Saturday, January 15, 2011

சிறுத்தை...அக்மார்க் தெலுங்கு கமர்சியல் பாய்ச்சல்..அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்


தெலுங்கு விக்ரமுடு தமிழ் பேசி இருக்கின்றது. அதே தொங்கரா சட்னி காரத்துடன்...

இந்த படத்தை தெலுங்கில் பார்த்துவிட்டேன்..ரவிதேஜாவுக்கு என்றே பின்னப்பட்ட ஆக்ஷன் தம்மாக்கா..திரைக்கதை.... அந்த கேரக்டருக்கு கார்த்தி எப்படி பொருந்துவார் என்று யோசித்தேன்... சும்மா சொல்ல கூடாது.. கார்த்தி புகுந்து விளையாடி இருக்கின்றார்.
கார்த்தியின் பிம்பம் பையா படத்தில் உடைத்து இருந்தாலும் இந்த படம் இன்னும் ஒரு படி மேலே  போய் உடைத்து இருக்கின்றது என்று சொல்லலாம்.


சிறுத்தை படத்தின் கதை என்ன???

கார்த்தி சந்தானம் இருவரும் திருடர்கள்.. சேட்டுவீட்டில் திருட போகும் போது அங்கு இருக்கும்  தமன்னா மீது கார்த்திக்கு காதல் வருகின்றது.. சரி ஒரு பெரிய திருட்டுக்கு பிறகு திருந்துவோம் என்று நினைக்கும் போது கடைசி திருட்டில் கிடைக்கும் பெட்டியை திறந்து பார்த்தால் அந்த பெட்டியில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது.. அந்த பெண் குழந்தை திருட்டு கார்த்தியை பார்த்து  அப்பா என்கின்றது...அதே பெட்டியில் தன்னை போலவே போலிஸ் கெட்டப்பில் இருக்கும் இன்னோரு கார்த்தியும் குழந்தையும் இருக்கும் போட்டோவை பார்க்கின்றான்... போலிஸ் கார்த்தி எங்கே.??? என கொஞ்சம் கொஞ்சமாக முடிச்சி அவிழ்ப்பதை தம்ன்னா இடுப்பு வளைவு போல ஏகப்பட்ட திருப்பங்களுடன் கண்டு களியுங்கள்..


படத்தின் சுவாரஸ்யங்களில் சில...இரட்டை வேடத்தில் கார்த்தி புகுந்து கலக்கி  இருக்கின்றார்..திருடன், பொறுக்கி கேரக்டர் ஏற்க்கனவே செய்து இருந்தாலும் இந்த படத்தில் மிடுக்கான போலிஸ் கேரக்டர் செய்து இருக்கின்றார்....

கார்த்தி இந்த படம் அவரை சுத்தமாக மாற்றிவிட்டது.... போலிஸ் கெட்டப் சூப்பர்...

இந்த படத்தில்  கார்த்தியின் பாடிலாங்வெஜ் நிறைய சேஞ்சு ஆகி இருக்கின்றது...

கார்த்திக்கு பல்வேறு பாடிலாங்வேஜ் வரும் என்று இந்த  படத்தில் நிருபித்து இருக்கின்றார்.. முக்கியமாக அந்த போலிஸ் மிடுக்கு.. ஆமாம் சார் பயந்து கிட்டுதான் இருக்கின்றேன் என்று சொல்லி கார்த்தி பேசும் வசனங்கள் செமை...

படத்தில் காமெடியில் சந்தானமும் கார்த்தியும் கலந்து கட்டி அடித்து ஆடி இருக்கின்றார்கள்...

சந்தானம் பேசும் ஒவ்வோரு காட்சிக்கு  தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்..திருடன் என்று கார்த்தி மாட்டி விடும் இடத்தில் கொடுக்கும் ரியாக்ஷன் இருக்கின்றதே வயிறு பதம் பார்த்து விடுகின்றார்...
 கார்த்தி குரலில் நிறைய மாடுலேஷனில் பேசி நடித்து இருக்கின்றார்..


போன வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்ஸ்கொடுத்த ஜோடி கார்த்தி தமன்னா....இந்த படத்திலும் பின்னி இருக்கின்றார்கள்.....

இரண்டு குத்தாட்டம் பாடல்களில் ரசிகர்கள் கவனம் செலுத்துகின்றார்கள்...
நேருக்கு நேர் படத்தில்  மன்ம் விரும்புதே பாடலில் சிம்ரன் இடுப்பில் அதிக சிரத்தையோடு கவனம் செலுத்திய எனது கண்கள்...லாங் கேப்புக்கு பிறகு இந்த படத்தில் தன்னாவின் இளசான இடுப்பு மீது கவனம் செலுத்துகின்றன...(ஆண்டவா மனசுல இருக்கறதை இறக்கி  எழுதிவச்சிட்டேன்.. நைட்டு புவாவுக்கு பிரச்சனை  இல்லாமல் வழி செய்து விடு)

தமன்னாவோடு பணிபுரிந்தவன் என்ற முறையில் சொல்கின்றேன்..  எந்த காஸ்ட்யூம் கொடுத்தாலும் மறுப்பு ஏதும் சொல்லாமல் போட்டுக்கொண்டு நடிக்கும் பெண்...டயலாக்கை ஆங்கிலத்தில் எழுதி நிறைய மனப்பாடம் செய்து விட்டு ஷாட்டுக்கு வரும் பெண்...  ஷுட்டிங்கில் எனக்கு தெரிந்து எந்த பிரச்சனையும் செய்தது இல்லை...

ஒரு குத்தாட்டத்தில் தமன்னா ஆடும் ஆட்டம் இந்த பெண்ணிடம் இவ்வளவு திறமையா? என்று நினைக்கும் அளவுக்கு ஆடி இருக்கின்றார்..

திருடன் கார்த்திக்கு இடுப்பை பார்த்தாலே கிள்ளும் பழக்கம் உண்டு.. எப்படி இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் இடுப்பை கிள்ளிவிடுவார்...அதை வைத்து ஒரு சீன்.. தெலுங்கில் ரவிதேஜா பின்னி இருப்பார்... அவரின் முண்ட கண் பிளஸ் பாயின்ட்...கார்த்தி ஓகே ரகம்தான்... அதில் அனுஷ்காவின் அகன்ற.... யோவ் கண்கள் என்று சொல்ல வந்தேன்..

போலிஸ் கெட்டப்பில் கிராமத்துக்கு வரும் போதே விறுவிறுப்பாக காட்சிகள் இருக்கும். ரத்னவேல் பாண்டியன் கேரக்டர் நினைவில் நிற்கும்...

பட் மாடியில் இருந்து அப்படியே தரையில் குதித்து சண்டை போடுவது போன்றவற்றில் கொஞ்சம் லாஜிக் பார்த்து இருக்கலாம்..


(தெலுங்கில் ரவிதேஜா...அனுஷ்கா...)

இண்டர்வெல்லுக்கு பிறகு வரும் திருட்டு கார்த்தி போலிஸ்வேடத்தில் வந்து செமையாக கலாய்கின்றார்....

பேர் என்ன என்று போலிஸ்கார்த்தியிடம் கேட்கும் போது  வில்லனின் பிள்ளையை அடி அடி என்று அடித்து தெரிக்கும் ரத்தம் தனது போலிஸ் ஆடையில் இருக்கும் பேட்ஜில் வழியும் ரத்த்த்தை துடைத்து பேர்  காட்டுவது என படத்தின் பல காட்சிகளில் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கொடுத்த இருக்கின்றார் இயக்குனர் சிவா..


வேல்ராஜ் ஒளிபதிவு  பல காட்சிகளுக்கு ஆக்ஷன்படத்துக்கான வேகத்தை கொடுத்து இருக்கின்றார்...ராஜா ராஜா ராக்கெட் ராஜா குத்து பாடலில் வித்யாசாகர்.. நிற்க்கின்றார்... எப்படியும் அந்த பாடல் பல கெமிஸ்ட்ரியோடு  ஒர்க் அவுட் ஆக்கி  மானாட மயிலாடவில் கலா மாஸ்டர் பாராட்டும் அளவுக்கு அந்த பாடல் இருக்கும்...

தெலுங்கில் நடித்த பலர் இந்த படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார்கள்..


தற்கொலை செய்து கொண்ட ஷோபனா கடைசியாக நடித்த படம். என்று நினைக்கின்றேன..இந்த படத்தில் திருட்டு கார்த்தியிடம் சண்டை போடுகின்றார்...

என்னதான் தெலுங்கு மொழியில் பேசினால்படம் பார்க்கும் நமக்கு புரியாது என்பதால் தெலுங்கு கேரக்டர்கள்... தமிழில் பேசுகின்றார்கள் என்று டைட்டிலில் போட்டாலும்.. அந்த டைட்டில் கார்டை தவறவிடுபவர்களுக்கும்....படம் பார்ப்பவர்களுக்கும் தமிழ் பேசிக்கொண்டு இருப்பதால் கதாபாத்திரங்களின் தெலுங்கு விஷுவல் கல்ச்சர் படம் பார்க்கும் போது ஒட்ட மறுக்கின்றது....

படத்தின் டிரைலர்...
படக்குழுவினர் விபரம்...


Movie : Siruthai
Cast : Karthi,Tamannah,Santhanam.....
Music Director : VidyaSagar
Director : Shiva
Movie Release : Jan 15 2011
Movie Year : 2011தியேட்டர் டிஸ்கி...


சென்னை காசி தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன்..
ஏசியை போட்டு குளிரவிட்டு விட்டார்கள்..
பூமிகா படத்தை காட்டும் போது கூட ரசிகர்கள்  கைதட்டி ரசித்தனர்..
கியூப்பில் படம் ஓடியது.. பல  ஒயிட்பேக்ரவுண்ட் காட்சிகள் பிளிச்சாகி இருந்தது .. பல காட்சிகளில் பிளிச் ரசிக்க விடாமல் தடுத்தது..

பைனல்கிக்...


கார்த்தி சந்தானம்  காமெடி, விறு விறு திரைக்கதைக்கும், தமன்னா இடுப்புக்கும் சாரி கை ஸ்லிப்பு ஆயிடுச்சி...தமன்னா நடிப்புக்கும், சிலகாட்சிகளில் காதில் பூ சுற்றினாலும் இந்த படத்தை பாக்கவேண்டிய பட்டியலில் சேர்க்கின்றேன்...


பிரியங்களுடன்.
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

21 comments:

 1. ஜீந்தாக் தாக் ஜீந்தக் ஜீந்தக்...இந்த படத்தை நான் தெலுங்கில் பார்த்து இருக்கேன் அந்த படம் எனக்கு பிடித்து இருந்தது இதையும் பார்க்க உள்ளேன்

  ReplyDelete
 2. Hi Jackie,
  Iniya Pongal thina nalvalthukkal!!! Vimarsanam arumai!!! Matra padangalukum mudinthal vimarsanam podavum!!!

  ReplyDelete
 3. ம்ம் நல்ல படமெல்லாம் இல்லை. பொழுது போகும் கிட்டத் தட்ட உங்கள் கருத்துத்தான் எனக்கும்

  ReplyDelete
 4. //இளசான இடுப்பு மீது கவனம் செலுத்துகின்றன//இருங்க அக்கா கிட்ட சொல்லி ஒரு வாரத்துக்கு அடுப்ப பத்தவைக்க வேணாம்னு சொல்றேன் :)

  ReplyDelete
 5. பார்க்க வேணாம்னு இருந்தன்.. நீங்க சொல்றத்தால பாக்க போறன்..

  ReplyDelete
 6. அப்போ இது அப்படியே ஜெராக்ஸ் சிறுத்தையா

  ReplyDelete
 7. தமன்னாவுடன் பணிபுரிந்தவன் என்ற முறையில்........

  யம்மா.. யம்மா.. ராத்திரி புவா என்ன ஒண்ணுமே கிடைக்கக்கூடாது...

  ReplyDelete
 8. நண்பர் ஜாக்கிக்கு பொங்கல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. இனம் மறந்து இயல் மறந்து
  இருப்பின் நிலைமறந்து
  பொருள் ஈட்டும் போதையிலே
  தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
  நினைவூட்டும் தாயகத் திருநாள்

  உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. ஜாக்கி அண்ணா, பொங்கல் நல்வாழ்த்துகள்!! விமர்சனத்திற்கு நன்றி!!

  ReplyDelete
 11. சூடா படம் பாத்து டீங்க போல . விமர்சனத்தை அருமை

  ReplyDelete
 12. //தொங்கரா சட்னி// I Think அது தொங்கரா சட்னி இல்ல, கோங்கூரா சட்னி அதாவது காசலிகீரை சட்னி , மற்றபடி விமர்சனம் அருமை...
  பகிர்வுக்கு நன்றி..
  ஆமா நண்பரே நம்ம கடை பக்கம் எப்பவாச்சும்!!!!!!! வந்திருக்கீங்களா?
  http://sakthistudycentre.blogspot.com/

  ReplyDelete
 13. யோவ் ...முண்டக்கண்யா அது....நீ அர்த்தத்தையே மாத்திட்ட..:-)))

  ReplyDelete
 14. //என்னதான் தெலுங்குகிராமத்தை மொழிக்கா தமிழில் பேசுகின்றார்கள் என்று டைட்டிலில் போட்டாலும்.. அதை தவறவிடுபவர்களுக்கும்....படம் பார்ப்பவர்களுக்கும் தமிழ் பேசிக்கொண்டு இருப்பதால் அவர்கள் விஷுவல் கல்ச்சர் படம் பார்க்கும் போது ஒட்ட மறுக்கின்றது....
  //
  என்ன சொல்ல வர்றீங்கன்னே புரியலையே ஜாக்கி...ஸ்பெல்லிங் மிஸ்டேக் போகுதுன்னு பார்த்தா, வர வர வாக்கிய அமைப்பும் அங்க இங்க கோர்வை இல்லாம இருக்கு..பார்த்துக்குங்க பாசு..பா.ரா சொன்னது மாதிரி..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner