Twice a women-2010 உலகசினிமா/கனடா/உதைக்கும் கணவன் உயிர் பிழைக்க ஓடும் மனைவி..




சில பெண்களை பார்த்து இருக்கின்றேன். சக்கையாக புருசன் போட்டு உதைத்தாலும் அவனை விட்டு போகாமல் அவனோடு குடும்பம் நடத்தி வாழ்க்கையை தொலைப்பவர்கள் நிறைய பேர்...





முதல் குத்து வாயில்.. அடுத்த குத்து வயிற்றில் அதுக்கு அடுத்த குத்து அடிவயிற்றுக்கு கிழே உயிரே போய் விடும் வலி இருந்தாலும் இவ்வளவு உதைகள் வாங்கிவிட்டு அடுத்த மூன்று நாட்களுக்கு பிறகு நடக்கும் செங்கேனி மகள் நிச்சயதார்த்ததுக்கு புருசனும் பெண்ஜாதியும் ஜோடி போட்டு வருவார்கள்..

எப்படி இது சாத்தியம் என்று பல நாட்கள் யோசித்து இருக்கின்றேன்.. காரணம் வாழவெட்டி என்று ஒரு ரெடிமேட் பட்டம் ரெடி செய்து வைத்து இருக்கின்றார்கள். அதுக்கு பயந்தே நம்மவர்கள் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று காலத்தை ஓட்டுகின்றார்கள்..


Twice a women-2010 உலகசினிமா/ கனடா.. படத்தின் கதை என்ன??

 புருசன்  சண்டையில் மனைவியை உதைக்கின்றான் என்று வைத்தக்கொள்ளுங்கள் கண்ணுமண்ணு தெரியாமல் உதைப்பான்.. அப்படி உதைவாங்கி உதைவாங்கி வெறுத்து போய் ஒரு நாள் தன் டீன் ஏஜ் மகனை அழைத்துக்கொண்டு  ஊரை விட்டு ஒடிப்போகின்றாள் காத்தரீன்.... ஒடிப்போனவள்  தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு ஒரு கம்பெனியில் வேலை செய்து வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு  இருக்கின்றாள்.. கணவன் மனைவி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகின்றான்.. முடிவு என்ன வென்னதிரையில் பாருங்கள்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

இந்த படத்தை பற்றி பெரியதாய் விவரித்த சொல்ல முடியாது.. ஒரு சின்ன சிங்கில் லைன் கதை...

பலகிலோமீட்டர் தூரம் பயணித்து புது வாழ்க்கை வாழப்போகும் இடத்தில் அங்கு உதவு செய்தவரே அவரை கட்டுக்குள்  கொண்டுவர அதில் இருந்து காத்தரீன் புறக்கனிப்பது.. நல்ல முடிவு...


ஒரு டிரக் டிரைவருடன் அரும்பும் அந்த காதல் ஒரு சின்ன சுவாரஸ்யம்..

படிக்க அனுப்பும் பையன்... பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு காணும் காட்சியை எல்லாம் வீடியோவில் படம் பிடிக்கும் ஒரு கேரக்டர்....

அம்மா ஆனந்தமாய் ஆற்றில் நீராடுவதையும் அவள் நிர்வாணமாய் குளித்து நீச்சல் அடிப்பதையும் விடியோ எடுக்கும் ரகம்...

அந்த காட்சிகள் கிளைமாக்சில் டச்சிங்காக வருவது சிறப்பு... 

இந்த படம் சென்னை 8வது சென்னை பிலிம் பெஸ்ட்டிவலில் உட்லண்ட்ஸ் திரை அரங்கில் திரையிடப்பட்டது..


படத்தின் டிரைலர்




படக்குழுவினர் விபரம்...

Director: François Deslile
Starring: Evelyne Rompré, Marc Béland, Étienne Laforge, David Boutin, Michelle Rossignol, Marie Brassard, Alexandre Goyette, Catherine de Léan and Brigitte Pogonat

 பைனல்கிக்...

இந்த படம் ரொம்ப ஸ்லோவாக நகரும் திரைக்கதை.. இந்த படம்   டைம்பாஸ்படம்தான்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...

9 comments:

  1. மொத ஆளா வந்துட்டோம்ல! எப்புடி?

    ReplyDelete
  2. விமர்சனம் ரொம்ப சிம்பிளா இருக்குற மாதிரி தோணுது. கொஞ்சம் விரிவா போட்டிருக்கலாம்.

    ReplyDelete
  3. Glaring Similarities with 'Sleeping with the enemy"

    ReplyDelete
  4. கண்டிப்பா வடை எனக்கு கிடைக்காது!

    ReplyDelete
  5. பின்னட்டம் இட்ட் அனைவருக்கும் என் நன்றிகள்.. ஓட்டு போட்ட் அனைவருக்கும் மிக்க நன்றிகள்...

    ReplyDelete
  6. நான் படங்களை விரிவாக எழுதி எழுதி ரொம்ப சின்னதாக போடும் போது உங்களால் எற்றுக்கொள்ள முடியவில்லை.. சில மனஉணர்வுகளை மட்டும் வெளிபடுத்தும் படங்கள் பற்றி நீங்கள் அதிகம் சொல்ல முடியாது அப்படி சொன்னால் காட்சியின் சுவை போய் விடும் தமிழ்வாசி.. இந்த படத்துக்கு இவ்வளவு எழுதியதே பெரிய விஷயம்... மேட்டரே இல்லாத படம் இது...

    ReplyDelete
  7. வந்தேன் ஓட்டளித்து சென்றேன்

    உலகக்கோப்பை முன்னோட்டம்

    http://speedsays.blogspot.com/2011/02/blog-post_09.html

    ReplyDelete
  8. neela vimarsanaththai kuraiththu siriya vimarsanam... aana theliva solli irukkinga...

    ReplyDelete
  9. ஆமா ஜாக்கி நானும் இந்த படம் பார்த்தேன்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner