themba a boy called hope/உலகசினிமா/சவுத்ஆப்பிரிக்கா...நெகிழ வைக்கும் தன்னம்பிக்கை.


எயிட்ஸ் நோய் குறித்து பல திரைப்படங்கள் வந்து இருக்கின்றன.. ஆனாலும் எயிட்ஸ் பற்றிய பயமும் நிவர்த்தி செய்ய முடியாத கேள்விகளோடும்தான் நம்மவர்கள் வாழ்க்கையை நடத்து கின்றார்கள்..காரணம் கூச்சம்...எதையும் வெளிப்படையாக கேட்டு புரிந்து கொள்ளாமை...


எயிட்ஸ் நோய் பெண்களிடம் போய் விட்டு வந்தால் வந்து விடும்.. எயிட்ஸ் என்ற வார்த்தையை காதில் விழுந்ததும் மனதில் தோன்றும் பிம்பம் என்ன? இரண்டு பேர் அவுட்டாப் போக்கசில் புணர்ந்து கொண்டு இருப்பதுதான் நம்மவர்களுக்கு நினைவில் வரும்...


தொடர்ந்து  பெண்களிடம் போய் வருபவன் கூட சில நேரங்களில் தப்பித்து விடுவான்.. ஆனால் அப்பாவியாய் எப்போதோ ஒரு முறை அரிப்புக்கு போய் வந்தவனுக்கு எயிட்ஸ் வந்து விடும்....


சிகரேட் ஊதி தள்ளுபவனுக்கு எதும் நேராது.. சிகரேட் பிடிக்கவே மாட்டான் அவனுக்கு கேன்சர் வந்து தொலைக்கும்... இந்த உலகத்துல ஏன்னு கேள்வி கேட்காம ஏத்துக்க கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்னு..

நான் கடவுளிடம் பக்தி யோடு இருக்கின்றேன். நான்  யோக்கியன்.. பெண்கள்  பக்கம் திரும்பி கூட பார்த்தது இல்லை எனக்கு ஏன் ?வர போகின்றது என்று இருமாந்து இருக்கவேண்டாம்....எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாதலும் வர வேண்டும் என்று  விதி இருந்தால் வந்தே தீரும்.... அது எப்படி சார் வரும்???
 

வரும் தலைவரே நிச்சயம் வரும் அது எப்படி வரும்? என்பதை இந்த படம் நெகிழ்ச்சியாக விளக்குகின்றது..

தப்பு செஞ்சவனுக்கு வரலாம் ஆனா வாழ்க்கையில முன்னேற்றம் ஒன்று மட்டும் குறிக்கோளுடன் இருக்கும் ஒரு ஏழை புட்பால் ஆட்டக்கார பையனுக்கு எயிட்ஸ் வந்தால்???????


themba a boy called hope/உலகசினிமா/சவுத்ஆப்பிரிக்கா... படத்தின் கதை என்ன??


தம்பா(Nat Singo) சவுத் ஆப்பிரிக்காவின் புறநகர் கிராமத்தில் வாழும் பையன்...   அம்மா, ஒரு தங்கையோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருபவன்..அவனின் ஒரே கனவு பெரிய புட்பால் பிளேயர் ஆக வேண்டும் என்பதுதான்... 

அப்பா சின்ன வயதில் வேலைக்கு போய்விட்டு வருகின்றேன் என்று சென்றவர்.. இதுவரையில்  கழட்டிக்கொண்டே இருக்கின்றார்.. வீட்டு பக்கம் வரவேயில்லை...தம்பாவுக்கு அவன் அப்பா சின்னவயதில்  பேருந்து ஏறும் போது டாட்டா காட்டிவிட்டு போனதோடு சரி... பொண்டாட்டி புள்ள என்ன ஆனாங்க?எதை பத்தியும் கவலை படலை...

தம்பா அம்மாவுக்கு குடும்ப பாரத்தை தாங்க முடியலை... அவுங்க வீட்டுக்கு தூரத்து ரிலேசன்னு  சொல்லிக்கினு ஒருத்தன் வந்து தங்கறான்.. அவனை தம்பாவுக்கு சுத்தமா பிடிக்கலை...பல காலமா  இருக்கும் தனிமை தம்பாவோட அம்மாவை அந்த தூரத்து ரிலேசன்காரனோடு படுக்கவைக்குது.. இது தம்பாவுக்கு பிடிக்கலை....

சரி பிள்ளைகளை காப்பாத்தும் பொறுப்பு இருக்கும்  காரணத்தால் தன் பிள்ளைகளை அந்த  தூரத்து ரிலேசன்காரன்கிட்ட பாத்துக்க சொல்லிட்டு தம்பா அம்மா நகரத்துக்கு வீட்டு வேலைக்கு போகின்றாள்..

தம்பா ஸ்கூலுக்கு போனாலும் ,ஸ்கூல் விட்டு திரும்பி வந்தாலும் அவன் நினைப்பு எப்போதும் புட்பால் பத்திதான்... அதைத்தான் அதிக நேரம் பிராக்டிஸ் செய்வான்..

தம்பா அம்மா போனதால அந்த தூரத்து ரிலேசன் தம்பாவின் வயதுக்கு வந்த தங்கச்சி மேல அவனுடைய காமம் திரும்ப... நடு இரவில் தனது தங்கையை அந்த காம வெறிபிடித்த மிருகத்திடம் இருந்து தப்பிக்க வைத்து விட்டு அவனோடு  சண்டை போடும் போது தம்பாவை ஓங்கி அடிக்க தம்மபா மயக்கமாகின்றான்....

மயக்கம் தெளிந்து எழுந்தால் தம்பாவின் பின்புறம் அந்த காம மிருகம் புணர்ச்சி செய்து ரத்தத்தை வர வைத்து இருக்கின்றது...

அம்மாவை தேடி நகரத்துக்கு போக அம்மாவுக்கு எயிட்ஸ்...அம்மா தம்பாகிட்ட சொல்லறா அந்த துரத்து ரிலேசன்  நாய்கிட்ட படுத்த காரணத்தால்தான் எனக்கு எயிட்ஸ் வந்தது என்று...

தம்பாவையும் அவன் புணர்ந்து இருப்பதால் பிளட் டெஸ்ட் செய்தால் தம்பாவுக்கும் எயிட்ஸ்..

தம்பாவின் கால்பந்து கனவு என்னவானது? என்பதை வெள்ளித்திரையில் பார்க்கவும்....



படத்தின் சுவாரஸ்யங்களில் சில....


சவுத் ஆப்பிரிக்காவின் புறநகர் பகுதி கிராமமும் அழகும் பல நாட்களுக்கும் உங்கள் மனத்திரையில் இருக்கும்...

இந்த படத்தில் தம்பா கால் பந்து பிராக்டிஸ் செய்யும் போதும் சரி.. மேட்ச்சில் விளையாடும் போதும் சரி.. பின்னியில் ஒலிக்கும் அந்த பழங்குடி மக்களின் இசைக்கோர்வை ஒரு உற்சாக துள்ளல்....

சினிமோட்டோகிராபி அவ்வளவு அற்புதமாக இருக்கும் கிராம புற அழகும் நகர்புற அவலட்சனத்தையும் மிக அற்புதமாக செல்லுலாய்டில் பதிவு செய்து இருக்கின்றார்கள்.

தம்பாவின் அம்மா சவுத் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் இருக்கும் ஒரு ஸ்லம்மில் ஒரு தகர கொட்டகையில் கிழிந்த நாரக கிடக்கும் அந்த காட்சி நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி..

கால்பந்தாட்டத்தில் தம்பா படிபடிப்பாய் வளர்ச்சி அடைவதும். சிறுவர்களாக இருந்து பெரியவர்களாக அதே போலான பசங்களை தேர்வு செய்தது அற்புதம்...

நம்பிக்கையோடும் ,தன்னம்பிக்கையோடும் இருப்பவனை எந்த நோயும் குலைத்து விடாது என்பதற்கு தம்பா வாழ்க்கை ஒரு படிப்பினை..


தம்பாவின் வெகுளியான முகத்துக்கே இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும்...
கடைசியாக பிரிஸ் மீட்டில் பேசும் காட்சிகள் சென்னை ரசிகர்கள் இடத்தில் பெரிய கைதட்டலை அள்ளியது....


இந்த படம் சென்னை 8வது உலக படவிழாவில் உட்லண்ட்ஸ் திரை அரங்கில் திரையிடபட்டு ரசிகர்கள் கவனத்தை கவர்ந்த படம் இது...

தம்பா அவன் அம்மாவை ஒரு  பெரிய வீட்டில் குடி வைக்கும் போது அந்த ஏழை தாயின் கண்ணில் இருக்கும் நம்பிக்கை  சந்தோஷம்... எல்லா  ஊர்லயும் அம்மாக்காரிங்க ஒரே மாதிரதான் இருக்காங்க என்று சொல்லுங்ம காட்சி அது..

சவுத் ஆப்பிரிக்க கதைகளான, பிளட் டயமண்ட்,ஹோட்டல் ருவான்டா, படங்களின் வரிசையில் இந்த படமும் இடம் பெறும்  என்பது என் கருத்து..

படத்தின் டிரைலர்.




படக்குழுவினர் விபரம்


 Director:
Stefanie Sycholt
Writers:
Stefanie Sycholt (screenplay), Lutz van Dijk (book)


Stars:
Chris April, Simphiwe Dana and Jens Lehmann


பைனல் கிக்....

இந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்.... நெகிழ்ச்சிக்கு இந்த படம் கேரண்ட்டி


===============


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

15 comments:

  1. படிச்சுட்டு வந்து சொல்லறேன்

    ReplyDelete
  2. பார்த்துடுவோம்

    ReplyDelete
  3. நெகிழ வைக்கும் விமர்சனம் அருமை

    ReplyDelete
  4. பார்த்தே தீரவேண்டிய படம்....

    ReplyDelete
  5. neengal sollum padam ellam eppady enngu parpathu dvd engu keedaikum veelakam please NADPUDAN NAKKEERAN

    ReplyDelete
  6. RAgu...

    FOr your kind information. Blood Dimand not South African Movie. It's from Sierra Leone, West Africa.

    ReplyDelete
  7. RAgu...

    FOr your kind information. Blood Dimand not South African Movie. It's from Sierra Leone, West Africa.

    ReplyDelete
  8. //சிகரேட் ஊதி தள்ளுபவனுக்கு எதும் நேராது.. சிகரேட் பிடிக்கவே மாட்டான் அவனுக்கு கேன்சர் வந்து தொலைக்கும்.//நிஜம் தான்.

    உண்மையிலே விமர்சனம் அருமை.

    ReplyDelete
  9. >>> கண்டிப்பாக பார்க்கிறேன்!

    ReplyDelete
  10. //ஏழை தாயின் கண்ணில் இருக்கும் நம்பிக்கை சந்தோஷம்... எல்லா ஊர்லயும் அம்மாக்காரிங்க ஒரே மாதிரதான் இருக்காங்க என்று சொல்லுங்ம காட்சி அது..//உண்மை தான் jacky

    ReplyDelete
  11. great review!!!!!

    pls share torrent links if u have

    thanks
    senthil
    doha

    ReplyDelete
  12. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..

    நன்றி செந்திலின் பாதை நன்றி கருத்தை ஆமோதித்தமைக்கு...

    நன்றி ரகுநாத் தங்கள் தகவலுக்கு.. பட் ஆப்பிரிக்க படம் என்று எழுதி இருக்க வேண்டும்.

    ReplyDelete
  13. நான் இந்த படத்தை மிஸ் பண்ணிவிட்டனே ஜாக்கி .

    ReplyDelete
  14. Hi ஜாக்கி சேகர்,

    I can't find this movie in online, can you please tell where should i find and if any torrent link me it'll very helpful

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner