ஆல்பம்...
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் இந்த புதன்கிழமை போஸ்ட் 9மணிநேரம் லேட். லேட்டுக்கு காரணம் பிஎஸ்என்எல் 3ஜிதான் முக்கியகாரணம்.... நேற்று நேரம் கிடைக்கும் போதே எழுதி போஸ்ட் போட முயற்ச்சித்த போது காலைவாரிவிட்டது.. இப்போதுதான் சரியாகி இருக்கின்றது..
==========
சபரிமலை விபத்து குறித்து விசாரனை நடத்தினால் கூட்ட நெரிசல் காரணம் என்று முதல் கட்ட விசாரனை திருவாய் மலர்ந்து இருக்கின்றது... அது எவனுக்குதான் தெரியாது...?? முதலில் அங்கு இருந்த ஆட்டோ டிரைவர்கள் ஜீப்பில் சவாரி ஏற்றுவது பிடிக்காமல் ஜீப்பை தள்ளிவிட்டு இருக்கின்றார்கள்.. அதனால் ஜிப் இறக்கத்தில் தறிகெட்டு ஓடும் போது ஏற்ப்ப்ட்ட கூட்ட நெரிசலின் காரணமாக இறந்து போனார்கள் என்று சொன்னார்கள்.. பயத்தில்கடைகளில் வந்து தஞ்சம் அடைந்த பக்தர்களை அங்கு இருந்த கடைகாரர்கள் கழியால் அடிக்க இன்னும் கலவரம் அதிகமாகி உயிரிழப்பு அதிகமாகி இருக்கின்றது என்று அங்கு இருந்து வந்த பொது மக்கள் சொல்கின்றார்கள்..ஆனால் முதல் கட்ட விசாரனை கூட்ட நெரிசல் என்று சொல்கின்றது... பேஷ் பேஷ் ரொம்ப ரொம்ப நன்னா இருக்கு....
==========
உலகில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்து இருப்போரின் பட்டியல் விக்கிலிக்ஸ் இணையதளத்துக்கு கிடைத்து இருக்கின்றதாம்.. சரி பார்த்து வெளியிடுமாம்... நம் நாட்டு பட்டியலுக்காக ஆவலுடன் வெயிட்டிங்... பார்ப்போம்.. எந்த சுறா சிக்குகின்றது என்று..
காய்கறி விலை குறைய தொடங்கி இருக்கின்றது...வெங்காயம் கிலோ 45க்கும் தக்காளி 35க்கும் கிடைக்கின்றது.. இன்னும் வரும் நாட்களில் படிப்படியாக குறையும் என்று சொல்லுகின்றார்கள்.
===================
நேற்று கூட சிங்கள ராணுவம் நமது மீனவர்களை அடித்து அனுப்பி இருக்கின்றது... இதில் காமெடி என்னவென்றால் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில்தனுஷ் நாங்கள் சுனாமியிலேயே சும்மிங் போட்டவங்க என்று சொல்லி மீனவசமுதாயத்தை சுனாமியில் உயிர் இழந்தோரையும் அவமானபடுத்துவதாக இருப்பதால் போராட்டம் செய்ய போவதாக அறிவித்து இருக்கின்றது...ஒரு மீனவ அமைப்பு.... தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் இன்னும் கேவலமாக அடித்து நொறுக்கி வலை அறுத்து அனுப்புகின்றது... அதுக்கு எதாவது செய்ய சொல்லுங்கள்..புண்ணியமா போகும்.
==============================
இந்தவாரகார்ட்டூன்..
இப்படித்தான் இனி குழந்தை பொறக்கும்னு நினைக்கும் போதே பயமா இருக்கு...பியூட்சர்ல இதுக்கும் வாய்ப்பு இருக்கு.... இந்த உலகத்துல நடக்கவே நடக்க வாய்ப்பு இல்லைன்னு மார்தட்டி எதையும் சொல்லமுடியாது...கார்டூன் அனுப்பிய நண்பர்...திருநெல்வேலிகாரனுக்கு நன்றி..
===========
மிக்சர்
போனமுறை நடந்தது போல இந்த முறை சங்கமம் உற்சாகமாக நடக்கவில்லை காரணம் என்னவென்று உங்களுக்கே தெரியும் என்பதால் அது பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.========
நெகிழ்ச்சியாக இருந்தது..ஈழ குழந்தைகளுக்காக துணி போஸ்ட் போட்டு விட்டு சில மணிநேரங்களில் போன் செய்து குழந்தைகளுக்கான உடைகள் எப்படி? எவரிடம்? எவ்வளவு? என்று போன் செய்தமைக்கும் மிக்க நன்றிகள்.. உதவிகள் சரியான நேரத்துக்கு செய்தமைக்கும் எனது நன்றிகள். எனக்கு போன் செய்த பலர் அருன் நம்பரை தொடர்பு கொள்ள சொன்ன போது அருன் நம்பரை தொடர்பு கொள்ளவே இல்லை...அப்படி செய்து இருந்தால் இன்னும் நிறைய உதவி கிடைத்து இருக்கும்.
==========
படித்ததில் பேஜார் ஆனது...
சென்னையில் ஒரு கணவன்.. டெய்லி காலையில் எழுந்ததும் பிரிட்ஜ் மேல கூலிங் இல்லாத தண்ணி பாட்டிலில் இருக்கும் தண்ணியை குடிப்பான். பொண்டாட்டி ஆசிட் பாட்டிலை எடுத்து பாத்ரூம் கழுவி விட்டு பாட்டிலை பிரிட்ஜ்மேல் மறதியாக வைத்து விட பிருசன் மறதியாய் தண்ணி எஎன நினைத்து ஆசிட் குடித்து மரித்து போய் இருக்கின்றான்.. சென்னையில் இரண்டு நாளைக்கு முன் வந்த செய்தி இது..
=========
இந்த வார சலனபடம்.
நம்ம ஊர்ல பிரசவத்தின் போது புருசன்மார்களை ஆபரேஷன் தியேட்டர்ல ஏன் உள்ளே விடமாட்டாங்கன்னு இந்த வீடியோ பார்த்து பிரிஞ்சி போயிடும்... ஏன்னா இதை விடம பாசக்கார அப்பன்க இங்க இருக்காங்க.. பாவம் டாக்டர்.....
====================
நெகிழ்ச்சி...
என் வீட்டு விசேஷத்துக்கு கார் வேண்டும்...தன்ஸ் என்ற வலைபதிவர் தொடர்ந்து எனது வலையை வாசித்து வருகின்றார்...இரண்டு நாளைக்கு முன் இரவில் அவர் ஒரு கமென்ட் போட, சில பலவிஷயங்கள் பேசிக்கொண்டு இருந்தேன்.கார் பற்றிய பேச்சும் வந்தது.. அப்போது நான் ஊருக்கு போறேன்..என் கார் சும்மாதான் இருக்கும்...நீங்க யூஸ் பண்ணிக்கோங்க என்று சொல்லிவிட்டு காரை வீட்டில் வந்து விட்டு விட்டு போய்விட்டான்...கேட்காமல் கொடுப்பதே நட்பு.. அது போலான நண்ப்கள் எனக்கு மிகவும் அதிகம்.
================
சினிமா...
அமீர்கான் மனைவி இயக்கிய டோபிகாட் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது...பார்க்கவேண்டும்..
============
கடிதம்..
Hi,
I hope you are doing good. I have read your blog. I just can’t believe you have written more than 300 blogs.
Each blog which you have written is nice. I have read many of your film reviews and sandwich jokes and your details about the I love you advertisement and vijayakanth comedy, and many more.
I wish you to continue this. Please write some tamil kavithai.
Regards
S. Sasi Kumar
===============
புத்தகஅறிமுகம்
உங்களுக்கு சென்னையை பற்றி என்னவெல்லாம் தெரியும்..?? சார் நான் 20 வருஷமா இங்கதான் குப்பை கொட்டிகிட்டு இருக்கேன்.. செல்லாது செல்லாது... ரைட்டர் அசோகமித்திரன் 50வருடத்துக்கு மேல் வசித்தவர்... சென்னையில் இருக்கும் எல்லாபகுதிகளையும் 50வருடத்துக்கு முன் அதன் சிறப்பு போன்றவற்றை ரொம்ப எளுமையாக எழுதி இருக்கின்றார்...முக்கியபகுதிகளின் சிறப்பு சாலைகள் போன்றவற்றையும் மிக நுட்பமாகக பதிவு செய்து இருக்கின்றார்..
இப்போது இருக்கும் வெஸ்ட் மாம்பலம் அயோத்தியா மண்டம் அருகே இருந்தஏரியை நினைவு கூறுகின்றார்... வெஸ்ட் மாம்பலத்தில் அப்போது எல்லோருக்கும் யானைகால் நோய் இருக்குமாம்.. அதனால் அங்கு யாரும் குடித்தனம் வரமாட்டார்களாம்.. இப்போது ஒரு கிரவுன்ட் கோடிக்கு மேல்...
புத்தகத்தின் பெயர்...ஒரு பார்வையில் சென்னைநகரம்
எழுதியவர்..........அசோகமித்திரன்
பதிப்பகம்............ கவிதா பதிப்பகம்
விலை..............ரூபாய் 60
தொலைபேசி........044/24364243
================================
இந்த வார நிழற்படம்...
பிரேசில் நாட்டில் இருக்கும் ஒரு சிமெட்ரி இது.. மழை வெள்ளத்தில் இதுவும் தப்பிக்கவில்லை.. உடனடியா இதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வெஸ்டர்ன் யூனியன் நகர மேயருக்கு கோரிக்கை வைத்து இருக்கின்றார்கள்.
இப்படி எதாவது சொன்னா? அப்படியே நம்பிவிடுவதா???
நம்ம சென்னை நந்தம்பாக்கம் சென்னை டிரேட் சென்டர் போற வழியில் இருக்கும் சாம்ராஜ்ய யுத்தக்கல்லறைகள் இவை....
பிலாசபி பாண்டி
நீ இருக்கும் இடத்தில் யாரையும் காயபடுத்த கூடாது.. ஆனால் நீ அந்த இடத்தில் இல்லையென்றால் ஒருவராவது உன்னை பற்றி நினைக்க வேண்டும்.. அது ரொம்ப முக்கியம்.
=============
நான்வெஜ்18+
ஜோக்..1
எங்கு தேடியும் கிடைக்காது தனது பூப்போட்ட ஜட்டியை வேலைக்காரியிடம் கேட்டுப்பார்ப்போம் என்று வேலைக்காரியிடம் கேட்டாள் எஜமானி...வேலைக்காரி சொன்னாள்... அம்மா நான் அந்த சமச்சாரத்தை எல்லாம் போட்டாதே இல்லை. வேணுமின்னா ஜயாகிட்ட வேனாலும் கேட்டு உன் டவுட்டை கிளியர் பண்ணிக்கோங்க...
========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
அருமை
ReplyDeleteஎன்ன தல இன்டலி ஊட்டு போடா அப்புறம் வர சொல்லுது?
ReplyDeleteதொடர்ச்சியாக ஒரே தளத்தில் இருந்து இடுகைகளை பகிரும் போது 15 நிமிடங்கள் கால இடைவெளியில் பகிரவும். 4 நிமிடங்கள் முன்பாக jackiesekar.com தளத்திலிருந்து ஓர் இடுகை பகிரப்பட்டு உள்ளது. தயவு செய்து 11 நிமிடங்கள் காத்திருக்கவும்.
ReplyDeleteVazhamai pola arumai...
ReplyDeleteBrasil picture super.
ReplyDelete//நீ இருக்கும் இடத்தில் யாரையும் காயபடுத்த கூடாது.. ஆனால் நீ அந்த இடத்தில் இல்லையென்றால் ஒருவராவது உன்னை பற்றி நினைக்க வேண்டும்.. அது ரொம்ப முக்கியம்.//
ReplyDeleteரொம்ப பிடிச்சி இருக்கு. ஆனா இப்படி இருக்கது ரொம்ப கஷ்டம்.. :)
வழக்கம் போல் அருமை
ReplyDeleteபிடித்து இருந்தால் ஆதரியுங்கள்
ReplyDeletehttp://tamizyan.blogspot.com/2011/01/blog-post_11.html
அருமை. அருமை.
ReplyDelete//படித்ததில் பேஜார் ஆனது...
ReplyDeleteசென்னையில் ஒரு கணவன்.. டெய்லி காலையில் எழுந்ததும் பிரிட்ஜ் மேல கூலிங் இல்லாத தண்ணி பாட்டிலில் இருக்கும் தண்ணியை குடிப்பான். பொண்டாட்டி ஆசிட் பாட்டிலை எடுத்து பாத்ரூம் கழுவி விட்டு பாட்டிலை பிரிட்ஜ்மேல் மறதியாக வைத்து விட பிருசன் மறதியாய் தண்ணி எஎன நினைத்து ஆசிட் குடித்து மரித்து போய் இருக்கின்றான்.. சென்னையில் இரண்டு நாளைக்கு முன் வந்த செய்தி இது..///
இதே இது மனைவி செத்திருந்தா அவளோட கணவன் இந்நேரம் கைது செய்யப்பட்டு இருப்பான்... எனக்கு என்னமோ மனைவி சதி பண்ணி இருக்குறமாதிரி ஒரு சந்தேகம் ஆம்பளைங்க உயிருக்கு என்ன மதிப்பு இந்த நாட்டுல
=========
//நீ இருக்கும் இடத்தில் யாரையும் காயபடுத்த கூடாது.. ஆனால் நீ அந்த இடத்தில் இல்லையென்றால் ஒருவராவது உன்னை பற்றி நினைக்க வேண்டும்.. அது ரொம்ப முக்கியம்.//
ReplyDeleteஅருமை அண்ட் உண்மை ,
வாக்களிச்சாச்சு...
ReplyDeleteசெய்திகளின் கதம்பம் அருமை..
ReplyDeletei also feel the acid mater may be planned.
ReplyDeleteand then the flower panty... i enjoy the joke.
ReplyDelete// இதில் காமெடி என்னவென்றால் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில்தனுஷ் நாங்கள் சுனாமியிலேயே சும்மிங் போட்டவங்க என்று சொல்லி மீனவசமுதாயத்தை சுனாமியில் உயிர் இழந்தோரையும் அவமானபடுத்துவதாக இருப்பதால் போராட்டம் செய்ய போவதாக அறிவித்து இருக்கின்றது... //
ReplyDeleteவெளங்கிடும்...
பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி...
ReplyDeleteஅந்த ஆசிட் மேட்டர்ல எனக்கும் டவுட்..
Hi Jackie Anna
ReplyDeletei read your blog nearly five years its really good. i need your permission to use your pilasapi pandi in my face book and Orkut would you allow me to use. do it well i excepting more from you.
God bless you. Your Dreams come true
I will call you one fine day.
Thanks and Regards
சபரிமலை விபத்து மோசமானது அனா கண்டிப்பா உண்மை வெளி வராது வந்தால் பலரின் அலட்சியப்போக்கு தெரிந்துவிடும்
ReplyDeleteஅப்புறம் அந்த பழைய கார்க்கு ஓவர் பில்ட் அப், இதெல்லாம் ஓவர் அண்ணா..... அதெல்லாம் விடுங்க சென்னை வந்தாச்சு சண்டே பாக்கலாம்