மைனா பார்க்கவேண்டிய பட்டியலில் இருந்தது ஆனால் அது பார்த்தே தீர வேண்டிய பட்டியலில் இந்த படம் மாறும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை...
மைனா எதிர்மறையான விமர்சனங்கள் அதிகம் படித்ததும் இரண்டு நாள் கழித்து பார்க்கலாம் என்று நான் தள்ளி போட்டது உண்மை. நேரமின்மையும் ஒரு காரணம்...
சத்தியமாக சொல்லுகின்றேன்... படத்தில் இன்டர்வெல் பிளாக்கின் போது சாமி நம்ம பார்த்துக்கும் என்று சுருளி சொல்லும் போதுவரை அந்த படத்தின் மீது எனக்கு ஈர்ப்பு வரவில்லை...
நிறைய படத்தின் பாதிப்புகள் படத்தில் இருந்து கொண்டே இருந்தது..
டைரக்டர் வேறு நிறைய பேசுகின்றார்.. பேட்டிகொடுக்கின்றார்... தொல்லைதாங்கலை என்பதாய் நண்பர்களிடத்தில் பேச்சு இருந்தது.. விமர்சனங்களும் சிலது அதை குறிப்பிட்டு இருந்தன. ஆனால் அவர் பேசலாம்.. அந்த அளவுக்கு உழைப்பு இருக்கின்றது..
பருத்திவீரனை ஊட்டி மலையில் வைத்து பார்ப்பது போலவே படத்தின் முதல்பாகம் இருந்தது..ஏனெனில் தமிழ் திரைப்பட வெளியில் பருத்திவீரனின் தாக்கம் அது போல....
ஆனால் இன்டர்வெல்லுக்கு பிறகு மைனாவையும் சுருளியையும் மூனாற்றில் ஒரு ஹோட்டலில் அந்த இன்ஸ்பெக்ட்ர் பாஸ்கர் நால்வருக்கும் சாப்பாடு சொல்லும் போது, அந்த இரண்டு நாள் தூக்கமின்மை இல்லாத விஷயத்தையும் அலைச்சலை முகத்திலும் கண்ணிலும் காட்டிய போது அந்த படத்தில் மெல்ல நான் நுழைய ஆரம்பித்தேன்... கதாநாயகன் சுருளியை விட அந்த பாஸ்கர் கேரக்டரின் மேன்லிநஸ் எனக்கு பிடித்து இருந்தது.. அதன் பிறகு நடக்கும் பேருந்து விபத்தும், திடுக் திருப்ங்களும், மைனாவை கழுகாக மாற்றியதற்கு ஒரே காரணம் திரைக்கதையில் அந்த கடைசி அரைமணி நேரம் புகுத்திய வேகம் என்பேன்...
முக்கியமாக காமன் மேனாக நான் படத்தில் உள்ளே நழைந்த இடம்... பேருந்து விபத்தில் மைனா சுருளியிடம்
போய் காப்பாத்து என்று சொல்லிவிட்டு.. அப்புறம் அவுங்களுக்கும் நமக்கும் என்னவித்யாசம் என்று கேட்கும் போது, படம் என்னை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டது..
மைனா படத்தின் கதை என்ன???
மைனா அப்பா குடிகாரன்... சுருளியின் அப்பா சீட்டில் பணத்தை விட்டு குடும்பத்தை கவனிக்காத ரகம்.. சுருளிக்கு படிப்பும் வரவில்லை...வாடகை பாக்கி தராத காரணத்தால் மைனா குடும்பத்தை வீட்டை வீட்டு துரத்தும் வீட்டு ஓனர்.. அதன் பிறகு மைனாகுடும்பத்துக்கு சுருளி பக்கத்தில் தனக்கு தெரிந்த பாட்டி வீட்டில் மைனா குடும்பத்துக்கு அடைக்கலம் கொடுக்கின்றான்..சின்ன வயது முதலே அவள் மீது ஈர்ப்பு பின்பு இருவருக்கும் காதலாக மாற...மைனா அம்மாவுக்கு இது புடிக்கவில்லை.. அதனால் மைனாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க, மைனா அம்மாவுக்கும், சுருளிக்கும் நடக்கும் தகராறில் அவள் தலையில் கல்லை எடுத்து போடபோக... அப்படியே போலிசில் மைனாவின் அம்மா கம்ளெயின்ட் கொடுக்க.. சுருளியை தூக்கி உள்ளே வைக்கின்றார்கள்...
தீபாவளி நாளை எனும் போது சிறையில் இருந்து தப்பித்து மைனா கல்யாணத்தை நிறுத்துகின்றான்- ஆனால் போலிஸ் அவனை சிறையில் இருந்து தப்பித்த காரணத்தால் போலிஸ் அவனை கைது செய்கின்றது... மைனாவோடுசுருளியில் வாழ்க்கை வாழ முடிந்ததா?? அதன் பிறகு என்ன?? போ போ போ போய் தியேட்டர்ல போய் படத்தை பாரு..
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
காவல்துறையும் மனிதர்கள் வேலை செய்யும் துறை.. அவர்களுக்கும் நெஞ்சில் ஈரம் இருக்கும் என்று காட்டிய இயக்குனர் பிரபுசாலமனுக்கு என் நன்றிகள்..
அந்த இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மைனா மீது கண் வைத்தாலோ அல்லது கற்பழிக்க முயற்ச்சித்து இருந்தாலோ.. இந்த படமும் பத்தோடு பதினொன்றாக போய் இருக்கும்.
ஒரு கைதி தப்பிப்து என்பது நம்மை பொறுத்தவரை திந்தியில் எட்டாம் பத்தியில் இருக்கும் ஒரு சாதாரண செய்தி.. ஆனால் ஒரு கைதி தப்பித்து விட்டால் சிறைத்துறையில் பொறுப்பில் இருக்கும் எத்தனைபேரின் தாலி அறுக்கும் செய்தி என்பது சம்பந்தபட்வர்களுக்கு மட்டுமே தெரியும்.
நாலு கேரக்டர்கள் வைத்து கொண்டு பின்னபட்ட திரைக்கதை..
சுருளி (விதார்த்) கூத்து பட்டறை ஆள்...முதல் பார்வையில் மனதில் நிற்க்க மறுக்கும் முகம்... ஆனாலும் பல இடங்களிலும் நடிப்பில் மிளிர்கின்றார்... பாடி லாக்வேஜ் இழுத்து இழுத்து பேசுதல் எல்லாம் வேறு ஒரு நடிகரின் நடிப்பாகவே எனக்கு படுகின்றது..ஆனால் அந்த பேருந்து விபத்துக்கு பிறகு அவரின் நடிப்பு யார் நடிப்பையும் நினைவு படுத்தவில்லை..
மைனாவாக அமலா.. ஒரு லிப்கிஸ் கொடுக்கின்றார்.. அந்த பெண்ணின் பெரிய பிளஸ் அந்த கோலிகுண்டு கண்கள்...நன்றாக நடித்து இருக்கின்றார்... பேருந்தில் எதிர்கால கற்பனையில் கொடுக்கும் காதல் ரியாகஷன் அற்புதம்..
சின்னவயிசுல இருந்து மருமகன் என்று சொல்லி உசுப்பி விட்டு இப்ப அவனை ஏமாத்ததினா எப்படி? என்று சொல்லும் மைனா அவள் அம்மாவிடம் போடும் சண்டையின் போது மைனா கேரக்டருக்கு நல்ல நடிப்பு...
வயிற்றில் உதை வாங்கி... நுரையுடன் எச்சிலை தரையில் துப்பும் மைனாவின் நடிப்பும்.. உதை வாங்கிய அடி பொறுக்கமுடியாமல் பெரியவர் காலில் விழுந்து கெஞ்சுவதும் தேர்ந்த நடிப்பு....
எல்லா ஊரிலும் நடக்கும் விசயம்தான்.. ஒரு பெண் இருக்கும் வீட்டில் எல்லா வேலையும் இன்று போய் நாளை வா படத்து பாக்கியராஜ் போல எல்லா வேலையும் செய்து கொடுக்க ஒரு ஆண்பிள்ளை இருப்பான்.. பெண்ணின் அம்மாக்கள் அவனை மருமகனே என்று கூப்பிட்டு உசுப்பு ஏற்றி தனது வேலைகளை சாதித்து கொள்வார்கள்... அது போலதான் மைனாவின் அம்மாவும்.....
மைனாவின் அம்மா யார் என்று தெரியவில்லை டீவிசீரியல் வில்லி பாத்திரத்துக்கு செமையான ஆள்.. நல்ல நடிப்பு அந்த அம்மா மறக்கமுடியாது ஆள்..
ஒரு காமெடியனாக இருந்து கொண்டு படம் முழுவதும் கலகலப்பையும் குணச்சித்தரரத்தையும் சுமக்கும் ராமையாவுக்கு இந்த ஆண்டின் சிறந்த குணச்சித்திர நடிப்புக்கான விருது நிச்சயம்...மிக முக்கியமாக மூணாறில் நடு ரோட்டில் போராட்டத்தில் ஈடுபடும் சுருளியோடு பேசும் காட்சி...
இமான் இசை என்பதை நம்பவே முடிவில்லை...அவ்வளவு அற்புதம் கைய புடி சாங் எனக்கு பிடிச்சி இருக்கு.
ஒளிபதிவு.. சுகுமார்... சென்னை வடபழனி குமரன் காலனியில் ராஜாங்க மத்திய வீதியில் நான் சென்னையில் நான் குடும்பத்தோடு வீடு வாடகை எடுத்து தங்கிய போது அந்த வீட்டின் எதிர் வீட்டுகாரர்இந்த படத்தின் ஒளிபதிவாளர் .அவர்எனக்கு நல்ல பழக்கம் என் ஒரு போட்டோவை கூட பெரிதாக்க சொல்லி அவரிடம் கொடுத்து இருக்கின்றேன்... அவர் அப்போது ஸ்டில் போட்டோகிராபர்... அவரின் வளர்ச்சி என்னை பிரமிக்கவைக்கின்றது.. நல்ல நண்பர்.. அப்போது.. இப்போது யார் என்று கேட்டாலும் ஆச்சர்யம் இல்லை......
ஒரு ஷாட்டில் வெறும் பந்தத்தை கொளுத்தி போலிஸ்காரர்கள் காட்டில் நடு இரவில் பயணிப்பதை எக்ஸ்போஸ் செய்து இருப்பதும், நிறைய ஆபத்தான பாதைகளில் கேமராவை தோளில் சுமந்து பயணித்து மைனாவை வேறுதளத்துக்கு கொண்டு சென்றதில் சுகுமாருக்கு ரொம்பவே பங்கு உண்டு.. பல பெரிய கேமராமேன்கள் இது போல ஒத்துழைப்பு கொடுத்த இருப்பது சாத்தியம் இல்லை... முக்கியமாக பேருந்து சாங் ஒளிபதிவு அருமை.
சிறைக்கு வரும் சுருளியை அடிப்பதும் தப்பி ஓடியதால் தனது குடும்பம் தீபாவளி கொண்டாடமுடியாமல் தவிப்பதும் என போலிஸ்காரர்கள் பக்க பிரச்சனைகளை டிடெயிலாக சொல்லி இருக்கின்றார்கள்..அதுக்கு ஒரு சபாஷ்..
மைனாவுக்கு சின்ன விஷயத்துக்கே தாங்காதவன் பெரிய விஷயத்துக்கு எப்படி தாங்குவான் என்பது ஏற்றுக்கொள்ளகூடியமுடிவுதான்..
என்னை பொறுத்தவரை அந்த பாஸ்கர் எனும் போலிஸ்காரர் நடிப்பு அபாரம்... சான்சே இல்லை.. தனது மனைவி கழுத்தை அறுக்கும் போது தியேட்டர் கர ஒலியிலும், எழுந்து நின்று கைதட்டும் போது மைனாவின் வெற்றி உறுதியாகின்றது... ரெயில்வே டிராக்கில் மட்டும் இந்த படம் முடிந்து இருந்தால் இந்த படம் ஓடுவது சந்தேகம்தான்...
இந்த படத்தின் வெற்றிக்கு மற்நும் ஒரு காரணம்... காதல் மறுக்கபட்ட தேசம் இது..கற்பனையில் கதாநயகனை அந்த இடத்தில் இருந்து எட்டி உதைத்து விட்டு அங்கே தன்னை பொருத்திக்கொள்வது தமிழ்நாட்டு ரசிகனுக்கு அவல் சாப்பிட்டது போல...
அலைகள் ஓய்வதில்லை படத்தில் கிளைமாக்சில் எ பிலிம் பை பாரதிராஜா என்று டைட்டில் போட்ட போது ராதோவோடு தன்னையும் இணைத்துக்கொண்டவர்கள்... அதனால் இந்த படத்தின் வெற்றி சந்தேகமில்லாத வெற்றி....
வயிற்றில் கும்மாங்குத்து குத்தும் கிளைமாக்ஸ் காதல் படங்கள் எல்லாம் தமிழகத்தில் வெற்றிபடங்கள்... உதாரணம் மூன்றாம் பிறை, காதல், பருத்திவீரன் போன்ற படங்களை சொல்லலாம்.... இது தமிழகத்தில் மட்டும் அல்ல உலகம் முழுக்க இது பொதுவான நியதி.
.
படத்தின் லாஜிக் சறுக்கல்கள்...
வாழ்க்கை பணயம் வைத்து ஜெயிலில் ரிமான்ட் பண்ண வேண்டிய கைதியை பேருந்தில் அழைத்து செல்ல வெயிட் செய்வது லாஜிக் மீறல்..நாமாக இருந்து இருந்தால் மூணாறு என்ன காஷ்மீராக இருந்தாலும் ஒரு டாக்சி பிடித்து இருப்போம்..
ஆனால் கதை அப்படித்தான் பயணிக்கும் எனும் போது கேள்விகள் கேட் முடியாது..
படத்தை பார்க்க போகும் போது தயவு செய்து கதை கேட்டு விட்டு படம் பார்க்க போக வேண்டாம்...
முணாறுலிருந்து இந்த படம் வேறு இடத்துக்கு தனது திரைக்கதையால் அழைத்துசெல்வதால் இந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம் வரிசையில் வருகின்றது...ஒரு ஒருமணி நேரம் இந்த படத்தின் கிளைமாஸ் கொஞ்சம் ஆட்டி வைத்தது
படத்தின் டிரைலர்..
படக்குழுவினர் விபரம்
Mynaa
Directed by Prabu Solomon
Produced by John Max
Written by Prabu Solomon
Starring Vidharth
Anakha
Music by D. Imman
Cinematography M. Sukumar
Studio Shalom Studios
Distributed by Red Giant Movies
AGS Entertainment
Release date(s) 5 November 2010 (2010-11-05)
Country India
Language Tamil
தியேட்டர் டிஸ்கி...
சென்னை காசியில் பார்த்தேன்..
எல்லா இடத்திலும் கேமரா ஆண்கள் டாய்லட்டிலும்...
காபி 20, பார்ப்கான் இருவது...
கழுத்து அறுபடும சீனுக்கு ஒயாத கைதட்டல்.. எழுந்து நின்று கைதட்டல்...
பிரபுசாலமன் நம்பர் இருந்தால் யாராவது கொடுங்கள் அவரிடம் கொஞ்சம் பேச வேண்டும்..
இந்த படம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.. ஆனால் தமிழில் இந்த படம் ஒரு மாற்று சினிமா....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
super. naalaikku pakka poren
ReplyDeleteJackie ...
ReplyDeleteEnna neenga padathai ivalavu late-va pakkarathu....
//இந்த படத்தின் வெற்றிக்கு மற்நும் ஒரு காரணம்... காதல் மறுக்கபட்ட தேசம் இது.//
ReplyDeleteநல்லா இருக்கு தல! உங்க விமர்சனம் பாக்கணும்! :)
அருமையாக உங்களுக்கே உரிய பானியில் அழகாக பதிவு செய்துள்ளீர்கள், எழுத்து நடை அற்புதம்ண்ணே,
ReplyDeleteமைனா கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய படம்...
பகிர்ந்தமைக்கு நன்றி
தீபாவளியில் ஜெயித்த குதிரையா இந்த மைனா.?!!
ReplyDeletenice review anne
ReplyDeleteஅன்புள்ள ஜாக்கி,
ReplyDeleteநான் படம் பார்த்துட்டேன் ..
உங்க விமர்சனத்துக்காக காத்துகிட்டு இருந்தேன்..
அருமையான படம். அருமையான விமர்சனம்.
நன்றி,
மு.செந்தில்.
அருமையான விமர்சனம் ஜாக்கி.
ReplyDeleteகதையோடு பயணிப்பது போல் உங்கள் விமர்சனம்..
Nice review..have to see this movie..
ReplyDeleteYour way of introducing movies are very good..
ரெயில்வே டிராக்கில் மட்டும் இந்த படம் முடிந்து இருந்தால் இந்த படம் ஓடுவது சந்தேகம்தான்...
ReplyDelete// Vazhi mozhigiraen..
Climax yaedho namma veetu thukkam pondru neenaikka vaithathum intha padathin vetri uruthee seigirathu..
Dear MR. Jackie,
ReplyDeleteUngal Vimarsanam miga arumai. Movie is very very nice, romba yatharathamana movie. I liked and loved the movie while watching. Last one hour romba oru ethirparpu.
Hats off to Maiyna.....
Rgrds,
Vijay,
Muscat
ஜாக்கி... திரு. பிரபு சாலமன் என் நண்பருக்கு நண்பர்... நல்ல ஆளுமையுள்ளவர். மைனாவின் வெற்றி எனக்கும் பெருமையாக இருக்கிறது. மைனா இன்னும் பார்க்கவில்லை.. தயார் தான்...
ReplyDeletepadam nanum parthen jackie.... nalla irukku. kandippaga parkavendiya lista sethathu sarithan.
ReplyDeleteபோ போ போ போய் தியேட்டர்ல போய் படத்தை பாரு..
ReplyDeletepathuruvom
உங்களுக்கே உரிய பானியில் அழகாக பதிவு செய்துள்ளீர்கள், எழுத்து நடை அற்புதம்ண்ணே.
ReplyDeleteMaynaa ennakkum pidichchirukku.
இதுதான் பார்த்தவுடன் எழும் உணர்வுடன் எழுதப்பட்ட சரியான விமர்சனம். இந்த படத்த முத நாளே பார்த்துட்டு பெரிய பருப்பு மாதிரி விமர்சனம் எழுதுன சில பதிவர்கள நினைச்சா பத்திட்டு வருது!!
ReplyDeleteபகட்டு இல்லாத பரி சுத்தமான விமர்சனம் . உங்கள் ரசனை மெருகு ஏறி கொண்டே போகிறது. வாழ்த்துக்கள் தலைவா ...................
ReplyDeleteபடத்தின் போஸ்டரைப் பார்க்கும் பொது ஏதோ தீவிரவாத கதையாக இருக்கும் என்று நினைத்தேன்.... pinbu கமல் கிளைமசைப் பாராட்டியதாக ரெட் ஜெயந்த் இந்த படத்தை வாங்கியாதாக அதை பார்த்திபன் பாராட்டியதாக குமுதத்தில் படித்தேன், பிரபு சாலமனின் காடு அனுபவத்தையும் அதில் படித்தேன்....... கண்டிப்பாக மாறுபட்ட படமாக இருக்கும் என்று நினைத்தேன்.... படத்தின் அடுத்த சீன் என்னவாக இருக்கும் என்ற என்னுடைய கணிப்பு தவறாக இருந்தது .... அதிலும் ட்ரெயினில் இறந்தது போலிசின் மனைவியாக இருக்கும் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தது முற்றிலும் தவறாக இருந்து... அப்படி இருந்திருந்தால் அது மாற்றுப் படமாக இருந்திருக்காது.... உண்மையிலே கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.. ஒளிபதிவாலரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்....
ReplyDeleteஆனால் உங்கள் தலைப்பு இந்த படத்தை ஒரு கம்மேர்சியால் படம் போல மாற்றி விட்டது...(மிகுந்த வருத்தம்)...
இந்த வருடத்தில் வந்த மிகச்சிறந்த திரைப்படங்களில் எனக்குப் பிடித்தது: எந்திரன் , அங்காடித் தெரு, ஆயிரத்தில் ஒருவன், விண்ணைத்தாண்டி வருவாயா, மதராசபட்டினம்....
மிகவும் எதிர்பார்ப்பது: நந்தலாலா...
உங்கள் வலைப்பூவை எனது கூகுள் ரீடரில் சேர்த்து விட்டேன்..
அருமையான விமர்சனம்...
அன்புடன்,
ஐன்ஸ்டீன்.ர
// மைனாவின் அம்மா யார் என்று தெரியவில்லை டீவிசீரியல் வில்லி பாத்திரத்துக்கு செமையான ஆள்.. நல்ல நடிப்பு அந்த அம்மா மறக்கமுடியாது ஆள்..//
ReplyDelete'மைனா' படத்தில் சுதா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்திருக்கும் சூசன், இயக்குநர் பிரபுசாலமனுடன் சென்னை திரையரங்கில் படம் பார்க்க சென்றபோது, பொது மக்கள் தாக்க முயற்சித்திருக்கிறார்கள்.
மைனா படத்தின் நாயகி சாவுக்கு காரணமான கதாபாத்திரமாகவும், கணவனுக்கு டார்ச்சர் கொடுக்கும் பிடிவாத கதாபாத்திரத்திலும் நடித்திருப்பவர் புதுமுகம் சூசன் ஜார்ஜ். பெங்களூரை சார்ந்த இவருக்கு இதுதான் முதல் படம். படத்தில் அனைவரையும் போலவே தனது கதாபாத்திரதிற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி திரையுலகினரிடையே பாராட்டை பெற்ற இவர் பொது மக்களின் கோவத்தையும் பெற்றிருக்கிறார்.
படம் பார்க்கும் பெண்கள் அனைவரும் இவரின் கதாபாத்திரம் வரும் காட்சிகளில் இவரை திட்டுகிறார்கள். இது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்ற சந்தோஷத்தில் சென்னை, வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் இயக்குநர் பிரபுசாலமனுடன் படம் பார்க்க சென்ற சூசன் ஜார்ஜ் பொதுமக்களுடன் அமர்ந்து படம் பார்த்திருக்கிறார். படம் முடிந்து வெளியே வரும்போது பொது மக்கள் இவரை அடையாளம் கண்டுள்ளனர். இவரை பார்த்ததும் கோவமடைந்த சில பெண்கள் இவரை அடிக்கவும் முயற்சித்திருக்கிறார்கள். எப்படியோ அவர்களை சமாளித்து சூசனை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தாராம் பிரபுசாலமன்.
ஜனநாயக கடமை செஞ்சாச்சி.
ReplyDeleteநன்றி ஸ்டாரே
நல்ல படம் என்று சரியான முறையில் விமர்சனம்.
ReplyDeleteநன்றி நண்பரே.
REGARDS,
PRASANNA
ஜாக்கி அண்ணே .. படம் பார்த்தாச்சு.. என்னோட வோட்டு தம்பி ராமையாவுக்கு தான்.. சான்ஸ் இல்லாத நடிப்பு.. அந்த கேரக்டர் இல்லன்னா கொஞ்சம் டவுட் தான்..
ReplyDeleteஇந்த படத்தின் வெற்றிக்கு மற்நும் ஒரு காரணம்... காதல் மறுக்கபட்ட தேசம் இது..கற்பனையில் கதாநயகனை அந்த இடத்தில் இருந்து எட்டி உதைத்து விட்டு அங்கே தன்னை பொருத்திக்கொள்வது தமிழ்நாட்டு ரசிகனுக்கு அவல் சாப்பிட்டது போல...
ReplyDeleteஅலைகள் ஓய்வதில்லை படத்தில் கிளைமாக்சில் எ பிலிம் பை பாரதிராஜா என்று டைட்டில் போட்ட போது ராதோவோடு தன்னையும் இணைத்துக்கொண்டவர்கள்... அதனால் இந்த படத்தின் வெற்றி சந்தேகமில்லாத வெற்றி....
SIR UNGA REVIEW KAGA TAN WAITING KANDIPPAGA PARKA VENDIYA PADAM