வீடு கட்டிக்கிட்டு இருக்கேன் அண்ணா...😍 நான் சிவகங்கை வரும்போது நீங்கள் அவசியம் வீட்டுக்கு வர வேண்டும் என்று ஓமானிலிருந்து போன் செய்தான் சென்பாலன் என்று எல்லோராலும் அழைக்கப்படும் செந்தில் பாலன்...
முதல் முதலாக நடக்கும் எல்லா விஷயங்களும் என்னிடம் பகிர்ந்து கொள்பவன்.... முதல் கார் , புதிய வேலை, வேலை மாற்றம், வெளிநாட்டு பயணம் என்று சகலமும்....
புதிதாக கட்டிய வீட்டை பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் குடும்பத்தோடு சிவகங்கை சென்று அவனை சந்தித்து விட்டு வந்தேன்....
ஒமனுக்கு கிளம்பும்போது போன் செய்தான்... அண்ணா உங்க கூட டின்னர் சாப்பிடலாம்னு இருந்தேன்....
பட் மிஸ் ஆயிடுச்சு... i Really felt very bad என்றான் ...
கடந்த முறை ஆழ்வார்பேட்டை ரெஸ்டாரண்டில் இரவு வெகு நேரம் நாங்கள் இருவர் மட்டும் சாப்பிட்டு பேசிக்கொண்டிருந்தோம்....
இந்த முறை பர்சனல் ஆக சில சிக்கல்களை எதிர்கொண்டு விட்டு தான் ஊருக்கு சென்றான்... இருப்பினும் நான் அவனிடம் பேசியிருக்க வேண்டும்...
என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு...
நீங்கள் ஒரு சென்டிமீட்டர் தெரிந்தோ தெரியாமலோ அல்லது வேண்டுமென்றே நகர்ந்தால் நான் 100 சென்டிமீட்டர் உங்களை விட்டு அல்ல உங்கள் திசையை விட்டு நகரக்கூடியவன்....
ஏண்டா பேசணும்னு சொல்லி இருக்கலாம் இல்ல....? நான் கிளம்பி சிவகங்கை வந்து இருப்பேன்... இல்ல ரெண்டு பேரும் பாண்டிச்சேரி கொடைக்கானல் கிளம்பி போய் இருக்கலாம்.... இல்ல மதுரையில் மீட் பண்ணி இருக்கலாம்... சொல்லி இருக்கலாம் இல்ல என்றேன்...
அவன் அப்படி பேசுபவன் அல்ல அப்படி சொல்லியது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்தது... எந்த ஜட்ஜ்மெண்ட் இல்லாமல் பேசுவதை நான் கேட்பவன்... அதே நேரத்தில் சரி தவறுகளை அவனிடம் சொல்லி இருக்கிறேன் நான் அவனுக்கான நேரத்தை கொடுத்திருக்க வேண்டும் என்ற வருத்தம் என்னுள்😔
நிறைய புதிய நண்பர்கள் இருப்பதால் நீ பிஸியாக இருப்பாய் என்று நினைத்து விட்டேன் என்று சொன்னேன்...😊
அண்ணா... அவங்க என்னுடைய நண்பர்கள் தான் அதில் மாற்றமில்லை ஆனா நீ அப்படி இல்லை... 😍உன்கிட்ட டின்னர் சாப்பிட்டுகிட்டு நிறைய பேசணும்னு நினைச்சேன் என்று சொன்னபோது கொஞ்சம் நெகிழ்ச்சி ஆகி கண்ணில் நீர் பெருகியது...😍😊
சென்னை போரூர் கொளப்பாக்கம் வீட்டில் நான் பார்த்த அலைகள் பாலா இல்லை அவன்...
1. திராவிடன் ஸ்டாக் டாக்டர்😍
2. அமோசான்கிண்டில் டாக்டர்😍
3. அரியவகை ஏழைகளை வெளுக்கும் டாக்டர்😀
4. புளிச்ச மாவை பொளக்கும் டாக்டர்😂😂😂😂
5. இயற்கை மருத்துவம் இயற்கை உணவை சல்லி சல்லி ஆக உடைக்கும் டாக்டர் 😀
6. பகுத்தறிவு டாக்டர்😍
7. ஹீலர் பாஸ்கர் பர்னிச்சர் உடைக்கும் டாக்டர்😀
8. திராவிட எழுத்தாளர் டாக்டர்😍
9. ஓமான் அல்வா மாய பெருநில டாக்டர்😂
10. பகுத்தறிவோடு மூடர்களை ஒடுக்கும் டாக்டர் 😀
என்று பல பெயர்களோடு சுற்றிக்கொண்டு இருக்கிறான்...
இவ்வளவு பிஸியாக இருக்கும் டாக்டரிடம்... நானே கொஞ்சம் ஸ்பேஸ் கொடுப்பதாக நினைத்துக் கொஞ்சம் நகர்ந்து விட்டேன்....😀
எப்போதுமே அவனுக்கு நான் அண்ணனாக தான் இருக்கிறேன்... நான் தான் அவனை தம்பியாக நினைக்காமல் சட்டுனு கொஞ்சம் நாட்களுக்கு பிரபல டாக்டராக நினைத்து விட்டேன் 😍
தம்பி இருக்கிற கடுப்புல நானே இந்த ரம்ஜானுக்கு அங்க குடும்பத்தோட கிளம்பி வரலாம்னு நெனச்சேன்...😂
ஆர்வி வேற எங்க இடத்தை புடிச்சுகிட்டு இருக்கா 😍 கொஞ்சம் வளரட்டும் வருகிறோம் ☺️
கொடுப்பதாக நினைத்துக் கொஞ்சம் நகர்ந்து விட்டேன்....😀
தம்பி இருக்கிற கடுப்புல நானே இந்த ரம்ஜானுக்கு அங்க குடும்பத்தோட கிளம்பி வந்து இருப்பேன் 😍🤣
எவ்வளவு உயரங்கள் சென்றாலும் இந்த அண்ணன் மீதும் அண்ணன் குடும்பத்தின் மீதும் அன்பு பாராட்டும் தம்பி செந்தில் பாலனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... Sen Balan
என் வாழ்வின் இனிமையான 10 நாட்கள் எது என்றால் இந்த புகைப்படம் எடுத்த நாட்களை சொல்லுவேன் 😍❤️
(உலகின் உயரமான சிகரங்களில் ஒன்றான ஜபல் ஷம்மில் மற்றும் மஸ்கட்டில் 😍😍)
பிரியங்களுடன்
அதே மாறாத அன்போடு
அண்ணன்
ஜாக்கி சேகர்
நிரூபிப்பதே நீ.....