On The Path (Na Putu)-2009/உலகசினிமா/போஸ்னியா/மதம் வேண்டுமா? காதல் வேண்டுமா?


எல்லோருக்கும் அவர் அவர் சார்ந்த மதங்கள் புனிதமானவைதான்..  காரணம் மதம் என்பது நீங்கள் வளரும் போது அதுவும் உங்களோடு பயணிக்கும் விஷயம்... அது பற்றி சிந்தனைகள் பேச்சுக்கள் தர்க்க நியாயங்கள் நிறைய சிறுவயதில் இருந்து கேட்டு வளர்ந்து இருப்பீர்கள்...


இன்னும் சிலர் அவர்  அவர் மதம் சார்ந்த கோவில்களுக்கு சென்று பிரசங்கம் கேட்கும் போது அவர் அவர் சார்ந்த மதமே இந்த பூவுலகில் சிறந்தது என்று எல்லோருடைய மதங்களும் சொல்லும்....
பொதுவான பெண்ணடிமைதனம் இல்லாத மதமே இல்லை.. ஆனால் பெண்ணடிமைதனம் நிறைய முஸ்லிம் மதத்தில் இருக்கின்றது.. அது எப்போதும் பெண்களை ஒரு கட்டுக்குள் வைத்து இருக்கின்றது... அதுக்கு தாலிபான் ஆட்சியும் டைம் பத்திரிக்கையில் மூக்கு அறுபட்ட பெண்ணின் புகைபடமும் அதுக்கும் பெரும் சாட்சி... எல்லோருக்கும் தெரிந்த விஷம்தான்... இருந்தாலும் ஒரு பெண் இயக்குனர் பார்வையில் அந்த பெண்ணடிமைதனத்தை  இந்த படம்  உறக்க சொல்கின்றது...

  Jasmila Zbanic  போஸ்னிய பெண்இயக்குனர் தனது பார்வையில் சொல்லி இருக்கின்றார்... இஸ்லாத்தில் இரண்டு பிரிவானவர் இருக்கின்றார்கள்... தீவிரமாக மதத்தை பின்பற்றுபவர்கள்...தீவிரமாக மதத்தை பின்பற்றாதவர்கள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு அவர்களில் இருவருக்கும் உள்ள வித்யாசத்தையும்  வாழ்வியில் பிரச்சனையை  அலசி இருக்கின்றார்


On The Path (Na Putu)-2009/உலகசினிமா/போஸ்னியா படத்தின் கதை என்ன??


 அமர், லூனா இருவரும் காதலர்கள் இருவரும் விமான நிலையத்தில் பணிபுரிகின்றார்கள்.. அமர் டவர் ஆபிசில் வேலை செய்கின்றான்..லூனா விமான பணிப்பெண்.... இரண்டு பேரும்  இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள்... இரண்டு பேரும் காதலர்கள் சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ள இருக்கின்றார்கள்.. இருந்தாலும் முதலில் குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் குழந்தைக்கு முயற்ச்சிக்க அமரின் ஸ்பேர்ம் ஆக்டிவாக இல்லை.. காரணம் அளவுக்கு மிஞ்சிய குடிதான் மிக முக்கிய காரணம்.

வேலையின் போது குடித்து விட்டு இருந்த காரணத்தால் பணி இடை நீக்கம் அமரை  செய்கின்றார்கள். அமர் ஒரு பால்ய நண்பனை எதேச்சையாக சந்திக்க.. ஒரு ரூரல்  பகுதியில்நடக்கும் இஸ்லாமிய கேம்பில் பிள்ளைகளுக்கு கம்யூட்டர் சொல்லத்தர  அமரை அவன் அழைக்கின்றான்.. அந்த இடத்துக்கு அமர் போகின்றான்.. சிகரேட் தண்ணி எதையும் அமர் தொடவில்லை...  அந்த இடம் அவனை அப்படியே மாற்றுகின்றது... ஆனால் அவன் இதுநாள் தன் காதலிக்கு கொடுத்த சுதந்திரத்தில் தலையிடுகின்றான்... தீவிரை இஸ்லாமியனான மாறுகின்றான்.... அதுவரை லூனாவின் உடை பற்றி கவலை கொள்ளாதவன்  உடைகளில் பழக்கத்தில் எல்லாம் மாற்றம் அடைகின்றான்... கருத்து மோதல் முற்றிய இருவரும் வாழ்வில்  ஒன்று சேர்ந்தார்களா?  இருவருக்கு குழந்தையாவது பிறந்ததா என்று வெண் திரையில் பார்த்து மகிழுங்கள்...


படததின் சுவாரஸ்யங்களில் சில..


காதலர்கள் இருவருமே முஸ்லீம் மதத்தவர் என்பதால் அதில் காதலன் தீவிரமாக அந்த மதத்தை பின் பற்றுவதால் வந்த உறவு குழப்பத்தை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார்....

 

படத்ன் முதல் பாதியில் இருவருக்குமான அன்னியோன்யம் மிக அழகாய் இருக்கும்..காதலன்  தூங்கும் போது ரசிப்பது அதனை போட்டோ எடுத்து வைத்து அழகு பார்ப்பது.. என லூனாவின் காதலன் மீதான காதல் காட்சிகள்.. மிக அருமை.... அதுவும் ஒரு பெண் பார்வை என்பதால் ரசிப்பு மிக அதிகம்...


ஒரு ஏர் ஹோஸ்டலுக்கு உரிய அழகு லூனாவாக நடித்த பெண்ணிடத்தில் அதிகம் இருக்கின்றது.. நல்ல உடற்கட்டு....ஆர்பாட்டம் இல்லாத அழகு ஏனோ அந்த பெண்ணை எனக்கு மிகவும் பிடித்து விட்டது....இந்த படத்தின் இயக்குனர்.. Jasmila Zbanic பன்முக திறமை கொண்டவர்... நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என பிச்சி உதறுபவர்... இதுவரை 8 விருதுகள் வென்று இருக்கின்றார்....


படத்தின் இயக்குனரும் சில காட்சிகளும் உங்கள் முன்னால் பார்த்து ரசிக்க...(ஒரு சின்ன சீன் இந்த வீடியோவில் வருவதால் அலுவலகத்தில் தவிர்க்கவும்...)
 முஸ்லிம் பெண்ணாக இருந்தாலும் பர்தா அணிந்த பெண்ணை நின்ஜா சண்டைக்காரி போல  இருப்பதாக சொல்வதும்... அதே பர்தா பெண்  அவரது பார்வையை  சொல்வது சிறப்பு....முதலில் லூனா அமரின் நண்பனிடம் கை குலுக்க கை நீட்டும் போது நான் பெண்களின் கைகளை தொடுவதில்லை என்று சொல்லிவிட்டுஅதே கேரக்டர்

விதவையை மனம் செய்து அந்த குந்தைகளுக்கு தகப்பனாக காட்டிக்கொண்டு விட்டு பின்னாளில் ஒரு சின்ன பெண்ணை இரண்டாம் தாரமாக மனம் முடிக்கும் போது கடவுள் மீது பழி போடுவதை ஏற்க்க முடியாமல் லூனா புலம்புவதும் அதனை எதிர்ப்பதும் நல்ல காட்சி....பாரில் அமிரிடம் லூனா பேசுவது இஸ்லாத்தில் உள்ள பெண்ணடிமைதனத்தை பற்றி விவரித்து பேசும் காட்சிகள்.. அவள் கேட்கும் எந்த கேள்விக்கும் அமரிடம் பதில் இல்லாமல் தவிப்பது.. கடைசிவரை தான் சார்ந்த கொள்கையை விட்டுக்கொடுக்காமல் இருப்பதும் செமை..


படத்தின் கிளைமாக்ஸ் கைதட்டலை பெற்றது.....அண்ணன் உண்மைதமிழன் இந்த படம் பார்த்து விட்டு நான் இந்த பெஸ்ட்டிவலில் பார்த்ததிலேயே  பெஸ்ட் படம் இந்த படம்தான் என்று சொன்னார்....


இந்த படம் சென்னை எட்டாவது உலகபடவிழாவில் உட்லண்ட்ஸ்  சிம்பனி தியேட்டரில் திரையிடபட்டது.....
இந்த படம் 60வது பெர்லின் திரைப்படவிழாவில் கலந்து கொண்டு பரிசு பெற்றது குறிப்பிடதக்கது...என்னை விட ஒரு வயது அதிகம் இந்த பெண் இயக்குனர்.. அது கலக்கிடுச்சி.. நான் உட்கார்நது டைப் அடிச்சிகிட்டு இருக்கேன்... வாட் எ ஷேம் ஜாக்கி----??படத்தின் டிரைலர்...


படக்குழுவினர் விபரம்....

Directed by     Jasmila Žbanić
Produced by     Damir Ibrahimovic
Written by     Jasmila Žbanić
Starring     Mirjana Karanović


Cinematography     Christine A. Maier
Release date(s)     February 18, 2010 (2010-02-18) (Berlinale)
February 20, 2010 (2010-02-20) (Bosnia and Herzegovina)
Country     Bosnia and Herzegovina
Language     Bosnian

பைனல் கிக்...இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படம்..  காரணம்.... இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்களாகக இருந்தாலும் சுதந்திரம் என்பது ரொம்ப முக்கியம் என்பதை சொல்வதும்.. அதன் இருவரின் பார்வையை அலசிய விதத்துக்கும் கிளைமாக்சுக்கும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்..குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

11 comments:

 1. ///
  என்னை விட ஒரு வயது அதிகம் இந்த பெண் இயக்குனர்.. அது கலக்கிடுச்சி.. நான் உட்கார்நது டைப் அடிச்சிகிட்டு இருக்கேன்... வாட் எ ஷேம் ஜாக்கி----??
  ///

  Dont worry jacky.

  காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்.

  அன்பு நித்யன்

  ReplyDelete
 2. போஸ்னிய படம் எல்லாம் நம்ம ஊர் திரையரங்குகளில் எங்கே காட்டுவார்கள்? தமிழ் படத்துக்கே தியேட்டர் கிடைக்கலயாம்! டிவிடியோ டவுலோடோ கிடைக்குமா சொல்லுங்கள், ஜாக்கி!

  ReplyDelete
 3. பார்த்துட்டு பேசறேன்

  ReplyDelete
 4. ஜாக்கி ,இந்த படவிழாவில் எனக்கு பிடித்த படமும் இதுதான் .அதிலும் நீங்க சொன்னபடி அந்த பார் காட்சியும்,படுக்கையில் அவளது காதலனை செல் போனில் படம் பிடிக்கும் அழகும் ,ஒரு சிறந்த பெண் டைரக்டரின் டச் .அடுத்து silent soul படத்தை பற்றி சொல்லுங்கள் .நன்றி

  ReplyDelete
 5. ஆனால் பெண்ணடிமைதனம் நிறைய முஸ்லிம் மதத்தில் இருக்கின்றது.. அது எப்போதும் பெண்களை ஒரு கட்டுக்குள் வைத்து இருக்கின்றது.

  First u know the truth about muslim. with knowing anything dont write anything.

  ReplyDelete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 7. அடிக்கடி எல்லோரும் டவுன்லோட் லிங்க் கேட்பதால் இவ்வாறான படங்களை நீங்கள் எங்கிருந்து பிடித்தீர்கள் என்பதை டிஸ்கியில் சொல்லிவிடலாமே.

  ReplyDelete
 8. Dear friend,

  You have mistaken about Real Islam. Islam gives a lot of right to ladies. U may think that barda is burden for muslim ladies but in turn, it protects ladies from eve teasing and other serious problems. People use dress to cover our dignity and pride(maanam).In modern life, ladies wear thin and tight dresses which really shows their body exposed to others. Islam allows the ladies to marry again when they have any serious problems with their husbands. Widows can marry again if they want. In olden days, hinduism encouraged ladies to burn themselves with the body of their dead husbands.Though I accept the talibans harassed ladies but in many instances, Media gives false propaganda about muslims and islam. Media is partially controlled by Zionists from America. They are the main reason for the false propaganda. Please publish my comment.

  Thanks,
  Sheik Mujibur Rahman,
  Salalah, Oman.

  ReplyDelete
 9. பொதுவான பெண்ணடிமைதனம் இல்லாத மதமே இல்லை.. ஆனால் பெண்ணடிமைதனம் நிறைய முஸ்லிம் மதத்தில் இருக்கின்றது.
  தவறு .இந்த விஷயத்தில் நீங்கள் முழுமையாக அறியவில்லை ஜாக்கி.தன் உடலை பாது காப்பது ஒவ்வொரு பெண்ணின் கடமை அல்லவா?

  ReplyDelete
 10. நல்ல விமர்சனம் ஜாக்கி. ஆனால் ஒரு சிறிய திருத்தம்....

  //ஃஃபெண்ணடிமைதனம் நிறைய முஸ்லிம் மதத்தில் இருக்கின்றது.ஃஃ//

  முஸ்லிம் மதத்தில் பெண்ணடிமைத்தனம் முற்றிலுமாக இல்லை. நீங்கள் வேண்டுமானால் குர்ஆனை படித்துப் பாருங்கள்..ஆனால் சில இஸ்லாமிய பழமைவாதிகள் பெண்களை அடிமையாக்கி வைத்திருக்க முயற்சி செய்கின்றார்கள் என்பதில் எந்த சந்தேகம் இல்லை......

  பெண்களை அடிமையாக்கி வைத்திருப்பதில் மதங்களை கடந்த ஆணாதிக்க வாதிகள் நிறைய இருக்கின்றார்க்ள ஜாக்கி....

  ஆகவே ஒரு மதத்தை சார்ந்தவர்களின் தவறு அந்த மதத்தின் தவறு இல்லை. ஒரு மதத்தைச் சார்ந்தவன் கொலை, கற்பழிப்பு செய்கிறவன் எனில் அந்த மதம் அதனைப் போதிக்கின்றது என்கிற வித்தில் அதனை எடுத்துக் கொள்ள கூடாது....

  தங்களின் விமர்சனங்கள் அனைத்தும் ஆவலைத் தூண்டுகின்றது. விமர்சனம் பார்த்து படம் பார்ப்பவர்கள் ஒரு புறம் இருக்க நான் படம் பார்த்துவிட்டு வந்து தங்களின் விமர்சனம் படிக்க ஆவலாயிருக்கின்றேன்...படம் பார்த்து முடித்துவிட்டாலும் தங்களின் பார்வை எப்படியிருக்கிறது என்பதற்காக உங்கள் விமர்சனம் படிக்க தூண்டுகின்றது

  - ரசிகவ் ஞானியார்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner