ஆல்பம்..
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா இன்று கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் விசாரிக்கப் பட்டு இன்று சிபிஐ அவரை கைது செய்து இருக்கின்றது... ராஜாவின் அண்ணன் மற்றும் இரண்டு அதிகாரிகளையும் சேர்த்து கைது வைபவத்தை செய்து இருக்கின்றது சிபிஐ.. செய்தியின் விவரத்தை சன் சொல்கின்றது.. கலைஞர் மவுனம் காக்கின்றது..அவரின் சொந்த ஊரில் வழக்கம் போல அரசு பேருந்துகள் நாசம் செய்யப்பட்டன.
==============
மத்திய அமைச்சர் கபில் சிபில் கொதிச்சு போயிட்டார்... எப்படி அமெரிக்க மாணவர்களின் காலில் கண்காணிப்பு கருவியை பொருத்தலாம் என்று வெகுண்டெழுந்து விட்டார்.. சென்னையில் பாஜக கட்சி கூட அமெரிக்காவின் இந்த செயலை வன்மையாக கண்டித்தது... ஆனால் அமெரிக்காவில் காலில் கண்காணிப்பு கருவியை கட்டி விட்டதுக்கு அரைடிரவுசரை கழட்டிக்கிட்டவங்க கொதிச்சு போனவங்க.. இங்க நம்ம தாய்மண்ல இருக்கறவனை 500 பேருக்கு மேல நாயை சுடுவது போல் சுட்டு சாவடிக்கறானுங்க... அதை கேக்க நாதியில்லை...ஓ ...ஒருவேளை மீனவர்கள் படிக்கவில்லை என்றதாலோ??? அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உதார் விட்டு இருக்கின்றார்.. பக்கத்துல இருக்கும் சின்ன தீவை கண்டிக்க துப்பு இல்லை....ஒரு வேளை மாணவர்கள் வட இந்திய மாணவர்கள் அல்லவா? அவர்களுக்கு போராடத்தான் அல்லது அந்த விஷயத்தை ஊதி சொல்ல என்டிடிவி மற்றும்டைம்ஸ்நௌவ் போன்றவை இருக்கின்றதல்லவா?
==================
கண்ணுக்கு எதிரில் ஒரு நாடே பெரிய போராட்டத்தை நடத்தி இருக்கின்றது..எகிப்து அந்த நாடு. ஒரு வார போராட்டம்...100 பேருக்கு மேல் பலி...அதிபர் பதவிகாலம் முடியும் வரை என் சேவை நாட்டுக்கு தேவை என்கின்றார்..காரணம் ஒற்றுமை.. அது சுட்டு போட்டாலும் நமக்கு வரப்போவதில்லை...
====================
மிக்சர்
பிறந்தநாள் பதிவுக்கு பலர் பேஸ்புக், பின்னுட்டங்களில் புகுந்துவிளையாடி விட்டார்கள்..நிறைய பேர் கைபேசியில் வாழ்த்து சொன்னார்கள். அந்த பதிவு நெகிழ்ச்சியாக இருந்ததாகவும்.. அந்த டுவிஸ்ட் நன்றாக இருந்தததாக சொன்னார்கள்..மிக்க நன்றி நண்பர்களே... நிறைய தம்பிகள் எனக்கு கிடைத்து இருக்கின்றார்கள்..ரொம்ப சந்தோஷம்.. உங்கள் வாழ்த்துக்கும் ஆசிர்வாதத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.===========
மத்திய மாநில அரசிடம் உயர்நீதி மன்றம் இரண்டு வாராத்துக்குள் விளக்கம் கேட்டு இருக்கின்றது... எதுக்கு தெரியுமா? 570 மீனவர்கள் இறக்கும் வரை நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்... ஏன் நடவடிக்கை இல்லை என்று கேள்வியால் சிக்கவைத்து இருக்கின்றார்கள்..ஜெபமேரிதாஸ் என்ற நபர் தொடுத்த பொதுநல வழக்குக்கு இப்படி ஒரு கேள்வியை உயர் நீதிமன்றம் கேள்வி கேட்டு இருக்கின்றது...
===============
கடந்த சாண்ட் வெஜ் நான் வெஜ் பற்றி கேள்வி கேட்டமைக்கு உங்கள் கருத்தை சொன்னமைக்கு நன்றி. அதில் ஒருவர் ரொம்ப யோக்கியமாக மாறி தனது நக்கல் புத்தியை காட்டி இருந்தார்... சரி எதுக்கு இப்ப அது... இருப்பினும் உங்கள் கருத்தை மிக அழகாய் சொல்லி இருந்தீர்கள்.. மிக்க நன்றி..
===============
விருகம்பாக்கம் நேஷனல் தியேட்டர் வரும் ஏழாம்தேதி திறக்கபடுகின்றது...போருர் பக்கம் இருக்கும் பலருக்கு இந்த பேம் தியேட்டர் நல்ல பொழுது போக்காக இருக்கும்.
================
நன்றிகள்..
ஓப்பனிங் இருக்கும் கம்பெனியில் வேலை செய்யும் நண்பர்கள் தொடர்ந்து மெயில் அனுப்புவது மிக்க மகிழ்ச்சி..... எந்த ஓப்பனிங்ககாக இருந்தாலும் அனுப்புங்கள்.. இரண்டு மூன்று வந்ததும் சேர்ந்து ஒரு பதிவாக போட இருக்கின்றேன்.
=====
இந்தவார சலனபடம்...
விஐபி படத்தில் வரும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்... இந்த பாடலில் இருக்கும் செட் அசத்தல் ரகம்... சென்னை தேவி தியேட்டரில் இந்த படம் பார்த்தேன். ரம்பாவின் முதல் காஸ்ட்யூம் செம அசத்தல்..தீண்டதே என்று பாடியபடி தேவியின் பெரிய திரையில் ரம்பாவின் இடுப்பு ஆட்டிக்கொண்டே கேமராவின் லெப்ட் டூரைட் போகும் போது தியேட்டரில் பயங்கர விசில்... கல்லூரி மாணவர்கள்.. தியேட்டரை ஒரு வழியாக்கிவிட்டார்கள்..ரம்பாவின் டான்சும் அந்த இளமையையும் ரம்பாவே பார்த்து பொறாமை பட வைக்கும். இந்த பாடலை பார்க்கும் போது நீண்ட நாளுக்கு பிறகு முன்னாள் கனவு கன்னி ரம்பா உங்கள் தூக்கத்தை கெடுக்க வாய்ப்பு இருப்பது உங்கள் ரசனை சார்ந்த விஷயமாக இருக்கும்.
==================
பார்த்ததில் பிடிக்காதது......
நம்ம வெஸ்ட் கேகேநகர் ஆர்டிஓ ஆபிஸ் கிட்ட ஒரு டாஸ்மார்க் இருக்கின்றது... ஒரு ஆள் ஒரு குவாட்டர் வாங்கி நடு ரோட்டில் குடித்து விட்டு போகும் வரும் வண்டிகளை ரகளை செய்து கொண்டு இருந்தான்..பெரிய கொடுமை என்னவென்றால் பக்கத்திலேயே ஒரு போலிஸ் பேட்ரோல் வாகனம் நின்று கொண்டு இருந்தது... ஏன் என்று கேட்க நாதியில்லை..ஒருவேளை சட்டம் தன் கடமையை செய்யும் என்று அவரும் இருந்து இருக்கலாம்.
===============
இந்தவார கடிதம்..
நண்பரே வணக்கம்
நான் உங்கள் தளத்தை தினமும் படிக்கும் வாசகன் இல்லை , ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை அப்டேட் செய்யும்போதும் , தளத்திற்கு வந்து மௌஸ் உபயோக படுத்தி மேலிருந்து ஒரு முறையும் ,கீழிருந்து ஒரு முறையும் மட்டும் பார்த்து விட்டும் செல்வேன் ,நான் உங்கள் தளங்களில் அதிகம் படிப்பது உங்களை பற்றி நீங்கள் எழுதியிருக்கும் "என்னை பற்றி" , மற்றும் உங்கள் தளத்தை பற்றிய விரிவாக்கமும் தான் , உங்களுடை ஸ்டைல் மிக அருமை ,
உங்களுடைய சினிமா மீதான காதல் மீது எனக்கு மிகுந்த மரியாதையை உண்டு , விரைவில் உங்கள் கனவு செயலுக்கு வர எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறான் ,
(ஜாக்கி சேகர் :
தம்பி , யாருப்பா நீ ? இவ்ளோ நல்லவனா இருக்கியே ? ஏன் இந்த பில்ட் அப் ? உனக்கு என்ன வேண்டும் ?, நீ சொல்ல வருவது தான் என்ன?,
நான் : உங்கள் mind வாய்ஸ் எனக்கு கேட்டுவிட்டது ?
நான் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் பார்த்தேன் , அந்த படத்தின் பெயர் powder , ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய அருமையான படம் , மனிதனிடம் உள்ள சக்தி யை பற்றிய படம் ,இதற்கு மேல் படத்தை பற்றி பில்ட் அப் வேண்டாம் , சிறந்த படைப்பு என்றுமே மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதால் , உங்களின் மூலம் அது சாத்தியம் என்பதாலும் இந்த கடிதம் .
Powder Poster
More at IMDbPro »
Powder (1995)
PG_13 111 min - Drama | Fantasy | Mystery - 27 October 1995 (USA)
6.2/10
Users: (11,316 votes) 138 reviews | Critics: 33 reviews
A young bald albino boy with unique powers shakes up the rural community he lives in.
Director:
Victor Salva
Writer:
Victor Salva
Stars:
Mary Steenburgen, Sean Patrick Flanery and Lance Henriksen
(என்னிடம் படம் இல்லை , கிடைத்தவுடன் உங்களுக்கு அனுப்புகிறான் ,நீங்கள் இணையத்தில் எங்காவது டவுன்லோட் செய்து தான் பார்க்க வேண்டும் )
(நான் அலுவலகத்தில் உள்ளபடியால் என்னுடைய வலை பூவிற்கு கூட இவ்வளவு மெனக்கெட்டு எழுதுவது கிடையாது ,ஏதோ உங்களுக்கு இவ்வளவு பெரிய கடிதம் (என்னை பொறுத்துவரை ) எழுதியிருக்கிறேன் )
*****************************
அன்பின் பிரபாகரன்... இந்த படம் பார்க்கவில்லை,, பார்த்தால் எழுதுகின்றேன்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
===============
இந்தவார நிழற்படம்..
சென்னை லஸ்கார்னர் அருகில் இருக்கும் குடிசை மாற்று அடுக்குமாடி குடியிருப்பின் நடுவில் இருக்கும் குப்பைகள்...
============
பிலாசபி பாண்டி
வாழ்க்கையில் தெரியம் இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்.. தற்கொலை செய்ய ஒரு தைரியம் வேண்டும் அல்லவா? சனியனே அந்த அளவுக்கு தைரியம் இருக்கும் போது நீ ஏண்டா சாவனும் கபோதி....
================
நான்வெஜ் 18+
80வயதை கடந்த மூன்று கிழவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள்... எல்லோரும்20 வருடத்துக்கு முன் சந்தித்து பிரிந்து தற்போதுதான் சந்திக்கின்றார்கள்..ஒரு பெரிசு சொல்லிச்சு..எனக்கு ஒரு கோடி பரிசு விழுந்திச்சு... அதனால் ஒரு சின்ன பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டேன்... அவ இப்ப வாந்தி எடுக்கறா... என்று தன் வலிமையை சொல்லிச்சு... ரெண்டாவது பெரிசு.. நானும் என்னை கவனிச்சிக்க வந்த நர்சை 5 வருஷத்துக்கு முன்ன கல்யாணம் செஞ்சிகிட்டேன்.. எனக்கு இப்ப ரெண்டு சின்ன சின்ன பசங்க இருக்காங்னு சொல்லிச்சு.. வெறுத்து போன மூனாவது பெரிசு நான் வேட்டைக்கு போனேன்.. குறி தவறாம இரண்டு கொக்கு சுட்டேன் ஆனா துப்பாகி வெடிக்கலை... சரி செத்த இரண்டு கொக்கை எடுக்கலாம்னு போனா புதரில் இருந்து வெளியே வந்த ஒரு இளைஞன் அந்த கொக்கை நான்தான் மறைஞ்சு சுட்டேன் என்னிடம் கொடுங்கள் என்று வாங்கி போய்விட்டான்...நானும் அவசரத்துல மடத்தனமா நாமதான் சுட்டு இருப்பேன்னு நினைச்சிட்டேன்.. வாட் ஏ ஷேம்?? இப்ப ரெண்டு பெருசும் அந்த சப்ஜெக்ட்டை பத்தி எதுவும் பேசலை..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
தம்பி.. ராசா கைது பற்றிய உனது கருத்து இன்று வராதோ என்று கூகிள் பஸ்ஸில் ஒரு சேட்டைக்காரர் பற்ற வைத்து உன்னை காமெடியாக்கிவிட்டார். என்றைக்காவது ஒரு நாள் அவருடன் தண்ணியடிக்கும்போது வாய்ப்புக் கிடைத்தால் பாட்டிலால் மண்டையில் ஒரு போடு போட்டிரு. கேட்டால் மதுவின் மயக்கம் என்று சொல்லிவிடலாம். அந்த சேட்டைக்காரரின் பெயர் தண்டோரா மணிஜி..!
ReplyDeleteமிகவும் சிறப்பாக இருந்ததது ஜாக்கி
ReplyDeleteபடிப்பதில் சுவாரஸ்யம் குறையாமல் எழுதும் உங்கள் எழுத்து பாணி சூப்பர்
அமெரிக்காவில் காலில் டேக் கட்டுவது இந்தியர்களுக்கு மட்டுமல்ல, தவறு செய்த எல்லோருக்கும்.
ReplyDeleteஇங்கே தவறுக்கு நேரடியான சிறை தண்டனை, அங்கே ஹவுஸ் அரஸ்ட் மாதிரி உண்டு, கண்காணிப்புக்கு அந்த டேக், ஏண்டா டேக் கட்டினன்னு கேட்பதுக்கு முன்னால், டேக் கட்டப்பட்டவன் என்ன தப்பு பண்ணான்னு கேட்கச்சொல்லுங்க!
*******
அமெரிக்கா போய் படிக்கிறவன் பணக்காரன், அவனுக்காக அரசியல் தண்டங்கள் பேசும், மீனவன் என்ன பணக்காரனா? அவனுக்காக பேச!
Anyway Raja arrest will make some impact in polling..I think so..
ReplyDeleteஈச்சங்காட்டு முயல் சூப்பர் சாங்...அந்த இசையமைப்பாளர் அதன்பின் ஆளைக்காணோமே!
ReplyDeleteCan you please include the full content in your feed, this will allow us to read the full contents in the google reader
ReplyDeleteமுன்னாள் மத்திய அமைச்சர் ராஜா இன்று கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் விசாரிக்கப் பட்டு இன்று சிபிஐ அவரை கைது செய்து இருக்கின்றது... ராஜாவின் அண்ணன் மற்றும் இரண்டு அதிகாரிகளையும் சேர்த்து கைது வைபவத்தை செய்து இருக்கின்றது சிபிஐ.. செய்தியின் விவரத்தை சன் சொல்கின்றது.. கலைஞர் மவுனம் காக்கின்றது..அவரின் சொந்த ஊரில் வழக்கம் போல அரசு பேருந்துகள் நாசம்
ReplyDeleteசெய்யப்பட்டன.
எல்லாம் கண் துடைப்பு நாடகம் தல.அடுத்து வரும் நாட்களில் இன்னும் பல சினிமாவே நடக்கும் பாருங்க . நல்ல பதிவு வாழ்த்துக்கள்
வழக்க்கம் போல் அருமை
ReplyDeleteநல்ல பதிவு வாழ்த்துக்கள்
ReplyDeleteROMBA NALLA PATHIVOO
ReplyDeleteநண்பர் ஜாக்கிஜி
ReplyDeleteவணக்கம் .
மீண்டும் ஒரு நல்லதொரு பதிவு .
நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் .
இந்த வன்கொடுமை சட்டம் என்று ஒன்று உள்ளதே அது எல்லோருக்கும் பொதுவானதா?
வன்கொடுமை சட்டம் என்றால் என்ன ?
எனக்கு தெரிந்த வரையில்
எவரும் அடுத்தவருடைய சாதியை சொல்லி அழைப்பதோ அல்லது கேவலமாக பேசுவதோ கூடாது. இல்லையா ?
அப்படி இருக்கையில் எல்லோரும் ஏன் & எப்படி பார்பனர்கள் என்று இந்த வலை பதிவில் எழுதுகிறார்கள் ?
குறுக்கே நூல் போட்டவர்கள் என்று சொல்ல முடிகிறது ?
இங்கே அந்த வன் கொடுமை சட்டத்திற்கு இடமில்லையா?
சட்டம் என்பது எல்லோருக்கும் பொது தானே ?
நன்றி
ஆனந்த்
பமாகோ,மாலி
rasa kaithu verum nadakam jaameeen + enquiry ieppdeyaa kalam ooteeeveduvatrkal . north side meenavanaga erutherundhal kural kodupanunga evan tmilan thana yaruum pasamathnuva. NADPUDAN NAKKEERAN
ReplyDeleteஅருமை
ReplyDelete