2003 ஆம் ஆண்டு கொரியாவில் வெளியான ஓல்ட் பாய் திரைப்படத்தின் கதையின் ஒன்லைன் 15 வருடம் தனிமை சிறையில் இருந்தவன் வெளி வருகின்றான். வெளி வருகின்றான் என்றால் தப்பித்து அல்ல.. விடுவிக்க படுகின்றான்..
ஆனால் எவன் கடத்தினான் என்பது தெரியாது... ஒரு நாள் இல்லை இரண்டு நாள் இல்லை.. பதினைந்து வருடம்.. தனிமை சிறை வேறு... சாப்பிட்டு பேண்டு.... என்ன வாழ்க்கை...? அதற்கு காரணமாவனை ங்கோத்தா எவன்டா அவன் என்று கண்டு பிடித்து சல்லி சல்லியாக செதில் செதிலாக வெட்டி போட வேண்டும் என்று ஒரு கோவம் வரும் அல்லவா.? படம் பார்க்கும் நமக்கே வரும் போது...? அவனுக்கு வராதா? என்ன-