சென்னை மெரினாவுக்கு அடுத்து தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரியகடற்கரை, எங்கள் கடலூர் சில்வர் பீச்சில் கோடை விழா...என் சொந்த ஊர் கடலூரில் மே மாதம் தோறும் நெய்தல் கொண்டாட்டம் என்ற பெயரில் கோடை விழா நடப்பதுண்டு. இப்போது கூட 28 லிருந்து ஜுன் 1 ம் தேதி வரை நடக்கிறது . தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை மெரினாவுக்கு ,அடுத்து எங்கள் கடலூர் சில்வர் பீச் தான். கடலூர் வாசிகளின் செலவில்லாது பொழுது போக்குதலம் எங்கள் சில்வர் பீச். தினமும் மாலையில் நிறைய போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். தினமும் நிறையகூட்டம் வருகிறது. நிறைய குழந்தைகள் சுட்டி டீவி , ஜெட்டக்ஸ் , போகோ போன்ற சேனல்களை தியாகம் செய்து வெளி மனிதர்களை சந்திப்பதும் அவர்களோடு பழகுவது போன்ற செயல்கள் அதிகரிக்க இது போன்ற விழாக்கள்தான் காரணம் என்பேன்.தினமும் நிறைய கூட்டம் வருவதால் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுக்ள் மிக சிறப்பாக உள்ளன. போக்குவரத்துதுறையும் நெரிசல் இல்லாத அளவுக்கு போக்குவரத்துவசதிகள் பொதுமக்களுக்கு செய்து கொடுத்துள்ளன. நேரம் இருந்தால் சில்வர் பீச் போய் பார்த்துவிட்டு வாருங்கள்.

கருத்து / புகைபடம் .. ஜாக்கிசேகர்

கற்றது தமி்ழ் ராமின் புதிய வலைப்பதிவு


நேற்று தான் ஒரு சுபயோக சுப நேரத்தில் திரு ராம் அவர்கள் புதிய வலைபதிவை துவக்கினார் . நான் நம் சக வலைபதிவர் வாயிலாக அவரை வரவேற்க்கிறேன் அவரது எழுத்தை சுவைக்க விரும்புவோர் கீழுள்ள வலை தளத்தை தொடர்பு கொள்ளவும்

http://directorram.blogspot.com/அன்புடன் / ஜாக்கிசேகர்

சூர்யா, ஜோதிகா, விஜய், மாதவன் ஆகியோருக்கு என் நன்றிகள்

கமலுக்க அடுத்த படியாக பொதுமக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் விளம்பர படங்களில் நடித்தவர் சூர்யா. அவர் காசநோய் விளம்பரபடங்களில் நடித்தார். அது பொது மக்களிடம் பெரும்பான்மையான மக்களின் வரவேற்ப்பும் ,சமுக ஆர்வலர்களின் ஏகோபித்த வரவேற்ப்பும் பெற்றது. அதே போல், கமல் எவரும் நடிக்க துணியாத எயிட்ஸ் விளம்பர படத்தில் நடித்தார் . அதன்பிறகு மாதவன் ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்கள் போன்ற ரேடியோ விளம்பரங்களில் வந்தார் . அந்த வரிசையில் இப்போது வாய் திறந்து அதிர்ந்து பேசாத விஜய் கூட பொது பிரச்சனைக்கு குரல் கொடுத்து இருப்பது வரவேற்க்க தகுந்த ஒன்று. விளம்பரபடத்தின் நோக்கம் , குழந்தை தொழிளாளர் ஒழிப்பு , பெண் கல்வி அவசியத்தையும் வலியுறுத்துவதாக இருந்தது. இந்த நான்கு நடிகர்களும் அவர்கள் வேலையை ஒதுக்கி பொது பிரச்சனைக்கு ஒன்றுசேர்ந்ததற்க்கு என் நன்றிகள். அதுமட்டும் அல்லாது திருமண்த்திற்க்கு பின் நடிக்க மறுத்த தன் மனைவியை இந்த விழிப்புனர்வு படத்தில் தன் மனைவியை நடிக்க வைத்த சூர்யா, மற்றும் ஜோதிகா இருவரின் பெருந்தன்மைக்கு என் நன்றிகள். தமிழகத்தில் எதாவது ஒரு பெற்றோராவது ,தன் பெண் குழந்தைக்கு நல்ல கல்வியும் , தன் ஆண் பிள்ளையை வேலைக்கு அனுப்பாமல் இருக்க இந்த விளம்பர படம் நிச்சயம் உதவும்என்பது என் எண்ணம். சமுகத்துக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற இந்த நடிகர்களின் முயற்ச்சிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

“எதையம் செய்யாமல் இருப்பதை விட எதையாவது செய்வது நன்று”

அன்புடன் / ஜாக்கி சேகர்

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை போக்குவரத்து போலீஸ் மற்றும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் ஒரு வேண்டுகோள்...


சேலம் போய் வந்த பதிவை நான் இங்கு ஏற்கனவே எழுதியிருந்தேன். ஆனால் நாங்க நடுத்தெரு நாரயணனாக நின்ற கதை உங்களுக்கு தெரியுமா? தென்மாவட்ட தமிழர்கள் அனைவரும் அறிந்த கொடுமைதான் அது. அதாவது ஊளுந்தூர்பேட்டை ,விழுப்புரம் இடையே கடப்பது என்பது ஏழுமலை , ஏழுகடல் தான்டி செல்வது போன்ற மயிர்கூச்செரியும் சாகசபயணம்தான் அது. பொதுவாக உளுந்தூர்பேட்டை ரயில்வே கேட் போட்டுவிட்டால், அன்று சனிஸ்வரபகவான் நம் கூடவே வெகுதூரம் பயணிக்க போகிறார் எ ன்று பொருள். அந்த கேட் போட்டு விட்டால் சரியாக இரண்டு மணிநேரம் நம்ம பொன்னான நேரம் கோவிந்தாதான். அதன் பிறகு கேட் திறந்தாலூம் நம் டிரைவருங்க அவங்க பாதையில போகாம எதிர் திசையில் போய் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு குடைச்சல் கொடுப்பார்கள்.சரியான திசையில் வரும் எதிரில் வந்து நந்தி போல் வரும் டிரைவர் அம்மாவைஇவர் தேவிடியா ஆக்குவார், உடனே இவர் அவர் அம்மா பிறப்புறுப்பை சந்தேக பட அவ்வளவுதான் ரோட்டில் கட்டி புரண்டு சண்டை இதனால் பல மணிநேரம் டிராபிக். தினமும் தேசிய நெடுஞ்
சாலையில் பல லட்சக்கணக்கான வாகனங்களில் மக்கள், தென்மாவட்டத்தில் இருந்து தினமும் வருகிறார்கள். அவரவருக்கு தலைநகரத்தில்பல வேலைகள்.இரவில் தூங்கி விடியலில் சென்னையில் இறங்கி காலை கடன் முடித்து , வந்த வேலை முடித்து இரவு தென் மாவட்ட பஸ் ஏற வேண்டும் . ஆனால் நடுவில் ஏற்படும் இந்த டிராபிக் இடைஞ்சலால் எல்லாம் கொலாப்ஸ் ஆகிறது . பேருந்து டிராபிக்கில்இருப்பது இரவு நேர பயணிக்கு தெரிவதில்லை நன்றாக தூங்குவதால் இந்த களேபரம் நடப்பது தெரியாமல், விடியலில் எழுந்து இன்னும் மதுராந்தகத்தில் பேருந்துபோகும் போது பயணி ‘‘மாட்டு வண்டி ஓட்றவனெல்லாம் டிரைவர் ஆயிட்டான்” என்று சலித்துகொள்கிறார்கள். இப்போது சாலை அகலப்படுத்தும் வேலை நடப்பதால் இன்னும் டிராபிக் அதிகம் இருக்கிறது. நாங்கள் சேலத்தில் இருந்து திரும்பி வரும் போது முன்று மணிநேரம் நடுரோட்டில் உட்கார்ந்து இருந்தோம். பல பயணிகள் நடு ரோட்டில் துண்டு விரித்து படுத்து விட்டார்கள். எதிர் திசையில் இருந்து வாகனம் வந்தால்தானே டிராபிக் கிளியர் ஆகும். சரி போக்கு வரத்து போலிஸார் என்ன செய்தார்கள் ? எவருமே இல்லை. நானும் நண்பர் அருனும் சென்று சில கிலோமீட்டர் நடந்து சென்று ஓரளவு டிராபிக் கிளியர் செய்தோம் .சென்னையில் டிராபிக் ரூல்ஸ் மீறியவர்களிடம் போலிஸார் வசூலித்த தொகை மட்டும் நாலு கோடிரூபாய் . எவனாவது அவசரத்துக்கு, அம்மா இருமலுக்கு விக்ஸ் மிட்டாய் வாங்க வந்தவனை ஹெல்மட் போடவில்லை என மிரட்டி பணம் பறிக்கதான் லாயக்கு. போலிஸ் பேட்ரோல் குவாலி்ஸ் கார்கள் அரசு வாங்கி கொடுத்து இருக்கிறது. 100 ஏசி ஹோன்டா சிட்டி கார்கள் சென்னையில் இருக்கிறது ஆனால் எங்காவது டிராபிக் என்றால் ஒருகார் கூட வந்து கிளியர் செய்யாது என்பது தான், நிதர்சன உண்மை . இதனால் உண்மையாய் உழைக்கும் போலிஸார் கூட பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகின்றனர். நெடுஞ்சாலை போலிஸார் நன்றாக பிரியானி சாப்பிட்டுவிட்டு சட்டையை அவுத்து போட்டுட்டு கை வச்ச பனியனோட புளியமரத்து நிழலில் தூங்குவதோடு சரி. அல்லது நீரோத் வாங்கியது போக மிச்சம் வைத்து இருக்கும் டிரைவர் படியை லாரி டிரைவர்களிடம் இருந்து ஓவர் லோடு என மிரட்டி லஞ்சம் வாங்கி பாக்கட் நிறப்புவதோடு சரி. திருச்சி, கள்ளகுறிச்சி, மதுரை போன்ற பக்கம் இருக்கும் பொது ஜனங்கள் உஙக்ள் சொந்தகாரர் யாரவது மருத்துவமனையில் இருந்து அவசரமாக மேல் சிகிச்சைக்கு சென்னை செல்ல வேண்டும் என்று சொன்னால் செலவு செய்து சென்னை வர வேண்டாம் , டிராபிக்கில் வந்து செத்துபோறதுக்கு அங்கேயே கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு இருங்க. ஆம்புலன்ஸ் செலவாவது மிச்சம் ஆகும். பொதுவாய் பயணம் செய்யும் டிரைவர்கள எதிர் பக்கம் செல்லாமல் இருந்தாலே டிராபிக் குறைந்து விடும் . அனால் நம்மால் அது போல் ஒழுக்கமாக வாகனம் ஓட்ட முடியாது ஏனென்றால் நாம் பச்சை தமிழர்கள் அல்லவா? நெடுஞ்சாலையில்ரூல்ஸ் மீறும் வாகனங்களிடம் வசூலிக்கும் தொகை நெடுஞ்சாலை போக்குவரத்து போலிஸார் எடுத்து கொள்ளட்டும் என்று ஒரு சட்டம் தமிழக அரசு கொண்டு வரட்டும். அப்புறம் பாருங்கள் டிராபிக்கே இருக்காது. போலிஸாரும் தவறு செய்யும் வாகனங்களை கண்ணில் விளக்கு எண்ணை ஊற்றி பார்பார்கள்.. சாலை அகலப்படுத்தும் பணி முடிந்தால் ஓரளவு டிராபிக் குறைவு சாத்தியம் அதுவரை ??????


அன்புடன் / கருத்து+ புகைபடம் ••• ஜாக்கிசேகர்

சேலம் கந்தாஸ்ரமம் ஒரு விஷிவல் டேஸ்ட்....
சேலம் 636140.உடையார்பட்டி கந்தாஸ்ரமம் - ஒரு பயண கட்டுரை...


என்னோடு பணிபுரியும் நாகலட்சுமி அவர்களின் இரு பெண்களின் நாட்டிய அரங்கேற்றம் ,சேலம் கந்தாஸ்ரம வளாகத்தில்18/05/08 அன்று வைத்து இருந்தார்கள் .என்னை சலனப்டம் மற்றும் நிழற்படம் எடுக்க பணித்தார்கள். இரவு பதினொன்றை மணியளவில் அவரின் உறவினர் மற்றும் நண்பர்களோடு நானுமாய், ஒரு மினி பேருந்தில் பயணம் செய்தோம்.நான் ஜன்னல் ஓரம் வெப்பகாற்றை அனுபவித்தபடி பயணம் செய்தேன். உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் எதிரில் டீ சாப்பிட்டோம். டீநன்றாக இருந்தது. உள்நாக்கில் டீசுவையோடு தூங்கிப்போனேன். கழுத்து வியற்வை பிசுபிசுக்க எழுந்தபோது வண்டி ஆத்தூரில் நி்ன்று இருந்தது.முகம் கழுவி டிரைவர் சீட் அருகே உட்கார்ந்துகொன்டேன். விபத்துக்கள் எல்லாம் விடியற்காலை மூன்று மணியில் இருந்து ஆறு மணிக்குள் நடப்பதால் டிரைவரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்தேன். நிறைய முறை இதே வழியில் பயணம் செய்து இருக்கிறேன். அப்போதெல்லாம் ,பொட்டல் காடாக இருந்த இடங்கள் எல்லாம், பொறியியல் கல்லூரிகளாக மாறி விட்டன. எல்லா காசு வச்சிருக்கற புண்ணியவானும் ,தமிழ்நாட்டில் கல்வி கண்ணை திறக்க அரும்பாடுபடுவது சாலையோர பொட்டல் காடுகளில் உள்ள கான்கிரிட் கட்டிடங்கள் சொல்லாமல் சொல்லுகின்றன. அதே போல் ஏதோ ஒரு எழை விவசாய தகப்பனின் , இரத்த வியற்வை நியான் விளக்காய் பொறியியல் கல்லூரி வாசல்களில் மின்னுகின்றன. நாங்கள் விடியலில் சேலம் சேர்ந்தோம். எங்கு தேடியும் தங்கும் அறை கிடைக்கவில்லை. காரணம் , மந்திரி விரபாண்டியார் பேத்தி திருமணம் அதே நாளில் நடக்கிறது என்பதால் கழக உடன்பிறப்புகள் தங்கும் அறைகளில் (full ) ஆக இருந்தார்கள். சேலம் ஜெயா திரைஅரங்கு அருகில் உள்ள லாட்ஜில் தங்கி குளித்து முடித்து கந்தாஸ்ரமம் கோவில் சென்றோம் . சிறு குன்று மேல் அமைந்த கோவில். மிக அற்புதமான இயற்கை அழகு கொஞ்சம் இடம். மிகப்பெரிய கோவில் வளாகம். அழகான சிற்பங்கள் , என என் மனதை மயக்கின எனலாம். இங்கு நிறைய சுவாமிகள் , சாதுக்கள் இருக்கிறார்கள். கோவில் வரும் அனைத்த பக்தகோடிகளுக்கும் சுவையான உணவு கொடுக்கிறார்கள். எல்லா கிரகங்களும் மனைவியுடன் இருக்கின்றன. என் கடவுள் நம்பிக்கை என்பது கொஞ்சம் வித்யாசமானது. அது வேறு ஒரு பதிவில். எல்லா விக்கரங்களும் மிக அழகாக இருந்தன , முருகன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பிரமாதமாக இருந்தார். காவில் பக்கத்தில் ஒரு ஓடை ஓடுகிறது. கோடை என்பதால் அதில் நீர் இல்லை . சேலத்தில் இருந்து பேருந்து மூலம் உடையார்பட்டி வந்து பிறகு ஆட்டோ மூலம் செல்லலாம் சேலத்தில் இருந்து சில கிலோமீட்டர்தான். பரதநாட்டிய அரங்கேற்றம் இனிதே நடந்தது.இரவு நேரத்தில் கோவில் போகஸ் விளக்கு வெளிச்சத்தி ல் மிக அழகாக இருந்தது. இரவு பத்து மணியளவில் சென்னை கிளம்பினோம். நீங்களும் ஒருமுறை இயற்கை எழில் கொஞ்சும் சேலம் கந்தாஸ்ரமம் சென்று வாருங்கள்

கருத்து /புகைப்படம் .. அன்புடன் / ஜாக்கிசேகர்

திருவண்ணமலையும் ,கிரி வல பாதையும்...


நண்பரின் திருமணத்திற்க்காக நேற்று திருவண்ணமலை செல்ல நேர்ந்தது, திருவண்ணாமலைக்கும் எனக்கும் பெரிய தொடர்புகள் ஏதும் இல்லை. ஒரு ஆவணப்படம் எடுக்கவும், இரண்டு முறை திருமணத்திற்க்கும் சென்று உள்ளேன். பிதாமகன் படம் ரீலீஸ் ஆனபோது போது படத்தை பற்றி மக்கள் கருத்தை அறிய வடமாவட்ட தியேட்டர்களுக்கு செல்லும் போது திருவண்ணமலை சென்று உள்ளேன். என்னை நிறைய நண்பர்கள் கிரிவலபாதைக்கு அழைத்த போது ,என்னால் மலை சுற்றுவதற்க்கு உடன் பாடு இல்லை. தாம்பரத்தில் எனது சொந்த ஊர் கடலூருக்கு செல்ல பேருந்துக்கு காத்து இருக்கும் போது தொடர்ந்து திருவண்ணாமலை பேருந்துகள் வரும் போது வயிறு எறியும். மாலை 3 மணிவாக்கில் சில புகைபடங்கள் எடுக்க கிரிவலபாதைக்கு செல்ல நேர்ந்தது. நல்ல ரம்யமான சாலை பக்தர் இளைப்பார ஆங்காங்கே உட்பகார்வதற்க்கு, சிமெண்ட் கட்டை கட்டிஇருக்கிறார்கள். நிறைய உண்மை சாதுக்களும் நிறைய சோம்பேறி சாதுக்களும் சுற்றி திரிந்தவண்ணம் இருந்தார்கள்.எனக்கு பகலில் அந்த மலை சுற்றி பார்க்க ஆர்வாமாக இருந்தது. கிரிவலப்பாதையை பக்தர் போர்வை கழட்டி விட்டு மிக நிதானமாக அந்த மலை பகலில் சுற்றி வர ஆசை.இரவிலும் எப்படி இருக்கும் அங்கே மக்களின் பக்தி எந்தளவுக்கு இருக்கிறது என்பதை தெரிந்து வேறு ஒரு பதிவில் சிலாகிக்கிறேன். ஆனாலும் சில வருடங்களில் கிரிவலப்பதையை மட்டும் வைத்து திருவண்ணமாலை பெருவளர்ச்சி அடைந்து இருக்கிறது . எங்க கடலூரிலும் , பாடலிஸ்வரர் கோவிலும், திருஹிந்தபுரம் தேவநாத சவாமி கோயிலும் இருக்கு, எதாவது நம்பிக்கை வளர்த்து எங் ஊரையும் வளர்த்து விடுங்க அப்பு. சரி நானே நம்பிக்கை சேதி ஒன்னு சொல்றேன். எவங்கிட்ட பணம் கொடுத்து ஏமாந்தாலும் எங்க ஊர் கோவிலுக்கு வாங்க எல்லாம் நல்லதே நடக்கும் அதுமட்டும் அல்ல ஏமாந்த பணம் ரெண்டு மடங்காகிடைக்கும் .


அன்புடன் /ஜாக்கிசேகர்

காமராஜருக்கு அடுத்து எழை மாணவர்களின் கல்வி கண் திறந்த தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி


+2 பரிட்சையில் மாநிலத்தில் முதலாவதாக வந்த மாணவர்களின் மேற்படிப்பு செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற முத்தான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது ஒரு நல்ல தொடக்கம் என்பேன். நிறைய படிக்கும் மாணவர்களின் கணவுகள் பொருளாதார அரக்கனால் சிதைக்கப்படுகின்றன . அதே போல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் இனி வெரும் 50பைசா கல்வி கட்டணம் செலுத்தினால் போதும் என்ற அறிவிப்பு ,எழைகள் மனதில் பாலை வார்த்து இருக்கிறது . அதே போல் 5 வருடம் முதல்வராக இருந்த கருணாநிதி அப்போதெல்லாம் ஏதும் செய்யாமல், சாவும் போது ஏன் சங்கரா , சங்கரா என கத்த வேண்டும் . என, வரும் வாரத்தில் குமுதம் ஓ பக்கங்களில் ஞாநி அவர்கள் புலம்பாமல் இருக்க எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன். அன்புடன் / ஜாக்கிசேகர்

இயக்குநர் கற்றது தமிழ் ராமும் , நானும்...நல்ல நட்பு வட்டம் கிடைப்பது அரிது. ஆனால் ,கற்றது தமிழ் படம் வெளி வந்த பிறகு அந்த படத்தின் புகைபட கலைஞர் திரு . ராபர்ட் அவர்கள் எனக்கு ரொம்ப பழக்கம் படத்தில் கூட ,ரயில் டிக்கட் கவுன்டரில் கொலை ஆவது போல் நடித்து இருப்பார். அவரிடம் போன் நம்பர் வாங்கி திரு ராம் அவர்களுக்கு போன் செய்தேன் மிக மரியாதையாக பேசினார், நான் படத்தில் இருந்த காட்சிகள் பற்றியும் அந்த காட்சிகள் என்னை பாதித்த விஷயங்களை பகிர்ந்து கெண்டேன். உங்களுக்கு என்ன வயது என்றார் வயதை சொன்னேன், சார்லாம் போட்டு பேச வேண்டாம். ராம் என்றே அழையுங்கள் என்றார். அந்த அளவுக்கு பந்தா இல்லாத நபர் .அந்த நேரத்தில் பருத்திவீரன், மொழி,பொல்லாதவன், போன்ற படங்கள் வெளிவந்தன, நமக்கு சினிமாதான் வாழ்கை. நல்ல சினிமா எவர் எடுத்தாலும் அவர்களுக்கு வாழ்த்து சொல்வதும் அந்த படங்களின் சாதக பாதகங்களை இயக்குநர்களிடமே பேசுவேன்.ஏனெனில் நியாயமான விமர்சனங்களை எந்த படைப்பாளியும் புறந்தள்ளுவதில்லை. முக்கியமாக அமிர் மற்றும் வெற்றிமாறன் போன்றவர்கள் காது கொடுத்து கேட்டார்கள், முக்கியமாக அமிர் அவர்கள் நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டார், பிறகு ராமுடன் மட்டும் தொடர்பில் இருந்தேன். ராம் அவர்கள் ஒருநாள் போன் செய்து ஒரு நல்ல வீடு பார்த்து தர முடியுமா? என்றார் என் வீட்டு அருகில் வீடு பார்த்தேன்அந்த வீடு அவருக்கு நிறைவாக இல்லை. பிறகு என் சித்தப்பாவிடம் சொல்லி அவருக்கு பிடித்தமான வீடு பார்த்து கொடுத்தேன்.திடிர் என்று போன் செய்வர் ஃப்ரியா இருந்தா வீட்டுக்கு வாங்க , கொஞ்சம் பேசாலாம் என்பார். பேச ஆரம்பித்தால் அன்று சிவராத்திரிதான். பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் போவதே தெரியாது , நிறைய படிப்பாளி, நிறைய இலக்கியங்கள் விரல் நுனியில் அதனால், அவருடன் பேசுவதே ஆலாதி பிரியம் எனக்கு. பேசும் போது நிறைய விஷயங்கள் நான் கற்றுகொண்டு இருக்கிறேன். எந்த படமும் சினிமா இலக்கனம் இல்லாமல் எடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர். நல்ல பேச்சாளர் எங்காவது அவர் பேசினால் கேட்டுபாருங்கள், அப்போது நான் சொன்ன உண்மை உங்களுக்கு புரியும்.சமுதாய கோபம் நிறைய அவரிடம். உரிமை உள்ளவரிடம் மட்டுமே தன் கோபத்தை வெளிபடுத்துவார். நான் நிறைய தொலைகாட்சி தொடர்களில் உதவி ஒளிப்பதிவாளராகவும், செகன்ட் யுனிட் கேமராமேனாகவும் பணி புரிந்து இருக்கிறேன். சிரியல் டைரக்டர்கள் கூட செம்ம பந்தா காட்டுவார்கள் அந்த மாதிரி விஷயம் ஏதும் தெரியாத டைரக்டர்களுடன் நான் பணிபுரிந்து இருக்கிறேன். ராம் ரொம்பவே வித்யாசமானவர் எவரையும் உயர்வு தாழ்வு படுத்தி பழகமாட்டார். அவரால் நீண்ட இடைவேளைக்கு பிறகு நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். பாண்டி , விஜயராகவன், மதுரை சாம்ராஜ், சரவணன், செல்வம், போன்ற நல்ல நண்பர் வட்டம் கிடைத்து இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. ராம் அடிக்கடி ஒரு விஷயம் சொல்வார், ஒரு நாவலை விமர்சனம் செய்ய பத்து முறை படிக்கிறார்கள் .ஆனால் ஒருபடத்தை ஒரே ஒருமுறை பார்த்துவிட்டு விமர்சனம் செய்கிறார்களே அது ஏன்? என்பார். சமீபத்தில் கூட கற்றதுதமிழ் படத்தை பற்றி இடுக்கையில் ரொம்ப காரசாரமாக எழுதி இருந்தார்கள். நான் உடனே போன் செய்து விஷயம் சொன்னேன்.கற்றதுதமிழ்முடிந்து பல மாதங்கள் ஆகின்றன. நாம் அடுத்த படத்தின் கதை விவாதத்தில் இருக்கிறோம் அதை பற்றி மட்டும் பேசுவோம் என்றார். நீங்களோ, நானாகவோ அந்த இடத்தில் இருந்துஇருந்தாள் , ஒரு ஆர்வத்திற்க்காவது, அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் படியுங்கள் என்போம் .இது வரை அவர் எந்த கேள்வியும் அந்த இடுக்கை பற்றி கேள்வி கேட்டதில்லை. அதுதான் கற்றதுதமிழ் ராம். அன்புடன் / ஜாக்கிசேகர்

கோடை விடுமுறையும் ,திடிர் காதல்களும் இது எல்லேர் வாழக்கையிலும் நடந்ததுதான்காதல் பற்றி ரொம்ப ராவாகசொல்வதென்றால், காதல் ஒரு பப்ளிக் டாய்லட் மாதிரி பப்ளிக் டாய்லட் உள்ள இருக்கறவன் எப்பட வெளியில போவனும்னு துடிச்சிகிட்டே இருப்பான் . அதே போல வெளியில இருக்கறவன் எப்படா உள்ளபோலாம்னு தவிச்சிகிட்டஇருப்பான். காதல் மேட்டர்ல ரொம்ப டீப்பா உள்ள போன வெங்காயம் போலதான். ஆனா அந்த போதை இருக்கு பாருங்க , அது சத்தியம் , அதுநிஜம். அதுரசனையான காலகட்டம்னு கூட சொல்லலாம் .எல்லேர் வாழ்கையிலும் நடந்து இருக்கும் , சிலருக்கு அது புரிஞ்சு இருக்காது அவ்வளவுதான். எல்லோரும் நம்ம பால்ய காலத்துல ஸ்கூல் லீவு விட்டதும் நம்ம தாத்தா பாட்டி வீட்டுக்குதான் பொதுவா போவோம் .ரொம்ப ரேராதான் மாமா பெரியப்பா ,சித்தப்பா வீடு எல்லாம் .ஏன்ன ,நம்ம அறந்தவால் தனத்தை பொருத்துக்கிற மனசு நம்ம தாத்தா பாட்டிங்களுக்குதான் வரும் . நான் சின்ன வயசில நிறைய வெட்டிகிறாக்கி புடிச்சிகிட்டு வருவேன் ,எங்க பாட்டி என் பேரன் அப்படி எல்லாம் செய்யவே மாட்டான்னு சாதிச்சுட்டு பாதிக்கபட்டவங்களையே திட்டிட்டு வருவாங்க .எல்லா தெருவிலயும் தாத்தா பாட்டி இருக்காங்க அவங்க பேரப்புளளைங்க சம்மர் லீவுக்குவருவாங்க, இதுல பண்ணன்டு வயசுக்கு கிழ இருக்கற பிள்ளைங்க தனக்கு எல்லா விஷயமும் தெரியும்னு காமிச்சிக்கற புத்தி நிறைய இருக்கும். நிறைய சண்டை தின்பன்டத்துக்காகதான் இருக்கும், ரெண்டாவதா ரஜினி கமலா, விஜய் அஜித்தான்ற சண்டையும் அதிகமா இருக்கும், எந்த தப்பு நாம பன்னாலும் அந்த குமார் பையன் பாரு படிப்பலயும் பேச்சுலயும் எவ்வளவு சமத்தா இருக்கு பாருன்ற ஒப்பீடு இருக்கும். அடுத்த வருஷ லீவுல சந்திக்கும் போது சிலர் ஞபாகம் வச்சி இருப்பாங்க சிலர் மறந்து போயிடுவாங்க, சில பசங்க பேசவே விரும்பமாட்டாங்க. விடுமுறை முடிவில் என் தங்கையோடு பழகிய பெண் என் தங்கையோடு எங்கள் ஊருக்கு வருவதாக அழுது புரன்டாள், அடுத்த வருடம் கோடை விடுமுறை பொது அவள் என் தங்கையை கண்டுக்கவே இல்லை , அப்புறம் என் தங்கை தேம்பினால். அதே போல் பத்தாம் வகுப்பு முடந்து அதே தாத்தா பாட்டி வீடு செல்லும் போது கொஞ்சம் மெச்சுரிட்டுதனம் பேச்சிலும் செயலிலும் வந்து இருக்கும். அரும்பு மீசை மேல் உள்ள கவனம் உடைகள் மீதும் இருக்கும். ஏம் பாட்டி எதிர் வீட்டு கோபால் மாமா பொண்னு எங்கே என்றால் அவள் வயசுக்கு வந்த விஷயம் சொல்லபடும் அவள் சின்ன பெண் இல்லை என்பதுமீண்டும் மீண்டும் அறிவுருத்தபடும். அந்த பெண்ணை நேரில் பார்க்கும் போது இத்தனை வருஷம் நம்ம கூட கன்னாமுச்சி ஆடிய பெண்ணா என்ற பயம் ஏற்படும் . ஓடிபிடிக்கும் விளையாட்டுக்கு திடிர் தடை ஏற்பட்டு பல்லாங்குழி ,தாயபாஸ் போன்றவை விளையாட அனுமதி வழங்கப்படும் . எப்போதும் என் பாட்டி வீட்டை சுற்றியும் என்னுடன் நீண்ட நேரம் செலவிட்ட பெண் எப்போதாவதுதான் என் வீடு வரும் அதுகூட மோர்குழம்பு பொறியல் ஏதாவது அவர்கள் வீட்டில் செய்தால் எடுத்துக்கொண்டு வீடு வருவதோடுசரி, அளவாய் பேசும் அதனால் அதிகம் பேச வேண்டும் என்ற ஆவல் அதிகமாகும். அப்புறம் நாம பார்க்கறோம்னு தெரிஞ்ச அடுத்த நொடி அது ரொம்ப அளட்ட ஆரம்பிக்கும் . அப்படியே அந்த லீவு போயிடும் .அதுக்கப்பறம், +2 லீவுக்குகெல்லாம் பார்க்க முடியாது. ஏதோ ஒரு விஷயத்துக்கு பாட்டி ஊருக்கு போனா கைல குழந்தை வச்சிக்குனு சோறு ஊட்டும். நாம திடிர் அதிர்ச்சியை காட்டாம ,ஏன் செல்வி இது உன் குழந்தையா ? னு கேள்வி கேட்போம், அந்த பொண்ணும் எதையும் வெளிகாட்டிக்காம குமார் மாமாவுக்கு ஒரு குட்மார்னிங் சொல்லுன்னு குழந்தைகிட்ட சொல்லறப்ப வயிறு எரிந்து தொண்டை கட்டி சட்டென அந்த இடம் விட்டு நகர்ந்து கண்ணில் ஜலம் வைத்து கொள்வோம். இந்த நேரம் இந்த கோடை விடுமுறையில் , எத்தனை பேருக்கு காதல் வந்ததோ? எத்தனை பேர் கண்ணுல ஜலம் வச்சுன்டாளோ? யாருக்கு தெரியும் லீவுக்கு எங்க போறிங்கன்ன யாரவது கேட்ட அவ ஞாபகம் வரத்தான் செய்யுது . இப்ப நான் என்ன செய்ய ? அன்புடன்/ ஜாக்கி சேகர்

பெற்றோர் புரிந்து நடந்தால் தேர்வு நேர தற்கொலைகளைதடுக்கலாம் ...

+2 தேர்வுகள் வெளியிடப்பட்டது, பல்வேறு மாவட்டங்களில் இது வரை 5க் மேற்பட்ட மாணவர்கள் இறந்து உள்ளர்கள். சில வருடங்களுக்கு முன்பே நான் இயக்கிய குறும்படம் துளிர், சில மாதங்களுக்கு முன் நடந்த குறும்பட போட்டியில் முன்றாம் பரிசு பெற்றது. படத்தின் கரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் , அவன் தந்தை படி படி என்று டார்ச்சர் செய்வதால் தற்கொலை செய்வதாக கதை அமைத்து இருந்தேன் அது மட்டும் இல்லாது , அது உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.அந்த படத்தின் கரு கலில்ஜிப்ரான் கவிதை வரிதான் ஒன்லைன் ஆர்டர்,

‘உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல
அவர்கள் அவர்களுடைய வாழ்கையை வாழ வந்தவர்கள்
உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல’ இந்த வரிகளை பெற்றோர் புரிந்து கொண்டாலே எந்த மாணவனும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் அன்புடன் / ஜாக்கி சேகர்

வெறிச்சோடிய சென்னை...சுதந்திர காற்றை சுவாசித்தபடி பனகல் பார்க் மரங்கள் ...


நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை சற்றும் வாய்ப்பு கிடைத்தது , சென்னை புது சட்டை போட்ட குழந்தை போல் இருந்தது . எல்லா இடங்களிலும் இருந்த விளம்பர பலகைகள் , எல்லாம் மாயமாக போய் இருந்தது . அதில் நிறைய அரசியல் இருக்கிறது என்றார்கள். அது பற்றி நமக்கு கவலை இல்லை, ஆனால் பல வலை தளங்களில் தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துகிறார்கள்,.ரொம்ப நாளைக்கு பிறகு சர்ச் பார்க் பிள்ளைகளையே பார்த்த கண்களுக்கு, சர்ச்பார்க் பள்ளி கட்டிடம் பல வருடங்களுக்கு பிறகு இப்போது தான் தெரிகிறது. பனகல் பார்க் மரங்கள் சுதந்திரம் பெற்று தன் பார்வையை நால புறமும் சுழல விடுகின்றன .டிராபிக்கில் விளம்பரபடங்களை பார்த்து முன் வண்டியில் இடிக்கும் அசட்டு தனங்கள் இனி இல்லை . சென்னையில் இவ்வளவு மரங்களா ? என்று வியக்கும் வண்ணம் இருக்கிறது .ஒரே ஒரு குறைதான். இனிமேல் சின்ன மார்பும் சிறு இடுப்பு பெண்களை விளம்பர ஹோர்டிங்களில் பார்க்க முடியாது .‘ வெளிநாட்டு வாழ் தமிழர்களே’ அல்லது தற்போதைய சென்னை பார்க்காத தென்மாவட்டத்துக்காரர்களே, இப்போது சென்னை எப்படி இருக்கிறது தெரியுமா? அம்மா மஞ்சள் பூசி தலை சிவி பொட்டு வைத்து மல்லிகை பூ வைத்து இருப்பது போல் இவ்வளவு நாட்களும் சென்னை இருந்தது. இப்போது வெள்ளிகிழமையானால் தலையில் எண்ணை வைத்து , கம்மல் முக்குத்தி எல்லாம் கழட்டி விட்டு ஒரு வித தினுசான அழகோடு இருப்பாள் பாருங்கள் அதுபோல் இருக்கிறது சென்னை . என்னை பொருத்தவரை அந்த பகட்டுஇல்லாத உண்மையான அழகுதான் எனக்கு பிடிக்கும், உங்களுக்கு ???


அன்புடன் / ஜாக்கிசேகர் ...

என் அன்னைக்கு வந்தனங்கள்


ஆண் ஆதிக்க மனோபாவம் கொண்ட, என் தந்தைக்கு எழ்மை குடும்பத்தில் இருந்து வாக்கப்பட்ட என் அன்னை, பெரிய சொத்துக்கள் ஏதும் இல்லாது , எவரிடமும் தன் குடும்ப கஷ்டங்கள் சொல்லாது , என்னையும் என் நான்கு தங்கைகளையும் கரை சேர்த்தவர்,3ம் வகுப்பு படிக்கும் போதே நாவல் புத்தகம் கொடுத்து வாசிக்க வைத்தவர். பொய் சொல்ல கடைசி வரை கற்று கொடுக்காமல் செத்து போனவர், இந்த அன்னையர் தினத்தில் அவரை நினைவு கூர்ந்து என் நன்றிகளை அவருக்கு காணிக்கையாக்குகிறேன் அன்புடன்/ ஜாக்கி சேகர்

ஜுனியர் விகடன் கோபச்சாரிக்கு என் பணிவான பதில்


இன்று காலை புகை பிடித்தல் பற்றி ஒரு பதிவை எழுதி விட்டு எதெச்சையாக இந்த வார ஜுவி படிக்க நேர்ந்தது. எதிர்பாராத விதமாக கோபாச்சாரி சிகரேட் பிடிப்பது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதி இருந்தார். மிகச்சிறப்பாக எழுதும் அவர் இந்த கட்டுரையில் சறுக்கி இருந்தார். என்ன நிர்பந்தமோ? அவரின் பல கட்டுரைகள், சமுதாய பிரச்சனைகளை பற்றிய அவரின் அக்கரைக்கு நான் ரசிகன். உதாரனமாக ஆம்னி பேருந்து கொள்ளை, சென்னை வீட்டு வாடகை பிரச்சனை, தமிழில் படங்களுக்கு பெயர் வைத்தல் போன்ற சமுதாய பிரச்சனைகளை அவர் கிழித்த விதம் ரொம்பவும் அருமை . மொத்தமாக புகையிலை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று வாதிட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது, புகை ,மதுவால் எந்த குடும்பமும் பாதிக்கப்பட்டுவிடகூடாது என்பதில் கோபச்சாரிக்கும் எனக்கும் எந்த மாற்றுகருத்தும் இல்லை.ஆனால் ,எதெற்கெடுத்தாலும் சினிமா நடிகர்களை வம்புக்கு இழுத்தல் என்ன நியாயம் .சரி இந்தியசினிமாவில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பதை கட்டுப்படித்தினால், உலக சினிமாவில் சிகரேட் பிடிப்பதை கட்டுப்படுத்துவீர்களா? அல்லது உலக சினிமாவை இந்தியாவில் தடை செய்வீர்களா? ஒரு வாதத்திற்க்கு நடிகர்களால் தான் சிகரேட் பிடிப்பது அதிகம் என்றால் , நம் மக்கள் மேல் பரிவு காட்டும் மத்திய அரசு மொத்தமாக புகையிலையை இந்தியாவில் தடை செய்யட்டும். நம் உதாரணபுருஷர்கள் சுவாமி விவேகானந்தர், நேருமாமா, காந்தி, பாரதியார் போன்றவர்கள் எந்த நடிகர் பார்த்து சிகரேட் மற்றும் கஞ்சா இழுத்தார்கள் . எனக்கு பாரதியார் ,விவேகானந்தர் ரொம்ப பிடிக்கும் .அதனால் ,நான் டோப்பு பைப் இழுக்கிறேன் என்றால் , அவர்கள் சுயசரிதையில் அந்த இடத்தை மட்டும் ரப்பர் வைத்து அழிக்க மத்திய அமைச்சகம் முயற்ச்சி செய்யுமா? கோபச்சாரியின் எழுத்து பரங்கிமலை ஜோதியில் ‘கனவில் கில்மா’ மலையாளப்படம் பார்த்ததால்தான் இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாகிவிட்டது , என்பதுபோல் இருக்கின்றது. கோபச்சாரியிடம் இருந்து வரும் வாரங்களில் இன்னும் வலுவான கோபங்கள் எதிர்பார்க்கும் , உங்கள் ரசிகன் ஜாக்கிசேகர்

வெல்லம் தின்றது ஒருத்தன் விரல் சப்பறது இன்னோருத்தன்... சத்தியமா இது ஆபாச பதிவு இல்லைங்க..


2010லிருந்து அமெரிக்ககாரன் அணுகுண்டு போடாமலே, நம்ம இந்தியர்களுக்கு ஒரு அப்பு காத்து இருக்கிறது. வருஷத்துக்கு பத்து லட்சம் பேர் புகையால் வரும் நோயால் இறக்க போகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம் . இதுல இந்தியாவில மட்டும் பத்து கோடி பேர் புகை பிடிக்கும் பழக்கத்திற்க்கு ஆட்பட்டு இருக்கிறார்கள். இதில் இரண்டு சதவித பேர் மட்டுமே, புகை பழகக்கத்தை விட்டு இருக்கிறார்கள்.இதில் புகை பிடிப்பவரை விட ,புகை பிடிப்பவர் அருகில் இருப்பவருக்கதான் ஆப்பு அதிகம் என்று வேறு ஒரு புள்ளி விவரம் வயித்த வேற கலக்க வைக்குது . இந்த புள்ளிவிவரம் கைக்கு வந்ததும் நம்ம சுகாதாரதுறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ரத்தம் கொதிச்சு போய் சில முடிவுகள் எடுத்தாரு...அவைகள் பின்வருமாறு....

1. சிகரேட் பாக்கட் மற்றும் விளம்பரங்களி்ல் சிகரேட் தீமை குறித்த வாசகங்களும் படங்களும் இடம்பேற வேண்டும் .அதுவும் ஜுன்24 /2008ல் இருந்து கண்டிப்பாக இடம் பெற வேண்டும், இல்லை என்றால் 200 ருபாயாக இருந்த அபராதம் 1000 மாக மாற்றப்படும் என திருவாய் மலர்ந்துள்ளார்.
2. அலுவலகங்களில் புகை பிடித்து எவராவது மாட்டினால் அந்த கம்பனி 5000ருபாய் அபாராதம் கட்ட வேண்டும்.
3.நடிகர்கள் ரஜினி, ஷாருக், விஜய் , மேற்க்கு வங்க முதல்வர்
புட்டதேவ் போன்றவர்களிடம் சிகரேட் பிடிக்காமல் இருங்கள் என்று கெஞ்சுகிறார்.
சரி ஏன் மொத்தமாக புகையிலையை இந்தியாவில் தடை செய்யகூடாது? அங்கதான் மேட்டர் கீது நைனா, இந்தியாவில் வரும் மொத்த வருவாயில் 10சதவிகிதம் புகையிலை பொருட்களால் வருகிறது. எவனாவது வரம் கொடுக்கற சாமி தலையில கை வைப்பானா? அன்புமணி தந்தை ராமதாஸ்க்கு ஒரு கேள்வி
தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் என்று குரல் கொடுப்பவர், தன் மகன்துறை என்பதால் பாரமுகம் காட்டுவது ஏன்? நான் தப்பு செய்ய ஒரு அழகான பெண்ணை அனுப்புவேன் , ஆனால் நீ தொட கூடாது என்பது என்ன நியாயம் ? இதுதான் மத்திய அரசின் நிலைப்பாட? ஆப்கான் போல் மத்திய அரசு ,காஞ்சாவை அனுமதித்தால் இன்னும் நல்ல வருவாய் ஈட்டலாம் . எப்படி நம்ம ஐடியா ( நானும் சின்ன வயசுல ரஜினி படம் பார்த்துட்டு அவரு போல ஸ்டைல சிகரெட் புடிக்கனும்னு நோட்புக் பேப்பர் கிழித்து சுருட்டி மெழுகுவத்தியில் நெருப்பு பற்றி இருமியது இன்னும் என் நியாபக அடுக்குகளில் ) அன்புடன் / ஜாக்கிசேகர்

+2 தேர்வு முடிவுகள் ...சென்னை முதலிடம் ஒரு தேச அவமானம்


+2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. சென்னை முதலிடம் என்ற செய்தி என்னை வருத்தப்பட செய்தது , சென்னை முதலிடம் வருவது என்பது ஒரு பெருமை அல்ல , அது ஒரு அவமானத்தின் வெளிப்பாடு. சென்னை மாணவ மாணவிகளுக்கு எகப்பட்ட வசதி வாய்ப்புகள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. என்னதான் தென்மாவட்ட இளைஞர்கள் கணக்கிலும் இயற்பியலிலும் சுரப்புலி என்றாலும் மொழிப்பாடமான ஆங்கிலத்தில் அவர்களுக்கு போதுமான பயிற்ச்சி இல்லை. அரசு நல்ல ஆங்கில புலமை உள்ள ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டும் ,ஈரோடு மாவட்டத்தில் உள்ள ,கோபி தாலுக்காவில் உள்ள ,வேலங்காட்டுபாளையத்தில் உள்ள,மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள, பாவாடை மகன் குமார் முதலிடம் என்றால் மட்டுமே பெருமைபடும் விஷயம். அதை விடுத்து சென்னை முதலிடம் என்றால் அது பெருமை அல்ல சிறுமை. எனெனில் பாவாடை மகன் குமார் வாழ்வதும் இதே தமிழகத்தில் தான் என்பதை நாம் மறந்து விட கூடாது . பத்திரிக்கை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்... இனிமேலாவது வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தாய் தந்தையர் அல்லது பள்ளி முதல்வர் முத்தம் கொடுப்பது போல் பத்திரிக்கையில் புகைப்படம் வெளியிடப்படுவதை தயவு செய்து குறைத்து கொள்ளுங்கள் ,ஏனென்றால் அதில் ஒரு செயற்கைதனம் இருப்பதாக எனக்கு படுகிறது , அதற்க்கு பதில் தம்ஸ் அப் போல் கை வைத்து அனைத்துக்கொண்டு போஸ் கொடுக்கலாமே. அன்புடன் / ஜாக்கிசேகர்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner