ஆல்பம்..
ஒபமா இந்தியா வருகின்றார்... அதாவது பதவிகாலம் முடியும் நேரத்தில் இந்தியா வந்து நல விசாரிப்புகளை செய்து விட்டு, அரசு செலவில் தாஜ்மஹால் போய் பொண்டாட்டியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு செல்லும் போது, மற்றகாமல் எரிசக்தி விஷயத்தில் இந்தியாவை ஏய்த்து விட்டு செல்லும் அமெரிக்க அதிபர்களில்,
பதவிக்கு வந்த சில காலங்களில் இந்தியாவுக்கு ஒபாமா வருவது பல நாடுகளின் புருவத்தை உயர்த்தி உள்ளது... இருப்பினும்.. ஆசியாவின் இரண்டு பேட்டை ரவுடிகள் இந்தியாவும் சீனாவும் என்பது ஒபாமாவுக்கு தெரியாமல் இல்லை. இருந்தாலும் இந்தியாவிடம் எது சொன்னாலும், சொல்லுங்க எஜமான் என்று நிற்கும் அந்த பாங்கு ஒபாமாவுக்கு பிடித்து இருப்பதால்.. ஒரு பேட்டை ரவுடிக்கு நான் நண்பன் என்று சொல்லவும் இந்த பயணத்தை அதிபர் பயண்படுத்திக்கொள்ள போகின்றார்...
==================
நாளையில் இருந்து மூன்று நாட்கள் சென்னை பிலிம் சேம்பரில் 3நாள் ஐரோப்பிய உலக படவிழா நடக்க இருக்கின்றது... அனுமதி இலவசம்.. நேரம் கிடைக்கும் போது அந்த பக்கம் சென்னைவாசிகள் ஏட்டி பார்க்கவும்...
============
சீனாவில் அதிவேக ரயில் அறிமுகபடுத்தியுள்ளார்கள்.. ஒரு மணி நேரத்துக்கு 350 கிலோமீட்டர் வேகம். தமிழகத்தில் அது போல அறிமுகபடுத்தினால் கன்யாகுமாரியில் காலை 6 மணிக்கு ஏறி ஏழரைக்கு எல்லாம் சென்னைக்கு வேலை வந்துவிடலாம்....ஆனால்... இந்தியா முழுவதும் சமீபகாலமாக ரயில்கள் தாளம் தப்பி, தடம் புரள்வது வாடிக்கையாகிவிட்டது.. அதுவே நம்ப ஊரில் கொஞ்சம் யோசித்து பாருங்கள் எழும்பூரில் கிளம்பி வேகம் எடுத்து மாம்பலத்தில் அந்த வேகரயில் தடம் புரண்டால் மாம்பலம் மார்கெட்டில் நுழைந்து ஆங்கில படம் போல மேட்லி சப்வே சுவற்றை இடித்துக்கொண்டு, தொங்கி நிற்கும். நமக்கு இந்த வேகமே போதும்.
==========
ஒரு ஓய்வு பெற்ற எஸ்பி கஞ்சா வளர்த்து இருக்கின்றார்.. அதுவும் ஒன்று இரண்டு செடி இல்லை...5 ஏக்கரில் வளர்த்து இருக்கின்றார்... பாக்டம்பாஸ் 20/ 20 போட்டு இன்னும் அமோக விளைச்சல் காண்பதற்குள் போலிஸ் அழித்து விட்டது...இரவில் ரெய்டுக்கு போன போலிசுக்கு காஞ்சா செடி பார்த்து சுற்றி வளைத்து விட்டது.. ஆனால் விடிய விடிய காவல்காத்து விட்டு காலையில் பார்த்தால் 5 ஏக்கர் நிலபரப்பில் கஞ்சா...
=========
மிக்சர்..
பழனியில் ஒரு பெண் காதலனுடன் ஓடிவிட்டாள்... குடும்பத்தில் உள்ள 4 பேரும் அவமானம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்கள். எனக்கு என்ன கேள்வி என்றால் அந்த பெண்ணின் பக்கம் நின்று யோசித்து பாருங்கள்...கொடுமை... அந்த பெண்ணால் இந்த மனவலியில் இருந்து வெளிவர வெகுநாட்கள் ஆகும்... என்ன நினைத்து இருப்பாள்... முதலில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.. குழந்தை பிறந்ததும் சரியாகும் என்று நினைத்து இருப்பார்கள். இது அவளே எதிர்பாராத ஒரு கிளைமாக்ஸ்...இதுவும் கவுரவத்துக்கு நடந்த பைத்தியக்காரதனமே என்பது எனது கருத்து...
==================
மழை வருவதும் குழந்தை பிறப்பும் மகாதேவனுக்கே தெரியாது என்று கிராமபுறத்தில் ஒரு பழ மொழி உண்டு... அனால் விஞ்ஞானத்தால் கணிக்க முடியும்.. ஆனால் இன்னும் இரண்டு நாளில் பருவமழை தொடங்கிவிடும் என்று சட்டமாக சொல்வதை ஏற்க்க முடியவில்லை.
=======
நன்றிகள்...
ஒரு தலைப்பு ரொம்ப வித்யாசமாக இருக்க, படித்து பார்த்தால் வலைசரத்தில் நம்மை பற்றியும் குறிப்பிட்டு இருக்கும் நண்பர் சுகுமார் சுவாமிநாதனுக்கு என் நன்றிகள். அந்த பதிவை வாசிக்க இங்கு கிளிக்கவும்...
========================
ஒரு சின்ன கதை....
யோக்கியர்களின் கதை...
ஒரு புருசன் பொண்டாட்டி எல்லாத்துக்கும் யோக்கியம் எடுப்பாங்களாம்... புருசன் கம்முன்னு இருந்தாலும், பொண்டாட்டி சும்மா இருக்கவே மாட்டாளாம். சரிம்மா எல்லாத்துக்கும் யோக்கியம் எடுக்கறியே.. கொஞ்சம் பக்கத்து தெருவரை தெரிஞ்சவங்களை பார்த்துட்டு வந்துடுறேன்.. யோக்கியகாரியே, யோக்கியகாரியே கொஞ்சம் வீட்டை பார்த்துக்கோ என்று சொல்லி விட்டு, அந்த வீட்டுகாரர் போக எத்தனிக்க, அதுக்கு எல்லாத்துக்கு யோக்கியம் எடுத்த யோக்கியகாரி சொன்னாளாம்.... தயவு செய்து வீட்டை இழுத்து சாத்திகிட்டு போங்க என் கை திருட்டுகை என்று.... இது போல கதைதான் கடந்த வாரத்தில் நடந்த சில நிகழ்வுகள்... பல பேரால் தம் கட்டவே முடியவில்லை.... நிறைய பெருக்கு அயர்ச்சி போல, இவ்வளவுதானா??? ஆல் த பெஸ்ட் பீப்பிள்.
100 பேருக்கு மேல் ஒரு குழுவாக உங்களை எதிர்க்கின்றார்களாம் என்று நண்பர் சொன்னார்...போய் பார்த்தேன் ஆனால் 4 காமெடி பீசுக்கு மேல் இல்லை... போட்டோ எல்லா மாற்றி வேறு காமெடி முகம் காட்டி இருக்கின்றார்கள்...பயமா என்று தெரியவில்லை... தொடர்ந்து 4 போஸ்டுகள் என்னை பற்றி 4 பேர் தொடர்ந்து எழுதி கடந்த வாரம் முழுவதும் வெளிச்சத்தில் வைத்து இருந்தார்கள்..இதனால் எனக்கு ஒரு 15 பாலோயர்கள் புதிதாக சேர்ந்து இருக்கின்றார்கள்... உங்களுக்கு நன்றி...
எனக்கு எழுதிய கடித போஸ்ட் ஒன்று அம்போவாகிவிட்டது.. நியாயமான பல நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை. ஆனாலும் மிக நியாயமான கமென்ட்டை முன் வைத்த அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.. எனக்கு தோள் கொடுத்த நண்பர்களுக்கு என் நன்றிகள். மிக முக்கியமாக கோபத்தில் நான் எழுதிய பல போஸ்ட்கள் டிராப்டில் இருக்கின்றன.. அதில் சிலதை மெரினாவில் பதிவர் சந்திப்பில் சொன்ன போது பல நண்பர்கள் காது பொத்திக்கொண்டார்கள்.. இருப்பினும் நல்ல நேரத்தில் போன் செய்து வலை விரிப்பை விளக்கிய டாக்டர் புருனோவுக்கு திரும்பவும் என் நன்றிகள்...
=============
தமிழ்மணத்தில் இடுக்கைகள் இணைப்பதில் பெரிய பிரச்சனையாக இருக்கின்றது... அது எனக்கு மட்டும் பிரச்சனை என்று எண்ணி இருந்தேன்.... ஒருவேளை தளத்தை டாட்காமாக மாற்றியதால் வந்த பிரச்சனையா? என்று தெரியவில்லை. ஒரு நண்பர் தனக்கும் அது போல பிரச்சனை இருப்பதாக சொன்னார்...
காரணம் சொல்லுங்கள்...தெரிந்தவர்கள்.... அல்லது சம்பந்தபட்டவர்கள்..
=================
அடுத்த சாண்ட்வெஜ் பதிவில் இருந்து பொதுமக்களின் சில அடிப்படை சட்ட பிரச்சனைகள் பற்றிய கேள்விகளுக்கு பதிவுலக நண்பரும், வக்கிலுமான நண்பர் சுந்தரராஜன் அவர்கள் பதில் அளிக்க உள்ளார்... அடுத்த பதிவில் இருந்து கேள்வி பதில் வெளியாகும்..
===========
15 வருடத்துக்கு முன் ஸ்டோலன் நடித்த கிளிப் ஆங்கர் படத்தில் காட்டுவது போல், விமாணத்தில் பணம் அனுப்பி வைக்கபடுகின்றது...எங்கே என்று கேட்கின்றீர்களா?? நக்சல் பிரச்சனை காரணமாக சட்டிஸ்கர் மாநிலத்துக்கு குட்டி விமானங்களில் பணம் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கபடுகின்றது...
இந்தவார நிழற்படம்..
இது தீபாவளி ஸ்பெஷல் இது போலான கலரில் உங்கள் வீட்டு அம்மனிக்கு செலக்ட் செய்து பேங்க் பேலன்சை கரைக்கவும்...கல்யாணம் கட்டி என்னத்தை கண்டேன் எனும் அவச்சொல்லில் இருந்து தப்பிக்கவும்...
=============
இந்தவார சலனபடம்...
பெண்களின் குமிடி பிடி சண்டையும்... அந்த கிளைமாக்ஸ் அருமை...
இந்தவாரம் படித்ததில் பிடித்தது..
பதிவர் ஈரோடுகதிர் அவர்கள் இலங்கையில் உள்ள வவுனியாவுக்கு சென்றதை பதிவாக எழுதி இருக்கின்றார்.. வெகு நாட்களுக்கு பிறகு அதை படித்து விட்டு மனது கணத்து விட்டது. வாசிக்க இங்கே கிளிக்கவும்...
========
சில வாரங்களுக்கு முன் ஆனந்த விகடனில் இரண்டு கவிதை வாசித்தேன். அதில் ஒன்று..... மற்றது அடுத்த பதிவில்
கற்க்கை நன்றே....
நடந்தபடியே தள்ளிக்கொண்டு வரும்
டிராவலர்ஸ் பைகளுக்கு நடுவே
நகைக் கடை அன்பளிப்புப்
பையுடன் நுழைந்தவள்
பெண்களுக்கான
பிரத்யேக வாசனை திரவியங்கள்
சுழன்றடித்த அறையில்
பாண்ட்ஸ் டிரீம் ஃப்ளவரைச்
சத்தம் இல்லாமல் பூசிக்கொண்டவள்
தாவணியின் முந்தானையைத்
தேடிச் சலிப்புற்ற கைகளால்
சுடிதாரின் துப்பட்டாவை
இணையாக அணியத் தெரியாதவள்
பன்னிரண்டாம் வகுப்பில்
மீந்துபோன தாள்களைத் தைத்து
முதல் நாள் வகுப்புக்கு
நோட்டுகளாகக் கொண்டுசென்றவள்
இன்னும் சில நாட்களில்
நாப்கின் பொருத்துவதைக்
கற்றுக்கொள்ள வேண்டிய
பதற்றத்தில் இருப்பவள்
பத்திரமாக இருக்கச்சொல்லி
விரல் விடுத்த அப்பாவின்
வறண்ட ஸ்பரிசத்தில்
பெரிய மனுஷியான பின்
இழந்துபோன அப்பாவின் அண்மையைத்
தரிசித்த ஆறுதலில்
உறக்கம் வராமல்
புரண்டு படுத்தபடி இருக்கிறாள்
எல்லா புறநகர்
கல்லூரி விடுதிகளிலும்
புதிதாகச் சேர்ந்த கிராமத்து மாணவி
ஒருத்தியேனும்!
- கே.ஸ்டாலின்...
மிக அழகாக ஒரு கிராமத்து பெண்ணின் சென்னை ஹாஸ்டல் வாழ்க்கையை பதிவு செய்த கவிதை... வாழ்த்துக்கள் ஸ்டாலின்..
===============
இந்தவார கடிதம்..
Hello Jackie,
Thanks a lot for your time & efforts.. because of you, myself + some of my friends are getting to know about some great films. I know how difficult to spend time on these, but you are doing a GREAT job.
btw., I put this comment in your page on "THE DISAPPERANCE OF ALICE CREED-2009". Is it possible to share the download-link?
PLEASE!
>
ஜாக்கி (Or anyone please)
டவுன்லோட் ?
is this torrent? or if any of you can share the link here? PLEASE!
டவுன்லோட் ?
is this torrent? or if any of you can share the link here? PLEASE!
Have a nice day
--Madhes
================
அன்பின் மாதேஸ் நான் எந்த படத்தையும் டவுன்லோட் செய்து பார்க்கும் பழக்கம் இல்லை என்பதை 7848 முறையாக சொல்லிக்கொள்கின்றேன்.
=============
ஹாய் ஜாக்கி சேகர் அண்ணா,நான் தங்கள் பதிவுகளை வாசிக்கும் ஒரு ரசிகன்.....உங்களின் "Disappearance of Alice Creed " என்ற ஆங்கில திரைப்படத்தின் விமர்சனத்தை வாசித்தேன்....அந்த திரைப்படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன்....அந்த படத்தை பதிவிறக்கம செய்யும் link ஐ தருவீர்களா? மேலும் அத் திரைப்படம் கடைகளில் இலகுவா வாங்க கூடியதாக இருக்குமா?
நன்றி
-ஆகாஷ்
=========
நண்பர் அகாஷுக்கு சென்னை பார்மா பஜாரில் அந்த படம் கிடைக்கின்றது..
===========
==============
பிலாசபி பாண்டி..
குடும்பகட்டுபாடு மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தை ஓழிக்க மிசச்சிறந்த வழி எல்லாவற்றையும் ஆபாசமாக பார்த்து தொலைப்பதுதான்.
==========
என்னங்க. இன்னைக்கு ரசம் வைக்கட்டுமா? அல்லது குழம்பு வைக்கட்டுமா? முதலில் எதையாவது வை அப்புறம் அதுக்கு பேர் வச்சிக்கலாம்...
============
நான்வெஜ் 18+
ஜோக்..1
6மாசம் நம்ம போட்டு பழகும்.. செருப்பு நமக்கு செட் ஆகுதான்னு பல முறை செக் செய்து வாங்குகின்றோம்... ஆனால் காலம் முழுசும் நம்மகூட வரும் பெண்ணை வேண்டாம் என்னை இன்னும் திட்டுவிங்க...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
philosophy Pandi's Kolambu matter...super
ReplyDeleteNammoorla edu anne bharma bajar?
ReplyDeleteஎன்னங்க. இன்னைக்கு ரசம் வைக்கட்டுமா? அல்லது குழம்பு வைக்கட்டுமா? முதலில் எதையாவது வை அப்புறம் அதுக்கு பேர் வச்சிக்கலாம்...
ReplyDeleteஉண்மைய சொல்லுங்க இது வீட்ல நீங்க சொன்ன டயலாக் தானே....
/// ஜாக்கி (Or anyone please)
ReplyDeleteடவுன்லோட் ?
is this torrent? or if any of you can share the link here? PLEASE!
Have a nice day
--Madhes//
WWW.ISOHUNT.COM is an wonder full torrent site. u can get most of the movie torrents in this site.
I almost download all the movies from this site only.
today i down loaded AFER LIFE and watched it.
most of the movies given by jackie is available on that site including " THE DISAPPEARANCE ALICE CREED" . Go and check it out.
அனைவருக்கும் வணக்கம்! ஓர் அவசர உதவி,! எனது காமிராவை (sony cyber shot DSC-S930) கைதவறி கீழே போட்டு விட்டேன்! ஜூம்(லென்ஸ் )ஜாம் ஆகி விட்டது. என்ன செய்யலாம்? காமிரா பஜாரில் வாங்கியது. (வாரண்டி இல்லை), சர்வீஸ் செண்டர் போக முடியுமா? என்று தெரியவில்லை ! போக வேண்டும் என்றாலும் 200 கி.மீ பயணம் செய்ய வேண்டும் ! நான் வசிப்பது கொடைக்கானலில் ! சர்விஸ் செண்டர் மதுரையில் ! ஆலோசனை பிளிஸ்! நெட்டில் தேடினால் மறுபடியும் கீழே போட சொல்கிறார்கள்!
ReplyDeleteமெயிலும் அனுப்பலாம் !paulosraja@gmail.com உதவ போகும் உள்ளங்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள் பல! ஜாக்கி அண்ணே ! கொஞ்சம் ரெகமண்டு பண்ணுங்க!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteCan you Write about Lion King ? (animation Movie)
ReplyDeleteவிகடன் கவிதை சூப்பர் அண்ணா...
ReplyDeleteபிலாசபி பாண்டி மேட்டர் சூப்பர்..
ReplyDeleteஆனா நாம எபோ பேட்டை ரௌடி ஆனோம் அண்ணா..!!
லேட்டஸ்ட் தமிழ் சினிமா படங்களுக்கு
Tamil Movie Gallery
Very nice post.
ReplyDeleteSunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
அருமையான ஐயிட்டம் தலைப்பை பார்த்து பய்ந்து கிளிக் செய்தால் , திருப்தியான ஒரு கலப்படம்.. தல மதுரையில் நீங்கள் சொன்னது போல மழை... அத்தனையும் ரசித்தேன்.. வாழ்த்துக்கள்
ReplyDelete//
ReplyDeleteமிக முக்கியமாக கோபத்தில் நான் எழுதிய பல போஸ்ட்கள் டிராப்டில் இருக்கின்றன.. அதில் சிலதை மெரினாவில் பதிவர் சந்திப்பில் சொன்ன போது பல நண்பர்கள் காது பொத்திக்கொண்டார்கள்..
//
கொய கொயன்னு நீ சொன்ன மேட்டரு மெய்யாலுமே படு லோக்கல் மாமே... பதிவுலகம் தப்பித்தது.
அன்பு நித்யன்