அப்படி நான் என்ன எழுதிவிட்டேன் நண்பர்களே.....???


இந்த பதிவு எனது சுயசொறிதல் அதுவும் சந்தோஷ சுயசொறிதல் என்பதால் முக்கிய வேலை இருப்பவர்கள்.. இந்த பதிவை கடந்து விடுங்கள்....

விரல் வெட்டி அடுத்த நேர்த்தி கடன்.. அரசு வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம்என்னைக்கும் இல்லாத திருநாளா நேற்று காலையிலேயே சாண்வெஜ் அண்டு நான்வெஜ் எழுதி போஸ்ட் செய்தேன்...

HANGOVER-2/2011 பேச்சிலர் பார்ட்டியும் அதனால் வந்த வினையும்.
இன்று  நண்பர்கள் திருமணத்துக்கு செல்லும் யாரும் காலையில் நண்பன் முகூர்த்த நேரத்தில் தாலி கட்டுவதை பார்த்ததே இல்லை..

ETHTHAN -2011-எத்தன் காமெடி ஜித்தன்காலையில் ஒரு போன் வந்தது...
அண்ணே நான் திட்டக்குடி கார்த்திக் பேசறேன்..

FLASH POINT-2007 ஹாங்காங்கின் ஆக்ஷன் அசத்தல்...
சார் ரொம்ப நாள் ஆயிடுச்சி...
என்ன  சொல்லற???

ஒரு ஆக்ஷன் படம் பார்த்து...


சென்னை/ஓசூர்/பெண்களுர்…. பயணப்பார்வை 26/05/2011
நேற்று இரவு பத்து மணிக்கு வாசக நண்பர் குறும்பழகனின் வீடு கோயம்பேடு  பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில் உள்ள தெற்க்காசிய விளையாட்டு குடியுருப்பில் உள்ளதால் எனது வண்டியை அவர் வீட்டில் போட்டு விட்டு, மனைவி குழ்ந்தையை காண பெண்களூர் கிளம்பினேன்...குறும்பழகன் என்னை பேருந்து நிலையத்தில் டிராப் செய்தார்....

சரி இரவு நேரப்பயணம்தானே டாஸ்மார்க்கின் டாப்ஸ்டாரின் கட்டிங்கின் உறுதுனையோடு உற்சாகமாக  பயணிப்போம்  என்று நினைத்தேன் பிறகு நண்பர் குறும்பழகன் வீட்டுக்கு செல்வதால் அதனை தவிர்த்து விட்டேன்...குறும்பழகன் எந்திரன் படத்துக்கு டிக்கெட் கொடுத்த நண்பர்.. அன்றிலிருந்து இன்று வரை அந்த நட்பு பயணப்பட்டுக்கொண்டு இருக்கின்றது...


JOB NEWS -வேலைவாய்ப்பு செய்திகள் -பாகம் /10

மாலதீவில் வேலைவாய்ப்பு  இருக்கின்றது நண்பர் ரவிசங்கர் அனுப்பிய வேலை வாய்ப்பு  செய்தி  கீழே.. விருப்பம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும்..
 =====================
Dear Mr. Jackie Sekar,

First of all I appreciate your efforts and service oriented approaches for job seekers via your blog http://www.jackiesekar.com/. I am an avid reader of your Blog and your openness in all the issues.

And definitely your JOB NEWS - வேலைசெய்திகள் section in your blog is good place for Job hunters.


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்)புதன்/25/05/2011


ஆல்பம்..

தேர்தல் முடிந்த பிறகு ஒரு ஆக்ரோஷமான பேட்டி ரிசல்ட் எப்படி இருந்தாலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களிடம் இருந்து வரும்... ஆனால் இந்த முறை அப்படி ஒரு பேட்டியை கலைஞர் கொடுக்கவேயில்லை, கனிமொழி குறித்த கவலைதான் எல்லாத்துக்கும் காரணம்...கலைஞரின் பேட்டிக்கு யார் காத்து இருக்கின்றார்களோ இல்லையோ? வட இந்திய மீடியாக்கள் கண்களில் விளக்குஎண்ணெய் ஊற்றிக்கொண்டு காத்து இருக்கின்றன..

=================================

JUST ABOUT LOVE ?-2007/ உலகசினிமா/பிரெஞ்/இதுதான் காதலா??டீன் ஏஜ் காதல் பெரும் பாலும் இனக்கவர்ச்சியாகவே இருக்கின்றது என்பது எல்லோருக்கும்  தெரிந்த விஷயம்தான்...எனக்கு தெரிந்து ஐந்து பர்சென்ட் காதல்தான்.. உண்மையான காதலாக அது கடைசிவரை நீடித்து இருக்கின்றது என்பேன்...

ஆனால் பெரும்பாலான டீன் ஏஜ் காதல்கள் உறுப்பு உரசல்கள் மற்றும் உடல்உறவு முடிந்தவுடன் சடுதியில் பிரிந்து விடுகின்றார்கள்....நம்ம ஊரில் இது சகஐமான விஷயம் இல்லை..ஆனாலும் இருக்கின்றது.. தெரியாமல் நடக்கின்றது...பட் பிரெஞ் தேசத்தில் இது  சர்வசாதாரணம்...... அப்படி ஒரு நான்கு ஜோடிகளை பற்றிய கதைதான் இந்த பிரான்ஸ் நாட்டு திரைப்படம்....


ஒருமணிநேரம் தாமதமாக மினி சாண்ட்வெஜ்...ஞாயிறு/22/05/2011

ஆல்பம்...

இந்த தேர்தலில் திமுக கழகம்  தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தாலும்..ஸ்பெக்ட்ராம் ஊழலில் கனிமொழி கைது பெரிய அவப்பெயராக போய்விட்டது..திமுக கழகம் இதை ஓரளவுக்கு எதிர்பார்த்து இருந்தாலும் ஜாமீன்கிடைத்து விடும் என்று நம்பிக்கையாக இருந்தது. ஆனால் எல்லாம் பொய்த்து போய்விட்டது..இதிலிருந்து மீண்டு கழகம் வெளிவரும் என்றாலும் நாட்களாகும் என்பதில் மாற்றம் இல்லை....70 நாட்களில் தொடங்கபட்ட டிவி... கலைஞர் டிவி என்று பெருமையாக சொன்னாலும் பணம் வந்த விதத்தை பார்க்கும் போது அந்த பெருமைக்கு இழுக்குதான்...

1999-(திரைவிமர்சனம்)புலம் பெயர் இலங்கை தமிழர்களின் முழுநீளத்திரைப்படம்....


பொதுவாக இலங்கை தமிழன் என்றால்  இந்தியாவில் இருக்கும்  அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் மக்களுக்கு முள்வேலியில் அவர்கள் சிந்திய ரத்தமும். எண்ணெய் காட்டாத தலைகளாய் அவர்கள் கதறலோடு ஷெல்லுக்கு பயந்து ஓடும் காட்சிகளும்தான் நினைவுக்கு வரும்... ஆனால் இந்த படம் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின்  வேறு  பக்க வாழ்க்கையை  சொல்லும் படம்..... 


THE NEXT THREE DAYS-2010-பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்...நீங்கள் உங்கள் குழந்தையோடு விளையாடிக்கொண்டு இருக்கின்றீர்கள். உங்கள் மனைவி வேலைக்கு போய் விட்டு வருகின்றார். வீட்டில் நுழைந்தவள் தன் ஓவர் கோர்ட்டில் இருக்கும் ரத்தகறையை கழுவுகின்றாள். போலிஸ் வந்து உங்களையும் உங்கள் மனைவியையும் அரெஸ்ட்  செய்கின்றது....உங்களை மட்டும் விடுவிக்கின்றது...

உங்கள் மனைவி கொலை செய்யவில்லை என்று கதறுகின்றாள்.. பட் சந்தர்பம் சாட்சிகள் உங்கள் மகைவிக்கு எதிராக இருக்கின்றது... உங்கள் காதல் மனைவியை 20 வருடம் உள்ளே தூக்கி போடுகின்றார்கள்...நீங்கள் ஒரு சாமன்ய மனிதாராக என்ன செய்வீர்கள்...?


ESCAPE CINEMAS சென்னை எஸ்கேப் சினிமாஸ் ஒரு பார்வை...சென்னையில் எல்லா தியேட்டர்களிலும் டிக்கெட் கிடைத்து விடும் ஆனால் சென்னை ராயப்பேட்டை  மணிக்க்கூண்டு அருகில் இருக்கும், எக்ஸ்பிரஸ்வென்யூவில் சத்யம் சினிமாவின் மற்றும் ஒரு அங்கமான எஸ்கேப் சினிமாவில், டிக்கெட் கிடைப்பது அபூர்வம்...

காரணம் நடுத்தர மற்றும் பணக்கார  இளசுகளின் பேவரிட் தியேட்டர்இதுதான்....பெரிய மாலில் இருப்பதால் ஷாப்பிங் முடித்து விட்டு அப்படியே ஒரு படத்தை பார்த்து விட்டு செல்ல நிறைய குடும்பத்தினர் வருகின்றார்கள்..முக்கியமாக காதலர்கள்.

விடுமுறை நாட்களில் டிக்கெட் கிடைப்பது குதிரைக்கொம்புதான்... நானும் பல நாட்கள் முயற்சி செய்து கடைசியில் அழகர்சாமியின் குதிரை படத்துக்கு தம்பி பரத் டிக்கெட் புக் செய்ய அதில் பார்க்கும் வாய்ப்பு  கிடைத்தது...ரஜினியின் உடல்நிலை....??


உலக அளவிலும் தமிழக அளவிலும் ஒரு மனிதனின் உடல்நிலையை  மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றார்கள்.. அந்த மனிதர் ரஜினி....

தமிழ்ரசிகனுக்கு ஸ்டைலை அறிமுகபடுத்தியவர்...ரஜினியின் பாடிலாங்வேஜை தமிழ்சினிமா ரசிகன்  வாழ்வில் அந்த பாதிப்பு இல்லாமல் கடந்து வருவது அபூர்வமே...


JOB NEWS - வேலைசெய்திகள் (பாகம்/9)

அன்பின் நண்பர்களுக்கு வேலை வாய்ப்பு செய்திகள், வெகு நாட்கள் கழித்து இப்போதுதான் வெளியிடுகின்றேன். வேலை தேடும் நண்பர்களுக்கு இது மிகவும்பயனுள்ளதாய் இருக்கும் என்று நம்புகின்றேன்....


================
நண்பர் சோமு ரவிச்சந்திரன் அனுப்பிய இந்த வேலைவாய்ப்பு தகவல் உங்களுக்கு உபயோகமாய் இருக்கும் என்று நம்புகின்றேன்..


=============================== 

Friends,


We have many job openings in our company, Movik Networks in Bangalore. See the attached list. Please forward to your friends and refer your friends.


Short Intro about Movik Networks:


Movik Networks is Boston,USA based Telecom startup company backed by leading US venture capital firms. The company is developing patented innovative technology for mobile broadband.  The company founders are IIT folks and has Telecom industry veterans as senior management team. Refer to www.movik.com for details. Movik provides excellent remuneration package (Salary + Stock options and etc.,).  


Regards,
-Ravi


1.    Development1.1.DEV-PS-3: Development Engineer, Platform ServicesLocation:                       Bangalore, India
Type:                              Full time, Regular
Experience:                   Junior/Mid-level
Salary:                            Negotiable, experience based
Hiring Timeline:             Immediate
Travel:                            Minimal

Description:

This job involves designing and developing platform services for ATCA-based carrier-grade network appliance for intelligent mobile content delivery, covering Gigabit packet processing, redundancy, load-balancing, system resource control, management frameworks, etc. The candidate would be an individual contributor responsible for delivering platform software services for ATCA based chassis.


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) புதன் 18/05/2011

ஆல்பம்...
இரண்டு வருடம் ஆகிவிட்டது...முள்ளிவாய்கால் துயரசம்பவம் நடந்து...நிராயுதபாணியானமக்களையும், வெள்ளைக்கொடிகாட்டி சரணடைய வந்தவர்களையும் சுட்டுக்கொன்றார்கள்.. மரித்து போன ஆத்மாக்களுக்கு அஞ்சலிகள். 
=========================================
மணல்கொள்ளையை மட்டும் தமிழகத்தில் தடுத்து நிறுத்தினாலே நாற்பது ஆயிரம் கோடிரூபாய் லாபம் கிடைக்குமாம்... கணக்கு போட்டு பார்த்தால் தலை சுற்றுகின்றது.....
===================================
சென்னையில் வெயில் வாட்டி வதைக்கின்றது..  இரு சக்கர வாகனத்தை எடுத்து செல்லும் அன்பர்கள் சிரமம் பார்க்காமல் தயவு செய்து நிழலான இடத்தில் பார்க் செய்து விட்டு செல்லவும்.. அப்படி பார்க் செய்யாமல்   வெயிலில் நிறுத்தி விட்டு, அதாவது ஒரு ஐந்து நிமிடம் கழித்து வந்து வண்டியை எடுத்து அதில் ஸ்டைலாக உட்கார்ந்து கிக்கரை உதைத்து கிளம்பியதும் பேன்ட், உள்ளாடை எல்லாத்தையும் தாண்டி ஆசனவாயில் பழுக்க கம்பியை காய்ச்சி இழுத்தது போல் சூடு சும்மா ஜிவ் என்று ஏறுகின்றது.... பீகேர் புல் நான் என்னைய சொன்னேன்.....

DRAGONFLIES-2001/உலகசினிமா/ நார்வே/ நண்பனின் துரோகம்சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டின்னு ஒருபழ மொழி இருக்கும்... அது போல நாம பாட்டுக்கு போய்கிட்டு இருப்போம் ஒரு சின்ன இடறல் நம்ம வாழ்க்கையையே மாற்றி போட்டு விடும்... நாம் நினைத்து கூட பார்க்க  முடியாது பிரச்சனைகளை எல்லாம் சந்திப்போம்... காரணம் சும்மா  இருந்த சங்கை எடுத்து ஊதியதால் வந்த பிரச்சனைதான்....அப்படி ஊதியவனின் கதைதான் இந்த படம்.....
 =================================


Azhagar Samiyin Kuthirai-2011-அழகர்சாமியின் குதிரை../உலகசினிமா/இந்தியாஊர் கோவில் திருவிழாவுக்கு நீங்கள் வசூலுக்கு போனதுண்டா?? நான் போய் இருக்கின்றேன்..அடுத்த மாதம் 15ம்தேதி திருவிழா ஆரம்பிக்க போகின்றது என்றால் ஒரு மாதத்துக்கு முன் 100 பக்க பைண்டிங் செய்யப்பட்ட  நோட்டு புத்தகத்தை எடுத்தக்கொண்டு காலை எழு மணிக்கு முப்பதில் இருந்து 40 பேர் வரை வீடு வீடாக போய் பணம் வசூலித்து வருவோம்....  பத்து மணிக்கு எல்லாம் ஒரு ரவுண்ட் அடித்து விடுவோம்... அது போல ஒரு மாதம் முழுவதும் தினமும் செல்வோம்...

சிலர் ஊர் கோவில் வசூல் என்றால்  எந்த பேச்சும் இல்லாமல் பணத்தை எடுத்து நீட்டி விடுவார்கள் சிலர் சாக்கு போக்கு சொல்லுவார்கள்.. அதனால் அவர்களை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அவர்கள் வீட்டுக்கு வசூலுக்கு போவது என்று கட்டம் கட்டிவிடுவோம்..


தாமதமாக மினிசாண்ட்வெஜ்அண்டு நான்வெஜ் /பதினெட்டுபிளஸ்/ஞாயிறு/15/05/2011

ஆல்பம்...

ஜெயின் ஆதரவு அலை என்று  ஒன்றும்  இல்லை.. கருணாநிதியின் கடுமையான எதிர்ப்பு வேறு ஆள் இல்லாத காரணத்தால் ஜெவிடம் கொடுக்கபட்டு இருக்கின்றது என்று சொல்கின்றார்கள்..எரியும் கொள்ளியில் இப்போதைக்கு நல்ல கொள்ளி.. சாரி நல்ல என்ற வார்த்தையை சொல்ல என்னால் முடியவில்லை என்று பேஸ்புக்கில் ஒரு நண்பர் வருத்த பட்டு இருக்கின்றார்... எல்லா விவாதங்களிலும் இந்த கருத்து முன்வைக்கபடுகின்றது...

=============================
ஹரி ஓம் என்று ஆரம்பிக்கும்முன்னமே அவ்வளவு பெரிய தலைமை செயலகத்துக்கே அந்த கதி என்றால் வீஏஓ தேர்வு எழுதியவர்கள் மற்றும்  அரசு வேலையை எதிர்பார்த்து காத்து இருக்கும் பலருக்கு ஜுரத்தில் கைகால்கள் நடுங்கிகிடக்கின்றார்கள்....ஜெ இன்னும் மாறவில்லை என்பதற்கு இது சிறந்த உதாரணம்...


மக்கள் சொன்ன சேதி என்ன??...முதல்வர் ஜெவுக்கு வாழ்த்துகள்...
என்ன பேசினாலும் என்ன எழுதினாலும் மக்கள் கொடுத்த தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே ஜனநாயகத்தின் மான்பு...நான் பொதுமக்களிடம் பேசிய வரையில் பல பத்திரிக்கை கருத்துகணிப்பு சொன்னவரையில் திமுக கழகம் ஜெயிக்கும் அல்லது இழுபறி என்றார்கள்...இதுதான் எல்லா பத்திரிக்கை தொலைகாட்சியும் சொன்னது.. நானும் சொன்னேன். ஆனால் இந்த இடத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும் தனித்தே ஜெ 168 சீட்டுக்கு மேல் வருவார் என்று சொன்ன ஒரே ஆள் துக்ளக்சோ மட்டுமே... மற்றபடி வேறு யார் கணித்ததும் தோல்வியை சந்தித்து.....

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) புதன் 11/05/2011

ஆல்பம்...
தினத்தந்தியில் சாணிக்கியன் சொல்.. என்று ஒரு பகுதி வரும்... பெரும்பாலும் காமெடியாக இருக்கும்...அது போல ஒரு முறை வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்று சொல்லி இருந்தார்... அதை பார்த்து சிரித்து விட்டேன்... ஆனால் சென்னையில் மதியம் இரண்டு மணிக்கு பைக்கில் டிராவல் செய்த போது சிக்னல் போட்டு இருந்தால் நான் அதுக்கு முன்னே எதாவது நிழல் இருந்தால் அததன் அடியில் நின்று பயணிக்க வேண்டியதாக இருந்தது...


சென்னையில் வெயில் பட்டையை கொளுத்துகின்றது... மரங்களின் மகத்துவத்தை நிழலில் நிற்கும் போது தெரிந்து கொள்ள முடிகின்றது.பாரின் போறவன் இந்தியாவுல செட்டில் ஆக மாட்டேன்கின்றான்...பெங்களூர் போறவன் ஏன் தமிழ்நாட்டுக்கு வரமாட்டான்னு இப்ப எனக்கு பிரியுது... 
====================

இரு சக்கர வாகனம் திடிர் என்று பஞ்சரானால்..இரு சக்கர வாகனம் பஞ்சர் ஆவது என்பது என்னை பொறுத்தவரை எதிர்பாராத சிராய்ப்பு இல்லாத சிறு விபத்து என்று சொல்லுவேன்..

விபத்து நடக்கபோகின்றது என்று நமக்கு முன் கூட்டியே தெரியாது அல்லவா அது போலத்தான்...அதுவும் என் கசின் பரத்தும் நானும் கடலூரில்  இருந்து பாக்சர்  பைக்கில் மிக வேகமாக வந்து கொண்டு இருந்த போது மதுராந்தகம் அருகே கருங்குழி என்ற இடத்தை கடக்கும் போது சட்டென  பின் டயரில் மவுத் அப்படியே பிடிங்கிக்கொள்ள, அப்படியே என்ஹெச் ரோட்டில் பைக்கில் இருந்து விழுந்து பிரண்டோம்...இரண்டு பேருக்கும் சின்ன சிராய்ப்பு மட்டுமே... அது போலத்தான் பஞ்சரும்....

என்ன பஞ்சர் ஆனால் வண்டி அலையும்..  பெரிய பஞ்சர் என்றால் இன்னும் அதிகமாக அலைந்து விழந்து தொலைய வேண்டியதுதான்..பஞ்சரில் மெதுவாக காற்று இறங்குகின்றது என்றால் உடனே பக்கத்தில் இருக்கும் பஞ்சர் கடை பக்கம் வண்டியை விட வேண்டியதுதான்.....


Urvashi Theatre Bangalore-தமிழக தியேட்டர் ஓனர்களே கவனியுங்கள்...
ஒரு தியேட்டடரில் படம் பார்த்து விட்டு அந்த  தியேட்டர் பற்றி  எழுத நீங்கள் நேரம் ஒதுக்குவீர்களா? படம் பார்த்தோமா? இல்லையா? அடுத்த வேலையை பார்க்க  போய்விடுவோம் பட்...  பட் இந்த தியேட்டரில் படம் பார்த்து விட்டு அப்படியே போக எனக்கு விருப்பம் இல்லை... 


நான் தொடர்ந்து 20 வருடங்களாக திரைபடங்கள் திரையரங்கில் பார்த்து வருகின்றேன்... என் சொந்த ஊர் கடலூரில் கூட... நல்ல தியேட்டர்கள் இல்லை.. குறிப்பிட்டு சொல்லக்கூடிய தியேட்டர்கள் என்றால்.. வேல்முருகன், கிருஷ்ணாலயா, நியூசினிமா இதுதான்  இப்போது கடலூர்வாசிகளின் எண்டர்டெய்னர்...

RONIN – 1998 - ரோனின் கார்ச்சேசிங் துரத்தல் 2200 ஷாட்.உயிரை கொடுத்து வேலை செஞ்சேன் மச்சான்.... இப்படி ஒரு டயலாக்கை நம்மில் நிறைய இடத்தில் கேட்டு இருப்போம்.... அப்படி உயிரை கொடுத்து வேலை செஞ்சு இருந்தா...? பேச அவன் இருக்கமாட்டான்..... ஆனா அந்த வேலை எவ்வளவு சிரமம்?... அது எந்த அளவுக்கு பெண்டை கழட்டிச்சின்னு சொல்லத்தான் அந்த வாக்கிய பிரயோகம்......


பட் உயரைக்கொடுத்து வேலை செய்பவர்களும் இருக்கின்றார்கள்... அணுஉலைகளில், இராணுவத்தில், பாம்ஸ்குவார்டில் என்று  கரணம் தப்பினால் எந்த நேரத்திலும் உயிர் போய்விடும் என்று தெரிந்து   வேலை செய்பவர்களும் இருக்கின்றார்கள்...ஒரு மணிநேரம் தாமதமாக மினி சாண்ட்வெஜ்அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) ஞாயிறு /08/05/2011

ஆல்பம்
 ===========
அன்னையர் அத்தனை பேருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துகள்..
===========
உங்களுக்கே தெரியாமல் உங்கள் வீட்டுக்கு பின்பக்கம் வந்து உங்கள் முகத்தில் பொளுக்கென்று குத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும்?சர்வ நாடியும் அலன்டு போய் அல்லவா கிடக்கும்.. அது போலதான்  இப்போது பாகிஸ்தான் நிலையும்.. அடி வாங்கிய வலிக்கு இன்னும் சோத்து ஒத்தடம் கூட கொடுத்து முடிக்காத நிலையில் திரும்பவும்  அமெரிக்கா  நேற்று வந்து உதைத்து விட்டு போய் இருக்கின்றது...இதில்  கொடுமை என்னவென்றால் எங்கள் நாட்டு இறையான்மைக்கு அமெரிக்கா குந்தகம்  விளைவித்து இருக்கின்றது என்று சொல்லி முடிக்கும் முன் கும்மாங்குத்து விழுந்து இருப்பதை என்னவென்று சொல்ல???
 ===============================

பீத்துணி..(.அன்னையர் தியாகம்)


உங்கள் மலத்தை நீங்கள் ரசித்து இருக்கின்றீர்களா?

யோவ் என்னய்யா சொல்லற... கருமம் கருமம்... அதை எப்படி ரசிக்க முடியும்--??

சார்... உங்க உடம்பில்தான் இத்தனை நேரம் இருந்துச்சி அது கீழ வந்ததும் அதை என் வெறுக்க வேண்டும்...?

யோவ் என் மலம்தான் ஆனால் அதனை வைத்து நான் எப்படி கொண்டாட முடியும்....கப்பு நாத்தம் என்னாலேயே தாங்க முடியலை....

என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க...?


100% LOVE-2011 TELUGU நூறு பர்சென்ட் காதல் ..தெலுங்கு திரைப்படம். திரைவிமர்சனம்முதலில் இந்த விமர்சனம் படிக்கும் முன் ஒரு விஷயம்....உங்களுக்கு தெலுங்கு தெரியுமா? தெரியாவிட்டாலும் கவலை இல்லை... நீங்கள் காதல்வயப்பட்டவரா? இல்லை என்றாலும் கவலை இல்லை... இந்த படத்தை உடனே போய் பாருங்கள்....கூடவே காதலியும் இருந்தால்  நலம்.....இந்தக்கோடை வெயிலில் காதலை கொண்டாடி மகிழ ,ஒரு படம்.....திரைப்படத்துக்கும் காதலுக்கும்  மொழி ஒரு பொருட்டு அல்ல......

============

 
எந்த காதலனுக்கும் தானே இந்த உலகத்தின் சிறந்த ஆண்மகன் என்று தான் நேசிக்கும் பெண் நினைக்க வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்கும் உண்டு... அரென்ஞ்சடு மேரேஞ் திருமணங்களில் கூட கணவன் தன்னையே உயர்வாய், பெருமையாய் நேசிக்க வேண்டும் என்பது ஆணது இயல்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது...அப்படி இல்லை என்று சொல்லும் ஆண் வெளி வேஷம் போடுகின்றார் என்று அர்த்தம்...

பொசசிவ் மட்டும் ஆண் பெண் உறவில் வந்து  விட்டால் அது நரகவேதனைதான்... ஆனால் அந்த கோட்டை  வாழ்க்கையில் இரண்டு பாலரும் தொட்டுவிட்டே வாழ்க்கை படகில் ஏறவேண்டிய கட்டாயத்தில் இருப்பதுதான் கொடுமை... சரி பொசசிவ் என்றால் என்ன?? இந்த படத்துக்கு நான் எழுதிய மேட்டரை சின்ன சிறுகதையாக எழுதி இருக்கின்றேன்.. வாசித்து விட்டு திரும்பவும் படியுங்கள்..possessive- அதீதபற்று .. சிறுகதைஎனக்கு பிடித்த எல்லமே என் காதலிக்கும் பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை...அவள் என் அடிமையும் அல்ல.. அவள் ரத்தமும் சதையுமான மனுஷி... ஆனால் சில நேரங்களில் வாழ்க்கையில் ஏட்டு சொரக்காய்கள் கறிக்கு உதவுவது இல்லை....

எனக்கு சிக்கன் பிரைட் ரைஸ் பிடிக்கும்
அவளுக்கு தயிர்சாதம்


Engeyum Kaadhal-2011 /எங்கேயும் காதல்... திரைவிமர்சனம்.என் காதலி கே 70 சென்னை மாநகர பேருந்தில் வர வேண்டும்... அவள் அண்ணாநகர் கிழக்கில் இருக்கும்,  வள்ளியம்மாள் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தாள்....ஆனால் அன்று வரவில்லை... 

மிகச்சரியாக அந்த பேருந்து  காலை எட்டு மணிக்கு வடபழனி சிவன் கோவில் பேருந்து நிலையத்தை கடக்க வேண்டும்... அவள்  குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் தினமும் ஏறுவாள்... ஆனால் அன்று பேருந்தில் அவள் இல்லை...

SOURCE CODE-2011/திரைவிமர்சனம்.ரன் லோலா ரன், வின்டேஜ்பாயின்ட், போன்ற  வெற்றி திரைப்படங்களின் திரைக்கதை உத்தியோடு வந்த இருக்கும் இந்த படம் தற்போது ஆக்ஷன் படம்  ரிலிஸ் ஆகவில்லையே என்று பரிதவித்து போய் இருக்கும் ஆக்ஷன் ரசிகனின் மனக்குறையை இந்த படம் தீர்க்கின்றது...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டுபிளஸ்)புதன்04-05-2011

அல்பம்...

இன்னைக்கு கத்திரி ஸ்டார்ட் ஆயிடுச்சி... சென்னையில நிச்சயம் வெயில் கொளுத்தும்.... இப்ப நான் பெண்களுர்... குளு குளுன்னு இருக்கு... சென்னைவெயிலை நினைச்சாலே அஸ்தியில ஜுரம் வருது...
=======
மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி என்பது போல பாகிஸ்தானுக்கு இரண்டு பக்கமும் அடி.... ஒரு பக்கம் தாலிபான்கள் துரோகி என்று சொல்கின்றார்கள்..அதனால்தான் லேடன் இறப்புக்கு பாக் ராணுவம் காரணம் அல்ல என்று ஸ்டேட்மேன்ட் விடுத்து இருக்கின்றார்....ஒரு பக்கம் ஒசாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு அமெரிக்கா ரிவிட் அடிக்கின்றது... எது எப்படியோ பாகிஸ்தான் வேஷம் கலைந்து போய் விட்டது...
=================

vanam-வானம் திரைவிமர்சனம்.மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்ட திரைக்கதை படங்கள் நாம் நிறைய பார்த்து இருக்கின்றோம்..  உதாரணமாக 21கிராம்ஸ், பேபல் போன்ற திரைப்டங்களை உதாரணமாக சொல்லலாம்.. அது போலான திரைக்கதை வடிவம், சிம்பு பரத் நடித்து வெளிவந்து இருக்கும் வானம் திரைப்படம்....
 ==============


மிக தாமதமாக மினி சாண்ட்வெஜ்..01/05/2011 ஞாயிறு..

ஆல்பம்....

ஒரு நல்ல செய்தி ஒரு கெட்ட செய்தி... ஆனால் இதில் இரண்டுமே சந்தோஷமான செய்தி...

நல்ல செய்தி...
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் திருமணம்.. பையன் சுமார்தான்... ஆனா பொண்ணு செமை என்று தமிழகத்து சீரியல்  அதிகம் பார்க்கும் பெண்கள் சொல்கின்றார்கள்... வில்லியம் அப்பாவும் அப்படித்தான்...அவுங்க அம்மா டயனா செமை.....இந்த திருமணத்தால் ஜடியில் யூகே பிராஜக்ட்டில் இந்தியாவில் வேலை செய்பவர்களுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை... இதைதான் கிராமத்தில் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிக்கட்டும் என்று.......


Nenu Naa Rakshasi-telugu திரைவிமர்சனம்.சில படங்கள் டைரக்டருக்காகவே  பார்க்கலாம்.... எனக்கு பூரிஜெகந்நாத் படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு போய் உட்காருவேன்...காரணம் அவரின் மேக்கிங்... மற்றும் ஸ்டைல்.. மிகச்சிறந்த உதாரணம்  தெலுங்கு போக்கிரியை சொல்லுவேன்...தெலுங்கில் எனக்கு பிடித்த இரண்டு சினிமா பிரம்மாக்கள் இருக்கின்றார்கள்... ஒருவர் பூரி மற்றவர்..திருவிக்ரம்....சென்னை, சேலம்,ஈரோடு,கோபி,சத்தி,மைசூர்,வழியாக பெண்களூர் பயணம்

 
பெரிய சூவாரஸ்யம் இல்லாத மிக நீளமான ஒரு பயண பதிவு இது...அதனால் ஜுட் விட விருப்பம் உள்ளவர்கள் என்னோடு பயணப்பட வேண்டியதேவையில்லை...பத்துவருடம் கழித்து நானே படித்தாலும் இந்த தொடர்பயணமும் நான் சந்தித்த மனிதர்களும் என் நினைவில் வருவார்கள்... அதற்க்காகவே இந்த பெரிய பதிவு...

கோபியில் ஒரு போட்டோ ஆல்பம் டெலிவரி செய்யவேண்டும்..அப்படியே பெண்களூர் போக வேண்டும்... இதுதான் பிளான்...வியாழன் இரவு  ஏழரை மணிக்கு கிளம்பினேன்... நண்பர் சையத் ஏற்காடு எக்ஸ்பிரசில் 100 ரூபாய்க்கு  காலையில் ஈரோடு போய் விடலாம்... அங்கிருந்து கோபிக்குஅரைமணி நேரப்பயணம் என்று சொன்னார்... நான் சென்டரலுக்கு போய் அலைய முடியாததையும்  என்னிடம் நிறைய வெயிட் இருக்கின்றது என்றும் சொன்னேன்.


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner