Soul Kitchen-2009 உலகசினிமா/ஜெர்மனி/தன்னம்பிக்கையின் வெற்றிபெருநகரங்களில் நாம பாட்டுக்கு நம்ம  வேலையை பார்த்துகிட்டு சிவனேன்னு போனாலும் அப்பு வைக்கறதுக்குன்னே அலையும் குருப் இருக்கே அதுங்க சும்மா இருக்காதுங்க...நம்மலை சும்மா  சும்மா  நோன்டிகிட்டே இருக்கும்... அதுங்களுக்குதான் பொழப்பு இல்லை நமக்கு கூடவா இல்லைன்னு போயிகிட்டே இருக்கனும்.... ஆனா நம்ம வாழ்வாதாரத்தில் கை வைத்தால் ஒம்மால உண்டு இல்லைன்னு பண்ணிடனும்... அப்ப எதையும் வச்சி பார்க்கவே கூடாது.....ஒரு ஹோட்டல் நன்றாக நடந்தால்  பாதிக்கு பாதிக்கு லாபம் வரும் ஒரு தொழில் ஹோட்டல் தொழில்தான்...ஒரு ஹோட்டல் ஆரம்பித்து நடத்துவது என்பது சாதாரண விஷயம் இல்லை... காரணம் அது சமையல் கலைஞர்களின் கை பக்குவத்தை  பொறுத்த விஷயம்... இப்போதுதான் நான் வீட்டு சாப்பாடு சாப்பிடுகின்றேன்... சென்னையில் பதினைந்து வருடம் ஹோட்டலில் பொறுக்கி தின்னவன் நான்.. அதனால் எந்த ஓட்டலில் எந்த உணவு நன்றாக இருக்கும் என்று நன்றாக தெரியும்....

எனக்கு பிடித்த உணவு சிக்கன் பிரைட் ரைஸ் மற்றும் சில்லிசாஸ்... இதுதான் எனது பேவரைட் புட்... சரி விதம் விதமாக உணவை ருசித்து மகிழும் ரகமா என்றால் இல்லை என்று சொல்லவேண்டும்....காரணம்  ஒரு மீன்...ஒரு பத்தைதான் இருக்கும் அதுக்கு 120ரூபாய்க்கு சார்ஜ்  செய்வார்கள்... சுவைக்கும் போது அது நேற்று மீந்த மீனாக இருக்கும்...நாம கடலூர்காரன் பல ருசிகளில் முனை டேஸ்ட் செய்து இருக்கின்றேன்...அந்த பழைய  மீனை பார்த்து செம டேன்ஷன் ஆகும்.... அல்லது பிரான் ஆர்டர் செய்தால் அது வாயில் வைக்கமுடியாத சுவையாக இருக்கும்.. காசு கொடுத்து வாங்கி தின்னும் போது ஒரு சுவை எந்த இடத்தில் பெஸ்டாக இருக்கின்றதோ அந்த இடத்தில் நமக்கு விருப்ப உணவை ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன்... புதிதாக ரிஸ்க் எதையும்  எந்த ஒட்டலிலும் எடுப்பதில்லை...

என் மனைவிக்கு பெரிய வருத்தம் மற்றவர்கள் போல் ஆர்டர் செய்து விதவிதமாக சாப்பிடுவதில்லை என்ற வருத்தம் நிறைய.. எப்போதும் சிக்கன் பிரைட் ரைஸ்தானா? என்று சலித்து கொள்வாள்... சென்னையில் இரண்டு பரோட்டா வாங்கி வயிற்றை ரொப்ப தண்ணி குடித்து பசியாறியவனுக்கு ஹோட்டலில் அதிகமாக ஆர்டர் செய்ய மனது  தயங்குகின்றது.. ஆனால் இப்போது அப்படியில்லை.... கொஞ்சம் மாறி இருக்கின்றேன்.. ஆனால் நல்ல உணவுக்காக தேடிப்போய் சாப்பிட்டு இருக்கின்றேன்..

ஆர்டர் பண்ண எந்த உணவையும் நான் வீணாக்கியதில்லை....பெருமைக்கும் ஆர்டர் செய்யமாட்டேன்.. என் மனைவி கொஞ்சமே கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வைக்குத் உணவுகளை ஒரு கை பார்ப்பேன்....

என் மனைவியின் மச்சான்களோடு சாப்பிடுவது எனக்கு அலாதி பிரியம் காரணம் நிறைய ஆர்டர் செய்து விட்டு அது டேபிளுக்கு வந்த உடன் சட்டென எல்லோரும் ஒரு கை வைத்து காலி செய்து விட்டு  அடுத்த உணவுக்காக காத்து இருப்போம்..... சர்வர் மிரண்டு போவான்...

இரண்டு பெக் சாப்பிட்டு விட்டு ஹோட்டலில் உணவை சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடித்தமான  ஒன்று.... ஆனால் இன்றுவரை எனக்கு சென்னை சரவணபவனில் காப்பியை தவிர வேறு எந்த உணவையும் சாப்பிட எனக்கு பிடிக்காது.. நானாக போய் பசிக்கு  சாப்பிட்டது இல்லை...  நண்பர்கள் யாராவது அழைத்து போனால் மறுக்க முடியாமல் சென்று இருக்கின்றேன்..காரணம் அவர்கள் வைத்து இருக்கும் உணவுபட்டியல் விலை எனக்கு உடன்பாடே இல்லை.. நல்ல குவாலிட்டி கொடுக்கின்றேன் என்று சொல்லி விட்டு ஒரு இட்லியை 50ரூபாய்க்கு விற்க்கும் ரகம்.... எனக்கு அதில் உடன்பாடு இல்லை.....இப்போதைய சாப்பாடு விலை என்னவென்று எனக்கு தெரியவில்லை...?? சாப்பாடு நான்கு வருடத்துக்கு முன் 45ரூபாய்க்கு வாங்கி ஒரு சின்ன பிளேட்டில் ஒரு கவலம் சோற்றை  பார்த்த போது அந்த கணத்தில் முடிவு செய்தேன்.. இனி இந்த ஹோட்டலுக்கு வரக்கூடாது என்று......

பதிவர் வால்பையன் கூட இப்போது கோவையில் ஓட்டல் தொழில் தொடங்கி இருக்கின்றார்..அவருக்கு ஏற்கனவே அனுபவம் இருக்கின்றது...ஒருமுறை ஒரு ஒட்டலில் சாப்பிட்டு விட்டு அதன் சுவை பிடித்து விட்டால்  வாய் வழியாகவே அந்த ஓட்டலுக்கு விளம்பரம் கிடைத்து விடும்......என்ன சதா சர்வகாலமும் அந்த தொழிலை பற்றிய நினைவும் நிறைய நேரத்தையும் அது எடுத்துக்கொள்ளும் தொழில் அது..

நீங்கள் சில இடங்களில் பார்த்து இருக்கலாம் கோலாகலமாக துவங்கும் பல பாஸ்ட் புட் கடைகள் சடுதியில் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்தில் நவ்தால் பூட்டு தொங்க காரணம் என்ன என்று யோசித்து இருக்கின்றீர்களா?? சிம்பிள்  நம்பிக்கை கொடுத்த மாஸ்டர் சட்டென காணமல் போய் இருப்பார் அல்லது முதாலாளிக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அவர் உடனே பை தூக்கி கிளம்பி  போய்இருப்பார்.... எந்த மாஸ்டரையும் நம்பி ஆரம்பிக்காமல் மாஸ்டர் போய் விட்டாலும் கைலியை மடித்துக்கொண்டு அடுத்த மாஸ்டர் கிடைக்கும் வரை களத்தில் இறங்கும் தில் வேண்டும் ஹோட்டல் தொழிலில் வேண்டும்......

இந்த ஜெர்மன் படம் ஓட்டல் தொழிலின் நெளிவு சுளிவுகளை மிக அழகாய் ஒரு தன்னம்பிக்கை டானிக்காக சொல்கின்றது...Soul Kitchen-2009 உலகசினிமா/ஜெர்மனி.... படத்தின் கதை என்ன???

ஜினோஸ் ஊருக்கு ஒதுக்கு  புறமாய் சோல்கிச்சன் என்ற ரெஸ்ட்டாரண்ட் நடத்தி வருபவன்.. அந்த ஓட்டல் இருக்கும் இடத்தில் ஒரு ரியல் எஸ்டேட்காரனுக்கு ஒரு கண் அவன் ஜினோவின் பால்ய நண்பன்தான்..... அந்த இடத்தை அடைய எதையும் செய்பவன்....ஜினோஸ் இடம் மஸ்கா சஸ்க்கா எல்லாம் போட்டு பார்த்தும் தனது ஓட்டலை அந்த  ரியல் எஸ்டேட் காரனுக்கு கொடுக்கவில்லை.....


பட்டகாலிலேயே படும்.எனபது போல
ஜினோஸ்க்கு எல்லாம் வாழ்க்கையில் தப்பாக நடக்கின்றது....

வாழ்வில் முக்கியம் என்று நினைத்த காதலி வேறு ஒருவனுடன்  காதல் கொண்டு ஜினோவை புறக்கனிக்கின்றாள்....

ஜெயிலில் இருந்து பரோலில் வந்த அண்ணனுக்கு  எச்சில் பால் குடித்த பாவத்துக்கு தனது ஓட்டலில் மேனஜர் வேலையை போட்டுக்கொடுத்தால், அந்த பண்ணாடை  அண்ணன்காரன் ஓட்டலில் வேலை செய்த சர்வர் பெண்ணை உஷார் செய்தது மட்டும் அல்ல.. ஓட்டலையும் சூதில் அந்த ரியல் எஸ்டேட்காரனுக்கு  ஜினோ ஊருக்கு போன சமயத்தில் எழுதி கொடுத்து விட
நடுத்தெரு நாரயணன் பொசிஷனுக்கு ஜினோ வந்து தொலைகின்றான்...

இதை கூட பொறுத்துக்கொள்ளலாம்என்று பார்த்தால் குனிந்து நிமிர முடியாத அளவுக்கு முதுகு பிடிப்பு வேறு.. வாழ்க்கை வெறுத்து போய் இருப்பவன் என்ன செய்வான்.... சோர்ந்து போய் உட்காருவான்...ஆனால்  அந்த சோல் கிச்சனை மீட்கின்றான்... எப்படி? என்பதை திரையில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.....

படத்தின்சுவாரஸ்யங்களில் சில..

இந்த படத்தின் டைரடக்கர் Fatih Akın ஒரு  நாள் தனது ஓட்டல்  நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த போது அவர்  தனது கதையை சொல்ல பரபரப்பை சேர்த்து செல்லுலாய்டில் இந்த படத்தை சிறைபடுத்திவிட்டார்....

உலகில் எல்லலோராலும் விரும்பும் ஒரு கதை தன்னம்பிக்கை கதைதான்... அதை அசைத்துக்கொள்ள வேறு கதைகளே இல்லை என்பேன்.... இந்த படம் அந்த வேலையை செய்து இருக்கின்றது....

முதல் பாதியில் லேசாக நகரும் திரைக்கதை கிளைமாக்சில் பெரிய விறு விறுப்புக்கு அழைத்துச்செல்லும்...

முக்கியமாக அந்த ஏலம் விடும் அந்த காட்சி தமிழ்சினிமாவே தோற்றுவிடக்கூடிய காட்சி அமைப்புகளுடன் இருந்தாலும் அதுதான் சினிமா..... அந்த விறு விறுப்புதான்.. இந்த படத்தை தாங்கி நிற்க்கின்றது என்பேன்..

முதுகு பிடிப்புக்கு போகும் போது டாக்டர் செக் செய்யும் காட்சியில் இடுப்புக்கு கிழே அவள் கையை எடுத்துக்கொண்டு போக அவன் டெம்ட் ஆகின்றான்...நான் இடுப்புக்கு கிழே நீவி விட வேண்டும் என்று சொல்கின்றாள்....அனால் அவள் கை பட்டதும் அவனது குறி  நட்டுக்கொண்டு நிற்க்க.. நான் வேண்டுமானல் போய் விடவா? என்று அவன் அந்த பெண் டாக்டரிடம் கேட்க ???இல்லை குறி விரைப்பு ஆரோக்யத்தின் அடையாளம் இதுக்கு நீ மகிழ வேண்டும் என்று கேஷுவலக சொல்லும் காட்சியில் தியேட்டரில் கொள்....

தனது தொழிலை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காத ஒரு சமையல் கலைஞன் கேரக்டர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் .. காரணம்... நாம் செய்யும் தொழிலைதான்  நேசிக்க வேண்டும்.. நிறுவனத்தை அல்ல என்ற  என் பாலிசியை ஒத்த எண்ணவோட்டம் அந்த சமையல் காரனுடையது....

ஹோட்டலில் ஒரு மியூசிக் குழு பிராக்டிஸ் செய்ய ஜினோவிடம் அனுமதி கேட்க அவனும் அனுமதிக்க அன்று பார்த்து போனியாகத நிலையில் அந்த குழுவில் உள்ளவர்கள் ஆர்டர் செய்ய கலை கட்டும் ஒட்டல் காட்சி நல்ல ரசனை...


ஓட்டலில் டாக்ஸ் கட்ட சொல்லும் அரசு ஊழியையை  தண்ணியில் பிராகெட் போட்டு அவளை புணர்ந்து விடியோ எடுக்கும் காட்சி ரசிக்கவைக்கும்...

இந்த படத்தின் இசைக்கா இரண்டு வருடம் மெனெக்கெட்டு இருக்கின்றார் இயக்குனர்...

கிளைமாக்ஸ் கவிதை....

இந்த படம் வெனிஸ் திரைப்படவிழாவில் ஸ்பெஷல் பிரைஸ் கிடைத்து...

சென்னை 8வது உலக திரைப்படவிழாவில்  இந்த படம் முதல் திரைப்படமாக உடலண்ட்ஸ் தியேட்டரில் திரையிடபட்டு ரசிகர்களிடம் அதிக கவனத்தை கவர்ந்தது...

சென்னை ஏழாவது உலகபடவிழாவில் ஐ சர்வ்டு கிங் ஆப் இங்கிலாந்து படம் பெரிய வரவேற்ப்பை பெற்றது... இதே  ஓட்டல் தொழிலை மையமாக வைத்து ஜெர்மன் போரின் பின்னனியில் சொன்ன அந்த கதை வாசிக்க இங்கே கிளிக்கவும்....


படத்தின் டிரைலர்..


படக்குழுவினர்  விபரம்..

Directed by     Fatih Akın
Written by     Fatih Akın
Adam Bousdoukos
Starring     Adam Bousdoukos
Birol Ünel
Moritz Bleibtreu
Anna Bederke
Cinematography     Rainer Klausmann
Editing by     Andrew Bird
Studio     Corazon International
Release date(s)     2009
Running time     99 minutes
Country     Germany
Language     German


பைனல் கிக்..

புதிதாய்  கோவையில்  ஓட்டல் தொழில் தொடங்கி இருக்கும் பதிவர் வால்பையனுக்கு இந்த ஜெர்மன் படத்தின் சோல் கிச்சன்  விமர்சனம் சமர்பனம்...
 இந்த விமர்சனம் படித்து விட்டு கோவையில் இருக்கும் நண்பர்கள் எனது  நண்பர் வால்பையன் கடையில்  நேரம் கிடைக்கும் போது  குடும்பத்துடன் சாப்பிட  செல்ல வேண்டுகின்றேன்.....
 விலாசம்..
ஓட்டல் பூர்வாஸ்
வடகோவை 
சிந்தாமணி பெட்ரோல் பங்க்  அருகில்...
ஆர்எஸ்புரம்
கோவை....

பார்ட்டி ஆர்டர் ஏற்றுக்கொள்ளபடும்...
ஆர்எஸ்புரம் நான்கு கிலோமீட்டர் சுற்றளவுக்கு டோர்டெலிவரியும் உண்டு...
வால்பையன்  எண்:9994500540
உணவக தொலைபேசி எண்: 0422- 437 6 437


 ==============================

இந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம்...  எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கின்றது என்று நினைப்பவரா? நீங்கள் இந்த படம் கொஞ்சம் உங்களுக்கு ஆறுதல் அளிக்கலாம்...


===============

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்..குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
16 comments:

 1. வணக்கம் தனசேகர் சார்..

  ReplyDelete
 2. வழக்கமாக உங்கள் விமர்சனத்தில் இருப்பதை விட அதிகமான விஷயங்கள் இந்த விமர்சனத்தில்... ஒரு படத்தின் சுவாரஸியத்தை விமர்சனத்தில் கொண்டு வந்துவிட்டீர்கள்.
  பைனல் கிக் .. வால்பையனுக்கு மிக்க சந்தோஷம் குடுக்கும்..

  ReplyDelete
 3. //நல்ல குவாலிட்டி கொடுக்கின்றேன் என்று சொல்லி விட்டு ஒரு இட்லியை 50ரூபாய்க்கு விற்க்கும் ரகம்.... எனக்கு அதில் உடன்பாடு இல்லை.....//

  உண்மைதான், ஹோட்டலில் சாப்பிட வேண்டுமெனில் வீட்டில் ஒரு வேளை சாப்பாட்டை கட் செய்து, செலவினை ஈடு கட்டவேண்டும்..

  ReplyDelete
 4. இன்ட்லியில் இணையுங்கள் தல.. ஓட்டைப்போட்டுட்டு,நாங்க அடுத்த சாப்பாட்டுக்கடைக்கு போக வேணாமா?

  ReplyDelete
 5. பாரத் உங்க கடமை உணர்ச்சிக்கும் நீங்கள் என் மீது வைத்துஇருக்கும் நம்பிக்கைக்கும் என் நன்றிகள்..

  ReplyDelete
 6. ஜாக்கி,உங்களுக்கு பின்னால உட்காந்து படம் பார்த்தேன்.எனக்குமுன்னால படத்தை விமர்சனம் பண்ணிட்டிங்க .நன்றி ,பரத்துங்க.

  ReplyDelete
 7. இந்த படம் முதல் பாதியில் நெளிய வைத்தாலும் பிற்பாடு நம்மை இழுத்துக் கொண்டது உண்மைதான்.

  அன்பு நித்யன்

  ReplyDelete
 8. ஓட்டல் வைத்து நஷ்டப்பட்டு ஓட்டலை எடுத்து ஒரு வருடமாகிறது.சினிமாவில் தான் எல்லாம் சாத்தியம். எனிவே விமர்சனம் அருமை.

  ReplyDelete
 9. உங்க நன்றிக்கு பதில் நன்றிகள்...

  ReplyDelete
 10. பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 11. ஜாக்கி... ரொம்ப நேரமா படிச்சிட்டே இருந்தேன்... பதிவு முடியப்போகுதுன்னு நினச்சேன்... அந்த இடத்துல தான் soul kitchen ன்னு டைட்டில் போடுறீங்க.,.. மிரண்டுட்டேன்... அங்கதான் ஜாக்கி நீங்க நிக்கிறீங்க...

  ReplyDelete
 12. தங்கள் எழுத்தின் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டதால் ,ஆபாச வார்த்தைகளை தவிர்க்கலாம்.
  இது ஒரு வேண்டுகோள்.

  ReplyDelete
 13. பட விமர்சனத்தின் மூலம் நண்பரின் கடைக்கும் விளம்பரம்...
  சந்தோஷமா இருக்கு அண்ணா.
  திரு. வால்பையன் தனது தொழிலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. மிக்க நன்றி தல!


  ஒரு அனிமேஷன் படம் கூட இருக்கு, ஒரு எலி குக்கா வரும், அதுவும் செமையா இருக்கும், டைம் கிடைச்சா பாருங்க!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner