மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+/ஞாயிறு(09/01/2011)

ஆல்பம்..

புத்தககண்காட்சிக்கு தினமும் போகின்றேன்... நிறைய பேரை சந்திக்கின்றேன்...மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது...சென்னையில் இருப்பது இப்படிஒரு  சவுகர்யம்....
=================
ஞாயிறு என்பதால் இன்று கூட்டம் அதிகம்... பதிவர்கள் வருகையும் அதிகம்....மயில் ராவணன்,பரகத்அலி. பெஸ்கி, புருனோ, லக்கி அதிஷா.டம்மிமேவி, கேஆர்பி செந்தில்,மதார்,கேபிள் ,சுரேக்கா,ராஜகோபால் ,சங்கர், விந்தைமனிதன்,ஆயிரத்தில் ஒருவன் மணி,ராஜபிரியன், போன்றவர்களை நான் பார்த்தேன்..... ரிஷி மற்றும் ரமேஷ் போன்ற நண்பர்களைசந்தித்தேன்.
  ==========================
மிக்சர்..
 சாப்பிடும் போது ஹோட்டலில் வாழை  இலைகழுவுகின்றேன்... என்ற பெயரில் அந்த இடத்தையே குளமாக்குபவரை கண்டால் வயிறு எரிகின்றது...ஒழுங்கா கழுவாத எவர்சில்வர் தட்டுல கூட சாப்பிட்டுவிடுவானுங்க..இலையில தண்ணி தெளிச்சி லைட்டா தொடச்சா போதாதோ???
=========


மூவிஸ் நவ் என்ற ஆங்கில சேனல் இப்போது தெரிகின்றது... நல்ல கிளாரிட்டி.. எச்டியில் ஒளிபரப்புகின்றார்கள்...ஆடியோ அவுட்டை எடுத்து ஹோம் தியேட்டரில் கொடுத்தால் சவுன்ட் பிச்சிகிட்டு போகுது...
==========

நன்றிகள்..
எனது மொபைலில் தமிழ் எழுத்து தெரிய அந்த அடத்திலேயே டிரை செய்த கிழக்கு பத்ரி அவர்களுக்கும், அடுத்து வந்தபெஸ்க்கி தமிழ் எழுத்தை எனது மொபைலில் படிக்க செய்த உதவிக்கும் என்  நன்றி...


 ===============================
 படித்ததில் பிடித்தது...

இந்தவார ஆனந்தவிகடனில் கமல் கேள்விபதிலில்..நீங்கள் ஏன் இன்னும் ரகசிய கவிஞராக இருக்கின்றீர்கள்... உங்கள் கவிதை தொகுப்பு எப்போது வரும்...?? என்ற கேள்விக்கு கமலின் நச் பதில்....ரசிக்கவைத்தது.. அந்த பதில்....

இந்துக்களின் அனுமதியுடன் விரைவில்....
=================

இந்தவார சலனபடம்...

ஈசன் படத்தில் வரும் ஒரு பாடல்...ஒரு விபச்சார பெண்மணி வாழ்வின் வலிகளை சுமந்து வரும் அந்த நாட்டுப்புறபாடல் இப்போது எல்லா சேனல்களில் பிரசித்தம்..

ஜில்லாவிட்டு ஜில்லா விட்டு வந்த கதை  என்று வரும் இந்த பாடல்.. அசத்தல்.... சுகத்தை விக்கும் பெண்ணுக்கும் மனசு இருக்கு பாருய்யா....இந்த பாடல் வரிகள்  நெடு இரவில்  ஒரு பெண்ணுக்கு உருவம் கொடுத்து அந்த பெண்ணுக்காக பரிதாபப்பட்டேன்...

நீங்கள் ரசிக்க....







 ========================

சினிமா..

 சன்டிவி அளவுக்கு ஒரு படத்தை வேறுயாரும் டிரெய்லர் கட் செய்து பார்க்கும் அவலை துண்ட முடியாது... ஆடுகளம் டிரைலரில் தனுஷ் ரெண்டு பேரும் ஒரு கிஸ் அடிச்சிக்கலாமா? என்று கேட்பது சுவாரஸ்யம்...
========================
இந்தவார நிழற்படம்..

நம்ம தென்னாங்கூர்கிட்ட பெருமாளை சேவிச்சிகிட்டு இருக்கும் போது எனது ஒலம்பஸ் ஆட்டோ போக்கஸ் கேமராவில் சூரியனை சுற்றி இருக்கும் இந்த வட்டத்தை எடுத்தேன்....

பட் இது போல கேமராவை நேரான சூரிய ஒளி படுவது போல் படம் எடுக்க கூடாது.. உங்கள் கேமரா  சென்சார் போர்டு எகிறி விடும்..
==================================
பார்த்ததில் பிடித்தது...

துரைப்பாக்கத்தில் இருந்து பள்ளிக்கரனை  செல்லும் வழியில் நான் எனது பைக்கில் பறந்து கொண்டு இருந்தேன்.. என்னை விட ஒரு ஆக்டிவா சற்றே பருமனாக பறந்துக்கொண்டு இருந்தது...உட்கார்ந்தே வேலைசெய்வதால் அப்படி நிகழ்ந்து இருக்கலாம்... பட் அடித்த  காற்றில்  முன் பக்கம்  வைத்து இருந்த பொக்கே சிதறியது... அந்த காட்சி பார்க்கும் போது கருப்பு  ரோட்டில் சிவப்பும் மஞ்சளுமாக அந்த பூக்கள் சிதறியது பார்க்க அழகு....

நல்ல வேகம் என்பதால் 20 அடிக்கு மேல் சிதறிக்கிடந்தது...லைட் பருமன் ஆக்ட்டிவா சில பூக்களை மட்டும் மண்ணோடு சேகரித்தது.....ஒரு வேளை வாங்கி வந்தேன் விழுந்து விட்டது என்று கணக்கு சொல்ல சேகரித்து இருக்கலாம்...ஆனால் அந்த பூக்களை எடுக்க குனிந்த போது இரண்டு மூன்று இரு சக்கர வாகனங்கள் சட்டென பிரேக்கிட்டது... உதவி செய்ய ஒன்று நின்று போனது....அது எனது வாகனம் அல்ல....
 =====================
இந்தவார கடிதம்..


Dear Jackie, 
நான் பொதுவாக பின்னூட்டம் எழுதும் வழக்கம் இல்லை. ஆனால் உங்கள் பதிவுகளை படிக்கும்போதெல்லாம் ஏதோ எழுதவேண்டுமென கை அரிக்கிறது. என்ன பண்றது அழகா, சொல்ல வந்ததை சொல்ல இலக்கிய ஞானம் இல்லை.இங்கே நிறைய பேர் ஓட்டு வாங்குவதையே குறிவைத்து மொக்கையாக எழுதிகொண்டிருக்கிறார்கள்.(உ-ம்)கமல் எந்த படத்தில் இருந்து எதை காப்பி அடிச்சார்,எந்திரன்-ஒரு உலக சினிமா என்ற ரேஞ்சில் இருக்கும். உங்கள் பதிவுகளை படிக்கும்போது அட இவன் நம்ம ஆளுடா என ஒரு உணர்வு வருகிறது.
எனக்கு அவ்வளவா எழுத வராது. ஆனாலும் சொல்றேன் "Your posts are really Superb".

முக்கியமா சொல்லன்னும்னா என்னை மிகவும் கவர்ந்தது "காலப்போக்கில் காணாமல் போனவைகள்". நானும் உங்களை போல கிராமமும் நகரமும் கலந்த வாழ்க்கையை பார்த்தவன். அதன் சுவாரஸ்யங்கள் அனுபவித்திருந்தாலும், உங்கள் எழுத்தில் அதை படிக்கும்போது இன்னும் அழகாக, பிரமிப்பாக, ரசனையாக இருக்கும்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எல்லா அனுபவங்களும் எனக்கு உண்டு. டூரிங் டாக்கீஸ்,கிராமபோன், திண்ணை..இப்படி.
"நான் காசம்பூ சகலைங்க... நாகபட்டினத்துக்கு போயிட்டு இங்க வந்தேன் இரண்டு மணிக்குதான் கடலூர் பஸ்ஸ்டாண்டில் பஸ்காரன் இறக்கிவிட்டான்.. என்று சொல்லும் போதே வந்தவனை சுற்றிய உறவுகள் எப்படியும் தெரிந்தவர்கள் என்பதால் உங்க ஒரகத்தி பொண்ணு குறிஞ்சிப்பாடியில கட்டிக்கொடுத்தாங்களே...போனவாட்டி வந்தப்ப கூட மாசமா இருந்தா குழந்தை பொறந்துடுச்சா? என்ன குழந்தை? என்பதாய் வாசலுக்கு தண்ணி தெளித்து கோலம் போடுவதை விட்டு விட்டு விசாரிப்பு கதை சுவாரஸ்யம் பெறும்...."
எவ்வளவு எதார்த்தமான நடை...
இதை இலக்கியம் என்று சொல்லாமல் என்னவாம்? ஒரு நல்ல இயக்குனர் ஆவதற்கான எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு.

மேலும் அவ்வப்போது உங்கள் எழுத்துக்களில் இருக்கும் சமூக அக்கறை எனக்கு பிடிக்கும். அந்த கோபம் எனக்கும் உண்டு. உங்கள் எழுத்தில் அந்த தணலை பார்க்கும்போது என்ன மாதிரியே இவனும் யோசிக்கிராண்டா என தோணும். உ-ம் போங்கடா நீங்களும் உங்க சாலை பாதுக்கப்பும், நடு ரோட்டில் நிறுத்தும் மாநகர பேருந்த.. ECR சாலை.. இப்படி. ஏதேதோ எழுத நினைத்து எங்கயோ போறேன். இதையெல்லாம் நீங்கள் போஸ்ட் செய்வீர்கள் என்று எழுதவில்லை. ஏதோ சொல்லனும்னு தோணிச்சு.. அதான். நானும் chennaiல் தான் இருக்கேன். நேரம் கிடைக்கும்போது மீட் பண்ணலாம். நிறைய பேச வேண்டியிருக்கு. ரொம்ப எழுதிட்டேனோ...!
(பி-கு): என் தமிழ் சரளமான நடையில் இல்லாததற்கு மன்னிக்கவும்.

என்றும் நட்புடன்
ஜெகன்.

===================


இப்படி எல்லாம் பாடினா கண்ணன்   நேரா நிஜமாகவே வீட்டுக்கு வந்துவிடுவான்.... பெண்கள் ....... இந்த பாடலையும் பாடிய குழந்தையையும் நிச்சயம் ரசிப்பார்கள்....
==============================

பிலாசபி பாண்டி


அட்ஜெஸ்மென்ட் ஆர்க்யூமென்ட்டைவிட சிறப்பானது...
======================
நான்வெஜ் 18+

ஜோக்...1


சில பெரிய கம்பெனிங்க.. ஒரு சென்ஞ்சுக்கு காண்டம் கம்பெனி ஆரம்பிச்சா எப்படி இருக்கும்--??? எப்படி விளம்பரபடுத்துவாங்க..??


நோக்கியா................. காண்டம்ஸ் கனெக்ட் பீப்பிள்...........

முவ்............................... ஆ முதல் ஆஹாவரை....
ஹார்லிக்ஸ்................ டாலர் ,ஸ்டாங்கர், ஷார்பர்
பெப்சோடென்ட்.........நைட் புல்லா டிஸ்யூம் டிஷ்யும்..
ரிலையன்ஸ்...............தடையற்ற சேவைக்கு...
டிராக்டர் எமல்யூஷன்.......வெளிப்புறபாதுகாப்புக்கு..
எம்ஆர்எப்.. ............. எக்ஸ்ட்ரா ரப்பர்... எக்ஸ்ட்ரா மைலேஜ்

=====================

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...

தமிழ்மணம் மற்றும் இண்ட்லியில் பிடித்து இருந்தால் ஒரு நிமிடம் செலவு செய்து ஓட்டு போடுங்கள்...

17 comments:

  1. ha ha, nan than first ;) super... antha activa story climax'ah na kandipa nambala....... vera yarum namba matangunu nenaikaren...

    ReplyDelete
  2. அதென்ன பெண்களுக்கு மட்டும் தான் பிடிக்குமோ?எனக்கும் பிடித்திருந்தது,கூடவே மனைவிக்கும்!கண்ணன் நிஜமாகவே வந்து விடுவான் தான்!எனக்கும் அந்தப் பாடிய குழந்தை பிடித்திருந்தது!நன்றி!உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. First to comment.....

    I am really looking forward to your reviews of new English movies such as The King's Speech and Wall street 2, money never sleeps....

    Anyway keep it on your writing...

    ReplyDelete
  4. குழந்தையோட வாய்ஸ் இட்ஸ் ட்ரூலி அமெஸிங் ஜாக்கி.. ரொம்ப நன்றி பகிர்ந்தமைக்கு :)

    ReplyDelete
  5. Nalla irukku Ji..

    18+ Rasithen.

    Kannan vanthan paadal-Romba naalaikku piragu mazhalai maaratha kural ketten. (Airtel junior singer partha piragu unmaiyaana mazhalai kuralil paadalai ketpadhu kadinam endriruntha velaiyil!!! )

    ReplyDelete
  6. வழக்கம்போலவே தகவல்கள் அருமை அண்ணே

    தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. கண்ணன் வந்தான் - மழலையின் குரல் அருமை.

    ReplyDelete
  8. //சாப்பிடும் போது ஹோட்டலில் வாழை இலைகழுவுகின்றேன்... என்ற பெயரில் அந்த இடத்தையே குளமாக்குபவரை கண்டால் வயிறு எரிகின்றது...ஒழுங்கா கழுவாத எவர்சில்வர் தட்டுல கூட சாப்பிட்டுவிடுவானுங்க..இலையில தண்ணி தெளிச்சி லைட்டா தொடச்சா போதாதோ???//
    அண்ணே இதுக்கு காரணம் பெரும்பாலான வாழை இலைகள் வந்து ரொம்ப அழுக்கா இருக்கும் .அதுக்கு கொஞ்சம் நிறையவே தண்ணீர் விட்டு கழுவினால்தான் போகும் .

    ReplyDelete
  9. அண்ணே எங்க கிராமத்து பாஷையில் சொல்லப் போனா ஒரு கூட்டஞ்சோறு சாப்பிட்ட மாதிரி இருக்கு..

    ReplyDelete
  10. பின்னுட்ட இட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

    பெண்களுக்கு அதிகம் பிடிக்கும்னு சொன்னேன்..

    நல்ல இலையையே அப்படி செய்வதை பார்த்துதான் அப்படி எழுதி இருக்கின்றேன்..

    அப்துல் சாண்ட்வெஜ் போடலைன்னா உதைப்பிங்க போல இருக்கு..

    ReplyDelete
  11. அண்ணே .. ஒரு சந்தேகம்.. இந்த வாசகர் கடுதாசி எல்லாம் உண்மையா?

    ReplyDelete
  12. kannan vandhaan paadal... kannan vandhaano illaiyo enakku kanneer vandhadhu....idhu thaan theivathin kural......

    ReplyDelete
  13. //எனது மொபைலில் தமிழ் எழுத்து தெரிய அந்த அடத்திலேயே டிரை செய்த கிழக்கு பத்ரி அவர்களுக்கும், அடுத்து வந்தபெஸ்க்கி தமிழ் எழுத்தை எனது மொபைலில் படிக்க செய்த உதவிக்கும் என் நன்றி...//அது எப்படி என்று தயவு செய்து கூறுங்களேன் ... எனது மொபைல் நோக்கியா 5230

    ReplyDelete
  14. ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்...தங்கச்சி பேரு???

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner