மனநெகிழ்ச்சியாக படம் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது.இந்த படம் சமீபத்தில் அந்த குறையை போக்கியது என்பேன்..உலகபடம் என்றால் ஒருவர் வெகுதூரம் நடந்து போவதுதானே என்ற என்பர் ஒருவர் சலித்துக்கொண்டார்.. அப்படி அல்ல பல பேரின் பார்வை அவ்விதமாகவே இருக்கின்றது.. அந்த கருத்தை உடைக்கவே நான வேறுதளத்தில் உள்ளபடங்களை எழுதி வருகின்றேன்.
நான் இயக்கிய முதல் படி என்ற எனது குறும்படத்தில் சின்ன சின்ன குறைபாடு கொண்ட பெண்கள் மீது அன்பு செலுத்துங்கள். பெரிய குறைபாடு கொண்ட பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்கின்றோமே இல்லையோ.. சிறு குறைபாடு கொண்ட பெண்களுக்கு வாழ்க்கை கொடுங்கள் என்பதே எனது குறும்படத்தின் கான்செப்ட்.
செவிட்டு பெண் என்றாலும் ஊனமுற்ற பெண் என்றாலும் உணர்வுகள் எல்லா பெண்களை போல ஒரேமாதிரிதான்.. அவளுக்கு சராசரி வாழ்க்கை வாழும் பெண்ணின் ஏக்கங்கள் அவளிடத்திலும் உண்டு... அதிலும் அவர்கள் காதலையும் காமத்தையும் தெரியபடுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்...
எங்கே இய்லபாய் தெரியபடுத்தும் போது உனக்கு அது ஒன்னுதான் குறைச்சல் என்று சொல்லிவிட்டால்..?? அந்த பயம்தான் பலரின் மனமறுகலுக்கு காரணம்..
முதலில் குறைபாடு கொண்ட பெண் தன்னிடம் அனுதாபத்தில் பழகுகின்றானா? அல்லது ஆசையுடன் பழகுகின்றானா என்பதே முதலில் கண்டுபிடிக்க நிறைய நாட்கள் பிடிக்கும்...சிலர் நன்றாக காதலோடு பழகிவிட்டு சாரி எனக்கு இது சரிவராதுன்னு தோனுதுன்னு பாதியில் கழட்டி விட்டு போகும் பேமானிகள் நிறைய....
இந்த படம் அப்படி ஒரு காது கேட்கா குறைபாடு கொண்ட ஒரு பெண்ணின் காமம், காதல் போன்றவற்றோடு ஒரு ஆக்ஷன் திரில்லரை நம் கண் முன் நிறுத்துகின்றது.
(READ MY LIPS-2001/உலக சினிமா/பிரான்ஸ்) படத்தின் கதை என்ன????
கார்லா (Emmanuelle Devos) காது கேளாத பருவ பெண்... ஒரு பில்டிங் கம்பெனியில் வேலை..தனிமைதான் அவளுக்கு துனை.. அவளது நண்பிகள் கூட அவளை தனது சுயநலத்துக்கு யூஸ் செய்து கொள்கின்றார்கள். உதாரணத்துக்கு என் புருஷனோடு வெளிய ஜாலியா போக போறேன்.. என் குழந்தைய பார்த்துக்கோ... கால்வும் மறுப்பேதும் சொல்லாமல் பார்த்துக்கொள்வாள்...
என் லவ்வரோடு இன்னைக்கு ஜாலியா இருக்க உன் ரூமை யூஸ் செய்துக்கட்டுமா? காலாவும் மறுப்பேதும் சொல்லாமல் வெளியே நின்று தேவுடுகாப்பான்.. இப்படியே தனிமையோடு வாழும் கார்லா வாழ்வில் பவுல் (Vincent Cassel) குறிக்கிடுகின்றான். பவுல் சாதாரன பவுல் இல்லை. பரோலில் வந்து இருக்கும் கைதி... கார்ல கம்பெனியில் பகுதி நேர வேலை.. தினமும் சாயங்காலம் ஆறு மணிக்கு போலிஸ் ஸ்டேசன் போய் உள்ளேன் ஐயா சொல்லவேண்டிய நிலைமை..
கார்லாவுக்கு வெகுதுரத்தில் வாய் அசைத்து யார் பேசினாலும் அவர்கள் உதடு அசைவதை வைத்தே அவர்கள் என்ன பேசிக்கொண்டு இருக்கின்றார்கள் என்ற லிப் ரீடிங் அவளுக்கு அத்துபடி...
கார்லாவோடு பாரில் தண்ணி அடிக்கும் போது பவுல் எட்டாவது டேபிளில் உள்ளவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்று கேட்டு விளையாடுவான் அவளும் கரேக்டாக சொல்லுவாள்.
பவுல் மீது கார்லாவுக்கு காதல் பிறக்கின்றது..பவுல் தங்க இடமில்லை அதனால் கார்லா பவுலுக்கு கட்டிக்கொண்டு இருக்கும் கட்டிடத்தில் ஒரு சின்ன அறையில் அவன் தங்க உதவி செய்கின்றாள். நிறைய கடன் அதை திருப்பி தருமாறு பவுலை ஒருவன் துன்புறுத்துகின்றான் அதனால் இரண்டு இடத்தில் வேலை செய்து கடனை அடைக்க ஒரு பாரில் போய் வேலை செய்கின்றான்..
ஒரு நாள் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு பவுல் கார்லைவை அழைத்து செல்ல ஏதோ ரொமாண்டிக்காக முத்தம் கொடுக்க போகின்றான் என்று நினைத்து ஆசையாக போனால் எதிர் பில்டிங்கில் இருக்கும் ஒரு அறையில் என்ன பேசுகின்றார்கள் என்று பைனாகூலரில் பார்த்து தன்னிடம் சொல்ல வேண்டும் என்று சொல்ல வெறுத்து போகின்றாள் கார்லா.. கார்லாதான் வெறுத்து போவாள்.. ஆனால் ந‘நாம் வெறுத்து போகமாட்டோம் ஏன் என்றால் இதன் பிறகுதான் கதை ஜெட் வேகம் பிடிக்கும் என்பதால் எப்படியாவது இந்த படத்தை தவறவிடாமல் பார்த்து விடவும்.
படத்தின் சுவரஸ்யங்களில் சில
படத்தின் பாதி காட்சிகளில் சவுண்ட் சுத்தமாக இருக்காது நீங்கள் ஏதாவது சிஸ்டம் அல்லது ஹோம் தியேட்டரில் கோளாறு என்று நினைத்து விட வேண்டாம் காரணம் காலாவுக்கு காது கேட்காது அல்லவா? அவள் காதில் மெஷின் மாட்டும் போதுதான் நமக்கு சவுன்ட் கேட்கும்.....
சவுண்டு வரவில்லை என்று நன்றாக இருக்கும் சிஸ்டத்தை நோன்டிவைத்து விடாதீர்கள்.
இந்த படத்தை நம் ஊரில் திரையிட்டால் ஆபரேட்டருக்கு தேவிடியாபையன் பட்டமும், கையில் எச்சில் ஒழுக விசிலும் அடித்து தீர்ப்போம். நல்லவேளை நம்ம ஊரில் இப்படி பட்ட படங்கள் வருவதில்லை.
குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கார்லாவிடம் கொடுத்து செல்ல புட்டி பால் கொடுத்தும் குழந்தை அழுது கொண்டு இருக்க... ரொம்ப சிம்பிளாக காதில் இருக்கும் மெஷினை கழட்டி வைத்து விட்டு வேறு வேலை பார்ப்பது செம டச்..
தான் எந்த வகையில் அகில் குறைந்துவிட்டோம் என்று தனது உடலை ரசம் போன கண்ணாடி முன் நின்று தன் நிர்வாண உடலை பார்த்துக்கொள்வதாகட்டும்...
பவுல் மீது மெல்ல காதல்வதையும் அதன் தவிப்பையும் ரொம்ப அழகாக அந்த பெண் வெளிபடுத்தி இருப்பாள்..
டீயை குடித்து விட்டு அவள் டேபிளில் வைத்து விட்டு அது பைலில் ஊற்றிக்கொள்ள , அதை துடைக்கும் போது போன்வர அதை அட்டன் செய்து விட்டு மறதியாக துடைத்த பேப்பரில் மேல் உட்கார்ந்து விட அது பீரியட் டைமில் துணியில் பட்டது போல காட்சி அளிக்க, பாஸ் நேரில் வந்து சந்திக்க சொல்ல, அவள் பைலை எடுத்துக்கொண்ட பின்பக்கம் மறைத்தபடி செல்லுவவாள் பாருங்கள் அதுக்கே விருது கொடுக்கலாம்..
மிக நல்ல திரைக்கதை..நல்ல ஒளி,ஒலிபதிவு என எல்லா டெக்னிஷியன்களும் கலக்கி இருக்கும் படம் இந்த படம்.
எல்லா வற்றையும் சொல்லிவிட்டால் கதையில் சுவாரஸ்யம் இருக்காது என்பதால் இப்படியே நிப்பாட்டிக்கின்றேன்.
திரைப்படம் பெற்ற விருதுகள்.
* César Awards (France)
o Won: Best Actress – Leading Role (Emmanuelle Devos)
o Won: Best Sound (Cyril Holtz and Pascal Villard)
o Won: Best Writing (Jacques Audiard and Tonino Benacquista)
o Nominated: Best Actor – Leading Role (Vincent Cassel)
o Nominated: Best Cinematography (Mathieu Vadepied)
o Nominated: Best Director (Jacques Audiard)
o Nominated: Best Editing (Juliette Welfling)
o Nominated: Best Film
o Nominated: Best Music (Alexandre Desplat)
* European Film Awards
o Nominated: Best Actress (Emmanuelle Devos)
o Nominated: Best Screenwriter (Jacques Audiard and Tonino Benacquista)
o Nominated: Audience Award – Best Actor (Vincent Cassel)
o Nominated: Audience Award – Best Actress (Emmanuelle Devos)
* Newport Film Festival (USA)
o Won: Best Actress (Emmanuelle Devos)
o Won: Best Director (Jacques Audiard)
படத்தின் டிரைலர்..
படக்குழுவினர் விபரம்
Directed by Jacques Audiard
Produced by Philippe Carcassonne
Jean-Louis Livi
Executive producer:
Bernard Marescot
Alix Raynaud
Written by Jacques Audiard
Tonino Benacquista
Starring Vincent Cassel
Emmanuelle Devos
Olivier Gourmet
Olivia Bonamy
Music by Alexandre Desplat
Cinematography
Mathieu Vadepied }
[ production designer = Michel Barthélémy ]
Editing by Juliette Welfling
Studio Sedif
Cine B
Pathé Image
France 2 Cinema
Canal Plus
CNC
Distributed by Pathé Films (France)
Magnolia Pictures (US)
Release date(s) 17 October 2001
Running time 115 minutes
Country France
Language French
Gross revenue $5,393,526
======================
லாஸ்ட் கிக்...
சரியான திரில்லர் வகை.. பாருடா இந்த விஷயத்தை கூட எப்படி யோசித்து இருக்கின்றார்கள் என்பதை அவள் லிப் ரிடிங்கை வைத்து கதாநாயகன் காய் நகர்த்தும் போதே இந்த படம் வேறு வகையான படம்என்று முடிவு கட்டிவிட்டேன்.
இந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்....
===================
படத்தை அறிமுகபடுத்தி வைத்த இணை ஒளிபதிவாளர் பார்த்தீபனுக்கு என் நன்றிகள்.
==================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
நல்ல பார்வை அருமையாக ரசித்துப் படித்தேன் சகோதரா...
ReplyDeleteஐஐஐஐ
ReplyDeleteஎனக்குத் தான் சுடு சோறு....
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/
பொறுங்க இனித் தான் வாக்குப் போடணும் போய்வருகிறேன்....
ReplyDeleteபார்க்கிறேன் தல! :-)
ReplyDeletethanks for sharing.
ReplyDelete// உலகபடம் என்றால் ஒருவர் வெகுதூரம் நடந்து போவதுதானே என்ற என்பர் ஒருவர் சலித்துக்கொண்டார்.. //
ReplyDeleteஹா... ஹா... செம காமெடி...
// இந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்.... //
ரைட்டு... பாத்துடுறேன்...
inception-ன்னு ஒரு படம் பார்த்தேன் சமீபத்துல. நீங்க பார்த்திருந்தா அந்தப் படத்தப் பத்தி கொஞ்சம் புரிய வைங்களேன்.
ReplyDeleteif anyone have torrent link for thz movie plz post it.
ReplyDeleteஇந்த படத்தின் DVD/VCD எங்க கிடைக்கும்னு ஏதாச்சும் lead கொடுத்தா இன்னும் சௌரியமா இருக்கும் தல...
ReplyDeleteபடத்தை பார்க்கத்தூண்டும் விமர்சனம் ...
ReplyDeletedownload link?neengs panlanalum yaravathu koduka muiuma? cd elam kedaikala thala...no advice pls.. :)
ReplyDeleteஇந்தப் பதிவை கொஞ்சம் பாருங்களேன்.
ReplyDeletehttp://ponmalars.blogspot.com/2010/11/tips-for-improve-blogging.html
படத்தை பார்க்கத்தூண்டும் விமர்சனம் ...
ReplyDeleteவைத்த ஒளிபதிவாளர்
ஜாக்கிசேகர்
Thanks pa
torrent download http://www.kickasstorrents.com/read-my-lips-dvdrip-xvid-lkrg-t5188700.html
ReplyDeletetorrent download:
ReplyDeletehttp://www.kickasstorrents.com/read-my-lips-dvdrip-xvid-lkrg-t5188700.html