(MULLUM MALARUM)முள்ளும் மலரும் ரஜினியின் நடிப்புக்கான மகுடம்.

எனது வலைப்பூவில் முதல் முறையாக ரஜினி படத்துக்கு நான் எழுதும் விமர்சனம் இந்த படம்தான்…

ரஜினி நடித்த திரைபடங்களில்  பார்த்தேதீரவேண்டியபடங்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அது ஒரு சில படங்களை மட்டுமேசுட்டிக்காட்டும்.ரஜினி நல்ல நடிகர்.. அவர் மீது வெறியனாக இருந்த போது இதே முள்ளும் மலரும் படத்தை நான் மதிக்கவில்லை… ஏன் சீன்ட கூட இல்லை.. ஒரு பைட்டு இல்லை. ஒரு டான்ஸ் இல்லை இதெல்லாம் ஒரு படமா என்று பள்ளி காலத்தில் தூற்றி இருக்கின்றேன்…இப்போது இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றேன்..
நடிகை ரேவதி அவரின் டெலிபோட்டோ நிறுவனத்தில் அப்போது சின்ன சின்ன ஆசை என்ற சீரியல் தயாரிப்பு பணி செய்து கொண்டு இருந்தார்.. அந்த சீரியலின் இயக்குனர். இயக்குனர் மகேந்திரன்… அப்போது கோபிநாத் என்ற கேமராமேனுக்கு அவசரமாக ஒரு அசிஸ்டென்ட் தேவைபடுவதால் அந்த சீரியலில் ஒர்க் செய்தேன்.. பந்தா இல்லாத மனிதர்… ஸ்பாட்டில் டயலாக் எழுதி சுவைபட காட்சிகளை எடுப்பவர்.. ஒரு காட்சியை நிறையமுறை எடுக்க போராடுபவர்… துளியும் பந்தா இல்லாதவர்.. ஒரு வார கேப்புக்கு பிறகு போன போது, தனசேகரன் எப்படி இருக்கிங்க? என்று  எனது பேரை நினைவில் வைத்து அழைத்து, என்னை அன்றைக்கு முழுவதும்  சந்தோஷத்தில் ஆழ்த்தியவர்.

அவர் இயக்கும் அழகை இன்று முழுதும் பார்த்துக்கொண்டு இருக்கலாம்…அவர் இயக்கிய இந்த படத்தை எழுதுவதில் நான் மகிழ்ச்சி கொள்கின்றேன்.


 எப்போது எனக்கு நடக்கும் நம்பிக்கை துரோகத்தின் போதும் சட்டென நான் உடைந்து விடாமலும், எனக்கு வாழ்வில் ஏதாவது தர்மசங்கடமான நிலையில் இருக்கம் போது கூட, இந்த படத்தில் ரஜினி பேசும் அந்த டயலாக்  எப்போதும் என் நினைவில் வந்து போகும்…


ரெண்டு கை  ரெண்டு கால் போனகூட இந்த  காளி பொழச்சிக்குவான்சார்… காளி ரொம்ப கெட்டபயசார் என்று நீட்டி ஸ்டைலாக பேசும் ரஜினியின் அந்த வசனத்தைதான் நான் அடிக்கடி மனதில் சொல்லிக்கொள்வேன்,


ரஜினி பேசும் அந்த வசீகரித்தை, அந்த ஸ்டைலை,கன்னட குழைவான அந்த நீட்டி முழங்கும் அந்த தமிழ் வாக்கியங்கள் ஒரு   போதைதான்.. ரஜினி ஒரு நிகழ்ந்த அற்புதம்.. அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் அமிதாப் போல் பன்திறமை வெளிபடுத்தும் கதைகேளோடு அவரை வெளிவட்டத்துக்கு நாம் அவரை அழைத்து செல்லவேஇல்லை..ரஜினியை ஒரு ஸ்டைல்மன்னன் ரேஞ்சில் அவரை உட்கார வைத்து விட்டோம்..

  அவர் செய்த முன் முயற்சிகள் நாம் வழி மொழியாமல் போக, அவரும் கிடைத்த இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டார்…ரஜினி பன்முக திறமையில் நிகழ மறுத்த அற்புதம். அதற்கு காரணம் ரஜினி அல்ல… நாம் மட்டுமே.

ரஜினியின் நடிப்பை வியந்து பார்க்கும் படங்களில் இந்த படத்தை நிச்சயம் சொல்ல வேண்டும்.. ரஜினியின் உடல் மொழியும்,இயக்குனர்  மகேந்திரனின் இயல்பும் தமிழ் சினிமாவில் இந்த படம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்க வேண்டியபடம்.

முள்ளும் மலரும் படத்தின் கதை என்ன?


காளி(ரஜினி) ஒரு விஞ்ச் ஆபரேட்டர். அந்த இடத்தில் புதிதாய் வேலைக்கு வரும் என்ஜினியர் குமரனு(சரத்பாபு)க்கும் இடையில் ஈகோ போர்  ஆரம்பிக்கின்றது. காளியின் தங்கை வள்ளி (ஷோபா)  மீது  அளவுகடந்த பாசம் வைக்கின்றான்.. இவர்கள் விட்டின் பக்கத்தில் இவர்களை போலவே அனாதைகளாக மங்கா(ஜெயலட்சுமி)வும் அவளது அம்மாவும் பஞ்சசம் பொழைக்க வருகின்றனர்… காளியிடம் மங்கா செய்த விளையாட்டு காரணமாக காளிக்கு ஆபரேட்டர் வேலையில் பத்துநாள் சஸ்பென்ட் ஆகின்றான்.. இதற்கு காரணம் புது என்ஜீனியர் ஈகோ என நினைத்து
அன்று இரவு நல்ல போதையில் இருக்கும் போது லாரிவிபத்தில் காளி ஒரு கையை இழக்கின்றான்… கை இல்லாத காளிக்கு ஆபரேட்டர் வேலையும் போய்விடுகின்றது. பக்கத்து வீட்டு மங்கா காளிக்கு துணையாக,  காளி தங்கை வள்ளி மீது என்ஜீனியர் காதல் கொள்ள.. வள்ளியை, தனது பரம எதிரியாக நினைக்கும் என்ஜீனியருக்கு காளி கட்டிகொடுக்க சம்மதித்தானா? இல்லையா என்பததான் இந்த படத்தின் கதை.

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...


ரஜினியின் நடிப்பை ரசித்து ருசிக்க இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும்.. காளி பாத்திரமாக வாழ்ந்து இருப்பதே அதற்கு சாட்சி.
இந்த படத்தின் கதை  எழுத்தாளர் உமாசந்திரன் எழுதி கல்கி பத்திரிக்கை சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதைதான் இந்த படம்.
இன்னும் எண்ணிலடங்கா சிறுகதைகள் நம் மண்ணில் உள்ளன.அவைகள் செல்லுலாய்டில் குறைந்த செலவில் பதியவைக்கலாம் என்பற்கு இந்த படம் தமிழ்படங்களில்  ஒரு ஆவனகாப்பகம்.

காளி நல்லவன்..

என்ஜினியர் குமரன் நல்லவர்.
அப்புறம் ஏன் சண்டை வருகின்றது… எல்லா இடத்திலும் சட்ட திட்டங்கள் செய்லபடுத்த முடியாது.மனிதாபிமானம் போய்விடும் என்பதாக ஒரு கேரக்டர்.. எப்போதும் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்று நினைக்கு ஒரு எதிர் கேரக்டர் இரண்டுக்கும் நடக்கும் ஈகோவை திரைக்கதையில் மிக அழகாக எந்த சொதப்பல் இல்லாமல் சொல்லி இருப்பார் மகேந்திரன்..

வள்ளி (ஷோபா) மங்கா (ஜெயலட்சுமி) இந்த ரெண்டு நடிகைகளும் இறந்து போயிட்டாங்க… இரண்டு பேரின் இழப்புமே தமிழ் சினிமாவுக்கு ஒரு மாபெரும் இழப்புன்னு சத்தியமா சொல்லலாம்.. அதை இந்த படத்தை பார்க்கும் போது உணருவீங்க….


காளி அண்ணன் கோபகாரன் ஆனால் அன்பானவன் அவன் வீட்டில் இரண்டு  பேரை தங்க வைக்க அண்ணனிடம் தங்கை ஷோபா பர்மிஷன் கேட்கும் அந்த காட்சி ரசிக்கவைக்கும்… இருவருக்குமான உறவை விளக்கும் காட்சி அது

சரி இந்த படம் ஒரு இயல்பான படம்தானா? என்ற கேள்விக்கு ரஜினி மதல் காட்சியில் தெருவில் சண்டை போட்டு சட்டை கிழிந்து தனது அடிப்பொடிகளுடடன் நடந்த வரும் அந்த காட்சி  ஒன்று போதும் ரஜினியின் இயல்பான நடிப்புக்கு. அதில் கொஞ்சம் கூட சினிமாதனம் இருக்காது.

கை போன காளி முதல் முறையாக தன் தங்கையை சந்திக்கும் போது இருவரின் நடிப்பும் அந்த பின்னனி இசை அபாரம். அதன்பிறகு சரத்பாபுவிடம் இரண்டு கை போனாலும் அந்த சீனை பார்த்து ரசியுங்கள்.சைலன்டாக வந்தாலும் சரத்பாபும் தனது அமைதியான நடிப்பின் மூலம் அந்த கேரக்டரை நம் மனதில் பதியைவைக்கின்றார்.


அண்ணன்ன தங்கை பாசத்தை மிக இயல்பாய்  சொன்னபடம். காளிக்கு கை போனதால் அவனின் கல்யாணத்தை பற்றி தங்கை பேசும் காட்சிகிளில் கட்டிலில் படுத்து இருக்கும் ரைஜினியின் உடல் மொழியும், அதன் பின் எழுந்து உட்கார்ந்து பேசும் அந்த வசனங்களும் ஒரு வீட்டின் உள்ளே அண்ணன் தங்கை எப்படி  உணர்வுபூர்வமாய் பேசுவார்கள்?? என்பதை செல்லுலாய்டில் எப்போது வேண்டுமானலும் பார்க்கலாம்.

அண்ணே கைதானே போச்சு… நான் உன்னை விட்டு போகலையே என்று பேசும் டயலாக் சினிமாதனமாக இருந்தாலும் அது ரொம்ப வெயிட்.

படாபட் ஜெயலட்சுமியின் நடிப்புக்கு ரஜினிக்கு முதலிரவு முடிந்து குளித்து விட்டு சாப்பாடு போடும் அந்த காட்சி… ஜெயவட்சுமி முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன் புது பொண்ணை கண்முன் நிறுத்தும்.


இந்தபடத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா.. பல காட்சிகளில் ஷோபாவுக்கு அற்புதமான குளோசப்புகள். முக்கியமாக  செந்தாழம்  பூவில்  சாங்கில் ஜீப்பில் உட்கார்ந்து இருக்கும் ஷேபாவுக்கு வைத்து இருக்கும் குளோசப்.

அடி  பெண்ணே பாடலில் ஷோபாவின் இயல்பான அழகை மேலும் அழகு படுத்திய படி வைத்து இருக்கும் ஷாட்டுகள். மிக மிக ரசிக்கதக்கவை.
ஒரு கள்ளகாதலை இயல்பு மாறாமல் காட்சிகளில்  துளியும் ஆபாசம் இல்லாமல் காட்டி இருப்பதும். மூர்த்தி மட்டும் நான்வெஜ்ஜாக சில இடங்களில் பேசி இருப்பார்.

அங்காயி கணவனாக எப்போது பார்த்தாலும் சிரித்துக்கொண்டு இருக்கும் அந்த கேரக்டரையும் அது எப்போதும் தன் மனைவியை திருப்தி படுத்த முடியாமல் கனவில் வாழ்ந்து எப்போதும் திடுக்கென சிரிப்பதும் அற்புதமான பாத்திரபடைப்பு.

இளையராஜா போடும் ஒரு குத்து ராமன் ஆண்டாலும் அந்த குத்து அந்த காலத்து குத்தோ குத்து சாங்.


கை இல்லாத அண்ணன் திருமணம் நடந்து விட்டது.. தன் திருமணம் நடக்க வெகுநாள் ஆகும் என்ற நினைப்பில் இருக்கும் ஏழை பெண்ணிடம்,படித்த சிகப்பான ஆபிசர் வேலையில் இருக்கும் ஒருவன் தன்னை கட்டிக்கொள்ள சம்தமா? என்று கேட்கும் போது  அந்த  பெண்ணிடம் எவ்வளவு மகிழ்ச்சி பொங்கும் அவள் மனது எப்படியெல்லாம் குதியாட்டும்  போடும்… அதை ரசிக்க வேண்டுமா? அடிபெண்ணே சாங்குக்கு முன் வாத்தியக்கருவிகளில் அந்த பெண்ணின் மனதை கும்மாள இசை கோர்வைகளில்  ராஜா சொல்லி இருப்பார் பாருங்கள்… அதுதான் ராஜா… டேய் உன்னை அடிச்சிக்க இனிமே ஒருத்தன் பொறந்துதான் வரனும். அந்த பாடலும் அந்த ஏழை பெண்ணின் மனதின் குதியாட்டமும் பாடல் ஆரம்பிக்கும் முன் இசையில் பார்த்து சிலாகியுங்கள்.கிளைமாக்சில் அண்ணன் தனியாக நிற்பதை பார்த்து விட்டு ஒடி வந்து அந்த அண்ணணை கட்டிக்கொள்ளும் போது உங்கள் விழியில் ஒரு ஓரமாக  கண்ணீர் வடியும் அதுக்கு ராஜாவின் பின்னனி இசையும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

ரஜினி வீட்டுக்கு வரும் போது தன் ஆடை களைதல் பற்றி கவலைபடாமல் சோம்பி எழுந்து மங்கா உடை சரி பண்ணும் அந்த ஒரு காட்சியில் ரஜினியின்  பார்வையும், மங்காவின் இயல்பும் அந்த கேரக்டரை  நம் மனதில் பதிய வைக்கின்றன.

நான் பிறந்து 3 வருடம்  கழித்து 1978ல் இந்த படம் ரிலீஸ் ஆனது . இந்த படம் ரொம்ப சக்சஸ்புல்லாகவும், நிறைய அவார்டுகளையும் அள்ளியது.

நித்தம் நித்தம் நெல்லு சோறு பாடல் ரொம்ப பேமஸ்.

தமிழ் சினிமாவில் பார்த்தே தீர வேண்டியபடம். இந்த படம்.

இந்த படத்தை பார்த்து விட்டு பாலசந்தர்  உன்னை அறிமுகபடுத்தியதில் நான் பெருமைகொள்கின்றேன் என்று ரஜினிக்கு கடிதம் எழுதி இருக்கின்றார்.


படக்குழுவினர் விபரம்..

Directed by     J. Mahendran
Produced by     Venu Chettiyar
Starring     Rajinikanth
Shobha
Sarath Babu
Fatafat Jayalakshmi
Music by     Ilaiyaraaja
Release date(s)     15 August 1978
Running time     135 min
Country     India
Language     Tamil

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.. 

37 comments:

 1. நானும் பார்த்து ரசித்திருக்கிறேன்,ஒளிப்பதிவு பாலு மகேந்திரானு இப்பதான் தெரியும்,அருமையான பதிவு.

  ReplyDelete
 2. ஆறில் இருந்து அறுபது வரையும், புவனா-ஒரு கேள்விக்குறியும் பார்த்து விட்டு சொல்லுங்க அண்ணாச்சி... ரஜினியின் படங்களில் இவையும் மைல்கற்கள் தான்...

  ReplyDelete
 3. பிரமாதம் தலைவரே...

  தலைவரின் எந்திரன் பார்த்துவிட்டு எழுதுங்கள்.

  டிக்கெட் எடுத்தாச்சா?

  இல்லாட்டி ஒரு பதிவு் போடுங்க பாஸ். டிக்கெட் தானா வரும்.

  அன்பு நித்யன்

  ReplyDelete
 4. இதே போல ஜானி திரைபடத்தில் ரஜினியின் நடிப்பு பிரமாதமாக இருக்கும், இவர் மட்டும் இது போல நடித்து கொண்டிருந்தாரனால் கமலுக்கு சரியான போட்டியாக இருந்திருப்பார். இந்த படத்தை பிண்ணனி இசை சேர்ப்புக்கு முன் பார்த்த தயாரிப்பாளர் என் பணத்தை வீணாக்கி விட்டீர்களே என இயக்குனரிடம் கடிந்து கொண்டதாக படித்த நினைவு. என் செல்போனின் ரிங் டோன் ராமன் ஆண்டாலும் பாடல் தான். நன்றி ஜாக்கி இந்த படத்தை நினைவுபடுத்தியதற்க்கு.

  ReplyDelete
 5. இந்த படத்தின் அருமை தெரியவேண்டும் என்றால், இதன் மலையாள ரீமேக்கை பார்க்க வேண்டும். நடிகர் மது நெற்றி மறைக்கும் விக்குடன், பௌடர் அப்பிய முகத்துடன், ரஜினி வேடத்தில் நடித்திருப்பார். அந்த படத்தோடு நம்மால் ஒட்டவே இயலாமல் போகும். மகேந்திரன் எனும் கலைஞன் திரைப்படங்கள் தொடர்ந்து எடுக்காமல் போனது தமிழ் திரையுலகிற்கு மிக பெரிய இழப்பு தான்.

  ReplyDelete
 6. நல்லா இருக்கு தல! நான் இன்னும் பாக்கல! பாடல்கள் மட்டும்தான் பாத்திருக்கேன். உங்க விமர்சனம் பாத்ததில ஒரே ஆர்வமா இருக்கு... தேங்க்ஸ்தல!

  ReplyDelete
 7. பின்னுட்டம் இட்டும் தொடர்ந்து ஓட்டு போடும் என் நண்பர்களுக்கு என் நன்றிகள்..

  வித்யாசமான கடவுள் நீங்கள் சொன்ன படங்களையும் நான் அறிவேன்.. அவைகள் பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுவேன்..

  புதுதகவல் சொன்ன தமிழ் உதயம் மற்றும் கிருபாவுக்கு என் நன்றிகள்..

  ReplyDelete
 8. நித்யா டிக்கெட் எடுத்த தெம்புல பேசறியா?? இருக்கட்டும்

  ReplyDelete
 9. அண்ணே இதுவும் உதிரிப்பூக்களும் தமிழ்சினிமாவின் பொக்கிஷங்கள்,தமிழில் வந்த உலகசினிமா என்றும் சொல்லலாம்.என்ன இயக்கம்?!!!ஷோபா,ரஜினி,சரத்பாபு,படாபட்,அருமையாக வாழ்ந்த படம்.இசைஞானியின் இசைவேறு கேட்கணுமா?

  ReplyDelete
 10. அண்ணே அருமையான விம்ர்சனபார்வை,நன்றாக உள்வாங்கி எழுதினீர்கள்

  ReplyDelete
 11. மகேந்திரன் கூட வேலைபார்த்த அனுபவபகிர்வும் கலக்கல்

  ReplyDelete
 12. அன்பு ஜாக்கி,

  இயக்குநர் மகேந்திரன் அவர்களை நான் திண்டுக்கல் ஆர்விஎஸ் காலேஜில் படித்தபோது, தமிழ்ப்பேரவை விழாவிற்கு அழைத்து வந்து பேச வைத்தேன். அவரை அதற்காக சென்னையில் பார்க்க வந்த போது அவருடைய எளிமை என் சினிமா சம்பிரதாய பகட்டை உடைத்தது.

  அவருடைய உரை அன்று என் சக மாணவர்களை பெரிதாக கவரவில்லை என்பது உண்மையெனினும் அந்த மாபெரும் கலைஞனை அழைத்து ஒரு பொறியியல் காலேஜில் கவுரவித்தது இன்னும் எனக்கு மகிழ்ச்சியை தரும் விஷயம்.

  நினைவுகள் பசுமையாய்...

  நன்றி ஜாக்கி.

  அன்பு நித்யன்

  ReplyDelete
 13. ஜாக்கி அண்ணா...

  பதிவு அருமை வழக்கம் போலவே..

  ரஜினியின் பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று.
  கிளைமாக்ஸ் காட்சியில் கண்டிப்பாக நம்மை கண் கலங்க வைத்துவிடுவார்கள்..
  படம் முழுதும் ஒரு இயல்பான கிராமத்தை நம் கண்முன்னே நிறுத்தியிருப்பார் இயக்குனர் மகேந்திரன்.

  நட்புடன்
  ஜெய்செல்வம் ராம்குமார்.

  ReplyDelete
 14. Why this post at this juncture when "Enthiran" is about to release in few days? This "Mullum Malarum" is known fact to everyone.

  ReplyDelete
 15. நானும் மிகவும் ரசிப்பேன்... அதுவும் இறுதி காட்சியில்... இப்ப நீங்க உங்க மூஞ்ச எங்கடா வச்சிக்க போறீங்க என்று பெருமிதத்துடன் கேட்பது மிகவும் பிடிக்கும்.

  ReplyDelete
 16. ம்ம் மிக அருமையான படம் நீங்கள் குறிப்பிட்ட காட்சி உண்மையிலேயே அருமை
  வேலை போய்விட்டதை அறிந்ததும் சில காண நேர மௌனத்தில் அவர் வெளிப்படுத்தும் இயலாமையும் அதன் பின் கவலையினால் பிசிறும் குரலுடன் தன் சுயத்தை விடாது அவர் பேசும் அந்த வசனமும் அருமை.
  இது மட்டுமல்ல தன்னைப் பற்றி தன் மேலதிகாரியிடம் கோள் சொன்னவனை அடித்து விட்டு அது பற்றி ஒரு விளக்கம் கொடுப்பார் பாருங்கள், அப்புறம் உச்சக் காட்சியில் தன் தங்கை தனியே இருக்கும் தன்னிடம் வந்ததும் கர்வம் பொங்கும் பார்வையுடன் ஒரு நடை நடப்பாரே அதன் பின் "எனக்கு இப்போ கூட உங்களைப் பிடிக்கல" என ஈகோவை விடமால் பேசுவது. அசத்தியிருப்பார்.
  ஏற்கனவே இதைப் பற்றி எழுதியிருந்தேன் முடிந்தால் பாருங்கள்

  http://sridharshan.blogspot.com/2009/12/10.html

  படு மொக்கையான மசாலா படங்களில் கூட ரஜினி நடிப்பு சோடை போவதில்லை என்று நான் நம்புகிறேன்.

  ReplyDelete
 17. //இந்த படத்தின் அருமை தெரியவேண்டும் என்றால், இதன் மலையாள ரீமேக்கை பார்க்க வேண்டும். நடிகர் மது நெற்றி மறைக்கும் விக்குடன், பௌடர் அப்பிய முகத்துடன், ரஜினி வேடத்தில் நடித்திருப்பார். அந்த படத்தோடு நம்மால் ஒட்டவே இயலாமல் போகும். மகேந்திரன் எனும் கலைஞன் திரைப்படங்கள் தொடர்ந்து எடுக்காமல் போனது தமிழ் திரையுலகிற்கு மிக பெரிய இழப்பு தான்//
  அதை விட தெலுங்கு ரீமேக் சூப்பர்! ஷோபா வேடத்தில் ரேவதி என்று நினைக்கிறேன். அவரை தவிர அனைவரும் கழுத்தறுப்பார்கள். 10 நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியாது. ஜாக்கி, நன்றாக எழுதியுள்ளீர்கள்

  ReplyDelete
 18. எல்லோரும் மகேந்திரன் திரைப்படங்களில் உதிரி பூக்களையும், நெஞ்ஞத்தை கிள்ளாதேயையும் முன்னிறுத்துவார்கள், ஆனால் எனக்கு முள்ளும் மலருமுக்கு பின்னர்தான் அந்த இரண்டு படமும், அதற்க்கு பிறகுதான் எந்த படமும். மகேந்திரன் சார் தமிழ் சினிமாவின் வரம்.

  ReplyDelete
 19. //ரெண்டு கை ரெண்டு கால் போனகூட இந்த காளி பொழச்சிக்குவான்சார்… காளி ரொம்ப கெட்டபயசார் //

  என்னை பொறுத்தவரை ரஜினி உச்சரித்த மிகச்சிறந்த வசனம் இதுதான்.

  //ரஜினி பன்முக திறமையில் நிகழ மறுத்த அற்புதம். அதற்கு காரணம் ரஜினி அல்ல… நாம் மட்டுமே.//

  100 % வழிமொழிகிறேன்

  ReplyDelete
 20. அருமையான படம்... அருமையான விமர்சனம் ...

  ReplyDelete
 21. முள்ளும் மலரும்- படத்தின் பெயர் பாருங்கள்.
  முள் & மலர் - ரஜினி & ஷோபா
  முள் கூட மலரும் - தஙகைக்காக கோபக்கார ரஜினி எப்படி மாறினார்?
  சகாதேவன்

  ReplyDelete
 22. //தமிழ் உதயம் said...
  இந்த படத்தின் அருமை தெரியவேண்டும் என்றால், இதன் மலையாள ரீமேக்கை பார்க்க வேண்டும். நடிகர் மது நெற்றி மறைக்கும் விக்குடன், பௌடர் அப்பிய முகத்துடன், ரஜினி வேடத்தில் நடித்திருப்பார். அந்த படத்தோடு நம்மால் ஒட்டவே இயலாமல் போகும்.//

  ஹிந்தியிலும் இந்தப்படம் ரீமேக் ஆகி இருக்கின்றது.. மிதுன் சக்ரோபர்த்தி ரஜினிகாந்த் வேடத்தில் நடித்திருப்பார்..
  இந்த ஹிந்தி வெர்ஷன் மலையாளம் அளவிற்கு கேவலமாக இருக்காது.. கொஞ்சம் நன்றாகவே இருக்கும்..

  ReplyDelete
 23. தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

  கார்த்தி நீ சொல்வது போல நிச்சயம் இந்த படம் உலகபடம்தான்.. சில ஷாட்டுல ஷோபா லிப்ஸ்டிக் போட்டு இருப்பது தெரியும். அதையும் சொல்லி இருப்பேன்..

  இவ்வளவு இயல்பான படத்துல மகேந்திரன் சார் அதை தவர்த்து இருக்கனும்.

  ReplyDelete
 24. Why this post at this juncture when "Enthiran" is about to release in few days? This "Mullum Malarum" is known fact to everyone.//

  அன்பின் ரவி.. என்னை பொறத்தவரை எந்திரன் ரிலிஸ் ஆனா எனக்கு என்ன? ரிலிஸ் ஆகாட்டா எனக்கு என்ன? என்னை பொறுத்தவரை உலகன் சிறந்த படங்கள் என் வலைபூவில் எழுத வேண்டும் என்பது என் ஆசை. இங்கு பின்னுடட்டம் இட்டவர்கள் எல்லோரும் முள்ளும் மலரும் பார்த்துவிட்டவர்கள் என்று சொல்கின்றீர்கள். 90ல பொறந்த பையனுக்கு இப்ப 20 வயசு அதுல இந்த படத்தை தவறவிட்டவங்க எத்னையோ பேர் இருப்பாங்க அவுங்களுக்கு எழுதனேன்.. அதே மாதிரி நீங்க என் தளத்துக்கு புதுசுன்னு நினைக்கின்றேன்.

  ReplyDelete
 25. ரெண்டு கை ரெண்டு கால் போனாலும் பொழச்சுக்குவான் சார் காளி...! கெட்ட பையன் சார் இந்த காளி :-)

  தலைவருக்கு சரியான ஒரு வசனம்.

  இதுவும் ஜானியும் என்றும் மறக்க முடியாத படங்கள் வரிசையில் ஒன்று.

  ReplyDelete
 26. //ஆனால் அமிதாப் போல் பன்திறமை வெளிபடுத்தும் கதைகேளோடு அவரை வெளிவட்டத்துக்கு நாம் அவரை அழைத்து செல்லவேஇல்லை..ரஜினியை ஒரு ஸ்டைல்மன்னன் ரேஞ்சில் அவரை உட்கார வைத்து விட்டோம்..//

  அண்ணே....தப்புண்ணே... அமிதாப்பை விட எந்த விதத்திலும் ரஜினி குறைந்தவர் அல்ல. 80's , 90's ல ரஜினிக்கு வந்த படங்களில் முக்கால் வாசி இங்கிருந்து ஹிந்தியிலும், ஹிந்தியிலிருந்து தமிழுக்கும் ரீமேக் செய்யப்பட்டவையே... அதை ஒப்பிட்டு பார்த்தாலே யார் சிறந்த நடிகர் எனபது தெரியும். ஏன் நீங்க ஒரு தடவ ஹிந்தி டான் (அமிதாப்) பாருங்கண்ணே.. அப்ப தெரியும் யார் நல்ல நடிகர்ன்னு... ரஜினி காமித்திருக்கும் முக பாவனைகளில் பத்தில் ஒரு பங்கை கூட அதில் பார்க்க முடியாது....

  சிறந்த நடிகர் அல்லாத எவராலும் cine field la இவ்வளவு நாள் இருக்க முடியாது.... உங்கள பொறுத்த அளவு கமல் மாதிரி hi-pitch la கத்தி அழுதாதான் நடிப்பா? கதைக்கு தேவையானதை சரியா பண்ணாலே அது சிறந்த நடிப்பே...


  ரஜினியை நாம் வெளிவட்டத்துக்கு கொண்டு வரவில்லையா? ஏன் கொண்டு வரவேண்டும்... அவருக்கென இருந்த இந்த தனித்திறமையே அவரை உலக அளவில் எடுத்துச்சென்றிருக்கிறது... பன் திறமையை வெளிப்படுத்துக்கொண்டிருக்கும் கமல் ரஜினி அளவுக்கு அனைவராலும் அறியப்படவில்லையே....

  1978 ல வந்த படத்துக்கு இப்போ விமர்சனம் தேவையாண்ணே.... இப்பதான் முள்ளும் மலரும் கு வந்துருக்கீங்க.. இன்னும் முரட்டு காளை, தில்லுமுள்ளு.... அப்பன்னா எந்திரனுக்கு 2032 ல தான் review எழுதுவீங்க போலருக்கு... நீங்க ரொம்ப late pick up ணே....

  ReplyDelete
 27. @Mr.Jackie.

  உங்க பிளாக் அருமை தல.
  //வாழ்க்கை பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கான இடம் இது//
  எனக்கு புரிஞ்சிருச்சுண்ணே.. ஹாட் ஹாட்டர்ல ஷீலா தான அது.. புரிஞ்சு போச்சுண்ணே...

  ReplyDelete
 28. //ரஜினி நடித்த திரைபடங்களில் பார்த்தேதீரவேண்டியபடங்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அது ஒரு சில படங்களை மட்டுமேசுட்டிக்காட்டும்.//
  அண்ணே நீங்க ரஜினி நடித்த நிறைய திரைப்படங்களை இன்னும் பார்க்கவில்லை என நினைக்கிறன்.
  புன்னகை மன்னன் மாதிரி நடித்தால் தான் அது பார்க்க வேண்டிய படம் என்று இல்லை,
  எங்கேயோ கேட்ட குரல் மாதிரி நடித்தால் அதுவும் பார்க்க வேண்டிய படம் தான்,
  சிவாஜி மாதிரி நடித்தால் அதுவும் பார்க்க வேண்டிய படம் தான்.
  வித்யாசம் என்னவென்றால் அது நடிப்பிற்காக இது entertainment காக..
  நாலு பேரை சந்தோஷ படுத்தினா அதுவும் பார்க்க வேண்டிய படம்தான் என்பது அடியேனின் கருத்து.
  என் கருத்தை ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன் .

  சரி சரி எதாச்சும் புது படத்துக்கு எழுதலாமே,
  அடுத்து பி யு சின்னப்பா வாழ்க்கை குறிப்பு, விமர்சனம் னு ஆரம்பிச்சிடாதீங்க.

  ReplyDelete
 29. "கிளைமாக்சில் அண்ணன் தனியாக நிற்பதை பார்த்து விட்டு ஒடி வந்து அந்த அண்ணணை கட்டிக்கொள்ளும் போது உங்கள் விழியில் ஒரு ஓரமாக கண்ணீர் வடியும் அதுக்கு ராஜாவின் பின்னனி இசையும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது".
  சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் இப்போதும் அழுதேன்.
  அப்புறம் எனக்கு தெரிந்த சில விஷயங்கள் இந்த படத்தை பற்றி .இந்த படம் preview (முழுமை அடைய சில காட்சிகள் பாக்கி உள்ள நிலையில்) பார்த்த பின் இந்த படத்தின் தயாரிப்பாளர் திரு.வேணு செட்டியார் (ஆனந்தி பிலிம்ஸ் ) மேற்கொண்டு பணம் போட தயாரில்லை என்று கைவிரித்து விட்டதாகவும் பின்னர் கமல்தான்(நண்பன்டா) ரஜினி மீது உள்ள நட்பின்பால் இப்படம் பூர்த்தியடைய முயற்சி எடுத்து உதவி செய்ததாகவும் மகேந்திரன் அவர்கள் ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூறினார்.மேலும் ரஜினியை கதாநாயகனாக போட்டதில் கூட தயாரிப்பாளருக்கு விருப்பம் இல்லையென்றும் மகேந்திரன் தான் ரஜினி இல்லையென்றால் இந்த படம் நான் இயக்க போவதில்லை என்று பிடிவாதமாக நின்று படத்தை உருவாக்கினார்.முதல் ஓரிரு நாட்கள் கூட்டமில்லாமல் (தயாரிப்பாளர் அதன் காரணமாக படத்துக்கு விளம்பரம் செய்ய கூட பணம் தர மறுத்து விட்டதாக மகேந்திரன் கூறினார்) பிறகே படம் சூடுபிடித்து ஓட துவங்கியதாகவும் அதன் பிறகு மனம் மாறி தயாரிப்பாளர் மகேந்திரன் அவர்களிடம் மனமிரங்கியதகவும் கூறினார்.இந்த திரைகாவியத்தின் பின் இவ்வளவு விஷயங்கள் உள்ளன.
  "நான் பிறந்து 3 வருடம் கழித்து 1978ல் இந்த படம் ரிலீஸ் ஆனது ".
  ஜாக்கி நான் பிறந்து 5 வருடங்களுக்குப்பின் வந்த படம் அப்போ நீங்க எனக்கு அண்ணன் தானே சரியா?

  ReplyDelete
 30. //நானும் பார்த்து ரசித்திருக்கிறேன்,ஒளிப்பதிவு பாலு மகேந்திரானு இப்பதான் தெரியும்,அருமையான பதிவு. //

  Repeat Arun.

  Good one anna...

  appadiye puvana oru kelvikkurikkum ezuthunga.

  ReplyDelete
 31. அருமையான விமர்சனம் ....எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று . மேலும் ரஜினி நடித்து எனக்கு பிடிச்ச சில காட்சிகளை இங்கே தொகுத்து இருக்கேன் ..உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொது பாருங்கள் .... நன்றி
  http://gautamwin.blogspot.com/2010/07/blog-post_24.html

  ReplyDelete
 32. தோழர் ஜாக்கி அவர்களுக்கு...

  நான் உங்களின் பதிவுகளை ரெகுலராக படிக்கிறேன்...

  70 / 80களில் வெளிவந்த எத்தனையோ மிக நல்ல படங்களில் ரஜினியின் நடிப்பு பட்டையை கிளப்பும் விதமாக இருந்திருக்கிறது...

  அதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்ற நடிப்பு தான் இந்த “முள்ளும் மலரும்”... ரஜினி, ஃபடாபட், ஷோபா, சரத்பாபு என்று அனைவரும் மிக எதார்த்தமாக நடித்திருப்பர்...

  ஆறிலிருந்து அறுபது வரை
  எங்கேயோ கேட்ட குரல்
  அவள் அப்படித்தான்
  புவனா ஒரு கேள்விக்குறி
  ஸ்ரீ ராகவேந்திரர்
  இளமை ஊஞ்சலாடுகிறது
  ஜானி

  போன்ற பல படங்களில் ரஜினி தன் பண்பட்ட நடிப்பை வழங்கி இருப்பார்....

  லேசான மசாலாவுடன் கூடிய :

  நெற்றிக்கண்
  நல்லவனுக்கு நல்லவன்
  படிக்காதவன்
  அண்ணாமலை

  படங்களில் கூட ரஜினி அவர்கள் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார்

  முள்ளும் மலரும் - மகேந்திரன் & ரஜினி தமிழுக்கு வழங்கிய ஒரு தரமான படம் என்ற கூற்றை வழிமொழிகிறேன்...

  ReplyDelete
 33. //அதுதான் ராஜா… டேய் உன்னை அடிச்சிக்க இனிமே ஒருத்தன் பொறந்துதான் வரனும்// அதுக்கெல்லாம் இன்னும் 1000 வருஷம் ஆகும் சாமியோவ்!

  ReplyDelete
 34. //நடிகர் ஜாக்கிசானின் தீவிர ரசிகன்நான் அதனால் ஜாக்கிசேகர் ஆனேன்..//

  இந்த விஷயம் ஜாக்கிச்சானுக்கு தெரியாம பாத்துக்குங்க...தெரிஜா கஷ்டப்படுவாரு....

  ReplyDelete
 35. ரெண்டு கை ரெண்டு கால் போனகூட இந்த காளி பொழச்சிக்குவான்சார்… காளி ரொம்ப கெட்டபயசார் என்று நீட்டி ஸ்டைலாக பேசும் ரஜினியின் அந்த வசனத்தைதான் நான் அடிக்கடி மனதில் சொல்லிக்கொள்வேன்,


  ரஜினி பேசும் அந்த வசீகரித்தை, அந்த ஸ்டைலை,கன்னட குழைவான அந்த நீட்டி முழங்கும் அந்த தமிழ் வாக்கியங்கள் ஒரு போதைதான்.. ரஜினி ஒரு நிகழ்ந்த அற்புதம்.. Super!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner