பிளாக் ஊடகம் மிக பெரிய அளவில் ரீச் ஆகி இருப்பது என்பது உலகம் ஒத்துக்கொண்ட உண்மை. அதற்கு இப்போது தமிழ்பட இயக்குனரால் அங்கீகாரமும் கிடைத்து இருப்பது மிக்க மகிழ்ச்சி...
அண்ணன் உண்மைதமிழன் போன் செய்து சொன்ன போது என்னால் நம்பவே முடியவில்லை.. காரணம் பெரிய தலைகளுக்கு ஸ்கிரீன் செய்வார்கள்.. அப்போது பத்தோடு பதினொன்றாக நாமும் போவோம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் நடந்தது முற்றிலும் வேரானது...
அங்கு போன போது தெரிந்தது.. அது சென்னை பதிவர்களுக்காக திரையிடபட்ட முக்கியமான பிரத்யோக காட்சி என்பது தெரிந்தது. பதிவர்கள் ஒரு 50 பேருக்கு மேல் அசம்பள் ஆகி இருந்தார்கள்.
குடும்பத்துடன் வரலாம் என்று குறிப்பிட்ட காரணத்தால் நான் என் மனைவியோடு போனேன்..பதிவர் ரோமியோ மற்றும் பிரபாகரன் புத்தகம் எழுதிய செல்லமுத்து அவர்கள் என நாங்கள் மூவர் மட்டும் வீட்டம்மாவை அழைத்து சென்றோம்.
என்னை மணிஜி வந்ததும் கட்டிபிடித்து தனது அன்பை தெரிவித்தார் அதே போல தம்பி அதிஷா கட்டிபிடித்து அன்பை பகிர்ந்த போது அண்ணன் உண்மைதமிழன் நான் நடிப்பதாக வெறுப்பேற்றினனார்.பதிவுலகில் பல நண்பர்கள் ஜெய்ஜாக்கி என்று கலாய்த்து கை கொடுத்தார்கள்.
எனக்கு தெரிந்து வந்த, நண்பர்கள் பதிவர்கள். எழுத்தாளர்கள்.ஞானி, விஜய்ஆம்ஸ்ட்ராங், தண்டோரா,புருனோ,கேபிள்,சுரேகா,நித்யா,ரமேஷ்வைத்யா,லக்கி,உண்மைதமிழன் அதிஷா,பலாபட்டறை சங்கர்,காவேரிகணேஷ், சங்கர்,பட்டர்பிளை சூர்யா, வாசக நண்பர் விஜய், சாம்ராஜ்யபிரியன்,அலைகள்பாலா,பிலாசபிபிரபாகரன்,அருள்மொழி,ஜெயவேல்,வக்கில்சுந்தரராஜன்,
ரோமியோ,எறும்புராஜகோபால், போன்ற பலர் வந்து இருந்தார்கள்...
இடைவேளையின் போது ஒரு நண்பர் பிரபாகர் அவர் இவர் ஜாக்கிசேகர் என்று கருபழனியப்பனிடம் அறிமுகம் செய்து வைத்தார்.. பின்பு அவரை விசாரித்த போது அவர் சேரனின் உதவியாளர் என்றும் கருபழனியப்பனை வைத்து ஒரு படம் இயக்கபோவதாகவும்,தொடர்ந்து எனது பதிவுகளை படித்து வருவதாகவும் சொன்னார்....
இயக்குனர் கருபழனியப்பனோடு பேசிக்கொண்டு இருந்த போது இப்போது பதிவு ஊடகம் வெகு சிறப்பாக தனது கருத்துக்களை முன் வைப்பதால் அவர்களுக்கு இந்த காட்சி ஏற்பாடு செய்தேன் என்று தெரிவித்தார்....நான் அவரிடம் உங்களின் மீதான என் கவனஈர்ப்புக்கு உங்களின் ஒரு வசனம்தான் காரணம் என்றேன்...கலைஞ்சி கிடந்தா அதுக்கு பேரு வீடு அடுக்கி வச்சா அது மியூசியம் என்ற அந்த டயலாக் என்றேன். அந்த பாராட்டுக்குதான் இந்த படத்தில் உட்கார்ந்து, யோசித்து, மாய்ந்து மாய்ந்து எழுதி இருப்பதாக என்னிடத்தில் இயக்குனர் தெரிவித்தார்....
ஒரு சிலர் நீங்க பதிவரா என்று என் மனைவியிடம் கேட்டவர்களும் உண்டு. என் மனைவியின் தம்பி பரத்தையும் இந்த திரையிடலுக்கு அழைத்து போயிருந்தேன்... முதன் மறையாக ஏவிஎம் வளாகத்துக்கு வந்ததே அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. அதிலும் ஒரு புதிய திரைபடம் அவனை பொறுத்தவரை சிறப்பு.
இடைவேளையில் அனைவருக்கும் பிஸ்கெட் மற்றும் டீயிம் வழங்கபட்டது.இயக்குனரிடம் எல்லோரும் பேசி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.இது போலான ஏற்பாட்டுக்கு அவருக்கு நேரிலேயே நன்றி தெரிவித்தார்கள்.
எந்த படத்தையும் பதிவர்களுக்கு ஸ்பெஷல் ஷோ போட்டாலும் போடவிட்டாலும் எந்த படத்தையும் நம் பதிவர்கள் பார்த்து எழுதத்தான் போகின்றார்கள். இருப்பினும் படத்தை பார்த்து சுட சுட எழுதும் பதிவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்று ஆசைபட்டகருபழனியப்பனுக்கு எனது நன்றிகள்.
ஒரு ஆனந்தவிகடன், குமுத்ம் போன்ற வெகுஜனபத்திரிக்கை விமர்சனங்கள் ஒரு வாரத்துக்கு பிறகு வெளிவரும். ஆனால் படம் வந்து முதல் காட்சி பார்த்து விட்ட உடன் பதிவிட்டு அது பூமி பந்தின் ஆடுத்த மூலையில் இருக்கும் அமெரிக்காவில், சான்பிரான்சிஸ்கோவில் வசிக்கும் ஒருவனால் உடன் எந்த படத்தின் ரிசல்ட்டையும் தெரிந்து கொள்ளமுடியம்.
இது படத்துக்கான பிரோமோஷன் என்றாலும் உங்களுக்கு தோன்றியதை பதிவு செய்யலாம் என்று ஏற்க்கனவே சொல்லிவிட்டடார்கள்.
இனிதமிழ்இயக்குனர்கள் தங்கள் படைப்பை பிரஸ்மீட் புரமோஷனில் தமிழ் பிளாக்கர்சையும் சேர்ந்துக்கொள்ள இது நல்ல தொடக்கம் என்பேன்.
இது போல நினைப்புக்கு முழுவடிவம் கொடுத்து செயல்படுத்தியி இயக்குனர் கருபழனியப்பனுக்கும் பதிவர்களுக்கு பல போன்கால்கள் செய்து அழைப்பு விடுத்த அண்ணன் உண்மைதமிழன் அவர்களுக்கு என் நன்றிகள்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விசயம்.. நான் சென்னையில் இல்லாததால் இந்த வாய்ப்பை இழந்துவிட்டேன்..
ReplyDeletearumai
ReplyDeleteஇந்த திரையிடலை ஒருங்கிணைத்த உண்மைதமிழன் சரவணன் அவர்களுக்கு ஒரு ஓ போடுங்க :-))
ReplyDeleteசரி தலைவா விமர்சனம் எப்போ எழுதுவிங்க
ReplyDeleteநேற்று என்னால் வரமுடியாமல் போய்விட்டது ..
ReplyDelete//இனிதமிழ்இயக்குனர்கள் தங்கள் படைப்பை பிரஸ்மீட் புரமோஷனில் தமிழ் பிளாக்கர்சையும் சேர்ந்துக்கொள்ள இது நல்ல தொடக்கம் என்பேன்.//
ReplyDeleteமிகவும் சரி :-)
கண்டிப்பாக இது ஒரு நல்ல தொடக்கம்தான். இது பதிவர்களின் பலத்தை கூட்டுகிறது.
ReplyDeleteஉண்மையில் பாராட்டப்பட வேண்டிய விசயம்.
ReplyDeletehmm..Great..
ReplyDeletehttp://enathupayanangal.blogspot.com
நல்ல தொடக்கம்....
ReplyDeletewhat is the movie name?????
ReplyDeleteகரு.பழனியப்பனுக்கு பாராட்டுகள்!
ReplyDeleteஜாக்கி, இங்க பாரு.. கொதிக்கிறது தட்ஸ் தமிழ்..
ReplyDeletehttp://thatstamil.oneindia.in/movies/specials/2010/11/24-karu-pazhaniyappan-bloggers-show.html
பெங்களூர் வலைப்பதிவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு......
ReplyDeleteநிச்சயம் இது பாராட்ட பட வேண்டிய விசயம்.
கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்...
ReplyDeleteஅருமை ஜாக்கி.
ReplyDeleteஜாக்கி இருந்தா அந்த இடமே களை கட்டும்.
நேற்றும் அப்படிதான் களை கட்டியது.
வாழ்த்துக்கள்.
சந்தித்துக்கொண்ட பதிவர்களின் படங்களை தேடுகின்றேன், எங்கும் காணவில்லை. யாராவது போடுவீங்களா?
ReplyDeleteJackie sir,
ReplyDeleteplease clear my doubt. Is (all) preview show free or any discount in ticket price?
By the way, where is the movie review?
Thanks,
ASM.
நல்லது ஜாக்கி..! கூட்டுறவே நாட்டுயர்வு..!
ReplyDeleteNice to hear jackiesekar. All the best for our Tamil Bloggers
ReplyDeleteவாழ்த்துக்கள் ,
ReplyDeleteதமிழ் பதிவுலகில் நீங்கள் முதல் இடத்தை மெயின்டெயின் செய்யுங்கள். உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் என்று போனவாரம்தான் சொன்னேன். அதுக்குள்ள பார்த்தீங்களா ஜாக்கி அவர்களே.
மேன்மேலும் வளர்ச்சி அடைய இதயபூர்வமான வாழ்த்துக்கள்
நீங்களும் ஜோதியில் கலந்துகிட்டீங்களா?வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களையும் உங்கள் குடும்பத்தையும் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி ஜாக்கி...
ReplyDeleteஇயக்குனர் இந்த பதிவை படித்தால் சிறப்பாக இருக்கும்... படிப்பாரா...?
ReplyDeleteஜாக்கி அண்ணே,
ReplyDeleteஎப்படி இருக்கிங்க ?
"பதிவர்கள் காட்சி" என்பது நல்ல தொடக்கம்...
வாழ்த்துகள் !
அது என்ன பதிவர்கள் என்றால் ஆண்கள் மட்டும் தானா???எங்களுக்கு அழைப்பே இல்லை??
ReplyDeleteசாரி ஜாக்கி..உண்மைதமிழனின் பதிவினை இப்போதான் படித்தேன்..அனைவரையும் வர சொல்லி தான் பதிவு போட்டிருக்கிறார்..நான் தான் மிஸ் செய்துட்டேன்..
ReplyDeleteit is good step,
ReplyDelete