நடு ரோட்டில் நிறுத்தும் மாநகர பேருந்தும், நடு ரோட்டில் நிற்கும் பொதுமக்களும்.

சென்னையில் பல காரணங்களை டிராபிக்கு சொன்னாலும் ஷேர் ஆட்டோ மீது பெரும்பாலானவர்கள் பழி போட்டு தப்பி விடுகின்றார்கள்..
ஆனால் அவர்கள் மட்டும் காரணம் அல்ல...


உலகத்திலேயே பேருந்தினை எத்தனை பெரிய டிராபிக்காக இருந்தாலும் நடு ரோட்டில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கும்  பேருந்து ஓட்டுனர்கள்... நமது அரசு பேருந்து ஓட்டுனர்கள்தான்... அவர்களை  யாரும் கேட்க முடியாது.. ஏனென்றால் அவர்களுக்கு சங்கம் இருக்கின்றது.
மேல இருக்கும் படம் நம்ம மனப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் எடுத்தது மியோட் மருத்துவமணை எதிரில்... பாருங்கள் பொது மக்கள் நிழற்குடையில்தான் இருந்தார்கள்... படத்தில் பேருந்துக்கு ஒதுக்கபட்ட மஞ்சள் கோட்டை மதிக்காமல் அதையும் தள்ளி சாலையில் நிற்பதை பாருங்கள்.


எவ்வளவு  சின்ன சாலையாக இருந்தாலும், எப்படி பட்ட போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் பேருந்தை நடுரோட்டில்தான் நிறுத்துவார்கள்.. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்  ஒரு  பத்து செகன்ட் கூட ஆகாது என்பதுதான்.. ஆனால் நமது சென்னையை பொறுத்தவரை தொடர்ந்து போக்குவரத்து இயங்கி கொண்டே இருந்தால்தான் போக்குவரத்து சுமுகமாக நடக்கும் ஒரு செகன்ட் என்பது பல வாகனங்களை நிறுத்தி வைக்கும். அது மிகப்பெயை போக்குவரத்து தடைக்கு வழிவகுக்கும்.

 
(மேலே உள்ள போட்டோவில் கூட மஞ்சள் கோட்டில் நிறத்தாமல் பேருந்து  ரோட்டின் நடுவில் நிறுத்தபட்ட இருப்பதை காணலாம்.)


அரசு எவ்வளவு பெரிய பேருந்து நிலையத்தை பேருந்துக்கு ஒதுக்கினாலும் பொதுமக்களுக்கு  எவ்வளவு பெரிய பேருந்து நிறுத்தம் கட்டி கொடுத்தாலும் அந்த பேருந்து நிறுத்தத்துக்குள் நின்று பேருந்து ஏறியதாக சரித்திரமே இல்லைஎன்பேன்..
பேருந்து வருகின்றதோ இல்லையோ பேருந்து நிறுத்தத்தை விட்டு இறங்கி பத்தடி முன்னே சென்று  பேருந்து வருகின்றதா? இல்லையா ?என்று எட்டி எட்டி பார்த்து பேருந்து ஏறினால்தான் அவர்களுக்கு பரம திருப்தி.பேருந்து நிறுத்தத்தில் இருந்து பார்த்தாலும் பேருந்து வருவது தெரியத்தான் போகின்றது..எப்படி இருந்தாலும் கூட்டத்தில் முண்டியடித்து ஏறித்தான் ஆக வேண்டும்.. நான் கேட்பது என்னவென்றால் பத்தடிக்கு முன்னே போய் ஏறுகின்றாய்  அல்லவா?? அதை ஏன் பின்னால் வந்து ஏறிதொலைக்கலாமே என்பதே என் கேள்வி...மேலே உள்ள இந்த படம் வடபழனி சிவன் கோவில் பேருந்து நிறுத்தத்துக்கு எதிரில் எடுத்த படம்  பேருந்து நிறுத்தம் அந்த மரத்துக்கு கீழ் இருக்கின்றது இரண்டு பேருந்து நிறுத்தும் அளவுக்கு இடத்தை விட்டு நடு ரோட்டில் பேருந்து நிற்பதை பாருங்கள்..

இந்த பொதுமக்கள் தவறில் எல்லோருக்கும் பங்கு  இருக்கின்றது .. நீங்க ,நான் என எல்லோரும் இந்த தப்பை செஞ்சி இருக்கோம். மழை பெய்தால் மட்டுமே பேருந்து நிழற்கூடையின் கீழ் நிற்பார்கள். மற்றபடி நிறுத்தத்துக்கு வெளியேதான்...


மேல இருக்கும் இந்த போட்டோ கிண்டி ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தில் எடுத்தது. பாருங்க பேருந்து நிழற்கூடை எங்க இருக்கு?? நம்ம மக்கள் எவ்வளவு தள்ளி போய் நிக்கறாங்க.. இதுக்கு மேல் பேருந்து பாருங்க நடு ரோட்டுல போய் நிற்க்குது இத்தனைக்கு அந்த இடம் வளைவு வேற... வேகமா வரும் வாகனங்கள் தினரும் இடங்கள்.  இத்தனைக்கு காலையில் ஒரு 8 மணிக்கு எடுத்த போட்டோ இன்னும் ஒரு மணி நேரத்தில் பீக் ஹவரில் இதே போல் நடு ரோட்டில் பொதுமக்கள் நின்றால்? பேருந்தையும் நடு ரோட்டில் பயணிகள் நிறத்தி ஏற்றினால் ஏன் டிராபிக் ஏற்படாது...????


பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தினால் பொதுமக்களும்  சரியாக ஏறுவார்கள்.. நடு ரோட்டில் பேருந்தை நிறுத்தினால் பொதமக்களும் பஸ் ஸ்டாப்புக்கு வெளியேதான் நிற்பார்கள். சரி இதை போக்குவரத்து காவல் துறை சரி படுத்தலாம்.. ஒரு நாளு வாட்டி நோட்டிஸ் கொடுத்து பயத்தை டிரைவர்களுக்கு ஏற்படுத்தினால் அவர்களம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துவார்கள்... பேருந்து அதன் நிறுத்தத்தில் நிறுத்தினாலே பொதுமக்கள் பேருந்து நிழற்கூடையில் ஏறி நிற்ப்பார்கள்.....


பொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள என இரண்டு பக்கமும் தவறு இருக்கின்றது... இதனை பொதுமக்களுக்கு புரியும் வகையில் எடுத்து செல்லவேண்டும்.பேருந்து ஓட்டுனர்களும் தங்கள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும்...  

நான் எடுத்த புகைபடங்கள் எல்லாமே காலை எட்டுமணிக்குள் எடுக்கபட்ட புகைபடங்கள். பீக் அவரில் எடுத்து இருந்தால் நடு ரோட்டில் நிறுத்தியதால் ஏற்பட்ட டிராபிக் ஜாமை பார்க்கலாம்....


அடுத்த பதிவில் நடு ரோட்டில் நிறுத்தும் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் பற்றி புகைபடங்களுடன்  எழுதுகின்றேன்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட  மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில்  விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

18 comments:

 1. தீர்வும் நன்றாக உள்ளது

  ReplyDelete
 2. ஃஃஃஃஏனென்றால் அவர்களுக்கு சங்கம் இருக்கின்றது.ஃஃஃஃ

  அது இருப்பதால் தானே துள்ளுறாங்கள்...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  எனைக் கவர்ந்த கமல் படம் 10

  ReplyDelete
 3. மனிதனை மனிதனாகவே மதிக்காத தனி குணம் சென்னையில் மட்டுமே உண்டு. நான் பார்த்தவரை எங்குமே இந்த அளவு அநியாயத்தை பார்த்ததில்லை! Chennai is absolutely unlivable!

  ReplyDelete
 4. கண்டிப்பா இத சரி செய்ய ஒரு வழி செய்யனும்... இதுக்கு மஞ்ச கோடு போடாம அந்த செக் போஸ்டோ என்னமோ சொல்லுவாங்களே நடுரோட்ட்ல கூட இருக்குமே அத வருசலா வச்சா இதுக்குள்ள தான் வரணும்னு சொல்லிட்டா கேட்டு தானே ஆகணும்.. நடுவுல தடுப்பு இருக்குறதால அதுகப்பரம் நடுரோட்ல நிறுத்தினா கூட நிறைய பேர் சண்டைக்கு போவாங்க.. இல்ல இந்த தடுப்பு இருக்குறதாலயே ட்ராஃபிக் அதிகமாகும்னு நினச்சீங்கன்னா, அதுக்கு வாய்ப்பு குறைவே..

  அன்புடன்,
  தம்பி கூர்மதியன்

  ReplyDelete
 5. யாராவது ஏதாவது போக்குவரத்து ஊழியர்களிடம் சொல்லிவிட்டால் அப்படியே சாலையை மறித்து போராட்டம் நடத்தும் அதிகாரத்தை யார் இவர்களுக்கு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இது பள்ளிக் குழந்தைகளை கடத்துபவர்களை காட்டிலும் வண்மையாக கண்டிக்கதக்கது. ஆனால் நமது நாட்டில்தான் சின்ன தவறுக்கு பெரிய்ய தண்டனையும் பெரிய தவறுக்கு தண்டனை இல்லாமையும்மாக ஆகிப் போசே இவர்களை பின்பற்றும் ஷெர் ஆட்டோகாரன் அடாவடியை சமாதானமாக எடுத்துக் கொள்ள முடியாது. இவனுங்கள் சிக்னலை அடுத்து அப்படியே நடு சாலையில் நிறுத்தி ஆட்களை இறக்கி ஏற்றுவானுங்க. இவர்களைக் கூட நமது போலிஸ் தட்டிக் கேட்க வக்கில்லாமல்தான் இருக்கிறது. எல்லாம் அவர்களிடம் இவர்கள் வாங்கும் பிச்சை பத்தும் இருவதுக்கும்தான். எனக்கு தெரிந்து இந்த இந்திய நாட்டில் மட்டும்தான் இதை போன்ற சட்ட மீறல்கள் அதிகமாக தென்படுகிறது. நாமும் இப்படியே விரைவில் வல்லரசாகிவிடுவோம்.

  ReplyDelete
 6. மீண்டும் ஒரு பயனுள்ள பதிவு.

  இதில் பள்ளி செல்லும் சின்னஞ்சிறு மாணவ மாணவர்களின் நிலையை நினைத்தால் பயமாக இருக்கிறது .

  நன்றி

  ஆனந்த்
  பமாகோ, மாலி

  ReplyDelete
 7. சமூக அக்கறையுள்ள பதிவு, வெல்டன் ...

  ReplyDelete
 8. இவனுங்களஎல்லாம் திருத்தவே முடியாது. ஒரு போலீஸ கூட கேள்வி கேக்க முடியும். உயர் அதிகாரிகளுக்கு பயப்படுவார்கள். ஆனா இவங்களை எதாவது கேள்வி கேட்டா உன்னால முடிஞ்சத பாரும்பாங்க. இல்லனா ரோட்டிலேயே ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க. ட்ராபிக் ஜாம ஆகும். டியர் ஜாக்கி நானும் உங்களை போலத்தான். "நெஞ்சு பொறுக்குதில்லையே." ஆனா என்ன பண்ண? ஒவ்வொரு முறை மாநகர பேருந்தில் பயணம் செய்யும் போதும் இதையெல்லாம் பாத்து நொந்து போய்தான் இறங்குவேன். நல்லவேளை, பைக் இருப்பதால் தப்பிக்கிறேன். ஜாக்கி சார்... இதையெல்லாம் தட்டி கேட்க்க நானும் உங்களுடன் வர்றேன்.. என்ன பண்ணலாம்..?

  ReplyDelete
 9. முதல் முறையாக வந்துள்ளேன். தங்களுக்கு சினிமாவில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்க முதலில் வாழ்த்துகிறேன். இயல்பான பதிவு.. உண்மை.. நெரிசலில் மாட்டிய அனுபம பேசுகிறது பட்த்துடன்?

  ReplyDelete
 10. சங்கம் வைத்து தமிழ் வள்ர்த்தோம் முன்பு..இப்போ சங்கம் வைத்து திமிர் வளர்க்கிறோம்..நல்ல பதிவு.


  ---செங்கோவி
  ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்

  ReplyDelete
 11. ம்ம்ம்... எழுதியிருக்கும் சீரியசான மேட்டரை விட உங்களுடைய புகைப்படக்கலை அதிகம் ரசிக்க வைத்தது...

  ReplyDelete
 12. சங்கம் வைத்து தமிழ் வள்ர்த்தோம் முன்பு..இப்போ சங்கம் வைத்து திமிர் வளர்க்கிறோம்// :)

  ReplyDelete
 13. ஜாக்கி அண்ணா, மியாட் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தை அன்றாடம் கடந்து செல்பவன் நான். அவ்வழியே காஞ்சிபுரம் நோக்கி செல்லும் கட்சி பிரமுகர்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நந்தம்பாக்கம் நிழற்குடையை தவிர மற்றவை எல்லாம் வசதியாக இல்லை. ஆட்டோ, ஷேர் ஆட்டோ பதிவிற்கு காத்திருக்கிறேன். பேருந்து பற்றி சில மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய பதிவு http://madrasbhavan.blogspot.com/2010/10/blog-post_30.html. நேரம்/விருப்பம் இருப்பின் படிக்கவும்.

  ReplyDelete
 14. ஓட்டுனர்களை சொல்லி குற்றம் இல்லை... மக்கள், நிறுத்தும் இடத்தை மறைதற்போல் வந்து நின்றால் பேருந்து ஓட்டுனர் என்ன செய்வார் பாவம்... பயணிகள் மேல் பேருந்தை ஏற்ற முடியுமா? தள்ளி தான் நிறுத்த வேண்டும்!!

  ReplyDelete
 15. பயனுள்ள பதிவு நன்றி
  இவன்
  http://tamilcinemablog.com/

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner