சென்னையில் உற்சாகமாக துவங்கிய 8வது உலகபடவிழா...(புகைபடங்களுடன்)

(உட்லண்ட்ஸ் தியேட்டரின் முகப்பு வழக்கமான கூட்டத்தை விட இந்த முறை அதிக கூட்டம்.)

எட்டு வருடங்களுக்கு முன் உலக திரைப்படம் கிலோ என்னவிலை?? என்று  நான் கேட்ட நேரம் அது... மிகசரியாக எட்டு வருடங்களுக்கு முன் ஒரு நண்பர் பிலிம் பெஸ்ட்டிவலுக்கு பாஸ் வாங்கிவிட்டு தன்னால் போக முடியவில்லை நீ வேண்டுமானால் போய் விட்டு வா என்று சொன்னார்...அன்று நேராக பைலட் தியேட்டர் மற்றும் பிலிம்  சேம்பரில் படம் போட்டு இருந்தார்கள்..ஹுண்டாய் கார் நிறுவனம் அந்த பெஸ்ட்டிவலுக்கு ஸ்பான்சர் செய்து இருந்தது...

அதன் பிறகு  சென்னையில் நடந்த ஒரு பெஸ்ட்டிவல் தவிர மற்ற எல்லா பெஸ்ட்டிவல்லுக்கும் தவறாமல் போய் இருக்கின்றேன்.. இன்று உலகபடங்கள் எழுத காரணம் இந்த பெஸ்ட்டிவல் ருசிதான். அப்போது மட்டும் பிளாக் எனக்கு அறிமுகமாகி இருந்து இருந்தால் இன்னும் நிறைய படங்களை வலையேற்றி இருப்பேன்.

(விழாவில் வெளியிடபடும் திரைபடங்கள்)

நடந்த பிலிம் பெஸ்ட்டிவல்களிலேயே ரொம்ப கலர் புல்லான பெஸ்ட்டிவல் இந்த பெஸ்ட்டிவல்தான்..  பெண்களை வாலன்டியராக போட்டு கையில் டார்ச் கொடுத்து இருட்டில் வரும் சினிமா ரசிகனை சீட்  காட்டி உட்கார  வைக்கும் ஹாஸ்பிட்டாலிட்டி மிக அழகாக இருந்தது. வருபவர்களை வரவேற்று உட்கார வைத்தார்கள்.. ஆனால்  அந்த பெண்களக்கு பச்சைகலர் டீஷர்ட்டை எந்த புண்ணியவான் செலக்ட் செய்தார் என்று தெரியவில்லை..

(அண்ணன் உண்மைதமிழன்,சூர்யா,நான்)

எல்லா வாலன்டியர்களும் மைதா மாவு கலரில் இருக்க அந்த பச்சை கலர் உவ்வே... ஒரு கருப்பு அல்லது கரு நீலம் போட்டு இருந்தால் இன்னும் செமையாக இருந்து இருக்கும்.

நிறைய கல்லூரிகளுக்கு போய் டிக்கெட் விற்று இருப்பது வந்து இருக்கும் மாணவ மாணவிகளை பார்த்த போதே தெரிந்து விட்டது.. ஆனால் இந்த முறை அதிகமான மாணவிகளை பார்க்க முடியவில்லை.

இந்த வருடம் படம் பார்க்க  வந்து இருந்தவர்கள் எல்லாம்  செல்போனை சைலன்ட் மோடில் போடாமல் எரிச்சல் ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

எனது பிளாக்கின் அதி தீவிர வாசகி, நான், உண்மைதமிழன் உட்பட எல்லோரும் படம் பார்த்தோம்...அதன் பிறகு பட்டர்பிளை சூர்யா வந்தார்..இரவு காட்சிக்கு நித்யா வந்து கல்ந்து கொண்டார்.

நிறைய இடங்களில் என்னை பார்த்து விட்டு கைகுலுக்கி உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். என்று  கைகுலுக்கு பல வாசக நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

சோல் கிச்சன் என்ற ஜெர்மன் படம்  விழாவின் தொடக்கபடமாக திரையிட்டார்கள்.. தியேட்டரில் உட்கார்ந்து இருந்த போது பின்புறம் உட்கார்ந்து இருந்த நண்பர் என்னை பார்த்ததும் என்ன சொல்வதென்று படபடப்பாகி  அதன் பிறகு எனது வலையை தொடர்ந்து வாசித்து வருவதாக சொல்ல.. அதற்கு பட்டர்பிளை சூர்யா மற்றும் நித்யா .. ச்சே இங்க ஒரு பின்னுட்டமா ?என்று சலித்து வெறுப்பு ஏற்றிக்கொண்டு இருந்தார்கள்.. நித்யா இன்னும் நக்கலாக நீங்க ஜாக்கிதானே என்று ஒன்றும் தெரியாதவர் போல கேட்டு நக்கல் விட்டுக்கொண்டு இருந்தார்..

(வெள்ளைக்கார கவர்ச்சிக்கு மிக நெருக்கமாய் உண்மைதமிழன்,ஜென்மசாபல்யம் அடைய இதுவும் ஒரு வழி...என்பதை பிரிந்து கொள்வீர்)

கலைஞர் கொடுத்த 25 லட்சம் மிக கலர்புல்லாக நிகழ்சசி நடத்தவும், பார்க்கிங் கட்டணம் பிரியாக மாற்றவும் உதவி இருந்தது...

(விழா துவங்கும் முன் கவர் புல்லான தியேட்டர்)


விழா நிகழ்ச்சிகளை மாதவன் விஜய்டிவி ரம்யா தொகுத்து வழங்கினார்கள். விழா தொடங்கும் முன் மிகச்சிறந்த  சினிமாக்களின்  இசைக்கோர்வைகளை  வயலினில்  ஒரு பெண்மணி வாசித்து காட்டினார்கள்...டைட்டானிக், மிஷின் இம்பாசிபிள்,மன்மதலீலையை வென்றார் உண்டோ? என்று  பல பெமஸ் விஷயங்களை வாசித்தார்...
( எட்டாவது உலகபடவிழாவில் கலந்து கொண்ட பெருமை... எனக்கு என்ன இருந்தாலும் இது வரலாற்றுபதிவு அல்லவா?)

விழாவுக்கு சுஹாசினி, ரேவதி, ரோகிணி, உமா பத்மநாபன், லஷ்மி ராஜகோபால், ஷைலஜா,
இயக்குனர் லிங்குசாமி, லிஸி பிரியதர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ்,
 (அஞ்சலி அஞ்சலி)
  இயக்குநர்கள் ஷங்கர், பார்த்திபன், வசந்த், நாகா, மீரா கதிரவன், மனோபாலா, நடிகர்கள் சிவாஜி, சின்னி ஜெயந்த், மாதவன், 
 (அணு ஆயுத தடை சட்டத்தை பற்றி அஞ்சலியிடம் பேச போவது போல போஸ் கொடுக்கும் சூர்யா)

ஜெயராம், விக்ரம், எஸ்.வி.சேகர் ஓவியா, அஞ்சலி, மோனிஷா, அபர்ணா  போண்றவர்கள் வந்து இருந்தார்கள்...

ஒரு பெண்.. இரண்டு பக்கமும்  சீட்டை பிடித்து வைத்துக்கொண்டு சீட்டு தேடி அலைபவர்களுக்கு கடுக்காய் கொடுத்துக்கொண்டு இருந்தது..அந்த பெண்ணின் நண்பர்களே ஒரு சீட்டு தள்ளிதான் உட்கார்ந்து இருந்தார்கள்.. அந்த பெண் நெருப்பு என்று பிரகனபடுத்திக்கொண்டு இருந்தது...படத்தில் நடக்கும் விஷயத்துக்கு எதாவது கமென்ட் அடித்து இருந்தால் கூட மனது ஆறி இருக்கும் சும்மா நொய்  நொய் என்று பேசிக்கொண்டு இருந்தது. காலேஜில் நடக்கும் விஷயத்தை அந்த எருமை மாடுகள் அங்கு தொடர்ந்து பேசி எரிச்சல் ஊட்டிக்கொண்டு இருந்தார்கள்..

உட்லண்ட்ஸ் தியேட்டர் திரையை  ரெடி செய்து பளபளப்பாக மாற்றியமைக்கு நன்றிகள்.
 நேற்று போட்ட படங்களில் 3 படங்கள் மனதில் நின்றன... பொறுமையாக எழுதுகின்றேன்.

என்ன சுவினர்தான் உடனே கொடுக்க மறுக்கின்றார்கள்.பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

19 comments:

 1. //எல்லா வாலன்டியர்களும் மைதா மாவு கலரில் இருக்க அந்த பச்சை கலர் உவ்வே... ஒரு கருப்பு அல்லது கரு நீலம் போட்டு இருந்தால் இன்னும் செமையாக இருந்து இருக்கும்.//
  photo எடுக்கல? :-(

  //அணு ஆயுத தடை சட்டத்தை பற்றி அஞ்சலியிடம் பேச போவது போல போஸ் கொடுக்கும் சூர்யா//
  பட்டர்பிளை அண்ணன் நல்லாத்தான் இருக்கார்!:-)

  ஆமா, அஞ்சலி எல்லாம் உலக சினிமா? சுந்தர்.சி படத்திலயும் கூட நடிச்சமாதிரி இருக்கு!!

  ReplyDelete
 2. ///
  (அணு ஆயுத தடை சட்டத்தை பற்றி அஞ்சலியிடம் பேச போவது போல போஸ் கொடுக்கும் சூர்யா)
  ///

  இந்த தடாலடி கமெண்டுகள்தான் உங்கள் அடையாளம்.

  soul kitchen (தமிழில் டைப்பினால் ஏதோ வித்தியாசமாக தெரிந்தது) முதலில் மொக்கையாக தொடங்கி பின் பொறுமையாக கவர்ந்து முடிகையில் முத்தாய்ப்பாய் அமைந்தது. அனைத்து உணர்வு ரசங்களையும் பிழிந்த படம் அல்ல இது. ஆனாலும் worth watching.

  அன்பு நித்யன்.

  ReplyDelete
 3. நம்ம சூர்யாவைப் பார்த்து அஞ்சலி மேடம் மாராப்பை சரிசெய்வது யதேச்சையானதுதானா? அண்ணனின் பார்வையே சரியில்லையே.

  அண்ணன் உண்மையாரை போஸ்டருக்கு முன் வைத்து படம் பிடித்தமைக்கு என் கடுமையான கண்டணங்களை பதிவு செய்கிறேன்.

  அன்பு நித்யன்

  ReplyDelete
 4. உங்கள் பகிர்தலுக்கு நன்றி

  ReplyDelete
 5. நல்ல நாளிலேயே நாயகம் தான் நீ. உலகத்திரைப்பட விழா என்றால் ..........கேட்கவே வேண்டாம். தேன் குடித்த கரடியாய் நீ பிளாக்கில் போடப்போகும் படங்களை பார்க்க உன் ரசிகர் பட்டாளமே ரெடி. ....................
  நான் ??

  ReplyDelete
 6. ஓட்டு போட்டாச்சு.

  ReplyDelete
 7. அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்..அஞ்சலி போட்டோ சூப்பர்..அண்ணன் கேமரா எல்லோரையும் அழகாகக் காட்டுகிறதே..வெரி குட்.

  ---செங்கோவி
  ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்

  ReplyDelete
 8. elundhunuganna innum!!! Oviya photo missing !!!

  ReplyDelete
 9. Thanks for this post, looking for more detailed post on the cinemas.

  ReplyDelete
 10. ஜாக்கி,

  பதிவு நன்றாக இருந்தது.
  //எல்லா வாலன்டியர்களும் மைதா மாவு கலரில் இருக்க அந்த பச்சை கலர் உவ்வே... ஒரு கருப்பு அல்லது கரு நீலம் போட்டு இருந்தால் இன்னும் செமையாக இருந்து இருக்கும்// புகைப்படம் எங்கே?

  ஈரோடு சந்திப்புக்கு வருக வருக என வரவேற்கிறேன்.

  ReplyDelete
 11. அருமையான அனுபவங்கள்... அதிலும் ஒரே நாளில் ஏகப்பட்ட அனுபவங்கள் கிடைத்து இருக்கிறது போல... உ.தக்கு காதல் தோல்வியா... ஏன் இப்படி தாடியோடு வந்து மிரள வைக்கிறார்...

  ReplyDelete
 12. ஜாக்கி அண்ணா, இவ்விழாவில் பணபலம் மிக்க திரை அரங்குகளான சத்யம், ஐநாக்ஸ் மற்றும் பீ.வீ.ஆர். பங்கு வகித்து இருக்கலாமே.

  ReplyDelete
 13. Nantri Anna Parka Padika Mudinthathu, Romba Santhosam.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner