எண்ணெய்சட்டி..

அம்மா
தீபாவளிக்கு முறுக்குசுடும் நேரம்.
என்வீட்டை பொறுத்தவரை
நள்ளிரவுநேரம்தான்....



எண்ணெய்சட்டி வைத்தஉடன்
எவரிடமும் பேசமாட்டாள்.
எந்த சயின்டிஸ்ட்
அவளிடம் சொன்னான்  என்று தெரியவில்லை.
பேசினால் எண்ணெய் சட்டி
எண்ணெய் குடிக்கும் என்று.....

முறுக்கும், வடையும்,அதிரசமும்
பொறியும் சொய்ய்ய் சத்தத்தை தவிர
வேறு  எந்த சப்தத்தையும்
நான்  அறியேன்

வீட்டில் தொலைகாட்சி வந்த பிறகு
தீபாவளிக்கு முன் இரவில்
ஒளிபப்பாகும்
திரைபடங்களை பார்த்துக்கொண்டே
முருக்கும் வடையும்
மொறு மொறு  பதத்தை  அடைந்து விடும்.

தொலைகாட்சி போடும் சத்தம்
எண்ணெய் குடிக்காதா? என
நான்  அம்மாவிடத்தில்
எழுப்ப நினைத்த கேள்விகள்
அவள் பக்கத்தில் இருக்கும்
ஜல்லி கரண்டிக்கு பயந்து

என் கேள்விகளனைத்தும்
தொண்டைகுழியில் சமாதிஆயின....

பெருநகர டீ கடைகளில்
பஜ்ஜி போடும் எண்ணெய் சட்டி சுற்றி
கலர் கலராய் கழுத்துபட்டையில்

தன் சுயஅடையாளங்கள் பறைசாற்றும்

இளைஞர் கூட்டம்
கரவொலி எழுப்பி பேசிச்சிரிக்கையில்
அம்மா
தீபாவளிக்கு
முறுக்கு சுடும் போது
எண்ணெய்சட்டி அருகில்
அவள் காட்டும் அமைதியை
நினைக்காத நாளில்லை


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள். 

11 comments:

  1. எங்க அம்மா மாதிரியே தான் உங்க அம்மாவும்..இருக்காங்க... பலகாரம் செய்யும் பொழுது பக்கத்தில் போக முடியாது....

    அம்மாவின் நினைவுகள் மிகவும் அருமை..

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ஜாக்கி.

    ReplyDelete
  3. வீட்டுல பலகாரம் சுட்டு பல வருஷமாச்சுங்கோ .......

    ReplyDelete
  4. Dear Jacki

    Wish you all a very Happy Deepaavali.

    It is a dangerous task, to work with hot oil. It may cost one's life or permanent deformation. So you mother is correct, in concentrating on the work.

    Mother knows the best, Jacki.

    Anbudan
    Packiri

    ReplyDelete
  5. வண்ணதாசனின் வரிகளை அப்படியே இங்கே எழுதிறேன்:

    வண்ணதாசன் வல்லிகன்னனுக்கு மார்ச் 1991 இல் எழுதிய கடிதம்.


    பண்டம் சுடுகிற வாசனையுள்ள வீடு எவ்வளவு அருமையானது. அதுவும் சொந்த வீட்டு அடுக்களையில் மண் அடுப்பில், விறகு எரித்து சுடுகிற நேரத்தின் நெருப்பும், அடுப்பின் உட்பக்கத்து தணலும், தணலின் சிவப்பில் ஜொலிக்கிற அம்மா அல்லது ஆச்சி அல்லது அத்தைகளின் முகமும் எவ்வளவு ஜீவன் நிரம்பியது.
    உங்களின் கல்யாண முருங்கைகள் மட்டும் தொலைந்து போயின. நெருப்பு வெளிச்சத்தில் சுடர் தகதகிக்கிற எவ்வளவோ முகங்கள் தொலைந்து போயின. சிலசமயம் விசேஷ வீடுகளில் தொலைக்கிற சிறுமிகளின் காதுத் திருக்குகள் போல, அவை திரும்ப கிடைத்து சந்தோசங்களையும் உண்டாக்கி விடுகின்றன.

    ReplyDelete
  6. Happy Deepawali to you & your family anna!!!!!!!!!

    ReplyDelete
  7. Nice தல! வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  8. முறுக்கு சுடும் காட்சியை கொண்டு வந்துட்டீங்க!
    தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நல்ல நினைவுகள் ஜாக்கி

    ReplyDelete
  10. Hi dear Jackie,

    Wish u and ur family a very happy diwali wishes

    Amarnath Santh

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner