உண்மைகள் ஒரு போதும் சாகா வரம் பெற்றவை.. சென்னை ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை



எவ்வளவுய்யா கூட்டம் வந்துச்சி... சார் பத்து லட்சத்துக்கு மேல....
ஓ அப்படியா?

ஆமாம் சார்.

மயிலை சித்திரக்குளத்துக்கிட்ட இன்பமே உந்தன் பேர் பெண்மையோன்னு தலைவர் பாட்டுக்கு ஆட்டக்கார பொண்ணோட மாரை குலுக்கி ஆட்டிகூட பத்து பேரை உட்கார வைக்க முடியலை....

ஆனா ரொம்ப சாதாரணமாக 300 பேரோட ஆரம்பிச்ச கூட்டம் ஐஞ்சாவது நாள்ல பத்து லட்சத்துக்கு மேல போயிடுச்சி சார்...

கூட்டத்துல நம்ம பேர் ரொம்ப டேமேஜ் ஆயிடுச்சாய்யா ..?

பின்ன... அம்மா இருக்கும் போது அந்த ஆறு வருஷத்துல பத்திரிக்கையாளர்களையோ... அல்லது மக்களையோ நேர்ல சந்திக்கலைன்னு கேட்க துப்பு இல்லாதவன் எல்லாம்... உங்களை நேர்ல வந்து எங்ககிட்ட பேச சொல்லுன்னு சொல்ற அளவுக்கு கூட்டம் தைரியத்தை கொடுத்துடுச்சிங்க.....
அறவழி அறவழின்னு பசங்க புகழ் ஏறிக்கிட்டே இருக்குங்க...

திமுக மேல பழி போட்டு பாத்திங்க...

நம்ம பீ டீம் அதை சரியா பண்ணிக்கிட்டு இருக்குங்க...

சரி... திமுகாவை திட்றாங்களா?

பெரிசா இல்லைங்க.. காரணம்...ஊறுகாய் போல தொட்டுக்கறாங்க..ஸ்டாலின் முதன் முதலில் அலங்காநல்லுரில் போராட்டம் நடத்தியதையும்.... அவுங்க ஆட்சியில இருந்தவரைக்கு ஜல்லிக்கட்டு நடத்தினதையும் இணைய பேராளிங்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம்.. நம்ம பி டீம் கம்பு சுத்தி மறக்க வைக்கலாம்.. நாம எப்படிங்க மறுக்க முடியும் சொல்லுங்க.?
சரி என்ன பண்ணலாம்...

நல்ல பசங்கற பேரை... இவனுங்க தட்டிக்கிட்டு போனா... நாம எதுக்குன்னு பொது மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுவாங்க..
அதனால் அந்த குட் நேமை உடைக்கனும்...

யோவ் அந்த அளவுக்கு குட் நேம் இருக்கா..?

இந்தியாவுக்கே முன்னுதாரணமா மாணவர்கள் அறவழி போராட்டம் இருக்குன்னு நேஷனல் மீடியாவுல இருந்து கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி வரை சொல்லிட்டாங்க...
அப்ப என்ன செய்யலாம்...?

அவனுங்க பேரை கெடுத்து மாணவர்கள் ஒரு நாளும் அறவழி போராட்டத்துக்கு சரியில்லைன்னு நிரூபிக்கனும்...

சரி இன்னைக்கு வரைக்கும் அவனுங்கதான் வன்முறையில இறங்கலையே?-
இறங்கனாமாதிரி நம்ம ஆட்கள் ஜோடிக்கறதுல கில்லாடிங்க... விசாரனை படம் பார்க்கலை...??

அது மட்டுமல்ல.. அப்படியே சொதப்புனாலும்.. திமுக செஞ்சிடுச்சின்னு சொன்னா இணைய போராளிங்க கேள்வி கேட்காம பொங்கி பார்வேட் செய்வானுங்க... ஏன்னா நம்ம பக்கம் கம்பு சுத்தி அடக்குறது போல திமுக பக்கம் பெரிசா ஆள் இல்லை... செயல் தலைவரே புறக்கணிக்கற ஊடகங்கள் கிட்ட போய் வெட்கமே இல்லாம நிக்கும் போது நமக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல..


கோக் பெப்சிக்கு தடை அசத்தும் கடலுர் கிருஷ்ணாலயா தியேட்டர் ஓனர்.





கடலூர் சினிமா ரசிகர்களின் ரசனையை கிருஷ்ணாலயா தியேட்டர் மேம்படுத்தியது என்றால் அது மிகையில்லை…


ஜல்லிக்கட்டு போராட்டம்... என்னவாகும்.?




ஜல்லிக்கட்டு போராட்டம்... என்னவாகும்.?

முதல்வர் நல்ல செய்தி சொல்வார் என்ற எதிர்பார்ப்பில் மண்.

இந்த போராட்டம் இளைஞர்கள்  கத்தி கத்தி டயர்டாக்க வேண்டும் என்பதுதான்  தமிழக அரசின் யுக்தி...


ஜல்லிக்கட்டுக்காக 48 மணி நேர தொடர் போராட்டம் ஒரு பார்வை.



#jallikkattu
#MarinaProtest 
#JusticeForJallikattu

48 மணி நேரம்தாண்டி  வெற்றிகரமா  ஜல்லிக்கட்டு போராட்டம் சென்னை மெரினாவில  போய்கிட்டு இருக்கு...




சென்னை மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களின் எழுச்சி.





#jallikattuprotest
#justiceforjallikattu
#saveourculturejallikattu
#ஜல்லிக்கட்டு

தமிழக வரலாற்றில் முதல் முறையாக  ஜல்லிக்கட்டுக்காக  இளைஞர் போராட்டம் எந்த அரசியல் சாயமும் இல்லாமல்  மெரினாவில் ஒரு லட்சம்  இளைஞர்கள் ஒன்று  கூட  வைத்திருக்கின்றது…

 அதுவும் அறவழியில்….


கோடிட்ட இடங்களை நிரப்புக ( 2017) திரைவிமர்சனம்



பொண்டாட்டி தேவை , சுகமான சுமைகள், புதிய பாதை ஹவுஸ்புல் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ஆர் பார்த்திபான்… சாரி ராதா கிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும்   கிரைம் திரில்லர் கோடிட்ட இடங்களை நிரப்புக…


பைரவா ( 2017) திரை விமர்சனம் | Bairavaa Complete Movie Review




பைரவா திரை விமர்சனம்.
கத்தி, துப்பாக்கி , தெறி போன்ற திரைப்படங்கள் மூலம் காமன் ஆடியன்ஸ் ரசனையை தன் பக்கம் இழுத்துக்கொண்ட விஜய்  பைரவா திரைப்படத்தின் மூலம்  காமன் ஆடியன்ஸ் ரசிகனை தன் பக்கம்  தக்க வைத்துக்கொண்டுள்ளாரா? அதே போல அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் முதல் வாய்ப்பை பெற்ற இயக்குனர் பரதன்  விஜய்யை வைத்து இயக்கி இருக்கும் இரண்டாவது திரைப்படம் பைரவா…   அவருக்கு கிடைத்த இந்த அறிய வாய்ப்பை திறம்பட பயண்படுத்தி இருக்கின்றரா இல்லையா என்பதை  இந்த விமர்சனத்தில் பார்த்து  விடலாம்.



கடலூர் வேல்முருகன் தியேட்டர்....




பதினொன்றரை மணி காலைகாட்சிக்கு வெயிலில் இரண்டு ரூபாய் டிக்கெட்டுக்கு  கேட் முன் தவம் கிடந்து  கழுத்து  வியர்வை கசகசக்க  அந்த நீண்ட சுரங்க பாதை போன்ற கவுண்டரில்  திரும்பி வளைந்து திரும்பி வளைந்து பயணித்து டிக்கெட் எடுத்து  முத டிக்கெட்டுக்கு  பத்து ரூபாய் தாளை நீட்டினா என்ன செய்யறது ? என்று தலையில் அடித்துக்கொண்டு முனறிக்கொண்டே டிக்கெட் கொடுப்பவர் சில்லரை கொடுக்க டிக்கெட் வாங்கி வாயில்  நிற்பவரிடம் டிக்கெட் கிழித்து உள்ளே செல்லும் முன் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு தியேட்டர் உள்ளே சென்றால்......



நல் ஆசிரியர், “வெட்டிக்காடு” மற்றும் “கீதா கஃபே” புத்தகங்கள் வெளியீட்டு விழா




வாழ்க்கை சிறந்த ஆசிரியர்… ஏதாவது ஒரு மனிதன் மூலம்  தினம் தினம் நமக்கு  வாழ்வியல்  சூட்சமங்களையும் பணிவையும்  கற்றுக்கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றது… அப்படி ஒரு   விஷயத்தை மூவநல்லூரில் பணியாற்றிய முன்னால் ஆசிரியர்  திரு ராஜகோபால் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன்..


மயிலாபூர் பெஸ்ட்டிவல் | மயிலாப்பூர் திருவிழா



மயிலையில் நான் ரொம்பவே ரசிக்கும் விஷயம் மயிலாப்பூர் பெஸ்ட்டிவல்...தொடர்ந்து அதனை வருடா வருடம் நடத்தும் விழா குழுவினருக்கு எனது நன்றிகள்.


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner