இயக்குனர் பாலுமகேந்திரா,மிஷ்கின் புத்தகவெளியீட்டு விழா ஒரு பார்வை...

( இயக்குனர் பாலுமகேந்திராவோடு  இரண்டு வருடத்துக்கு முன் எனது கல்லூரிக்கு விருந்தினராக வந்த போது எடுத்துக்கொண்ட படம்...)

சென்னையில் இருப்பது பல விஷயங்களில் சௌகர்யமான விஷயம்.. எந்த நிகழ்ச்சி நடந்தாலும் எளிதில் கலந்து கொள்ளஏதுவாக  இருக்கும்.. அதனாலே சென்னை வாசிகள் மற்றும் சென்னை பதிவர்கள் மேல் ஒரு சின்ன பொறாமை  மற்றவர்களுக்கும் இருக்கும்.

வம்சி பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டில் இரண்டு பிரபல இயக்குனர்கள் பாலுமகேந்திரா மற்றும் மிஷ்கின் இருவரின் புத்தக வெளியீடு கடந்த  சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு பிரசாத் லேபில் நடந்தது..
(பாலுமகேந்திராவின் கதைநேரம் இரண்டாம்பாகம் புத்தகம் வெளியீட்டின் போது..)
மாலை ஆறுமணிக்கு பெரிய கூட்டம் கூடியது.. காரணம் மிஷ்கினின்  புத்தகத்தை வெளியிட  நிறைய ஒளிப்பதிவாளர்கள் வந்து இருந்தார்கள்..பவாசெல்லத்துரை அவர்களை நான் சந்தித்து அகரம் பவுண்டேஷனில் பணியாற்றி பல ஏழை மாணவர்களுக்கு கல்வி கண்ணை திறந்து வைத்தமைக்கும் அதில் சிறப்பாய் பணியாற்றியமைக்கு நான் நன்றி கூறினேன் .
(இயக்குனர் மிஷ்கின் நத்தைபோன பாதையில் வெளியீட்டின் போது.. )


பாலமுருகன் எனும் உதவி இயக்குனர் என்னை பார்க்க  அவர் நண்பருடன் வந்து இருந்தார்.. அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தேன்.

நானும் நண்பர் நித்யா, உண்மைதமிழன் எல்கட் டிவி ஷோரும் நண்பர் ஜெயவேல் என எல்லோரும்  சரியான நேரத்துக்கு உள்ளே போனோம்...

நான் புகைபடம் எடுக்க தோதாய் முன் பக்க இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன்..  முதலில் பாலுமகேந்திராவின் கதை நேரம் புத்தகம். பாகம் இரண்டு வெளியிடபட அதனைஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார்...

புத்தக அறிமுகத்தை எஸ்ரா செய்தார்... மிக அழகாக பேசினார்...சிறுகதைகளை திரைக்கதையாக்கும் வித்தையை பாலுமகேந்திரா சிறப்பாக இந்த கதை நேரத்தில் செய்து இருப்பதாக  சொன்னார்... 52 சிறந்த சிறுகதைகளை தேர்வு செய்து அதனை செல்லுலாய்டில் சிறைபடித்திய ஒரே கலைஞன் பாலுமகேந்திரா அது மட்டும் அல்ல இது இந்தியாவின் பிராந்திய எந்த மொழிக்கும் கிடைக்காத பெருமை என்று சொன்னார்..

 ஒளிப்பதிவாளர் செழியன் பேசும் போது எனக்கு குருநாதர் பிசி என்றாலும் பாலுமகேந்திராவிடம் இருந்து கற்றுக்கொண்டது ஏராளம்... இப்போதும் எந்த படம் செய்தாலும் பாலுமகேந்திராவுக்கு போட்டு காட்டுவேன்... குறைகளை  அப்படியே சொல்லுவார்.. என்றார்...

பாலுமகேந்திரா பற்றிய  டாக்குமென்ட்ரி பிலிம் எடுக்க  வேண்டும் அதனை யார் செய்தாலும் தனக்கு மகிழ்ச்சி என்று சொன்னார்..

அடுத்து பேச வந்த மிஷ்கின் நான்  அதிகம் பேசினால் பாலுமகேந்திராவுக்கு பிடிக்காது என்றும் இருந்தாலும் என்னை  பேச அனுமதித்தமைக்கு மிக்க நன்றி... அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன் என்று பாலுமகேந்திரா புத்தகத்தில் எழுதிய  வரிகளை படித்துக்கொண்டே நான் நிறைய படிக்க சொன்னதையேதான் பாலுமகேந்திராவும் சொல்கினறார் என்று சினிமாவில் இருப்பவர்கள் அதிகம் படிக்க வேண்டும் என்பதை திரும்பவும் மறைமுகமாக  வலியுறுத்தினார்............
(பிரபஞ்சன் சாருடன்.. அவர் தோளில் கை போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்த  போது எனது அண்ணன் உண்மைதமிழன் என்னை  தோளில் இருந்து கை யை எடுக்க சொல்லி  மிரட்டினார்..)
 நான் குரோசோவை சந்திக்க மிகுந்த ஆவல் கொண்டேன்,, பட் அதுக்கு வாய்ப்பு இல்லை.. ஆனால் என் நாட்டிலும் குரோசோவுக்கு இணையான பாலுமகேந்திராவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றார்... எனக்கும் ஜப்பான் நிறைய கற்றுக்கொடுத்தது.. அதில் ஜென் துறவிகளும்.. அந்த ஜென் துறவியை போல்பாலுமகேந்திரா உட்கார்ந்து இருக்கின்றார் என்று சொன்னார்...

( அடக்கம் ஒடுக்கமாக இயக்குனருடன் 2008ல் எடுத்தது)

அப்படித்தான் பாலுமகேந்திராவும் உட்கார்ந்து இருந்தார்.. அது எப்படி என்று எனக்கும் தெரியவில்லை.. நான் உட்கார்ந்தால் கால் ஆட்டுவேன். கை ஆடும்.. அப்படியே அசையாமல் உட்கார்ந்து இருந்தார்... ஆனாவ் வயது காரணமாக சற்றே தளர்ந்து இருந்தார்....

அடுத்து பேச வந்த பாலுமகேந்திரா... நிறைய படித்தால் மட்டுமே திரக்கதை உத்தி சாத்தியம் என்று சொன்னார்.... அதனால் என் மாணவர்களுக்கு தினம் ஒரு சிறுகதை படித்து காட்ட  சொல்லுவேன்..

நான் ஒரு சாக்கடை பட் நான் தெரிந்தே பல விஷயங்கள் எனது படத்தில் செய்து இருக்கின்றேன்.....
அதுக்கு உதாரணமாக ஒரு படத்தில் இசை மேதை   மோசார்ட்டின் இசைக்கோப்புகளை கோவத்தில்  ஒருவன் கிழிக்கும் போது
(இயக்குனரின் சிம்ம உரை...)



ஐ மே பி ய வல்கர்  பர்சன், பட் மை மியூசிக் இஸ் நாட்.... என்ற வரியை சொன்ன போது அவர் உதடுகள் துடித்தது...

அதையே தனது வாழ்வை பொருத்தி சொன்னார்.... நான் வேண்டுமானால் வல்கரான மனிதனாக இருக்கலாம் ஆனால் எனது படைப்புகள் அப்படியானதுஅல்ல என்று  சொன்னார்....

வம்சி புதிப்பகத்தின் பவா செல்லதுரை தம்பதிகளின் ஒற்றுமையை வெகுவாய் புகழ்ந்தார்..

அடுத்து  இயக்குனர் மிஷ்கினின் நத்தை போன பாதையிலே ஹைக்கு மொழிபெயர்ப்பு புத்தகத்தை வெளியிட தமிழ் ஒளிப்பதிவாளர்கள்...மகேஷ்முத்துசாமி, கோபிநாத், ஏகாம்பரம்,யுத்தம் செய்கேமராமேன்,வைட்ஆங்கில்ரவி, போன்றவர்கள் வெளியிட்டனர்

ஓவியர் டிரஸ்க்கி மருது பேசுகையில் சமகால படைப்பாளிகளில் தனக்கு மிஷ்கின் மீது  பெரும் நம்பிக்கை இருப்பதாக சொன்னார்..

அடுத்த கவிதைகளை பற்றி பேச வந்த  எழுத்தாளர் பிரபஞ்சன் இறுக்கமான அரங்கை சற்றுஅசுவாசப்படுத்தினார்.. நன்றாக பேசினார்.. பல கவிதைகளை பேசி சிலாகித்தார்.. அவர் பேசி கேட்ட போது அந்த கவிதைகள் மிக சிறப்பாக இருந்தது. இன்னும் இரண்டு கவிதைகள் வாசிக்க கூடாதா என்ற ஏக்கம் இருந்தது...சக எழுத்தாளரான எஸ்ராவை மேடையில் நேருக்கு நேர் பாராட்டினார்...நாள் முழுவதும் எஸ்ரா சொல்லும் தகவல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று சொன்னார்.. அப்படி சொன்னது பெரிய விஷயம்...

இறுதியாக பேச வந்த  மிஷ்கின் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது இன்றைய நாள் மூன்று மழைநாளின் இரவுகளில் மொழிபெயர்க்கபட்ட புத்தகம் இது என்றும் அதற்கு உறுதுணையாக இருந்த பிரபஞ்சனுக்கும் தனது உதவியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்....


நன்றி உரையை தமிழ் ஸ்டுடியோ அருண் பேசினார்....




பதிவர்களில் நந்தா மற்றும் விழியன் முன்னமே வந்தார்கள்..லக்கி அதிஷா பின்பு வந்தார்கள்...
ஆடுளம் பேட்டைகாரர் ஜெயபாலன் அவர்களோடு பேசினேன்.. அவரோடும் மிஷ்கினோடும் எடுத்த படங்கள்   நேற்று மினிசாண்ட்வெஜ்ல் போட்டு விட்டேன்..




வெளியே வந்த போது நிறைய பேர் வழக்கம் போல கூடி பேசினாலும் எஸ்ராவோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது,.. நிறைய பேசினோம் இந்த தகவல்களை எல்லாம் சரளமாக ஒருமனிதனால் எப்படி சொல்ல முடிகின்றது என்ற பொறாமை எனக்கு அவரை பார்க்கும் போது எழுந்தது... நிறைய வாசிக்கவும் நிறைய படங்களை பார்க்கவும் அனுமதிக்கும் அவரது துணைவியாருக்கு நிரம்ப பொறுமை தேவை....


இதுக்குமேல் நின்றால் என் வீட்டில் கதவு திறப்பதில் சிக்கல் ஏற்படும்  பிரச்சனை கற்பனையாக என் மனதில் ஊசல் ஆடும் போதே விடைபெற்று எஸ் ஆனேன்.






பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..


குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்

9 comments:

  1. நிறைவான பதிவு. தமிழ் புத்தகங்களை அமெரிக்காவில் வாங்க ஏதேனும் வழி உள்ளதா?

    ReplyDelete
  2. பழைய போட்டோவை விட, இப்போது இளமையாகத் தெரிகிறீர்களே...

    ReplyDelete
  3. என்னுள்ளேதிருவண்ணாமலை நினைவுகளை கிளறும் பகிர்வு.புகைப்படங்கள் அருமை.

    ReplyDelete
  4. "...பாலுமகேந்திரா பற்றிய டாக்குமென்ட்ரி பிலிம் எடுக்க வேண்டும் அதனை யார் செய்தாலும் தனக்கு மகிழ்ச்சி என்று சொன்னார்..."

    சுமார் 2 வருடங்களுக்கு முன், பிரசாத் ஃபிலிம் அகெடமி மாணவர் மிக அருமையாக டாக்குமெண்டரி எடுத்துள்ளார். அதில் திரு பாலு மஹேந்திரா இது தன்னுடைய அதிகாரபூர்வமான ஆவணப்படம் என்று தான் கருத்துக்களையும்; கமல், இளையராஜா மற்றும் பலர் இந்த தலை சிறந்த இயக்குனரைபற்றியும் பல தகவல்களை பகிர்ந்துள்ளனர். படம் மிகவும் நன்றாக வந்துள்ளது.

    ReplyDelete
  5. Dear Mr. J

    Thanks many for posting my Ad. Kindly change "sharja uae" as "Sharjah, UAE"

    Regards

    Raj

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner