சென்னை வடபழனி முருகன் கோவில், ஒரு பார்வை…
அண்ணன் உண்மைதமிழனை விட அதிகம் என் வீட்டில் உச்சரிக்கபடும் வார்த்தை, அப்பனே முருகா ! இந்த வார்த்தையை என் அப்பா சொல்லாத நாள் இல்லை... அப்பா தீவிர முருகபக்தர். சின்னவயதில் இருந்தே முருககடவுள் மேல் என் வீட்டு நபர்களுக்கு தீவிர பக்தி உண்டு.
எனக்கு நினைவு தெரிந்து என் அப்பா எங்களை பழனிமுருகன் கோவிலுக்குதான் அழைத்து சென்றார்… ஆனால் நடுவில் நிறைய புத்தகங்கள் வாசிக்கும் போது கடவுள் எது என்றகேள்வி வந்தது… சுஜாதாவும் அவர் பங்குக்கு குழப்பி விட… கடவுள் எப்படிபட்டவர்.?? அவர் நல்லவரா? கெட்வரா? போன்ற வினாக்கள் என்னோடு பயணித்தகாரணத்தாலும் என் கிராமத்தில் நடக்கும் பல மூட பழக்கவழக்கங்களை கண் எதிரே பார்த்த காரணத்தாலும், கடவுள் மேல் வெறுப்பு வந்தது.
வெள்ளிக்கிழமை தவறாத கோவிலுக்கு போகும் பழக்கத்தையும் குளித்து முடித்து விபூதி இட்டுக்கொள்ளும் பழக்கமும், நான் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை பாலோ செய்தேன்… அதன் பிறகு அறவே தவிர்க்க ஆரம்பித்தேன்… எனக்கு தெரிந்த கண் கண்டகடவுள் சூரியன்தான்… அதைதான் பூமி சுற்றிவருகின்றது. அந்த வெளிச்சத்தில் விவசாயம் போன்றவை எல்லாம் என்பதால் நான் சூரியனை சேவிப்பேன்… சரி அப்போது சூரியனை படைத்தது? யார்??? ஆம் அது ஒரு சக்தி… இதுவரை அதற்கு உருவம் இல்லை…
நம் முன்னோர்கள் மன திருப்திக்கு உருவங்கள் வைத்து வழிபடுகின்றார்கள்…நடுவில் கோவிலுக்கு எல்லாம் போகாமல் இருப்பதை பார்த்து விட்டு என் அம்மா ரொம்பவும் பயந்து விட்டாள்.. எப்போதுவது கோவிலுக்கு போகும் போது வா… அம்மாவுக்காக வா வாதம் செய்யாதே. அன்பே கடவுளா? சரி ஒத்துக்குறேன்… கோவிலுக்கு வந்து அமைதியா இருக்க பாரு… என்று எனக்கு அம்மா அட்வைஸ் செய்து என்னை அழைத்து செல்வாள்…
இப்போது கோவிலுக்கு தெவறாது செல்லும் பழக்கம் எல்லாம் இல்லை.. என்னை அழைத்தால் போவேன்…கோவிலில் நடக்கும் விஷயங்களை தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பேன்.. எனக்கு மீறிய ஒரு சக்தி உலகத்தில் உண்டு என்பதை நான் திடமாக நம்பிகின்றவன் நான் அம்புட்டுதான்.
வடபழனி முருகனுக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும் என்று மனைவி விருப்பபட அதற்கு 120ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று என் மனைவி சொன்னாள்… நானும் இரண்டு நாட்களுக்கு முன் கவுன்டரில் பணம் கட்டும் போது சனிக்கிழிமை காலை எழுமணிக்கு வர வேண்டும் என்று சொன்னார்கள்…
சென்னை வந்த புதியதில் இரண்டு முறை வடபழனி கோவிலுக்கு சென்று இருக்கின்றேன்… அதன் பிறகு தொழில்நிமித்தமாக நிறையதடவை போய் இருக்கின்றேன்… கோவில் முன்பைவிட நன்றாக வளர்ந்துவிட்டது..
காலை கோவிலில் மனைவியும் நானும் போய் உட்கார்ந்தோம்…. முதலில் ஐயர் ஒரு குஜாவில் உள்ள தண்ணீரை எல்லோருக்கும் ஊற்றினார்.. இது எல்லாம் எனக்கு புதுசு...அது கை கழுவிக்கொள்ள என்று சொன்னாள்… நல்லவேளை அவள் சொல்லவில்லை என்றால் தீர்த்தம் என்று நினைத்து அதைனை குடித்து விட்டு தலையிலும் தடவி இருப்பேன்…
முருகனும் காலையிலேயே எனக்கு பல்ப் கொடுத்த சந்தோஷத்தில் அன்றைய தினத்தை கழித்து இருப்பார்…இன்னும் நிறைய பல்ப் வாங்குவேன் என்பதை நான் அப்போது உணரவில்லை..
அடுத்து ஒரு தட்டில் மாலை எடுத்து வந்து அதை தொட்டு எல்லோருடைய பேரு, ராசி, நட்சத்திரம் கேட்க என் மனைவியை சொல்ல சொன்னேன்.. ஏனென்றால் எனக்கு சொல்ல தெரியாது..
எழு மணிக்கு வர வேண்டிய மலையாள குடும்பம் ஒன்று 8 மணிக்கு இடம் கிடைக்காமல் தவித்தது.. காரணம் நன்றாக தெரிந்து விட்டது… மூன்று குழந்தைகள்… அவர்களை கிளம்பி குளிப்பாட்டி உடை அணிவித்து அழைத்து வருவது சாத்தியம் அற்ற செயல்… அதனால் லேட்டாகி இருக்கலாம் என்று நினைத்தேன்…
அந்த இரண்டு குண்டு பெண்ணின் முகங்கள் மலேசியாவில் இருந்து வந்து இருக்கின்றோம் என்று சத்தியம் செய்ய, 100 ரூபாய் தாளை கொடுத்ததும் அவர்களுக்கு முருகன் சிறப்பு வழியில் அருளீனான்.
முதலில் வடபழனி முருகன் கோவனத்துடன் ஆண்டி கோலத்தில் காட்சி கொடுத்தார்…
முருகன் ஸ்டைலாக இடுப்பில் கை ஊன்றி வேல் வைத்து நின்ற ஸ்டைல் எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது…
அதன் பிறகு பாலில் குளியல்… பக்தகோடிகளுக்கு பால் கொடுக்கவேண்டும் என்பதால் அந்த பால் சேகரிக்கபட்டது…
….ஒரு ஐயர் பாத்திரம் சேகரித்தார்… சக்கரை டப்பா போல ஒரு பாத்திரதை எடுத்து என் மனைவி நீட்டினாள்… நான் பாலுக்கு எதுக்கு இத்தனை பெரிய பாத்திரம் என்று கடிந்து கொள்ள விஷயம் தெரியலைன்னா கம்முன்னு இருங்க என்றாள்… நான் சுவிட்ச் ஆப் ஆனேன்…
திரை போட்டு கொஞ்சநேரம் கழித்து முரசு முழங்க திரைவிலக்கபட முருகன் சந்தனகாப்பு அலங்காரத்தில் மிக அழகாய், அழகு என்ற சொல்லுக்கு முருகன் என்பது போல காட்சி அளித்தார்…மிக அழகாய் இருந்தார்.
தீப ஆராதனை காட்டபட்டது ஒரு ஐயர் எடுத்து வந்த கற்பூர ஆரத்தி தட்டில் என் மனைவி பத்துரூபாய் போட செய்கை செய்ய….நான் முருகனுக்கு வேண்டுகோள் வைக்கும் முன், நான்எந்திரன் ரோபோ போல், எதிர் கேள்வி கேட்காமல் ரூபாய் பத்தை தட்டில் போட்டேன்… அதே போல் என்னை போல் பல கணவர்கள் கண் அசைவுக்கு செய்கைக்கு ஏற்றது போல இருபது ,ஐம்பது,நூறு என ஐயர் தட்டில்விழுந்தது.
ஒரு ஐயர் அண்ணாமலை ரஜினிபோல் பால் கேனில் பால் எடுத்து வந்து, எல்லோருடைய பாத்திரங்களிலும் ஒரு டம்ளர் அளவுக்கு பால் ஊற்றினார்… எல்லோரும் சேவித்து விட்டு கோவிலை சுற்றி வரும் போது…. பால் அபிஷேக சீட்டு வாங்கியவர்கள் எல்லாம் அம்மன் சன்னதிக்கு வர சொன்னார்கள்… அங்கும் பேர் ராசி சொல்லி ஜயர் மந்திரம் சொல்ல,இந்த முறை பத்து போட சொல்லி சிக்னல் வர அவள் திரும்பிய நேரத்தில் என் கையில் ரூபாய் 5 வர. அப்படியே தட்டில் போட்டேன்…5 ரூபாய் மீச்சம் என்று மனது நினைத்துக்கொண்டது..
படைத்த பொருட்கள் வாங்க போக தட்சணமூர்த்தி சன்னதி போக சொன்னார்கள்… அங்கு ஒரு ஜயர் உட்கார்ந்த படி பிரசாதம் கொடுத்து மாலையை கழுத்தில் போட்டு, ஒரு தட்டில் தேங்காய், மற்றும் பழம் வைத்து கொடுக்க எனக்கு முன் வைத்த தம்பதி வாங்க தட்டை இழுக்க அது ஐயர் கையில் இருந்து வரவில்லை… அதை அவர் இழுத்து பிடித்துகொண்டு இருந்தார்… அப்புறம் அந்த டியூப்லைட் கணவன் பர்ஸ் பிரித்து ஒரு பத்து வைக்க ஐயர் தட்டில் இருந்து ஆட்டோமேட்டிக்காக வந்தது….அந்த ஐயருக்கு முருகன் என்று நினைப்பு வாயை திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை..
அதன் பிறகு எனக்கு முன்னாள் ஒரு தனியாக ஒரு நண்பர் உட்கார எந்த பதிலும் சொல்லாமல் அந்த ஐயர் உட்கார்ந்து கொண்டு இருந்தார்… பத்து நிமிடம் கழித்து தேங்காய் பழம் வர… அந்த காரணத்தை வட சொல்லாமல் அமைதியாக இருந்தார்… என் முறைவரும் போது பத்துரூபாய் முன்னையே எடுத்து வைத்துக்கொண்டேன்… என்னிடம் தேங்காய் தட்டு எந்த தொந்தரவும் இல்லாமல் சடுதியில் வந்தது… பழம் தேங்காய் எடுத்து வெந்து கொடுத்த பெரியவரும் கையை நீட்ட அவருக்கும் பத்து கொடுத்தேன்….
இந்த காரணத்துக்காகதான் நான் கோவிலுக்கு போவதை தவிர்ப்பது…எனக்காக எவ்வளோவே செய்யும் என் குடும்பம் கோவிலுக்கு அழைக்கும் போது விதாண்டாவாதம் செய்யகூடாது என்ற காரணத்தால் நான் கோவிலுக்கு கூப்பிடும் போது மறுப்பு ஏதும் சொல்லவில்லை…
அதன் பிறகு சக்கரைடப்பா பாத்திரம் எங்கு கிடைக்கும் என்று கேட்க அனுமன் சன்னதிக்கு பக்கத்தில் கிடைக்கும் என்று சொல்ல… அங்கு போய் பார்த்தால் அந்த பாத்திரத்தில் பொங்கல் பிரசாதம் வைத்து இருக்கின்றார்கள்… அதை கொடுக்கும் போது அந்த பாத்திரம் என்கைக்கு வருவதில் இழுபறி நிலையில் இருக்க… அங்கேயும் என் பர்ஸ் பிரித்து பத்தை கொடுத்தேன்…
சும்மா சொல்ல கூடாது பொங்கல் பாத்திரம் நிறைந்து காணபட்டது… பொங்கல் பாத்திரம் வாங்கி வெளியில் வந்தால், ஹவுஸ்கீப்பிங் பெண்கள் உங்கள் கையில் இருப்பதை பார்த்து கொடுத்துவிட்டு போங்கள் என்று சொல்ல, வாயே திறக்காமல் தேங்காய் தட்டை இறுக்கிபிடித்து இருக்கும் ஐயருக்கு, வாய் விட்டு கேட்டதோடு அல்லாமல் கோவிலை சுத்தபடுத்துகின்றவர்கள் என்ற காரணத்தால் ஒரு 20ரூபாய் கொடுத்து விட்டு வந்தேன்…
கோவிலை சுற்றி வந்தோம்.. முதியோர் உட்காரும் இடம் என்று எழுதிய இடத்தில் திருவருட்செல்வர் சிவாஜி போல் ஒரு குடுகுடு கிழவர் எங்களை பார்த்து வணக்கம் சொன்னார்… காலையில் நன்றாக குளித்து நெற்றியில் பட்டை அடித்து, கந்தையை கசக்கி கட்டி இருந்தார்… அவரை பார்க்கும் போதே மரியாதையாக இருந்தார்… அவரை கடந்து ஒரு அடி போய் விட்டு திரம்ப வந்து அவர் சிவபெருமானாக இருந்தாலும் இருக்கலாம் என்ற காரணத்தால் ஒரு 20ரூபாய் கொடுத்துவிட்டு வந்தேன்..
யார் யார் சிவம் அன்பே சிவம் பாடல் நினைவுக்கு வந்தது… என் மாமனாரின் தேவஷம் இன்று.. அதனால் ஒரு 50ரூபாய் எடுத்து இரண்டு வயதானவர்களுக்கு காலை உணவுக்கு காசு கொடுத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினோம்….
ஒரு கடையில் செருப்பையும் வண்டியையும் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கோவிலுக்கு போனோம்… துரம்ப வண்டி எடுக்கும் போதும், செருப்பு போடும் போது எவ்வளவு என்று கேட்க ரூபாய் என்று சொல்ல என்னிடத்தி பத்து பைசா இல்லை… எல்லாம் சில்லரையாக உள்ளேயே போய் விட்டது…மனைவியிடம் வாங்கி கொடுத்து வண்டி எடுத்தேன்…
அடுத்தமுறை வடபழனி கோவிலுக்கு போகும் போது வேண்டுதல் எதுவாக வேண்டுமானலும் இருக்கட்டும்,நீங்கள் கையில் பத்துரூபாய்,ஐந்து ரூபாய் என சில்லரை மாற்றி கையில் வைத்துக்கொள்ள வேண்டுமாய் உங்களை கேட்டுக்கொள்கின்றேன்…அப்போதுதான் முருகன் மற்றும் இன்னபிற சுற்றுவட்ட பிரகார தெய்வங்களிடம், நீங்கள் உங்கள் கோரிக்கை மற்றும் வேண்டுதல்களை வைக்க முடியும்….
ஒரு குழந்தை வைத்து இருந்த தம்பதி விஷயம் தெரியாமல் கையில் 100, மற்றும் 50ரூபாய்கள் வைத்து இருக்க… படைத்த பிரசாதம் ரூபாய் பத்து இருந்தால்தான் கையில் கிடைக்கும் என்று தெரிந்ததும், 50 ரூபாய்க்கு சில்லரை இருக்குமா? என்று வருவோர் போவோரை கேட்டுக்கொண்டு இருந்ததை பார்க்க பாவமாய் இருந்தது…
என்ன வேண்டுதலோடு முருகனிடம் முறையிட வந்து இருப்பார் என்ற யோசனையோடு லக்ஷ்மன் சுருதி சிக்னலில் வண்டியை நிறுத்த… கொள்ளை அழகுடன் ஒரு ஆக்டிவா என் பக்கத்தில் வந்து நிற்க்க மனைவி பின்னால் உட்கார்ந்து இருந்த காரணத்தால் சட்டென திரும்பாமல் கொஞ்சம் கேப் விட்டு, கேப் விட்டு என்றால்??? சரியா 37வது செகன்டில் அந்த ஆக்டிவா வை பழக்க தோஷத்தில், பின்புற ஆபத்து தெரிந்தும் திரும்பி பார்த்தேன்…
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
Labels:
அனுபவம்,
எனது பார்வை
Subscribe to:
Post Comments (Atom)
nice jackie...i am also not like to go temple for this reason...all are concentrate on money only...
ReplyDeleteபழனியோ, வட பழனியோ முருகன் நல்ல பிசினெஸ் ஆகிறான்...
ReplyDelete"தட்டு கைக்கு வராமல் இழுபட்டது" எங்கும் தொடரும் படலம்தான்.:(
ReplyDeleteவடபழனி முருகன் இருதடவை தர்சித்திருக்கிறேன்.
எங்கடா இன்னும் அண்ணன் பதிவுல மேட்டர் வரலயே, சாமி பதிவுங்கிறாதால ஜக்கி ஜகா வாங்கிட்டாரோன்னு நினச்சேன்.
ReplyDeleteஇல்ல இல்ல நான் எப்பவும் ஜாக்கிதான் நிருபிச்டிங்க கடைசி வரிகளில்.
(இடுப்பில கிள்ளா இல்ல தலைல அடிய எது கிடைச்சது??).
வாழ்க நீ எம்மான்.
நமக்கு கோவில் போறதுலாம் ஒத்து வராது அண்ணா. இன்னும் கொஞ்ச நாள்ல எங்க கோவில்ல தான் சாமி அருள் நிறைய தருது இங்க வாங்கனு சன் மியுசிக் ல விளம்பரம் பார்க்கலாம். அந்த அளவு பிசினஸ் ஆகி போச்சு.
ReplyDeleteyour way of observing things is amazing i like it, keep it up.
ReplyDeleteAzeem Basha
Jeddah -Saudi Arabia
என்ன வேண்டுதலோடு முருகனிடம் முறையிட வந்து இருப்பார் என்ற யோசனையோடு லக்ஷ்மன் சுருதி சிக்னலில் வண்டியை நிறுத்த… கொள்ளை அழகுடன் ஒரு ஆக்டிவா என் பக்கத்தில் வந்து நிற்க்க மனைவி பின்னால் உட்கார்ந்து இருந்த காரணத்தால் சட்டென திரும்பாமல் கொஞ்சம் கேப் விட்டு, கேப் விட்டு என்றால்??? சரியா 37வது செகன்டில் அந்த ஆக்டிவா வை பழக்க தோஷத்தில், பின்புற ஆபத்து தெரிந்தும் திரும்பி பார்த்தேன்
ReplyDelete.....
Sekar ...i visit your blog for this innocence only.....be yourself always...you are resembling the face todays manly hood....cheers boss...
அன்பின் ஜாக்கி,
ReplyDeleteஇந்த பத்து ரூபாய் அனுபவம் எனக்கு திருத்தணி முருகன் கோவிலில் ஏற்பட்டது.உறவினர்களோடு சில வருடங்களுக்கு திருத்தணி கோவில் சென்றோம்.அப்ப மனைவியிடம் “பத்து ரூபாய் நோட்டுகளை தயாராக வைத்து கொள்ளும்படி சொன்னேன்.கோவிலில் நுழைந்தவுடன் பத்து ரூபாய் நோட்டுக்களை தயாராக சட்டை மேல் பையில் வைத்து கொண்டேன்.
முதல் பத்து ரூபாய் சன்னதி நுழைவாயில் கொடுத்தேன் ஒரு இனிமையான வணக்கம் கிடைத்தது.அங்கிருந்து ஆரம்பித்தது வணக்கங்களும் முதல் மரியாதையும் ..மொத்தம் ரூ 120 கொடுத்திருப்பேன்..ஆனால் கிடைத்த மரியாதை பாருங்கள்...சொல்ல முடியாத அளவு..
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
நாங்களும் கோயிலுக்கு போவோம் ஆனா வெளியவே நின்னுட்டு உள்ளே போனவங்க வர்ற வரைக்கும், நீங்க லக்ஷ்மன் சுருதி சிக்னல்லே பார்த்ததை நாங்க கோயில் வாசலிலே பாப்போம்!
ReplyDelete1.10.2020:ENDHIRAN DEVI AND IDREAMS 10+10(1STCLASS) TICKETS AVAILABLE= RS.2000+2000. PLACE UR EMAIL ID OR CONTACT NUMBER BELOW.
ReplyDelete///
ReplyDeleteதிருவருட்செல்வர் சிவாஜி போல் ஒரு குடுகுடு கிழவர் எங்களை பார்த்து வணக்கம் சொன்னார்… காலையில் நன்றாக குளித்து நெற்றியில் பட்டை அடித்து, கந்தையை கசக்கி கட்டி இருந்தார்… அவரை பார்க்கும் போதே மரியாதையாக இருந்தார்… அவரை கடந்து ஒரு அடி போய் விட்டு திரம்ப வந்து அவர் சிவபெருமானாக இருந்தாலும் இருக்கலாம் என்ற காரணத்தால் ஒரு 20ரூபாய் கொடுத்துவிட்டு வந்தேன்..
///
மத்தவாளுக்கெல்லாம் பத்து. சிவனுக்கு இருபதா...?
தென்னாடுடைய சிவனே போற்றி.
அன்பு நித்யன்.
சூப்பர்:-)
ReplyDeleteசில்லரை வேணுமுன்னால் போறவங்க வாரவுங்ககிட்டே கேக்கப்பிடாது.
குருக்கள்கிட்டே கேட்டால் போதும். ஆயிரம் ரூபாய்க்கே சில்லரையெல்லாம் கொடுப்பாங்க. கோபால் அவுங்ககிட்டேதான் வாங்குவார்.
ஒருபோதும் இல்லை என்ற சொல் கேட்டதே இல்லை:-)
பின்புற ஆபத்து தெரிந்தும் திரும்பி பார்த்தேன்
ReplyDeleteஏங்க இப்படி?? :-)) சொ செ ஆப்பு!!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ReplyDeleteவீரவேல் முருகனுக்கு அரோகரா
அண்ணே உங்க கேமரால இன்னும் 4 போட்டோ எடுத்து போட்டா என்ன?
இதுக்கே அலுத்துக்கிட்டா எப்படி? ஒரு தடவை ராமேஸ்வரம் போய் தீர்த்த நீராடி விட்டு அப்படியே மதுரை வந்து மீனாட்சியையும் சொக்கனையும் பக்கத்தில் இருந்து தரிசித்து விட்டு, திருச்சி உச்சி பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைச்சுட்டு, திருப்பதி போய் தரிசன லட்டு போக ரெண்டு லட்டு வாங்கிகிட்டு, வீட்டுக்கு வந்து உக்காந்தா, உங்களுக்கு இருக்க கொஞ்ச நஞ்ச முடியும் இனிமேல் முளைக்க இடம் இல்லாம மொட்டை ஆகிடுவீங்க...
ReplyDelete