இதற்கு முன் நாம் ஒரே அறையில் மட்டுமே நடக்கும் ஒரு முழுநீள திரைப்படத்தை பார்த்து இருக்கின்றோம். அந்த படம் எக்சாம். மூன்றே பேர் மட்டும் படம் முழுவதும் நடித்த படத்தையும் இதே தளத்தில் அறிமுகபடுத்தி இருந்தேன். அந்த படம் டிஸ்ப்பியரன்ஸ் ஆப் ஆலிஸ் என்ற அந்த படத்தையும் பார்த்து ரசித்து இருப்பீர்கள். இப்போது இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஓட்டலின் சின்ன ஹாலில் முழுபடமும் எடுத்து முடித்து இருப்பார்கள். அது போலான திரைக்கதை.
The killing jar படத்தின் கதை என்ன???
ஊருக்கு ஒதுக்குபுறமான ஓட்டல் நம்ம தமிழ்நாட்டுல சொல்லறதுன்னா செங்கல்பட்டு பைபாசில் இரண்டு சின்ன ஓட்டல் இருக்கும்… அது போலன்னு வச்சிக்கிங்க… நல்ல மழை வேற பேயுது. மொத்தம் அந்த ஓட்டலில் ஏழு பேர் மட்டும் இருக்காங்க…
இரண்டு காதலர்கள். ஒரு லோக்கல் போலிஸ்காரர், ஒரு பெண் சர்வர், ஒரு சமையல்காரர், வேறு ஒரு நபர் என்று மொத்தம் எழு பேர் இருக்கின்றார்கள். அப்போது ரேடியோவில் ஒரு செய்தி சொல்லபடுகின்றது.அதன் சாரம்சம் இதுதான்… நகரில் ஒரு படுகொலை நிகழ்ந்து இருக்கின்றது. குழந்தைகளை கூட விட்டு வைக்காத கொடுர கொலை என்று ரேடியோவில் அறிவிப்பு வர அந்த கொலைகாரன் பிளாக் மாடல் பிக்கப் டிரக்கில் தப்பி இருக்கின்றார்ன் என்று ரேடியோ செய்தி அறிவிக்கின்றது. சரி ஓட்டலில் சர்விசை நிறுத்தலாம் என்று முடிவு செய்து சர்விஸ் குளோஸ் செய்கின்றனர்.
அப்போது ஒருவன் உள்ளே நுழைகின்றான். அவனிடம் சர்விஸ் முடிந்து விட்டது என்று சொல்லும் போது மிகுந்த பசியில் இருப்பதால் தனக்கு ஒரு காபி இருந்தால் போதும் என்று சொல்கின்றான். அவனின் நடை உடை எல்லாம் பார்த்து அவன் கொலைகாரன் என்று சர்வர் பெண்மணி சந்தேகபட, அங்கு இருக்கும் லோக்கல் போலிஸ்காரருக்கு அந்த சந்தேகம் வலுக்க அவனிடம் ஊர் பேர் விசாரிக்கின்றார்… அவன் குற்றமற்றவன் என்று தெரிகின்றது…
அவன் வெளியே போய் விடுகின்றான். ஆனால் திரும்ப ஒரு பெரிய கண்ணோடு உள்ளே வந்து சமையல்காரர் மற்றும் கேள்வி கேட்ட போலிஸ் இருவரின் மண்டையையும் சுட்டு சிதறடிக்கின்றான். அவன் யார்?? அப்போது அவன் அந்த கொடுரகொலைகாரன் இல்லையா? எழு பேர் பினைகைதிகளாக மாறுகின்றார்கள்…. அவனின் நோக்கம் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை படத்தை பார்த்தால் மட்டுமே தெரியும்.
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.
ஹோட்டல் ஹாலில் படம் முழுக்க எடுக்கபட்டு இருக்கும். அது போலான திரைக்கதை.
முதல் பதினைந்து நிமிடங்கள் வெட்டி அரட்டையுடன் போகும் படம்.. அந்த ரேடியோ செய்தி வந்த பிறகுதான் படம் களை கட்டுகின்றது.
கொலைகள் நடக்கும் போது அதன் பிறகு விறுவிறுப்பு கூடிக்கொள்கின்றது.
ஹோட்டலில் இருக்கும் சர்வர் பெண்ணிடம் தனது காதலியை வீடியோ எடுத்துக்கொண்டு இருக்கும் காதலின் சர்வர் பெண்ணின் மார்பை குளோசில் வீடியோவில் பதிவு பண்ணிக்கொண்டே
பிரிட்டி ஹாட் ஆன் ஓல்ட் போர்ட் என்று சொல்வதும்
அதற்கு சர்வர் பெண் ஐயம் 32 என்று சொல்லிவிட்டு செல்ல, காதலன் அது போல சொன்னதுக்கு காதலி சர்வர் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, ஹீஸ் அன் அஸ்ஹோல் என்று சொல்வது எல்லாம் ஆங்கில படங்களில் மட்டும் சாத்தியம்.
படத்தில் சின்ன சின்ன டுவிஸ்ட்கள்தான் படத்தை போர் அடிக்காமல் எடுத்து செல்ல கை கொடுக்கின்றன.
என்னை பொறுத்தவரை இந்த படம் டைம்பாஸ்படம்தான்… ஆனால் பல தளங்கள் இந்த படத்தை சிலாகித்து ரேட்டிங்கொடுத்து இருக்கின்றன.
நோரனாக நடித்து இருக்கும் சர்வர் பெண் படத்தின் பெரிய பலம்… அதே போல் அந்த கிளைமாக்ஸ் எதிர்பார்த்து போல் இருந்தாலும் வேறு வழியில்லை.
அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்ட்டும் அந்த கான்வர்சேஷனும் அற்புதம்…நோரன் இழுத்து இழுத்து பயத்தில் பேசும் வசனங்கள் நன்றாகவே இருக்கின்றன.
======================
படத்தின் டிரைலர்..
======================================
ஹோட்டல் ஹால் ஒரு சில ஷாட் மட்டும் ஒட்டலுக்கு வெளியே இருக்கும் நேம் போர்டு மட்டும் காட்ட வெளியே கேமரா தூக்கிகொண்டு போய் இருக்கின்றார்கள்….
முழுக்க முழுக்க ஓர் இரவில் நடக்கும் கதை….
கொலைலகள் நடக்கும் போது ரத்தம் கர்நாடகத்தில் ஓடும் காவிரி ஆறுபோல ஓடுகின்றது. படத்தில் கேரக்டர்களை பாயின்ட் பிளாங்கில் துப்பாக்கியால் தலைகளை சுட்டு சிதறிடிக்கபடுகின்றன.
படக்குழுவினர் விபரம்…
Directed by Mark Young Produced by Jonathan Sachar Written by Mark Young Starring
• Michael Madsen
• Harold Perrineau
• Amber Benson
• Danny Trejo
• Jake Busey
Release date(s) January 2010 (Idyllwild)
March 24, 2010(United States) Running time 90 minutes Country United States Language English
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
me the first...!
ReplyDeleteஅண்ணே,
முடிந்தால் இந்த பதிவை பார்க்கவும்
http://vetripages.blogspot.com/2010/10/blog-post.html
படம் பார்க்க வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு உங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது
ReplyDeleteஆங்கிலப்பட விமர்சனங்களில் ஒரு தனி ட்ரெண்டையே ஏற்படுத்துகிறீர்கள்...
ReplyDeleteபோஸ்ட் போட்டு முடிப்பதற்க்குள்ளையே டிமனஸ் ஓட்டு குத்திய அந்த நட்புக்கு வணக்கம். இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கின்றேன்.
ReplyDeleteகுட் இன்னும் எதிர்பார்க்கின்றேன்.
ReplyDeleteஎத்தனை மைனஸ் குத்தினாலும் எனக்கு சந்தோசமே.
ReplyDeleteமூன்று ஓட்டுதான் மைனஸ் ஓட்டா????? அவ்வளவுதானா????சோ சேட்
ReplyDeleteஅண்ணே,
ReplyDeleteபடம் வச்சிருக்கேன்,பார்த்து விடுகிறேன்,என்னமா டெலிபதி வேலை செய்யுது,என்கிட்ட இருக்கும் படங்களுக்கு விமர்சனம் நண்பர்கள் எழுதுறாங்க,நான் அதை பாக்குறேன்.
முதல் பேரா படித்தவுடனேயே படத்தை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.நீங்கள் கூறிய மற்ற இரு படங்களையும் டவுன்லோட் போட்டுவிட்டேன்.நன்றி.எனக்கு ஒரே இடத்தில் இரண்டு மூன்று பேரை மட்டுமே வைத்து எடுக்கப்படும் படங்கள் மிகவும் பிடிக்கும்.அதற்கு நிறைய திறமை வேண்டும்.நானும் அப்படியான இரண்டு படங்களைப் பற்றித்தான் பதிவிட்டுள்ளேன்.Frozen மற்றும் 1408.
ReplyDeleteபடம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.:-)
விமர்சனம் அருமை பகிர்வுக்கு நன்றி சார்.
ReplyDeleteஸார், நீங்க எழுதின Exam, Disappearance of Alice Creed படங்களை அன்றைக்கன்றே டவுன்லோட் செய்து பார்த்துவிட்டேன். காரணம் ஒரே ரூம், மூன்றே பேர் போன்ற வித்யாசமான ஸ்கிரீன் ப்ளே. இதையும் மிஸ் பண்ணமாட்டேன்.பகிற்விற்கு நன்றி...
ReplyDeleteவேலைப்பளூவின் காரணமாக உங்கள் சில பகிர்வுகளை இன்றுதான் பார்த்தேன், அனைத்தும் அருமை.
ReplyDeleteவிமர்சனங்கள் கலக்கல்.
நன்றிகள் ஜாக்கி.
ReplyDeleteஆங்கிலப்படங்களை தமிழக்க தரமாக விளக்கித்தருகிறிர்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteடவுன்லோட் பண்ணிட்டு இருக்கேன். இந்த வீக் எண்ட்டே பாத்துட்டு சொல்றேன், படம் எப்படின்னு... டவுன்லோடு ரொம்ப நேரம் எடுக்குது. பாக்கலாம்.
ReplyDelete