தீபாவளி - 2010
போன வருட அமெரிக்க பொருளாதாரம் போல் இந்த தீபாவளி என்னை சந்தித்த காரணத்தினால் இந்த தீபாவளி மீது பெரிய பற்று எனக்கு வரவில்லை. தீபாவளிக்கு முதல்நாள் இரவு நானும் மனைவியும் போய் கூட்டமில்லாத திநகரில் உடுப்புகள் வாங்கினோம்.
செவன் கப் கேக் என்று ஒரு சமாச்சாரத்தை செய்தாள்... அதை பார்க்கும் போது அது ஸ்வீட் என்று முக்கோடி தேவர்களின் மீது சத்தியம் அடித்தாலும் தெரியாது.. ஆனால் வாயில் போட்ட போது அது ஸ்வீட் என்ற நாக்கின் சுவை அரும்புகள் என் சிறு மூளையில் உணர்த்தின... முதலில் அது ஏதோ கொஸ்த்து என்று நினைத்து வைத்தேன். அப்புறம் அது ஸ்வீட் என்று என் மனைவியால் பெயர் சூட்டபட்டது.
காலையில் 4 மணிக்கு அங்கு ஒன்றும் இங்கொன்றுமாக ஆரம்பித்த வேட்டுசத்தங்கள் மணி 5 நெருங்கும் போது காது அடைத்து கொண்டன. நேர்மையாக சம்பாதித்தும், லஞ்ச பணத்திலும் வாங்கிய வெடிகளின் கந்தக நெடி, சில நொடிகளில் ஓசோன் படலத்தை நோக்கி போய் நலம் விசாரித்தன..
தொலைகாட்சி வேறு ஜல் புயல், பெருமழை என்று நொடிக்கு ஒரு வினாடி கத்திக்கொண்டு இருந்தது.. பல சிறுவர் சிறுமியர் பட்டாசு வெடிக்க கூட்டு பிரார்த்தனை செய்து, ஜல் புயலை தென் கிழக்கே 1500கிலோமீட்டரிலேயே மையம் கொள்ள வேண்டிக்கொண்டனர்.
நான் எந்த திரைபடத்துக்கும் டிக்கெட் புக் செய்யவில்லை.. வீட்டுவேலைகள் அதிகமாக இருந்த காரணத்தாலும், நோம்பு எடுக்கவேண்டிய பணி இருந்த காரணத்தினாலும், மிக முக்கியமாக தீபாவளி நேரத்தில் மனைவிக்கு ஆபிஸ் இருந்த காரணத்தினாலும்,அவரை ஆபிசில் டிராப் பண்ணவேண்டிய காரணத்திலும் நான் புதுபடத்துக்கு டிக்கெட் புக் பண்ணவில்லை.
தீபாவளிக்கு முதல்நாள் இரவே நண்பர்கள் வாழ்த்து மழையில் எனது செல்போனுக்கு ஜலதோஷம் பிடித்துக்கொண்டது... இருப்பினும் யாருக்கும் திரும்பவும் வாழ்த்து அனுப்ப நேரம் இல்லை துணி வாங்கி வீடு வந்ததுமே.. கண் அயரதான் நேரம் இருந்தது.. சரி மறுநாள் காலை எல்லோருக்கும் மொபைல் மற்றும் நெட் வழியாக வாழ்த்து சொல்ல வேண்டும் என்று மனதில் குறிப்பு எடுத்துக்கொண்டேன்.
மறுநாள் காலை நெட் புரவுசிங் செய்தால் ஒர்க் ஆகவில்லை.. காரணம் இன்று டியூடேட் என்று நினைத்தால் முதல் நாளே பிஎஸ்என்எல் கட் செய்து விட்டது.. இதனை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை... சரி ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் என்று போனால்.. எல்லோரும் தீபாவளி பர்ச்சேசுக்கு வழித்து எடுத்து விட்டனர்... எல்லா ஏடிஎம்மிலும் பணம் இல்லாமல் டிராண்ஸ்சாக்ஷனை கேன்சல் செய்து கொண்டு இருந்தது... பொது மக்கள் பலர் திண்டாடி விட்டார்கள்... சரி யாரிடம் போய் இந்த நேரத்தில் பணம் கேட்பது?? என்று யோசித்துக்கொண்டு இருந்தேன்... சட்டென மாடிவீட்டு நண்பரிடம் கேட்டேன்.. பணம் கிடைத்து விட்டது....
ஆனால் எந்த இடத்திலும் பிஎஸ்என்எல் ஈசி ரீசார்ஜ் இல்லை.. அலைந்தேன் திரிந்தேன் துவண்டேன் சரி மனைவியை ஆபிசில் போய் வீடும் போது வேறு எங்காவது ரீசார்ஜ் செய்யலாம் என்று விட்டு விட்டேன்....
அப்போதுதான் வாசக நண்பர் குரும்பழகன் எனக்கு போன் செய்து தீபாவளி நல்வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு இருந்தார் ..அவரிடம் பிரச்சனையை சொல்ல.... வேண்டும் என்றால் எனது கார்டை கொடுக்கவா என்றார்... நீங்க வேற எந்த கார்டுமே ஒர்க் ஆகவில்லை என்று சொன்னேன்...
சரி வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கு சாப்பிட்டு விட்டு மொபைலில் வாழ்த்து சொல்லாம் என்று நினைத்தேன். சாப்பாடு பாத்திரத்தை எடுத்து போய் வைத்தேன்... அடுத்து கொதிக்கும் சாம்பாரை எடுத்து போய் வைத்தேன்.. இரண்டு தட்டுகளை எடுத்து போய் வைக்கும் போது தொப் என்று சத்தம் கேட்டது.. சாம்பார் சிதறிபோனது.. ஓ கரண்டி மேல் தட்டு பட்டதால் சம்பார் சிதறி இருக்கும் என்று துடைத்து விட்டு மனைவியும் அவள் நண்பியும் சுவீட் மற்றும் முறுக்குகளை சாப்பிடும் இடத்தில் வைத்தார்கள்... நான் எனக்கு சாப்பிட இலை எடுத்து வந்தேன்... எல்லோருக்கும் சாப்பாடு போட்டாள்....சட்டென தண்ணியும், உப்பும் இல்லை என்று எனக்கு நினைவு வர ஓடி போய் எடுத்து வந்து வைத்தேன்...
என் மனைவியின் நண்பிக்கு பக்கத்தில் சாம்பார் இருந்த காரணத்தால் அதனை அவள் கிளறி எல்லோருக்கும் சாம்பார் ஊற்ற அவள் ஒரு கரண்டி சாம்பார் எடுக்கும் போது, அதில் இருந்த வஸ்துவை பார்த்து எனக்கு ஈரக்கொலை வெடித்தது... கருப்பாக இருப்பதை பார்த்து என் மனைவிக்கு ஏதோ சின்ன அளவில் எலி ஏதோ சாம்பாரில் விழுந்து விட்டதோ ? என்று பயந்து தான் போட்டு இருந்த கண்ணாடியை அணிச்சை செயலாக புது துணியில் துடைத்து போட்டு பார்க்க அது அவசரத்துக்கு என்னிடத்தில் அவள் கொடுத்து வைத்த சாம்சங் மொபைல்....கொதிக்கும் சாம்பாரில் தட்டு வைக்க குனிந்த போது என் மேல் பாக்கெட்டில் இருந்து மொபைல் சம்பாரில் தொப் என்று விழுந்து இருக்கின்றது.. நானும் கவனிக்கவில்லை.. சாம்பாரை சிதற வைத்தது எனது மொபைல்தான்... எனது மொபைல் சர்விஸ் சென்டரில் இன்னும் சரி செய்யபடாமல் இருக்க.. நான் என் மனைவி மொபலை யூஸ் செய்து கொண்டு இருந்தேன்.. அதுக்கும் இப்போது சோதனை....
மொபைல் நன்றாக கொதித்த சாம்பாரில் உப்பு, புளி, பருப்பு தண்ணி என நன்றாக குடித்து விட்டு இருந்தது.. டிஸ்பிளே சம்பார் வெள்ளத்தில் மூழ்கி இருந்தது.. அதில் காமெடி என்னவென்றால் மொபைல் ஆனில் இருந்தது.... நான் சட்டென எடுத்து, மொபைல் பேட்டரியை கழட்டினேன்.. சர சர வென அதன் உட்பகுதிகளை கழட்டி, சட்டென பிரித்து... என் வீட்டு மொட்டை மாடியில் வெயிலில் காயவைத்தேன்..
செம மூட் அப்செட்... நெட்டுக்கு 2500ரூபாய் புரட்டவே படாதபாடு பட்டேன்.
இதுல இந்த பிரச்சனை வேறு...ஒரு அரைமணி நேரம் கழித்து காய வைத்த மொபைலை ஒன்று சேர்த்தேன்.. பேட்டரி போடும் போதே, சிட்டி ரோபோ போல் அதுவே ஆன் ஆக இன்னும் ஏழரை தொடரும் என்று மனதில் குறித்துக்கொண்டேன்...
நான் என் மொபைலை எடுத்து பார்த்தேன்.. அதுவே ஆன் ஆகியது... அதுவே ஆப் ஆகியது...ஆபிசில் இறக்கிவிட்ட மனைவி ,ஏங்க எங்க ஊர் என்று வாக்கியம் முடிப்பதற்குள் கட் ஆகியது.. நான் போன் செய்தாலும் அதே போல இரண்டு வார்த்தை சொல்லி முடிப்பதற்குள் கட்டாகி தொலைந்தது... எனது மொபலை கோபத்தோடு எடுத்து தரையில் சூரைதேங்காய் விடலாமா? என்று ஒரு நிமிடம் வன்மமாக நினைத்த என் முடிவை மாற்றிக்கொண்டேன்..இதுவும் இல்லை என்றால் ஒன்றும் செய்யமுடியாத நிலை....
மனைவியை ஓஎம்மார் சாலையில் இருக்கும் லைப்லைன் ஆஸ்பிட்டல் அருகில் இருக்கும் ஆபிசில் விட்டு விட்டு, நான் ஓஎம்மார் சாலையில் இருக்கும் காரப்பாக்கம் அரவிந்தில் வ குவாட்டர் கட்டிங் படத்துக்கு டிக்கெட் கிடைக்கும்மா? என்ற நப்பாசையில் போக அங்கு 2•45க்கே படம் போட்டு விட்டார்கள்...
சரி திரும்பி வரலாம் என்றால்... செம காற்று.. வண்டியை ஓட்டவே முடியவில்லை... ரோட்டு ஓரத்தில் இருக்கும் குப்பைகளை எல்லாம் சூறைகாற்று ரோட்டில் கொட்டி வைத்தது...அதோடு லைட்டாக மழையும் பெய்தது.....
குடும்பத்துடன் தீபாவளி புது உடுப்பு போட்டு வெளியில் கிளம்பிய பல குடும்பத்தினர் இந்த திடிர் மழையை எதிர்பார்க்கவில்லை... பலர் இந்த திடிர் மழையில் நனைந்து மழையை சபித்து, கிடைத்த இடத்தில் ஒதுங்கினார்கள்.. நான் ஒதுங்கிய இடத்தில் ஒரு பேமிலி ஒதுங்கியது. அதில் ஒரு சின்ன குட்டி பெண். அவள் அணிந்து இருந்த டிரஸ் செம கியூட்டாக இருந்தது...அவளைதான் வண்டியின் டேங்கில் முன் பக்கம் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு வந்து இருக்க வேண்டும்.. காரணம் அவள்தான் அதிகம் நனைந்து இருந்தாள்...பிராய்லர் கறி கோழி மீது சட்டென தண்ணீர் ஊற்றினால் சிலிர்த்து நிற்குமே.. அது போல சிலிர்த்து இருந்தாள்... அவள் கையில் இருந்த ரோமகால்கள் சிலிர்த்து காணப்பட்டன..
வழியில் ஒரு வாகனம் என்னை கடந்து போனது... பையன் டேங்கில் உட்கார்ந்து இருந்தான்...அப்பா ஒட்டினார்.. அப்பாவுக்கு பின்னால் ஒரு வயதுக்கு வந்த பெண் இரட்டை கால் போட்டு உட்கார்ந்து இருந்தது.. வண்டியில் பாக்ஸ் இருந்த காரணத்தால், அந்த பெண்ணால் சரியாக உட்காரமுடியவில்லை ஙே என்று உட்கார்ந்து கொண்டு போனது. அந்த பெண்ணின் அம்மாவின் பின்புறம் இதுக்குமேல எதுவும் இல்லையா என்பது போல் பாவமாக தொங்கியது.. அந்த அம்மா நிறைய பவுடர் பூசி இருந்தார்கள்... ஜாக்கெட்டில் பின்பக்கம் முடிச்சி போட்டு தைத்து இருந்தார்கள்.. முடிச்சி போட அவரின் கணவர் உதவி செய்து இருக்க வேண்டும்.. செம டைட்டாக முடிச்சி கோபத்தில் போட்டு இருப்பது தெரிந்தது... வண்டி ஒரு பள்ள மேட்டில் இறங்கி ஏறினாலோ அல்லது எம்டிசி ஏற்படுத்திய புழுதியினால் அசுக்கு என்று தும்பினால் எந்த நேரத்திலும் அந்த முடிச்சி அறுத்துக்கொள்ள அனேக சான்ஸ் இருந்தது..
சாலையில் போகும் போது விசேஷகாரர்கள் வீட்டின் வாசலில் திடும் என ஒரு பெரும் கூட்டம் இருக்குமே... அது போல சென்னை டாஸ்மார்க் கடைகள் முழுவதும் ஒரே கூட்டம்.... வேளச்சேரி சாலையில் ஒரு வண்டியில் மூன்று பேர் என வருங்கால இளைஞர்கள்ஹேப்பி தீபாவளி என்று யாருக்கோ போதையில் பன்னி போல கத்திக்கொண்டு தெருவில் அலப்பறை செய்து கொண்டு வண்டியில் போனார்கள்.....
மழை நின்று வீடு வந்தேன்.....மொபைல் அதுவே ஆன் ஆக காத்து இருந்தேன். மொபைல் ஆன் ஆகியது மனைவிக்கு வீடு வந்து விட்டேன் என்று தகவல் தெரிவித்தேன்... மொபைலை பார்த்தால் அந்த தகவல் தெரிவிக்க ஒரு ரூபாய் காணாமல் போக.. என்னவென்று பார்த்தால் ரேட் கட்டர் டூயூடேட் இன்றோடு முடிய...தீபாவளிக்கு பல கடைகளில் விசாரித்தேன் ரீசார்ஜ் கடைகள் இல்லை.. சரி இருக்கும் கடையில் விசாரித்தால் யாரிடமும் ரீசார்ஜ் இல்லை... எல்லா திங்ககிழமைக்கு மேலதான் பாஸ் என்கின்றார்கள்.....அதனால் பொது ஜனங்களே.. தீபாவளி பண்டிகையின் போது உங்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கபடலாம் ஜாக்கிரதை....
எனக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொன்ன பதிவுலநண்பர்கள் ஸ்ரீராம்,பரிசல்,கேஆர்பி செந்தில், மைதீன், நித்யகுமாரன்,பிளாக்பாண்டி, அலைகள்பாலா,தினேஷ்செல்வரத்னம்,குரும்பழகன்,மணிகண்டவேல் மற்றும் பின்னுட்டத்தில் வாழ்த்து சொன்ன நணபர்கள்....அனைவருக்கும் என் நன்றிகள்..
குறுஞ்செய்தியில் வாழ்த்திய மலேசியா சாம்,சௌரி,வடிவேலன்,விவேக்,பீக் பாம்பே,சங்கவி,வண்ணத்துபூச்சி சூர்யா,ஜெகன்,கருந்தேள்,பாரதிதாஸ்,ரிஷி,கிருஷ்ணமூர்த்தி சயின்டிஸ் பூனே..மணிகண்டன்,டியர் பாலாஜி, அனைவருக்கும் என் நன்றிகள்... பதில் சொல்லவில்லை என்று கோபம் வேண்டாம்... என் மொபைல் சாம்பார் குடித்து விட்டு மொபைலின் டிஸ்பிளே ஒன்றரை கண்ணில் காட்டிக்கொண்டு இருக்கின்றது...
திரும்ப வீடு வந்து என் அப்பார்ட்மென்ட்டின் இரண்டாம் தளத்திற்கு மேல் போய் பார்த்த போது தமிழகத்தின் தலைநகர் மிகுந்த குதுகலத்தோடு இருப்பதை பார்த்தேன்.. இரவு ஆறு மணிக்கு வெடிக்க ஆரம்பித்த வாணவேடிக்கை இரவு பதினோரு மணிவரை ஓயவில்லை.....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
// கூட்டமில்லாத திநகரில் உடுப்புகள் வாங்கினோம்.// கூட்டமில்லாத தி நகர் அது எப்படி சாத்தியம்.? நள்ளிரவில் சென்று வாங்கினிர்களா ?
ReplyDeleteஉங்களுக்கு தீபா வலி யோ?
ReplyDeleteசரியாக தீபாவளிக்கு முன் தினம் இரவு பதினோரு மணிக்கு போகவும்....கூட்டம் இல்லை.. நான் அப்போதுதான் போனேன்...
ReplyDeleteஅதே போல் இரவு 9 மணிக்கு மேல் திநகர் போகவும்... கூட்டம் குறைவாக இருக்கும்..
கணேஷ் வலியோ வலி..
ReplyDeleteதக்காளி சாம்பார்,வெங்காய சாம்பார்,பூசணிக்காய் சாம்பார் தெரியும் இப்பத்தான் முதன் முதலாய் மொபைல் சாம்பார் கேள்விபடுகிறேன்.
ReplyDeleteஅரவிந் ஒரு சின்ன திருத்தம் சேம்சங்மோபைல் சாம்பார்..
ReplyDeleteஉண்மையில் மறக்க முடியாத தீபா" வலி" தான்....
ReplyDeleteநேத்து என்னோட நேரம்தான் சரியில்லன்னு நெனைச்சேன்,உங்களுக்குமா? same blood ..
ReplyDeleteantha comedya ippa nenachchaalum sirippa varuthu anna. ha ha ha
ReplyDeleteஇவ்வளவு களேபரத்துளையும் மழைக்கு ஒதுங்குன இடத்துல அத்தனையும் தெளிவா கவனிச்சிருகிங்க,
ReplyDeleteநல்ல நாளும் அதுவுமா இவ்ளோ பிரச்சனையா.. படிக்கும் போதே கண்ணை கட்டுதே.. ;)
ReplyDeleteஜாக்கி சார் செல்போனா.., இதை படிங்க நேரம் கிடைச்சா ஹா..ஹா..!! http://kjailani.blogspot.com/2010/08/blog-post_14.html
ReplyDeleteதீபாவளி அன்னைக்கு சோதனை வரலாம்.... ஆனா சோதனையே தீபாவளியா வந்தா!!!!
ReplyDeletedeepwali-2010 An experiment with tension!
ReplyDeleteமொத்ததில் நல்ல தீபாவளி(லி) போல :)
ReplyDeleteDeepawali ivolo sangatama pocha?
ReplyDeletesorry sir.
valthukkal
Jackie,
ReplyDeletevara unga updates ellam dairy maathiri ungala pathiye iruku... konjam interesting a ethavathu pannalame.. daily paakurom, ungala pathiye iruntha bore adikuthu...
Aana, kaasu illanalum kadan vaangiavathu bill kattanumnu nenaikira unga kadamai unarchi...ayyayyyayooo. theeya vela seyareenga nalla thambi..
Best diwali wishes athuvum terror ra kondadinathukku
ReplyDeletehello my dear brother . how was mobile sambar taste.
ReplyDeleteYou can do recharge at http://www.rechargeitnow.com/
ReplyDeletedear jockey
ReplyDeleterechargeitnow.com enra website poy sulabamaga recharge seyyalame(mobile dth)
balu vellore