Mass (2015) Movie Review |மாஸ் என்கின்ற மாசிலாமணி திரை விமர்சனம்சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் வெங்கட் பிரபுவின் ஆறாவது படம்….ஏற்கனவே அஞ்சான் படத்தின் வெளியீட்டுக்கு முன்  ஆடிய உற்சாகத்துக்கு சமுக வலைதளங்களில் குத்தி குதறியாதாலோ என்னவோ… மாஸ் திரைப்படத்துக்கு  வெளியீட்டுக்கு முன் அலப்பறை அதிகம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்…


பாத்ரூம் செப்பல்ஸ்…. (கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்)1988களில் அந்த செருப்பின்  விலை… பத்து ரூபாய்…  அந்த  செருப்புதான் நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களின் பாதங்களை ஒரு காலத்தில்  காத்தன என்றால் அது  மிகையில்லை.


Ilayaraja music copyright Issues | இளையராஜா காப்பிரைட் சர்ச்சை’
இளையராஜாவுக்கும் தனியார் எப்எம் வானொலி நிலையங்களுக்கு இடையே ஆன பனிப்போர்...

Demonte Colony Movie review |டிமான்ட்டி காலனி |திரைவிமர்சனம்


காமெடி பேய் படங்கள் கல்லா கட்டிக்கொண்டுஇருக்கும் வேளையில்   முழுக்க முழக்க திரில்லர் ஜானரில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்தான் டிமான்டி காலனி...

டிமான்டி காலனி என்பது சென்னை ஆழ்வார் பேட்டையில் இன்றளவும் இருக்கும் காலனி....வெள்ளைகாரன் காலத்தில் இருந்தே இந்த காலனியில்  பேய்கள் ஊலாவுதாக யாரோ கொளுத்தி போட... இயக்குனர் அஜய்ஞானம் படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது..


PurampokkuEngiraPodhuvudamai-2015| movie review|புறம்போக்கு திரைவிமர்சனம்


எங்கள் ஊர் கடலூரில் பாதிரிக்குப்பம் ஜெகதாம்பிகா டென்ட் கொட்டாயில் பார் மகளே பார், பாசமலர், துலாபாரம் , போன்ற படங்களை பார்த்து விட்டு பெண்கள் இழவு வீட்டுக்கு சென்று ஒப்பாரி வைத்து விட்டு வாயையும் மூக்கையும் சேர்த்து மூடிக்கொண்டு வருவார்களே அது போல படத்தை பார்த்து விட்டு டென்ட் கொட்டகை விட்டு வெளியே வரும் போது துக்கம் தாங்கால் புடவை தலைப்பால் வாயை பொத்தி வருவார்கள்..


50 பைசா சுற்றுலா…சில நேரங்களில்  அப்படித்தான் நடக்கும்.. அப்படி ஏன் நடந்தது என்றோ…??  ஏன் அப்படி நடக்ககவில்லை என்றோ கேள்விகேட்கவே முடியாது…  வாழ்க்கை அப்படித்தான்…. ஆறு விரலோடு ஏன் பிறந்தான் என்ற கேள்விக்கு எப்படி  விடையில்லையோ??? அது போலத்தான்  சில விஷயங்கள் அப்படி நடந்து விடும்...வாழ்க்கையில சில விஷயங்களை கேள்வி கேட்காமத்தான்  நாம ஏத்துக்கனும்…


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.18/05/2015
ஆல்பம்.
சட்டீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமித் கட்டாரியா. தண்ட்டேவாடா மாவட்ட ஆட்சித்தலைவர் தேவசேனாபதி  இரண்டு கலெக்டர்களுக்கும்  மத்திய அரசு ஓலை அனுப்பி  இருக்கின்றது… புரோட்டகால் படி நடந்துக்கொள்ள வேண்டும் … நீங்கள் இருவரும் நடந்துக்கொள்ளவில்லை  என்பதே  மத்தியஅரசு அனுப்பிய ஓலையில் சாரம்சம். அதிலும் கலெக்டர் அமித் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு கைகுலுக்கி  விட்டார்…  என்று ஓலைக்கான மறைமுக காரணத்தை சொல்லி இருக்கின்றார்கள்… 

Airtel launched 4G in chennai |சென்னைக்கு அறிமுமானது எர்டெல்லின் 4G அலைவரிசை.ஏர்டெல்காரர்களின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைத்தாலும்... எந்த இடத்தில் அவர்கள் நெட் ஒர்க்கை அடித்துக்கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சன  உண்மை... அதனால்தான் இதுவரை என்னுடைய நம்பரை மாற்றாமல் வைத்து இருக்கின்றேன்…

எப்போதுமே…  முதலில் களத்தில் இறங்குபவனுக்கே வாழ்த்தும் மரியாதையும்…. காரணம்.. அவன்தான் மக்கள்  மனதில் நிரந்தரமாக பதிபவன்….

உதாரணத்துக்கு  கேபிள் டிவி என்றாலே சன்டிவி என்று எப்படி அழைக்கபடுக்கின்றதோ..? அதே போல செல் போன் நெட்ஒர்கிற்கு இன்றுவரை ஏர்டெல்தான்…


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.13/05/2015


ஆல்பம்..
 பட்ட கால்லியே படும் கெட்ட குடியே கெடும்… என்பதற்கு  உதாரணமாக நேபாளத்தை சொல்லலாம்…  முதலில்  வந்த  நிலநடுக்கத்தில் இருந்து  இன்னும் மீண்டு வராத நிலையில் திரும்பவும்  அடுத்த  நிலநடுக்கம் அவர்களை மீண்டு தாக்கி இருக்கின்றது…40க்கு மேற்ப்பட்டவர்கள் இறந்து இருக்கின்றார்கள்.. சென்னையிலும் அது  லேசாக உணரப்பட்டுள்ளது.

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner