தமிழக சிலை அவமதிப்பு விவகாரம்,சிக்கலில் பொது மக்கள்...(சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ)


ஒரு சிலையை வச்சிட்டு அது கையை காலை  சேதபடுத்தி அதன் மூலம் கலவரத்தை உண்டு பண்ணி குளிர்காயும் பேடித்தனம் வேற எந்த ஊர்லயும் நடக்காது என்பது என் கருத்து..



இரண்டு தினங்களுக்கு முன் சென்னை அசோக்நகரில் ராஜிவ்காந்தி சிலை  சேதபடுத்திய பிரச்சனையில் இருவர் தீக்குளிக்க முயற்சி செய்து பேருந்து மறியல் எல்லாம் செய்து... சென்னையை டிராப்பிக்கில் தினற அடித்தார்கள்...

சிலை சேதபடுத்தியதும் வெகுண்டு எழுந்து தீகுளிக்க ரெடியாகி போலிஸ் வந்து துடுத்து டிராப்பிக்கை டைவேர்ட் செய்துவிட்டார்கள்.... மாம்பவம் பக்கம் எல்லா சந்து பொந்துகளையும் சுற்றி பார்த்த பிறகே எனக்கு  துரைசாமி சப்வே பார்க்க தரிசனம் கிடைத்தது...

தீபாவளி பாச்சேஸ் என்பதால் திநகர்  நிறைமாத கர்பிணி பெண்ணாய்  சில நாட்களாக காட்சி கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. திடிர் என்று சிலை சேதத்துக்கு தீக்குளிக்க ரெடி ஆனதால் அசோக்நகர் சுற்றுவட்டாரம் மற்றும் திநகர் முழுவதும்  டிராபிக்கில் தினறியது.....

முள்வேலியில் 3லட்சம் தமிழர்கள் கொல்லபட்ட போது  வராத  கோபம்...

தமிழக ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளையும், தொடர்ந்து இரு கட்சிகளும் கூட்டு போட்டு கொள்ளை அடிக்கும் போது பார்த்து வராத கோபம்...

இதுவரை  ஒரு மீனவன் அல்ல இரண்டு மீனவன் அல்ல 500க்கு  மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடபட்ட  இறந்த போது வராத கோபம்.....

கல்வி எனும் விஷயத்தை வியாபாரமாக்கி ஒரு எல்கேஜி சிறுவனுக்கு 40,000 ஆயிரம் வாங்குவதை பார்த்து வராத கோபம்....

சாலைகளில் கழிவு நீர் தேங்கி அந்த இடம் முழுவதும் ஒருவாரத்துக்கு மேல் நாற்றம் அடித்தாலும் அதை பார்த்து வராத கோபம்.......

எல்லா அரசு துறையிலும் வியாபித்து இருக்கும் லஞ்ச பேயை ஒழிக்க முடியாமல் லட்ச லட்சமாய் லஞ்சம் வாங்குவதை எதிர்த்து வராத கோபம்....

இப்படி பொதுவாழ்வில் கோபப்பட எவ்வளவோ விஷயங்கள் இருக்கையில் ஒரு சிலை சேதபடுத்தியதும், சாலை மறியல் செய்து, தீக்குளிக்க முயற்சி செய்தவர்களை தெய்வமாக  பார்க்க தோன்றுகின்றது...

பொதுவாக உலக அளவில் சிலைகள், வைப்பதற்குக் காரணம் இளையசமுதாயத்துக்கு வரலாற்றுக்  கதை சொல்லிகளாக அவைகள்  இருக்க வேண்டும் என்ற காரணத்தால் ஆங்காங்கே மக்கள் கூடும் பொது இடங்களில்  நிறுவப்படுகின்றன...


ஆனால் தமிழகத்தில் இந்தக் கதையே வேறு,

இப்போதும் சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலை ஓரம் பெருங்குடியில் அமைந்திருக்கும்  அம்பேத்கர் சிலையை பார்ப்பவர்கள் அதிர்ந்துபோவார்கள்.

இந்திய சுதந்திரத்திற்குப்பிறகு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கார் தனிமைச்சிறையில் இருப்பார்.  காரணம் சிலையைச்சுற்றி இரும்புக் கம்பிகளால் சிலையைச் சுற்றி வலையை அடித்து வைத்து இருக்கின்றார்கள்...அந்த மரித்த தலைவனுக்கு அது மிகப்பெரிய அவமானம் அல்லவா?

ஒருசிலை அதனால் பாதிப்பு எற்படும் பட்சத்தில் நாம்  அந்த சிலை மீது மரியாதை செலுத்துவோமா?? ரிச்சனை ஏற்படுத்தும் சிலைகள் என்ன செய்யலாம்???

ஒவ்வோரு மாவட்டத்திலும் ஒரு அருங்காட்சிகம் வைத்து அதில் சிலைகளை வைத்து இருக்கலாம்.. பொதுவாக சிலை சேதபடுத்துதல் என்பது அளவுக்கு அதிகமான போதையிலும், தெரிந்தே சில விஷமிகளாலும் ஏற்படுகின்றது...

சரி அது எப்படி போதையில் நடைபெறுகின்றது என்று சொல்கின்றீர்களா?  போதையில்  தெருவிளக்கை யார் அடித்து உடைப்பது என்று போட்டி போட்டு உடைக்கும் போதை சனியன்களை நான் பார்த்து இருக்கின்றேன்.. அது போலதான் இதுவும்...

 சமீபத்தில் கூட ரயில் தண்டவாளத்தில் பெரிய  பாறங்கல்லை வைத்தவர்களை கைது செய்த போது, போதையில் கல்லை வைத்தோம் என்று ஸ்டேட்மென்ட் கொடுத்து இருக்கின்றார்கள்.

அதனால் ஜாதி தலைவர்கள் சாயத்தில் இருக்கும்  பெருந்தலைவர்கள் சிலையையும், பிரச்சனை ஏற்படுத்தும் அரசியல் கட்சி தலைவர்கள் சிலையையும்  நாம்  எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது... அதனால்  எல்லா மாவட்டத்திலும் ஏதாவது ஒரு இடத்தில் மியூசியம் போன்ற இடத்தில் சிலைகள் வைத்து... அதன் பக்கத்திலேயே வீடியோ புரொஜக்ஷன் வைத்து அவரின் பெருமைகளை பறைசாற்றலாம்...

அப்ப  மெரினாவில் இருக்கும் சிலைகளை என்ன செய்யலாம்.. அது அப்படியே இருக்கட்டும் இனிமே சிலைகள் நிறுவ வேண்டாம்....இந்த சிலை மேனியாவும், சாலை மறியலும் தொடர்ந்தால் என்ன நடக்கும் தெரியுமா??

சிலை தலை மீது காக்காய் கக்கா போனதால் தலைவரை அவமானபடுத்தியதாக நினைத்து தீக்குளிக்க முயன்ற எட்டு பேரையும், சாலை மறியல் செய்த பதினாலு பேரையும், நேற்று போலிசார் கைது செய்தனர் என்ற செய்தி போட்டோவுடன் தந்தியின் இரண்டாம் பக்கத்தில் ஆண்மைகுறைவு விளம்பரத்துக்கு மேலே போட்டோவுடன் வரும்நாள் வெகுதொலைவில் இல்லை....

ஆகவே நண்பர்களே... சென்னையில் தமிழகத்தில் வாழ நீங்கள் இதையெல்லாம்  பழகி கொள்ள வேண்டும்....

ஔவையார் சிலையின் கை உடந்தாலும் கால் உடைந்தாலும் நம்மவர்கள் கவலைபடமாட்டார்கள் என்பதால் அவ்வை சிலை படத்தினை பிரசுரித்து இருக்கின்றேன்...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

29 comments:

  1. இப்படி பொதுவாழ்வில் கோபப்பட எவ்வளவோ விஷயங்கள் இருக்கையில் ஒரு சிலை சேதபடுத்தியதும், சாலை மறியல் செய்து, தீக்குளிக்க முயற்சி செய்தவர்களை தெய்வமாக பார்க்க தோன்றுகின்றது...// சாட்டை அடி.
    கமலஹாசன் தெனாலி படத்தில் சொல்ற மாதிரி அவரு தெய்வ மச்சான் ...ச்ச .... தெய்வ தொண்டன்.

    சமீபத்தில் கூட ரயில் தண்டவாளத்தில் பெரிய பாறங்கல்லை வைத்தவர்களை கைது செய்த போது, போதையில் கல்லை வைத்தோம் என்று ஸ்டேட்மென்ட் கொடுத்து இருக்கின்றார்கள். //
    அது எப்படிங்க போதையில அவ்வளவு பெரிய கல்லை தூக்க முடியும்! இவணுகளே போதையில போட்டு தள்ளனும்.

    ReplyDelete
  2. // ஔவையார் சிலையின் கை உடந்தாலும் கால் உடைந்தாலும் நம்மவர்கள் கவலைபடமாட்டார்கள் என்பதால் அவ்வை சிலை படத்தினை பிரசுரித்து இருக்கின்றேன்... //
    :D

    ReplyDelete
  3. அந்த காலத்தில் சிலை வைத்தவர்கள், நீதி நெறியாளர்களுக்கும், சமுதாய தொண்டர்களுக்கும் என்னும் போர்வையில் சிலை வைத்தார்கள். ஆனால் தற்போதோ, இங்கு சிலையாய் இருப்பவர்கள் எந்த ஜாதி என்று ஆராயிச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். சாதாரண மனிதனாய் நீங்கள் கோபப்பட்ட விசயங்களுக்கு ஒரு சல்யுட்...
    நன்றி,
    கேசவன்,
    தென்கொரியா.

    ReplyDelete
  4. solvadharku ondrum illai, kaalam arasiyalvaadhigalin araajagathin vazhiyil poi kondirukkiradhu.

    ReplyDelete
  5. என்ன செய்ய தமிழ் நாட்டில் அரசியல் செய்ய இப்போது சிலைகள் தான் மிகவும் முக்கியமாக தேவை படுகிறது, பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகிறது என்று..............

    ReplyDelete
  6. "தமிழன் எப்பவும் முட்டாள் தானே "

    ReplyDelete
  7. எனது கருத்து அவர்கள் கட்சி பலத்தை கட்டவே இந்த நாடகம்.. ஒரு நாள் அவர்களை தீ குளிக்க விட்டு விட வேண்டும். பின்பு இது போல ஏதும் நடக்காது.

    ReplyDelete
  8. போதையில் செய்ததுக்கெல்லாம் போராட்டமா?

    ஆண்டேர்செனை ராஜமரியாதையோடு அனுப்பிவைத்த மனித நேயத்திற்கு என்ன செய்தால் தகும். அதான் போதையில் செய்துள்ளார்கள்.
    தண்டவாளத்தில் கல் வைத்தது பொதுமக்கள் இல்லை. அதை செய்தது இங்கே போராட்டம் நடத்திய கட்சிக்காரர்களின் வேலை.

    ReplyDelete
  9. தன்மானம் இல்லாதவர்கள்தான் காங்கிரஸ்காரர்கள்...

    ReplyDelete
  10. தீக்குளித்தல் என்பது இன்றைக்கு ஒரு விளம்பரம்... என்னமோ கங்கா ஸ்நானம் பண்ணப்போறேன்னு சொல்லிக்கிட்டு சும்மா உதார் விடுறது... எப்படியும் போலீஸ் வந்து கைது பண்ணி தீக்குளிக்காம பண்ணிடுவாங்கன்னு தெரியும்... இந்த மாதிரி ஆளை எல்லாம் சாமி படத்துல வர்ற மாதிரி மண்ணெண்ணையோ, டீசலோ போலீசே கொண்டு வந்து கொடுத்து "தீ குளி ராசா... உன்னோட தீக்குளிப்புக்கு காரணம் உன் கட்சிக்காரன் அல்லது உன் சாதிக்காரன் என்று சொல்லி நாலு பேரை உள்ளே தூக்கிப்போட்டு நாலு காட்டு காட்டினா தான் அடுத்த தடவை எவனும் தீ குளிக்கவும் மாட்டான்; தீ குளிக்க சொல்லவும் மாட்டான்"-னு சொல்லி பாருங்க... இல்லாட்டி தீக்குளிப்பை தற்கொலை முயற்சி என்று சொல்லி அதற்கான அத்தனை செச்சனிலும் கேஸ் போட்டு உள்ளே தள்ளி நாலு காட்டு காட்டணும்... நான் வீட்டுல ரெண்டு சொம்பு தண்ணியிலேயே குளிச்சிக்கிறேன்னு சொல்லிட்டு பேசாம வீட்டுக்குள்ளேயே குந்திக்குவான்... இல்லாட்டி இனிமேல் வாழ்க்கையில் குளியல் என்ற வார்த்தையை கேட்டாலே சுவர் ஏறிக்குதித்து ஓடிப்போவான்...

    ReplyDelete
  11. //ஒரு சிலையை வச்சிட்டு அது கையை காலை சேதபடுத்தி அதன் மூலம் கலவரத்தை உண்டு பண்ணி குளிர்காயும் பேடித்தனம் வேற எந்த ஊர்லயும் நடக்காது//

    100% வாஸ்தவம்..

    ReplyDelete
  12. ///ஔவையார் சிலையின் கை உடந்தாலும் கால் உடைந்தாலும் நம்மவர்கள் கவலைபடமாட்டார்கள் என்பதால் அவ்வை சிலை படத்தினை பிரசுரித்து இருக்கின்றேன்.///

    Jackie touch : kalakkal.

    ReplyDelete
  13. ஔவையார் சிலையின் கை உடந்தாலும் கால் உடைந்தாலும் நம்மவர்கள் கவலைபடமாட்டார்கள் என்பதால் அவ்வை சிலை படத்தினை பிரசுரித்து இருக்கின்றேன்

    :-) உங்கள் டச்

    ReplyDelete
  14. s jack
    i like ur all post jack
    ur writing style i like ma
    ni nature la writing i like it ya

    ReplyDelete
  15. சூப்பர் பதிவு ஜாக்கி! போன வாரம் ஞாயிற்றுக் கிழமை கூட அசோக் நகரில் ஒரு காங்கிரஸ் தலைவரின் சிலைக்கு செருப்பு மாலை போட்டுட்டாங்கன்னு மறியல் எல்லாம் நடந்தது... அடுத்த தெருவில இருக்கிற நண்பன் வீட்டுக்கு ரெண்டு கிலோமீட்டர் சுத்தி போனேன்! அப்பவே இதை பற்றி எழுதனும்னு நெனச்சேன்.... நீங்க முந்தீட்டிங்க :-)

    ReplyDelete
  16. /// ஜாதி தலைவர்கள் சாயத்தில் இருக்கும் பெருந்தலைவர்கள் சிலையையும்////

    இது ரொம்ப நாளா என்னை உறுத்திகிட்டே இருக்க விஷயம் அண்ணா. நிறைய எழுத தோன்றுகிறது. சமயம் பார்க்கிறேன்

    ReplyDelete
  17. அருமை அண்ணே,

    விரிவான அலசல்....
    ”ஔவையார் சிலையின் கை உடந்தாலும் கால் உடைந்தாலும் நம்மவர்கள் கவலைபடமாட்டார்கள் என்பதால் அவ்வை சிலை படத்தினை பிரசுரித்து இருக்கின்றேன்...”

    டச்சிங்

    ReplyDelete
  18. நீங்கள் சொன்னபடி என் பெரியம்மா மகனிற்கு 10 உலகத்திரைப்படங்களின் டிவிடிக்களை வாங்கி கொடுத்துவிட்டேன்... அவனுக்கும் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி...

    1. Gone with the Wind
    2. Philadelphia
    3. Pulp Fiction
    4. Forrest Gump
    5. Blood Diamond
    6. City of God
    7. Hotel Rwanda
    8. The Bone Collector
    9. Downfall
    10. Apocalypto

    மேலே குறிப்பிட்டுள்ள படங்களெல்லாம் எந்தப்பிரிவின் கீழ் (பார்த்தே தீர வேண்டிய படங்கள், பார்க்க வேண்டிய படங்கள், டைம்பாஸ் படங்கள்) வருகிறது என்று குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும்...

    ReplyDelete
  19. நம்ம ஊருல தான் எச்சி துப்புறதயே மத்தவன அவமதிக்கிறத்துக்காகன்னு வெச்சுருக்கோமே... வேற நாட்டுல பொறந்துருக்கலாம் :)

    ReplyDelete
  20. உங்கள் கேள்விகள் நியாயமானவைதான்...

    வீட்டில் குழந்தைக்குப் பால் இல்லையென்றாலோ.... சாப்பாடு என்றாலோ கவலை கொள்ளாத பொது ஜனமான அரசியல் விசுவாசி வாழ்வில் ஒரிருமுறை மட்டுமே பார்த்த தலிவருக்காக தீக்குளிக்க போறேன்னு மக்களுக்கு இடையூறு கொடுத்தால் நாமளே பத்தவச்சு விட்டுடணும்... அப்பத்தான் அடுத்த பரதேசியாவது திருந்த நினைக்கும்.

    ReplyDelete
  21. sir recently i see "Nine Dead" movie. Write a review about that sir...
    www.spicx.com

    ReplyDelete
  22. //இப்படி பொதுவாழ்வில் கோபப்பட எவ்வளவோ விஷயங்கள் இருக்கையில் ஒரு சிலை சேதபடுத்தியதும், சாலை மறியல் செய்து, தீக்குளிக்க முயற்சி செய்தவர்களை தெய்வமாக பார்க்க தோன்றுகின்றது...//

    எனக்கு இவர்களை செருப்பால் அடிக்க தோன்றுகிறது.. இதே விஷயத்துக்காக, அந்த தலைவரின் குடும்ப வாரிசு யாராவது இப்படி செய்வார்களா?? சொல்லுங்கள் ஜாக்கி

    ReplyDelete
  23. முள்வேலியில் 3லட்சம் தமிழர்கள் கொல்லபட்ட போது வராத கோபம்...

    தமிழக ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளையும், தொடர்ந்து இரு கட்சிகளும் கூட்டு போட்டு கொள்ளை அடிக்கும் போது பார்த்து வராத கோபம்...

    இதுவரை ஒரு மீனவன் அல்ல இரண்டு மீனவன் அல்ல 500க்கு மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடபட்ட இறந்த போது வராத கோபம்.....

    கல்வி எனும் விஷயத்தை வியாபாரமாக்கி ஒரு எல்கேஜி சிறுவனுக்கு 40,000 ஆயிரம் வாங்குவதை பார்த்து வராத கோபம்....

    சாலைகளில் கழிவு நீர் தேங்கி அந்த இடம் முழுவதும் ஒருவாரத்துக்கு மேல் நாற்றம் அடித்தாலும் அதை பார்த்து வராத கோபம்.......

    எல்லா அரசு துறையிலும் வியாபித்து இருக்கும் லஞ்ச பேயை ஒழிக்க முடியாமல் லட்ச லட்சமாய் லஞ்சம் வாங்குவதை எதிர்த்து வராத கோபம்....
    nalla seruppadi... appa kuda indha mathiri jenmangal thirundhadhunga.. SACHANAA M.S

    ReplyDelete
  24. சிலை தலை மீது காக்காய் கக்கா போனதால் தலைவரை அவமானபடுத்தியதாக நினைத்து தீக்குளிக்க முயன்ற எட்டு பேரையும், சாலை மறியல் செய்த பதினாலு பேரையும், நேற்று போலிசார் கைது செய்தனர் என்ற செய்தி போட்டோவுடன் தந்தியின் இரண்டாம் பக்கத்தில் ஆண்மைகுறைவு விளம்பரத்துக்கு மேலே போட்டோவுடன் வரும்நாள் வெகுதொலைவில் இல்லை....

    வாத்தியார் சுஜாதா டச்... கலக்கிடீங்க...

    ReplyDelete
  25. அண்ணா உங்களுக்கு கொஞ்சம் ஜோக்ஸ் மற்றும் சில தமிழ் மெய்ல்கள் அனுப்புறேன்...
    பிடித்திருந்தால் விட்ருங்க...இல்லை மெயில் எதுவும் அனுப்ப வேணாம்னு நினைத்தால் பதில் கொடுங்க...
    உங்களுக்கு அனுப்ப மாட்டேன்...
    இப்படிக்கு...
    உங்கள் தம்பி...
    AKM வெற்றியூர்...(From கொல்கத்தா)
    (M.Abdul Khader Mohideen)

    ReplyDelete
  26. அண்ணா இங்க என்னுடைய ஆபீஸ்ல Blogs வரவிடாம பண்ணிட்டாங்கன்னா...
    நீங்க தப்ப நினைக்கலைன்னா உங்களுடைய ஒவ்வொரு பதிவும் என்னுடைய மெயிலுக்கு வரமாதிரி ஏதாவது பண்ண முடியுமா?

    கொல்கத்தா பக்கம் ஏதும் வேலை இருந்தால் வருவீங்களா?
    வந்தால் கண்டிப்பா வீட்டுக்கு வாங்க...

    ReplyDelete
  27. Unnaara Vendiya Vesiyangal Unnaara Mudiyamal Povathe Naam Nattin Periya Problum. Kobbam Vaara Vendiya Vesiyatherku kobbam Varathu,

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner