ஒரு அராஜக சென்னை ஹவுஸ் ஓனர்...
சொந்த வீடு வாங்கி விட்டாலும் நண்பர்களுக்கு உறவுகளுக்கு வீடு தேடுவது எனக்கு வாடிக்கையாகிவிட்டது. காரணம் எனது அத்தை வீடு திண்டிவனம் அவர்களது பிள்ளைகள் இரண்டு பேருக்கு சென்னையில் தங்க வீடு பார்க்க சொன்னார்கள். சென்னைக்கு வந்து சுற்றி வீடு தேட முடியாது என்பதால் என்னிடத்தில் சொன்னார்கள்....அதில் ஒரு கொம்பு முளைத்த அவுஸ் ஒனர் பற்றிய பகிர்தல் கிழே...எப்படி எல்லாம் இருக்கின்றார்கள் பார்....என்பதற்க்காக...இந்த பதிவு
என் அத்தை பெண் அம்புத்தூரில் ஒரு கம்பெனியில் வேலை செய்கின்றார். அவள் அண்ணாநகரில் ஒரு லேடிஸ் ஹாஸ்டலில் ஒரு அறையில் மூன்று பெண்கள் தங்கி இருக்கம் ஒரு அறையில் உள்ள கட்டிலுக்கு மாதம் 4500 ரூபாய் வாடகை கொடுத்து தங்கி இருக்கின்றாள்.. இரண்டு வேளை சாப்பாடு கொடுக்கின்றார்கள். ஆனால் அதுக்காக ஒரு கட்டிலுக்கு 4500 ரூபாய் என்று வாங்கும் சம்பளத்தையே வாடகையாக வாங்கி கொள்கின்றார்கள். என்பதால் என் அத்ததை என்னிடம் வீடு பார்க்க சொன்னார்.
அவளது தம்பி கிண்டி பொறியியல் கல்லூரியில் படிக்கின்றான்... இருவருக்கும் ஒரு சிங்கிள் பெட்ரூம் வாடகைக்கு எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதாலும் இரண்டு பேர் தங்கலாம் என்பதாலும் நான் 4000ம் மாத வாடகையில் வீடு பார்க்க ஆரம்பித்தேன். பெண் பிள்ளை இருப்பதால் கொஞ்சம் டீசன்டான இடத்தில் இடம் பார்ப்போம் என்று ராமபுரத்தில் மியோட் மருத்துவமனை பக்கம் பார்த்தேன்...அங்கு மியோட் பக்கத்தில் சாஸ்திரி நகரில் இடம் பார்த்தேன். புரோக்கர்தான் காட்டினார்.
எட்டு வீடுகள் கொண்ட வீடு அது. காசு சேர சேர கட்டிய வீடு என்பது அதன் அமைப்பை பார்த்ததுமே தெரிந்து விட்டது.ஹவுஸ்ஓனர் அந்த வீட்டில் இல்லை. அந்த வீட்டு ஒனர் குணசேகரன் சென்ட்தாமஸ் மவுன்ட்டில் வீடு. சிங்கிள் பெட்ரூம்தான். மாதவாடகை 4000ஆயிரம் என்றார்கள். சரி என்றேன்... இரண்டு பேர்தான் அக்காவும் தம்பியும் என்று சொல்லியாகிவிட்டது.. அதனால் வாடகை 3750 போட்டுக்கொள்ள சொன்னேன். அவரும் ஒகே சொல்லி விட்டதாக புரோக்கர் சொன்னார்..
புரோக்கர் எனக்கு ஒரு மாத வாடகை கமிஷன் என்றார்.. யோவ் பக்கத்து தெருவுல மளிகை கடை வ்சிக்கினு இப்படி வீட்டை காட்டிட்டு 3750ரூபாய் கேட்குறியோ மனசாட்சி இல்லை என்றதும் புரோக்கர்... 2500ரூபாய் கொடுத்தால் போதும் என்று ஒத்துக்கொண்டார்.
நான் ஹவுஸ்ஓனர் குணசேகருக்கு போனில் தொடர்பு கொண்டேன்.. நீங்கள் என்ன உறவு வீட்டில் எத்தனை பேர் என்று எல்லாம் கேட்டார்...வீட்டில் தங்க போகும் பசங்களின் அப்பா அம்மாவை என்னிடம் நேரில் வர சொல்லுங்கள் என்று சொன்னார்... நானும் எனது மாமா ஒரு கிராமத்து பள்ளியில் தலைமை ஆசிரியர் அவர் வந்து உங்களை சந்திப்பார் என்றும் சொன்னேன்.
என் மாமாவிடம் ஹவுஸ்ஓனர் நம்பர் கொடுத்து பேசவும் செய்தேன். சனிக்கிழமை நேரில் வந்து வீட்டை பார்த்து விட்டு அட்வான்ஸ் கொடுத்து விட்டு செல்வதாக சொல்லிவிட்டோம். முதல் நாள் எத்தனை மணிக்கு வரவேண்டும் என்று கேட்டு விட்டு,சனிக்கிழமை விடியலில் எனது மாமா திண்டிவனத்தில் இருந்து 4 மணிக்கே பேருந்து எறி.. நங்கநல்லூரில் இருக்கும் எனது இன்னோரு உறவினரையும் அழைத்துக்கொண்டு தங்க போகும் பசங்களையும் அழைத்துக்கொண்டு நேரில் ஹவுஸ்ஓனரை பார்க்க சென்ட்தாமஸ்மவுன்ட் சென்றோம்..
இதில் கொடுமை என்னவென்றால் வீடுதான் இதோ கிடைக்கபோகின்றதே என்று முதல் நாள் இரவே ஹாஸ்டல் ரூம் எல்லாம் வெக்கேட் செய்து ஒருநாள் இரவுக்கு மட்டும் தங்க பணம் கொடுத்து மறுநாள் காலை புது வீட்டுக்கு போகும் மூடில் மூட்டை மூடிச்சிகளுடன் என் அத்தை பெண் வந்தாகிவிட்டது. அவளது தம்பியும் அப்படியே...பரோக்கரும் எங்கள் உடன் வந்தான். வழியில் ஒரு போன்... அக்கா தம்பிக்கு நாங்க வீடு கொடுக்க மாட்டோம்.. யாராவது பெரியவங்க கூட தங்கவேண்டும் என்றுஒரு குண்டை தூக்கி போட்டார்கள்.
என் அத்தைக்கு இப்போதுதான் ஆபரேஷன் செய்தார்கள் அதனால் அவரால் வரமுடியாத நிலை. நான் என்ன சொல்கின்றேன் என்றால் ஒரு வீட்டை வாடகைக்கு கொடுப்பது கொடுக்காமல் போவது என்பது ஒரு ஹவுஸ் ஒனரின் விருப்பம்... அதில் யாருக்கு தலையிட உரிமை இல்லை.
புதன்கிழமை பார்த்த வீடு.. சனிக்கிழமை வரை உம் உம் என்று மண்டையை மண்டையை ஆட்டி விட்டு நேரில் போய் அட்வான்ஸ் கொடுத்து சாவி வாங்க போகும் போது இப்படி சொல்வது எந்தவிதத்தில் நியாயம்.
ஹவுஸ் ஓனர் என்றால் தலையில் ரெண்டு கொம்பு முளைத்த கொம்பு மயிறா???
நாங்க சின்ன பசங்களுக்கு வீடு கொடுக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனால் எல்லாம் பேசி ஹாஸ்டல் எல்லாம் காலி செய்து விட்டு நடு ரோட்டில் வைத்து வீடு இல்லை என்று சொன்னால் எப்படி???
ஒரு தகப்பனை வேலைமெனக்கெட்டு அழைத்து வர சொல்லிவிட்டு என் மாமாவை நேரில் பார்த்து, அந்த வீட்டை 4500ரூபாய்க்கு வாடகை விட்டு விட்டேன் உங்களுக்கு வீடு இல்லை என்று சொன்னால் கூட பரவாயில்லை...
அப்புறம் என்ன மயித்துக்கு போனில் பேசினே...?? நேரில் வந்தா தரேன்னு ஏன் சொல்லனும்.. இருந்த ஆத்திரத்துக்கு அவன் கைகல கிடைச்சி இருந்தா.. ஜென்மத்துக்கு வாடகைக்கு வரபவனை கிள்ளுக்கீரையா நினைக்க முடியாத படி பண்ணி இருப்பேன்..
புரோக்கர் உஷாராக என்னிடம் அவுஸ்ஓனர் வீட்டை காண்பிக்கவில்லை...புரோக்கருக்கு ஓத்தாம்பட்டு வீட்டேன். 2500ரூபாய் நோவாம நோம்பு குளிச்சி திங்கற இல்லை...இப்ப வந்து சொல்லறே....அவன் குடுக்கமாட்டான்னுட்டு...
இதனால் அறியபடுவது யாதெனில்...
1.அட்வான்ஸ் கொடுத்து கீ வாங்கும் வரை இருக்கும் இடத்தை காலி செய்யாதே..
2. சென்னை ஹவுஸ் ஓனர் எல்லாரையும் வாக்கு சுத்தமானவங்கன்னு நினைக்காதே.
3. ஒரு சிலரை தவிர மத்த எல்லா ஹவுஸ் ஓனருக்கும் அலம்பானா என்ற எண்ணம் மனதுக்குள்.
4.வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசினாலும் சிலது சொதப்பும் ஜாக்கிரதை.
எல்லாத்தை விட கொடுமை என்னவென்றால் அந்த வீட்டை பார்த்தால் அதுக்கு 3000ஆயிரத்துக்கு மேலாயா? என்று வியப்பீர்கள்.
ஒரு ஹவுஸ் ஓனர் வீடு கொடுக்கமாட்டேன் என்று சொல்லி நடு தெருவில் நிற்க்கும் போதே ஒரு அனாதை பிலிங் வருதே...அப்ப அகதிங்க எல்லாத்தையும் இழந்து, வீடு இழந்து வாசல் இழந்து, எல்லாத்தையும் இழந்து குடும்பத்தோடு நடுத்தெருவில் நிற்க்கும் போது எப்படி இருக்கும்...????
அவன் வீடு கொடுக்காதது கூட பிரிச்சனை இல்லை மறுநாள் எத்தனை மணிக்கு வந்து உங்களை பார்க்க வேண்டும் என்று திண்டிவனத்தில் இருந்த எனது மாமா கேட்ட போது.. காலையில எட்டு மணிக்கு எல்லாம் வந்துடுங்க அதுக்கு அப்புறம் எனக்கு புடுங்கும் வேலை இருக்குன்னு அப்பாயின்மேன்ட் எல்லாம் கொடுத்தான் பாரு.. அதுதான் எனக்கு மனசே ........
குறிப்பு....
எங்க பசங்க ரெண்டு பேருக்கும் ராமாபுரம்,முகலிவாக்கம், போருர் ,மதனந்தபுரம் ஜங்ஷன் இங்க எல்லாம் சிங்கள் பெட்ரூம் 4000ஆயிரத்தல பஸ் ஸடாப்புக்கு 5 நிமிட நடைபயணத்தில் ஏதாவது காலிவீடு இருந்தால் சொல்லவும்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல அட்வைஸ்! :-)
ReplyDeleteஎன்ன பண்ணலாம் இவனுகளை? அந்நியன்தான் வரணும்!
unmai
ReplyDeleteசென்னைல இந்த ஹவுஸ் ஓனருங்க தொல்லை தாங்க முடியலை.
ReplyDeleteஇவனுகள என்ன பண்ணலாம்..
ReplyDeleteசென்னைல மட்டுமில்ல திருப்பூர்லயும் இந்த நிலமை தான்,,
நீங்க சொல்லிருக்க நாலு பாயிண்ட்டும் நச்.
//அகதிங்க எல்லாத்தையும் இழந்து, வீடு இழந்து வாசல் இழந்து, எல்லாத்தையும் இழந்து குடும்பத்தோடு நடுத்தெருவில் நிற்க்கும் போது எப்படி இருக்கும்...????//
டச்சிங்..
இந்த கொடுமை எல்லா ஊருலயும் தான் நடக்குது... நாம வீடு கட்டி அவங்களுக்கு வாடகைக்கு விட்டுதான் பழி வாங்கனும் :)
ReplyDeleteவேற வழி... இல்லாதவன் நிலைமை இதான் :(
இவனுகளை எல்லாம் திருத்தவே முடியாது!
ReplyDeleteஇவனுக அராஜகம் நாளுக்கு நாளூ எல்லை மீறிக்கிட்டு இருக்கு, பாத்திக்கப்படுறது எல்லாம் நடுத்தர மக்கள்னால அப்பிடியே அமுங்கிப் போயிடுது...! இது அரசாங்கம் ஒரு முடிவு கட்டனும், வரைமுறைகள் ஏற்படுத்தனும்! யாரும் கோர்ட்டுக்குப் போனால் கூட நல்லது!
ReplyDeleteJackie,
ReplyDeleteNalla kudumabathula irunthu vantha intha mathiri panna mattaanga.....
இப்படியே விடாதீங்க ஜாக்கி... அந்த நாய் வீட்டை கண்டுபிடிச்சு இங்க எழுதுனது எழுதாது எல்லாத்தையும் நேர்ல பாத்து கேளுங்க...
ReplyDeleteநல்ல விழிப்புணர்வுடன் சிந்திக்கக்கூடிய தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள் அருமை,
ReplyDeleteஇந்த பிரச்சினையை நானும் சென்னையில் தங்கியிருந்தபோது சந்தித்திருக்கிறேன்...
தொடரட்டும் உங்கள் பணி
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 3
ReplyDeleteசென்னைல இந்த ஹவுஸ் ஓனருங்க தொல்லை தாங்க முடியலை.//
ரமேஷ் அண்ணே உங்கள யாராவது டார்ச்சர் பன்றாங்களா சொல்லுங்க தூக்கிருவோம்...
இதுக்கே இப்டி சொல்றீங்களே, தாம்பரம் பக்கம் லாம் இன்னும் பெரிய அநியாயம் நடக்குது. எந்த ஒனரும் வாங்குன அட்வான்ஸ் ல பாதி காசு தர்றது இல்ல...
ReplyDeleteவிட்டு தள்ளுங்கன்னோ, போட்டு தள்ளுங்க தல இவிங்கள எல்லாம்னோ சொல்ல மனசில்ல...
ReplyDeleteஇருப்பினும், அவர்களுக்கு கூடிய சீக்கிரம் ஒரு நல்ல வீடு கிடைக்க பிரார்த்திக்கிறேன்...
ஹவுஸ் ஓனர்னாலே அராஜகம் புடிச்சவங்கதான், அந்த நாய்ங்க எல்லா ஊருலயும் இருக்கானுங்க, அவனுங்கள அகதியா வாழ வச்சா சரியா போகும், இந்த பிச்சைகார நாய்ங்களே ரோட்டில வெட்டியா சுத்திட்டுதான் இருந்திருப்பானுங்க, அவனுங்க அப்பனோ, தாத்தனோ மண்டைய போட்டு ஓசியில கிடைச்ச சொத்தாதான் இருக்கும், உழைச்சு சம்பாதிச்சவனுக்குதான மனுசனோட அருமை தெரியும், இவனுங்க் மாதிரி ஓசியில மஞ்ச குளிக்கர நாய்ங்களுக்கு அத பத்தி என்ன தெரிய போகுது, அந்த நாதாரி பயலோட போன் நம்பர் இருந்தா குடுங்க, அவன ஒரு வழி பண்ணனும்.
ReplyDelete/மாணவன் said... 11
ReplyDelete//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 3
சென்னைல இந்த ஹவுஸ் ஓனருங்க தொல்லை தாங்க முடியலை.//
ரமேஷ் அண்ணே உங்கள யாராவது டார்ச்சர் பன்றாங்களா சொல்லுங்க தூக்கிருவோம்...
///
hehe
ஜாக்கி அண்ணாவுக்கு,
ReplyDeleteஅந்த வீட்டு உரிமையாளர் எங்கே இருக்கிறார் என்பது தற்போது தேவை இல்லை. அவருடைய அலைபேசி எண்ணையும் அவருடைய அல்லக்கை அந்த ப்ரோக்கரின் அலைபேசி எண்ணையும் கொடுக்கலாமே.
எனது நண்பர் ஒருவர் புலிகள் நன்றாக இருந்தபோது ஈழ தமிழர்களை அங்கே சென்று சந்தித்தார். அங்கே கொடுத்து உபசரிக்க எதுவும் இல்லையென்றாலும் மனம் நிறைந்தது என்றார். அதே மக்கள் புலிகள் இல்லாமல் அனாதையாக இப்போது நிற்பதை வருத்தப்பட்டு சொல்கிறார். மாற்று உடைக்கே வழியில்லாமல் இருப்பவர்களிடம் வீடு என்னவாயிற்று என்றெல்லாம் கேட்க முடியாது
சார் உங்களோட கோபம் மிக உன்னதமானது..
ReplyDeleteநானும் சென்னை ல் வீடு தேடி ரொம்ப அலுத்து போனவன்..
அதுவும் கல்யாணமாகாமல் வீடு தேடுவது ரொம்ப பாவம்..
கடைசில் ஒரு ஓனர் கொடுப்பதாக சம்மதித்தார் அதுவும் எனது அலுவலகத்திலிருந்து
உத்தரவாதம் கொடுப்பதாக இருந்தால்..
எப்படியோ ஒருவழியா வீடு வாடகை எடுப்பதற்குள் என் டவுசர் கேழண்டு போச்சு..
நீங்க சொல்ற அந்த தருதல ஓனர் மட்டும் கைல கெடச்சா மவன் செத்தான்..
கடைசில் உங்க வரிகளில் ஒரு ஈரம்.
நம்ம சகோதர சகோதிரிகள் நிலை..
எல்லாம் இருக்கும் நமக்கே இந்த நிலைனா அவங்களுக்கு சொல்லவே வேணாம்..
single bedroom houses easily available at Ambattur or Padi , Rent below 3000/- to 3,500/-
ReplyDeleteplease search through Net.
More buses available to Guindy from Ambattur (70)
இந்த எழவுக்கு தான் நான் சென்னைல வேலை கிடைச்சும் கேரளா சைடு ஒதுங்கிட்டேன். இங்கே அந்த கொடுமை இல்ல
ReplyDeleteஉங்க வீட்ல நீங்க ரெண்டு பேர் தான இருக்கிங்க.பேசாம உங்க வீட்ல தங்க வச்சிக்கலாமே.
ReplyDeleteஉங்கள் உணர்வுகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றி.. இந்த பதிவு பார்த்து வாடகை வீடுகள் இருக்கின்றது என்று சொன்ன சூர்ய கண்ணன் மற்றும் நண்பர்களுக்கு என் நன்றகிள்...
ReplyDeleteநான் வீட்டில போய் சத்தம் போடுவதாய் இருந்தேன் என் அத்தைதான் தடுத்துவிட்டாள்.
பசங்களுக்கு பேருந்து வசதி பக்கத்தில் இருப்பது போல பார்க்கின்றேன்.
என் விட்டில் இருந்து ஒன்னரை கிலோமீடட்ர் நடந்தால் பேருந்து நிறுத்தம் அதனால்தான் இல்லையென்றால் என் வீட்டில் தங்க வைத்துகொள்வேன்..
போன் நம்பர் போட்டு இருப்பேன்.. வேண்டாம் என்றுதான் விட்டு விட்டேன்.
ஒரு ஆதங்கம் எப்படியெல்லாம் இருக்கறானுங்க என்று சொல்லவே இந்த பதிவு.,..
பெரியவிங்க இல்லாம வீடு கொடுக்காமாட்டேன் முடிஞ்சுது... உனக்கு எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அதை விட்டு விட்டு நேருல வாங்க அது இதுன்னு சொல்லிட்டு பார்க்காம கூட கொடுக்க முடியாதுன்னா என்ன அர்த்தம்??
ஒரு விட்டை யாருக்கு கொடுக்கனும் கொடுக்ககூடாதுன்னு கூட தெரியலைன்னா நீ எல்லாம் எதுக்கு??? வாயில வருது..