வீட்டு திண்ணைகள்.. (கால ஒட்டத்தில் காணாமல் போனவை..).நாகாரிக வளர்ச்சியில் நிறைய இழந்து வருகின்றோம்... அதில்  முக்கியமானது வீட்டின்  முன் புறத்தில் இருக்கும் தின்னைகள்... இப்போது கட்டப்படும் நகரத்து வீடுகளில் அந்த ஆப்ஷனே இல்லை...கிராமங்களிலும் ஒரு சில இடங்களில் கட்டும் வீடுகளில் திண்ணை வைத்து வீடு கட்டுவதே  இல்லை....கலைஞர்  கான்கிரீட் வீடுகள் கொடுக்கும் விளம்பர படம் தொடர்ந்து கலைஞர் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது.. அந்த வீடுகளில் சின்னதாக திண்ணையும் இருக்கின்றது.... அதை பார்த்தவுடன் எனக்கு பழைய ஞாபகங்கள் கிளறிவிட்டு விட்டது....

என் வீட்டிலும் சின்னதும் பெரிதுமாக இரண்டு திண்ணைகள் இருக்கும்.. விருந்தினர்கள் யார் வந்தாலும முதலில்  அவர்கள் வீட்டின் திண்ணையில் உட்கார்நது தண்ணீர் கொடுத்து இளைப்பாறி  பிறகு வீட்டின் உள்ளே வர அனுமதிப்பார்கள். அதுவே வேண்டாதவர்கள் என்றால் வீட்டின் வாசலில் இருக்கும் திண்ணை உட்காரவைத்து பேசி அனுப்பி விடுவார்கள்.....

எங்கள் வீட்டு திண்ணை எங்கள்  பகுதிகளில் கொஞ்சம் உயரமான இடம் என்பதால் மழை பெய்தால், அந்த திண்ணையில் இரண்டு குடும்பங்கள் மழை தண்ணீர் வடியும் வரை அந்த திண்ணைகளில்தான் அந்த குடும்பம் வாசம் செய்யும்... வீட்டில் இடம் இருக்காத போது வெளியூரில் இருந்து நிறைய பேர் வந்தால், பாய் தலையனை கொடுத்து திண்ணையில் படுத்துக்கொள்ள சொல்வார்கள்..

என் அத்தை வீட்டில் சின்னதும் பெரிதுமாக  இரண்டு திண்ணைகள் உண்டு.... அந்த திண்ணைகளில் இருக்கும் தூண்களை சுற்றித்தான்  பிடிக்கின்ற ஆட்டம் சிறு வயதில் விளையாடுவோம்.

தாயகட்டை  விளையாடவும், ஏழுகாய் விளையாடவும் சரியான இடம்...திண்ணைகள்தான்...  சின்ன திண்ணையாக இருந்தால் ஒரு பக்கம் கால் பூமியில் தொங்க விட்டுக்கொண்டு விளையாடுவது ஒரு பெரிய சுகம்...

சில குடும்ப பிரச்சனைகளின் திடிர் பஞ்சாயத்துக்கள் திடும் என்று அந்த திண்ணைகளில் நிகழும்...நாட்டமைகளாக அக்கம் பக்கத்தில் இருக்கும் பெருசுகள் செயல்படும்...


அந்த திண்ணைகளில் உட்கார்நது தான், எம்ஜிஆர் இந்த தேர்தலில் எவ்வளவு சீட்டு வாங்குவார்? என்பதில் இருந்து. யார் யாரோடு படுத்தார்கள், பக்கிரி வீட்டுக்கு இவ்வளவு பணம் எப்படி திடுதிப்புன்னு வந்தது என பல ஊர் கதைகள் பேசபட்ட திண்ணைகள் அவை... ஊரில் நடக்கும் அனைத்து விஷயமும் தேமே என்று இருக்கும் அந்த திண்ணைக்கு தெரியும்.

எங்கள் அத்தை வீடு ரோட்டிலேயே இருக்கும் என்பதால் மழைக்கு நிறைய பேர் ஒதுங்கி செல்லும் திண்ணைஅது...


(போட்டோ நன்றி இணையம்...) பல டைப்  திண்ணைகள் இருந்தாலும் இது மாதிரிக்கு..

சில நேரங்களில்     சொந்தக்கார இளைஞர்கள் சிலர் குடித்து விட்டு நேராக   அந்த பெரிய திண்ணைகளில் தஞ்சம் அடைவதும் உண்டு..சில நேரங்களில் உடைகள் நெகிழ்ந்து முக்கால் வாசி கவர்ச்சியில் தூங்குவார்கள்.. என் பெரிய அத்தை காலையில் வாசல் தெளிக்கும் போது வந்த பார்த்து விட்டு வாசலுக்கு தெளிக்கும் தண்ணீயை அவர்கள் மேல் ஊற்றிவிட்டு இனிமே இப்படி குடிச்சிட்டு வந்து படுத்தா ,வௌக்கமாறு பிச்சிக்கும் என்று கத்த....பாதி போதையில் எழுந்து போனவர்களும் உண்டு......

இரவு நேரங்களில் திண்ணையில் படுத்துக்கொண்டே கதை அடித்துக்கொண்டு தூக்கம் வராத இரவுகளில் நிறைய  பேசி இருக்கின்றோம்.. அந்த காலங்கள் ரொம்பவும் ரம்யமானவை....

தீபாவளி, பொங்கல் போன்ற திருநாட்களில் சாப்பிட்டு விட்டு  திண்ணையில் உட்கார்ந்து ரோட்டை வேடிக்கை பார்த்தபடி கதை பேசுவோம் ..

வெயில் படும்படி  இருக்கும் வீட்டு திண்ணைகளில் வற்றல், வடாம், சொத்துவத்தல், மிளகாய்தூள், இட்லிதூள் போன்றவை காய வைத்து அறைக்க இது போன்ற திண்ணைகள் பேருதவி புரிந்து இருக்கின்றன...


வெளியூரில் இருந்து  நடுராத்திரியில் சூழ்நிலைகாரணமாக சொந்தக்கார வீட்டுக்கு வருபவர்கள் புகலிடம் அந்த ரோட்டோர வீட்டு திண்ணைகள்தான்..  ஊருல எவன் இதுவரைக்கு  லாட்ஜ்ல ரூம் எல்லாம் போட்டு இருக்கான் சொல்லுங்க.....???


எங்க இந்த நேரத்துக்கு போனா...
  நடுராத்திரியில் அவுங்க வீட்டுக்கு போய் சேரனும்...
அர்த்த ராத்திரியில போய் அவுங்கள எழுப்பனுமா? என்று மனைவி லாஜிக்கா கேள்வி எழுப்பினால்....???

சாமியார் வீட்டு திண்ணை இருக்கு.. கருக்கல்ல எழுந்து அவுங்களை பார்த்துட்டு சேதி சொல்லிட்டு சுருக்கா  வந்துடறேன் என்பதாய் மனைவிக்கு பதில்  சொல்லிவிட்டு போவார்கள்.....

என் அத்தை காலையில்   வாசல் தெளிக்க கதவை திறந்தால், யாராவது  ஒரு வழி போக்கனோ அல்லது  ஊரில் இருக்கும் யாராவது ஒருவரின்   சொந்தக்காரரோ  அவர் வீட்டு திண்ணையில் படுத்து இருப்பார்.....

சிலர் அடுத்தவன் வீட்டு திண்ணையில் படுத்து இருப்பதால் கருக்கலில் எழுந்து சென்று விடுவார்கள்..

ஆனால் சிலர் அசதியில் படுத்து விடுவார்கள்..

என் பெரிய அத்தை..

தே யாரது படுத்து இருக்கிறது??

நான் காசம்பூ சகலைங்க... நாகபட்டினத்துக்கு போயிட்டு இங்க வந்தேன் இரண்டு மணிக்குதான் கடலூர் பஸ்ஸ்டாண்டில் பஸ்காரன் இறக்கிவிட்டான்.. என்று சொல்லும் போதே  வந்தவனை சுற்றிய உறவுகள் எப்படியும் தெரிந்தவர்கள் என்பதால் உங்க ஒரகத்தி பொண்ணு குறிஞ்சிப்பாடியில கட்டிக்கொடுத்தாங்களே...போனவாட்டி வந்தப்ப கூட மாசமா இருந்தா குழந்தை பொறந்துடுச்சா? என்ன குழந்தை? என்பதாய் வாசலுக்கு தண்ணி தெளித்து கோலம் போடுவதை விட்டு விட்டு விசாரிப்பு கதை சுவாரஸ்யம் பெறும்....

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் திண்ணைகளில்  உட்கார்ந்து சுபநிகழ்ச்சி பத்திரிக்கைகளை தாம்பால தட்டில் வைத்து பெயர் எழுதி வெற்றிலை பார்க்கு வைத்து  அவசியம் குடும்பத்துடன் வரவேண்டும் என்று சொல்லும் வார்த்தைகளையும், நம்ம பொண்ணு கல்யாணம் இது.. ஜமாய்ச்சிடலாம் என்ற வாக்கியங்களையும் சலிக்க சலிக்க கேட்ட திண்ணைகள் இன்று தேட வேண்டியதாகிவிட்டது...

எழுபதுக்கு மேல்  வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டிக்கு சுயநினைவு தப்பி விட்டால் வீட்டின் உள்ளே இருந்து திண்ணைக்கு டிராண்ஸ்பர் செய்வார்கள்...பொதுவாக ஓட்டுவீடுகளில் திண்ணை அவசியம் இருக்கும்......


இப்படி பல சிறப்புகளை உள்ளடக்கிய திண்ணை வளரும் தலைமுறைக்கு  தெரியாமலேயே போய் விட்டது....பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..

பிடித்து இருந்தால் தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் மறக்காமல் ஓட்டு போடுங்கள்...

22 comments:

 1. திண்ணைத இப்போது மறைப்பு வச்சு வாடகைக்கு விட்டாச்சு

  ReplyDelete
 2. மிக்க நன்றி லட்சுமி... இப்போது திருத்தி விட்டேன்... மூணு சுழி இன்தான் போட்டேன்... இணையத்துல தின்னைன்னு அடிச்சி போட்டோ தேடின போது பல இடத்துல இரண்டு சுழி போட்டு இருந்த காரணத்தால் நான் மாத்தி தொலைஞ்சேன்.. காலையில செம ஆப்பு..

  ReplyDelete
 3. திண்ணைகள் பல கதைகள் கூரும் தென்னைகள்

  ReplyDelete
 4. நல்ல பகிர்வு தல! ஊருக்கு போய்தான் பாக்கணும்! அவை இப்போ இருக்குமோ?

  ReplyDelete
 5. அருமையான திண்ணை நியாபகம் எங்கள் பாட்டி வீட்டில் பெரிய திண்ணை உண்டு அன்புடன்
  நெல்லை பெ. நடேசன்
  அமீரகம்

  ReplyDelete
 6. ஒரு பெருமூச்சு விட்டுக்க வேண்டியதுதான் ...

  ReplyDelete
 7. திண்னைகள் உறவு பாலமாகவும், வில்லங்கங்களின் பிறப்பிடமாகவும் இருந்தவை. இப்போது அருங்காட்சியக பொருளாகி விட்டது. நல்ல அலசல்.

  ReplyDelete
 8. // காலையில செம ஆப்பு..//

  ஒனக்கு வேணும்டி. நாங்க சொல்லவந்தா நாற அடிப்பல்ல. இப்ப வாங்கிக்க. ! :))))

  ReplyDelete
 9. அருமையான நினைவு மீட்டல்.. நாம மட்டும் இப்பவும் திண்ணை வைத்திருக்கிறோம்(நம்ம blog பெயர்) ;)

  ReplyDelete
 10. ஆமா... அண்ணா.... வருத்தமான விஷயம்தான். எங்கள் ஊரில் எல்லார் வீட்டிலும் திண்ணை என்ற ஒன்று இருக்கும். இப்ப கட்டும் வீடுகளில் அது காணப்படவில்லை என்பது வருத்தமான ஒன்றுதான்.

  ReplyDelete
 11. கண்ணீரை வரவழைத்து விட்டீர்களே,தல?இருபத்தாறு ஆண்டுகளாய் விட்டது!நான் பரவாயில்லை.ஒன்றரை தசாப்தங்களாய் என் சகோதரிகள் திண்ணையின்றி!.

  ReplyDelete
 12. //உடைகோவணமுண்டுறங்கப்புறந்திண்ணையுண்டுணவிங்
  கடைகாயிலையுண்டருந்தத்தண்ணீருண்டருந்துணைக்கே
  விடையேறுமீசர்திருநாமமுண்டிந்தமேதினியில்
  வடகோடுயர்ந்தென்னதென்கோடுசாய்ந்தென்னவான்பிறைக்கே//

  பட்டனத்தார் காலத்திலேயே புகழான ; பாடல் பெற்ற திண்ணைகளைப் பூட்டி விட்டோமே!
  ஈழத்திலும் பல கதைகள் சொல்லும் திண்ணைகள் இருந்தன . ஓட்டு வீடென்றல்ல ஓலை வீட்டிலும்
  திண்ணைகள் இருந்தன.

  ReplyDelete
 13. மறந்துபோன வார்த்தை இல்லையில்லை இடம்..
  ஞாபகபடுத்தியதற்கு நன்றி..
  http://www.sakthistudycentre.blogspot.com/

  ReplyDelete
 14. தொலைந்துபோனவைகள் மீண்டும் ஞாபகமாக. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 15. திண்ணைவீடுகள்...நல்ல பதிவு.

  இங்கும் கிராமங்களில் கூட காண்பது அரிது.

  ReplyDelete
 16. நல்ல பதிவு.

  இன்னமும் கோவைப் பகுதிகளில் திண்ணை அல்லது சிட்- அவுட் வைத்து வீடு கட்டுகிறார்கள்.

  எங்கள் வீட்டில் கூட வைத்திருக்கிறோம். நாங்கள் அதிகமாகப் புழங்கும் இடம் எங்கள் வீட்டின் 14-12அடி சிட் - அவுட் தான்.

  ReplyDelete
 17. நல்ல பதிவு ஜாக்கி. திண்ணை மட்டுமல்ல, இன்னும் பலவற்றை இழக்கப் போகிறோம். முழுக்க முழுக்க சில கார்பரேட் கம்பெனிகளின் கையில் மொத்த வாழ்வையும் ஒப்படைத்து விட்டு வாழப் போகிறோம்.

  ReplyDelete
 18. மிக்க நன்றி இந்த பதிவுக்கு நெகிழ்ச்சியாக பின்னுட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்...

  இந்த சென்னையும் ஒரு காலத்தில் கிராமமாக இருந்து நகரமானதுதான், திருவல்லிக்கேணி மற்றும் மயிலாபூரில் இது போல வீடுகளை பார்த்து இருக்கின்றேன்.


  யோகன் என் வீடு கூரை வீடுதான் அதிலும் இரண்டு தின்னைகள் வைத்து இருந்தோம்..

  மிக்க நன்றி அனைவருக்கும்..

  ReplyDelete
 19. குடிசை வீடுகளில் இன்னமும் திண்ணைகள் இருக்கின்றன. (ஏழைகளின் பால்கனி).
  மக்கள் மனசு சிறுத்ததால் திண்ணைகள் காணாமல் போய்விட்டன

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner