ஆல்பம்...
மோபைல் போர்டபிலிட்டி சேவை வந்த பிறகு... பொட்டிப்பாம்பாக அடங்கி விட்டார்கள்.. நான் வெகு நாளாய் என் வீட்டின் சுற்றுபுறங்களில் ஏர்டெல் சிக்னல் இல்லை என்று கூவி இருந்தேன்...ஆனால்மொபைல் போட்டபிலிட்டி சேவை வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன் ஏர்டெல் சிக்னல் சரிசெய்யப்பட்டது... இப்போது ஏர்டெல் மொபைல் நெட்ஒர்க்கில் நீங்கள் எங்களுடன் இணைந்து இருப்பதற்கு எங்கள் நன்றி... என்று குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்...அது--------------
-கர்நாடக கவர்னர் நில மோசடியில் ஈடுபட்ட முதல்வர் எடியூரப்பா மீது கேஸ் பைல் பண்ணலாம் என்று சொல்லிய நேரம் 75 பேருந்துக்கும், பொது மக்களுக்கு நேரம் சரியில்லாமல் போனது...பெங்களுருவில் இருந்து சென்னைக்கு வந்து வாரத்துக்கு ஒரு முறை குடும்பத்தை பார்க்கும் ஐடி நண்பர்களின் ஆசையில் மண் விழந்துவிட்டது...காலையில் பேருந்து பிடிக்கலாம் என்று நினைத்தவர்கள் அதிகம் பாதிக்கபட்டார்கள்.... எடியூரப்பா பதவி விலகமாட்டேன் போ என்கின்றார்.... பார்ப்போம்... எடியூரப்பா பதவிக்கு நித்தயகண்டமாகவே இருக்கின்றது...
மிக்சர்
வெள்ளிக்கிழமை, சனி இரவுகளில் கலைஞர் தொலைக்காட்சி பாருங்கள். நல்ல நல்ல ஆங்கில திரைப்படங்கள் ஒளிபரப்புகின்றார்கள்... நேற்று கூட சேஷன்ங் ரிடேம்ஷன் படத்தை ஒளிபரப்பி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்கள்...அதே போல சனி ஞாயிறுகளில் ஜி தமிழ் தொலைக்காட்சி பாருங்கள்.. நிறைய ஆங்கில படங்கள் தமிழில் ஓடுகின்றது.. போனவாரம் கூட அமெரிக்கன் பியூட்டி போட்டார்கள்..அதனால் ஆங்கில பட ரசிகர்கள் இந்த இரண்டு தமிழ் சேனலையும் மறக்காமல் பாருங்கள்...
==============
கோவையில் இருந்து இரண்டு பேர் போன் செய்தார்கள்.. அதில் ஒருவர் உங்ககிட்ட எதாவது ஸ்கிரிப்ட் இருக்கா... ஒரு புரோட்யூசர் கேட்கின்றார் என்றார்கள்... நான் ஷாட்பிலிம் எடுக்க மட்டுமே நிறைய ஸ்கிரிப்ட் என்னிடத்தில் உள்ளது.....சரி ஒரு முழு நீள படத்துக்கு ஸ்கிரிப்ட் ரெடி செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்...... சார் ஒரு முக்கியமான அரசியல்வாதி பேசறார்... நான் அப்புறம் பேசறேன் என்று சொல்லிவிட்டு போன் வைத்தவர்,, அதுக்கு பிறகு தொடர்பு கொள்ளவில்ல்லை.-....
இந்த வார புதிய தலைமுறை பத்திரிக்கையில் பெட்ரோல் விலை உயர்வு வயிறு எரிகின்றது என்ற கட்டுரையில் எனது பெட்ரோல் விலை உயர்வு குமுறலை போட்டோவுடன் எனது இயற்பெயரில் பதிவு செய்து இருக்கின்றார்கள். நன்றி லக்கி...............
வரும் குடியரசு தினவிழா விஜய்டிவி சிறப்பு நிகழ்ச்சியில் யுத்தம் செய் படத்தை பற்றிய ஒரு நிகழ்ச்சியில் நான், பட்டர்பிளை சூர்யா,கேபிள்,கேஆர்பி செந்தில்.பலாபட்டறை சங்கர் போன்றவர்கள் கலந்து கொண்டு பேசி இருக்கின்றோம்... சிறப்பு விருந்தினர்.. சேரன், மிஷ்கின்...... எது எது எல்லாம் ஒளிபரப்பாகும் என்று நிகழ்ச்சி ஒளிபரப்பின் போதுதான் எனக்கே தெரியும்...
யுத்தம் செய் நிகழ்ச்சியில் மிஷ்கினிடம் ஒரு கேள்வி கேட்டார்க்கள்..சமீபத்தில் உங்களை பற்றி எழுத்தாளர் சாரு உங்களை கடுமையாக சாடி வருகின்றாரே என்ற கேள்விக்கு.... சாருவுக்கு உங்கள் பதில் என்ன? என்று கேட்ட போது...
சாரு இப்போதும் எப்போதும் எனது நண்பர், நண்பர், நண்பர் என்று தமிழ்சினிமா கோர்ட்டில் ஆர்டர் ஆட்டர் ஆர்டர் போல மூன்று முறை சொன்னார்...
========================
கடிதம்..
அன்பன் ஜாக்கி சேகருக்கு வணக்கம் .
எனது பெயர் வினோத் குமார் .திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் வசித்து வருகிறேன் .என் ஊருக்கு அருகில் உள்ள சென்னிமலையில் உள்ள விமலா பள்ளியில் முதுநிலை வேதியியல் பட்டதாரி ஆசிரியராக பணி புரிந்து வருகிறேன்.இன்டலி இணையம் மூலமாக உங்கள் பதிவை படிக்கும் வைப்பு கிட்டியது.
சில சமயங்களில் சினிமாவில் காட்ட முடியாத நிகழ்வுகள் வாழ்வில் நிகழும். அந்த வகையில் நானும் உங்களை போலவே சினிமா வெறியன் .சினிமா மீது எனக்கு தீராத காதல் உண்டு.அது போலவே ஒளிபதிவு துறையிலும் .பி .சி.ஸ்ரீராம் செதுக்கிய படங்களை பார்க்கும் பொழுது நானும் ஒளிபதிவாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் என் குடும்ப சூழ்நிலை என் கனவுகளுக்கு தகுந்தவாறு இல்லை . இதுவரை எனக்கு உள்ள ஆர்வத்தை யாரிடமும் கூறியது இல்லை.என்னவோ உங்க பதிவை படித்தவுடன் உங்களிடம் பகிர்ந்தால் ஆறுதலாக இருக்கும் என தோன்றியது.
ஆனால் உங்களை போல் பொது அறிவில் அவ்வளவாக தேறவில்லை.இலக்கிய அறிவிற்க்காகவும் சினிமா பற்றிய தொழில்நுட்ப அறிவிற்க்காகவும் என்கி கொண்டு இருப்பவன்.இப்பவும் அம்பேத்கர் படம் பார்க்க முடிய வில்லை என்று மிக பெரிய வருத்தம் உண்டு.
நீங்கள் மிகபெரிய ஒளிபதிவாளர் ஆக இறைவனை வேண்டுகிறேன்.வாழ்த்துக்கள். இன்னும் நிறைய பேச வேண்டும் என தோன்றுகிறது.பேசுவேன் . நன்றி !
மிக்க நன்றி ஆசிரியரே.. நானும் ஆசிரியராக இருந்து.. ஒரு வருடத்துக்கு முன்தான் சினிமாவுக்கு வந்தேன்.. உங்கள் ஆசிக்கு மிக்க நன்றி.. என் குடும்ப சூழ்நிலையும் என்னை இப்போதும் துரத்திக்கொண்டுதான் இருக்கின்றது.... என்ன செய்ய.. பார்போம்.... என்னிடம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி... நான் எல்லாம் நீங்கள் நினைக்கும் அளவுக்கு பொது அறிவில் பெரிய ஆள் எல்லாம் இல்லை..
ஒரு மன்னிப்பு...
ஒரு சிங்கை நண்பர் என்னை பார்க்க ஆவல் கொண்டார்... தொடர்பு கொண்டு எங்கு வர வேண்டும் என்றார்... நான் போருர் என்று சொல்லிவிட்டு மறந்து விட்டேன்... நண்பரும் போருர் வந்துவிட்டார்... அந்த நேரத்தில் எனக்கு ஒரு வீட்டு வேலை வந்து விட.. எனக்காக வெகுதூரத்தில் இருந்து நண்பரிடம் சாரி கேட்டு விட்டு நான் என் வீட்டு வேலையை செய்தேன்... இருந்தாலும் எனக்கு பெரிய வருத்தம்... மறுநாள் இன்றாவது சந்திக்க முடியுமா? என்றார்... நிச்சயம் என்றேன்.. எனது பெர்சனல் வேலைகள் முடித்தவுடன் அவரை அழைத்தேன்..இருவரும் பாருக்கு போலாம் என்றார்... முதலில் லிபர்ட்டி தியேட்டர் பக்கத்தில் இருக்கும் பாருக்கு போய் பெகார்டி 3 லார்ஜ் அடித்து விட்டு மானஸ்தனாக எழுந்து விட்டோம்... சென்னை கிச்சனில் சாப்பிட்டு விடை பெற்றேன்.. நல்ல மனிதர் தன்னை வெளிபடுத்திக்கொள்ள அவர் விரும்பவில்லை....அதனால் அவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ளவில்லை. வந்தவர் ஜெமோ, சாரு,எஸ்ரா,ஓஷோ, என்று பின்னும் மனிதர்....என்னை நிறைய எழுத கேட்டுக்கொண்டார்... நான் அறிமுகப்டுத்திய பல படங்கள் தன்னை மிகவும் சந்தோஷபடுத்தியது என்று சொன்னார்... மிக்க நன்றி நண்பா...... என்னோடு நேரில் பேசுவது போல உங்கள் பதிவுகள் இருக்கும்....
இந்த வரிகள் படிக்கும் போது நீங்கள் சிங்கையில் இருப்பீர்கள்...நானும் வீட்டு வேலைப்பளு காரணமாக உங்களோடு நிறைய உரையாட முடியவில்லை..... உங்களை வரச்சொல்லிவிட்டு என் வேலையை சூழ்நிலை காரணமாக பார்த்ததுக்கு மீண்டும் மன்னிக்கவும்...நன்றி நண்பா.. மிக்க நன்றி....
========================
பிலாசபி பாண்டி..
பாசிட்டிவ் விதை நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும்.
நான்வெஜ் 18+
காதலிக்கும் போது அன்பே ஆருயிரே... நீ இன்றி நான் இல்லை... நான் இன்றி நீ இல்லை... என்று காதல் போதையில் காதலன் பேசுவான்.
காதலிச்சவங்க கல்யாணம் பண்ணி சரியா 6மாசத்துக்கு பிறகு நடக்கும் சின்ன சண்டையில் முன்னாள் காதலன் இந்நாள் கணவன் இப்படித்தான் பேசுவான்.
ஒம்மால ஒன்னு நீ இருக்கனும்.. இல்லை நான் இருக்கனும்....
என்ன நான் சொல்லறது சரிதானே......
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
பாசிட்டிவ் விதை நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும்
ReplyDeleteஸிம்பிளாக பெரிய விசயம்... அடடா..
suma present poitain ;)
ReplyDeleteவழக்கம்போலவே கலக்கல்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சார்
Hi Jackie,
ReplyDeleteYour writing style very nice, All the best
நான் தான் ஃபர்ஸ்ட் ,
ReplyDeleteஅருமை , vote போட்டாசி
நான்வெஜ் 18+, பிலாசபி பண்டில வர வேண்டியதோ?
ReplyDeleteஒம்மால அப்படின என்ன?
////கோவையில் இருந்து இரண்டு பேர் போன் செய்தார்கள்.. அதில் ஒருவர் உங்ககிட்ட எதாவது ஸ்கிரிப்ட் இருக்கா... ஒரு புரோட்யூசர் கேட்கின்றார் என்றார்கள்... நான் ஷாட்பிலிம் எடுக்க மட்டுமே நிறைய ஸ்கிரிப்ட் என்னிடத்தில் உள்ளது.....சரி ஒரு முழு நீள படத்துக்கு ஸ்கிரிப்ட் ரெடி செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்...... சார் ஒரு முக்கியமான அரசியல்வாதி பேசறார்... நான் அப்புறம் பேசறேன் என்று சொல்லிவிட்டு போன் வைத்தவர்,, அதுக்கு பிறகு தொடர்பு கொள்ளவில்ல்லை.////நண்பரே பார்த்து கண்ணுபட்டுட போகுது
ReplyDeleteஏர்டெல்லில் இருந்து மாறும் ஆசையை தள்ளி போட்டுடீங்க போலிருக்கு
ReplyDeleteHello sir,
ReplyDeleteI wrote a article about Hindi.Please read and comment to improve.
enathupayanangal.blogspot.com
nalla pathivu neenkalum aasiriyaraaka irunthavar enbathil oru santhosam. vaalththukkal
ReplyDelete//வரும் குடியரசு தினவிழா விஜய்டிவி சிறப்பு நிகழ்ச்சியில் யுத்தம் செய் படத்தை பற்றிய ஒரு நிகழ்ச்சியில் நான், பட்டர்பிளை சூர்யா,கேபிள்,கேஆர்பி செந்தில்.பலாபட்டறை சங்கர் போன்றவர்கள் கலந்து கொண்டு பேசி இருக்கின்றோம்... சிறப்பு விருந்தினர்.. சேரன், மிஷ்கின்//
ReplyDelete>>> இன்று கலைஞர் டி.வி.யில் யுத்தம் செய் நேரடி ஆடியோ ரிலீஸ் பார்த்தேன். டிரைலரும். படம் வெற்றிபெறும் என்றே தோன்றுகிறது. விஜய் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம் தெரிந்தால் சொல்லுங்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
முதல் தடவையாக வருகிறேன்! அந்த 18 + நான்வெஜ் ஜோக் அருமை! ( இப்புட்டு மேட்டர் போட்டிருக்கீங்க அதெல்லாம் விட்டுப்புட்டு எதைப் படிச்சிருக்கோம் பாருங்க! ) அப்புறம் சார் - உங்க ப்ளாக் டைட்டில வைச்சு நம்ம ஒரு புரியாணி சமைச்சிருக்கோம்! கொஞ்சம் அங்கிட்டு எட்டிப்பாருங்க பாஸ்! - நீங்க சொன்ன மாதிரி பழைய பதிவுகளுக்கும் சேர்த்து ஓட்டு போட்டாச்சு!
ReplyDeleteயோவ் ஜாக்கி.. அன்னைக்கு சினி சிட்டிக்கு வரச் சொன்னோம் இல்லை.. அத விட்டுட்டு அப்படியே தாண்டி போயிட்டியே.. உனக்காக நாங்க அன்னைக்கு வெயிட் பண்ணினோம்.
ReplyDelete// போனவாரம் கூட அமெரிக்கன் பியூட்டி போட்டார்கள்.. //
ReplyDeleteஅய்யயோ... நீண்ட நாட்களாக பார்க்க விரும்பிய படமாயிற்றே... தமிழிலா ஒளிபரப்பினார்கள்...?
பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
ReplyDeletehttp://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html
நாங்க சண்டையே போடமாட்டோமுன்னு எந்த தம்பதிகளாச்சும் சொன்னால்.............
ReplyDeleteஅது அக்மார்க் பொய்!
ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்.///
ReplyDeleteஎச்சூச்மி ....... படம் ரொம்ப பலசா போச்சு ..... நியு ரிலீஸ் பிளீஸ்
எதேச்சையாய் தான் பார்க்க நேரிட்டது. 'சேஷன்ங் ரிடேம்ஷன்' - கலைஞர் டிவியில். கடைசி வரை பார்த்தேன். இது போன்ற நல்ல ஆங்கில படங்களை கவனிக்க ஆரம்பித்ததே உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்ததில் இருந்து தான்.
ReplyDeletekeep it up jackie.
ReplyDeleteto cable anna: ஜாக்கி போவோம் சொன்னாரு நான் தான் தனியா பேசனம்னு போயிடோம் மன்னிக்கவும்
ReplyDeleteNice
ReplyDeleteவழக்கம்போலவே கலக்கல்.
ReplyDeleteசினி சிட்டில நானும் , கேபிளும் காத்திருந்தோம்.. ஏன் வரல ஜாக்கி?
ReplyDeleteபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..
ReplyDeleteகேபிள் மற்றும் செந்தில் நண்பர் பாண்டியனே அதுக்கு பதில் சொல்லி இருக்கின்றார்.. பாருங்கள்..
நன்றி டீச்சர்...
பிரபா தமிழ்ல போடறதுனாலதான் சொல்லறேன்...
பாருங்க.,..
நன்றி பன் பட்டர் ஜாம்..
மங்குனி படம் மாத்லாம்னு பார்த்தா 3ஜி படத்துகின்றது என்ன செய்ய???
ஒம்மால ஒன்னு நீ இருக்கனும்.. இல்லை நான் இருக்கனும்....
ReplyDelete// Vaenaam saami... pen paavam pollaathathu..
நான் தினமும் வலம் வரும் வலை தளங்களில் உங்களதும் ஒன்று. மிக நன்றாக எழுதுகிறீர்கள்.சினிமாவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி.
பாலா
putheyatalimurai eil nanum youngal karuthi parthean resethan nandru nadpudan nakkeran
ReplyDelete