#Darkesthour 2017 movie Review
டார்க்கஸ்ட் ஹவர்.
கிரிஸ்டோபர் நோலன் டங்க்ரிக் திரைப்படம் எடுத்தார்… டங்கரிக் கடற்கரையில் மூன்று லட்சம்
இங்கிலாந்து வீரர்கள் வாழ்வா சாவா போராட்டத்தை மிக நெருக்கமாக பதிவு செய்தார்…
அதே வேளையில் மூன்று லட்சம் இங்கிலாந்து வீரர்கள் வாழ்வா சாவா போராட்டத்தை சந்தித்த போது இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் முக்கியமாக இங்கிலாந்து பிரமர் வின்சன் சர்ச்சில் என்ன முடிவுகளை எடுத்தார்… தன் பிள்ளைகள் டங்கிரிக் கடற்கரையில் இருக்கும் போது அவர் சந்தித்த பிரச்சனைகள் என்ன - நாடு சரணகதி என்ற ஒற்றை வார்த்தையில் சிக்கி தவித்த போது அவர் எடுத்த நிலைப்பாடு என்ன என்பதுதான் டார்க்கஸ்ட் ஹவர் திரைப்படத்தின் கதை….
வின்சன்ட் சர்ச்சில் ஆக கேரி ஓல்ட் மேன்… ஏர் போர்ஸ் ஒன் திரைப்படத்தில் ஹரிசன் போர்ட்டு கெட் அவுட் மை பிளேன் என்று தள்ளி விடுவாரே.. அந்த படத்தில் தீவிரவாதி வேஷம் போட்டவர்தான்… இந்த படத்தில் வின்சன் சர்ச்சிலாக அசத்தி இருக்கின்றார்…