ரொம்ப ரொம்ப அற்புதமான க்ரைம் இன்வெஸ்டிகேஷன் வெப்சிரிஸ் Mare of Easttown
கேட் வின்செல்ட் டிடெக்டிவாக மேர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெப் சீரிஸ்... மேர் ஆப் ஈஸ்டண்ட்டவுன்..... அதுவும் பாட்டியாக நடித்திருக்கும் கதை
மொத்தம் ஏழு எபிசோடு எல்லாமே தரம்... அதுவும் அந்த ஏழாவது எபிசோடு வேற லெவல்
25 வருடத்திற்கு முன்பாக பேஸ்கட் பால் டீமில் மேர் பாயும் புலி... ஸ்டார் பிளேயர்...
மேருக்கு திருமணம் ஆகி தன் கணவனோடு விவாகரத்தாகி தன் தாயோடு ஒரு ஆண் பையன் ஒரு பெண் பிள்ளை என்று கடமைக்கு வாழ்ந்து வருகிறார்....அதே நேரத்தில் பையனுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை....
மருமகள் ஒரு ட்ரக் அடிக்ட்... சமீபத்தில் தான் பையன் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து போனான்... ட்ரக் அடிக்ட் மருமகளிடமிருந்து பேரனை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எல்லாம் சேர்ந்து குழப்பிக் கொண்டிருக்கும் அதே வேளையில்... வயதுக்கு வந்த பெண் இரு இசைக்குழுவில் பாடிக் கொண்டிருக்கிறார்....
கணவன் விவாகரத்துக்கு பிறகு வேறு ஒரு பெண்ணை வேறு மணந்து கொள்ளப் போகிறான்.... ஒரு வருடத்திற்கு முன்பாக அவள் வசிக்கும் நகரில் அவளது பேஸ்கட்பால் டீமேட்டின் மகள் காணாமல் போய்விட்டாள்.... அவள் காணாமல் போன கேஸ் வேறு மேருக்கு பெரிய தலைவலியை உண்டு பண்ணுகிறது...
இந்த நேரத்தில் மேருக்கு ஒரு எழுத்தாளர் நண்பன் பழக்கமாகிறான்.... கணவனுக்கு புது காதலியோடு திருமண நிச்சயதார்த்தம் நடக்கும் நிகழ்வின்போது அதே ஊரில் இருக்கும் இன்னொரு பெண் நிர்வாணமாக கொலையாகிக் கிடக்கிறாள்.... அவளுக்கும் திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது... இறந்து போன பெண் விவாகரத்து பெற்றவர்....
ஏற்கனவே தனது தோழியின் மகள் காணாமல் போய் ஒரு வருடம் ஆகிறது அந்த பெண் என்னவானால் என்று தெரியவில்லை... அதே நேரத்தில் தற்போது ஒரு இளம் பெண் ஒரு குழந்தைக்கு அம்மா நிர்வாணமாக துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போகின்றாள்....
பேரனுக்கு பாட்டியாக இருக்கக்கூடிய கேட் வின்சென்ட் எனும் மேர் குற்றவாளியை கண்டுபிடித்தாளா இல்லையா என்பதுதான் இந்த வெப் சீரிஸ் இன் சுவாரசியம்....
ஆறாம் எபிசோடில் யார் கொலையாளி என்று முடிவுக்கு வந்த பிறகு.... ஏழாவது எபிசோடு ஆரம்பிக்கும் பத்தாவது நிமிடத்திலேயே கொலையாளி யார் என்று தெரிந்தாலும்....
மீதம் 45 நிமிடங்கள் என்ன செய்கிறார்கள் என்றால் வேறு ஒரு கதையை நமக்கு சொல்கிறார்கள் அதுதான் இந்த சீரியஸை நான் உயர்த்திப் பிடிக்க மிக முக்கிய காரணம்....
கண்டிப்பாக இந்த மினி தொடரை பாருங்கள் நன்றியை எனக்கு பிறகு தெரிவியுங்கள்... தளர்ந்து போன உடம்போடு கேட் வின்சென்ட் பாட்டி கேரக்டரில் நடித்து இருந்தாலும் ஒரு உடலுறவு காட்சியில் அசத்தியிருக்கிறார்... கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கானது
இது மார்ச் மாதத்திற்கு முன் ஹாட் ஸ்டாரில் இருந்தது இப்போது நீங்கள் தேடி தான் பார்க்க வேண்டும்....
watch
#MareOfEasttown #mareofeasttownreview #mareofeasttownreviewintamil #mareofeasttowntamilreview #mareofeasttownwebseries #மேர்ஆப்ஈஸ்ட்டவுன் #மேர்ஆப்ஈஸ்ட்டவுன்ரிவியு #katewinslet #mareofeasttownexplainationtamil
#மேர்ஆப்ஈஸ்ட்டவுன்தமிழ் #மேர்ஆப்ஈஸ்ட்டவுன்விமர்சனம்
#விமர்சனம்
watch #mareofeasttown review by #jackiecinemasreview #jackiesekarreview
https://youtu.be/735DZcfg_4s
நிரூபிப்பதே நீ.....
0 comments:
Post a Comment