல என்று விரக்தியிடம் சொன்னான்......
நான் ஏதோ தூக்கு தண்டனை அந்த பாட்டிக்கு வாங்கி கொடுத்து விடுவது போல, அந்த பாட்டி என்னை ஒரு பார்வை பார்த்தது.. இப்போது அந்த பாட்டிக்கு பேருந்தில் இருந்து சீக்கிரம் இறங்கினால் போதும் என்று இருந்தது..
எனக்கு அந்த சுயநலபாட்டியின் மூச்சு காற்று கூட என் பக்கம் வரகூடாது என்ற காரணத்தினால், நான் எழுந்து என் இருக்கையில் அந்த உதவி செய்த பையனை உட்கார வைத்து விட்டு, நான் இறங்கும் ஸ்டாப்புக்கு இரண்டு ஸ்டாப்புக்கு முன்னே நான் இறங்கினேன்....
எனக்கு கால் வலி பின்னி பெடல் எடுத்தது...என்னோடு திநகரில்
நகைகடையில் வேலை செய்யும் பெண்கள் நால்வர் இறங்கி சத்தமாக சிரித்தபடி நடக்க...எனக்கு கால் வலி ஒன்றும் பெரிதாய் தெரியவில்லை....
பேருந்து பாட்டிக்கு அது சாகும் போது கூட என் முகம் இனி மறக்காது என்று நினைத்து பார்த்த போது நான் என்னை அறியாமல் சிரித்துக்கொண்டேன்... கோபத்தில் அது நடு மண்டையில் கொட்டினால் எப்படி கத்தும் என்று நான் நினைத்து பார்க்க, நான் சத்தமாக சிரிக்க.. முன்னால் நடந்து சென்ற நாலு பெண்ணில் இரண்டு பெண்கள் சட்டென திரும்பி பார்த்தார்கள்.
அதில் கடைசியில் திரும்பி பார்த்து நடந்து சென்ற அந்த பெண் மிக அழகாக இருந்தாள்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
போட்டோ கிராபர் கதைக்கு இது நல்லா இருக்கு ஜாக்கி சார். உங்களிடமிருந்து இன்னும் எதிர்பாக்கறேன்.
ReplyDeleteReally nice...........
ReplyDeleteNice phase and genuine........
Keep it up anna
மிக நல்ல அப்சர்வேஷன் ! ! ! பாராட்டுகள் ! ! !
ReplyDelete//காலி பேருந்து என்பதால் கூட்டம் முதலில் ஏறி எந்த சீட்டில் உட்காருவது என்று முடிவு செய்ய முடியாமல் இந்த பக்கமும் அந்த பக்கமும் அலை பாய்ந்தது , கூட்டம் ஓட்டமும் நடையுமாக பரபரத்து, கடைசியில் கிடைத்த சீட்டில் அதிஷ்ட்டம் இட்ட கட்டளைபடி உட்கார்ந்தார்கள்...//
ReplyDeleteநம்ம ஊரில்மட்டும் தான் இது போல் நடக்கிறது . படித்தவன் படிக்காதவன் என்ற வித்தியாசம் இல்லாமல் .....இது என்ன ஒரு மனநிலை ? நிறைய முறை இதை பார்த்திருக்கிறேன் .... புது படம் ரிலீஸ் சமயம் டிக்கெட் சீட் நம்பர் இருந்தும் கதவைத் திறந்ததும் கூட்டம் அம்மும்..
//எனக்கு கோபம் என்றால் கோபம் அப்படி ஒரு கோபம்... நறுக் என்று ஒங்கி பாட்டி நடுமண்டையில், நங் என கொட்ட வேண்டும் என்ற கோபம்... நறுக்கென கொட்டினால் எப்படி கத்தும் என்பதை கற்பனையில் நினைத்து பார்த்து சிரித்தேன்....//
ReplyDeleteVERY NICE JACKIE
கதையும் அதை சொன்ன விதமும் அருமை அண்ணா....
ReplyDeleteஇதுபோல் இன்னும் நிறைய கதைகள் பிருந்தாவனத்தில் அலங்கரிக்கட்டும்.
நல்ல Observationஜாக்கி உங்களுக்கு.....
ReplyDeleteநடந்த நிகழ்வுகளை கோர்தீங்க பாதீங்களா அது இன்னும் அருமை...
ஆனா பையனுக்கு இடம் கொடுத்ததுல ஏதும் உள் குத்து உண்டா???
அந்த நாலு பொண்ணுங்களும் அந்த நிறுத்தத்தில் இறங்கியிருக்காங்க....
அதுல ஒரு பொண்ணு அழகா வேற இருந்தான்னு சொல்றீங்க..
:) :) :) :)
பின்னுட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்...
ReplyDeleteeppadi ippadi ellam
ReplyDeletekadhai ya illa unga anupavama?
dear jackie.. How you are writing like this.. Its really special type of skills u have ..
ReplyDeleteKonjam kooda vikalpam illama easya derive panni ezuthrenga... antha akkul ammeba matter.. ithu vari entha writerum ezuthiyathaga ennaku theriyavillai.. Keepit up..
Bala from Muscat.
dear jackie.. How you are writing like this.. Its really special type of skills u have ..
ReplyDeleteKonjam kooda vikalpam illama easya derive panni ezuthrenga... antha akkul ammeba matter.. ithu vari entha writerum ezuthiyathaga ennaku theriyavillai.. Keepit up..
Bala from Muscat.
dear jackie.. How you are writing like this.. Its really special type of skills u have ..
ReplyDeleteKonjam kooda vikalpam illama easya derive panni ezuthrenga... antha akkul ammeba matter.. ithu vari entha writerum ezuthiyathaga ennaku theriyavillai.. Keepit up..
Bala from Muscat.
//அவள் என் பக்கம் தலை திருப்ப, நான் அவசரமாக தலை திருப்பிக்கொண்டேன்.அப்படி சட்டென நான் தலை திருப்பியது அவளுக்கு என்னை பிடித்து விட்டது என்பதை அவள் கண்களில் பார்த்தேன்..//
ReplyDeleteஅப்படியா தல? பிடிக்குமா?
நாங்க எல்லாம் என்னிக்கிதான் இதெல்லாம் தெரிஞ்சுக்கப் போறமோ? :)
//எனக்கு கோபம் என்றால் கோபம் அப்படி ஒரு கோபம்... நறுக் என்று ஒங்கி பாட்டி நடுமண்டையில், நங் என கொட்ட வேண்டும் என்ற கோபம்... நறுக்கென கொட்டினால் எப்படி கத்தும் என்பதை கற்பனையில் நினைத்து பார்த்து சிரித்தேன்....//
ReplyDeletenice thala!
ஜாக்கி சார் கவிதைகள் அருமை.
ReplyDeleteஅன்பு ஜாக்கி,
ReplyDeleteவித்தியாசமான வாசிப்பனுபவம். வித்தியாசமான எழுத்தனுபாவமுமாகவே உங்களுக்குமிருக்குமென எண்ணுகிறேன்.
பிரமாதம்.
அன்பு நித்யன்.
GOOD STORY
ReplyDelete11H பேருந்தில் நானும் பயணம் செய்ததுபோல் இருந்தது.!!
ReplyDeleteஎங்கள் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள், உங்களுக்கும், குடும்பத்தினருக்கும்.
/*தரையில் பட்டாசு திரியை மட்டும் தரையில் கொளுத்தி போட்டால் இலக்கு இல்லாமல் சர் புர் என்று திரி எறிந்தபடி பறக்குமே அது போல அந்த ஆட்டோ ஜீன்சோடு காணாமல் போனது*/
ReplyDeleteஅருமையான கற்பனை