பெங்களூர் ஷக்கிலா ச்சே டக்கிலா..




அறிவிப்பு....

குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.......

வாழ்வில் சில விஷயங்களை எளிதில் மறந்து விட முடிவதில்லை.. எனக்கு இன்னமும் நினைவில் இருக்கின்றது.. நான் முதன் முறையாக பியர் எங்கே குடித்தேன் என்று.. கடலூர் பாண்டி பார்டரில் இருக்கும் கன்னியக்கோவில் கென்னடி ஒயின்சில் 10ம் வகுப்பு படித்து விட்டு ஒரு வீடியோ கடையில் வேலை செய்த போது நான் மற்றும் ஸ்ரீகாந் என்ற நண்பரும் அவருடைய நண்பருமாக சேர்ந்து குடித்தது நன்றாக ஞாபகம் இருக்கின்றது...


சன்டிவி முன்னனியில் ஏன் இருக்கின்றது ?


நிறைய சிரியல்களில் வேலை செய்து இருந்தாலும் .. நான்  சீரியல் பார்க்கமாட்டேன்.



எப்போதுவது சேனலை மாற்றிக்கொண்டு வரும் போது நாதஸ்வரம் சீரியல் வந்தால்  கொஞ்சநேரம் வைத்து பார்ப்பேன். காரணம் அந்த தொடரில் சில காட்சிகள்.. சில டயலாக்குகள் நன்றாக இருக்கும்.


சேனல்களில் நான் விரும்பி பார்ப்பது டிஸ்கவரி சேனல்தான்...அப்புறம் மூவிஸ்நவ்... ஆனால் பெங்களூரில்  லுமியர்மூவிஸ் மற்றும் வேர்ல்டு சினிமா தெரிகின்றது கொடுத்த வைத்தவர்கள்... நல்ல நல்ல உலகபடங்கள் போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. நேற்று கூட கிம்கிடுக்கின் பிரீத் படம் ஒளிபரப்பானது... பார்க்க கொடுத்து வைக்கவில்லை.... எந்த நேரமும் சீரியல்தான் ஓடிக்கொண்டு இருக்கின்றது....நிறைய வீடுகளில் அததான் நிலைமை...



பாவத்தின் சம்பளம் மட்டும் மரணம் அல்ல.. ஏழையாய் பிறப்பதும் கூட...


அந்த ஆசிரியர்கள்  வாரத்தின் தொடக்கத்தில் கூட  அப்படி நடக்கும் என்று யோசித்து இருக்கமாட்டார்கள்... போலிஸ்காரர் இருக்கும் பக்கம் தலைவைத்து கூட படுத்து இருக்கமாட்டார்கள்.. மகாநதி படம் பார்த்து விட்டு சிறையில் இவ்வளவு கொடுமைகள் நடுக்குமா? ஜென்மத்துக்கு சிறைபக்கம் போகவே கூடாது, அந்த பக்கம் தலைவைத்து படுக்க கூட கூடாது என்று வைராக்கியமாக  வாழ்ந்து இருக்க வேண்டும்.....


( job news)வேலைவாய்ப்பு செய்திகள்.. பகுதி...3

நான் பெங்களூரில்  இருக்கின்றேன் நான் இத்தனையாவது படித்து இருக்கின்றேன் எனக்கு  வேலை வேண்டும் என்று வாங்கி தாருங்கள் என்று அனுப்பும் கடிதங்களை தவிர்த்து விடுங்கள்...என்னால் வேலை வாங்கித்தர முடியாது..நான் வேலை வாய்ப்பு அலுவலகம் வைத்த நடத்தவில்லை என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ளுங்கள்..


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18பிளஸ் புதன் (09/02/2011)

ஆல்பம்

உத்ரபிரதேச முதல் மந்திரி மாயாவதி செருப்பை துடைத்து விட்ட அதிகாரி மேல் பரிதாபம்தான் வருகின்றது.. உடம்பு முடியவில்லை என்று மனைவி எவ்வளவோ சொல்லியும் ஒரு கிளாஸ் தண்ணி எடுத்து வந்து கொடுக்க கூட ரொம்பவும் யோசித்து இருக்கவேண்டும்....
==============


பெண்களூர்....


காலையில் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் பிடிக்க   ரொம்ப நாளைக்கு அப்புறம் நானும் என மனைவியும் திருடா திருடா எஸ்பி பாலசுப்ரமணியம் வெக்கேஷனுக்கு டிரைன் பிடிக்க   போவது போல்  அவசர அவசரமா நாங்கள் நடந்து போனோம்.. 

சோம்பல் முறித்து தனது வழக்கமான வேலைக்கு ரொம்ப ஸ்லோவாக கிளம்பி வந்து கொண்டு இருந்தது.. புதுபெண்ணை மணவறைக்கு அழைந்து வருவது போல  ஒரு இன்ஜின் தூக்க கலக்கத்தோடு  மெல்ல அழைத்துக்கொண்டு வந்தது.


Twice a women-2010 உலகசினிமா/கனடா/உதைக்கும் கணவன் உயிர் பிழைக்க ஓடும் மனைவி..




சில பெண்களை பார்த்து இருக்கின்றேன். சக்கையாக புருசன் போட்டு உதைத்தாலும் அவனை விட்டு போகாமல் அவனோடு குடும்பம் நடத்தி வாழ்க்கையை தொலைப்பவர்கள் நிறைய பேர்...


Somersalt -2004/உலகசினிமா/ஆஸ்திரேலியா(பதினெட்டுபிளஸ்)வயதுப்பெண்ணின் குட்டிக்கரண வாழ்க்கை




குட்டிக்கரணம் போடுவது எல்லோராலும் முடியாது.... நாம் அனைவருமே நம் சிறுவயதில் குட்டிக்கரணம் அடித்து இருக்கின்றோம். ஆனால் சம்மர் சால்ட் என்பது என்ன தெரியுமா? தரையில் உடலோ அல்லது தலையோ படாமல் அடிப்பது... ஜின்ஸ் படத்தில் கூட கொலம்பஸ் பாடலுக்கு பிரசாந்த் தரையில் தலை படாமல் கடல் ஓரம் டைவ் அடிப்பாரே.. அதேதான்.


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/பதினெட்டு பிளஸ்/ ஞாயிறு(06/02/2011)

ஆல்பம்..


எதுவந்தாலும் எதுவும் அழிச்சிபோயிடபோறதில்லை ரசிக்கும் ஆட்கள் இருக்கும் வரை அது எதாவது ஒரு வடிவத்தில் மக்களிடம் செல்வாக்கு பெற்றுக்கொண்டுதான் இருக்கும்..பிளாக் வந்தபிறகு பேஸ்புக் வந்ததது.. அதுக்கு பிறகு டுவிட்டர் வந்துச்சி.. ஆனா எதுவும் அழிஞ்சி போயிடலை..மக்கள் தங்களுக்கு எது சௌகர்யமோ அதை தேர்ந்து எடுத்துக்கொண்டார்கள்.... ஆனால் 2006ல் பிளாக்கில் எழுதிய அளவுக்கு 2010ல் பிளாக் எழுதும் அளவு குறைந்து இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து தெரிவித்து இருக்கின்றது...ஆனால் தமிழ் வலைபதிவுகள் முன்னைகாட்டிலும் அதிக மக்களிடம் சென்று  சேர்கின்றது.. அதே போல நிறைய புது நண்பர்கள் எழுத ஆரம்பித்து இருக்கின்றார்கள்.. என்பது தமிழ் வலைக்கு ஒரு பெரிய பலம் என்று  சொல்லிக்கொள்ளலாம்.
============================

(thief of hearts-1984) 17+ ஒரு அமெரிக்க களவானியின் காதல்.




சென்னையில் ஸ்பென்சர் பின்பக்கம் இருக்கும் ஒரு பைவ் ஸ்டார் ஒட்டலுக்கு ஒருவன் தன் மனைவியுடன் செல்லுகின்றான்.. அவன் பெயரை எளிதில் நினைவில் வைக்க அவக் பெயரை குமார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.. ஒட்டலில் காரை பார்க் பண்ணும் இடத்தில் என்ன குமார் சார் ரொம்ப சந்தோஷமா இருக்கிங்க? என்று செக்யூரிட்டி கேட்க இன்னைக்கு எங்க ரெண்டு பேருக்கு கல்யாணநாள் என்று சொல்லி விட்டு ஹோட்டலுக்கு போய் விடுகின்றான்..



job news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி..2)

அன்பின் நண்பர்களுக்கு...  உங்கள் வரவேற்ப்புக்கு நன்றி.. ஒரு வாராத்துக்கு பிறகான நேர்முகம் என்றால்  பிளாக் படித்து விட்டு செல்ல வசதியாக இருக்கும்... நானும் ரெண்டு மூன்று சேர்த்தே போடும் கட்டாயத்தில் இருக்கின்றேன்.. அதனால் ஒப்பனிங் இருப்பதை ஒரு வாரத்துக்கு முன்னே மெயில் அனுப்பினால் அதனை பப்ளிஷ் பண்ண வசதியாய் இருக்கும்....பகிர்வுக்கு நன்றி....

(yaddham sei..2011) யுத்தம் செய்... மிஷ்கினின் அசத்தல்....



சென்ற குடியரசு தின விழா விஜய் டிவி யுத்தம் செய் படத்தை பற்றிய  சிறப்பு நிகழ்ச்சியில் நான் கேட்ட கேள்விகள் ஒளிபரப்பாயின அதில் இந்த படத்தை பற்றிய உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்று கேட்டார்கள்..மென்மையாக கதை சொல்லும் சேரனும் மிக ராவாக கதை சொல்லும் மிஷ்கினும் இணைந்தால் அந்த படம் நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும் என்றேன்.. அதுக்கு மிஷ்கின் மிகச்சரியாக சொன்னார்.. நான்  ஒரு ராவான ஆள்தான் என்றார்..அதை இந்த படத்திலும் நிருபித்து இருக்கின்றார்....


ஒரு இயக்குனர் தனது படத்தை எடுத்து விட்டு அந்த படத்தில் எதாவது ஒரு இடத்தில் தனது பெயர் வருவதையோ விரும்புவார்.. ஆனால் இந்த படத்தில் தனது பெயர் எந்த இடத்திலும் வராமல் பார்த்துக்கொண்டு  இருக்கின்றார்...முதல் முறையாக  டைட்டிலில் பெயர் போடாமல் இருக்கின்றார்...ஒரு தமிழ் இயக்குனர்....மிஷ்கின்... யுத்தம் செய் படத்தை பற்றி பேசும் போது எனது பெயர் பேசபட்டால் போதும்  என்று நினைத்து இருக்கலாம்... எது எப்படி இருந்தாலும் இதுவும் புது முயற்சிதான்.


Ultimate Heist-2009/ பிரான்ஸ்/கொள்ளை தொழில் குடும்ப தொழில்...


சென்னையில் நேற்று கூட பார்த்தேன்... அடையாறு பஸ் டிப்போகிட்ட அதாவது அம்பிகா அப்பளத்துகிட்டு இருந்து அந்த கார் ஜுயிங்னு செம பாஸ்ட்டா பறந்து வந்துச்சு.. எல்லாரும் கிளிபிடிச்சு நகர்ந்து வழி விட்டாங்க... இதுல கொடுமை என்னன்னா? அந்த கார்ல இரண்டே பேர்தான் உட்கார முடியும்... அது ஒரு பாரின் கார்.. ஒயிட் கலர்... நம்பர் கூட 5ன்னு நினைக்கின்றேன்.. சரியா நினைவு இல்லை... அப்ப என்  பைக்குக்கு பக்கத்துலேயே ஒரு  ஆண்ட்டி ரொம்ப ஸ்டைலா அக்டிவாவுல போனாங்க.. அதனால் நம்பர் சரியா நினைவு இல்லை..

இப்ப பெட்ரோல் லிட்டர் 64ரூபாய்.. ஒரு லிட்டருக்கு அந்த கார்  மிஞ்சி போனா லிட்ருக்கும் நாலு கிலோமீட்டர் கொடுப்பதே பெரிய விஷயம்.. ஆனால் அந்த கார் சென்னைக்கு புதுசு..வெள்ளைக்கலர் நீங்க கூட அதை எங்கயாவது பார்த்து இருக்கலாம்.. அனா அந்த காரை  ஓட்டும் அளவுக்கு சென்னை சாலைகள் வேலைக்கு அகாது...லாங் வேண்டுமானால் எடுத்துகிட்டு போகலாம்... சென்னையில் இருந்து பெங்களுருக்கு இரண்டு மணி நேரத்தில் போய் விடலாம்...

அந்த கார் யாரோ ஒரு பிரபல நடிகர் காருன்னு கேள்வி நமக்கு சரியா தெரியலை...  பட் அந்த விலை உயர்ந்த காரை  செம் பாஸ்ட் ஓட்டிகிட்டு வர்ரிங்க..... பெட்ரோல் போடனும்.... பின்னாலேயே இன்னோரு கார் அதே போல இரண்டு பேர் மட்டும் உட்காரும் கார்... அதுவும் செம பாஸ்ட்டா வருது... அதுல இரண்டு பேர் உட்கார்ந்து இருக்காங்க.. பின்னாடி வந்த காரில் இருந்த இரண்டு பேரில் ஒருத்தன் லூவுக்காக டாய்லட் போகின்றான்..அவன் போனதும் பெட்ரோல் போடும் காரை லேசாக இடித்து விட வண்டி ஓனர் வெளியே வந்து எப்படி என் காரை இடிக்காலம்? என்று சத்தம் போடும் போது டாய்லட் போனவன்  நைசா  முன்னாடி இருந்த காரில் ஏறி வண்டியை எடுத்துகிட்ட சிட்டா பறக்க... என் காரு என்று  கத்த வாயை திறப்பதற்குள் பின்னாடி இடித்தக்காரும் சிட்டாக பறந்து விட்டால் எப்படி இருக்கும் வாயிலும் வயிற்றிலும்அடித்துக்கொள்ள தோனாது...? தோனும் அது சென்னையா இருந்தா... அது பிரான்ஸ் அதனால் அப்படி அடித்துக்கொள்ளவில்லை.....இப்படித்தான் இந்த பிரெஞ் படம் தொடங்குது..

Ultimate Heist-2009(Le Premier Cercle) படத்தின் கதை என்ன?

1915ல் டர்கிஷ் இராணுவம்  ஆர்மினிய மக்களை இனப்படுகொலை செய்கின்றது... ஒரு ஆயிரம் பேர் அந்த இனப்படுகொலையில் இருந்து தப்பிக்க கப்பல் மூலம் பிரான்சுக்கு அகதிகளாக வருகின்றார்கள்... அதில் பல குடும்பங்கள் சோத்துக்கு கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டு  தனது வாழ்வை வாழ்கின்றார்கள்.. ஆனால் சில  ஆர்மினியன் அகதிகள் அப்படி வாழவில்லை... அப்ப சோத்துக்கு ?? குட் கொஸ்ட்டின்...ரொம்ப சிம்பிள்... திருடுவதுதான்.. குடும்ப தொழிலாக இருக்கின்றது... அப்படி குடும்பமே சேர்ந்து தண்ணி அடிப்பது போல திருடும்  குடும்பத்தை பற்றிய கதை இது...

இந்த மாதிரி திருடும் பேமலிக்கு பேர் மாவாக்கைன்னு பேரு... மிலோ(ஜேன் ரினோ)  இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன்.. பெரிய பையனை ஒரு திருட்டு சம்பவத்தில் இழந்து விடுகின்றான்.. இரண்டாவது பையனை வைத்துக்கொண்டு கார் திருடுவதில் இருந்து சகல திருட்டும் செய்கின்றான். இப்படியே லைப்போய்கிட்டே இருந்த டுவிஸ்ட் வேனாம்... மிலோ அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அந்த அம்மாவ கவனிச்சிக்க வரும்  நர்ஸ்பெண்ணை மிலோ வோட இரண்டாவது பையன் ஆன்டன் உசார் பண்ணிடுறான். உசார்னா? லட்டர், கிஸ்ன்னு மட்டும் இல்லை.. பிரெக்லர் கார்டு வாங்கும் அளவுக்கு வச்சிடுறான்..படுக்கும் போது அவன் யார் என்ன? அவன் தொழில் என்னன்னு  சரியா தெரிஞ்சிக்கறது இல்லை.... பட் புள்ள வரும் போது யாருன்னு விசாரிச்சா  ஆன்டன் மற்றும் அவன் குடும்பமே திருட்டுக்குடும்பம்ன்னு தெரியுது.. போலிஸ் வலை விரிக்குது... இரண்டு கொள்ளை சம்பவங்கள் நடந்தால் காவல் துறை கொஞ்சுமா?- ஆனா எவிடேன்ஸ் இல்லாம தவிக்குது...நர்ஸ் காதல் பிடிக்காத மிலோ தன் மருமகளை கொலை செய்ய சொல்லறான்... ஆனா அதில் இருந்து தப்பித்து தன் பொண்டாட்டியை கொலை செய்ய சொன்னவனே தான் அப்பான்னு தெரிஞ்சிகிட்ட இரண்டாவது பையன் அப்பாவை போட்டுத் தள்ளும் முடிவுக்கு வரான்... அந்த நேரம் பார்த்து  பிளைட்டில் ஏறும் ஐந்து மில்லியன்  யூரோக்களை கொள்ளை  அடிக்க  வீடு கட்ட பிளான் போடுவது போல் திட்டம் போட்டு இருக்கும் போது.. அந்த கொள்ளையில் இரண்டாவது மக்ன் ஆன்டன் ஈடுபடுகின்றான்.. காரணம் அவனுக்கும் பணம் வேனுமில்லை. கொள்ளை அடிச்சாங்களா? மருமகள் என்ன ஆனாள்-? அப்பாவை சுட்டானா? என்பதை  வெண்திரையில் பாருங்கள்.


படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

ஜென் ரினோ இந்த படத்தில்  ரொம்ப அமைதியான டான் கதாபாத்திரம்...  ரொம்ப அமைதியா நடிச்சி இருக்கார்...ஆனா இவருக்கும் இந்த மாதிரி படங்கள் அல்வா சாப்பிடுவது போல..

இரண்டாவது பையான ஆன்டன் கேரக்டரில் நடித்து இருக்கும் அந்த பையன் கிட்ட ஒரு பெரிய ஸ்மார்ட்நஸ்  இல்லை என்பது குறைதான்..

அந்த நர்ஸ் கேரக்டர் பெண்ணேடு திடிர்ன்னு ஒரு படுக்கை சீன் சரிஆர்வமா  பார்க்க ஆரம்பிக்கும் முன்  அந்த பெண்ணுக்கு மார்பு தெரிவதோடு  அந்த சீங்ன கட் செய்து விடுகின்றார்கள்... அந்த பெண் உடலில் நிறைய மச்சம் வேறு....டிரைலர் பாருங்கள்.

இந்த படத்தோட பெரிய பிளஸ் போட்டோகிராபி.. முக்கியமா அந்த கார் சேசிங் காட்சிகள்... ஆங்கிள்ஸ் என அச்த்தலாய் இருக்கும்.

ஒரு கேங் ஸ்டார் படம் பெரிய துப்பாக்கி வெடித்தல் பெரிய  வன்முறைன்னு
எதுவும் இல்லை. ஆனால் விறு விறுப்பு இல்லாமல் இல்லை.. அந்நத லாஸ்ட் பிளைட் கொள்ளை சம்பவம் கொஞ்சம் தான்.

பட் அந்த கிளைமாக்ஸ் நெகிழ்ச்சி..

படத்தின் டிரைலர்..



படக்குழுவினர் விபரம்.


Directed by     Laurent Tuel
Produced by     Alain Terzian
Christine Gozlan
Written by     Laurent Tuel
Laurent Turner
Simon Moutaïrou
Starring     Jean Reno
Gaspard Ulliel
Vahina Giocante
Sami Bouajila
Music by     Alain Kremski
Cinematography     Laurent Machuel
Editing by     Marion Monestier
Studio     Alter Films
Thelma Films
TF1 International
TF1 Films Production
Medusa Film
Distributed by     TFM Distribution (FR)
Hollywood Classic Entertainment (CZ)
Release date(s)     March 4, 2009 (2009-03-04)
Running time     94 minutes
Country     France
Language     French
Armenian
Budget     €15,000,000
$19,500,000 (approx.)
Gross revenue     $2,226,117

பைனல்கிக்...

இந்த படத்தை பார்க்கவேண்டியபடங்களில் என்னால் சொல்ல முடியவில்லை ரொம்ப ஸ்லோவாக நகரும் திரைக்கதை... ஆனால் ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம்.. காந்தி ஜெயந்தியின் போது சரக்கை வாங்கி வர போன  நண்பன் வேகு நேரம் ஆகியும் வராமல் இருக்கும் போது அந்த நேர இடைவெளியை குறைக்க இந்த படத்தை பார்த்து வைக்கலாம்..இந்த படம் டைம்பாஸ்படம்..




பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...


குறிப்பு..
 
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள். 
 
 
 
 

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ புதன்(02/02/2011)

ஆல்பம்..

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா  இன்று கைது செய்யப்பட்டார்.   நேற்று முன்தினம் விசாரிக்கப் பட்டு இன்று சிபிஐ அவரை  கைது செய்து இருக்கின்றது... ராஜாவின் அண்ணன் மற்றும் இரண்டு அதிகாரிகளையும் சேர்த்து கைது வைபவத்தை செய்து இருக்கின்றது சிபிஐ.. செய்தியின் விவரத்தை சன் சொல்கின்றது.. கலைஞர் மவுனம் காக்கின்றது..அவரின் சொந்த ஊரில் வழக்கம் போல அரசு பேருந்துகள் நாசம் செய்யப்பட்டன.
==============

job news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி1)

எதாவது ஒப்பனிங் இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்ன வரிகளுக்கு மதிப்பு கொடுத்து  சில கம்பெனி ஓப்பனிங் விஷயங்கள் மெயிலில் வந்து இருக்கின்றன.. சரி அதனை  சாண்ட்வெஜ்ல் போட்டால் அது ரொம்ப பெரிய பதிவாக போய் விடும் என்பதால் இதுக்கு தனியாக ஒரு பதிவு போட முடிவு எடுத்தேன்...


மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசு....

சின்ன வயதில் அப்பா எங்கள் ஐவருக்கும் பிறந்தநாள் தினம் என்றால் கூடைகேக் ஒரு பத்து  வாங்கி வந்து காலையில் குளித்து விட்டு வந்ததும் அந்த கூடைகேக்குகளை வாய்முழுவதும் கொள்ளாத சந்தோஷத்தோடு  தின்று மகிழ்ந்த நினைவுகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன...
(சிறுவயதில் பூப்போட்ட சட்டையோடு)
காலையில் எழுந்ததும் எனது அம்மா என்னை குளித்து விட்டு கோவிலுக்கு போக வற்புறுத்துவாள் கோவிலுக்கு போவதே எனக்கு  அபத்தமாக இருந்து இருக்கின்றது...திடிர் என்று காலையில் கோவிலுக்கு போய் சேவித்து விட்டு வருவது என்னவோ போல் இருக்கும்.



இயக்குனர் பாலுமகேந்திரா,மிஷ்கின் புத்தகவெளியீட்டு விழா ஒரு பார்வை...

( இயக்குனர் பாலுமகேந்திராவோடு  இரண்டு வருடத்துக்கு முன் எனது கல்லூரிக்கு விருந்தினராக வந்த போது எடுத்துக்கொண்ட படம்...)

சென்னையில் இருப்பது பல விஷயங்களில் சௌகர்யமான விஷயம்.. எந்த நிகழ்ச்சி நடந்தாலும் எளிதில் கலந்து கொள்ளஏதுவாக  இருக்கும்.. அதனாலே சென்னை வாசிகள் மற்றும் சென்னை பதிவர்கள் மேல் ஒரு சின்ன பொறாமை  மற்றவர்களுக்கும் இருக்கும்.

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ஞாயிறு(30/01/2011)

ஆல்பம்...
ஒரு பிராந்தியத்தில் இருக்கும் ஒரு பெரிய நாடு... அவனது நாட்டு மீனவனை ஒரு சீன்ன தீவில் இருக்கும் அரசு தொடர்ந்து கொன்று வருகின்றது. ஆனால் அது பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை... ஒரு கண்டிப்புகூட இல்லை...இன்று நிருபமா போய் என்ன பேசுவார் என்று தெரியவில்லை...40எம்பி சீட் தமிழகத்தில் இருக்கு... அது எங்களுக்கு கிடைக்கனும்னா.. தயவு செய்து எலக்ஷன் வரை எந்த தாக்குதலும்  வேண்டாம்... எலக்ஷன் முடிந்ததும் நாங்களே தாக்க ஆயுதம் கொடுக்கின்றோம்.. எந்த பிரச்சனையும் இல்லை... இன்னும் ஒரு 5 வருடம் உங்க ராஜ்யம்தான்.. அப்படியே மீனவர்கள் செத்தாலும் எந்த திராவிடகட்சியாக இருந்த்தாலும் ஒரு லட்சம் கொடுத்து காயத்தை ஆரப்போட்டு விடுவார்கள்... அதனால் பிளிஸ் வெயிட் பார் சம் மன்த்ஸ் என்று பேசினாலும் பேச வாய்ப்பு இருக்கின்றது...

ஒரு லட்சம் கையெழுத்து தேவை..தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கான கவன ஈர்ப்புக்கு..

 கார்கில் போர் நடக்கின்றதா? வடக்கு தெற்கு என்று பேதம் பார்க்காமல் உணர்ச்சிவசப்பட்டு பணத்தை கலக்ஷன் செய்து கொடுப்பது நம் தமிழ் இனம்தான்..

#tnfisherman இந்த திடிர் எழுச்சி எப்படி சாத்தியம்?




இந்த திடிர் எழுச்சி எப்படி சாத்தியம்.. அவன் கடலுக்கு போறான் நான் தரையில் இருக்கேன்... அவனுக்கும் எனக்கு என்ன சம்பந்தம்??

பொதுவா மீனவ கிராமங்களுக்குள்ள எப்பயும் சண்டை வேறு நடக்கும்... இதனால் ஈசிஆர்ல எப்ப வேனா சாலைமறியல் நடக்கும்... உடனே பதட்டத்தை தணிக்க இரண்டு போலிஸ் ஜீப் நிக்க வச்சி, காவலுக்கு பத்து போலிஸ்காரவுங்க பிளாஸ்ட்டிக் சேர்ல உட்கார்ந்துகிட்டு வறுத்த மீன் சாப்பிட்டு விட்டு மீன் முள் தொண்டையில சிக்கிக்குகிச்சு என்ன செய்யலாம்? என்று பொம்பளை போலிசிடம் கேட்டுக்கொண்டு இருப்பார்கள்...

இப்போதும் சண்டை போட்டுகொள்ளும் மீனவ கிராமங்கள் அதிகம் இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை என்று கரை தள்ளி இருக்கும் பொதுமக்கள் புலம்பியது உண்டு...

On The Path (Na Putu)-2009/உலகசினிமா/போஸ்னியா/மதம் வேண்டுமா? காதல் வேண்டுமா?


எல்லோருக்கும் அவர் அவர் சார்ந்த மதங்கள் புனிதமானவைதான்..  காரணம் மதம் என்பது நீங்கள் வளரும் போது அதுவும் உங்களோடு பயணிக்கும் விஷயம்... அது பற்றி சிந்தனைகள் பேச்சுக்கள் தர்க்க நியாயங்கள் நிறைய சிறுவயதில் இருந்து கேட்டு வளர்ந்து இருப்பீர்கள்...


இன்னும் சிலர் அவர்  அவர் மதம் சார்ந்த கோவில்களுக்கு சென்று பிரசங்கம் கேட்கும் போது அவர் அவர் சார்ந்த மதமே இந்த பூவுலகில் சிறந்தது என்று எல்லோருடைய மதங்களும் சொல்லும்....


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+புதன்(26/01/2011)


ஆல்பம்..

குடியரசு தின விழாவை புறக்கனித்து கருப்பு கொடி தமிழக மீனவ கிராமங்களில் ஏற்றப்பட்டு இருக்கின்றது.. இப்போதுதான் ஒற்றுமை ஏற்ப்பட்டு இருக்கின்றது... பார்ப்போம்....ஜெயலலிதா இறந்த மீனவ்ர் குடும்பத்துக்கு போய் ஆறுதல் சொல்லிவிட்டு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து விட்டு  வந்து இருக்கின்றார்... பிரதான எதிர்கட்சி தலைவியாக கச்சத்தீவை மீட்பதே சரியான தீர்வு என்று சொல்லி இருக்கின்றார்... சந்தோஷம்... மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கபடும் என்று தேர்தல் ஆணயம் அறிவித்து இருக்கின்றது...
===================

Soul Kitchen-2009 உலகசினிமா/ஜெர்மனி/தன்னம்பிக்கையின் வெற்றி







பெருநகரங்களில் நாம பாட்டுக்கு நம்ம  வேலையை பார்த்துகிட்டு சிவனேன்னு போனாலும் அப்பு வைக்கறதுக்குன்னே அலையும் குருப் இருக்கே அதுங்க சும்மா இருக்காதுங்க...நம்மலை சும்மா  சும்மா  நோன்டிகிட்டே இருக்கும்... அதுங்களுக்குதான் பொழப்பு இல்லை நமக்கு கூடவா இல்லைன்னு போயிகிட்டே இருக்கனும்.... ஆனா நம்ம வாழ்வாதாரத்தில் கை வைத்தால் ஒம்மால உண்டு இல்லைன்னு பண்ணிடனும்... அப்ப எதையும் வச்சி பார்க்கவே கூடாது.....

ROMANCE -1999 /பிரான்ஸ்/18+காதலுக்காய் தவிப்பவள்..





எச்சரிக்கை அலுவலகத்திலோ அல்லது பொது இடத்திலோ இந்த பதிவை  படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள படுகின்றார்கள்....

பொதுவாக நாம்தான் காதலையும் காமத்தையும் போட்டு இரண்டு விதமாக போட்டு குழப்பிக்கொள்கின்றோம்.... அங்கே காதல் என்றாலே காமம்தான் போலும் எனக்கு இது ரொம்ப லேட்டாகதான் புரிந்தது....காதல் என்றால் புனிதம்... காமம் என்றால் அசிங்கம் இதுதான் நமது பார்முலா--- ஆனால் அங்கே லவ் என்றால் காதலுக்கும் காமத்துக்கு ரெண்டுத்துக்கும் அதேதான்... லவ் என்ற வார்த்தைக்கு காதல் மட்டும்தான் என்று ஜல்லியடிக்கவில்லை....

மினிசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/23/01/2011)

ஆல்பம்...
மோபைல் போர்டபிலிட்டி சேவை வந்த பிறகு... பொட்டிப்பாம்பாக அடங்கி விட்டார்கள்.. நான் வெகு நாளாய் என் வீட்டின் சுற்றுபுறங்களில் ஏர்டெல் சிக்னல்  இல்லை என்று கூவி இருந்தேன்...ஆனால்மொபைல் போட்டபிலிட்டி சேவை வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன் ஏர்டெல் சிக்னல் சரிசெய்யப்பட்டது... இப்போது ஏர்டெல் மொபைல் நெட்ஒர்க்கில் நீங்கள் எங்களுடன் இணைந்து இருப்பதற்கு எங்கள்  நன்றி...  என்று குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்...அது--------------

themba a boy called hope/உலகசினிமா/சவுத்ஆப்பிரிக்கா...நெகிழ வைக்கும் தன்னம்பிக்கை.


எயிட்ஸ் நோய் குறித்து பல திரைப்படங்கள் வந்து இருக்கின்றன.. ஆனாலும் எயிட்ஸ் பற்றிய பயமும் நிவர்த்தி செய்ய முடியாத கேள்விகளோடும்தான் நம்மவர்கள் வாழ்க்கையை நடத்து கின்றார்கள்..காரணம் கூச்சம்...எதையும் வெளிப்படையாக கேட்டு புரிந்து கொள்ளாமை...


எயிட்ஸ் நோய் பெண்களிடம் போய் விட்டு வந்தால் வந்து விடும்.. எயிட்ஸ் என்ற வார்த்தையை காதில் விழுந்ததும் மனதில் தோன்றும் பிம்பம் என்ன? இரண்டு பேர் அவுட்டாப் போக்கசில் புணர்ந்து கொண்டு இருப்பதுதான் நம்மவர்களுக்கு நினைவில் வரும்...


முதல் கவர்ச்சி அறிமுகம்(கா.ஓ.கா.போ)

1991க்கு முன் தமிழகம் என பிரித்துதான் பார்க்க வேண்டும்... காரணம் 90க்கு பிறகு டிவி மீடியம்  சக்கை போடு போட்டு தாக்கியது  அதனால் 90க்கு முன் 90க்கு பின் என்று  பிரித்து பார்க்கலாம்....80களில் இருந்த சிறுவர்களுக்கு  முதல் கவர்ச்சி பரிட்சயம் எப்போது ஏற்ப்பட்டது என்று யோசித்தேன்.. கவர்ச்சி  பரிச்சயம் எப்போது என்ற கேள்வி உதித்ததின் விளைவே இந்த பதிவு..


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+புதன்(19/01/2011)late 8 hours

ஆல்பம்...

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் இந்த புதன்கிழமை போஸ்ட் 9மணிநேரம் லேட். லேட்டுக்கு காரணம் பிஎஸ்என்எல் 3ஜிதான் முக்கியகாரணம்.... நேற்று நேரம் கிடைக்கும் போதே எழுதி போஸ்ட் போட முயற்ச்சித்த போது காலைவாரிவிட்டது.. இப்போதுதான் சரியாகி இருக்கின்றது..
==========

சபரிமலை விபத்து குறித்து விசாரனை நடத்தினால் கூட்ட நெரிசல் காரணம் என்று முதல் கட்ட விசாரனை திருவாய் மலர்ந்து இருக்கின்றது... அது எவனுக்குதான் தெரியாது...?? முதலில் அங்கு இருந்த ஆட்டோ டிரைவர்கள் ஜீப்பில் சவாரி ஏற்றுவது பிடிக்காமல் ஜீப்பை தள்ளிவிட்டு இருக்கின்றார்கள்.. அதனால் ஜிப் இறக்கத்தில் தறிகெட்டு ஓடும் போது ஏற்ப்ப்ட்ட கூட்ட நெரிசலின் காரணமாக இறந்து போனார்கள் என்று சொன்னார்கள்.. பயத்தில்கடைகளில் வந்து தஞ்சம் அடைந்த பக்தர்களை அங்கு இருந்த கடைகாரர்கள் கழியால் அடிக்க இன்னும் கலவரம் அதிகமாகி உயிரிழப்பு அதிகமாகி இருக்கின்றது என்று அங்கு இருந்து வந்த பொது மக்கள் சொல்கின்றார்கள்..ஆனால் முதல் கட்ட விசாரனை கூட்ட நெரிசல் என்று சொல்கின்றது... பேஷ் பேஷ் ரொம்ப ரொம்ப நன்னா இருக்கு....


நன்றி நண்பர்களே.. உதவிய உள்ளங்களுக்கு மிக்க நன்றி...


ஒரு இயக்குனரோடு பேசிக் கொண்டு இருந்த போது.. இன்று செவ்வாய்கிழமை இன்றுதானே துணிகள் கொடுக்க கடைசி தினம் என்ற போதுதான் எனக்கு காலையில் போன் பண்ண நினைத்து மறந்து போனது நினைவுக்கு வந்தது...  பொதுவாய் தமிழகத்தில் இருந்துதான் உதவி தேவையாய் இருந்தது..


 முக்கியமாக சென்னையில் இருந்து.. பணம் தேவையில்லை என்று முதலிலேயே சொல்லி இருந்தேன். என்னிடம் துணிகள் உள்ளன யாரிடம் தொடர்பு கொள்ள வெண்டும் என்று கேட்ட போது நண்பர் அருன் நம்பரை கொடுத்தேன்.. பணமாக கொடுக்கின்றேன் என்று கேட்ட வெளிநாட்டு நண்பர்களிடத்தில் கண்டிப்பாக மறுத்தேன்...   நான் பதிவிட்டதற்க்கு நிறைய பேர் எனக்கு போனில் நன்றி சொன்னார்கள்..எம்மக்கள் என்று எழுதியதற்கு பலர் வாழ்த்து சொன்னார்கள்... இது என் கடமை.....அவ்வளவுதான்..

இனிதே நிறைவு பெற்ற சென்னை 34வது புத்தகக்கண்காட்சி..



தினமும் புத்தக்கண்காட்சிக்கு போனேன்... எதாவது புத்தகம் வாங்கி வந்தேன்... தொடர்ந்து 5 நாட்கள் போனேன்.. நிறைய நண்பர்கள் நல விசாரிப்புகள்.. நடுவில் சிறிது வேலை அதனால் சில நாட்கள் போகவில்லை..

நிறைவு நாளுக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்பதால் நிறைய வேலைகள் முதல் நாளே எல்லா வேலையையும் முடித்து வைத்தேன்..மறுநாள் காலையில் இடது கை விரல்களை நீட்டவோ மடக்கவோ முடியவில்லை... தலையை திருப்ப முடியவில்லை...

இரவில் தப்பாக கைவைத்து தலையை ஏதோ ஒரு கோணத்தில் வைத்து படுத்து இருக்கவேண்டும்.. அல்லது வயது ஆகிவிட்டது என்று ஒத்துக்கொள்ளவேண்டும்.. ஆனால் அது சாத்தியம் இல்லை என்பதால் தூங்கிய நிலை மீது பழியை தூக்கி போட்டேன்...


வெறிச்சோடிய சென்னை...பொங்கல்/2011

 (லலிதா ஜிவல்லரி எதிரில்)

 பரபரப்பானசென்னை  பொங்கல் தினமான இரண்டு நாளைக்கு தனது பரபரப்புக்கு மூட்டை கட்டி வைத்து விட்டு சோம்பலோடு சனிக்கிழமை பொங்கல் அன்று  சென்னை கண் விழித்தது... 



சென்னையில் 144 தடை உத்தரவு போட்டது போல சென்னை வெறிச்சோடி போய் விட்டது... பொங்கல் காலை சென்னை திநகர் போன போது 365 நாட்களும் திறந்து வைத்து இருக்கும் போத்திஸ், சரவணா பிரமாண்டமாய்  போன்றவை திறந்து வைத்து இருந்தார்கள்...


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/ஞாயிறு(16/01/2011)

ஆல்பம்..


திரும்பவும் பெட்ரோல் விலையை ஏற்றி தனது மக்கள் சேவையை எண்ணெய் நிறுவனங்கள் செய்து இருக்கின்றன... காங்கிரஸ் மத்திய அரசு இது பற்றி எல்லாம் அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை... எப்படி இருந்தாலும் என்ன விலை இருந்தாலும் பெட்ரோல் போட்டு வண்டியை ஓட்டித்தானே  ஆகவேண்டும் என்று இருமாப்புடன் இருக்கின்றது......இந்த விலை உயர்வை பொங்கல் போனஸ் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்..
==========
எதிர் கட்சியான பா ஜ க பெட்ரோல் விலையை ஐந்தரை ரூபாயை குறைக்க சொல்கின்றது. செவி சாய்குமா மத்திய அரசு.? இப்போதாவது மக்கள் பிரச்சனைக்கு பாஜகமதிப்பு கொடுத்து  பிராதான எதிர்கட்சியாக குரல் கொடுத்து இருக்கின்றதே அதுவே பெரிய விஷயம்... பார்ப்போம்..
================

ஆடுகளம்...ABC சென்டர்மட்டும் இல்லாமல் DEFGHIJK சென்டர் வெற்றி...



இந்த படத்தை சீக்கிரமாக நான் பார்க்கவேண்டும் என்று நினைக்க முக்கிய காரணம். இந்த படத்தின் புரொட்யூசர் ஒரு டிவி பேட்டியில்  வெற்றிமாறனை பக்கத்தில் வைத்துக்கொண்டு  இன்டர்வெல் பிளாக் மட்டும் 17 நாளைக்கு ஷுட் செய்தார் என்று சொல்ல.. எனக்குள் இருக்கும் சினிமா மிருகம் விழித்துக்கொண்டது..அப்படி என்ன இன்டர்வெல் பிளாக் ??? அது 17 நாளைக்கு ஷுட் செய்யும் அளவுக்கு என்று பார்க்கவேண்டிய ஆவலை தூண்டிவிட்டு விட்டார்கள்..

தனுஷ் அம்மா பாத்திரத்துக்கு தேர்வு செய்த இடத்தில் இந்த படத்தின் இயல்புத்தன்மை பளிச்சிடுகின்றது.


ஈழத்தமிழ் குழந்தைகளுக்காக ஒரு உதவி.. அவசரம்..

பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும். என்ற பழமொழி யாருக்கு சரியாக பொருந்துகின்றதோ இல்லையே எமது ஈழதமிழர்களுக்கு மிகச்சரியாக பொருந்தும்...

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் போருக்கு முன் சுனாமி தன் ஆக்டோபஸ் கரங்களால் நிறைய பேரை மரித்து போக செய்தது... அந்த வேதனை தீர்ந்தவுடன் அடுத்து என்ன செய்யலாம் என்று  யோசித்த காலதேவன்

 முள்ளிவாய்க்காலில் நான்காம் கட்ட ஈழ போரில் பாரிய இழப்புகளை சந்தித்து எம் உறவுகள். , நிறைய பேரை கிளஸ்டர் குண்டுகளுக்கு தின்னக்கொடுத்து பலர் இறந்து போனார்கள் ...அதில் உயிர் பிழைத்த எம் உறவுகள் உயிர் தப்பி  வெளிச்சிறையில் வாடினார்கள்... அந்த வடு இன்னும் மறையவில்லை...


சிறுத்தை...அக்மார்க் தெலுங்கு கமர்சியல் பாய்ச்சல்..



அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்


தெலுங்கு விக்ரமுடு தமிழ் பேசி இருக்கின்றது. அதே தொங்கரா சட்னி காரத்துடன்...

இந்த படத்தை தெலுங்கில் பார்த்துவிட்டேன்..ரவிதேஜாவுக்கு என்றே பின்னப்பட்ட ஆக்ஷன் தம்மாக்கா..திரைக்கதை.... அந்த கேரக்டருக்கு கார்த்தி எப்படி பொருந்துவார் என்று யோசித்தேன்... சும்மா சொல்ல கூடாது.. கார்த்தி புகுந்து விளையாடி இருக்கின்றார்.

திரும்பவும் இந்திய மீனவன் சுடப்பட்டான்...இந்தியா கடும் கண்டனம்.

இந்திய மீனவன் சுடப்பட்டான்.. இந்திய தனது கண்டனத்தை அழுத்தமாக பதிவு செய்து இருக்கின்றது....நல்ல விஷயம்தான்...

இந்த்தியாவின் கடை கோடி மீனவனான அவனும் தேசிய கீதம் ஜனகனமணதாள்பாடுகின்றான் என்று  தேர்தல் நேரத்தில்லேட்டாக உரைத்தகாரணத்தால் இந்திய கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றது...

தமிழக மீனவன் என்று சொன்னால் யாரும் கண்டு கொள்ளமாட்டேன் என்கின்றார்கள்.. அதனால்தான் இந்திய மீனவன்...


தமிழக போலிசிடம் மாட்டினால் என்ன செய்யவேண்டும்????



சார் நான் கஞ்சா விக்கறவன்...
ஓடிப்போயிடு...
ரெண்டு ரேப் நாலு கொலை பண்ணி இருக்கேன்..
நீயும் ஓடிப்போயிடு
சார் நான் அபின் ஹோல்செல் டீலர்..
நீயும் ஓடிப்போயிடு...

இப்படிப்பட்ட பெருங்குற்றம் செய்த ஆட்களுக்கு அட்வைஸ்செய்வதல்ல இந்த பதிவு.. சாமனிய நடுத்தர மக்களுக்கான பதிவு இது...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/புதன்(12/01/2011)

ஆல்பம்..


இயக்குனர் சீமான்... காங்கிரஸ் கட்சியை எதிர்க்க அதிமுகவை ஆதரிக்க போவதாக அறிக்கை விடுத்தார்...அதை பலர் ரசிக்கவில்லை.. நாளை அதிமுக காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக்கொண்டால் என்ன செய்வார்...?? எனென்றால் இன்னும் தேர்தலுக்கு  பலநாட்கள் இருக்கின்றது... காட்சி மாறுவது அரசியலில் சாதாரணம்.... பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்..


=========================
காமெடி நடிகை சோபனா திடிர் என்று தற்கொலை செய்து கொண்டு விட்டார்.. பொதுவாக நடிகைகள் தேர்ந்து எடுக்கும் கயிற்றைதான் அவரும் கடைசிநேரத்தில் நம்பி  இருக்கின்றார்....டிவி நிகழ்ச்சிகளில் ஷோபனாவோடு பணி புரிந்து இருக்கின்றேன்... ஆசிரியர் தொழிலுக்கு போய் விட்டு இரண்டு வருடத்துக்கு முன் திரும்ப திரையுலகம் வந்த போது சுறா படத்தில் ரியாஸ்கானின்  மனைவி கேரக்டரில் நடித்தார்...ஆலப்புழாவில் படப்பிடிப்பு அப்போதுதான் அவரை கடைசியாக சந்தித்தேன்.. நல்ல பெண்மணி  சிரிக்க சிரிக்க பேசுவார்...அவர் குரலில் லோக்கல் பேச்சின் வசீகரம் இருக்கும்.. உதாரணமாக ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் வடிவேலு மனைவியாக  செல்லத்தாயி என்ற கேரக்டரில் நடித்து இருப்பார்..நான் யார்  என்று வடிவேலு கேட்க? புருசன் என்று ரொம்ப சலித்துக்கொண்டு சொல்லுவார்.... நல்ல  திறமையான நடிகை... இன்னும் அவர் தற்கொலையில் மர்மம் நீடிப்பதாக  காவல்துறை சொல்கின்றது... அவர் ஆன்மா  சாந்திஅடைய இறைவனை வேண்டுகின்றேன்.


ஒரே நம்பர் ,எனிஆபரேட்டர் பிளான்..பயப்படும் ஏர்டெல் நிறுவனம்..

இன்று இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர் வைத்து இருக்கும்  நிறுவணம் ஏர்டெல் கைபேசி நிறுவனம்.

பத்து வருடமாக எனது எர்டெல் நம்பரைமாற்றாமல் வைத்து இருக்கின்றேன்.. இன்கம்மிங்கு 50 பைசா எடுத்துக்கொள்வார்கள். அப்போதில் இருந்து வைத்து இருக்கின்றேன்...

ஆரம்பத்தில் ஏர்டெல் தனது நெட்வொர்க்கின் சேவையாலும், விளம்பரயுக்தியாலும் சென்னையை பொறுத்தவரை ஏர்டெல் நம்மபர் ஒன் இடத்தை பிடித்தது...


black lamb-2009- உலகசினிமா/ ரஷ்யா/ கிராமத்தான்...



நம்ம ஊரில் ஒரு பேச்சு இருக்கும் கொஞ்சம் தலை காய்ந்து இருந்தாலோ அல்லது பேச்சில் கிராமத்து வாடை இருந்தாலோ அவர்களை கிராமத்தான் என்று அவர்களை எள்ளி நகையாடுவதும் அவர்களை நகரத்தார் மிக கேவலமாக நடத்துவதும் என  நாம் நிறைய பார்த்து இருக்கின்றோம்.. 

 கிராமத்தில் இருந்து ரஷ்யநகரத்துக்கு வரும் ஒரு கிரமத்து குடும்பம் படும் பாட்டை நகைச்சுவையுடன் சொல்ல வந்து இருக்கும் படம் இது...


VIRTUALLY A VIRGIN-2008-18+ உலகசினிமா/ஹங்கேரி/காதலியை விபச்சாரியாக்கும் கதை.




அங்காடி தெரு படத்துல ஒரு சின்ன சீன்...இரண்டு பேர் காதலிப்பாங்க... அதுவும் சாதாரண காதல் இல்லை.. உயிருக்கு உயிராய் காதலிப்பாங்க... முதலில் அவன் தான் அந்த  பெண் பின்னாடி சுத்தி காதலை வெளிபடுத்துவான்..ஒரு கட்டத்தில்  காதல் வெளியே தெரிய அந்த கடை மேனேஜர் விசாரிக்கும் போது அடுத்த வேலை சோத்துக்காகவும்  எதிர்கால வாழ்நிலை பற்றிய பயம் காரணமாகவும்... 

நான் இந்த புள்ளயை காதலிக்கலை என்று பத்து பேர் முன்னாடி சொன்னதுக்காக மாடியில் இருந்து குதித்து உயிரை அந்த பெண் விட்டு விடுவாள்..  அந்த பெண் உயிரை விட ஒரே காரணம்.... ஒரு ஆண்மகனாக
 நான் அந்த பிள்ளையை காதலித்தேன்  என்று சொல்லமுடியாத ஒருத்தனை போய் காதலிச்சு தொலைச்சிட்டமே என்று ஒரு கோபத்திலும் தனது எதிர்காலத்தில் இப்படி ஒரு பேடிப்பையயோடு எப்படி வாழ்வது என்ற பயத்தோடும் உயிர் துறக்கின்றாள்... காரணம் காதலனின் தைரியமின்மை அந்த பெண் உயிர்துறக்க முக்கிய காரணம்....

மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/ஞாயிறு(09/01/2011)

ஆல்பம்..

புத்தககண்காட்சிக்கு தினமும் போகின்றேன்... நிறைய பேரை சந்திக்கின்றேன்...மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது...சென்னையில் இருப்பது இப்படிஒரு  சவுகர்யம்....
=================
ஞாயிறு என்பதால் இன்று கூட்டம் அதிகம்... பதிவர்கள் வருகையும் அதிகம்....மயில் ராவணன்,பரகத்அலி. பெஸ்கி, புருனோ, லக்கி அதிஷா.டம்மிமேவி, கேஆர்பி செந்தில்,மதார்,கேபிள் ,சுரேக்கா,ராஜகோபால் ,சங்கர், விந்தைமனிதன்,ஆயிரத்தில் ஒருவன் மணி,ராஜபிரியன், போன்றவர்களை நான் பார்த்தேன்..... ரிஷி மற்றும் ரமேஷ் போன்ற நண்பர்களைசந்தித்தேன்.
  ==========================
மிக்சர்..
 சாப்பிடும் போது ஹோட்டலில் வாழை  இலைகழுவுகின்றேன்... என்ற பெயரில் அந்த இடத்தையே குளமாக்குபவரை கண்டால் வயிறு எரிகின்றது...ஒழுங்கா கழுவாத எவர்சில்வர் தட்டுல கூட சாப்பிட்டுவிடுவானுங்க..இலையில தண்ணி தெளிச்சி லைட்டா தொடச்சா போதாதோ???
=========


FASTER-2010 தமிழில் துருவன்...அவசரமாக பழிதீர்த்தல்...


நீங்கள் அவசரமாக என்னவெல்லாம்  செய்வீர்கள்...அவசரமாக சாப்பிடுவேன்.. பத்தாவது சர்ட்டிபிகேட் வந்ததும் எம்ளாய்மென்ட் எக்ஸ்செஞ்ல பதிவு பண்ணுவேன் அப்புறம்... சார் அந்த மேட்டருக்கு வேக வேகமா பண்ணதான்சார் கிக்கு.. ரைட் ... நெக்ஸ்ட்..

சார் இந்த பஸ்ல வரும் போது  சட்டுன்னு ஒன்னுக்கு வந்துடும்.. எப்படா? பஸ் நிக்கும்னு பார்த்து அவசரமா ஓடிப்போயி உச்சா  போனாதான்சார்.. நிம்மதி...

சார் எல்லாத்தை விட கொடுமை மவுண்ட் ரோட்ல  பைக்ல போகும் போது திடிர்னு வயித்தைகலக்கிடிச்சின்னு வச்சிக்கிங்க.. அப்ப வரும் பாருங்க ஒரு கோபம் ரொம்ப கொடுமைங்க அது... மத்த எல்லாத்துக்கும் கூட ஒரு தீர்வு கிடைச்சிடும்.. அந்த மேட்டருக்கு ஒரு மறைவிடம் தண்ணீர் எல்லாம் தேவை,, அதனால  அவசரமா அவசரமா டாய்லட் தேடி ஒடுவேன்.... குட் உங்க அவசரத்தை எல்லாத்தையும் சொல்லிட்டிங்க.....

சென்னை 34வது புத்தகக்கண்காட்சி...எனது பார்வையில்...(07/01/2011)




சென்னையில் டிசம்பர் சீசன் என்றால் நினைவுக்கு வருவது சங்கீதசீசன்தான்.. மேட்டுக்குடி மக்கள் ஆலாபனை,சுவரம் என்று அவர்களுக்கு புரியும் பாஷையில் சிலாகித்துக்கொள்வார்கள். நமக்கு அடியும் தெரியாது நுனியும் தெரியாது.... ஆனால் கடந்த எட்டு வருடங்களாக சர்வதேச திரைப்படவிழா சென்னையில் நடப்பதால் நமக்கும் டிசம்பருக்கும் ஏதோசம்பந்தம் இருக்கின்றது....



UNSTOPPABLE-2010/நகரத்தை நாசம் செய்ய வரும் நாசக்கார ரயில்...






சென்னையில் இது போல ஒரு சம்பவம் போன வருடம் ஏப்ரல் மாதம் 29ம்தேதி  நடந்தது.. விடியலில் காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு மின்சார ரயிலை ஒருவன் கடத்தி சென்றான்.. அந்த ரயிலை வெகு வேகமாக செலுத்தி வியாசர்பாடி ஸ்டேசனில் ஒரு சரக்கு ரெயில் மேல் மோதி பெரிய விபத்தானது...எழு பேர் இறந்து போனார்கள்... 20 பேர் படுகாயம் அடைந்தார்கள்.. இன்னும்  ரயிலை கடத்தியவன் யார் என்று தெரியவில்லை... அவன் பைத்தியாமா? தீவிரவாதியா ?? அதுவும் தெரியவில்லை...


வீட்டு திண்ணைகள்.. (கால ஒட்டத்தில் காணாமல் போனவை..).



நாகாரிக வளர்ச்சியில் நிறைய இழந்து வருகின்றோம்... அதில்  முக்கியமானது வீட்டின்  முன் புறத்தில் இருக்கும் தின்னைகள்... இப்போது கட்டப்படும் நகரத்து வீடுகளில் அந்த ஆப்ஷனே இல்லை...கிராமங்களிலும் ஒரு சில இடங்களில் கட்டும் வீடுகளில் திண்ணை வைத்து வீடு கட்டுவதே  இல்லை....


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/புதன்(05/01/2011)

ஆல்பம்..


சென்னையில் புத்தக கண்காட்சி  நேற்றில் இருந்து தொடங்கியது...

இது 34வது சென்னை புத்தக கண்காட்சி..
ஒரு கோடி புத்தகங்கள்.

666 ஸ்டால்கள்...
385பதிப்பகங்கள்.
அனைத்து புத்தகத்துக்கும் 10 பர்சன்ட் தள்ளுபடி...
வரும் 17ம் தேதிவரை நடக்கின்றது..
வேலை நாட்களில் மதியம் இரண்டில் இருந்து இரவு எட்டு வரை..
விடுமுறை  நாட்களில்  11மணியில் இருந்து இரவு 8,30மணிவரை.
இடம்  சென்னை அமைந்தகரை ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி.. பச்சையப்பா கல்லூரி எதிரில்....
===================


MOTEL NANA-2010/உலகசினிமா/செர்பியா/ வாத்தியாருக்கு ஆப்பு...

எல்லா  ஊரிலும் மாணவர்கள்  ஒரே மாதிரியாக இருக்கின்றார்கள்.. வாத்தியாரை ஓட்டுவது என்றால் அல்வா சாப்பிடுவது போல...நான் முதன் முதலாக வகுப்பு எடுக்க போகும் போது நான்  மிகவும் மாணவர்களால் ஓட்டப்பட்டேன்..  கோபம் கொள்ளவில்லை...

நான் அப்படி பட்டவன் இல்லை என்று  என் பேச்சின் மூலமும் என் வகுப்பின் மூலமும் என்னை உணர்த்தினேன்... இன்று சென்னையில்  ஆவிச்சி பள்ளி எதிரே எடிட் ஸ்டுடியோ வைத்து இருக்கும் எனது மாணவன்  கார்த்திக் வீரா எல்லாம்  இன்று வரை மிக நட்பாக இருக்கின்றான்..2005ல் அவர்கள் வகுப்புக்கு போகும் போது என்னை ஓட்டினார்கள்.. இரண்டு நாட்கள்தான்... அதன் பிறகு சரிசெய்து விட்டேன்.. எல்லா புது வாத்தியார்களுக்கும் கல்லூரியில் செட் ஆகும் வரை இந்த பிரச்சனை இருக்கும்.


MY WORDS. MY LIES, MY LOVE/உலக சினிமா/ஜெர்மனி/ ஒரு பிரபல எழுத்தாளனின் பொய் முகம்.


2011 வருடத்தில் இந்த தளத்தின் முதல் திரைவிமர்சனம்....

எனக்கு தெரிந்து தமிழகத்தில்  உள்ள எழுத்தாளர்களில் எழுத்தாளர்களுக்கு இந்த நாட்டில் மதிப்பில்லை என்று 1438 தடவைக்கு மேல் அதிகமாக புலம்பும் ஒரே எழுத்தாளர் சாரு என்பேன்...எனக்கும் இலக்கியத்துக்கும் ரொம்ப தூரம்...ஆனால் ஏன் இப்படி மற்ற தமிழ் எழுத்தாளர்களை விட இவர் இந்த விஷயத்தை எப்போதும் மேடைகளில் பேசி வருகின்றார் என்பது எனக்கு புரியாத புதிர்தான்.

எனென்றால் எந்த வெளிநாட்டுக்கும் போய் முக்கியமாக ஐரோப்பிய தேசத்துக்கு எல்லாம் போய் இலக்கிய சூழலை நான் அறிந்தவன் அல்ல.. அது போலத்தான் பல தமிழ் எழுத்தாளர்களும்... அதனால்தான் சாரு அளவுக்கு புலம்புவது இல்லை... சாரு மட்டும் இப்படி புலம்ப காரணம் சாரு வெளிநாட்டுக்கு போய் இருக்கின்றார்...



போங்கடா நீங்களும் உங்க சாலை பாதுகாப்பு வாரமும்....


ஜனவரி முதல் வாரம்  சாலை  பாதுகாப்பு வாரம்...


வருடா வருடம் ஜனவரி முதல் வாரம் சாலை பாதுகாப்பு வாரம்...கவர்மென்ட் அதுக்கு எதாவது செஞ்சாகனும்.. ஏன்னா கவர்மென்ட் இல்லையா??


நேற்று  சாலைபாதுகாப்பு வாரத்தை கொண்டாடும் வகையில் மெரினாவில் பலூன் பறக்க விடப்பட்டு  போட்டோவுக்கு போஸ் கொடுத்தாகிவிட்டது...அது இன்றைய பேப்பரிலும் வந்து இருக்கின்றது...


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு/(02•01•2011)

ஆல்பம்..

தமிழ்மணம் நேற்று வெளியிட்ட ,தமிழில் 100 முன்னனி வலைபதிவுகள் பட்டியிலில் எனது தளமும் 10க்குள் ஒன்றாக இருந்ததில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.. இந்த இடத்துக்கு நீங்கள் கொடுத்த உற்சாகமான ஊக்கம்தான் காரணம்...இண்ட்லி போல தமிழ்மணத்திலும் தொடர்ந்து ஓட்டுகள் போட்டு உற்சாகபடுத்த வேண்டுமாய்  கேட்டுக்கொள்கின்றேன்...தமிழ்மண குழுவுக்கு எனது நன்றிகள்.
======================


நண்பர்களே இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..2011



அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

பொதுவா சென்னை புத்தாண்டு கலக்கலா இருக்கும்..


எங்க ஊர்ல பொன்விளைந்த களத்தூர் அம்மன் கோவிலில் ஒவ்வோரு வருடமும் பூக்களால் அந்த வருடத்தினை சுவற்றில் எழுதி நள்ளிரவு 12 மணிக்கு ஸ்பெஷல்  அர்ச்சனை அம்மனுக்கு செய்து அம்மனை சேவித்து விட்டு வீட்டுக்கு வருவோம்...

ஆனால் சென்னை புத்தாண்டு எனக்கு சந்தோஷத்தையும் நிறைய வருத்தங்களையும் கொடுத்து இருக்கின்றது..


திரும்பி பார்க்கின்றேன் 2010 ஒரு பார்வை..



வருட கடைசியில் அந்த வருடத்தை திரும்பி பார்ப்பது சுவையான அனுபவம்தான்... முன்பு நான் வருட வருடம் டைரி எழுதி வருவேன்.. ஆனால் பதிவு எழுத அரம்பித்ததில் இருந்து டைரி எழுதுவதை குறைத்து விட்டேன். காரணம் நிறைய பதிவுகள் எழுதுவதால் டைரி எழுதுவது குறைந்து விட்டது..சரி 2010 சும்மா விரிவா பார்க்காவிட்டாலும் ஜஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்...



hello how are you/ உலக சினிமா/ருமேனியா/ 40வயதுக்குமேல் காதல் வருமா??



40 வயதுக்கு மேல் காதல் வருமா? வரும் என்று சொல்கின்றார்க்ள்.. ஆனால் அந்த காதல் என்பது தன் கணவனிடம் மனைவியிடம் வர வேண்டும் அல்லவா?? ஆனால் பலருக்கு அது போல் வந்து தொலைக்கமாட்டேன்கின்றது... அதுதான் பிரச்சனை..


தமிழ் சினிமாக்களில் ஆண் மட்டுமே 40 வயதுக்கு மேல் அடுத்த பெண்னோடு தொடர்பு வைத்து இருப்பதாக காட்டுவார்கள்.. பெண்கள் வீட்டில் மஞ்சள் பூசி குளித்து சாமி கும்பிட்டு கணவனே கண் கண்ட தெய்வமாக வாழ்வதாக காட்டுவார்கள்.. ஆனால் தமிழகம் எப்போதோ மாறிவிட்டது.. அதை எந்த சினிமாவும் பதிவு செய்வது  இல்லை..அப்படியே பதிவு செய்தாலும் காமெடிக்காக பதிவு செய்யபடுகின்றன.


சுனாமிக்கு மறுநாள் நான் எடுத்த மறக்கமுடியாத போட்டோக்கள் ..

சுனாமி வந்து 6 ஆண்டுகள் முடிந்து விட்டன. சுனாமி வந்த போது வடபழனி குமரன் காலனியில்  இருந்தேன்..மீட்பு பணிக்கு இடையூறு செய்யாமல் இருக்க யாரும் கடற்கரைக்கு வரைவேண்டாம் என்று தொலைகாட்சியில் அறிவிப்பு வந்த காரணத்தால் நான் வெளியே போகவில்லை..

தொலைகாட்சியில் ஒரு அம்பாசிட்டர் கார் அண்ணாசமாதி அருகே தண்ணீரில் குதித்துக்கொண்டு இருக்கும் போதே எனக்கு சுனாமி கோரமுகம் தெரிந்து விட்டது...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(29•12•2010)

ஆல்பம்..

2010 ஆம் ஆண்டின் கடைசி சாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ்...  விளையாட்டாய் ஒரு வருடம் ஓடி விட்டது.தொடர்ந்து சாண்ட்வெஜ் வாசித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும் வாசக நண்பர்களுக்கும் என்  நன்றிகள்..
================
மன்மதன் அம்புவிமர்சனத்தை நான் நடுநிலை தவறி எழுதிவிட்டதாக சிலர் வருத்தபட்டு சொல்லி இருந்தார்கள்.. எனக்கு படம் பார்க்கலாம் .. படம் பார்க்க கூடாத அளவுக்கு அம்பு  ஒன்றும் அவ்வளவு மொக்கை இல்லை... ரெண்டாவது நீங்கள் நினைப்பது  போல் எல்லாம் என்னால் விமர்சனம் எழுத முடியாது.. எனக்கு என்ன பிடிக்குதோ.. அதைதான் எழுத முடியும்...


COLD FISH உலகசினிமா/ஜப்பான்18+..கஜ கஜ கொஜ கொஜ மனித கொத்துக்கறி..



போன ஏழாவது சென்னை உலக படவிழாவில் ஆன்ட்டி கிரைஸ்ட் என்ற டென்மார்க் படம் .. படம் பார்ப்பவர்களை  போட்டு தாக்கியது... நிச்சயம் அந்த படத்தை பற்றி எப்படியும் இரண்டு  நாளைக்கு மேல் யோசித்துக்கொண்டு இருந்து இருப்பார்கள்...

பெண் உறுப்பில் இருக்கும்  மொட்டை கத்திரிக்கொலால் வெட்டியும்,கணவனின் ஆணுறுப்பை கட்டையால் அடித்து நசுக்குவதுமாக , அந்த படம் ரத்த வீச்சாக ஒரு பெரிய பரபரப்பை போனசென்னை உலக படவிழாவில் ஏற்படுத்தியது..  அதை விட இன்னும் ஒரு படி மேலே போய் இருக்கின்றது இந்த  கோல்ட் பிஷ் என்ற ஜப்பான் படம்....


Memories of Murder -2003 உலகசினிமா/சவுத்கொரியா( வாழ்வில் மறக்கமுடியாத கொலைகள்...)



மறதி நல்ல விஷயம் தான்ஆனால் அதுக்காக முக்கியமான சில விஷயங்களை மறக்கவே முடியாது அல்லவா?? எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டேதான் இருப்போம்...அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்..


ஈரோட்டு பசங்க பாசக்கார பயபுள்ளைங்கதான்...(ஈரோடு தமிழ் வலைபதிவர் சங்கமம்)

வெளியூர் ஷுட்டிங் போய் பல மாதங்கள் ஆகிவிட்டன. ஈரோடுவலைபதிவர் குழுமத்தில் கலந்து கொள்ள நிறைய அன்பான அழைப்புகள் வந்தன...நான்  போவதா வேண்டாமா? என்ற இரட்டை மன நிலையில் இருந்தேன். இருப்பினும் சனி இரவு 8,30 மணிக்கு போவது  என்று முடிவு செய்து ஈரோடுக்கு வண்டி ஏறினேன்.


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•12•2010)

ஆல்பம்..

இன்னும் 100 நாட்களில்  சென்னை சாலைகள் சரிசெய்யபடும்... அதுவும் மழைபெய்யவில்லை என்றால் சொன்ன நேரத்துக்கு சரி செய்து விடுவோம் என்று துணைமுதல்வர் சொல்லி இருக்கின்றார்.. பார்ப்போம்.. நல்ல சாலை வசதி சென்னைக்கு எப்போது வாய்க்குமோ? பகவானுக்கே  வெளிச்சம்..
===========

இனிதே நிறைவு பெற்ற சென்னை 8வது உலகதிரைப்படவிழா..



நேற்றோடு  சென்னை உலக திரைப்பட விழா நிறைவு பெற்றது. ஒன்பது நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் 40 நாடுகளில் இருந்து 130க்கு மேற்ப்பட்ட படங்கள் திரையிடப்பட்டன...


மன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்.



கமல் படத்தில் முதல் காட்சியிலேயே நடிகர்  சூர்யாவும் திரிஷாவும் ஆட்டம் போடும் போது இது தமிழ்படம்தானா? என்ற ஆச்சர்யங்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன..ஒரு பெரிய நடிகர் படத்தில் வளர்ந்து வரும் ஒரு நடிகர் ஈகோ பார்க்காமல் நடித்து இருப்பது பாராட்டுக்குறியது.


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(22•12•2010)

ஆல்பம்...
கடைசியில் ராசா கைது செய்யப்படலாம் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து கூட தூக்கப்படலாம் என்பதாய் செய்திகள் தெரிவிக்கின்றன..திமுக தலைவரின் சின்ன குடும்பத்தை பழிவாங்க எல்லோரும் ஓர் அணியில் திரண்டு விட்டார்கள் அப்புட்டுதேன்..
===========

நடு ரோட்டில் நிறுத்தும் மாநகர பேருந்தும், நடு ரோட்டில் நிற்கும் பொதுமக்களும்.





சென்னையில் பல காரணங்களை டிராபிக்கு சொன்னாலும் ஷேர் ஆட்டோ மீது பெரும்பாலானவர்கள் பழி போட்டு தப்பி விடுகின்றார்கள்..
ஆனால் அவர்கள் மட்டும் காரணம் அல்ல...


உலகத்திலேயே பேருந்தினை எத்தனை பெரிய டிராபிக்காக இருந்தாலும் நடு ரோட்டில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கும்  பேருந்து ஓட்டுனர்கள்... நமது அரசு பேருந்து ஓட்டுனர்கள்தான்... அவர்களை  யாரும் கேட்க முடியாது.. ஏனென்றால் அவர்களுக்கு சங்கம் இருக்கின்றது.


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•12•2010)

ஆல்பம்..
அவர்கள் அப்படித்தான் பேசி இருக்கவேண்டும். என்ன பேசி இருக்கவேண்டும்..?? மச்சி இதுதான் நல்ல நேரம்.. நாடளுமன்றம் முடங்கி 20 நாளைக்கு மேல ஆக போகுது..  சோ இந்த நேரத்துல பெட்ரோல் விலையேத்த சரியான நேரம் என்று ஆயில் கம்பெனிகள் அவசர கூட்டம் போட்டு சரக்கு அடித்தபடி இப்படித்தான் பேசி இருக்கவேண்டும்.


(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ்.. ஒரு கலீஜ் தியேட்டர்...


நாம் கலீஜ்  என்று முகம் சுளிக்கும் இடத்தில்தான் பல பேர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்... அவர்களும் மனிதர்கள்தான்... அவர்களும் நம்மை போலவே இந்த பூமியில் வாழ வந்தவர்கள்...பிறப்பின் பின் புலத்தால் அந்த இடத்தில் வாழ்கின்றார்கள்...இந்த உலகில் எதுவுமே கலீஜ் இல்லை... முகம் சுளித்தால் எங்கும் வாழ முடியாது....உயிர் வாழ தகுதியுடையவனாக தன்னை மாற்றிக்கொள்ள எந்த இடத்திலும் எது செய்தாவது வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய கதை இது....



சென்னையில் உற்சாகமாக துவங்கிய 8வது உலகபடவிழா...(புகைபடங்களுடன்)

(உட்லண்ட்ஸ் தியேட்டரின் முகப்பு வழக்கமான கூட்டத்தை விட இந்த முறை அதிக கூட்டம்.)

எட்டு வருடங்களுக்கு முன் உலக திரைப்படம் கிலோ என்னவிலை?? என்று  நான் கேட்ட நேரம் அது... மிகசரியாக எட்டு வருடங்களுக்கு முன் ஒரு நண்பர் பிலிம் பெஸ்ட்டிவலுக்கு பாஸ் வாங்கிவிட்டு தன்னால் போக முடியவில்லை நீ வேண்டுமானால் போய் விட்டு வா என்று சொன்னார்...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(15•12•2010)

ஆல்பம்.


பெட்ரோல் விலை லிட்டருக்கு 3ரூபாய் ஏறி இருக்கின்றது ஒரு பத்து வருடத்துக்கு முன்பு லிட்டர் 35ரூபாய் விற்ற போது பெட்ரோல் விலையேற்றங்கள் 30 காசு மற்றும் 75 காசுகளில் மட்டுமே விலையேற்றம் இருக்கும் ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லை... ரூபாய்களில் விலை ஏறிக்கொண்டு இருக்கின்றது. முன்பு பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை காரணம் காட்டி நான்கு ரூபாய்க்கு விற்ற டீ 5ரூபாய்க்கு ஆனது. இப்போது  டீசல் விலை உயர்வை அறிவிக்கவில்லை அறிவித்து இருந்தால் சிங்கள் டீ ஆறுரூபாய் ஆகி இருக்கும்..


சாருநிவேதிதாவின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா ஒரு பார்வை.(13/12/2010)




உயிர்மை பதிப்பகம் வெளியீடும்  எழுத்தாளர் சாருவின் புத்தக வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில்  நேற்று மாலை நடைபெற்றது. காமராஜர் அரங்கத்தில் நுழையும் போதே சாருவின் துணைவியார் அவந்திகா மற்றும் கருப்பு பேன்ட் ,சிவப்பு சட்டை போட்ட ஒரு  பெண்மணியும் வந்தவர்களை வரவேற்று முதலில் டீ , சமோசா சாப்பிட்டு  வர அன்புடன் கேட்டுக்கொண்டார்கள்.


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•12•2010)

ஆல்பம்.
நாடளுமன்றம் இருபது நாட்களுக்கு மேல் தொடர்ந்து முடங்கி கிடக்கின்றது.. இந்த வாய்ப்பு   எப்போதும் கிடைக்கபோவதில்லை என்று எதிர்கட்சிகளும் விடாபிடியாக இருக்கின்றன...என்றைக்கு மக்கள் நலன் மீது இவர்களுக்கு அக்கறை இருக்கின்றது. இப்போது மட்டும் இருக்கபோவதற்கு??
====================

8வது சென்னை உலகதிரைப்படவிழா பற்றிய அறிவிப்பு...



எனக்கு ஒரு கடிதம் வந்தது.. அந்த கடிதம்  சினிமாவை விரும்பி  பார்ப்பவரின் கடிதம்...

 
அன்புள்ள ஜாக்கி ஸாருக்கு,



சென்னை அடையாறு ஆற்று வெள்ளம் ஒரு அட்வென்சர் பயணம் (புகைபடங்களுடன்)

நம்மை பொறுத்தவரை மழை நின்று விட்டது.. குண்டு குழியான சாலைகள் ஏன் இன்னும் செப்பனிடபடவில்லை என்ற கேள்வி மட்டுமே நம் செசன்னைவாசிகள் பெரும்பாலோனோர் மனதில் தொங்கி நிற்கும் கேள்வி.


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner