(yaddham sei..2011) யுத்தம் செய்... மிஷ்கினின் அசத்தல்....



சென்ற குடியரசு தின விழா விஜய் டிவி யுத்தம் செய் படத்தை பற்றிய  சிறப்பு நிகழ்ச்சியில் நான் கேட்ட கேள்விகள் ஒளிபரப்பாயின அதில் இந்த படத்தை பற்றிய உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்று கேட்டார்கள்..மென்மையாக கதை சொல்லும் சேரனும் மிக ராவாக கதை சொல்லும் மிஷ்கினும் இணைந்தால் அந்த படம் நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும் என்றேன்.. அதுக்கு மிஷ்கின் மிகச்சரியாக சொன்னார்.. நான்  ஒரு ராவான ஆள்தான் என்றார்..அதை இந்த படத்திலும் நிருபித்து இருக்கின்றார்....


ஒரு இயக்குனர் தனது படத்தை எடுத்து விட்டு அந்த படத்தில் எதாவது ஒரு இடத்தில் தனது பெயர் வருவதையோ விரும்புவார்.. ஆனால் இந்த படத்தில் தனது பெயர் எந்த இடத்திலும் வராமல் பார்த்துக்கொண்டு  இருக்கின்றார்...முதல் முறையாக  டைட்டிலில் பெயர் போடாமல் இருக்கின்றார்...ஒரு தமிழ் இயக்குனர்....மிஷ்கின்... யுத்தம் செய் படத்தை பற்றி பேசும் போது எனது பெயர் பேசபட்டால் போதும்  என்று நினைத்து இருக்கலாம்... எது எப்படி இருந்தாலும் இதுவும் புது முயற்சிதான்.



மிஷ்கின்  நிறைய பேசுகின்றார் என்ற கருத்து முன் வைக்கபட்டாலும். அவர்தான் முதன் முறையாக படம் நெடுகிலும் லென்தி ஷாட் மற்றும் கேமரா கோணங்களில் வித்யாசம் மற்றும் சைலன்ட் ஷாட் போன்றவை தமிழ்சினிமாவில் அதிகம் பயண்படுத்தியது மிஷ்கின் என்று சொன்னால் அதை யாரும் மறுக்கமுடியாது...

தமிழ் சினிமாவின் ரசனை மாற்றத்துக்கு மிஷ்கின் ஒரு காரணம் என்று  தைரியமாக  சொல்லலாம்.. மற்ற தமிழ் படங்களை விட இவரது படங்கள் புதிய ரசனைக்கு வழி வகுத்தவைதான்.

யுத்தம் செய் படத்தின் கதை என்ன?

தங்கையை தொலைத்த ஒரு போலிஸ்.. சிபிசிஜடி டிப்பார்ட்மென்ட்க்கு மாற்றலாகி வருகின்றார்..  அவரது பெயர் ஜேகே (சேரன்) நகரில் கொலைகள் நடக்கின்றன... அதுவும் கவனஈர்ப்பாக அந்த கொலைகள் இருக்கின்றன.. கைகள் மட்டும் வெட்டபட்டு பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் வைக்கபடுகின்றன.  அதனால் நகரம் பரபரபப்பாகின்றது..அதே நேரத்தில் பல இளம் பெண்கள் காணாமல் போகின்றார்கள்.


லீவ் கேட்கும் ஜேகேவிடம் யாரும் இல்லாத காரணத்தால் இந்த கொலைகேஸ்மற்றும் பெண்கள் காணாமல் போன கேஸ்கள் இன்வஸ்ட்டிகேஷன் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கபட்டு இரண்டு அசிஸ்டென்ட் அவருக்கு உதவியாக நியமிக்கின்றது  அதில் ஒரு உதவியாளர்  பெண்... கொலைக்கான தேடுதல் வேட்டை தொடர்கின்றது.. இடைவேளைக்கு பிறகு முடிச்சிகள் அவிழ்ந்து தனக்கு கொடுத்த பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றினாரா சேரன் என்பதை   வெண்திரையில் பார்க்கவும்.


படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

சேரன் அழுகையை நக்கல் விடுபவர்கள் நிறைய... அனால் இந்த படத்தில் ஒரு ஸ்மார்ட் ஹீரோவாக நடித்து இருக்கின்றார்.. அவரின் சாயல் இல்லாமல் இந்த படத்தில் அவரை நடிக்க வைக்க நிறைய பிரயத்தனம் செய்து இருக்கின்றார்கள். அதில் சேரன் ஒத்துழைப்பில் அந்த பாத்திரத்துக்கு உயிர் வந்து இருக்கின்றது.

பைட் சீனுக்கு முன் லீட் காட்சியில் கால்களை மட்டும் காட்சியில் ரசிகர்கள் கத்தல் காதை பிளக்கின்றது..

 சேரன் நடிப்பில் சில பல சறுக்கல்கள் இருந்தாலும் அதனை சொல்ல வேண்டாம்.. காரணம் நிறைய நன்றாக நடித்து இருக்கும்  போது சின்ன விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம்.... சேரன் உங்கள் பாதையை நீங்கள் தைரியமாக மாற்றிக்கொள்ளலாம்..

முதல் பாதியில் தியேட்டரில் நக்கல் ரகளை விட்டுக்கொண்டு இருந்த ஒரு கும்பல் இடைவேளைக்கு பிறகு அமைதியாக இருந்தார்கள்.. அந்த அளவுக்கு கதையின் உள்ளே ரசிகர்கள் போய்விடுகின்றார்கள்...

இந்த படத்தில் கதாநாயகி இல்லை.. அப்படி நினைக்கவேண்டும்  என்றால்  சேரனின் உதவியாளராக வரும் தீபாஷாவை சொல்லலாம்... பெரிய ரொமான்ஸ் இருவருக்கும் இல்லை... ஆனால் அந்த பெண் சட்டை பேண்டில் நன்றாகவே இருக்கின்றார். நல்ல பெரிய கவர்ச்சியான கண்கள்.

அடிப்பட்டு கிடக்கும் அந்த பெண்ணை சேரன் ஒரு இடத்தில் மட்டுமே தொடுகின்றார்... அவ்வளவுதான் அவருக்கு பிராப்தம்.. என்ன செய்ய திரைக்கதை அப்படி... பாவம் சேரன்.

பணக்காரர்கள் என்னவெல்லாம் செய்கின்றார்கள் என்று ஒரு புது   கோணத்தை காட்டி இருக்கின்றார்... இயக்குனர்.

ஒய்ஜி மகேந்திரன் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இருவரும் மிக சிறப்பாக நடித்து இருக்கின்றார்கள்.. லட்சுமி ராமகிருஷ்ணன் செமையாக பர்பாமென்ஸ் செய்து இருக்கின்றார். முக்கியமாக பெண்  தூக்கில் தொங்கும் போது அதை பார்த்து விட்டு அதிர்ச்சியில் கிழே விழுவதும்... கேமரா அவருடைய முகத்துக்கு சுற்றிக்கொண்டே வருவதும் சிறப்பு..

கடைசி சண்டைக்காட்சியில் முர்க்கமாக எதிரிகளிடம் மோதிவிட்டு சுஜா என்று கிழே விழும் போது கண்களில் எனக்கு நீர் வந்தது...
இந்த படத்துக்காக  லட்சுமிராமகிருஷ்ணன் மற்றும் ஒய்ஜி போன்றவர்கள் மொட்டை போட்டு இருக்கின்றார்கள்....இந்த படம் பார்க்க தியேட்டருக்கு முதல் காட்சி பார்க்க ராஜேஸ்வரிக்கு வந்து இருந்தார்... நேரில் ரொம்ப இளைமையாக இருக்கின்றார்... தலையில் மூன்று மாத முடி வளர்ந்து இருக்கின்றது... முக்கியமாக  அந்த பெண்மணிகருப்பு சட்டை பேண்டில் கண்களில் காட்டும் மூர்கம் செமை....


ஜெயப்பிரகாஷ் இந்த படத்தில் அடுத்த சிக்சர் அடித்து இருக்கின்றார்... சேரனின் மாயக்கண்ணாடி படத்தில் நடிக்கும் போது அவரே நினைத்து பார்த்து இருக்கமாட்டார் இந்த வளர்ச்சியை... ஆனால் எனக்கு மாயக்கண்ணாடி படத்தில் அந்த கேரக்டரை எனக்கு பிடிக்க வில்லை... இந்த படத்தில் ஒரு டயலாக் பேசும் போது தியேட்டரே கிளாப்ஸ்...

படிக்காம சின்ன மூளையயை வச்சிகிட்டு நீங்களே இவ்வளவு  டெக்னிக்கலா யோசிக்கும் போது இவ்வளவு படிச்ச நாங்க எவ்வளவு டெக்னிக்கலா யோசிச்சு இருப்போம்.

நீண்ட நாளுக்கு பிறகு செல்வா நடித்து இருக்கின்றார்... அந்த பாத்திரத்துக்கு நல்ல பொருத்தம்.

இண்டர்வெல்லுக்கு பிறகு முடிச்சு அவிழும் காட்சிகள் லென்தி ஷாட் காரணமாக சின்ன லேக் வருகின்றதாக சிலர் சொல்லுகின்றார்கள்.. எனக்கு அப்படி  தெரியவில்லை.  நீங்கள் படம் பார்த்தாலும் அப்படித்தான் உணர்வீர்கள்...

படத்தில்  ஒரு ராவாண பயணத்தின் இளைப்பாறல் போல அந்த கண்ணுக்குள்ள கண்ணா பாடல் வருகின்றது... இயக்குனர் அமிர் நன்றாகவே துடுப்பு போடுகின்றார்... அந்த பெண்ணின் இடுப்பு  அசைவுக்கே பார்க்கலாம்... அந்த கண்கள்...   முக்கியமாக பின்னியில்  ஆடும் பெண்களில் இரண்டு மூன்று பெண்கள் ரொம்பவும் வசீகரமாக இருக்கின்றார்கள்... புடவை கட்டியபடி வந்து தாளம் தப்பாமல் ஆடும் போது பார்த்த பாடல் போல் இருக்கின்றது என்ற  எண்ணத்தை மாற்றுகின்றது...

ஒரு போலிஸ்காரர் ஆபிஸ்விட்டு வெளியே  பைக்கில் வந்து ஒரு தர்பூசனி பழத்தை எடுக்கும் காட்சியில் படம் முழுக்க போலிசாரை உயர்த்தி சொல்லும் இந்த படம்.. அந்த காட்சியில் போலிசாரின் கப்பிதனத்தை காட்டுவது மட்டும் அல்ல... அந்த காட்சியில்  தியேட்டர் சிரிப்பு மழை.....  அது காட்சி படுத்தும் போது கூட இப்படி ரசிக்கபடும் என்று யோசித்து  இருக்க முடியாது. ஏன் அந்த காட்சியில் நடித்த போலிஸ்காரர் கூட இந்த காட்சியில் போய் நம்மை நடிக்கவைக்கின்றார்களே என்று வருத்த பட்டு இருக்க  வாய்ப்பு இருக்கின்றது. நல்ல காட்சி..

கேமராமேன் சத்யாவுக்கு இது முதல் படம்...சவாலான படம்... ஒரு ஷாட் நமக்கு பிடித்து இருந்தால் அது நம்மை அறியாமல் காட்சிகளில் தலை காட்டும் அது போல ஒரு லேம் போஸ்ட்டை கம்போஸ் பண்ணி வைத்து இருக்கும் காட்சிகள் இதில் அதிகம்.... அதே போல நிறைய டாப் ஆங்கில் ஷாட்கள்.

முக்கியமாக பெசன்ட்நகரில் ஹேப்பி நுயூயர் கொண்டாடும் காட்சியில் டாப் ஆங்கிளில் இருக்கும் கேமரா மெல்ல நகர்ந்து காரின் மீது இருக்கும் அட்டை பெட்டியை எட்டி பார்க்கும்  காட்சி அருமை..

சண்டைகாட்சியில் சேரன் அடித்து விட்டு கை முறுக்கி நடந்து வரும் போது அந்த ஷாட் 360 டிகிரிக்கு கேமரா சுற்றி கையை பாலோ செய்வதும் பின்னால் கத்தி ஓடிவருபவன் அவுட்டாப்போக்கசில் கத்தி வந்த நிற்பதும் மிரளுவதும் நல்ல காட்சி...

சண்டைகாட்சியில் நன்றாகவே செய்து இருக்கின்றார்.. மிக முக்கியமாக  அந்த ஓஎம் ஆர் ரோட்டில் எடுத்த பூட் ஓவர் பாலத்தில் அந்த சண்டைகாட்சிக்கு முன் நடக்கும் கம்போசிஷன் அற்புதம். சண்டைக்கு கடைசி ஷாட்டில் ஒருவனை மார்பில் சதக் சதக் சதக் என்று குத்தியபடி  முறைப்பாக  அடித்தபடி நடந்து வரும் காட்சி சிறப்பு..


சப்வேயில் இருக்கும்  லாங் ஷாட்டில் இருக்கும் கேமரா சுத்தம் செய்யும்  பெண் வரும் போது அவுட்டில் தெரிய அப்படியே கேமரா டிராவல் ஆகி அந்த அட்டை பெட்டி வரும் காட்சியில்  சட்டென வரும் பின்னனி இசை.. அசத்தல்..


  இசை கே... அறிமுகம்...இந்த படத்தக்கு என்ன தேவையோ அதை கொடுத்து இருக்கின்றார்கள்.

படத்தின் டைட்டில் மற்றபடங்களை விட வித்யாசம்தான்... பாருங்கள்..கமிஷ்னர் பேசும் ஆங்கிலத்துக்கு செம கலாட்டா???

ஹாஸ்டல் ,மெமரிஸ் ஆப் மார்டர் போன்ற படங்களை இது ஞாபகபடுத்துகின்றது என்று சொல்லலாம்... சொல்லுதல் யார்க்கும் எளிய என்ற குரல் நினைவுக்கு வருவதை தவிர்கக முடியாவில்லை..

அந்த பையன்  ஊருக்கு போகும் போது முத்துசாமி மகேஷ் முத்துசாமி என்று சொல்லி விட்டு எலிவேட்டரில் ஏறும் காட்சியில் அவருடைய ஆஸ்தான ஒளிபதிவாளர் மேகேஷ் முத்துசாமிக்கு மரியாதை செய்யும் காட்சி..

எழுத்தாளர் சாருவுக்கும் நன்றி கார்டு போடுகின்றார்...

எழுத்தாளர்  சாருவே படம் பார்க்கும் போது அது நான்தான் என்று சொல்லுவதற்குள் அது என்று திரையை காட்டும் போதே காணமல் போய் விடுகின்றார்... சாருவின் விரல்கள் அருமையாக நடித்து இருக்கின்றன....


படத்தின் டிரைலர்....

படக்குழுவினர்விபரம்...

Directed by     Myskkin
Produced by     Kalpathi S.Aghoram
Written by     Myskkin
Starring    

    * Cheran
    * Dipa Shah
    * Lakshmi Ramakrishnan
    * Y. Gee. Mahendra
    * Jayaprakash

Music by     K
Cinematography     Sathya
Editing by     Gagin(Venkat)
Studio    

    * AGS Entertainment
    * Lonewolf Productions

Release date(s)     4 February 2011 (2011-02-04)
Country     India
Language     Tamil

சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி  தியேட்டர் டிஸ்கி.

இப்போதும் 120ரூபாய்க்கு சென்னையில் டிக்கெட்  வாங்கி சாமான்ய ரசிகனின் பாக்கெட்டை பதம் பார்க்கும் தியேட்டருக்கு  மத்தியில் இன்னமும் ஏவிஎம் ராஜேஸ்வரியில்  50ரூபாய் டிக்கெட் 10ரூபாய் பைக் டோக்கன்தான் வாங்குகின்றார்கள்.

ஒரு 30 அராத்து பசங்க வந்தார்கள்.. இடைவேளைவரை பேசிக்கொண்டே இருந்தார்கள்..

சேரனை நக்ககல் விடுவது  அவர்கள் பிரதான கருத்தான இருந்தது...

எனக்கு பின்னாடி உட்கார்ந்து இருந்தவன் சேல்ஸ் ரெப்போ என்ன கருமமோ தெ/ரியவில்லை.. மேடம்  ஐ வில் கால் இன் அனதர் டென்மினிட்ஸ் என்று பல கால்கள் பேசிக்கொண்டே இருந்தான்..

இந்த தியேட்டரில் சீட்டிங் அரேன்ஞ்மென்ட் மட்டும் சரி படுத்திவிட்டால் இன்னும் நல்ல தியேட்டராக மாறிவிடும்.

சேரன் அப்புகுட்டி என்று தங்கையை போனில் பேசும் போது தியேட்டரில் பயங்கர கிளாப்ஸ்...

பைனல் கிக்.

இந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம். கண்டிப்பாக தியேட்டரில் பார்க்கவும்.



யுத்தம் செய் படத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் இந்த படம் பற்றி நான் மற்றும் பதிவர்கள் பேசிய லிங்க இங்கே கிளிக்கி பார்க்கவும்.


பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்..



குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

20 comments:

  1. jackie next week nama meet panalama.. nan india varen :)

    ReplyDelete
  2. எனக்கு இப்படம் வேறு எந்த படத்தையும் ஞாபக படுத்தவில்லை...(memories of murder etc)
    இது ஒரு நார்மல் murder ஸ்டோரி...அதை மிக அருமையாக
    பல வித்தியாசமான காட்சி அமைப்புகளால்..எடுத்திறிகார்
    அனால் இரண்டாம் பாதி..நிறைய தடுமாற்றம்...நிறைய டிராமா..
    அதை கிளைமாக்ஸ் மறக்க வைக்கிறது.

    ReplyDelete
  3. oh ok. Appo naalaiku parthuda vendiyathu than. Inga release pannitanga.


    Ananth,
    Chicago.

    ReplyDelete
  4. மிஷ்கினுக்காக பார்க்கலாம்...

    ReplyDelete
  5. அண்ணே
    உடனடி விமர்சனத்துக்கு மிக்க நன்றி,என் நண்பர்கள் அனைவரும் படம் பிடித்தது என்றனர்.எத்தனியோ மொக்கைராசாக்கள் நடிக்கையில் சேரன் நடிப்பதற்கு என்ன தடை?

    ReplyDelete
  6. இயக்குனர் லான் வான் ட்ரையர் வரையறுத்த டாக்மி விதிகளின் படி எடுக்கப்படும் படங்களில் இயக்குனருக்கு க்ரெடிட் கொடுக்கக்கூடாது என்பதும் ஒன்று.அவரின் எந்த படத்திலும் இயக்குனர் பெயர் வராது,இதிலும் உலகசினிமா போல முயன்றிருப்பது சிறப்பு.

    ReplyDelete
  7. இயக்குனர் லான் வான் ட்ரையர் வரையறுத்த டாக்மி விதிகளின் படி எடுக்கப்படும் படங்களில் இயக்குனருக்கு க்ரெடிட் கொடுக்கக்கூடாது என்பதும் ஒன்று.அவரின் எந்த படத்திலும் இயக்குனர் பெயர் வராது,இதிலும் உலகசினிமா போல முயன்றிருப்பது சிறப்பு.

    ReplyDelete
  8. நல்ல விமர்சனம்
    ஆயிரம் விமர்சனங்கள் சொன்னாலும் மிஷ்கின் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவர்
    ஜாக்கி நீங்கள் பேசும் முறை அழகாக இருக்கிறது மிகத் துல்லியம்

    ReplyDelete
  9. இந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம். கண்டிப்பாக தியேட்டரில் பார்க்கவும்.


    கண்டிப்பா , அப்புறம் தூங்கா நகரம் எப்படி இருக்குனு சொன்ன அதையும் பாத்துடுவேன்
    --

    ReplyDelete
  10. Directed by MagadevanG ?
    What Jackie you have written this film is directed by MagadevanG

    ReplyDelete
  11. உலக சினிமா--ஜப்பான் - cold fish-ஞாபகம் வருதே,,ஞாபகம் வருதே

    ReplyDelete
  12. Change the director name as Myskkin in the name list

    ReplyDelete
  13. மனசை பதட்டப்படுத்தும் காட்சிகள் நிறைய உண்டென்று தெரிகிறது.பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  14. அந்த பெண் சட்டை பேண்டில் நன்றாகவே இருக்கின்றார். நல்ல பெரிய கவர்ச்சியான கண்கள்.

    புரியுது....?????இந்த நக்கல் தானே வேணாங்கிறது - படம் பார்த்தே ஆகணும்

    ReplyDelete
  15. //ஒரு 30 அராத்து பசங்க வந்தார்கள்.. இடைவேளைவரை பேசிக்கொண்டே இருந்தார்கள்..

    சேரனை நக்ககல் விடுவது அவர்கள் பிரதான கருத்தான இருந்தது...

    எனக்கு பின்னாடி உட்கார்ந்து இருந்தவன் சேல்ஸ் ரெப்போ என்ன கருமமோ தெ/ரியவில்லை.. மேடம் ஐ வில் கால் இன் அனதர் டென்மினிட்ஸ் என்று பல கால்கள் பேசிக்கொண்டே இருந்தான்.//

    >>> நல்ல படங்களை பார்க்க முடிவு செய்துவிட்டால் தயவு செய்து சத்யம் தியேட்டரில் பாருங்கள். பணம் ஜாஸ்திதான். ஆனால் டிஸ்டர்பன்ஸ் இல்லை. உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் சொல்ல நினைத்தேன்.

    ReplyDelete
  16. i think miskin get stories only from korea and china . there are lot of stories in tamil. he is doing wrong thing in smart manner

    ReplyDelete
  17. Jackie anna, Good mng...
    Nethu thaan parthen... POllachi Shanthi Theatre la..

    Unga karuthu arputham... camera kangal ungalukku thaan.

    1. Jayaprakash Acting great with dialogue of his death shot.
    2. Lakshmi amma ellati padam thodhudum...
    3. Same Anjathe feeling
    4. 1st Half fulla suspensenga perula... bore adikkuthu...
    5. Cheran CBI Performance not suitable (I am also Cheran fan)Thalai thoongiyea pesararu... Midukku Illai... avanga profilela kuppai thottila en podanum
    6. YG M & Lakshmi kagave padam pakkanum
    7. Selva ordinary villan... perusa nadippu illa
    8. Anjathe climax same / Gun shooting
    9. A normal thriller padam
    10. Song la rendu ponna correcta kandupudichuteenga
    11.Music same backround padam muluvathum...
    12. Nalaiya iyakkunar TV La varappla irukku anna
    13..... unga choice

    Ganesh S, POLLACHI

    ReplyDelete
  18. //அந்த பையன் ஊருக்கு போகும் போது முத்துசாமி மகேஷ் முத்துசாமி என்று சொல்லி விட்டு எலிவேட்டரில் ஏறும் காட்சியில் அவருடைய ஆஸ்தான ஒளிபதிவாளர் மேகேஷ் முத்துசாமிக்கு மரியாதை செய்யும் காட்சி..//


    அது போல சேரன் தங்கைக்கு சாரு'ன்னு பெயர் வச்சி அவரு நண்பன் சாரு நிவேதாக்கு மரியாதையை செய்து இருக்கார் கவனிதிர்களா யாராவது ...

    ReplyDelete
  19. ///சப்வேயில் இருக்கும் லாங் ஷாட்டில் இருக்கும் கேமரா சுத்தம் செய்யும் பெண் வரும் போது அவுட்டில் தெரிய அப்படியே கேமரா டிராவல் ஆகி அந்த அட்டை பெட்டி வரும் காட்சியில் சட்டென வரும் பின்னனி இசை.. அசத்தல்..///

    இந்த காட்சியை நான் பார்த்துகொண்டிருந்தபோது திடிரென வந்த பின்னணி இசையை கேட்டு நான் சற்று பயந்தே போனேன். அப்படி ஒரு த்ரில்லிங்கான காட்சி அது.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner