முதலில்
இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....
படம் 5 மணிநேரம் எடுத்து இருக்கார்... அதை
எப்படி இரண்டரை மணி நேரத்தில் கட் செய்து
கொடுப்பது என்று கமல் யோசித்துக்கொண்டு
இருப்பதாக இந்த படத்தை பற்றிய முதல் தகவல் மீடியாக்களில் நுழைந்தது...
அனுராக்கஷ்யாப்பின்
கேங்ஸ் ஆப் வாசீப்பூர் திரைப்படம் சமீபத்தில் இரண்டு பாகமாக வந்தது... அது போல இந்த திரைப்படமும் இரண்டு பாகமாக வரும்
என்று நினைத்தேன்..... படத்தை
பார்த்தேன்... என் கனிப்பு பொய்க்கவில்லை. சரி உண்மையிலேயே திரைப்படங்கள் மூலம்
இந்து முஸ்லீம் துவேஷம் வளருகின்றதா? 100 பர்சென்ட்டில் 5 பர்சென்ட்
வரலாம் அதுவும் படம் பார்த்து
வெளியே வந்த உடன் மறந்து விடுகின்றார்கள் எனபதும் மறுக்க முடியாத உண்மை...ஆனால் இந்து முஸ்லீம் துவேஷம் ஏப்போது ஆரம்பித்தது
தெரியுமா?
1992
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நாடு கொந்தளிப்பில் ஆழ்ந்தது... அது பெரிய கொடுமை...ஆனாலும்
தமிழகம் அமைதி காத்தது...பெருமபாண்மையான இந்துக்கள் இந்த செயலை வண்மையாக
கண்டித்தார்கள்... அதிகம் இந்து மக்கள்
வாழும் இந்தியாவில் பிஜேபி ஒரு முறைதான்
ஆட்சியை பிடித்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்...அந்த செயலை யாரும்
நியாயப்படுத்தவில்லை....ஆனால் குஜராத்தில் நேரடியாகவே குற்றம் சாட்டப்பட்ட மோடி
இன்னும் முதல்வராகத்தான் வீற்று இருக்கின்றார்... இது நகைமுரண்தான் என்பதில்
மாற்றுக்கருத்து இல்லை.
புற்றிசல்
போல இப்போது போல சேட்டிலைட் சேனல்களின் ஆதிக்கம் அப்போது இல்லை. ஆனால்
மேல்ல சேட்டிலைட் சேனல்கள் கால் ஊன்றும் போது...1998 ஆம் ஆண்டு தமிழகத்தில் கோவை
குண்டுவெடிப்பு நிழ்ந்தது... அத்வானியை கொல்ல நடந்த சதி... அதில் ஒரு பாவமும்
அறியாத அப்பாவிகள் இருந்து போனார்கள்... ஆனாலும்
மக்கள் அமைதிகாத்தார்கள்... முஸ்லிம்கள் மீதான முதல் வெறுப்பு அப்போதுதான்
உருவானது. வெளிப்படையாக டீக்கடைக்களில் விவாதிக்கப்பட்டார்கள்... கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத அப்பாவி
முஸ்லிம்களை பலரை வெறுப்பாக பார்க்க ஆரம்பித்தார்கள்.... ஏதோ ஒரு இயக்கம் செய்த செயலுக்கு அத்தனை பேரையும் சந்தேகத்தோடு
பார்க்க ஆரம்பித்தார்கள்... மார்க்கெட் போக பயந்தார்கள்.. காரணம் ஒரு இடத்தில்
மட்டும் குண்டு வெடிக்கவில்லை... அதனால் இன்செக்யூரிட்டி காரணமாக முஸ்லிம்
சகோதரர்மார்களுக்கு வீடு கொடுக்க, கடை வாடகை விட
யோசித்தார்கள்... அதான் நிதர்சன
உண்மை...
சரியாக
மூன்று நாட்கள் பாம்பாயில் தொடர்ந்து குண்டு வெடிப்பை தீபாவளி போல மும்பை தாஜ் ஓட்டல் குண்டு வெடிப்பை நிகழ்த்தினார்கள்.. அப்பாவிகள் 200 பேருக்கு
மேல் கொல்லப்பட்டார்கள்... அந்த தாக்குதலை
தொடர்ந்து நேரலையில் பார்க்கும்
பொதுஜனத்தின் மனதில் கோபம் வரவே வராதா?
ஒரு
இந்து கேரக்டர், ஒரு கிருஸ்த்துவ கேரக்டர்,ஒருமுஸ்லீம் கேரக்டர் கொலை செய்வது
போல சினிமாவில் காட்டப்படுவதற்கும் நேரில் துப்பாக்கியால் சுட்டு கொல்வதை
பார்ப்பதற்க்கும் வித்யாசம் தெரியாமல் இங்கு யாரும் இல்லை...
நுறாவது
நாள் படம் பார்த்து விட்டு ஒரே ஒரு ஜெயபிரகாஷ்தான் கொலை செய்தான் என்று ஒரு
வார்த்தை சொன்னான்... ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் படம் பார்த்த அத்தனை பேரும்
கொலை செய்யப்புறப்படவில்லை... அதுவும் படம்
பார்த்து விட்டுதான் கொலை செய்தான்
என்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள
முடியாது...ஏற்க்கனவே ஒளிந்த வன்மம் அவனை கொடுரனாமாற்றி இருக்கின்றது....
1998
ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது....போக்குவரத்து காவலர் செல்வராஜ் கொலையாக கலவரம் வெடித்தது....ஒரு சிலர் பாபர் மசூதிக்கு அந்த குண்டு வெடிப்பு எதிர்வினை என்று ஒரு சில முஸ்லிம் இயக்கங்கள் கூறின.... இதற்கு முக்கிய வரலாற்று நிகழ்விளை எடுத்துக்காட்டாக கொடுக்கின்றேன்..
தமிழகத்தில்
ஒரு காலத்தில் ஓடி ஓடி விடுதலைபுலிகளுக்கு
உண்டி குலுக்கி இருக்கின்றோம்..
எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் தமிகத்தில் தமிழர்களோடு விடுதலைபுலிகள்
இரண்டற கலந்து இருந்தார்கள்.. அவர்களுக்கு உறைவிடம்,உடை, பணம் என்று கொடுத்து
உதவினார்கள்... நிறைய போராட்டங்களை நடத்தினார்கள்.. ஈழத்தமிழர்களுக்கு உயிர் கொடுக்கவும் பொது ஜனம்
தயாராக இருந்தது....
அமைதி
பூங்காவாக திகழ்ந்த தமிழ்நாட்டில் ராஜிவ்காந்தி உடல் சிதறி இறந்து
போனார்...ஈழத்தில் ராஜிவ் நடத்திய
செயலுக்கு எதிர்வினை என்று
விடுதலைபுலிகள் சொன்னாலும் தமிழக பொதுமக்கள் அதனை
ஏற்றுக்கொள்ளவில்லை....விடுதலைபுலிகளை வெறுக்க ஆரம்பித்தார்கள்... அதனால்தான் மத்திய அரசு புல் சப்போர்ட் இலங்கைக்கு செய்த போதும், முள்ளிவாய்காலில்
இரண்டு லட்ச தமிழர்கள் இறக்க போகின்றார்கள் என்று தெரிந்தும், எதை பற்றியும்
அலட்டிக்கொள்ளாமல் தமிழக மக்கள் டிவி சீரியல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்
என்பது வரலாற்று உண்மை...
தமிழர்கள்
அமைதியான வாழ்க்கையை கடந்த 500 வருடங்களாக வாழ்ந்து வருகின்றார்கள்... அவர்களுக்கு
குண்டு வெடிப்பு எல்லாம் புதிய விஷயம்... அதை
நேரில், ஊடகத்தில் தொடர்ந்து அந்த செய்திகளை படிக்கும் போது அவர்கள் மனதில் குண்டு வைத்த விடுதலைபுலியாக
இருந்தாலும், காவிபயங்கரமாக இருந்தாலும் ,முஸ்லிமாக இருந்தாலும், தமிழர்களால் வெறுக்கப்படுகின்றார்கள்
என்பதுதான் நிதர்சன உண்மை.
சினிமாவில்
காட்டப்படுவதால் பொதுமக்கள் மத எதிர்ப்பு
என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.. ஆனால் ஊடகங்களில் தினம் வரும் செய்தியால் மக்கள்
அதிருப்திக்கு ஆளாகின்றார்கள் என்பது மறுக்கமுடியா உண்மை.
நியாயப்படி
பார்த்தால்,
பிராமணர்கள்தான்... காலம் காலமாக திரைப்படங்களில் தங்களை
இழிவுபடுத்துகின்றார்கள் என்று போராட வேண்டும்.... :-)
சினிமாவுக்கு நிதர்சனத்துக்கும் அவர்களுக்கு வித்யாசம்
தெரிகின்றது.... போராட வில்லை என்ற காரணத்தால் அவர்கள் கோழைகளும் அல்ல.... போரின் உச்சகட்டம்
அகிம்சை என்பது போல அவர்கள் அகிம்சை வழியை நாடுகின்றார்கள்..... அல்லது
புறக்கணிக்கின்றார்கள் அல்லது கடந்து போகின்றார்கள்... என் அனுமதி இல்லாமல்
என்னையாராலும் காயப்படுத்த முடியாது என்று
மகாத்மா சொல்லி இருக்கின்றார்,..
சரி
இந்த படத்துக்கு எதிராக எழுந்த
சர்ச்சைக்கு ஒரு காமன் மேனாக தமிழகத்தில் இருக்கும் பொது ஜனம் எவ்வாறு யோசிக்கின்றார்கள் என்பதைதான் சொல்லி இருக்கின்றேன்.. அவ்வளவுதான்...
===================
விஸ்வரூபம்
படத்தின் ஒன்லைன்..
இந்திய
உளவாளியின் கதை....
======================
விஸ்வரூபம்
படத்தின் கதை என்ன?
இந்திய
உளவாளியான முஸ்லீம் கமல் தாலிபான்கள் படையில் சேர்ந்து எப்படி அமெரிக்கா மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துகின்றார்
என்பது கதை.
==================
படத்தின்
சுவாரஸ்யங்கள்....
நடன
கலைஞனாக கமல் முதல் காட்சியில் தோன்றும்
போது அந்த நளினத்தில் எல்லோருமே மூக்கில் விரல் வைக்கின்றார்கள் .. அப்படி ஒரு
நடிப்பு.. சான்சே இல்லை..
ஆன்ட்டிரியா
கூட ஆடுற அத்தனை பிகரும் அற்புதமா
இருக்கே..? கமல்ஜி நீ பிறவி ரசனைக்காரண்டா...
குறட்டை
விட்டுகிட்டு கொட்ட கொட்ட
முழுச்சிக்கிட்டு மனைவியை கமல் வேவு
பார்க்கும் காட்சி அருமை.
நிறைய
ஆங்கில படங்கள் பார்க்கும் நபர்களுக்கு இந்த படத்தின் காட்சிகள் பெரிதாய் ஈர்க்காது என்றாலும், தமிழ்
படத்தி கமலை தவிர இது போன்ற களத்தையும்
தளத்தையும் தொடுவது குறைவு....
கேமரா
ஒர்க் பின்னி இருக்கின்றார்கள்... ஆப்கான்
காட்சிகள் அசத்தல்... நான் லீனியரில் கதை சொல்வதால் இந்த பக்கம்
அமெரிக்காவில் கதை நடக்க பிளாஷ் பேக்
காட்சிகளில் ஆப்கான் காட்சிகள்
வருகின்றன....
இன்னும்
பலர் படம் பார்க்காத காரணத்தால் காட்சிகளை சொல்லி சஸ்பென்ஸ் கெடுக்கவில்லை..ஒரு
வரியில் செல்வதென்றால் தமிழ்சினிமாவுக்கு இந்த உழைப்பும் காட்சிகளும் தளமும்
புதுசு... தொய்வும் பரபரப்புமாய் இருவேறு உணர்வுகளை இந்த திரைப்படம் தருகின்றது..
அடுத்த பாகம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்..
சத்யவேடு
திரை அரங்கில் ரசிகர்கள் கூச்சலுடன் பார்த்த காரணத்தால் பல வசனங்கள்
புரியவில்லை... ஆரோ திரிடியில் சத்தியத்தில்
பார்க்கவேண்டும்..
=============
படத்தின்
டிரைலர்..
=======================
படக்குழுவினர்
விபரம்.
Directed by Kamal Haasan
Produced by
Chandra Haasan
Kamal Haasan
Written by Kamal Haasan
Atul Tiwari
Starring Kamal Haasan
Pooja Kumar
Andrea Jeremiah
Rahul Bose
Jaideep Ahlawat
Music by Shankar-Ehsaan-Loy
Cinematography Sanu Varghese
Editing by Mahesh Narayanan
Studio Raaj Kamal Films International
Distributed by PVP Films
Balaji Motion Pictures
Release date(s)
25 January 2013 (Worldwide except Tamil Nadu[1])
1 February 2013 (Hindi version)
7 February 2013 (Tamil Nadu[2])
Running time 147 minutes [3]
Country India
Language Tamil
Hindi
Budget 95 crore (US$17.29 million)
=================
பைனல்கிக்...
இந்த படம் பார்க்கவேண்டிய திரைப்படம்.....நேரமின்மை காரணமாக அதிகம் எழுத முடியவில்லை.. பட் இந்த வருடத்தின் முதல் திரைவிமர்சனம் நம் தளத்தில் இந்த திரைப்படம்தான்.
=============================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Excellent review Jackie.. I agree with your view 100% in approaching our fellow muslim friends. As like Coimbatore bomb blast, now this incident may create a space between community. Otherwise, it is not like that. Watched entire movie without any cut. As mentioned by cable sankar, some people still argue, Talibans are fighting for good. It is no use to explain to them. Need to watch Part 2. I believe Kamal would concentrate more on other language than Tamil. He already faced enough. Lets see.
ReplyDeleteஇந்திய முஸ்லிமாக வரும் கமலுடன் தங்களை அடையாளபடுத்திக் கொள்ளாமல் , தாலிபான் முஸ்லிம்களாக வருபவர்களுடன் தங்களை அடையாளபடுத்திக் கொண்டதாள் வந்த வினையே இந்த பிரச்சினை.
ReplyDelete"அடையாளம் இழப்பதே ஆன்மீகம்"
Looking forward to view this movie. booked ticket for monday night in Auro 3d Mayajaal Screen.
ReplyDeleteஆன்ட்டிரியா கூட ஆடுற அத்தனை பிகரும் அற்புதமா இருக்கே..? கமல்ஜி நீ பிறவி ரசனைக்காரண்டா..
Super
அழகிகள் என்று வெள்ளைத்தோல் பெண்களை காண்மிப்பதும்,
ReplyDeleteதிருநங்கைகளை கேலி கிண்டல் செய்வதும்,
பிராமணப் பெண்களை விபச்சாரிகளாகவும், ஐட்டங்களாகவும் காமிப்பதும் என தமிழ் திரையுலகம் நிறையவே செய்து கொண்டிருக்கிறது. அவ்வாறு செய்கின்ற தவறுகளில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக மட்டுமே காட்டுவது ஒன்று.இதுவரை சகிப்பு தன்மையோடு இருந்தவர்கள் மனம் வெறுத்து போயிருப்பதால் திரையுலகம் சற்றே தன் பாதையை மாற்றிக் கொள்ள வேண்டும்,.
யதார்த்தங்களை மக்கள் உணர்வார்கள் என்ற உங்களின் தீர்ப்பு உண்மையே. இல்லையென்றால் நீங்கள் கூறுவது போல பிராமணர்கள்தான் போர் கொடி தூக்கியிருக்க வேண்டும். தயிர் சாதமும், ஆவக்காய் ஊருகாயும், மடிசார் மாமிகளும் எத்தனை திரைப்படங்கள் எள்ளிநகையாடப் பட்டிருக்கிறார்கள். ஆனால் சகிப்புதன்மையை மறந்து போராட்டத்தில் குதித்தால் இன்று ஆப்கானை தமிழ் திரையுலகம் விஷ்வரூபத்தினால் காட்டியது போல யதார்த்தங்களை பதிவு செய்யவே பெரிய பிரட்சனையாகிவிடும்.
நானும் சத்தியவேடுவில்தான் விஷ்வரூபம் பார்த்தேன். ரசிகர்களின் அன்பு தொல்லையால் சப்டைட்டிலில் வரும் தமிழ் வாசகங்களை படிக்க இயலவி்ல்லை. கமல் மனைவியை வேவு பார்க்கும் சீனும் மிஸ்சிங். இன்னொரு முறை திரையங்கிற்கு செல்ல வைத்துவிட்டார்கள் கமல் ரசிகர்கள். :-)
நல்லதொரு ரெவியூ சேகர்.
ReplyDeleteகமல் எடுத்த முயற்சி சிந்திய வியர்வை,செலவழித்த பணம்.
இதெல்லாம் இல்லாமல் யாருமே படம் எடுக்க முடியாது. இவர் பத்து அடிகள் மேலே போய்த்
தீவிரம் காட்டி எடுக்கிறார். எனக்குக் கிடைத்த விமரிசங்கள் நல்லதாகவே இருக்கின்றன.
நன்மை பெருகட்டும். நன்றி மா.
அதனால்தான் மத்திய அரசு புல் சப்போர்ட் இலங்கைக்கு செய்த போதும், முள்ளிவாய்காலில் இரண்டு லட்ச தமிழர்கள் இறக்க போகின்றார்கள் என்று தெரிந்தும், எதை பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் தமிழக மக்கள் டிவி சீரியல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை...
ReplyDeletethis is the truth and nobody wants to accept this publicly. hats of to your writing.
அதனால்தான் மத்திய அரசு புல் சப்போர்ட் இலங்கைக்கு செய்த போதும், முள்ளிவாய்காலில் இரண்டு லட்ச தமிழர்கள் இறக்க போகின்றார்கள் என்று தெரிந்தும், எதை பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் தமிழக மக்கள் டிவி சீரியல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை...
ReplyDeletethis is the real truth and no body wants to accept this in public. this is the mentality of tamil public and hats of to your write up mirroring the public mentality.
Good Review. I will see this movie on Sunday.
ReplyDelete
ReplyDelete///ஆன்ட்டிரியா கூட ஆடுற அத்தனை பிகரும் அற்புதமா இருக்கே..? கமல்ஜி நீ பிறவி ரசனைக்காரண்டா...///
அதே....அதே...இதேதான் என் வலைபதிவில் குறிப்பிட்டிருக்கேன்...சூப்பர்...
//////கமல் பெண்ணைப்போன்ற பாவத்துடன் ஆடிப்பாடும் அந்த பாடல் காட்சியில் ஆண்ட்ரியாவும் சரி மற்ற பெண்களும் சரி...’லட்டு’போல இருக்கிறார்கள். Fresh faces! மலர்ந்த-சிரித்த முகங்கள்...நளினமான நடன அசைவுகள். மிக நேர்த்தியான படமாக்கல். ஏதோ வெண்புறாக்கள் சிறுகூட்டமாக வீட்டு மொசைக் தரையில் தாழ்வாக பறந்து பறந்து போவது போல் வீடு முழுக்க வளையவளைய வருகிறார்கள் அந்தப் பாடலில். காமிராவும் பின்னாடியே... Visual Treat!/////
romaba nermaya, unmaya entha polishm illama yatharthama ezhuthurenganna... ithuthan ungakitta irukkira special...
ReplyDeleteneenga solrathu 100% correct.. Good review anna
Kavi Saran
Hi Jackie,
ReplyDeleteI saw Vishwaroopam, Tamil version in a Bangalore theater on 05-Feb. Half of theater was filled and I even noticed
Kannada speaking people.
Today night, I am going for second show of Vishwaroopam
with my relative.
When I saw this movie for the first time, I was mesmerized. Brilliant movie - audio, video effects, non-linear story narration, dialogues - Hats off to Kamal.
Every single frame, his hard work is very clean, professional and perfect. I dont think in India, Indian directors will even think in this direction.
Even if that happens, they will never be able to match this kind of perfection. Simply superb.
In my viewpoint, except Kamal, it's not possible for any person to create such a movie.
After Super Star's Badshah (all will remember the famous Anand Raj scene before interval, when Rajini shows off this real face for the fist time - Ulle Po),
I saw such a perfect transformation in this movie.
Too many junk movies have come in this transformation side - Vijay, Ajith, Captain - all tried, but it really did not have any effect on Me.
In Vishwaroopam, that effect came to Me, when I saw that.. If you remember, that fight will be shown twice purposefully.. To remind the audience about the transformation.. Classic.
Regarding the religious issues, I found it very funny.
In almost every Indian language, similar scenes have been seen. Pakistani terrorists have been kicked by Captain 100 times and they also talk Tamil. Entire state did not bother to ask, how these terrorists know Tamil ?.
Kamal, being a perfectionist would have imagined this situation and so he placed a logical scene there, which our guys cannot tolerate.
It's a feast to watch Kamal in this movie.
And your ticket money is 100% justified. Undoubtedly.
Sudharsan
சார், நீங்கள் கோவை, மும்பை தொடர்குண்டுவெடிப்புகளை பற்றி பேசி இருக்கீங்க, முஸ்லிம் வெறுப்பு முக்கியமா கோவை குண்டு வெடிப்பிற்கு பின்பே தமிழகத்தில் அதிகமாக ஏற்பட்டது உண்மைதான். (ஆனால் சென்னையில் அதற்கு பலவருடங்களுக்கு முன்பே முஸ்லிம்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் சிரமம் இருந்தது என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்).
ReplyDeleteஇரண்டு நகரங்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு சிலமாதங்களுக்கு முன் இந்து அமைப்புகளால் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு இன்வெறித்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. கோவையில் 1997, நவம்பர்-டிசம்பரில் காவலர் செல்வராஜ் கொலைக்குப் பின் கோவை முழுதும் முஸ்லிம்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் குறிவைத்து தாக்கப்பட்டன. அதற்கு எதிர்வினையாகத்தான் குண்டுவெடிப்பு சம்பவமும் நிகழ்ந்தது. இதை கோவையில் அந்த நேரத்தில் வசித்த ஒரு சிறுவன் கூட கூறிவிடமுடியும். மும்பையிலும் அதுபோல பாபர்மசூதி இடிப்பிற்குப் பின் தொடர்ந்து 4 மாதங்களாக நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே குண்டுவெடித்தது. இந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களுமே எதிர்வினைகள்தான் என்பதை அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் இருந்த எவருமே கூறிவிட முடியும்.
அந்த காலகட்டத்தில் கோவையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை பத்திரிக்கைச் செய்திகள் பூசி மெழுகியே வெளியிட்டன. இந்து அமைப்புகள் ஈடுபட்டதோ, முஸ்லிமள் குறிவைத்து தாக்கப்பட்டதோ மறைத்தே செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் கோவை குண்டுவெடிப்பை பத்திரிக்கைகள் முஸ்லிம் தீவிரவாதிகள், தற்கொலை படை, பாகிஸ்தான் சதி என்று திரும்ப திரும்ப கூவின.
முஸ்லிம் வெறுப்பு என்பது இப்படிப்பட்ட ஒருதலைப்பட்சமான மீடியாக்களால் பலவருடமாக கட்டியெழுப்பட்டிருக்கிறது. இன்று ஒரு சாதாரண திரைப்படத் தடைக்கு அது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.
திரைப்படவிமர்சனத்தில் இப்படி கருத்திட்டமைக்கு வருந்துகிறேன். இருப்பினும் உண்மைகளை வெளிக்கொணர விரும்பினேன். நன்றி!
IN FUTURE ALL FILMS WERE RELEASED WITH A CERTIFICATE IN ADDITION TO CENSOR.THAT IS " THIS FILM IS FULLY HALAL"
ReplyDelete//அதனால்தான் மத்திய அரசு புல் சப்போர்ட் இலங்கைக்கு செய்த போதும், முள்ளிவாய்காலில் இரண்டு லட்ச தமிழர்கள் இறக்க போகின்றார்கள் என்று தெரிந்தும், எதை பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் தமிழக மக்கள் டிவி சீரியல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை...//
ReplyDeleteமுற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாததுஇல்லையெண்டால் மட்டும் நீங்கள் கிழிச்சு இருப்பீங்கள்! உங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை ஒத்துக்கொள்வதை விடுத்து இது தேவையில்லாத வீண் விளக்கம்
ஒரு இஸ்லாமியனாக இல்லாமல் நானும் ஒரு தனி மனிதனாக சில எண்ணங்களை பதிகிறேன். சாதாரண சினிமாவுக்கு இவ்வளவு எதிர்ப்பு தேவையில்லைதான். ஆனால் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே இன்று அனைத்து தமிழக முஸ்லிம்களும் தலிபான்களுடன் ஒப்பிடப்படுகின்றனர். கோவை குண்டு வெடிப்பிற்கு கண்டுகொள்ளாத இதே மக்கள்தான் ஒரு படம் தடை செய்யபட்டதற்கு மிகப்பெரிய அளவில் ஒன்று திரளுகின்றனர். இதுவே தமிழ் நாட்டில் சினிமாவின் தாக்கத்தை தெளிவாக காட்டுகின்றது.
ReplyDeleteஇங்கு யாரும் தலிபான்களை எதிர்த்து படமெடுத்ததை குற்றம் சொல்லவில்லை. ஆனால் அவர்களுடன் தமிழர்களை சம்பத்தப்படுத்துவதைதான் எதிர்க்கின்றனர். இதில் அரசியலின் விளையாட்டே மூலகாரணம் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. மேலும் இஸ்லாமிய அமைப்புகள் இதுபோன்ற தேவையில்லாத போராட்டத்தை விடுத்து தங்களின் செயல்களின் மூலம் இஸ்லாத்தின் பெருமையை உலகிற்க்கு காட்டவேண்டுமென்றும் விரும்புகிறேன். - Mohamed Rafi.
ஒரு இஸ்லாமியனாக இல்லாமல் நானும் ஒரு தனி மனிதனாக சில எண்ணங்களை பதிகிறேன். சாதாரண சினிமாவுக்கு இவ்வளவு எதிர்ப்பு தேவையில்லைதான். ஆனால் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே இன்று அனைத்து தமிழக முஸ்லிம்களும் தலிபான்களுடன் ஒப்பிடப்படுகின்றனர். கோவை குண்டு வெடிப்பிற்கு கண்டுகொள்ளாத இதே மக்கள்தான் ஒரு படம் தடை செய்யபட்டதற்கு மிகப்பெரிய அளவில் ஒன்று திரளுகின்றனர். இதுவே தமிழ் நாட்டில் சினிமாவின் தாக்கத்தை தெளிவாக காட்டுகின்றது.
ReplyDeleteஇங்கு யாரும் தலிபான்களை எதிர்த்து படமெடுத்ததை குற்றம் சொல்லவில்லை. ஆனால் அவர்களுடன் தமிழர்களை சம்பத்தப்படுத்துவதைதான் எதிர்க்கின்றனர். இதில் அரசியலின் விளையாட்டே மூலகாரணம் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. மேலும் இஸ்லாமிய அமைப்புகள் இதுபோன்ற தேவையில்லாத போராட்டத்தை விடுத்து தங்களின் செயல்களின் மூலம் இஸ்லாத்தின் பெருமையை உலகிற்க்கு காட்டவேண்டுமென்றும் விரும்புகிறேன்.
கமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு இந்த படத்தின் கதைகருவின் உச்சம். இதற்காக இசுலாமியர்களின் உணர்வுகளை சோதனை செய்து பார்த்து இருக்கின்றார் என்பதுதான் உண்மை
ReplyDeleteஅமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.
ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன்
‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை
தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம்
அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள்
//அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழ்நாட்டில் ராஜிவ்காந்தி உடல் சிதறி இறந்து போனார்...ஈழத்தில் ராஜிவ் நடத்திய செயலுக்கு எதிர்வினை என்று விடுதலைபுலிகள் சொன்னாலும் தமிழக பொதுமக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை....விடுதலைபுலிகளை வெறுக்க ஆரம்பித்தார்கள்... //
ReplyDeletehahaha... அமைதிப்பூங்காவாக இருந்த எங்க யாழ்ப்பாணத்தை உங்கட ராணுவம் நாசமாக்கலை.எங்களை ஓட ஓட விரட்டலை. எங்களுக்கும் இந்தியா மீது தமிழ்நாட்டின் மீது வெறுப்புத்தான். நாங்கள் தான் உங்கள் மீது வெறுப்புக்கொள்ள வேண்டுமே தவிர தமிழ்நாட்டு மக்கள் அல்ல...
(நியாயப்படி பார்த்தால், பிராமணர்கள்தான்... காலம் காலமாக திரைப்படங்களில் தங்களை இழிவுபடுத்துகின்றார்கள் என்று போராட வேண்டும்.... :-)
ReplyDeleteமுற்றிலும் உண்மை . விஸ்வரூபம் படத்தில் கூட தேவையில்லாமல் பிராமணர்களை சீண்டியிருக்கிறார் கமல் . அவர் பிறப்பால் பிராமணர் என்பதால் அவர்களை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற அலட்சிய போக்கு அவரிடம் நிறையவே இருக்கிறது . சூரியனை பார்த்து நாய் குறைப்பது போல தான் இதை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் . படம் பற்றிய விமர்சனத்தையும் உங்களிடம் அதிகம் எதிர்பார்த்தேன் ...
http://www.dailytimes.com.pk/default.asp?page=2012\12\17\story_17-12-2012_pg9_10
ReplyDeleteThis fucking shit about LTTE issue , wht u have done for death of 250 TN fishermen , TN people have became cinema addict, they r like cattles ruling by foolish koruna and jeyalalitha , at that time there was some gentleman like mgr
ReplyDelete