திரும்பி பார்க்கின்றேன் 2010 ஒரு பார்வை..



வருட கடைசியில் அந்த வருடத்தை திரும்பி பார்ப்பது சுவையான அனுபவம்தான்... முன்பு நான் வருட வருடம் டைரி எழுதி வருவேன்.. ஆனால் பதிவு எழுத அரம்பித்ததில் இருந்து டைரி எழுதுவதை குறைத்து விட்டேன். காரணம் நிறைய பதிவுகள் எழுதுவதால் டைரி எழுதுவது குறைந்து விட்டது..சரி 2010 சும்மா விரிவா பார்க்காவிட்டாலும் ஜஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்...



உலகம்...

விக்கிலிக்ஸ் இணையத்தால் அமெரிக்க இமேஜ் கிழித்து நார் நாராக தொங்கவிடப்பட்டது இந்த ஆண்டுதான்..

ஆங்  சான் சூகி 15 ஆண்டுகால சிறைவாசத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு சுதந்திர காற்றை மியான்மரில் சுவாசித்தார்...

இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டார்... 

இந்தியா...

மிகப்பெரிய கேவலமான தீர்ப்புக்கு சாட்சி.. போபால் விஷவாயு தீர்ப்பு... அதே போல இன்னும் பெரும்பாண்மையான இந்திய மக்களால் கூர்ந்து கவனிக்கபட்ட தீர்ப்பு அயோத்தி தீர்ப்பு...

அதிபர் ஒபாமா இந்தியா வந்தார்..

அரசியலை பொறுத்தவரை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை முன்னிட்டு நீண்ட நாட்கள் நடளுமன்றம் முடங்கியது...

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டினால் ஒரு லட்டசத்து 70 ஆயிரம் கோடிகள் அரசுக்கு நட்டம் என்று தணிக்கைதுறை சொல்லியது..பிரச்சனை இந்தியா முழுவதும் பற்றிக்கொண்டது..

நீரா ராடியா டெலிபோன் பேச்சு மற்றும் சேன்ல் தொகுப்பாளர்கள் டேப் வெளிவந்து மானத்தை வாங்கியது... 

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்..


கிரிக்கெட்டில் லலித் மோடி ஊழல் என்று ஊழல் ஆண்டு 2010 என்றால் அது மிகையாகாது...

மங்களுர் விமான விபத்தும், இரண்டு ராக்கெட் கடலில் விழுந்ததும் பரபரப்பாய் பேசப்பட்டன...

============= 
தமிழகம்...

செம்மொழி மாநாடு...பிரமாண்டமாக நடத்தினாலும் நிறைய சலசலப்பை பெற்றது... செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலுக்கு ஏஆர் ரகுமான் இசை கூடுதல் கவர்ச்சிக்கு வித்திட்டது...

தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவை கொண்டாடியது இந்த ஆண்டுதான்... அது எவ்வளவு பெரிய பெருமை.

புதிய தலைமை செயலகம் இந்த வருடம் துவங்கபட்டு மவுண்ட்ரோட்டில் கம்பீரமாக நிற்க்கின்றது.. இன்னும் திரைபடங்களில் இந்த புதிய சட்டமன்றம்  காட்டப்படவில்லை என்று எண்ணுகின்றேன்.

கல்வி கட்டணத்துக்கு கடிவாளம் போடபட்ட ஆண்டு இந்த வருடம்தான்...இன்னும் அந்த சட்டம் சற்று இழுபறியாக இருப்பது வருத்தமே..

தென்மாவட்டங்களில் 23 நாட்களுக்கு மேல் தொடர்ந்த மழை மக்களை உண்டு இல்லை என்று செய்து விட்டது..

தமிழகத்தில் இந்த ஆண்டினை தமிழகத்தில் கடத்தல்கள் நிறைய நடந்தது என்று சொல்லாம்..நிறைய கடத்தல்கள் வெளிய எதரியாமல் முடி மறைக்கப்பட்டன.. நிறைய கடத்தல் கொலைகள் இந்த ஆண்டு.. கோவை பிள்ளைகள் கொலை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் சோகத்துக்கு உள்ளாக்கியது.. 

தமிழக சாலைவிபத்துகளில் இருந்தவர்களும்..  சென்னை மெரினாவில் குளிக்க வந்து கடலில் மூழ்கி இறந்தவர்கள் அதிகம்...

நித்யா,ரஞ்சிதா வீடியோ கிளிப்பிங் வெளியாகி பரபரப்பை கிளப்பியது...

சென்னை...

சென்னையில் பல பதிய மேம்பாலங்கள் பயண்பாட்டுக்கு வந்தன..

பல புதிய மால்கள் சென்னையில் உதயமாயின... உதாரணத்துக்கு எக்ஸ்பிரஸ்மால் ராயப்பேட்டையிலும்,ஸ்கைவால்க் அண்ணாநகர் அருகிலும் திறந்து வைக்கப்பட்டது....


அண்ணா நுற்றாண்டு நினைவு பெரிய நூலகம் திறந்துவைக்கபட்டது....

============= 
சோகம்..
மார்க்சிஸ்ட் கட்சி ஆர் வரதராஜன் ,நடிகர் முரளிஇறந்ததும் சுவர்ணலதா இறந்ததும் நிறையபேருக்கு அதிர்ச்சி செய்தி...

=========

சினிமா...

போனவருடத்தில் வெளியான படங்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த படம் விண்ணைதான்டி வருவாயா...

நள்ளிரவு ஒருமணிக்கு மாயாஜலில் தமிழ்படம் பார்த்து விட்டு விடியலில் 3 மணிக்கு ஈசிஆரில் வந்ததும்,விடியலில் 4 மணிக்கு எழுந்து முதல்நாளே5.30 மணிக்காட்சிக்கு போனது சென்னையில் புதுமையான அனுபவம்...

==============
இணையம்...

சவுக்கு இணையதளம் தமிழில் சக்கைபோடு போடதுவங்கி பலபார்வையாளர்களை பெற்றது...ஆதாரத்தோடு எழுதும் எழுத்துக்கு பலர் ரசிகர்கள் ஆயினர்...

=======
பதிவுலகம்..

இந்த வருடம் நிறைய பிரச்சனைகளைசந்தித்த ஆண்டு...நிறைய காழ்ப்புனர்ச்சி பதிவுகள் சண்டைகள், சச்சரவுகள்... நிறைய பேர் யோக்கிய வேஷம் போட்டு  வெளுத்து வாங்கினார்கள். நானும் சீண்டப்பட்டேன். முதலில் கோபபட்டு, பிறகு நண்பர்கள் சொன்னார்கள்... 4 பேர் சீண்டுவதுக்கு ஏன் பதில் சொல்லவேண்டும்? என்று என்னிடத்தில் கோபித்துக்கொண்டவர்கள் நிறைய... நாங்கள் இருக்கின்றோம் என்று என்னோடு இருந்தார்கள்.. என்னோடு நட்பு பாரட்டிய நண்பர்களுக்கு என் நன்றிகள்.

இந்த வருடம் பத்திரிக்கைகளில் எனது பெயர் தட்டுபட ஆரம்பித்தது..

போனவருடம் 2009.....ல் ...271 பதிவுகள் எழுதி இருந்தேன்..
இந்த வருடம் 285 பதிவுகள் எழுதி இருக்கின்றேன்... இத்தனைக்கும் போன வருடம் படபிடிப்பு இருந்தது.. இந்த வருடம் அப்படி இல்லை.. இருப்பினும்  பதிவுகள் குறைறவுதான்....

பிளாக்ஸ்பாட்டில் இருந்து டாட்காம்மாக தளத்தை மாற்றியது இந்தவருடம்தான்..

பத்து லட்சம் ஹிட்ஸ்களை கடந்து 14 லட்சம் ஹிட்ஸ்களோடும் 862 பாலோயர்களோடு தத்தி நடந்து கொண்டு இருக்கின்றேன்...

நிறைய நேரத்தை விழுங்கிவிடுவதால் போஸ்ட் போட்டு விட்டு சிஸ்டத்தை ஆப் செய்து விடும் பழக்கத்தை தொடர்வது இந்த வருடம்தான்..


ஒரு நாளைக்கு சராசரியாக 3பேர் போன் செய்கின்றார்கள்.. எனக்கு இது எனக்கு பெரிய அங்கீகாரம்...

சாண்ட்வெஜ் நான்வெஜ் புதன்கிழமை விடாமல் தவறாமல் எழுத ஆரம்பித்தது இந்த வருடம்தான்..

கடிதங்கள் பிரசுரப்பது பலரால் கிண்டல் செய்யபட்டாலும் தொடர்ந்து போடுவதும் இந்த வருடத்தில் இருந்துதான்..

மினிசாண்ட்வெஜ் எழுத ஆரம்பித்தது இந்த வருட பாதியில் இருந்துதான்...

நிறைய நண்பர்கள் கிடைத்தது இந்த ஆண்டில்தான்..ஈரோடு பதிவர் சந்திப்பும் அதற்கு ஒரு காரணம்..


 ஜாக்கிசேகர் ரீவைன்ட் 2010......

பிப்பரவரி மாதம் 2010தோடு நான் ஷுட்டிங் போனதுதான் அதன் பிறகு இன்று வரை அதாவது பத்துமாதங்களுக்கு மேல் ஷுட்டிங் செல்லவில்லை..வீட்டில்தான் இருக்கின்றேன்..

பரபரப்பாய் வேலைக்கு போய்விட்டு தேமேன்னு வீட்டில் உட்கார்ந்து இருப்பது போலான கொடுமை வேறு ஒன்றும் இல்லை என்பேன்...

வெளியில் போனால் ஒரு லிட்டர் பெட்ரோல் வண்டிக்கு தேவை என்பதால் வீட்டை விட்டு வெளியே  போகவில்லை...கையில் பைசா இல்லாமல் செம டைட்

ஆனால் 2010ல்  பதிவுலகம் கை கொடுக்க  சொந்தமாக வீடு வாங்கினேன்..நிறைய மகிழ்வு சம்பவங்கள் இந்த வருடத்தில் நடந்தது... பரம் பொருளுக்கு நன்றி...

.

மகளிர் மட்டும் படத்தில் முதல் காட்சி போல... கணவன் வேலைக்கு கிளம்புவது போல கிளம்பி மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டில் இருந்து  இருக்கின்றேன்...

நான் கன்னியாராசி அஸ்த்த நட்சத்திரம்...டாக்டர் புருனோவிடம் பதிவர் சந்திப்பில் சொன்ன போது, எனக்கு  ஏழரை நடப்பாதாக சொன்னார்...இப்போது பரவாயில்லை. 


நிறைய பிரச்சனை வந்தாலும் இந்த பதிவுலகம் மட்டும் இல்லையென்றால் இன்னும் நான் அதிகம் புலம்பி இருக்க வாய்ப்பு அதிகம்.. ஆனால் இந்த பதிவுலகம் என்னை அதிகம் பாதிக்கவிடவில்லை.. பதிவுலகத்துக்கு என் நன்றிகள்...

என் மனைவி  எனக்கு கொடுத்த பெரிய பலத்தினால் நான் உங்களோடு பயணபடுகின்றேன் அவர்களுக்கு என் நன்றிகள்.


போனவருடம் 2009ல் எனது தளத்தில்  எழுதிய கடைசி பதிவு......வாசிக்க இங்கே கிளிக்கவும்..



 என்னோடு தொடர்ந்து பயணப்பட்டு வரும் நண்பர்களுக்கு என் நன்றிகள்...அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. குட்பை 2010...



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்


28 comments:

  1. உங்களுக்கும் அண்ணிக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  2. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உங்களுக்கும் இனிய புத்தாண்டு எல்லா வளமும் கொடுக்க இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் அண்ணே... :-)

    ReplyDelete
  4. jackie anne adhu aang san sukie dhane ban ki moon illa
    happy new year

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தல!

    ReplyDelete
  6. >>> ஜாக்கி அண்ணா, வரும் புத்தாண்டு தங்களுக்கு அனைத்து மகிழ்ச்சியையும் தரட்டும்!! திரையில் ‘ஒளியை’ பிரகாசமாக படரவிட வாழ்த்துகிறேன்!!

    ReplyDelete
  7. //என் மனைவி எனக்கு கொடுத்த பெரிய பலத்தினால் நான் உங்களோடு பயணபடுகின்றேன்//...பெரிய கொடுப்பினை சார் இது..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    வரும் புத்தாண்டில் எல்லாம் வல்ல ஆண்டவன் கிருபையால் புதுப் பட வாய்ப்புகள் பெருகட்டும்.

    ReplyDelete
  10. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே...
    தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. புதுவருட வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  12. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  13. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. தமிழ்மனத்தில் வாக்களித்தால் Voting from other stes not allowed Please vote from the Blog. இதை தயவுசெய்து சரி செய்யவும்....

    ReplyDelete
  16. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. Happy New Year Anna & Akka

    ReplyDelete
  18. பதிவுலகின் பிதாமகன் ஜாக்கி சேகர் அவர்களுக்கு, இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே!.

    ReplyDelete
  20. ஜாக்கி

    உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், வலையுலக தோழமைகள் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    HAPPY NEW YEAR 2011 http://jokkiri.blogspot.com/2010/12/happy-new-year-2011.html

    கோலிவுட் - டாப்-20 நடிகர்கள் http://edakumadaku.blogspot.com/2010/12/20.html

    ReplyDelete
  21. Jackie,
    I am one of your regular readers. Keep it up.
    May be I will get to chat with you in person when I come to India next time.
    Wishing you a Happy and Prosperous new year!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner