இனிதே நிறைவு பெற்ற சென்னை 34வது புத்தகக்கண்காட்சி..
தினமும் புத்தக்கண்காட்சிக்கு போனேன்... எதாவது புத்தகம் வாங்கி வந்தேன்... தொடர்ந்து 5 நாட்கள் போனேன்.. நிறைய நண்பர்கள் நல விசாரிப்புகள்.. நடுவில் சிறிது வேலை அதனால் சில நாட்கள் போகவில்லை..
நிறைவு நாளுக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்பதால் நிறைய வேலைகள் முதல் நாளே எல்லா வேலையையும் முடித்து வைத்தேன்..மறுநாள் காலையில் இடது கை விரல்களை நீட்டவோ மடக்கவோ முடியவில்லை... தலையை திருப்ப முடியவில்லை...
இரவில் தப்பாக கைவைத்து தலையை ஏதோ ஒரு கோணத்தில் வைத்து படுத்து இருக்கவேண்டும்.. அல்லது வயது ஆகிவிட்டது என்று ஒத்துக்கொள்ளவேண்டும்.. ஆனால் அது சாத்தியம் இல்லை என்பதால் தூங்கிய நிலை மீது பழியை தூக்கி போட்டேன்...
செம பயம்.. ஏதாவது வந்து விட்டதோ? இனி இடது கையால் டைப் அடிக்க முடியாதோ, கையை மடக்க முடியவில்லையே? கழுவும் சமாச்சாரத்தக்கு இனி என்ன செய்வது??? என்று மனம் கற்பனையில் பயணிக்க ஆரம்பித்து விட்டது..ஜாக்கியோட கற்பனைக்கு வானமே எல்லை..... என் மனைவியுடம் என் கற்பனை பற்றி சொல்ல தலையில் அடித்துக்கொண்டாள்... என்னை தவிர வேற யாரலையும் இப்படி கற்பனை பண்ண முடியாது என்றாள்...
உயிர் போகும் வலி... சரி வந்தது வந்து விட்டது இதுவா நானா பார்த்து விடலாம் என்று சென்னையில் வெறிச்சோடிய போட்டோவை எடுத்து ஒரு பதிவை கஷ்டபட்டு எழுதினேன்....கை உயிர் போகும் வலி... இதை விட பக்கம் பக்கமாக எழுதிய பதிவுகளுக்கு 10 கமண்ட்டுக்கு மேல் தேராது.. இதுக்கு 20கமென்ட் வரை.. எல்லாம் நேரம்... தமிழ்மணத்தில் 8 ஓட்டு வேற....ம்.....
நைட்டு 4மணிக்கு எழுந்து பார்த்தேன் கையை ஒரு மாதிரியா மடக்கி வச்சிகிட்டு தூங்கிகிட்டு இருந்திங்க.. நான் தான் கையை சரியா எடுத்துவிட்டேன்.. என்று மனைவி சொன்னாள். வலி தாங்கமுடியவில்லை....
(சாகித்ய விருது எழுத்தாளர் நாஞ்சில் ஒரு பெண்மணியுடள் சுவாரஸ்யமான பேச்சின் போது..)
சரி புத்தக்கண்காட்சிக்கு போகாமல் இருந்து விடலாம் என்றால்.. என் நண்பர் குழந்தைக்கு பர்த் டே பங்ஷன்.. பபோட்டோ எடுக்க மாலை ஆறுமணிக்கு வேளச்சேரிக்கு வர வேண்டும் என்று சொல்ல என்னால தட்ட முடியவில்லை... கிளட்ச் போட முடியவில்லை... டிக வலி உயிர் போனது...அதை கூட பொறுத்துகொள்ளலாம்.. ரோட்டில் போகும் எந்த பிகரையும் பார்க்க முடியவில்லை...ஒங்கி கன்னத்தில் ஒரு அப்பு அப்பினால் ரைட் சைட் தலை திருப்பிக் கொள்ளுமே.. அது போல லெப்ட் சைடு தலை திருப்பிக்கொண்டு ரைட் சைட் தலையை திருப்ப முடியாமல் ரொம்ப கஷ்டபட்டேன்...
( தினமும் கிழக்கு பதிப்பக பக்கத்து சந்தில் பா.ரா தலைமையில் தினமும் ஒரு இலக்கிய ஆர்வலர் கூட்டம்.)
வேளச்சேரியில் போட்டோ எடுத்து விட்டு நேராக புத்தகக்கண்காட்சிக்கு போனேன்.. போனதும் நண்பர்களை சந்தித்தேன்..அப்துல்லா என்னை லக்கி தேடியதாக சொல்ல.. லக்கிக்கு போன் செய்தேன். லக்கி வந்தார்.. லக்கி, கேஆர்பி செந்தில்.பட்டர்பிளை சூர்யா என்று ஒரு குருப்பாக புத்தகம் வாங்க போனோம்....
(என் பதிவுலக செல்வங்கள் சங்கர்,மயில்ராவணன்,நான்,தினேஷ்)
என்னுடைய ஆள் டைம் பேவரைட் பிகேபியின் தொட்டால் தொடரும் புத்தகத்தை வாங்கினேன்... போனமுறை 3000த்துக்கு வாங்கினேன்.. இஅந்த முறை 1000க்கு மேல் இல்லை.. இந்த முறை லக்கி நிறைய புத்தகங்களை அறிமுகபடுத்தினார்...பர்ஸ் இளைப்பதை தடுத்து நிறுத்தினார்....
நடுவில் சங்கமம் கோ ஆர்டினேட்டர் உமாசக்தியை சந்தித்தோம் எனது அம்மாவுக்கு எழுதிய கடிதம் பதிவு தனக்கு மிகவும் பிடித்ததாகவும் அதனை பலருக்கு பார்வேட் செய்ததாகவும் சொன்னார்.. அந்த பதிவை திரும்ப வாசித்தேன்... நான் தானா அப்படி எழுதினேன் என்று இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கின்றது....அன்னையர் தினத்துக்கு அம்மாவுக்கு எழுதிய கடிதம் அது.... இன்னும் நிறைய அம்மாவுக்கு கடிதம் எழுத வேண்டும்.... நேரம் கிடைக்கும் போது..... அந்த அம்மாவுக்கு எழுதிய கடித பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்...
என் நிலை பார்த்து கேஆர்பி செந்தில் எனது கேமராபையை வாங்கி கொண்டார்.... இந்த முறை புத்தக கண்காட்சியில் அதிகம்போட்டோ எடுக்கவில்லை... சரி கேமரா எடுத்து தலை சாய்த்து கொண்டு சில போட்டோக்கள் எடுத்தேன்...
வெளியே நான் கேஆர்பி லக்கி சூர்யா நால்வரும் பேசிக்கொண்டு இருந்தோம் டைமர் செட் செய்து எடுத்தேன்....படத்தை பார்க்கும் போது எதோ பேங்கில் கொள்ளை அடிக்கும் முன் டான் குருப் திட்டம் தீட்டுவது போல இருந்தது.
காபி குடிக்க போக இட்டத்தில் சாம்ஜ்ய பிரியன் மற்றும் சங்கர்,மாமல்லன்,லக்கி,கேஆர்பி பேசிக்கொண்டு இருந்து விட்டு விடை பெற்றோம்....
(சூர்யா கேஆர்பிசெந்தில் , நான், லக்கி(கொள்ளையர் கூட்டம்)
சென்னையில் பில்ம் பெஸ்ட்டிவில் முடிந்து விட்டது...
சென்னையில் புத்தக கண்காட்சி முடிந்து விட்டது...
சென்னையில் சங்கமும் முடிந்து விட்டது....
இனி பதிவுலக நண்பர்களோடு எங்கு சங்கமிப்பது என்று தெரியவில்லை... உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
Labels:
அனுபவம்,
தமிழகம்,
புகைபடங்கள்,
போட்டோ
Subscribe to:
Post Comments (Atom)
வெளியவந்து என்ன வாங்கி சாப்பிட்டீங்கன்னு சொல்லவே இல்லையே.. ஹி.. ஹி..
ReplyDeleteவெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்
Nice
ReplyDeleteகடைசிவரையிலும் அந்த வலி என்ன ஆச்சின்னு சொல்லவேயில்ல..
ReplyDeleteபின்னுட்டம் இட்ட அனைவருக்கு நன்றிகள்..
ReplyDeleteஇன்று வலி பராவாயில்லை நேற்று இரவு தூங்க ரொம்பவும் சிரமபட்டேன். நன்றி கருன் ஆர்வத்துக்கு..
ReplyDeleteநன்றி ஸ்பிட் மாஸ்டர்..
ஜாக்கியோட கற்பனைக்கு வானமே எல்லை...உண்மைதான்.
ReplyDeleteடி.என்.22 ஏ.டி. 7113 என்பது உங்கள் கொள்ளைக் கூட்டத்தாரின் அதிகாரபூர்வ வாகனமா? # ட்வுட்.
ReplyDeleteசங்கத்துல எங்களையும் சேர்த்துக்குவீங்களா? # சின்ன ட்வுட்.
போன வருஷம் ஐய்யாயிரம் ரூபாய்க்கு வாங்கின புக் எல்லாத்தையும் படிச்சு முடிச்சாச்சா# பெரிய ட்வுட்.
kai valee sekeram sareyaktum nanum last day book fare poietu vandhan anku ungal neenaivu vanndhadhu O pakkam gani ie parthean avar shopil vote pathevu saidhan ungali sandhethuerundhal happy yaga erutherukum NADPUDAN NAKKEERAN
ReplyDeletemiss chennai and u all , soon i will be there to meet u all , care ur health jackey - sam
ReplyDeleteanna velachery varumpothu aen enkita sollala????
ReplyDeleteunga mela rompakovam
படத்தை பார்க்கும் போது எதோ பேங்கில் கொள்ளை அடிக்கும் முன் டான் குருப் திட்டம் தீட்டுவது போல இருந்தது.
ReplyDeleteபடத்தை பார்த்தவுடன் எதோ தோன்றியது .பின்பு நீங்களே சொல்லிவிடீர்கள் . அருமை.