கபாலி படம் பார்க்க போன கதை.




எப்படியான படமாக இருந்தாலும் தியேட்டரில் போய் பார்த்து விடுவது வழக்கம்….

டிக்கெட் பஞ்சாயத்து பெரிய விஷயமாக  போய் விட்டது..
நண்பர் ரபிக்கிடம் டிக்கெட் சொல்லிட்டேன்..… ஆனா  தூக்கம் வரலை தூங்காம கண் முழுச்சி   இருக்க காரணம் நாலுமணிக்கு  ரோகிணி தியேட்டர்ல ஷோ….. ஒரு சினிமா ரசிகனா  அந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு… ஒரு மாசத்துக்கு மேல நடக்கும் கபாலி   படத்துக்கான  புரமோஷன்.,. அதனால்  தூக்கம் வரலை… ஒரு மணிக்கு தூக்கம் கண்ணை சொழட்டுச்சி…


kabali movie review - கபாலி திரை விமர்சனம்





விமானம்  வரை விளம்பரம் செய்தார்கள்....

மூன்று நாட்களுக்கு டிக்கெட் இல்லை என்று சொன்னார்கள்.. ஆனால் படம்  ஆரம்பித்த போது  ஒரு அரை மணிநேரத்துக்கு  எழுந்து எழுந்து கைதட்டி  ரசித்த ரஜினி ரசிகர்கள்..

இணையதள முடக்கம் சாத்தியமா?


173 இணைய தளங்களை முடக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்  தானு  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு  அவற்றை முடக்க அனுமதியும் பெற்று விட்டார்..

இத்தனை நாட்களாக எத்தனையோ சிறு முதலீட்டு படங்கள் வெளிவந்த போது அவைகள்  இணையத்தில் வெளியாகி பெரும் இழப்பை சந்தித்த போது எல்லாம் அமைதியாக  இருந்த  தானு தற்போது  அவர் படத்துக்கு மட்டும் உயர் நீதி மன்ற படி ஏறி இருப்பது எந்த விதத்தில் நியாம் என்று சக தயாரிப்பாளர்கள் பொருமி வருவது ஒரு பக்கம் இருக்கட்டும்..
அவர்கள் சொன்னது போல இணையத்தை முடக்க முடியுமா? அது சாத்தியமா? என்பது பற்றி  சற்று விரிவாய்  அலசி இருக்கின்றேன்.. வாசித்து விட்டு உங்கள்  கருத்துகளை பகிருங்கள்..
வீடியோ பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்கள்.

#kabali #thanu #கபாலி #தானு #ரஜினி #ரஜினிகாந்த் #ரஞ்சித் #ஆன்லைன் #உயர்நீதிமன்றம் #சாத்தியமா



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

கவிரிமான் பிரதமர் டேவிட் கேமரோன்.





ஐரோப்பிய யூனியனில் தொடரலாம் என்பது   பிரதமரின் கருத்து… ஆனால் கூடாது என்று ஒரு கூச்சல்… சரி மக்களிடம் வாக்கெடுப்பை  எடுத்து அதன் படி நடக்கலாம் என்கின்றார்கள்…

வாக்கெடுப்பு நடக்கின்றது…

52 சதவிகதிம் பேர் ஐரோப்பிய யூனியனில் தொடரவேண்டாம் என்கின்றார்கள்.

48 சதவிகதம் பேர்  தொடரலாம் என்கின்றார்கள்…


பாகுபலிக்காக திருப்பதி பயணம் சில நினைவுகள்.




இன்றுதான் பாகுபலி ரிலிஸ் ஆன நாள்…  நான் கடலுர்காரன்.. எட்டாம் வகுப்பு  படிக்கும் வரை வீட்டை  விட்டு வெளியே சென்றதே இல்லை.அவ்வளவு ஏன் கடலூர் பழைய நகரத்துக்கு கூட சென்றது இல்லை..


சினிமா ரசிகனை தரம் பிரிப்பது முறையா?




சினிமா ரசிகனை தரம் பிரிப்பது முறையா?

ஒரு சினிமாவை பார்க்கிறோம்… நல்லா இருக்கு இல்லைன்னு சொல்ல போறோம்… இது எதுக்கு ஏ சென்டர் பீ சென்டர் சி சென்டர்ன்னு பிரிக்கறிங்க.. அது  தப்பு இல்லையா? அப்படி பிரிக்க நீங்க யாருன்னு என்னுடைய யூடியூப் சேனல் பின்னுட்டத்தில்  நிறைய பேர் கேட்டாங்க..

அப்படி  பிரிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது…


Director Samuthirakani Why an conservative scene in the Movie Appa | இயக்குனர் சமுத்திரகனிக்கு ஒரு கேள்வி…

இயக்குனர் சமுத்துரகனி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அப்பா திரைப்படம் நல்ல கருத்துள்ள திரைப்படம்.. மக்களுக்கு நல் போதனைகளை போதிக்கும் திரைப்படம் என்று பரவலான பேச்சு ரசிகர்களிடத்தில் இருந்து வருகின்றது…
மகிழ்ச்சி..
உண்மையில் நிறைய பிரச்சனைகளை மிக அழகாக வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் வேளையில் ….
அப்பா படத்தில் ஒரு காட்சி எல்லாவற்றிர்க்கும் திருஷ்ட்டி போல அமைந்து விட்டது… அந்த காட்சி என்னவென்றால்..

பேஸ்புக் வரமா சாபமா? வினுப்பிரியா மரணம் எழுப்பும் கேள்வி -?




சேலம்வினுப்பிரியாவுக்கு அன்றைய தேவை ஆதரவான வார்த்தைகளே ... பெற்றவர்களே நம்பவில்லை என்பதுதான் அந்த பெண்ணின் தற்கொலைக்கு முக்கியமான காரணம்.. பேஸ்புக்கிற்கு போகாமல் படங்களை பதியாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அடக்கம் ஒடுக்கமாக அந்த பெண் இருந்து இருந்தால் அந்த பெண் இறந்து போய் இருக்காது என்று பதறுபவர்களை பார்த்தால் மிரட்சியாக இருக்கின்றது..

APPA ( 2016 ) tamil movie review | சமுத்திரகனியின் அப்பா திரைவிமர்சனம்




அப்பா திரை விமர்சனம்…
==============
உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல…
உங்கள் பிள்ளைககள் உங்கள் பிள்ளைகள் அல்ல…
அவர்கள் அவர்களுடைய  வாழ்க்கையை வாழ வந்தவர்கள்.
உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள்  அல்ல

                          கலீல் ஜிப்ரான்.
எழுதிய இந்த வரியை முன் வைத்துதான்  அப்பா  திரைப்படத்தை சமுத்திரகனி  எடுத்து இருக்கின்றார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner