திரும்பி பார்க்கின்றேன் 2010 ஒரு பார்வை..



வருட கடைசியில் அந்த வருடத்தை திரும்பி பார்ப்பது சுவையான அனுபவம்தான்... முன்பு நான் வருட வருடம் டைரி எழுதி வருவேன்.. ஆனால் பதிவு எழுத அரம்பித்ததில் இருந்து டைரி எழுதுவதை குறைத்து விட்டேன். காரணம் நிறைய பதிவுகள் எழுதுவதால் டைரி எழுதுவது குறைந்து விட்டது..சரி 2010 சும்மா விரிவா பார்க்காவிட்டாலும் ஜஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்...



hello how are you/ உலக சினிமா/ருமேனியா/ 40வயதுக்குமேல் காதல் வருமா??



40 வயதுக்கு மேல் காதல் வருமா? வரும் என்று சொல்கின்றார்க்ள்.. ஆனால் அந்த காதல் என்பது தன் கணவனிடம் மனைவியிடம் வர வேண்டும் அல்லவா?? ஆனால் பலருக்கு அது போல் வந்து தொலைக்கமாட்டேன்கின்றது... அதுதான் பிரச்சனை..


தமிழ் சினிமாக்களில் ஆண் மட்டுமே 40 வயதுக்கு மேல் அடுத்த பெண்னோடு தொடர்பு வைத்து இருப்பதாக காட்டுவார்கள்.. பெண்கள் வீட்டில் மஞ்சள் பூசி குளித்து சாமி கும்பிட்டு கணவனே கண் கண்ட தெய்வமாக வாழ்வதாக காட்டுவார்கள்.. ஆனால் தமிழகம் எப்போதோ மாறிவிட்டது.. அதை எந்த சினிமாவும் பதிவு செய்வது  இல்லை..அப்படியே பதிவு செய்தாலும் காமெடிக்காக பதிவு செய்யபடுகின்றன.


சுனாமிக்கு மறுநாள் நான் எடுத்த மறக்கமுடியாத போட்டோக்கள் ..

சுனாமி வந்து 6 ஆண்டுகள் முடிந்து விட்டன. சுனாமி வந்த போது வடபழனி குமரன் காலனியில்  இருந்தேன்..மீட்பு பணிக்கு இடையூறு செய்யாமல் இருக்க யாரும் கடற்கரைக்கு வரைவேண்டாம் என்று தொலைகாட்சியில் அறிவிப்பு வந்த காரணத்தால் நான் வெளியே போகவில்லை..

தொலைகாட்சியில் ஒரு அம்பாசிட்டர் கார் அண்ணாசமாதி அருகே தண்ணீரில் குதித்துக்கொண்டு இருக்கும் போதே எனக்கு சுனாமி கோரமுகம் தெரிந்து விட்டது...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(29•12•2010)

ஆல்பம்..

2010 ஆம் ஆண்டின் கடைசி சாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ்...  விளையாட்டாய் ஒரு வருடம் ஓடி விட்டது.தொடர்ந்து சாண்ட்வெஜ் வாசித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும் வாசக நண்பர்களுக்கும் என்  நன்றிகள்..
================
மன்மதன் அம்புவிமர்சனத்தை நான் நடுநிலை தவறி எழுதிவிட்டதாக சிலர் வருத்தபட்டு சொல்லி இருந்தார்கள்.. எனக்கு படம் பார்க்கலாம் .. படம் பார்க்க கூடாத அளவுக்கு அம்பு  ஒன்றும் அவ்வளவு மொக்கை இல்லை... ரெண்டாவது நீங்கள் நினைப்பது  போல் எல்லாம் என்னால் விமர்சனம் எழுத முடியாது.. எனக்கு என்ன பிடிக்குதோ.. அதைதான் எழுத முடியும்...


COLD FISH உலகசினிமா/ஜப்பான்18+..கஜ கஜ கொஜ கொஜ மனித கொத்துக்கறி..



போன ஏழாவது சென்னை உலக படவிழாவில் ஆன்ட்டி கிரைஸ்ட் என்ற டென்மார்க் படம் .. படம் பார்ப்பவர்களை  போட்டு தாக்கியது... நிச்சயம் அந்த படத்தை பற்றி எப்படியும் இரண்டு  நாளைக்கு மேல் யோசித்துக்கொண்டு இருந்து இருப்பார்கள்...

பெண் உறுப்பில் இருக்கும்  மொட்டை கத்திரிக்கொலால் வெட்டியும்,கணவனின் ஆணுறுப்பை கட்டையால் அடித்து நசுக்குவதுமாக , அந்த படம் ரத்த வீச்சாக ஒரு பெரிய பரபரப்பை போனசென்னை உலக படவிழாவில் ஏற்படுத்தியது..  அதை விட இன்னும் ஒரு படி மேலே போய் இருக்கின்றது இந்த  கோல்ட் பிஷ் என்ற ஜப்பான் படம்....


Memories of Murder -2003 உலகசினிமா/சவுத்கொரியா( வாழ்வில் மறக்கமுடியாத கொலைகள்...)



மறதி நல்ல விஷயம் தான்ஆனால் அதுக்காக முக்கியமான சில விஷயங்களை மறக்கவே முடியாது அல்லவா?? எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டேதான் இருப்போம்...அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்..


ஈரோட்டு பசங்க பாசக்கார பயபுள்ளைங்கதான்...(ஈரோடு தமிழ் வலைபதிவர் சங்கமம்)

வெளியூர் ஷுட்டிங் போய் பல மாதங்கள் ஆகிவிட்டன. ஈரோடுவலைபதிவர் குழுமத்தில் கலந்து கொள்ள நிறைய அன்பான அழைப்புகள் வந்தன...நான்  போவதா வேண்டாமா? என்ற இரட்டை மன நிலையில் இருந்தேன். இருப்பினும் சனி இரவு 8,30 மணிக்கு போவது  என்று முடிவு செய்து ஈரோடுக்கு வண்டி ஏறினேன்.


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•12•2010)

ஆல்பம்..

இன்னும் 100 நாட்களில்  சென்னை சாலைகள் சரிசெய்யபடும்... அதுவும் மழைபெய்யவில்லை என்றால் சொன்ன நேரத்துக்கு சரி செய்து விடுவோம் என்று துணைமுதல்வர் சொல்லி இருக்கின்றார்.. பார்ப்போம்.. நல்ல சாலை வசதி சென்னைக்கு எப்போது வாய்க்குமோ? பகவானுக்கே  வெளிச்சம்..
===========

இனிதே நிறைவு பெற்ற சென்னை 8வது உலகதிரைப்படவிழா..



நேற்றோடு  சென்னை உலக திரைப்பட விழா நிறைவு பெற்றது. ஒன்பது நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் 40 நாடுகளில் இருந்து 130க்கு மேற்ப்பட்ட படங்கள் திரையிடப்பட்டன...


மன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்.



கமல் படத்தில் முதல் காட்சியிலேயே நடிகர்  சூர்யாவும் திரிஷாவும் ஆட்டம் போடும் போது இது தமிழ்படம்தானா? என்ற ஆச்சர்யங்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன..ஒரு பெரிய நடிகர் படத்தில் வளர்ந்து வரும் ஒரு நடிகர் ஈகோ பார்க்காமல் நடித்து இருப்பது பாராட்டுக்குறியது.


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(22•12•2010)

ஆல்பம்...
கடைசியில் ராசா கைது செய்யப்படலாம் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து கூட தூக்கப்படலாம் என்பதாய் செய்திகள் தெரிவிக்கின்றன..திமுக தலைவரின் சின்ன குடும்பத்தை பழிவாங்க எல்லோரும் ஓர் அணியில் திரண்டு விட்டார்கள் அப்புட்டுதேன்..
===========

நடு ரோட்டில் நிறுத்தும் மாநகர பேருந்தும், நடு ரோட்டில் நிற்கும் பொதுமக்களும்.





சென்னையில் பல காரணங்களை டிராபிக்கு சொன்னாலும் ஷேர் ஆட்டோ மீது பெரும்பாலானவர்கள் பழி போட்டு தப்பி விடுகின்றார்கள்..
ஆனால் அவர்கள் மட்டும் காரணம் அல்ல...


உலகத்திலேயே பேருந்தினை எத்தனை பெரிய டிராபிக்காக இருந்தாலும் நடு ரோட்டில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கும்  பேருந்து ஓட்டுனர்கள்... நமது அரசு பேருந்து ஓட்டுனர்கள்தான்... அவர்களை  யாரும் கேட்க முடியாது.. ஏனென்றால் அவர்களுக்கு சங்கம் இருக்கின்றது.


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•12•2010)

ஆல்பம்..
அவர்கள் அப்படித்தான் பேசி இருக்கவேண்டும். என்ன பேசி இருக்கவேண்டும்..?? மச்சி இதுதான் நல்ல நேரம்.. நாடளுமன்றம் முடங்கி 20 நாளைக்கு மேல ஆக போகுது..  சோ இந்த நேரத்துல பெட்ரோல் விலையேத்த சரியான நேரம் என்று ஆயில் கம்பெனிகள் அவசர கூட்டம் போட்டு சரக்கு அடித்தபடி இப்படித்தான் பேசி இருக்கவேண்டும்.


(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ்.. ஒரு கலீஜ் தியேட்டர்...


நாம் கலீஜ்  என்று முகம் சுளிக்கும் இடத்தில்தான் பல பேர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்... அவர்களும் மனிதர்கள்தான்... அவர்களும் நம்மை போலவே இந்த பூமியில் வாழ வந்தவர்கள்...பிறப்பின் பின் புலத்தால் அந்த இடத்தில் வாழ்கின்றார்கள்...இந்த உலகில் எதுவுமே கலீஜ் இல்லை... முகம் சுளித்தால் எங்கும் வாழ முடியாது....உயிர் வாழ தகுதியுடையவனாக தன்னை மாற்றிக்கொள்ள எந்த இடத்திலும் எது செய்தாவது வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய கதை இது....



சென்னையில் உற்சாகமாக துவங்கிய 8வது உலகபடவிழா...(புகைபடங்களுடன்)

(உட்லண்ட்ஸ் தியேட்டரின் முகப்பு வழக்கமான கூட்டத்தை விட இந்த முறை அதிக கூட்டம்.)

எட்டு வருடங்களுக்கு முன் உலக திரைப்படம் கிலோ என்னவிலை?? என்று  நான் கேட்ட நேரம் அது... மிகசரியாக எட்டு வருடங்களுக்கு முன் ஒரு நண்பர் பிலிம் பெஸ்ட்டிவலுக்கு பாஸ் வாங்கிவிட்டு தன்னால் போக முடியவில்லை நீ வேண்டுமானால் போய் விட்டு வா என்று சொன்னார்...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(15•12•2010)

ஆல்பம்.


பெட்ரோல் விலை லிட்டருக்கு 3ரூபாய் ஏறி இருக்கின்றது ஒரு பத்து வருடத்துக்கு முன்பு லிட்டர் 35ரூபாய் விற்ற போது பெட்ரோல் விலையேற்றங்கள் 30 காசு மற்றும் 75 காசுகளில் மட்டுமே விலையேற்றம் இருக்கும் ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லை... ரூபாய்களில் விலை ஏறிக்கொண்டு இருக்கின்றது. முன்பு பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை காரணம் காட்டி நான்கு ரூபாய்க்கு விற்ற டீ 5ரூபாய்க்கு ஆனது. இப்போது  டீசல் விலை உயர்வை அறிவிக்கவில்லை அறிவித்து இருந்தால் சிங்கள் டீ ஆறுரூபாய் ஆகி இருக்கும்..


சாருநிவேதிதாவின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா ஒரு பார்வை.(13/12/2010)




உயிர்மை பதிப்பகம் வெளியீடும்  எழுத்தாளர் சாருவின் புத்தக வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில்  நேற்று மாலை நடைபெற்றது. காமராஜர் அரங்கத்தில் நுழையும் போதே சாருவின் துணைவியார் அவந்திகா மற்றும் கருப்பு பேன்ட் ,சிவப்பு சட்டை போட்ட ஒரு  பெண்மணியும் வந்தவர்களை வரவேற்று முதலில் டீ , சமோசா சாப்பிட்டு  வர அன்புடன் கேட்டுக்கொண்டார்கள்.


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•12•2010)

ஆல்பம்.
நாடளுமன்றம் இருபது நாட்களுக்கு மேல் தொடர்ந்து முடங்கி கிடக்கின்றது.. இந்த வாய்ப்பு   எப்போதும் கிடைக்கபோவதில்லை என்று எதிர்கட்சிகளும் விடாபிடியாக இருக்கின்றன...என்றைக்கு மக்கள் நலன் மீது இவர்களுக்கு அக்கறை இருக்கின்றது. இப்போது மட்டும் இருக்கபோவதற்கு??
====================

8வது சென்னை உலகதிரைப்படவிழா பற்றிய அறிவிப்பு...



எனக்கு ஒரு கடிதம் வந்தது.. அந்த கடிதம்  சினிமாவை விரும்பி  பார்ப்பவரின் கடிதம்...

 
அன்புள்ள ஜாக்கி ஸாருக்கு,



சென்னை அடையாறு ஆற்று வெள்ளம் ஒரு அட்வென்சர் பயணம் (புகைபடங்களுடன்)

நம்மை பொறுத்தவரை மழை நின்று விட்டது.. குண்டு குழியான சாலைகள் ஏன் இன்னும் செப்பனிடபடவில்லை என்ற கேள்வி மட்டுமே நம் செசன்னைவாசிகள் பெரும்பாலோனோர் மனதில் தொங்கி நிற்கும் கேள்வி.


சென்னை மழை என் கேமராவில் கிளிக்கியவை...

 சென்னையில் மழை நின்றுவிட்டது.ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் என் கேமராவை வெளியே எடுக்காமல் இருந்தேன்...இந்த  மழைக்கு வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் என் பார்வைக்கு பட்டவைகளை உங்கள் முன் காட்சியாக..

 இது நம்ம ராமபுரம் பக்கத்தில் இருக்கும் மியோட் மருத்துவமைனைக்கு அருகே இருக்கும்  பாலம்... செம்பரம்பாக்கம்  ஏரியில் தண்ணீர் திறந்து விட்ட காரணத்தால் ஏற்பட்ட வெள்ளபெருக்கு இது. மூன்று வருடங்களுக்கு முன் இதே போல தண்ணீர் பார்த்தேன் அதன் பிறகு இப்போதுதான் பார்க்கின்றேன்.
===========

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(08•12•2010)


ஆல்பம்..

சென்னை மிதந்து கொண்டு இருக்கின்றது. நேற்று இரவோடு மழை விட்டு விட்டாலும் மழை ஏற்படுத்திய சுவடுகள் மறைய எப்படியும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகலாம். காரணம்.. அவ்வளவு தண்ணீர். இத்தனைக்கு மழை பெரிதாக பேயவில்லை என்பதே உண்மை.. ஒன்பது சென்டிமீட்டர் மற்றும்  பத்து பண்ணிரண்டு சென்டிமீட்டர்தான் பேய்ந்து இருக்கின்றது..15 நாட்கள் தொடர்ந்து தென்மாவட்டங்களில் மழை பெய்து இருக்கின்றது. ஆனால் அதனை ஒப்பிடும் போது சென்னையில் மழையின் அளவு குறைவு என்பேன்... சென்னை புறநகர் பகுதியான கேளம் பாக்கத்தில் மழையின் அளவு 17 சென்ட்டிமீட்டர் பேய்ந்தது.. சில வருடங்களுக்கு முன் மும்பையில் ஒரேநாளில் 90 சென்ட்டிமீட்டர் மழை பதிவானது அப்படி பெய்து இருந்தால் சென்னை மூழ்கி இருக்கும்.
===========================


வழிப்பறி சென்னை சாலை...

ஏற்கனவே  இந்த பக்கத்தில் சில ஆபத்தான சென்னை  சாலைகள் பற்றி எழுதி இருக்கின்றேன்.  மதுரவயல் பெருங்களத்துதூர்  பைபாஸ் ரோடு பற்றியும் சென்னை ஈசிஆர் சாலை பற்றயும் தொடர்ந்து இந்த தளத்தை வாசித்து வருபவர்களுக்கு நிச்சயம் தெரியும்.


சென்னை மாநகர பேருந்து இருக்கை மாற்றமும்,அறிவுக்கொழுந்து அதிகாரிகளின் யோசனையும்...


உலகின் மிககொடுமையான பயணம் என்பது பீக் அவரில் சென்னை மாநகர பேருந்து பயணம்தான்.

சரி பேருந்தில் செல்வது கொடுமையா?

பேருந்தில் செல்வது கொடுமை என்று யார் சொன்னது.. சராசரியாக 45 பேர் பயணம் செய்யும் பேருந்தில் 100 பேருக்குமேல் தினசரி பயணித்தால் அது கொடுமைதானே.


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/05•12•2010)

ஆல்பம்.. 

இன்று சரியாக (இன்னும் சில மணி நேரங்களில்) மதியம் இரண்டு மணிக்கு விஜய்டிவியில் இந்தவார தமிழ்சினிமா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது அதில் நந்தலாலா படம் பற்றி நான் உட்பட சென்னை பதிவர்கள் பலர் கலந்து கொண்டு பேசி இருக்கின்றோம்.


ரத்த சரித்திரம் விமர்சனம்.



ரத்தசரித்திரம்... பழிவாங்கும் கதையை நாம்  கதைகதையாக  பார்த்து இருந்தாலும் இந்த கதை ஒரு உண்மைசம்பவத்தினை அடிப்படையாக கொண்டது. இந்த படம் இரண்டாம் பாகம்..


(READ MY LIPS-2001/உலக சினிமா/பிரான்ஸ்) காது கேட்காதவளின் காதலும் காமமும்....



 மனநெகிழ்ச்சியாக படம் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது.இந்த படம் சமீபத்தில் அந்த குறையை போக்கியது என்பேன்..உலகபடம் என்றால் ஒருவர் வெகுதூரம் நடந்து போவதுதானே என்ற என்பர் ஒருவர் சலித்துக்கொண்டார்.. அப்படி அல்ல பல பேரின் பார்வை அவ்விதமாகவே இருக்கின்றது.. அந்த கருத்தை உடைக்கவே நான வேறுதளத்தில் உள்ளபடங்களை எழுதி வருகின்றேன்.


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(01•12•2010)

ஆல்பம்..

இன்று எயிட்ஸ் தினநாள். தமிழகத்தில் கடந்த பத்து வருடத்தில் எலக்ட்ரானிக் மீடியா போல பிரபலமான நோய் எயிட்ஸ் நோய்.. எனது கல்லூரியில் சில வருடத்துக்கு முன் ஒரு டிசம்பர் முதல் நாளின் போது எயிட்ஸ் பற்றிய கருத்தரங்கத்திற்கு ஒரு எயிட்ஸ் பாதிக்கபட்ட நபரை மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தோம்..


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner