நடிகர் கமலுக்கு மகுடம் சூட்டிய பாடல்...


கமல் நடிப்புதிறமை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்... இருப்பினும் அவர் சினிமாவுக்கு தன்னை அப்படியே அற்பணித்துக்கொண்டவர்.. சினிமாவில் கமலுக்கு அனைத்து துறைகளும் அத்துபடி என்றாலும்... 1980களில் அவரை காதல் இளவரசன் என்றே தமிழ் சமூகம் கொண்டாடியது எனலாம்...

அதன் பிறகு அம்மா நான் காலேஜ்க்கு போயிட்டு வரேன் என்று என்னால் நடிக்க முடியாது.. என்று உதறிவிட்டு குணசித்திர பாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்த நடிகர்...

கமலை நான் மிகவும் ரசித்த படம் என்றால் அது காக்கிசட்டையும்,விக்ரமும்தான்.... அந்த இரண்டு படங்களில் கமலிடம் உள்ள இளமை கொப்பளிப்பு எனக்கு பிடித்தமான ஒன்று...


ஒரு கலைஞன் என்னதான் திறமையாளனாக இருந்தாலும்... ஒரு நல்ல இயக்குனரிடம் சிக்கும் பட்சத்தில்தான் அவன் மேலும் மெருகு ஊட்டபடுகின்றான்...பல திறைமையான இயக்குனர்கள்.. கமல் என்னும் கல்லில் சிற்பம் வடித்தாலும்.. கவுதம்மேனன்.. கமலை வைத்து சிற்பம் வடித்த அழகே அழகு...

கமல் எனும் கலைஞனை வெகுநாட்களுக்கு பிறகு மிகவும் அழகாகய் அவன் ஆளுமையை வெளிக்கொணர்ந்த பாடல் இது... என்பேன்...
வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க்க கற்க்க என்ற அந்த பாடல் என்னதான் கமல் எனும் கலைஞன் பல படங்கள் நடித்தாலும் இந்த பாடல் கமல் கேரியரில் கலக்கிய பாடல் எனலாம்...

ஒரு போலிஸ் ஆபிசர், அவர் செய்யும் உத்தியோகம் சம்பந்தமான காட்சிகள்.. அவரின் குணநலன்கள் போன்றவற்றை மிக அழகாக சொன்ன பாடல் அது...ராகவன் எனும் ஆபிசர் அதை செய்வான் இதை செய்வான் என்று வாயால் சொல்லாமல் விஷுவலாக மெனெக்கெட்டு எடுத்த பாடல் இது...


இந்த பாடலின் வரிகள் மிகவும் அற்புதமானது...

சுற்றும் சுற்றும் காற்றை போலே எங்கும் செல்வான் இவன்... போன்ற வரியும்...

மாவீரமும் ஒரு நேர்மையும் கை கோர்த்து கொள்ள அகராதியோ அதை ராகவன் என அர்த்தம் கொள்ள.... என்ற வரிகளும்...


திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன்தானே... அப்பா என்ன வரிகள்... தாமரை சான்சே இல்லை




KARKA KARKA KALLAM KARKA ENDRU SONNA NAMAN
KALLAM PATRA KALVAR YELLAAM MATTIKKOLLUM ARAN
NIRKA NIRKA NERMAYIL NIRKA KATRUKKONDA NARAN
SUTTUM SUTTUM KAATRAI POOLE YENGUM SELVAAN IVAN
THUPPAAKI MATRUM THOOTAAVAI THAAN KAADHALITHAAN
YENDRAALUM KAAKHI SATTAYAITHAAN KAI PIDITHAAN
THAN SAAVAI SATTAI PAYIL VAITHU YENGEYUM SELKINDRAAN
KARKA KARKA KALLAM KARKA ENDRU SONNA NAMAN
KALLAM PATRA KALVAR YELLAAM MATTIKKOLLUM ARAN
NIRKA NIRKA NERMAYIL NIRKA KATRUKKONDA NARAN
SUTTUM SUTTUM KAATRAI POOLE YENGUM SELVAAN IVAN

MAAVEERAMUM ORU NERMAYUM KAI KORTHU KOLLA
AGARAADHIYO ADHIRAAGHAVAN YENA ARTHAM SOLLA
ADHIGAARAMO AARPAATAMO IVAN PECHIL ILLAI
MUNAAIVADHIL PINAAIVADHIL IVAN PULYIN PILLAI
OOO..KAAKHI SATTAIKKUM UNDU NAL KARPUGAL KARPUGAL YENDRU
KATTIYA THANTHAVAN NAANE IRU KAIGALAI KULIKKIDUM MAANE
ORU THIRIYUM NERUPPUM KAADHAL KONDAAL THONDRUM THOTRAM IVANDHAANE

KARKA KARKA KALLAM KARKA ENDRU SONNA NAMAN
KALLAM PATRA KALVAR YELLAAM MATTIKKOLLUM ARAN
NIRKA NIRKA NERMAIYIL NIRKA KATRUKKONDA NARAN
SUTTUM SUTTUM KAATRAI POOLE YENGUM SELVAAN IVAN
THUPPAAKI MATRUM THOOTAAVAI THAAN KAADHALITHAAN
OH MAA..YENDRAALUM KAAKHI SATTAYAITHAAN KAI PIDITHAAN OO..OO
THAN SAAVAI SATTAI PAYIL VAITHU YENGEYUM SELKINDRAAN

KAN AAYIRAM KAI AAYIRAM YENA VEGAM KOLLA
IBBOOMIYIL NADAMAADIDUM IVAN DEYVUM ALLA
VAAN SURIYAN ORU NAALILE KAANAAMAL POONAA
AVVANAIYE MULU VIRPANAI SEITHENUM NIRPAAN
NARA VETTAYIGAL VETTAYAIGAL AADA IRU KAIGALIN VIRALGAL NEELA
YETHIRIGAL YETHIRIGAL KAAGA SENKURIDHIYIL DHEGANGAL THOOYA
ORU ACHCHAM ACHCHAM ENNUM SOLLAI THEEYIL ITTU THEERTHANE

KARKA KARKA KALLAM KARKA ENDRU SONNA NAMAN
KALLAM PATRA KALVAR YELLAAM MATTIKKOLLUM ARAN
AAA..NIRKA NIRKA NERMAIYIL NIRKA KATRUKKONDA NARAN
SUTTUM SUTTUM KAATRAI POOLE YENGUM SELVAAN IVAN
THUPPAAKI MATRUM THOOTAAVAI THAAN KAADHALITHAAN
YENDRAALUM KAAKHI SATTAYAITHAAN KAI PIDITHAAN
THAN SAAVAI SATTAI PAYIL VAITHU YENGEYUM SELKINDRAAN

இந்த பாடலின் முடிவில் கமல் வெள்ளை சட்டையும் காக்கி பேண்டும் போட்டுக்கொண்டு 48 பிரேம்சில் நடந்து வரும் அழகே அழகு... இந்த பாடலின் முடிவில் இந்த படத்தின் படத்தின் மேக்கிங்கும் இடம் பெற்று இருக்கும்...

கமல் கேரியரில் இந்த பாடல் ஒரு அசத்தலான பாடல் என்றால் அது மிகையில்லை...இந்த பாடலுக்கு உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றிகள்..

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

சென்னை மாநகர பேருந்து ... (பகுதி 1)


சென்னை மாநகர பேருந்தும், சென்னைவாசிகளையும் பிரிக்க முடியாத விஷயம்... இன்று காரில் பைக்கில் பயணப்படும் பல பேர் ஒரு காலத்தில் மாநகர பேருந்துகளை உபயோகபடுத்தியவர்களாகவே இருப்பார்கள்...நானும் பல வருடங்கள் பேருந்தை உபயோகப் படுத்தியவன்தான் என்றாலும்... கடந்து 6 வருடங்களாக மாநகர பேருந்தை நான் அதிகம் உபயோகிக்கவில்லை....

அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக நான் பேருந்தில் எறி இறங்கியது சொர்ப தினங்கள் என்பேன்....எனது சீடி 100 பைக்தான் என்னையும் எனது மனைவியையும் சென்னை முழுவதும் சுமக்கும் வாகனம்....

சென்னை எனக்கு பரிச்சயம் என்பது சிறு வயதில் செனனைக்கு சுற்றுலா வந்து அண்ணா சமாதியையும் கோல்டன் பீச்சையும் பார்த்து விட்டு போனது ஞாபகம் இருக்கின்றது... அதன் பின் சென்னைக்கு வந்து மாநகர பேருந்தையும் அதன் பரபரப்பையும்,பெரிய சினிமா கட்டிடங்களையும், அழகு பெண்களையும் பார்த்த போது என்னை அறியாமல் சென்னையை மெல்ல ரசிக்க ஆரம்பித்தேன்...

எனக்கு நன்றாக நினைவு இருக்கின்றது கடலூரில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்தில் பயணிக்கின்றேன்... செல்வராஜ் என்ற தம்பம்பட்டிகாரர் எங்கள் ஊரில் இரும்புகடை வைத்து இருந்தார்... அவருக்கு இரும்பு கம்பிகள் லோட் புக் செய்ய சென்னைக்கு வந்தேன்... அப்போது பிராட்வே பஸ்நிலையம்தான்... தாம்பரத்தில் இருந்தே சென்னை நகரின் பரபரப்பு பார்த்து வியந்து போனேன்... என்னுள் அந்த பரபரப்பு ஒட்டிக்கொண்டது....

பச்சைகலரில் கரும்புகை கக்கியபடி பயணிக்கும் பல்லவன் பேருந்துகளை பார்த்த போது... அதற்கு முன் அதனை சினிமாவில் மட்டுமே பார்த்து இருக்கின்றேன்...நேரில் பார்த்த போது அந்த பஸ்சுக்காக பெண்கள் விழுந்து அடித்து ஓடி, ஆணுக்கு நிகராக பேருந்தில் இடம் பிடித்து போது... என் சொந்த ஊர் கடலூரை நினைத்து பார்த்துக்கொண்டேன்...

டி அர் இயக்கி சிம்பு நடித்த எங்க வீட்டு வேலன் திரைப்படம் வெளியான சமயம் அது... எங்கள் ஊரில் ஒரு கட் ஆவுட் கூட அந்த படத்துக்கு வைக்கவில்லை.. ஆனால் இப்போது மண்ணோடு மண்ணாக மூத்திரம் ஆடிக்கும் இடமாக மாறிப்போன சபையர் தியேட்டர் வளாகத்தில் வாசலிலேயே.. முருகன் வேலுடன் நிற்கும் பொம்மைகளை வைத்து கலக்கிய நேரமே நான் சென்னை பல்லவனில் பயணம் செய்த நேரம் ஆகும்.....அதன் பிறகு அதே வேலை பொருட்டு சென்னை வந்த போது கமலின் சிங்கார வேலன் ஓடிக்கொண்டு இருந்தது... அப்போதும் சென்னை பல்லவன் பேருந்தில் ரொம்ப பெருமையாக பயணம் செய்தேன்...

சென்னை பல்லவன் பேருந்தில் அடுத்த முறை நான் பயணம் செய்த போது ஜென்டில்மேன் படம் சென்னை சங்கம் தியேட்டரில் வெளியான சமயம் அது... அப்போது இரண்டு நாட்கள் சென்னையில் இருக்கும் சூழ்நிலை அப்போது சென்னை பல்லவனில் பயணம் செய்ய... நான் ஆண்கள் இருக்கையில் அமர்ந்து இருந்தேன்... அழகான பெண்களை அதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்து ரசித்து இருக்கின்றேன்...


ஒரு பெண்கள் கூட்டம் பேருந்தில் ஏறியது... ஒரு பெண்ணுக்கு மட்டும் இடம் இல்லாமல் போக... எக்ஸ்கியூஸ்மீ இப் யூ டோன்ட் மைன்ட் இந்த சீட்ல நான் உட்காரலாமா? என்று கேட்ட போது...அவள் ரொம்ப ஈசியாக கேட்டுவிட்டாள்... நோ பிராப்ளம் என்று சொல்லி தொலைப்பதற்குள் உள்நாக்கு எனக்கு ஒட்டிக்கொண்டது....

என்னை போல ஒரு இன்பிரியாரிட்டி காம்ளெக்ஸ் ஆளை நீங்கள் பார்த்து இருக்கவே முடியாது... எனக்கு நான் அழகாக இல்லை என்ற ஒரு சுயவருத்தம் என்னுள் ஓடிக்கொண்டு இருந்த காலம் அது...இப்போது அந்த வருத்தம் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டு இருக்கின்றது... என்றாலும் அந்த அளவுக்கு இப்போது இல்லை... எனென்னறால் என்னை அதிகம் மாற்றிய பெருமை என் காதல் மனைவியையே சாரும்...

என் பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்த போது... இந்த சென்னையின் பல்லவன் பேருந்தும், கடலூர் அளவுக்கு அலட்டாத பெண்களையும் மெல்ல பிடித்து போனது...

அதன் பிறகு கமலின் சத்யா படத்தில் வரும் வலையோசை சாங்.... பல்லவன் பேருந்தில் படிகட்டில் பயணம் செய்யும் போது எல்லாம் கமல் மேனாரிசங்களை என் நினைவுக்கு வந்து தொலைக்க...பேருந்தில் படிகட்டில் தொங்கிய படி பேருந்து சன்னலோரம் தெரியும் பிகர்களை சைட் அடிப்பது ரகளையான விஷயமாக மாறிப்போனது...



3.13 வினாடிகளுக்கு பிறகு பல்லவ்ன் பேருந்தும் கமலும்... அமலாவும் உயிரோட்டமாக இந்த பாடலில்....
சென்னைக்கு பரிச்சயமான போது இந்த ஜாக்கியின் பால் வடியும் முகம்...



டிக்கெட் செக்கரிடம் மாட்டி திட்டு வாங்கிய கதை அடுத்த பாகத்தில்.....

ஒரு நான்கு நாட்கள் உலக படவிழாவில் கலந்து கொள்ள ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து நேராக உட்லண்ட்ஸ் தியேட்டருக்கு , சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து மாநகர பேருந்து மூலம் பயணபட்ட போது பல்வேறு மலரும் நினைவுகள் என் கண் முன் வந்து நிழலாடியது... ஆடிய நிழல்களை முடிந்த மட்டும் உங்களோடு....சில நாட்களுக்கு....


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....


Letters to Father Jacob(உலக சினிமா/பின்லாந்து) மன்றாடும் கடிதங்கள்....


எல்லோருக்கும் ஏதாவது ஒரு சோகம் அல்லது மனக்கவலை நிச்சயம் இருக்கும்... ஆனால் இறக்கி வைக்க ஆள் கிடைக்காமல் திண்டாடுவோம்....பிரச்சனைகளை எவரிடமாவது இறக்கி வைத்தால்தான் மன நிம்மதி கிட்டும் இல்லை என்றால் அதே நினைப்பாகவே மனது அலைபாயும்...

நமக்கு எற்படும் பிரச்சனைகளை அல்லது கவலைகளை யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும்.. அது மனைவியாக அல்லது காதலியாக, மகனாக, மகளாக, நண்பனாக,டீக்கடை நாயராக.... யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்... எனக்கு எந்த கவலையாக இருந்தாலும் அல்லது மகிழ்வாக இருந்தாலும் என் மனைவியிடம் நான் பகிர்ந்து கொள்வேன்..அப்படியும் டிப்ரஷன் தீர வில்லை என்றால் என் அக்கா வீடு இருக்கும் மடிபாக்கம் போய் அவர்கள் வீட்டில் அரட்டை அடித்தாலே எனது கவலைகள் தீர்ந்து விடும்...என் அக்கா... என் தம்பி என்று ஒற்றை வார்த்தை சொல்லும் போது அந்த பாசத்தில் உருகி போய் விடுவேன்....

எல்லோருக்கும் எதாவது ஒரு இடத்தில் அவர்கள் குழந்தையாக மாறி ஆக வேண்டிய கட்டாயம் இருக்கின்றது... அவர்க்ளை பார்த்து கொள்வது யார்??? சரி சில பிரச்சனைகளை சொல்லி விடலாம்... சில பிரச்சனைகளை சொல்லவே முடியாது... அப்போது என்ன செய்வது...

கந்தசாமி படத்தில் வருவது போல் துண்டு சீட்டு கட்டி மாரியம்மன் கோவில் வேப்பமரத்தில் கட்டி வைக்க வேண்டும்... அல்லது பேனா நட்புகளிடம் தனது பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்... அப்படியும் மீறி போனால் சர்ச்சில் பாதரிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்... இந்த பின்லாந்து படத்தின் கதையும் இப்படித்தான் போகின்றது...


LETTRS TO FATHER JACOB.... பின்லாந்து படத்தின் கதை இதுதான்...

Leila Steen ஒரு கொலை குற்றவாளி... 12 வருட ஆயுள் தண்டனை முடிந்து வெளியே வருபவளுக்கு வயிற்று பிழைப்புக்கு எதாவது செய்து ஆக வேண்டும் அல்லவா?? அவளுக்கு யாரும் இல்லை... அவளுக்கு ஒரு இடத்தில் வேலை கிடைக்கின்றது...நெத்தி வேர்வை நிலத்துல சிந்தற அளவுக்கு ஒன்னும் அந்தளவுக்கு கஷ்டமான வேலை ஒன்னும் இல்லை....ஒரு பார்வை இழந்த வயதான கிருஸ்த்துவ பாதிரியாருக்கு (பாதர் ஜேக்கப்)வரும் கடிதங்களை படித்து அவருக்கு சொல்ல வேண்டும்...

அப்படி வரும் கடிதங்களுக்கு பதில் போட அவள் உதவ வேண்டும்... இதுதான் வேலை.... பலதரபட்ட மனிதர்கள் பாதர் ஜேக்கப்புக்கு கடிதம் எழுதுகின்றார்கள்...பலர் அவர்களுடைய பிரச்சனைகளை எழுத்து மூலம் எழுதி.. நிம்மதி காண்கின்றார்கள்... இதில் பாதர் ஜேக்கப்பு ஒன்றும் கடமைக்கு பதில் சொல்லும் ஆள் இல்லை உணர்பூர்வமாக பதில் சொல்பவர்...சிலருக்கு பண உதவியும் செய்வார்.... சிலர் பணம் அவருக்கு அனுப்பி வைப்பார்கள்... அவருடைய தனிமையான அந்த வீட்டில் தினமும் லட்டர் கொடுக்க ஒரு போஸ்ட்மேன் வருவான்... சிலருக்கு பிரத்தனை செய்ய உடல் நிலை ஒத்துழைக்காத நிலையிலும் பிறருக்காக மனம் உருகி பிரத்தனை செய்வார்... இருவருக்கும் ஒரு கட்டத்தில் சண்டை வருகின்றது... அன்பு வருகின்றது...எல்லாம் வருகின்றது முடிவு என்ன என்பதை வென்திரையில் காண்க...

படத்தின் சுவாரஸ்யங்கள்....

இந்த படம் இந்த வருடம் வெளிவந்த பின்லாந்து படம்...

இது ஒரு வாரத்துக்கு முன் நமது சென்னை 7வது உலக படவிழாவில் திரையிடபட்ட திரைபடம் இது...

இந்த படத்தை பார்க்க ரொம்ப பொறுமை அவசியம்... 75 நிமிடம் ஓடும் இந்த படத்தில் பிரதான பாத்திர படைப்பு மூன்றே போ் மட்டுமே....

பாதர்,அந்த பெண் கைதி, போஸ்ட்மேன்.... அவ்வளவுதான்...

இந்த படத்தை நமது ஊரில் எடுத்தால்.. மொத்தம் ஆறு பேர் மட்டுமே இந்த படத்தை பார்ப்பார்கள்... அந்து மூன்று கதாபாத்திரங்கள்.... படத்தின் தயாரிப்பாளர்,படத்தின் கேமராமேன்,படத்தின் இயக்குனர்...

எவ்வளவு பொறுமையாக சென்றாலும் இந்த படத்தின் மனதை மயக்கும் ஒளிபதிவுக்கு ஒரு ராயல் சல்யுட்....

அன்பை இவ்வளவு அழகாகவும் அதற்க்காக உலகம் எங்கும் பல ஜீவன்கள் அதனை வாழ வைக்க மெனக்கெட்டு கொண்டு இருக்கின்றார்கள்... என்பதை மிக எதார்த்தமாக சொல்லி இருக்கின்றார்கள்...

பாதரிடம் கோபித்துக்கொண்டு டாக்சி வர வைத்து விட்டு... டாக்சியில் ஏறியதும் எங்கே போக வேண்டும் என்று டாக்சி ஓட்டுனர் கேட்க... அவள் பல நொடிகள் அமைதி காத்து விட்டு டாக்சியில் இருந்து இறங்குவது கவிதை...

அந்த பழைய சர்ச் லோகேஷனும்... அந்த பாதர் ஜேக்கப் வீடும் அழகான இடத்தேர்வுகள்...

அந்த தள்ளாத வயதிலும் பிரார்தனை செய்ய சரியான நேரத்துக்கு சர்ச்சுக்கு செல்ல வேண்டும் என்று... பார்வை தெரியாத அந்த பாதிரியார் பதறி அடித்து வேக மாக நடக்கும் அந்த காட்சி கவித்துவம்...

பாதர் ஜேக்கப் சர்சில் மல்லாந்து படுத்து இருக்கும் காட்சியும் அதன் சிம்பிள் லைட்டிங்.. சூப்பர்....

படம் ரொம்ப பொறுமையாக பார்க்கவேண்டிய படம் என்றாலும்... கவித்தவமான அந்த முடிவு நெஞ்சை நெகிழவைத்து, சென்னை படவிழாவில் கைதட்டலை அள்ளிக்கொண்ட படம் இது...

படத்தில் மூன்றே கேரக்டர்களை வைத்துக்கொண்டு உணர்வுபூர்வமாய் கதை சொல்லி இருக்கின்றார்கள்...

கடிதம் எழுதுவதே என்ன என்று கேள்வி கேட்க போகும் அடுதத தலைமுறைக்கு இந்த படம் ஒரு வரலாற்று ஆவனம்...

இந்த படம் 6 விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடதக்கது...


படத்துக்கான டவுன்லோட் லிங்க....
http://rapidshare.com/files/304937349/Letters to Father Jacob (2009) DVDRip.part1.rar
http://rapidshare.com/files/304937322/Letters to Father Jacob (2009) DVDRip.part2.rar
http://rapidshare.com/files/304937341/Letters to Father Jacob (2009) DVDRip.part3.rar
http://rapidshare.com/files/304937362/Letters to Father Jacob (2009) DVDRip.part4.rar
http://rapidshare.com/files/304937385/Letters to Father Jacob (2009) DVDRip.part5.rar
http://rapidshare.com/files/304937327/Letters to Father Jacob (2009) DVDRip.part6.rar
http://rapidshare.com/files/304937329/Letters to Father Jacob (2009) DVDRip.part7.rar
http://rapidshare.com/files/304937090/Letters to Father Jacob (2009) DVDRip.part8.rar

படத்தின் டிரைலர்....


படக்குழவினர் விபரம்... Director: Klaus Härö Writers: Klaus Härö (screenplay) Jaana Makkonen (original idea) more Release Date: 3 April 2009 (Finland) more Genre: Drama more Awards: 6 wins & 1 nomination more parents Runtime: 74 min | Finland:75 min Country: Finland Language: Finnish Color:

அன்புடன் ஜாக்கிசேகர் தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் நன்றி.....

இனிதே நிறைவு பெற்ற 7வது சென்னை உலக படவிழா 2009




சென்னையில் பத்து நாட்கள் நடந்த உலக படவிழா கிருஸ்மஸ்க்கு முன் தினமான 24ம் தேதியோடு இனிதே நிறைவு பெற்றது....நான் ஒரு நாளைக்கு 5 படம் என்று 50 படம் பார்த்து இருக்க வேண்டும்... ஆனால் படபிடிப்பு எல்லாம் இருந்த காரணத்தால் என்னால் தொடர்ச்சியாக கலந்து கொள்ள முடியவில்லை...

இருப்பினும் வருனபகவான் மழை பெய்ய வைத்து பல நாட்கள் ஷுட்டிங் கேன்சல் ஆக நான் சென்னை படவிழாவில் கலந்து கொண்டேன்... எப்படியும் ஒரு 25 படமாவது பார்த்து இருப்பேன்....

ஒவ்வொறு உலக படவிழாவிலும் தினமும் நெஞ்சை தொடும் படங்கள் ஒரு நாளைக்கு ஒன்றாவது கிடைக்கும்.. இந்த முறை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அப்படி ஒரு பீலிங் மனதிற்க்கு கிடைத்தது...

இந்த விழாவில் பல கணவன் மனைவிகள் ஜோடி ஜோடியாக கலந்து கொண்டார்கள்... நான் போன 5ம் உலக படவிழாவுக்கு மட்டுமே என் மனைவியை அழைத்து போய் இருக்கின்றேன்...லீவ் இல்லாத காரணத்தால் போன முறையும் இந்த முறையும் மிஸ்சிங்...


இரண்டு ஜோடிகள் தொடர்ந்து ஒருபடத்தை கூட மிஸ் செய்யாமல் பார்த்தார்கள்... அதில் ஒருவர் டிவி சிரியல்களில் நடித்து வருபவராம்...

இந்த விழாவில் நடுத்தர வயது பெண்களும் கலந்து கொண்டது மனதுக்கு மகி்ழ்வை கொடுத்தது....இந்த வருடம் படங்களில் தி அதர் பேங்க என்ற ஜீயோர்ஜியா நாட்டு படமும்...அன்ட்டி கிரைஸ்ட் என்ற டென் மார்க் படமும் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. அதிலும் அன்ட்டி கிரைஸ்ட் படம் பெரிய அதிர்வலைகைளையும் வியப்பையும் முக்கியமாக பெண்களுக்கு ஏற்படுத்தியது.... ஆண்களே அதிர்ந்து போன போது பெண்கள் எம்மாத்திரம்.. விரைவில் நேரம் கிடைக்கும் போது அந்த படத்தின் விமர்சனம்....

இந்த விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டியில் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற பிரசன்னா நடித்த படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது கிடைத்தது...சிறந்த ஒளிப்பதிவுக்கு பொக்கிஷம் படத்தின் கேமரா மேன்... ராஜேஷ்யாதவ்க்கு கிடைத்துது... பசங்க பாண்டி ராஜீக்கும்,இயக்குனர் சிவக்குமாருக்கும் வெவ்வேறு கேட்டகிரியில் பரிசுகள் கிடைத்து... பசங்க படத்துக்கு சிறந்து படம் விருது கிடைக்காது போனதுக்கு ரசிகர்களிடையே பேச்சில் கோபம் காணப்பட்டது...



இறுதி நாள் விழாவில் சுஹாசினி மணிரத்னம் பேசும் போது...அவர் எப்படி பிலி்ம் இண்ஸ்ட்டியுட் மற்றும் திரைபடதுறைக்கு வந்த கதையை பகிர்ந்து கொண்டார்... இயக்குனர் பி. வாசு பேசுகையில் தமது தாமதமான வருகைக்கு மன்னிப்பு கேட்டு கொண்டதுடன்... எனது படபிடிப்புக்கு லேட்டாக வந்தால்.. அது 4 மணிக்கு எழுந்து கிளம்பும் கடைநிலை ஊழியனின் மனைவி வரையில் பாதிக்கும் என்று சொன்னார்...


விழாவில் நடிகையும் இயக்குனருமான ரேவதி பேசுகையில் கோவா படவிழா ஒரு பேண்டசி படவிழா... திருவனந்தபுரமும், கொல்கத்தாவிலும் நடக்கும் படவிழாக்களில் ரசிகர்கள் வெறியோடு படம் பார்ப்பார்கள்... ஆனால் சென்னை இப்போதுதான் சற்று வளர்ந்து வருகின்றது...

நிர்வாண காட்சிகள் திரையில் வரும் போது ஏன் தியேட்டரில் சல சலப்பு ஏற்படுகின்றது? ஏன் விசில் எல்லாம் அடிக்கின்றீர்கள்... ?அந்த நிலை சென்னை ரசிகர்களிடம் மாறவேண்டும்...நிர்வாணத்தையும் கலையாக பார்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்..

இந்த விழாவில் ஆண்டு தோறும் தொடர்ச்சியாக பங்கு கொள்ளும் பிரபலங்கள் இயக்குனர் சந்தான பாரதி..., நடிகை பாத்திமா பாபு, நடிகை சீ ஆர் சரஸ்வதி, நடிகர் ரமேஷ் கண்ணா போண்றவர்களை சொல்லலாம்.. ஆனால் இந்த முறை இயக்குனர் சந்தான பாரதி மிஸ்சிங்....

இந்த முறை சென்னை உட்லண்ட்ஸ்தியேட்டர் கொஞ்சம் சுத்தமாக வைத்து இருந்தார்கள்... மிக முக்கியமாக திரையை பெயிண்ட் அடித்து எந்த அழுக்கும் இல்லாமல் வெள்ளை வெளேர் என ஜொலித்து....

இந்த முறை சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் பார்க்கிங் கட்டணம் வாங்க வில்லை.. அதற்கு ஏற்பாடு செய்த சென்னை உலகபடவிழா இந்தோ சினி அப்பிரிசேஷன் நிர்வாகிகளுக்கு என் நன்றிகள்..


கடைசி நாளின் போது சினிமா ஆர்வலர்கள் பிரியா விடை கொடுத்து பிரிந்து போனார்கள்....

இந்த உலக படழாவில் நான் பார்த்த காமெடி...அவர் ஒரு அரசியல்வாதி..எப்படியோ அவருக்கு இரண்டு பாஸ் கிடைக்க... அவளது செல்ல வயதுக்கு வந்த மகளை அழைத்து வந்தார்...இதுதான் உலக படவிழா, பல நாட்டு திரைபடங்கள் திரையிட படும் என்று பில்டப் விட்டுக்கொண்டு இருந்தார்...அவருக்கு இதற்கு முன் இது போலான பெஸ்ட்டிவலில் கலந்து கொண்ட அனுபவம் இல்லை என்பது அவரது பேச்சிலேயே தெரிந்து... படம் ஆரம்பித்து இரண்டு நிமிடத்தில் ஒரு உடலுறவு காட்சி திரையில் வர அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை .. மகளை அழைத்து கொண்டு தெரித்து ஓடிவிட்டார்...


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

சாண்ட்விச் அண்டு நான்வெஜ்..18+ (22/12/09)

ஆல்பம்...

தெலுங்கனா இன்றைக்கும் பற்றி எரிந்து கொண்டு இருக்கின்றது... தனி தெலுங்கானாவுக்காக நாங்கள் இரணுவத்தையும் எதிர்ப்போம் என்று சந்திர சேகர் ராவ் கூறி இருக்கின்றார்கள்....அவரெல்லாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசவில்லை என்று நினைக்கின்றதா? மத்திய அரசும், மாநில அரசும்.....???



சென்னையில் மழை போட்டு புரட்டி எடு்க்கின்றது... மழை காரணமாக சென்னை முழுவதும் டிராபிக்... இதை நான் சென்னையில் மட்டும் என்று சொல்ல வில்லை... தமிழ் நாட்டின் பல நகரங்கள் இப்படித்தான் இருக்கின்றன...மழைகாரணமாக தமிழகம் எங்கும் சாலைகள் ரொம்பவும் மோசமாக இருக்கின்றது.... மெரினாவை அழகு படுத்துவதை அப்புறம் பாருங்கள்... இப்போதைக்கு அவசர தேவையும் அவசிய தேவையுமாக நல்ல சாலைகள் தமிழகம் முழுவதும் வேண்டும் என்பதே பொது மக்கள் விருப்பம்..



இந்த ஒரு வார மழையில் சென்னை அண்ணா சாலை புது பெண் போல் மிக அழகாக இருந்தது... அவ்வளவு சுத்தம்... நான் கூட ஏதோ வெளிநாட்டு சாலையில் பயணிப்பது போல் நினைத்துக்கொண்டேன்.... எல்லாம் வருனபகவன் புண்ணியம்....


ஒரு மூன்று நாட்கள் சென்னை மாநகர பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது... எவ்வளவு கொடுமையாக இருந்தது தெரியுமா??? அது பற்றி விரிவாய் பதிவு போடுகின்றேன்....

மிக்சர்....

இரவு பத்து மணிக்குதான் வருகின்றேன்...தொடர்ந்து படபிடிப்பு,ஒரு போஸ்ட் எழுதி அதனை இணைத்து விட்டு படுக்க வெகுநேரம் பிடிக்கின்றது... அதனால் பின்னுட்டத்தை படித்து உதட்டோரம் புன்னகை செய்ய மட்டும் என்னால் முடிகின்றது.... தயவு செய்து மன்னிக்கவும்....


சென்னை கத்திப்பாரா அருகில் இருக்கும் ஒலிம்பியா டவர் எதிரில் உள்ள பேருந்து நிறத்தத்தில் ஹைடெக்காக பேருந்து நிழற்குடை அமைத்தார்கள்.. அதில் மின் விசிறி எல்லாம் போட்டு வைத்தார்கள்....நம்மவர்கள் அதை விட்டு வைப்பார்களா? பேன் இறக்கைகளை எல்லாம் வளைத்து விட்டார்கள்.. அதிலும் ஒரு பேன் ஒழுங்காக இருக்கின்றதே என்று சந்தோஷ பட ...மழை அதிகம் வலுக்க.. அந்த மின்விசிறியில் இருந்து குற்றால அறுவியே கொட்டியது...
நமக்கு எல்லாம் எதுக்கு ஹைடெக்கு??????

ஏர்டெல்லில் இருந்து இப்போதே ஒரு எஸ் எம் எஸ் அனுப்பிவிட்டார்கள்.. வரும் புத்தாண்டுக்கு ஒரு எஸ் எம் எஸ்க்கு 50 பைசா என்று... அன்று மட்டும் எப்படி ஆம்னி பஸ் ரேட் போல கொஙசம் கூட மனசாட்சி இல்லாம ஏத்தறனுங்கன்னு தெரியலை... ஏன்னா.. அவுங்க அவ்வளவு நேர்மையாம்... முன்னாடியே சொல்லிடறாங்க இல்லை...

வாழ்த்துக்கள்...

நண்பர் நிலா ரசிகனின்... யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள்... புத்தக வெளீயிட்டு விழாவுக்கு அழைத்து இருந்தார்... ஞாயிறு அன்று படபிடிப்பு இருந்த காரணத்தால்.. என்னால் போக முடியவில்லை... நான் கலந்து கொண்டு அந்த விழா போட்டோக்களை பதிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்... என்ன செய்ய??? இருப்பினும் நண்பர் நிலாரசிகனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.... மேலும் விபரங்களுக்கு சுட்டியை அழுத்தி படிக்கவும்...





எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.. என்பதற்கு இந்த சாக்லேட் விளம்பரம் நல்ல உதாரணம் என்பேன்...


நான்வெஜ்....

ஜோக்...

ஒருவன் தனது கள்ளகாதலி வீட்டுக்கு போனான்...மழையும் குளிரும் அதிகம் இருந்த காரணத்தால்... அந்தம்மா உடலுறவின் போது அவனை பிடிச்சி ,கடிச்சி, பிராண்டி வைத்தது... வீட்டுக்கு போக உடை உடுக்கும் போதுதான் பார்த்தான்.. உடலெங்கும் நக கீறலும்,பல் கடித்த தடயங்களும் இருப்பதை பார்த்து விட்டு அவன் மிரண்டு போனான்...சட்டென ஒரு குறுக்கு புத்தி.. அவனுக்கு ஓடியது... வேலைக்கு போய் இருக்கும் மனைவி வீட்டுக்கு வருவதற்க்குள் வீட்டுக்கு வந்து, தனது உடைகளை களைந்து... தனது செல்ல நாயை வெற்றுடம்பில் விளையாட விட்டான்... அதுவும் கொஞ்சம் கடித்தும்... கீறியும் வைத்தது...மனைவி வந்ததும்.. பாரு நம்ம ஜானி சனியன் என் உடம்பை எப்படி எல்லாம் கடிச்சி கொதறி வச்சி இருக்கு பாரு என்று கம்ப்ளெய்ண்ட் கொடுத்தான்...அதற்கு அவள் சற்றும் தாமதம் செய்யாமல் , உங்களுக்காவது பராவாயில்லை என்று சொல்லி...அவள் ஜாக்கெட்டையும் பிராவையும் கழற்றி அந்த நாய் சனியன் எங்க கடிச்சி காய படுத்தி இருக்கு பாருங்க என்று காட்ட.... அவனுக்கு லேசாக தலை சுற்ற ஆரம்பித்து...


டிஸ்க்கி...

இந்த வார கடைசியில் சாண்ட்வெஜ் எழுதலாம் என்று நினைத்து இருந்தேன்.. தம்பி அன்புடன் மணிகண்டனுக்காக.. எனது தூக்கத்தை தியாகம் செய்து......

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(DIRTY PRETTY THINGS) 18+ உலக சினிமா இங்கிலாந்து... கழிவறையில் இதயம்....


வீட்டில் மழைகாலத்தில் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கும் போது.. திடிர் என்று கரப்பான் பூச்சி சட்டென ஓடும்.. வீட்டு பெண்கள் அலறுவார்கள்... நாம் ஹிட்டை எடுத்து கரப்பான் மேல் அடித்து நமது வீரத்தை பறை சாற்றுவோம்...

இதை விட கொடுமையானது சின்ன சின்ன தவளைகள்.. மழைகாலத்தில் அவைகள் செய்யும் அழிச்சாட்டியம் தாங்க முடியாத ஒன்று... அவைகளை பிடித்து வீட்டின் வெளியே துரத்துவதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடும்...

டாய்லெட்டில் தண்ணி அடைத்து கொண்டு இருக்கின்றது... என்னவென்று பாருங்கள் என்று சொல்லி விட்டு செல்கின்றாள் ஒரு பெண்... அவனும்
போய் பார்க்கின்றான்... உண்மையிலேயே டாய்லெட்டில் அடைப்பு இருக்கின்றது... தண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது.... அதன் அடைப்பை எடுத்து விட அவன் நினைக்கின்றான்.. ஒரு கம்பியை எடுத்துக்கொண்டு வந்து குத்துகின்றான்.... உம்ஹும் ஒன்றும் அசைந்து கொடுக்கவில்லை...

சற்றே பலம் கொண்ட மட்டும் நெம்புகின்றான்... இப்போது அசைவு தெரிகின்றது... ஆனால் தண்ணீர் நிறம் இரத்த நிறமாக மாறுகின்றது...அவனுக்கு ஆச்சர்யம்.. கூடுதலாக பயம், ஆர்வம் ,எல்லாம் ஒரு சேர இருக்க....அவன் தன் கையை உள்ளே விட்டு நோண்டி எடுக்க...அதிர்ச்சியில் அவன் முகம்.. காரணம் அது ஒரு மனித இதயம்... டாய்லெட்டை சரி பண்ண வந்த அந்த மனிதனின் மன நிலை எப்படி இருக்கும்.????? என்ற சற்றே நீங்கள் நினைத்து பாருங்கள்...

DIRTY PRETTY THINGS படத்தின் கதை இதுதான்...


Okwe (Chiwetel Ejiofor) ஒரு லண்டனில் டாக்சி ஓட்டும் ஒரு டிரைவர்...அவன் ஒரு நீக்ரோவும் கூட... இரவு நேரங்களில் ஒரு ஹோட்டலில் ரிசப்சனிஷ்ட்டாக வேலை... பல இரவுகள் தூங்காமல் வேலை செய்து சம்பாதிக்கின்றான்...

Senay (Audrey Tautou) ஒரு பணிப்பெண்... அவள் ஓக்வீ... பணிபுரியும் ஓட்டலிலேயே அவளும் துப்புரவு பெண்ணாக பணி புரிகின்றாள்.. இதில் கொடுமை இருவரிடமும் லண்டனில் வாழ முறையான ஆவணம் ஏதும் இல்லை..

இருவரும் ஒரே அறையை பகிர்ந்து கொள்கின்றார்கள்.... அப்போதுதான் 512ம் அறையில் தங்கி இருக்கும் ஒரு விபச்சாரி... தனது ரூமில் டாய்லெட் அடைப்பு என்று சொல்லி அதை சரிசெய்ய சொல்கின்றாள்...

ஓக்வி போய் செக் செய்கின்றான்.. தண்ணீர் வழிந்து கொண்டு இருக்கின்றது.. அடைப்பை சரி செய்ய நோண்டி பார்த்தால்... ஒரு இள வயது மனிதனின் மனித இதயத்தை பார்க்கின்றான்....

காரணம்... அந்த ஓட்டலில் ஒரு அறையை இன்ஸ்டென்ட் ஆப்பரேஷன் தியேட்டராக மாற்றி...சட்டத்துக்கு புறம்பாக லண்டனில் வாழ்க்கை நடத்தும் அகதிகளை பணத்தாசை காட்டி அவர்களின் கிட்னியை எடுத்து விற்பதை அந்த ஓட்டல் மேனேஜர் வெகு நாட்களாக செய்து வருவதை கண்டு பிடிக்கின்றான்....

ஓக்வீ மீது சினாய் காதல் கொள்கின்றாள்... ஆனால் அவன் அதை ஏற்க்க மறுக்கின்றான்.... ஓக்வி நைஜிரியாவில் ஒரு டாக்டராக இருந்தவன்....லண்டனில் சட்டத்துக்கு பறம்பாக வாழ்க்கை நடத்தி வரும் மக்களுக்கு இலவச வைத்தியம் பார்ப்பவன்... ஒரு கட்டத்தில் சினாய் கிட்னிமேல் ஓட்டல் மேனேஜர் குறி வைக்க அந்த கிட்னியை ஓக்வி ஆப்பரேட் செய்து எடுக்க வேண்டிய சூழல் வருகின்றது... அதை எப்படி எடு்த்தான்.. அதை எடுக்க எப்படி ஒத்துக்கொண்டான்.. போன்றவற்றை வழக்கம் போல் வெண்திரையில் கானுங்கள்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....


Audrey Tautou கதாநாயகியாக நடித்து இருப்பவர் ஏஞ்சல் அண்டு டெமொன்ஸ் படத்தின் கதாநாயகி... அந்த பெண்ணின் உதடு ஏதோ ஒரு மென் சோகத்தை உள்வாங்கியதாக இருக்கின்றது.....

Chiwetel Ejiofor படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கின்றார்... டாக்சி ஓட்டி விட்டு பணம் கொடுக்கும் இடத்தில் ...அந்த இடத்தின் ஓனர் பேண்ட் ஜீப்பை கழட்டி விட்டு அவனை ஏதோ செய்ய சொல்ல அவனும் வெறுப்பாய் முட்டி போட... கடைசியில் வேறு ஒரு காரணம் எனும் போது.. அந்த டுவிஸ்ட்டை ரசிக்க முடிகின்றது....


அதே போல் அகதியாய் வாழும் மக்கள் ஒரு போதும் பிரச்சனைகளை உரத்து சொல்லி போராட முடியாது என்பதையும்... எல்லாவற்றிர்க்கும் பணிந்தே வாழ வேண்டிய அவசியத்தையும் மிக அழகாக காட்சி படுத்தி இருப்பார் இயக்குனர்....

அதே போல் வலிந்து போய் செனாய் .. ஓக்வியிடம் அவள் காதலை தெரிவித்தாலும் அதை நாசுக்காக ஓக்வீ மறுக்கும் இடம் அழகு....

செனாயிடம் பாஸ்போர்ட் இல்லை என்பது தெரிந்ததும்.. போலிசிடம் மாட்டி விடாமல் அவளை தப்பிக்கவைத்து விட்டு அவளின் ஓனர் அவளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்த அவள் “அந்த” இடத்தில் கடித்து விட்டு ஒடி வருவது வெகு அழகு....

கிட்னியை பறி கொடுத்த ஏழைகள் அந்த ஆப்பரேஷன் காயத்தை ஆற்ற கூட அவர்களிடம் பணம் இல்லாதது கண்டு வருத்தபட்டு அவர்களுக்காக மருந்து திருடி மருத்துவம் பார்ப்பது ஓக்வியின் நல்ல மனதுக்கு ஒரு சல்யுட்....

இந்த படம் கிட்னி திருட்டு,அகதி குடியேற்றம்,சட்விரோத குடியேற்றம், பல விஷயங்களை அலசகின்றது... இருப்பி்னும் அந்த கிளைமாக்ஸ் அற்புதம் யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட் அது.....

இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு பெஸ்ட் ஸ்கிரின் பிளே விருதுக்கு பரிந்துரைக்கபட்டது...

இந்த படம் பெஸ்ட் பிரிட்டிஷ் பிலிமாக தேர்ந்து எடுக்கபட்டது...

படத்தின் டிரைலர்...


படக்குழுவினர் விபரம்

Directed by Stephen Frears
Produced by Robert Jones,
Tracey Seaward
Written by Steven Knight
Starring Chiwetel Ejiofor,
Sophie Okonedo,
Israel Aduramo,
Sergi López,
Benedict Wong,
Audrey Tautou
Music by Nathan Larson
Cinematography Chris Menges
Editing by Mick Audsley
Release date(s) December 13, 2002 (UK)
Running time 93 min
Country United Kingdom
Language English,
Somali
Budget $10,000,000
Gross revenue $13,904,766 (worldwide


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

ஏழாவது சென்னைசர்வதேச திரைபடவிழா ஒரு பார்வை...(புகைபடங்களுடன்)


போன வருடம் போல் இந்த வருடம் முதல் நாள் திரைப்பட விழா ஏனோ களை கட்டவில்லை.... இருப்பி்னும் இந்த பெஸ்ட்டிவலில் கல்லூரி பெண்கள் பலர் கலந்து கொண்டது நன்றாக இருந்தது... எனது கல்லூரியில் இருந்து மட்டும் 75 மாணவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு இருக்கின்றார்கள்..

இருப்பினும் இரண்டு படங்கள் நேற்று பார்த்தேன்.... ஒரு குரோஷியா படமும் ,ஒரு ஹங்கேரி படமும் பார்த்தேன்... கலந்து கொள்ளவே முடியாது என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது இறைவன் கருனையால் கலந்து கொண்டேன்....

அதிகமான மாணவ மாணவிகள் காரணமாக தியேட்டரில் அமைதியாக படம் பார்க்கமுடிவதில்லை... குசு குசு என்று ஏதாவது பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்... எதாவது கமென்ட் அடித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. இன்னும் பெண் பிள்ளைகளிடம் தன்னை ஹீரோவாக உயர்த்தி கொள்ள மற்றும்அவளின் பார்வை இவன் பக்கம் திரும்ப வேண்டும் என்ற காரணத்தால் மொக்கை கமென்ட் எல்லாம் அடித்துக்கொண்டு இருந்தார்கள்....

விழா ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்ய வில்லை.... அதனாலா என்னவோ பெரிய அளவில் கொண்டாட்டம் இல்லை என்பேன்...

பதிவர்களில் நான், வண்ணத்து பூச்சி சூர்யா, மட்டும் முதலில் இரண்டு படங்கள் பார்த்தோம் இரவு உண்மைதமிழன் அவர்கள் வந்து இணைந்து கொண்டார்கள்...அவ்ருடன் ஜுனியர் விகடனில் தொடர்ந்து எழுதும் பரகத் அலி வந்து இருந்தார்... அவரை போன வருடம் உலக படவிழாவில் அறிமுக விழாவின் போது பார்த்தேன்... அதன் பின் இப்போதுதான் பார்க்கின்றேன்...

உதவிஇயக்குனர்கள்... உதவி கேமரமேன்கள் போன்வர்களுக்கும் கட்டண சலுகை 300 ரூபாய் மட்டுமே.. உங்கள் சங்க கார்டை எடுத்துக்கொண்டு பொய் காட்டினால் 300 டிக்கெட் எடுக்கலாம்...

மாலை விழா தொடங்கியது .. விழா நிகழ்ச்சிகளை பாத்திமா பாபு தொகுப்புரை செய்தார்... வழக்கம் போல் இந்த முறையும் பேரை மறக்காமல் அழைத்தார்...

விழாவுக்கு தமிழக பிரபலங்கள்.... பருத்தி வீரன் கார்த்தி, தேவயானி,பேராண்மை இயக்குனர் ஜெனநாதன் போன்றவர்கள் வந்தார்கள்...

கார்த்தியை விட இயக்குனர் ஜெனநாதனுக்கு பயங்கர கைதட்டல் கிடைத்தது... தேவயானி இரண்டு வரிகளில் பேசி முடித்துக்கொண்டார்... பின்லான்டு, ஜெர்மன், யூ எஸ் ஏ போன்ற நாடுகளின் துதரக அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்க்ள்...பல நாடுகளின் இயக்குனர்கள் தொடக்க நாளிலேயே வந்து ஆச்சர்ய படுத்தினார்கள்....

வழக்கம் போல் விழாவை செய்தி மற்றும் ஒளிபரப்பு இனையமைச்சர் ஜெகத் ரட்சகன் விழாவினை தொடங்கி வைத்து பேரன்பு மிக்க பெரியோர்களே என்று ஆரம்பித்து தமிழ அரசியல்வாதிகளின் அக்மார்க் பேச்சினை பேசினார்....

எஸ்வீ சேகர் தலையில் கட்டுடன் வந்து இருந்தார்... என்ன சார் தலையில் கட்டு என்று டைரக்டர் விக்ரமன் மனைவி கேட்க ??? அடிபட்டதைவிட இதற்க்கான விளக்கம் சொல்லி சொல்லி வாய் வலிக்கின்றது என்றார்...

பாத்திமா பாபுவிடம் ஒரு அர்ஜென்டினா பெண் இயக்குனர்.. உங்கள் நாட்டு திரைப்பட விழாவில் என்ன பெண்களை அதிக அளவில் பார்க்க முடியவில்லை என்று கேட்டு வைத்தாரம்.. என்னபதில் சொல்வது....??? எனது நாட்டு பெண்கள் இப்போதுதான் மெல்ல வெளியே வருகின்றார்கள் என்று சொல்லத்தான் எனக்கு ஆசை...

அதே போல் இந்த வருடம் ஒரிஜினல் உலக சினிமா டிவிடிக்கள் சிலவற்றை தியேட்டரில் விற்றுக்கொண்டு இருந்தார்கள்....விலை கேட்டால் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள் ஒரு படத்தின் விலை 300ரூபாயாம்....


புகைபடங்களை கிளிக்கி பெரிதாக பார்க்கவும்.....

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner