பத்து வருடமாக எனது எர்டெல் நம்பரைமாற்றாமல் வைத்து இருக்கின்றேன்.. இன்கம்மிங்கு 50 பைசா எடுத்துக்கொள்வார்கள். அப்போதில் இருந்து வைத்து இருக்கின்றேன்...
ஆரம்பத்தில் ஏர்டெல் தனது நெட்வொர்க்கின் சேவையாலும், விளம்பரயுக்தியாலும் சென்னையை பொறுத்தவரை ஏர்டெல் நம்மபர் ஒன் இடத்தை பிடித்தது...
முதலில் சென்னையில் ஏர்செல்தான் கலக்கியது... ஏர்செல் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் தனது நெட்ஒர்க்கை வைத்து இருந்தது....ஏர்டெல் வந்த போது ஏர்செல்லில் இருந்து ஒடிவந்த கஸ்டமர்கள் பல லட்சம் பேர் காரணம்.... அப்போது சென்னையில் ஏர்செல் கம்பெனியின் சேவை குறைபாடுதான்..
ஏர்டெல் வந்த நேரம் அப்போதேல்லாம் ஏர்டெல் கஸ்டமர் கேரில் நாம் எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுவார்கள்.... இப்போது எல்லாம் அப்படி இல்லை.....
ஏர்டெல் வளரும் போது நான் கஸ்டமர் கேரில் பேசும் போது, உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி என்பது உங்கள் விளம்பரம் அல்ல... உங்கள் சேவை எங்களுக்கு பிடித்து அதனை வாய் வழியாக நண்பர்களிடம் சொல்லும் போதுதான் உங்கள் நிறுவணம் அதிக வாடிக்கையாளர்களை பெறுகின்றது...சச்சின்,மாதவன்... இவுங்களுக்கு விளம்பரத்துக்கு கொட்டிக்கொடுக்கும் காசில் இரண்டு டவரை எங்கள் ஊர் பக்கம் போடுங்களேன் என்று நானே கஸ்டமர் கேரில் சொல்லி இருக்கின்றேன்...
முதலில் ஏர்டெல் டவர் பிரச்சனை தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தது... வம்சம் படத்தில் சிக்னல் இல்லாமல் மரத்தின் மீது ஏறி பேசுவார்களை அது போலதான் இருந்தது.. போன் வந்தால் அத்தை வீட்டு மொட்டை மாடிக்கு வந்துதான் பேசவேண்டி இருந்தது....
அதன் பிறகு அந்த பிரச்சனை குறைந்தது..நானே பலரிடம் ஏர்டெல் நெட்ஒர்க் சூப்பர் என்று சொல்லி இருக்கின்றேன்.,.. அப்போது சூப்பராகவும் இருந்தது...
அதன் பிறகு எனது மனைவி எனது நம்பரையும், அவள் நம்பரையும் பிரிபெய்டில் இருந்து போஸ்ட் பெய்டுக்கு மாற்றினாள்.. அப்போது சில பிளான் கவர்ச்சிகரமாக இருந்தது...
ஆனால் மாதம் 1500 என இரண்டு பேரும்மாதம் 3000ம் கட்டினோம்... சிலமாதம் 2700, ஆளுக்கு 1200ல் இருந்து 1500 வரை பில் வர ஆரம்பித்தது... பணம் அப்போது இருவரிடமும் துள்ளி விளையாடிய காலம் அதனால் அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளவில்லை... இரண்டு மாதத்துக்கு பிறகு எனக்கு சந்தேகம் வந்தது...
600மினிட் பிரி டைம் கொடுத்தும் நடக்கு எப்படி இவ்வளவு அமவுன்ட் வருது என்று செக் செய்த போது பில்லில் தப்பு நடப்பது தெரிந்து தெரித்து போய் கேட்டாலும் பதில் கிடைக்காது என்பதால்... போஸ்ட் பெய்டில் இருந்து பிரிப்பெய்டுக்கு மாறினோம்...இப்போது 1000க்கு ரீசார்ஜ் செய்தால் அது கடக்குது 6 மாசத்துக்கு மேல்..வருகின்றது...
இப்போதும் சொல்லுவேன்... போஸ்ட் பெய்டில் வரும் தொகையை செக் செய்யாமல் கட்டும் கஸ்டமர்கள்தான் இன்றும்நிறைய பேர் உள்ளார்கள்.... ஆனால் போஸ்ட் பெய்டில் இருந்து பிரிபெய்டு வந்து பாருங்கள் நான் சொல்வதன் உண்மை உங்களுக்கே தெரியும்.
சரி.. என்று அப்படியே போய் கொண்டு இருந்தது.. போரூரில் இருந்து கொளப்பாக்கம் வீடு மாற்றிக்கொண்டு வந்தேன்... வந்த இடத்தில் ஏர்டெல் சிக்னல் வீட்டினுள் கிடைக்கவில்லை.... எந்த போன் வந்தாலும் வீட்டுக்கு வெளியே வந்துதான் பேச வேண்டும்....என் புது வீட்டுக்கு அருகில் ரிலையன்ஸ் மற்றும் பிஎஸ்என்எல்தான் செம சிக்னலில் கலக்கி கொண்டு இருந்தது...
நான் சிக்னல் பிரச்சனை பற்றி புலம்பிய போது...ஜாக்கி நீங்க நம்பரை மாத்திடுங்க என்று சொன்ன போது.. ஏர்டெல்னு ஒரு கம்பெனி இழுத்து மூடும் போது இந்த நம்பரும் மாறும் என்று நண்பர்களிடத்தில் பெருமையாக சொல்லுவேன்.... சரி மாற்றிவிடலாம் என்று நினைத்த போது... மாற்ற நிறைய யோசிக்க வேண்டியதாக இருந்தது...நம்பர் மேல் சென்ட்டி எல்லாம் இல்லை....நிறைய பேருக்கு இந்த நம்பர் பழக்கம்...
கஸ்டமர் கேருக்கு போன் செய்தேன்..
சார் என்வீட்டுக்கிட்ட சிக்னல் சரியா வரலை என்றேன்...
இரண்டு நாள் டைம் கேட்டார்கள்...
திரும்பவும் போன் செய்த போது.....
சார் உங்க வீட்டுக்கிட்ட பக்காவா சிக்னல் இருக்கு... எங்க என்ஜினியர் செக் பண்ணிட்டு சொல்லிட்டாங்க....
சார் நான் கஸ்டமர் இன்னும் என் வீட்டுக்கு பக்கததில் இருப்பவர்களிடம் எல்லாம் கூட கேளுங்க.. உங்க ஏர்டெல் சிக்னல் பத்தி கதை கதையா சொல்லுவாங்க என்ற போது....
சார் சிக்னல் பக்காவா இருக்கு... வேற என்றான்...
யோவ் சிக்னல் இல்லாம ஒவ்வோரு போனுக்கு வெளியே வந்து பேசறேன்... என்று நான் சொல்லும் போது...
கஸ்டம்ர் கேரில் இருக்கும் அந்த கபோதி.. எந்திரன் சிட்டிரஜினி போல
உங்க வீட்டுக்கிட்ட சிக்னல் சரியா இருக்கு வேற....என்றான்..
யோவ் பத்து வருஷத்துக்கு மேல இந்த நம்பர் வச்சி இருக்கேன்யா... நிம்மதியா பாத்ரூம்ல உட்கார்ந்து ஆய் கூட போக முடியலை.. எப்ப போன் வருமோ? எப்ப எழுந்து வெளிய ஓடிப்போய் பேசனுமோன்னு பயத்துல இருக்கேன் என்று கூட சொல்லி பார்த்து விட்டேன்...
உங்க வீட்டுக்கிட்ட சிக்னல் சரியா இருக்கு வேற? என்றான் திரும்பவும்..
நான் கோபமாக வடபழனி வசந்தபவனில் இரண்டு இட்லி கெட்டிசட்னி, ஒரு சாம்பார் வடை வேணும் தர முடியமா? என்று சொல்லி போனை கட் செய்தேன்....
இது மட்டும் அல்ல... போஸ்ட் பெய்டில் பல பிரச்சனைக்கு நானும் என் மனைவியும் சந்தோம்மில் இருக்கும் எர்டெல் தலைமையக்த்துக்கும் போய் பிராது கொடுத்தாகிவிட்டது... நோடல் ஆபிசரிடம் கூட ஒரு பிளானில் நிறைய பணம் எடுப்பதாக பேசியாகிவிட்டது... இருந்தும் யாரும் சரிசெய்து கொடுக்கவில்லை... பதிலும் சரியாக சொல்ல வில்லை. இனி அலைந்தால் நாம்தான் பெட்ரோல் போட்டு நேரத்தை இழக்க வேண்டிவரும் என்பதால் அத்துடன் விட்டுவிட்டோம்........
என் வேதனை புரிந்து டிராய் அதே நம்பரை வைத்துக்கொண்டு விருப்பம் உள்ள நெட்ஒர்க்கிற்க்கு மாறலாம் என்று அறிவிப்பு வெளியிட்டது.... எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது...இப்படித்தான் கஸ்டமர் கேர் என்னை அலைகழித்தது..
3 மாதங்களுக்கு முன் நாட்டில் இந்த சேவை ஹரியானாவில் தொடங்கிவிட்டதாக படித்தேன்...
ஒரு மாதத்துக்கு முன் வீட்டில் என் மனைவி போன் பேசிக்கொண்டு இருந்தாள்... நான் போனை எடுத்துக்கொண்டு வெளியே போய் பேசினேன்... என்டா மக்கு.. உனக்கும் உன் பொண்டாட்டி நம்பரும் ஏர்டெல் நம்பர்... இரண்டு பேரும் வெளியே போய் பேசுவிங்க.. இப்ப அவ மட்டும் வீட்டுக்குள்ளேயே பேசறா .. நீ வெளிய வந்துபேசற என்று யோசித்து வீட்டினுள் வந்து பேசினேன்...
என் மனைவியிடம் இந்த மாற்றம் குறித்து நான் கேட்ட போது கடந்த ஒரு வாரமாக வீட்டினுள்தான் பேசுகின்றேன்.என்றாள்...
ஏன்டி என்கிட்ட சொல்லலைஎன்று கேட்டேன்.. உனக்கு ஏதோ பர்சனல் காலாக இருக்கும்....புது காதலியாக கூட இருக்கும் எதுக்கு டிஸ்டர்ப் செய்வானே என்று நக்கல் விட்டாள்.....
எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது....மதியம் தூங்கும் போது ஹலோ ஜாக்கியான்னு பாசமா யாரோ பேசுவாங்க.. கஷ்டப்பட்டு எழுந்து வெளியே போய் பேசுவேன்.. அது ரொம்ப கொடுமைங்க... அதுக்காக டெய்லி தூங்கமாட்டேன். . என்னைக்காவது வேலை பளுவுல இது போல நடப்பது உண்டு...
எப்படி திடிர்னு சிக்னல் வந்துச்சு? என்று யோசித்து போது ஐடியா செல்போனின் இந்த விளம்பரம் பார்த்தேன்..
என்னடா எலி அம்மனமா ஓடுதுன்னு பார்த்தா இதுதான் உண்மை நிலமை....
இந்த சேவையில் அதிகமாக பயந்து போய் இருக்கும் நிறுவனம் ஏர்டெல்தான் காரணம்.. அவர்கள்தான் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு இருக்கின்றார்கள்..
ஐடியா செல்போன் நிறுவனம் மற்ற செல்போன் நிறுவனங்கள் இதுநாள்வரை கஸ்டமரிடம் செய்த தவறுகளை அப்படியே தனது ஐடியா மூலம் கஸ்டமரை தன் பக்கம் இழுக்கின்றது இது நல்ல ஐடியா அல்லவா???
எனக்கு என்னவெல்லாம் பிரச்சனை இருந்திச்சோ... அதையெல்லாம் ஐடியா செல்லுலர் நிறுவனம் விளம்பரமாக எடுத்து தள்ளுகின்றது..
பாருங்கள் இந்த விளம்பரத்தில் நெட் ஒர்க் பிரச்சனை பற்றி.....
சரி இப்படி ஒரு கதை ஒடிகிட்டு இருக்கும் போதே வோடோபோன் எங்களை வீட்டு செல்லாமல் எங்களோடு இணைந்து இருங்கள் என்று சென்டிமெண்ட்டாக விளம்பரம் போடுகின்றது...
எனக்கு தெரிந்து இந்த சேவை வந்தால் அதிகம் பாதிக்கபடுவது ஏர்டெல்தான்..அதனால் அவர்கள் வோடோபோனுடன் கூட்டு வைக்கபோவதாக ஒரு விளம்பரம் சொல்கின்றது.....
இனி எந்தக்கவலையும் இல்லை...ஐடியா தனது சேவையை இப்போதே துவங்கிவிட்டது....
ஹலோ சார்.. நாங்க ஐடியா மொபைலில் இருந்து பேசுகின்றோம்
சொல்லுங்க...
வரும் 20ம் தேதியில் இருந்து மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி அக்டிவேட் ஆக போகுது.... எங்ககிட்ட நல்ல பிளான் இருக்கு... சொல்லவா???
20ஆம் தேதிக்கு மேல சொல்லுங்க என்று சொல்லி போனை கட் செய்தேன்..
சோ ரொம்ப பாஸ்ட்ட ஐடியா மொபைல் தனது வாடிக்கையாளரை கவர்ந்து இழுக்கின்றது...
அப்ப 20ம்தேதிக்கு மேல வேற நெட்ஒர்க் மாறிடுவிங்களான்னு கேட்கிறிங்களா? தெரியலை சார்.. எனக்கு ஏர்டெல் ரொம்ப பிடிக்கும்.. அதனால... பார்ப்போம்... சார் உங்களை போல ஆளுங்களாலதான் அவுங்க ஆடுறாங்க....
பார்ப்போம் இனியும் எனக்கு வழங்கபடும் சேவை குறைவாக இருந்தால் நான் நெட்ஒர்க் மாற தடையில்லை அல்லவா??,
மொபைல் போட்டபிலிட்டிக்கு கட்டண சேவை வெறும் 19ரூபாய்தான்...500ரூபாயாக இருந்தாலும் மாற்ற ஆள் உண்டுங்க...
மெட்ரோபாலிட்டன் நகரங்களான டில்லி. மும்பை, கல்கத்தா, சென்னை என்று முதலில் இந்த சேவை வருகின்றது.. படிப்படியாக மார்ச் இறுதிகுள் இந்தியா முழுவதும் மாற்ற டிராய் உத்தரவிட்டு இருக்கின்றது....
விரிவாய் தெரிந்து கொள்ள..
நன்றி டிராய்.....
அதே போல டிடிஎச் சேவைக்கும் இதே போல மாத்திட்டிங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்....
============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
இந்த பதிவு பிடித்து இருந்தால் தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் ஓட்டுப்போட மறவாதீர்கள்.
1st u
ReplyDeleteairtel ரொம்ப கொள்ளை அடிக்கிறாங்க அண்ணே !!! நானும் நம்பர் மாத்திரலாம்னு தான் இருக்கேன்!!!
ReplyDelete--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
இதுக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்
ReplyDelete//அதே போல டிடிஎச் சேவைக்கும் இதே போல மாத்திட்டிங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்....
yes
என்னுடையது ஏர்டெல்தான்.. எப்போதாவது பிரச்சனை வருவதுண்டு என்றாலும் இப்போதைக்கு ஏர்டெல்லை விட்டு மாறும் எண்ணமில்லை.
ReplyDeleteவணத்தை வனமாக்குங்களேன்...
ReplyDeleteஎன்னனா இப்படி சொல்லிபுட்டீங்க.. நான் இப்ப கருமம் புடிச்ச டோகோமோ யூஸ் பண்றன்.. சிக்னல புடிக்க வீட்ட விட்டு ஓடனும்.. சிக்னல் இல்லாததால கால் கூட ரீச் ஆகல.. அதனால இந்த ப்ளான் வந்ததும் ஏர்டெல்லுக்கு மாறிடலாம்னு இருந்தன்.. ஆனா.??? கொஞ்சம் யோசிக்கனும் போலிருக்கே.!!!
ReplyDeleteநல்ல விளக்கம் .
ReplyDeleteஅருமையான தகவலும் கூட
..........
Monopoly ruling is now over...customers have freedom to choose network keeping their number...I am an NRI and I will change my network from Airtel to something which gives good coverage @ my home....I too faced same issues while I visit India...This is a welcome move by telecom.
ReplyDeleteHappy Pongal to viewers
மத்தத்க்கு வோடபோன் எவ்வளவோ பரவாயில்லை
ReplyDeletesuperb news
ReplyDeleteஏர்டெல் மோசமா இருக்கு - நான் 10 வருசமா ( இருக்காதா என்ன ) வச்சிருக்கேன் - ஒரு பைசா பெர் செகண்டுன்னு பிளான் பிரி பெய்டு கொட்ய்ஹ்தானுங்க - சடார்னு இப்ப எசெமெஸ்ஸுக்கு 01:50 - அவுட் கோயிங் காலுக்கு செகண்டுக்கு ஒரு பைசா - ஆனா மினிமம் 0.75 - டெஉலி 02:50 எடுத்துக்கறானுங்க - போய்க் கேட்டா அதெல்லாம் இல்லன்றானுங்அக் - பிளான் பத்திச் சொல்லுடான்னா அவனுகளுக்க்கே தெரில - ரெண்டு நாளைக்கு ஸ்டேட்மெண்டு எடுத்துப் பாருங்கடா ன்னா ப்பாக்க மாட்டேனுன்றாணுங்க - 02:50 எடுக்கவே இல்லன்னு சத்தியம் பண்றானுங்க - ட்ரன்ஸ்பெரன்ஸியே இல்ல - ஐடியாவுக்கு மாற வேண்டியது தான்-
ReplyDeleteஜாக்கி..ஐடியா சிக்னலும் சிக்கல்தான்..
ReplyDeleteAirtel DTH Service is also worst to the core. I got a connection and the height of absurdity is me and one more user are having same Customer id no. I paid subscription for some channels and the other user is getting it in his TV.
ReplyDeleteStill they do not have any plans of telecasting HD channels except for NG.
Airtel is nowadays garetel.......
\\ஒரு மாதத்துக்கு முன் வீட்டில் என் மனைவி போன் பேசிக்கொண்டு இருந்தாள்... நான் போனை எடுத்துக்கொண்டு வெளியே போய் பேசினேன்... என்டா மக்கு.. உனக்கும் உன் பொண்டாட்டி நம்பரும் ஏர்டெல் நம்பர்... இரண்டு பேரும் வெளியே போய் பேசுவிங்க.. இப்ப அவ மட்டும் வீட்டுக்குள்ளேயே பேசறா .. நீ வெளிய வந்துபேசற என்று யோசித்து வீட்டினுள் வந்து பேசினேன்...\\
ReplyDeleteIthula thappu ethum irukara mathri enaku theriyaleye....
Rate cutter nu onnu irukum parruga , So
ReplyDeleteஐடியாவுக்கு மாற வேண்டியது தான்.
அண்ணா அருமையான தகவல்... நீங்கபட்ட துன்பம்தான் வருத்தமா இருக்கு.
ReplyDeleteஅண்ணா, புத்தக கண்காட்சியில லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் எந்த ஸ்டால்ல கிடைக்கும்னு தெரியுமா?? தெரிந்தால் சொல்லவும் ..
ReplyDeleteஅண்ணே என்ன காரணம் என்று தெரியவில்லை . எனக்கு call rates எல்லாம் அடுத்த 90 நாட்களுக்கு குறைத்து இருப்பதாக aitel sms அனுப்பி உள்ளது .,MNP பயம் போல
ReplyDeleteI AM DOCOMO AND IDEA
ReplyDeleteஎல்லா நெட்வொர்களிளும் சில பிரச்சனைகள் இருக்கு..
ReplyDeleteஇவர்கள் திருந்துவது கடினமே..
http://sakthistudycentre.blogspot.com/
ஜாக்கி அண்ணே! எல்லா நெட்வொர்க் பயலுகளும் இப்படித்தான் இருக்கானுக..DTH பொருத்தவரைக்கும் இருப்பதில் Sun ரொம்ப மோசம்... அவன் நெட்வொர்க்க தவிர உருப்படியா ஒரு சானலும் இல்லை.
ReplyDeleteஅண்ணனுக்கு,
ReplyDeleteஇந்த ஏர்டேல் மாறபோறதில்லை. நம்பர் மாற்றிக்கொள்ளும் சேவையை ஏர்டேல் தவிர்க்க போவதாகவும் கேள்விபட்டேன். டவர் கம்மியா இருக்குறதால வார பிரச்சினை தான். இதற்கு நீங்க எவ்ளோ பேசினாலும் அவங்க ஒன்னும் கண்டுக்க மாட்டாங்க. நீங்க இந்த பதிவை படிச்சு பாருங்களேன் http://maanangettatamilan.blogspot.com/2010/11/blog-post_30.html
My 2 cents! எந்த செல் போன் கம்பனிக்கும் லாயல்டி வேண்டாம். நம்பர் போர்டபிலிட்டி வந்தவுடன் மாற்றிவிடுங்கள்!
ReplyDeleteBitter experience but presented nicely. Keep it up
ReplyDeleteபிராடுகளின் மொத்த உருவம் =ஏர்டெல் நிறுவனம்
ReplyDeleteAnne, I changed to Aircel from airtel 4 months back. I have been using airtel for the past 5 years. As you said at the beginning times airtel was good. Now it has very poor customer service. They have blocked my no without any intimation. They said that i didnt provide them a proper proof details. How come i have been using the same service without proof for the past years. Airtel is worst.
ReplyDeletepl.change Airtel to BSNL
ReplyDeleteஜாக்கி நீங்கள் கஸ்டமர் கேருக்கு கால் செய்வதால் ஒரு மயிறு பிரயோஜனம் கூட இல்லை... (நான் டோகோமோ கஸ்டமர் கேரில் பணிபுரிந்தேன்... அந்த அனுபவத்தில் சொல்கிறேன்...
ReplyDeletei am waiting for mobile number portability, i am having airtel for more than 8 years and i am totally upset with their service
ReplyDeleteஇதுக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்
ReplyDeleteமோசடி இன் மொத உருவம் airtel. நுகர்வோருக்கு மரியாதை இல்லாத கம்பெனி விரைவில் மூடப்படும்.
ReplyDeleteடியர் ஜாக்கி ,
ReplyDeleteஏர்டெல் ரூம்ப ரூபா மோசம் , நெறைய பேர் பாதிகா பாடு இருக்காங்க
ஜாக்கி,
ReplyDeleteஎனக்கும் இதே மாதிரி சென்ற முறை இந்திய வரும் பொது ஏற்பட்டது, எனக்கு ஒரே நம்பர் எல்லாம் கிடையாது ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்திய வரும்போது மாறி கொண்டே இருப்பேன், இருந்தாலும் போன முறை ஏர்டெல் கம்பனி காரர்கள் மிகவும் என்னை அலைகழித்து விட்டனர். இரண்டு முறை எனது மொபைல் லில் இருந்து நாற்பது ருபாய் லவட்டி விட்டார்கள்.
கஸ்டமர் கேர் ருக்கு போன் செய்து கேட்ட பொழுது நான் எதோ ஆச்டிவேசன் செய்து உள்ளேன் என்று வம்படியாக பேசி கொண்டே இருந்தார் அந்த கஸ்டமர் கேர் பையன், அதற்கு நான் மிகவும் கடுமையாக இந்த மாதிரி யாருக்கும் தெரியாமல் பைசா எடுபதர்க்கு ஏர்டெல் ஓனர் மனைவி மார்களையும், பிள்ளைகளையும் நடு தெரிவில் நிப்படி வேறு ஒரு தொழில் செய்யலாம் என்று சொல்லி இதை ரெகார்ட் செய்து உங்கள் மேலாளரிடம் போட்டு காமியுங்கள் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டேன். பிறகு இரண்டு நாள் கழித்து கஸ்டமர் கேர் லிருந்து போன் வந்தது 80 ரூபாயையும் மறுபடியும் எனது மொபைலுக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறினார். இனி அடுத்த முறை கண்டிப்பாக ஏர்டெல் கிடையாது என்பது உறுதி.
வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆனா வராதூஊ
ReplyDeleteஎல்லாம் சரி. உங்கள் ப்ளாக் ஓபன் பண்ணா page நடுவுல நிக்குது. இல்லைனா cursor டிக்ஷனரியில் போய் நிக்குது. இதுக்கு ஏதாவது வழி பண்ணுங்க.
ReplyDeleteஎல்லாம் சரி. உங்கள் ப்ளாக் திறந்தவுடன் cursor டிக்ஷனரியில் போய் உட்கார்ந்து விடுகிறது. அதை சரி செய்தால் நன்றாக இருக்கும். உங்களால் முடியும். செய்வீர்களா?
ReplyDeleteஇது நடக்கட்டும் சேகர். ஏர்டெல் காரனுங்க கொட்டம் அடங்க இங்குள்ள ஆத்தாவுக்கு கூழ் ஊத்தலாம்.
ReplyDeleteits true . . .
ReplyDelete