சுனாமி வந்து 6 ஆண்டுகள் முடிந்து விட்டன. சுனாமி வந்த போது வடபழனி குமரன் காலனியில் இருந்தேன்..மீட்பு பணிக்கு இடையூறு செய்யாமல் இருக்க யாரும் கடற்கரைக்கு வரைவேண்டாம் என்று தொலைகாட்சியில் அறிவிப்பு வந்த காரணத்தால் நான் வெளியே போகவில்லை..
தொலைகாட்சியில் ஒரு அம்பாசிட்டர் கார் அண்ணாசமாதி அருகே தண்ணீரில் குதித்துக்கொண்டு இருக்கும் போதே எனக்கு சுனாமி கோரமுகம் தெரிந்து விட்டது...
நான் அப்போது நிக்கான் எப் எம் 10 ஸ்டில் கேமரா வைத்து இருந்தேன். அந்த கேமராவில் ரோல் லோட் செய்து திரும்ப சுனாமி வந்தால் இந்தமுறை போட்டோ எடுத்து விடுவது என்று கங்கனம் கட்டிக்கொண்டேன்..நான் பிலிம் லோட் பண்ண நேரம் சுனாமி வராமல் பயந்து போய்விட்டது.
அன்று இரவு முழுவதும் சுனாமி பற்றிய சோக செய்திகள் பார்த்துக்கொண்டு இருந்தேன்.. எனது ஊர் கடலூர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருந்தது..நிறைய பேர் மரித்து போனார்கள்...
சுனாமிக்கு மறுநாள் அது பற்றிய பேச்சாக இருந்து கொண்டு இருந்தது... ஏனெனில் இது போன்ற பேரலையை தமிழகம் சந்திக்கவில்லை.
சரியாக சுனாமி வந்த மறுநாள்.. மதியம் ஒரு போன் வந்தது..
ஹலோ ஜாக்கியா?
ஆமா சொல்லுங்க..
இப்ப பிரியா இருக்கியா?
பிரியாதான் இருக்கேன் சொல்லுங்க..
உன் ஸ்டில் கேமராவை எடுத்துக்குனு உடனே போரூர் ராமச்சந்திரா
ஹாஸ்பிட்டலுக்கு வந்துடு..என்று சொல்லிவிட்டு நண்பர் போன் கட் செய்துவிட்டார்...
சரி மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவா? அல்லது ஏதாவது பிரைஸ் டிஸ்ட்ரிபுயூஷனா என்று தெரியவில்லை...ஒரு பத்து ரோல் கொண்ட கோனிகா பிலிம் ரோல் எடுத்து பேக்கில் போட்டுக்கொண்டு ராமச்சந்திராவுக்கு பயணப்பட்டேன்..
ராமச்சந்திரா போய் ஒரு மணி நேரம் என்ன புரோகிராம் என்று எனக்கும் தெரியவில்லை.. பிளாஷ்க்கு பேட்ரி சார்ஜ் நிக்குமா? என்று எனக்குசெம டென்ஷன் வேறு...
எனது நண்பர் வீடியோ கேமராவோடு சிறிது நேரத்தில் வந்தார்..இன்னும் ஒரு மணிநேரம் ஆனது என்ன புரோகிராம் என்று எனக்கும் தெரியவில்லை..ஒரு மருத்துவர் எங்களை அழைத்து சென்றார்...
அங்கே போனால் போலிஸ்தலைகள் நிறைய காணப்பட்டன.. திருவள்ளுவர் பெண் சப் கலெக்டர் மருத்துவ டீன்களோடு பேசிக்கொண்டு இருந்தார்கள்.. முதலில் மருத்துவர் முடியாது என்றார்கள்.. பின்பு சட்டம் ஒழுங்கு என்று பல டெக்னிக்கல் வார்த்தைகள் பேசபட்டு ஒரு முடிவுக்கு வந்தார்கள்.. சில டாக்டருக்கு ரொம்ப அவசரம் மருத்துவமணை வரவும் என்று போன் செய்தார்கள்.
எங்கே போட்டோகிராபர்,வீடியோகேமராமேன் என்று டீன் கேட்க?? நானும் எனது நண்பரும் அவர் முன் நிறுத்தப்பட்டோம். ஒரு அறைக்கு அழைத்து சென்றார்கள்.. அங்கே வரிசையாக வைத்து இருந்த ஒரு டிராயரை திறந்தார்கள்.. அதில் ஒரு நடுத்தரவயது ஆணின் இறந்த உடல் இருந்தது.. அதனை போட்டோ எடுக்க சொன்னார்கள்.. எடுத்தேன்..
உடலை வெளியே எடுத்த திருப்பி போட்டார்கள்.. எடுத்தேன். ஒரு போலிஸ் போட்டோகிராபர் மற்றும் ஒரு வீடியோகேமராமேன் வேறு எல்லாத்தையும் பதிவு செய்து கொண்டு இருந்தார்..
முகத்தை குளோசில் எடுக்க சொன்னார்கள்.. கிளிக்..பின்பக்கம் துப்பாக்கி துளைத்த காயத்தை காட்டினார்கள்... அதை எடுக்க சொன்னார்கள்.. கிளிக்...அந்த பெண் கலெக்டர் முழு உடலையும் எடுக்க சொன்னார்.. கிளிக்..அங்கு இருக்கும் எல்லோரையும் எடுக்க சொன்னார்கள். கிளிக், கிளிக், கிளிக்,கிளிக்,கிளிக், ரோல் முடிந்தது.. ரோலை கேமராவில் இருந்து கழட்டிக்கொண்டே விசாரித்தேன்..
இறந்து போனது சென்னை ஆவடியில் கோலாச்சிய இரண்டு எழுத்து ரவுடி,சுனாமி வந்த அன்று இரவு என்கவுன்டரால் சுட்டுகொல்லபட்டு விட்டான்.. அதைதான் போட்டோ எடுத்தேன்.. சரி ரோலை கழட்டி கொடுத்து விட்டு கிளம்ப எத்தனித்த போது எங்கே போகின்றீர்கள்? என்று டீன் கேட்டார்...
வந்த வேலை முடிந்து விட்டது என்று கிளம்ப எத்தனித்த போது இனிமேதோன் முக்கிய வேலையே என்று சொல்லிவிட்டு மார்ச்சுவரிக்கு அழைத்து போனார்கள்..ஏற்கனவே அரசு மருத்துவமனை மார்ச்சுவரிகள் பார்த்து இருக்கின்றேன்..எனது தாத்தா ஒருவர் விபத்தில் இறந்த போது பண்ருட்டி அரசு மருத்துவமனை மார்ச்சுவரி பார்த்து இருக்கின்றேன்..
இது தனியார் மருத்துவமணை மிகசுத்தமாக நேர்த்தியாக இருந்தது.. எனக்கு கை கால் எல்லாம் நடுக்கம்.. எப்படி படம் எடுக்க போகின்றேன் என்று எனக்கு பயம் ..ரத்தத்தை பார்த்து விட்டு அப்படியே மயங்கிவிட்டால் என்ன செய்வது???இப்படி போட்டோ எடுக்கதான் வேண்டும் என்று நண்பர் முன்பே சொல்லி இருந்தால் மனதை தயார் படுத்தி இருந்து இருப்பேன்.. இல்லை ஜகாவாங்கியவது இருந்து இருப்பேன்..
எதையும் பார்த்து விடலாம் என்று ஒரு மனதும் எப்படி சமாளிக்க போகின்றாய் என்று இன்னோரு மனதும் கேள்வி கேட்க பார்த்துடலாம் என்று தைரியமானேன்..
உடலை ஒரு பெரிய பேஷன் போலான டிரேயில் கிடத்தினார்கள்..எல்லோருக்கும் மாஸ்க் கொடுக்கபட்டது.. எனக்கு செம நடுக்கம் என்னதான் ஆங்கில படங்கள் பார்த்து இருந்தாலும்.. நேராக ஒரு போஸ்ட்மார்டத்தை பார்க்க போகின்றோம் அதனை போட்டோவும் எடுக்க வேண்டும்..சரி சவாலாக இதை செய்வோம் என்று மனதுக்குள் உறுதி பூண்டேன்.. இருந்தாலும் மனதில் ஒரு அயர்ச்சி இருந்தது...
தலையை ஒரு கட்டை போன்ற இடத்தில் தூக்கி வைத்தார்கள்.. இரண்டு பெண் டாக்டர்கள் செம அழகு.. நார்த் இன்டியன்..இரண்டு பேரும் குறிப்பு புத்தகம் கையில் வைத்துக்கெர்ண்டு எந்த பதட்டமும் இல்லாமல் நிற்க...எனக்கு அவர்களை பார்த்த பின்பு தைரியம் வந்தது..ஒரு அரத்தை எடுத்த................................. தலையின் மேல்பக்கம் முடியுடன் இருந்த மேல் தோலை மடக்கினார்கள்.. அதன் எனக்கு முதலில் ஒரு மாதிரியாக இருந்தாலும் இரண்டு நிமிடத்தில் நான் புரபஷனலாக மாறிபோனேன்...அதன் பிறகு நடந்த எதையும் எழுத்தில் எழுத முடியாது....
என்னதான் வாழ்வில் பெரிய ஆட்டம் போட்டாலும் இறந்த பின்பு செல்லாக்காசு என்பதை அங்கே நடந்த நிகழ்வுகள் தெரியபடுத்தின....
கிளிக் கிளிக், கிளிக், குடலை துப்பாக்கி துளைத்த இடத்தை தனியாக எடுத்து அம்புகுறி போல காகித்தில் செய்து அதன் சிறு விபரங்கள் எழுதி அதன் பக்கத்தில் வைத்து ........கிளிக் கிளிக்....
இளம் பெண் டாக்டர்கள் சீப் டாக்டர் சொல்ல சொல்ல குறிப்பு எடுத்துக்கொண்டு இருந்தார்கள். போலிஸ் போட்டோகிராபரும் விடாமல் போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தார்கள்..
சுனாமியால் அரசு மருத்துவமனைகளில் மார்சுவரி நிரம்பி கிடக்க என்கவுண்டர் செய்யபட்ட ரவுடி உடலை போஸ்ட்மார்டம் செய்ய மருத்துவமைனையில் இடம் இல்லாத காரணத்தால் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற உடனே போஸ்ட்மார்டம் செய்து ரவுடியின் உறவுக்கு உடலை கொடுக்கவேண்டிய கட்டாயத்தால் தனியார் மருத்துவமனை உதவியை அரசு நாடியது...அவர்கள் முதலில் மறுத்தாலும் மேலிடத்து உத்தரவு வந்த பிறகு ஒத்துக்கொண்டார்கள்..
இரண்டு மணி நேரத்துக்கு மேல் போஸ்ட்மார்டம் நடந்தது.. உடனே பிரின்ட் போட்டு பிரின்ட் ,நெகட்டிவ் வீடியோ டேப் ரெண்டையும் மருத்தவமனை நிர்வாகம் அவர்கள் ஆவனத்துக்கு வாங்கி வைத்துக்கொண்டது...
மிக சிறப்பாக போட்டோக்கள் வந்து இருப்பதாக சொன்னார்கள்.. எனக்கு எப்போதும் டிக் டிக் படத்தில் கமல் கிளிக்குவது போல கேமரா கைகளுக்கு வந்ததுமே கிளிக் கிளிக்தான்...
ஒரு போட்டோகிராபராக எத்தனையோ புகைபடங்கள் எடுத்தாலும் சுனாமிக்கு மறுநாள் மாலையில் எடுத்த அந்த போட்டோக்களை என் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாது..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
அருமை ஜாக்கி போடோ வையும் போட்டு இருக்கலாம்
ReplyDeleteஇல்லை நண்பரே அந்த புகைபடங்கள் மிக கொடுரமானவை.. அந்த புகைபடங்கள் அப்போதே எல்லவற்றையும் கொடுத்து விட்டேன்..
ReplyDelete/எதையும் பார்த்து விடலாம் என்று ஒரு மனதும் எப்படி சமாளிக்க போகின்றாய் என்று இன்னோரு மனதும் கேள்வி கேட்க பார்த்துடலாம் என்று தைரியமானேன்..., Nannu appdithan ! ethai padithan sekar Sir .
ReplyDeleteதிகில் பட எபக்ட் பாஸ்
ReplyDeleteயப்பா
ReplyDeleteமச்சி நீ எமத காதகன் தான் கண்ணு.
ReplyDeleteரொம்ப த்ரில்லிங்க நடந்தத சொல்லிட்டே.!
இது கிண்டல் இல்லை. இது போன்ற நிகழ்வுக்கெல்லாம் மன திண்மையும், உறுதியும் வேண்டும்.
அது உன்னிடம்தான் நிறைய இருக்கே!
Very Interesting...
ReplyDeleteManasu valikkirathu... padangalai ethavathu oru padam irunthu inaiththirunthal innum sirappaga irunthirukkum.
ReplyDeleteகடேசில கொலக் கேஸ் தானா மாட்டிச்சு?சுனாமி போட்டோ நினைவுக்காகவாவது, வேறு யாரோ எடுத்ததயாச்சும் போட்டிருக்கலாமே?
ReplyDeletepadikkum bothey bayamma irukku, neenga eppadithaan manage pannuneengalo...
ReplyDeleteActually this article is so interesting. ellarukum pothuva nadantha visayam apdiye oru 24 hrs illa max one week irukum.. neenga 6 yrs aanapram kooda ivlo gnbagama solreenga.. unmaya sollunga ithellam apdi nadathathu thaana?? thrillinga irukatumennu konjam masala add pannalaye, Just kidding :)
ReplyDeleteதல நான் கூட சுனாமிக்கு மறுநாள் எடுத்த போட்டோன்னு எழுதனவுடனே, சரி, நாம தான் டிவி.யிலயும் நியுஸ் பேப்பர்லையும் பாத்தோமேன்னு நினைச்சுக்கிட்டு உள்ளே வந்தா? பயம் காட்டிட்டீங்க. உணமையிலேயே போட்டோவை போட்டுடீங்கன்னு தேடுன, ஆனால் கிடைக்கல.
ReplyDeleteஅருமையான பதிவு. மனிதனின் இறுதி நிலையை இந்த பதிவு உணர்த்துகிறது.
படிக்க படிக்க சொவரசியமாக இருந்தது. அயய்யோ, அடுத்து படம் வரபோவுது என்று மெதுவாக scroll பண்ணி கிழே வந்தா நிம்மதி பெருமூச்சி. நல்ல வேலை படங்கள் இல்லை.
ReplyDeleteஎந்த டேப்பையும்...டிவிடியாக மாற்றிதருகின்றோம்.
ReplyDeleteபாஸ் inch டேப்பை மாற்றிதருவிங்க்ள?
andha vazhkai thathuvam super.
ReplyDeletewish you a happy prosperous 2011.
Thala,
ReplyDeleteneenga solra vidam than enakku pidichirkku.
kaiyalleam nadunga arampichurichu....
சுனாமி படங்கள் போடப் போகிறீர்கள் என்று கொஞ்சம் எதிர்ப்பார்ப்போடு வந்தேன். ஆனாலும் சொன்ன செய்தி சுவரசியமாக இருந்தது
ReplyDelete// நான் பிலிம் லோட் பண்ண நேரம் சுனாமி வராமல் பயந்து போய்விட்டது. //
ReplyDeleteஒ... மற்றொரு சுனாமியில் இருந்து சென்னையை காப்பாற்றியது நீங்கள்தானா...
பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..
ReplyDeleteஇது பில்டடப்புக்கு எதையும் சேர்த்து எழுதவில்லை... அங்கு நடந்தவிஷயங்களை அப்படியே எழுதி இருக்கின்றேன்...
போஸ்ட்மார்டத்தை போட்டோ எடுக்க போகின்றேன் என்று அந்த அறைக்கு போகும் வரை எனக்கு தெரியாது....
பட் எழுதும் போது அப்படியே சுவாரஸ்யமாக எழுதி இருக்கின்றேன்..
தொடர்ந்து வாசித்தும் பின்னுட்டம் இட்டும ஓட்டு போடும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்..
உங்கள் அனுபவத்தை அழகாக தந்துள்ளீர்கள்.
ReplyDeletesajahan , srilanka
Unexpectable post. .
ReplyDelete