மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/ஞாயிறு(16/01/2011)

ஆல்பம்..


திரும்பவும் பெட்ரோல் விலையை ஏற்றி தனது மக்கள் சேவையை எண்ணெய் நிறுவனங்கள் செய்து இருக்கின்றன... காங்கிரஸ் மத்திய அரசு இது பற்றி எல்லாம் அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை... எப்படி இருந்தாலும் என்ன விலை இருந்தாலும் பெட்ரோல் போட்டு வண்டியை ஓட்டித்தானே  ஆகவேண்டும் என்று இருமாப்புடன் இருக்கின்றது......இந்த விலை உயர்வை பொங்கல் போனஸ் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்..
==========
எதிர் கட்சியான பா ஜ க பெட்ரோல் விலையை ஐந்தரை ரூபாயை குறைக்க சொல்கின்றது. செவி சாய்குமா மத்திய அரசு.? இப்போதாவது மக்கள் பிரச்சனைக்கு பாஜகமதிப்பு கொடுத்து  பிராதான எதிர்கட்சியாக குரல் கொடுத்து இருக்கின்றதே அதுவே பெரிய விஷயம்... பார்ப்போம்..
================

பொங்கல்நாளில் சபரிமலையில்  கூட்ட நெரிசலில் 100க்கு மேல் இறந்து போய்விட்டார்கள்.பெரிய கூட்டத்தில் சின்ன வதந்தி கூட பெரிய உயிர் இழப்பை  கொடுக்கும்...ஒரு ஜீப் கட்டுக்கடங்காமல் வந்தால் இப்படித்தான் நடக்கும்.. அந்த குறுகிய பாதையில் வாகனத்தை தடை செய்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது....டிரைவர்களுக்குள் நடந்த போட்டிதான் இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்று முதல் கட்ட விசாரனையில் தெரியவந்த இருக்கின்றது..
=======================
சபரிமலையில் இறந்தவர்களில் 37 பேர் தமிழர்கள் என்பதும் அவர்கள் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க பட்டு இருக்கின்றது... இதில் சென்னையை சேர்ந்தவர்கள் இரண்டு பேர்...மத்திய அரசு ஒரு லட்சமும் , கேரளஅரசு ஐந்து லட்சமும், மாநில அரசு ஒரு லட்சம் என அறிவித்த காரணத்தால் எழு லட்சம் இறந்நதவர் குடும்பத்துக்கு கிடைக்கும் ஆனால் போன உயிர் திரும்ப வராது...20 லட்சம் கொடுத்தாலும் 80லட்சம்கொடுத்தாலும் அப்பா உயிரோடு இருப்பதுபோல வராது.....
======================

மிக்சர்..

மெயில் மற்றும் கைபேசியில் குறுஞ்சேய்தி மூலமும் போன்  செய்தும் வாழ்த்துக்கள் சொன்ன அத்தனைபேருக்கும் என்  நன்றிகள்..ஏம்பா வாழ்த்து அனுப்பும் போது தயவு செய்து பேரை போட்டு அனுப்பினா என்ன??வெறும் நிறைய நம்பர்கள்தான் எனக்கு வாழ்த்து சொன்னது... பேரே தெரியலை...
==============
நாளை காணும் பொங்கல் அதுவுமாக  சென்னை கடற்கரையில் கூட்டம் அப்பும்...கடலில் குளித்து வருடம்தோரும் நிறைய பேர் இறந்து போவதால் சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் இந்த விசேஷதினமான 3 நாட்களுக்கு மட்டும் குளிக்க தடை போட்டு இருக்கின்றது காவல் துறை...பயம் இல்லாமல் கடலில் குளிக்க ஏதாவது  பாதுகாப்பு சுவர் சின்ன சின்னதாக அமைத்து  பொது மக்களுக்கு உதவிட வேண்டும்..கடற்கரை என்றால் கடலில் குளிக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு...........
===========
பிஎஸ்என்எல் 3ஜிக்கு கேடுகாலம் போல.. ஒழுங்கா ஒர்க் ஆக மாட்டேங்குது.. திடிர் திடிர்னு நோ சர்விஸ்ன்னு டவர் இல்லாம போயிடுது....எங்க வீட்ல ஒரு பாயிண்ட்தான் வரும்....இப்ப அதுவும் தகிதனத்தோம்....
முக்கியமா நைட்டு தூக்கம் வரலைன்னா எதாவது எழுதுவேன்..எதாவது நெட்ல படிப்பேன். ஆனா இப்ப அதுவும் இல்லை.. பட் ஏர்டெல் நெட்ஒர்க் எனக்கு செல்லில் பிரச்சனை கொடுத்தது.. இப்ப 20ம் தேதி ஐடியாவுக்கு பயந்து கிட்டு டவர்ல ஏதோ பண்ணி இப்ப வீட்டை விட்டு வெளியே வந்து பேசுவது குறைந்து வீட்டுக்குள்ளயே இப்ப போன் பேசறேன்.. அதுல ரொம்ப சந்தோஷபட்டேன்.. உடனே அதுக்கு இமிடியட் ஆப்பா... நல்லா இருந்த 3ஜி மொக்கையா ஆயிடுச்சி...
முதலில்  தப்போ ரைட்டோ போஸ்ட் போட்டு விட வேண்டியதாக இருக்கின்றது.. காரணம் சிக்னல் எப்போது வேண்டுமானாலும் போய்விடும் என்ற பயம்தான்...

போஸ்ட் போட்டாகிவிட்டது.. சரி ஒரு வாட்டி பார்த்துட்டு தமிழ் கொலையை கொஞ்சமாவது தடுத்து நிறுத்தலாம்னு பார்த்தா எங்க விடுது.. இந்த 3ஜி சனியன். நேற்று அப்படித்தான் போஸ்ட் போட்டு விட்டு ஒரு வாட்டி பார்த்துவிட்டு சில இடங்கிளில் மனதில் இருப்பதை அப்படியே எழுதும் காரணத்தால் வாக்கிய அமைப்பு கூட மாறும்... சரி அதை எல்லாம் சரி படுத்து விட்டு போஸ்ட் பண்ணப்போகும் போது சிக்னல் இல்லை.. நானும் நைட்டு ஒருமணி நேரம் வரை கண்முழிச்சி பார்த்தேன் ..மணி சரியா ஒரு மணி இருக்கும்.. மனைவி கோபத்தில் கம்யூட்டரை ஒடச்சி போட்டு விடும் வாய்ப்பும் இருப்பதால்.... உள்ளதும் போச்சி நொள்ளகண்ணா என்று ஆகிவிடும்  என்பதால் அப்படியே போய் படுத்துக்கொண்டேன்....


மறு நாள் அப்படியே மறந்து போய் விடுவேன்... அந்த தமிழ் கொலை சாட்சியங்களோடு பதிவில் பல வருடத்துக்கு நிலைத்து நிற்கும்.. இதுவாது பராவாயில்லை..3ஜி நைட்டு சரியா 12 மணிக்கு சிக்னல்  போயிடும்... சாட்டிலைட் டவர் வழியா வருதுன்னு இதை வாங்கி தொலைச்சேன்.... நைட்டு சாட்டிலைட் அமெரிக்கா பக்கம் போயிடும் போல..



வாலு போய் கத்தி வந்தது இதுதான் போல...சரின்னு 3ஜி கஸ்டமர் கேருக்கு போன் செஞ்சா.. அது போல ஒரு கொடுமையாக நரகம் இந்த உலகத்துல எதுவுமே கிடையாது.. ஒரு எழவும் அதுல பதில் சொல்லறவனுங்களுக்கு தெரியலை....ஒரு ஈசி ரீசார்ஜ் செய்துட்டு நான் பட்ட வேதனையும் அதுக்கு கஸ்டம் கேர் சொன்ன தீர்வும் இன்னைக்கு எல்லாம் என்னால மறக்கமுடியாது.. பதிவர் அலைகள்பாலா மட்டும் அன்னைக்கு என்னை தேத்தலைன்னா.. ஒருஆப் காலியாயிருக்கும்....4500 ரூபாய்கொடுத்து வாங்கின 3ஜி டேட்டா கார்ட்டை பாக்கும் போது எல்லாம் ஈழ தமிழர்கள் ராஜபக்சே போட்டோவை எப்படி பார்ப்பாங்களோ அது போல பார்க்கவேண்டியதா இருக்கு...

===================================
இந்தவார சலனபடம்...

 எங்க ஊருக்கு பக்கத்து ஊர் பாண்டிச்சேரி நகை கடை ஆட்... ஒரு அழகு மிளிரும் கலைநயம் இதில் இருக்கு பாருங்கள்..இதுக்கு முன் பழைய லட்சுமி ஜுவல்லரி ஆட் வந்தாலே பாண்டி மற்றும் சுற்றுபுற ஊர்களில் திரையில் பார்த்தாலே கை தட்டல் காதை பிளக்கும்... அதில் வரும் பிகருக்கு அப்படி ஒரு ரசிகர் கூட்டம் அதிகம்.... அந்த  பழைய விளம்பரம் யாருக்காவது தெரிந்தால் எனக்கு இணைப்பை அனுப்பி வைக்கவும்.



================
நன்றிகள்.

 பதிவர்பழுர் கார்த்தி  எனது வலைதளத்தை பற்றி ரொம்ப பெருமையாக எழுதி இருந்தார்.... அவருக்கு என் நன்றி..
======================

புத்தக விமர்சனம்...

குறிப்பு ...

நான் வாசித்த புத்தகங்களை உங்களோடு பகிர்வதற்கு மட்டுமே...இந்த பகுதிக்காக வாரம் ஒரு புத்தகம் வாசித்து எழுதுகின்றேன்.. வாசித்த புத்தகமாக இருந்தாலும் ஒரு முறை வாசித்து எழுதுகின்றேன்.... அடிக்கடி வரும் தொடர்ச்சியாக எழுத முடியாது.. ஏன்னா அந்தளவுக்கு நான் வாசிப்பு அனுபவத்தில் ஒர்த் கிடையாது...
 =========
ரகுமான் இரண்டு ஆஸ்கார் வாங்கிய உடன் கிழக்கு பதிப்பகத்தில் சுட சுட போட்ட் புத்தகம் இது...உணர்ச்சி வேகத்தில் வாங்கி ஒரே மூச்சில் படித்த புத்தகம்...எனக்கு ஏ ஆர் ரகுமானை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்... குடும்பத்தை காப்பாற்ற கார் டிரைவிங் கூட் கற்றுக்கொண்டவர்... வீட்டில் பெரியபையனாக பிறப்பது  கொடுமையான விஷயம்.. ஆனாலும்  தன் துறையில் தன்னம்பிக்யோடு போராடியவர் ரகுமான்... அவரின் சிறுவயது முதல் ஆஸ்கார்வரை மிக சுவாரஸ்யமாக அவரோடு பயணிக்கின்றது இந்த புத்தகம்...

இந்திய சூழலில்ரகுமானின் கதை ஒரு தனிமனிதனின் தன்னம்பிக்கை கதை என்று அடித்து சொல்லலாம்... இருந்தாலும் கடந்து வந்த பாதைகளை சுவரஸ்யமாகவும் அதே வேளையில் ஒரு ஒரு அத்தியாத்துக்கு முடிவில் சின்ன சின்ன டுவிஸ்ட்டுகளுடன் கிளைமாக்ஸ் நோக்கி பயணிக்கின்றது...ரகுமான் வெற்றியை சொல்லும் இந்த புத்தகம்....


 ஆசிரியர்... என். சொக்கன்..
புத்தகம்.....ஜெய்ஹோ..ஏஆர் ரகுமான்... 
பதிப்பகம்... கிழக்கு பதிப்பகம்
 விலை..80ரூபாய்..

==================================================


 சினிமா..
பாவம் செய்து இருந்தால் உடனே கழுவவும் வாழ்வில் வெற்றி பெறவும் உடனே சன்டிவிபார்க்கவும்என்று குறுஞ்செய்தி வந்தது.ஆர்வமாய் பார்த்தால் சுறா படம்
==================
 செல்வராகவன்.. அடுத்த மாத்தில் திருமணம் செய்து கொள்ள போகின்றார்...அவரிடம் பணியாற்றிய உதவி இயக்குனர் பெண்ணை
=============
விஜய் நடித்த காவலன் படம்.. நன்றாக இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்...
============
இந்தவார பதிவர்...


நிறைய விஷயம் எழுத வேண்டும் என்று தோன்றும் அப்படி ஒரு விஷயம் நெடுநளாக எழுத வேண்டும் என்று நினைத்து அதுக்கான மூட் இல்லாமல் தள்ளி போய்க்கொண்டு இருந்தது.. அனால் அதே விஷயத்தை ரொம்ப நாசூக்காக எனது நண்பர் கார்த்திகை பாண்டியன் எழுதி இருக்கின்றார்....அந்த பதிவை வாசிக்க...இங்கே கிளிக்கவும்..
 =============
 இந்தவார கடிதம்..
அன்புள்ள ஜாக்கி, உங்களை கொஞ்ச நாட்களாக வாசித்து வருகிறேன். நானும் ஒரு பாலகுமாரன் வாசகன் தான். ஓரு நீண்ட பேருந்து பிரயாணத்தில் ஒரே மூச்சில் நான் வாசித்த நாவல் "பயணிகள் கவனிக்கவும்". படித்து முடித்தவுடன், ஒரு சினிமாவுக்கு உண்டான அனைத்து அம்சங்களும் இருந்ததாக உணர்ந்தேன். இது நடந்தது ஒரு 10 வருடங்களுக்கு முன்பு. இப்போது உங்கள் பதிவைப் படித்தபிறகு, மீண்டும் அந்த நாவலை படிக்கவேண்டும் என்கிற ஆவல் எழுகிறது. ஆனால் தற்போது படித்தாலும் ஒரு திரைப்படத்திற்கு உண்டான அம்சங்கள் அதில் இருப்பதாக உணர்வேனா என்று தெரியவில்லை. உங்களுடைய கருத்து என்ன?

என்னுடைய பால்ய சினேகிதன் ஒருவன் உங்களைப் போலவே காமிரா காதல் உள்ளவன். தற்போது ஊரில் Photo Studio வைத்திருக்கிறான். 10 வது வரை மட்டுமே படித்திருந்தாலும் அவனுடைய தேடல்கள் மிக விசாலமானது. அவனும் உங்களைப் போலவே ஜாக்கி இரசிகன். அதனாலோ என்னவோ உங்களுடைய பதிவுகளை நான் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

மேலும் திரு.பாலகுமாரனைப் பற்றிய உங்கள் கருத்துகளை, என் போன்ற அவரின் எண்ணற்ற வாசகர்களின் குரலாகவே பார்க்கிறேன். நீங்கள் மென்மேலும் உயர எனது வாழ்த்துக்கள்!
=================

நன்றி சீனி..இப்போதும் சொல்கின்றேன் .. அந்த நாவல் நல்ல திரைப்படத்துக்கான நாவல் என்பதை சொல்லிக்கொள்கின்றேன்.
============================================
இந்தவார நிழற்படம்..

நிறைய வெளிநாட்டில் இருக்கும் சென்னை நண்பர்களுக்காக இந்த தகவல்..முடிந்த வரை சென்னை நகரத்தின் அசுர மாற்றத்தை எனது புகைபடத்தின் வாயிலாக சொல்லமுயற்சிக்கின்றேன்....

இந்த ரயில் பாலம் வேளச்சேரியில் இருந்து வாணுவம் பேட் வழியாக  சென்ட்தாமஸ் மவுன்ட் ரயில் நிலையத்தை  இணைக்கும் பாலம்...வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம் வரை சர சரவென வளர்ந்து விட்டது.... அதைதான் படத்தில் காண்கின்றீர்கள்..
================
பிலாசபி பாண்டி
காதலிக்கும் எல்லோருக்கும்... நாம் காதலிப்பது யாருக்கும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு இருப்பார்கள்.. ஆனால் ஊருக்கே தெரியும் என்பதே உண்மை நிலவரம்.

==============

நான்வெஜ் 18+

பெண்களுக்கு பாலியல் கல்வி நடத்த வந்த பெண் ஆசிரியர்.... முதலில் பெரிய பிரச்சனை பீரியட் தள்ளி போறதுதான்...கேர்ள்ஸ் பிரியட் தள்ளி போவதின் பின் விளைவுகள்  என்னன்னு உங்களில் யாருக்ககாவது தெரியுமான்னு கேட்க?? ஒரு பெண் கை தூக்கினாள்..

நல்லாவே தெரியும் டீச்சர்...

போன மாசம் எங்க அக்காவுக்கு பீரியட் தள்ளி போச்சி....
அக்காவை அம்மா துடப்பத்தாலே அடிச்சாங்க....
அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சி...
எங்க மாடி வீட்டு அங்கிள் ஒடிபோயிட்டாரு...
...........................

 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

11 comments:

  1. ஜாக்கி அண்ணா...
    மினி சாண்ட்விச் அருமையா இருக்குண்ணா. நிறைய செய்திகளைத் தாங்கி அருமையானதொரு பதிவு அண்ணா.

    ReplyDelete
  2. Delayed happy pongal wishes.Very good info.
    Can you pls watch and write review about kavalan. I already seen it. it's good to me. After a long time vijay didn't speak punch dialogs no over heroism.

    ReplyDelete
  3. //இந்தவார சலனபடம்...//
    Nice one.

    ReplyDelete
  4. சென்னையின் அசுர மாற்றத்தை அப்டேட் செய்வதற்கு நன்றி. மாற்றம் எல்லாம் வளர்ச்சி இல்லை என்றாலும் இதில் காட்டுவது வளர்ச்சியாகவே இருக்கட்டும். பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. சொக்கன் எழுதிய ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய புத்தகம் “ஜெய்ஹோ”விற்கான என் விமர்சனம் இதோ..

    பாருங்களேன் ஜாக்கி....

    ஜெய் ஹோ - புத்தகத்திற்கான என் விமர்சனம்
    http://jokkiri.blogspot.com/2009/11/blog-post.html

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. kavalan thiraippadam naan parthuvitten nandraga ullathu. ungakalen unmaiyana vimarsanthukka kathuirukiren

    ReplyDelete
  8. நல்ல வேலை எங்க ஊர்ல 3 G வேலை செய் யறது இல்லை .
    சாண்ட்விச் அருமை

    ReplyDelete
  9. வழக்கம் போல் அருமை

    ReplyDelete
  10. எஙக ஊர்ல ஒரு கத சொல்லுவாஙக. ஒருத்தன் பொண்டாட்டிய ஒருத்தன் வச்சிருப்பான் அது ஊருக்கே தெரியும் அவனுக்கு மட்டும் தெரியாது.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner