மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு/(02•01•2011)

ஆல்பம்..

தமிழ்மணம் நேற்று வெளியிட்ட ,தமிழில் 100 முன்னனி வலைபதிவுகள் பட்டியிலில் எனது தளமும் 10க்குள் ஒன்றாக இருந்ததில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.. இந்த இடத்துக்கு நீங்கள் கொடுத்த உற்சாகமான ஊக்கம்தான் காரணம்...இண்ட்லி போல தமிழ்மணத்திலும் தொடர்ந்து ஓட்டுகள் போட்டு உற்சாகபடுத்த வேண்டுமாய்  கேட்டுக்கொள்கின்றேன்...தமிழ்மண குழுவுக்கு எனது நன்றிகள்.
======================



2011 ன் முதல் மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் உங்களை அன்புடன் வரவேற்க்கின்றது..இந்த வருடம் உங்களுக்கு எல்லா செல்வமும் கிடைக்கபெற எல்லாம்  வல்ல பரம் பொருளை வேண்டிக்கொள்கின்றேன்...
======================
இந்த வருடம் சென்னை மெரினா கடற்கரை சாலையில் எந்த வாகனத்தையும் அனுமதிக்காமல் தடை செய்து விட்டார்கள்... யாரையும் அனுமதிக்கவில்லை.  பொதுவாக  மெரினா சாலையில் புத்தாண்டு பிறந்ததும் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டே புத்தாண்டு நல்வாழ்த்து   சொல்வார்கள்.. இந்த முறை அந்த சாலையில் அனுமதிக்கவில்லை.. நான் மெரினாவுக்கு போகவில்லை ஆனால் எனது திருவல்லிக்கேணி மேன்ஷன் நண்பர்  போலிஸ் கெடுபிடிகள்  சொல்லி  வருத்தபட்டார்... சரி...எல்லாத்தை விட முக்கிய விஷயம் இந்த முறை எந்த அசம்பாவித சம்பவமும் ஏற்ப்படவில்லை என்பது சந்தோஷமே...
=================
கலைஞர்  ஏழைகளுக்கு கான்கிரிட் வீடுகள் வழங்கும் விளம்பர படத்தை தொடர்ந்து கலைஞர் தொலைகாட்சி ஒளிபரப்பி வருகின்றது...ஸ்பெக்ட்ரத்துக்கு மாற்று இது என்று பலர் சொன்னாலும்.. அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதவது  என்று வரும்  அந்த பாடல் வரிகள் காட்சிகளும்  சிறப்பு...

===============
மிக்சர்..

 என்னுடை மனைவி  உறவுக்காரர் வீட்டுக்கு போய் இருந்தோம்.. பையன் ஆபிசில் இருந்து வந்து இருந்தான்... காபி கேட்டான்... அதை கொடுக்காமல் திருமதி செல்வம் சீரியலில் தங்கை  கல்யாணத்துக்கு 50 பவுன் நகை கேட்டு இருப்பார்கள்..முதல் நாள் அந்த தொடரை ஏதோ காரணத்துக்கு பார்க்க முடியவில்லை...  50 பவுனுக்கு காசு எப்படி ரெடி செஞ்சான்னு  பார்த்துட்டு  உனக்கு காப்பி கொடுக்கின்றேன்.. என்று சொன்ன போது தமிழ் தொலைகாட்சி தொடர்களின் வீச்சு நினைத்து பிரமித்து போனேன்...

==========================

தொலைகாட்சி தொடர்களில் நிறைய  கதாபாத்திரங்களை வில்லானாக சித்தரித்து வித்யாசத்துக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும்  போது கலைஞர் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடரில்  பெண் குழந்தை ஒன்று  வில்லத்தனமாக பேசுகின்றது.. தொடர் பெயர் உறவுக்கு கை கொடுப்போம்... நான் பயந்து விட்டேன்...
குழந்தைக்கு  இரண்டரை வயது இருக்கும்.. அது பேசும் சில சாம்பிள் டயலாக்...

டேய் நீ நாசமா போயிடுவடா...

நீ வௌங்காம போயிடுவ..

இப்படியே  பண்ணிகிட்ட இருந்த நீ செத்து போயிடுவடா..

டேய் உங்களை பழி வாங்காம விடமாட்டேன்.. என்று வாடா போடா என்று  பேசுகின்றது... அப்புறம் விசாரித்த போதுதான் தெரிகின்றது... அந்த குழந்தைக்குள் ஆவி புகுந்து விட்டதாம்....என்ன கொடுமை சரவணன் இது..
======================
இந்தவார சலனபடம்...

புது வருடத்தில் மகிழ்ச்சியாக ஆரம்பிப்போம்.. மிஸ்டர் பீன் பார்த்து இருப்பீர்கள்... இந்த பகுதி எனக்கு ரொம்ப பிடித்த பகுதி..பீன் சேட்டைகளுக்கு நான் ரசிகன் என்றாலும்.. காப்பி அடிக்க அவர் படும் பாடும்.ஸ்டாப் ரைட்டிங் என்று சொல்லும் போது பீன் கொடுக்கும் ரியாக்ஷ்ன் பார்த்து நீங்கள் சிரிக்கவில்லை என்றால் உங்கள்  மனைவி பாவத்தை செய்தவர் என்று அர்த்தம்...










==================
நன்றிகள்...

எப்போது எனக்கு கம்யூட்டர் பற்றிய பிரச்சனை என்றாலும், சந்தேகத்தை எந்த நேரத்திலும் தீர்த்து வைப்பவர்.. கணனி மென்பொருள் கூடம் எழுதும் வடிவேலன் ஆர்...

மிக்க நன்றி....

எனது தளத்திலும் எனது நெட்டிலும் எந்த பிரச்சனையும் இல்லை..இண்டர்நெட்எக்ஸ்புளோரரில்  பாக்கமால் மோசில்லா அல்லது கூகுள் குரோமில் பார்க்கவும். என்று சொல்லி  இருக்கின்றார்....
=====================

எனக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அத்தனை பேருக்கும்...... என் இதயம் கனிந்த நன்றிகள்..
==============

பார்த்ததில்  பேஜார் ஆனது...

ரிமோட்டில் சேனல் மாற்றிக்கொண்டு வரும் போது ஜெயா பிளஸ் தொலைகாட்சி நிகழ்ச்சியில்  அழகு என்று  ஒரு புரோகிராம்மில் ஒரு பெண்மணி பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்..கேள்விகேட்ட பெண்மணி தனது பெயர் ஊர் எல்லாத்தையும் அறிமுகபடுத்திக்கொண்டு மேடம் எனக்கு இடுப்புக்கு கீழ  முடி கரு கரு ன்னு வளர நான்  என்ன செய்ய வேண்டும்? என்று மொட்டை தாத்தான் குட்டையில் விழுந்தது போல் கேள்வியை கேட்டு வைக்க
எனக்கு பகிர் என்றது... அந்த கேள்வியின் தன்மை புரிந்து கொண்ட அந்த பெண்மணி மெலிதான சிரிப்புடன், இது எல்லாம் பரம்பரையால் வருவது அதனால் நீங்கள்  எதுவும் செய்யமுடியாது என்றார்.. கேள்வி தன்மை குறித்து பதில் அளிக்கும் பெண்மணி திரும்பவும் சிரித்து விட்டார்....நான் சின்ன வயசுல இருந்து நன்கு பராமரித்து வளர்த்து இருந்த காரணத்தால் பெரிதாக வளர்ந்து விட்டது... இப்போது நாங்க கட் பண்ணிட்டோம் என்றார்...எனக்கு செமை டென்சன்... இந்த வயசுல இடுப்புக்கு கீழ  நிறைய வளராது அப்படியே வளர்ந்தாலும் இரண்டு இஞ்சுக்கு வளராலாம் அவ்வளவுதான்... மேடம் வராத்துக்கு எத்தனை முறை தலை குளிக்கலாம் என்று கேட்க ஒன்னு விட்டு  ஒருநாள் தலைகுளிக்கலாம் என்று  இப்படியாக அந்த டாக் போய்கொண்டு இருந்தது... கடைசியில்  வாரத்துக்கு எத்தனை முறை தலை குளிக்கலாம் என்ற  கேள்வி கேட்ட போதுதான் பதில் சொல்லும் பெண்மணி திரும்பவும் சிரித்தார்....எனக்கு டென்சனோ டென்சன்...பதில் சொல்றவங்களாவது கொஞ்சம் தெளிவா சொல்லி இருக்கலாம்... கேள்வி கேட்டவங்க  லைன் கிடைச்ச பதட்டத்துல வார்த்தையை முழுங்கிட்டு பேசலாம்.. ஆனா பதில் சொல்லறவங்க...???



==========

இந்தவார கடிதம்..




Dear Jackie Anna.,

                       Wish You Happy New Year 2011..

And I am reading ur Blog regularly whenever time getting.. And i read a World Cinema about Memories of Murder.. When i read it, Very excited and more interest came through me to see that film at any of cost..I download the movie by Tottents and saw the Movie at New Year Eve 31.12.2010.. It was a fantastic Movie which i have ever seen..Great Picturisation and Two contrast thinking Investigating Officers acting throught the Film is fantastic and lots of teaching to our  actors in Indian Film makers..

              I fortunately got the English Sub Title on that film which helped me to more understandable..And one more film SERBIS also saw.. It clearly shows the people in Philipines and little bit non understandable because of Eng Sub Title not get down for that film... 

Wishes From.,
M.Annapushparaja.,
Fujairah, UAE..
==================
நான் உலக படங்கள் எழுதும் போது அந்த பதிவுகளுக்கு, போதுவாக புது படம் அல்லதா எந்த படத்துக்கு பெரிய வரவேற்ப்பு இருக்காது.. ஆனால் இது போலான கடிதங்கள் வரும் போது நிறைய எழுத  தோன்கின்றது...நன்றி அன்ன புஷ்பராஜா...நான் மெரிமரிஸ் ஆப் மர்டரர்ஸ் படம்  எழுதும் போது பார்க்கும் போது என்ன உணர்ந்தேனோ உங்கள் கடிதமும் அதைதான் உணர்த்துகின்றது...

மிக்க நன்றி

பிரியங்களுடன்
ஜாக்கி..
 ===============
hello jackie sir,

i am a regular reader of our blog.this is the first time i posted a comment.u made the change immediately.thank u.i am at present @ vizag,but my native is vikravandi near villupuram.

========

 மிக்க நன்றி சோமு...ஒரு நாள் சந்திப்போம்
=====================

பிலாசபி பாண்டி..

பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோஎன்றுநினைக்கத்தொடங்கினால் அவர்கள் உங்களைப் பற்றிநினைக்காததைஎல்லாம் நினைப்பதாக நீங்கள்நினைத்துக் கொள்வீர்கள்.  அதனால இந்த வருடத்தில் இருந்து இந்த மாதிரி மேட்டர் எல்லாத்தையும் லூஸ்ல விடுங்க.............

=============
இந்த வார நிழற்படம்


 நல்லா சம்பாரிச்சு இது போலான இடத்துல போய் செட்டில் ஆகனும்...
==================

நான்வெஜ் 18+

என்ஜினியர் படிக்கும் தன் பெண் எப்போதும் பொய் பேசுவதால் பொய் பேசினால் கண்டு பிடிக்கும் மெஷினை ஒரு அப்பா கஷ்டபட்டு கடவுள்கிட்ட கேட்டு வாங்கி வந்தார்....
பெண் வீட்டுக்கு வந்தால்
பெண்ணிடம் ஏன் இவ்வளவு லேட் என்றதும்
பெண் ஸ்பெஷல் கிளாஸ்  அதனால் லேட் என்றதும்
மெஷின் பொய்   பொய் என்று கத்தியது...

உண்மையை சொல் என்று ம்களிடம் அப்பா கேட்டவுடன் மகள் சொன்னாள்.. நான் பாய்பிரண்டடோடு மகாபலிபுரம் போனேன் என்று சொல்ல.. மெஷின் அமைதியாக இருந்தது..

உடனே அப்பா நான் எல்லாம் காலேஜ் படிக்கும் போது அந்த பக்கம் தலை வச்சி கூட படுத்தது இல்லை என்று பெருமையாக சொல்ல மெஷின் உடனே வீரிட்டு பொய் பொய்  என்று கத்தியெது அப்பாவுக்கு பெரிய அவமானமாகிவிட்டது...  அந்த பக்கம் வந்த அம்மாகாரி வாயை வச்சிக்கினு சும்மா இருக்காம உங்க பொண்ணுதானே உங்களமாதிரிதான்  இருப்பா என்று சொல்ல.. மெஷின் பொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யய்ய்ய் என்று வீரிட்டது.. 







பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

17 comments:

  1. Nalla irunkku anna....
    2011 sirappana varudamaga amaiya vazhththukkalum... piraththanaiyum...

    ReplyDelete
  2. முன்பே பல தடவைகள் தங்கள் பிளாக்கிற்கு
    வந்திருந்தாலும் இதுவே எனது முதல் கமெண்ட்.
    இந்தப் பதிவு, சினிமா, கம்ப்யூட்டர், விமரிசனங்கள்,
    பார்த்தது, இரசித்தது (கலைஞருக்குக் கடிதம்) ,
    புகைப்படம் -- என்று எல்லாமே ரசிக்கும்படி
    சுவையாய் தந்துள்ளீர்கள்.
    உங்களுக்கு புது வருட வாழ்த்துக்கள்!
    எனது பிளாக்கிற்கும் வருகை தாருங்கள்.
    -கலையன்பன்.
    இது பாடல் பற்றிய தேடல்!

    கோவி.மணிசேகரன் பற்றி சிறு குறிப்பு + ஒரு பாடல்!


    !

    ReplyDelete
  3. அருமை
    அந்த Mr bean காமெடி எனக்கும் ரொம்பப் பிடித்தது

    ReplyDelete
  4. மிஸ்டர் பீன்: ஹா ஹா ஹா........ இரண்டு நாளக்கி முன்னாடி இந்த படத்த பாத்து சிரிச்சி சிரிச்சி..... வாய் வலிக்க ஆரம்பித்துவிட்டது........

    ReplyDelete
  5. mr.bean ஐ இங்கே உங்கள் தளத்தில் copyright காரணமாக blocked செய்துவிட்டார்கள்.பார்த்ததில் பேஜாரானது நான்வெஜ் 18+ இற்கு இலவச இணைப்பா?

    ReplyDelete
  6. சீரியல்களின் கொடுமை பற்றி தனிப்பதிவு ஒன்றையே போடலாம்...

    மந்திரா பேடி ஸ்டில் எங்கே இருந்து புடிச்சீங்க... செம சூப்பர்...

    ReplyDelete
  7. 2011 ன் முதல் மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் சூப்பர் அண்ணே,

    தொடர்ந்து கலக்குங்க.....

    நன்றி

    ReplyDelete
  8. பின்னுட்டம இட்டு உங்கள் கருத்தை பகிர்ந்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள்...

    ReplyDelete
  9. ஜாக்கி அண்ணன் அவர்களுக்கு ,

    நான் உங்கள் பிளாக் ரெகுலர விஸ்டர் ,
    உங்கள் ரைட்டிங் ஸ்டைல் நல்ல இருக்கு.இந்த விஜய்க்குமார் அண்ட் வனிதா பதி ஒரு பதிவு போடவும்

    இசக்கிமுத்து ஃப்ரம் ஓமன்

    ReplyDelete
  10. very nice to reading your blog,

    பார்த்ததில் பேஜார் ஆனது...

    அடக்கமாட்டாமல் சிரித்தேன்

    உங்கள் உலக திரைப்பட விமர்சனம் வெகு அருமை
    நான் கடந்த ஒரு வருடமாய் தொடர்ந்து படித்து வருகிரேன்

    ReplyDelete
  11. வணக்கம் நண்பரே ,


    புத்தாண்டு வாழ்த்துகள்

    இந்த வருடம் உங்களுக்கு இனிய வருடமாக வாழ்த்துகள்

    உங்கள் உலக திரைப்பட விமர்சனம் வெகு அருமை

    நான் கடந்த ஒரு வருடமாய் தொடர்ந்து படித்து
    வருகிரேன்

    மன்னிக்கயும் எனக்கு தமிழ் டைபிங் பழக்கமில்லை

    உங்கள் விமர்சனம் பாதி படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது

    மீதி படத்தை பார்க்க எங்கு டவுன்லோட் செய்வது


    அன்புடன்

    ReplyDelete
  12. cenema vemarsana, nallathan eruku aana antha padam epady ennku download seivathu endru solavum NADPUDAN NAKKEERAN

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner