தமிழக போலிசிடம் மாட்டினால் என்ன செய்யவேண்டும்????



சார் நான் கஞ்சா விக்கறவன்...
ஓடிப்போயிடு...
ரெண்டு ரேப் நாலு கொலை பண்ணி இருக்கேன்..
நீயும் ஓடிப்போயிடு
சார் நான் அபின் ஹோல்செல் டீலர்..
நீயும் ஓடிப்போயிடு...

இப்படிப்பட்ட பெருங்குற்றம் செய்த ஆட்களுக்கு அட்வைஸ்செய்வதல்ல இந்த பதிவு.. சாமனிய நடுத்தர மக்களுக்கான பதிவு இது...



அது என்ன  சாதாரண நடுத்தரம்...? சொல்றேன்... இப்ப சென்னையில் பல இடங்களில் போலிஸ் சோதனை நடைப்பெற்றுக்கொண்டு இருக்கின்றது.. இது  நல்ல விஷயம்தான்... அது போலதான் தமிழகம் முழுவதும் நடக்கும்.....

இந்த போலிஸ் வாகன சோதனையின் போது எப்படி தமிழக போலிசிடம் நடந்து கொள்ளவேண்டும் என்பதை சொல்கின்றேன்.. பலருக்கு இது உபயோகமாக இருக்கும்....

ஒரு வாடகைகார்ஓட்டுனருக்கு, ஒரு லாரி டிரைவருக்கு, போலிசிடம் எப்படி  நடந்து கொள்ள  வேண்டும் என்பது தெரியும்.. ஆனால் உங்களுக்கு.....?? அதுக்குதான் இந்த பதிவு....

உங்களிடம் எல்லாம் சரியாக இருக்கின்றது... ஆனாலும் கீழே நான் சொன்னபடி நடந்து கொள்ளுங்கள்... அதுதான் புத்திசாலிதனம்.. இல்லைசார் நான் வணங்காமுடி அப்படியா? சந்தோஷம்....நீங்க இத்தோட அப்பிட் ஆகிக்கோங்க..

நீங்கள் வாகனத்தை செலுத்திக்கொண்டு இருக்கின்றீர்கள்... பொதுவாக  தமிழக போலிஸ் சாலை வளைவுகளில்தான் வீற்று இருப்பார்கள்...

வளைவில் திரும்பும் போது திடிர் என்று கிருஷ்ணபரமாத்மா போல காட்சி கொடுத்து தடை ஏற்படுத்துவார்கள்..

நீங்கள் அவர்களை கவனித்து வண்டியை நிறுத்திவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை... பட் நிறுத்தாமல் கொஞ்சம் தள்ளி வண்டி நிறுத்தினால்  உங்கள் இருசக்கர வாகன பில்லியனில்   சனியும் பயணித்து இருக்கின்றார் என்று அர்த்தம்...

அதுக்கு செம ஓழ்பாட்டு கிடைக்கும்... ஏன்டா வளையற  இடம்தானே எதுக்கு இவ்வளவு வேகம்...

சார் 30கீலோமீட்டாதான் வேகத்துல வந்தேன்..

அப்புறம் எதுக்கு  தள்ளி நிறுத்தினே...???

சார் உங்களை கவனிக்கலை....

கவனிச்சு ரோட்டுல வண்டியை ஓட்டனும்..ரோட்டுல நீ மட்டுமா வண்டி ஓட்டற?? எத்தனை லட்சம் பேரு ஓட்டறாங்க???

நீ எந்த ஊர்???

கடலூருங்க....

அந்த ஊர்ல இப்படித்தான் வண்டி  ஓட்டுவியா???

இப்படி பேச்சு நீண்டுகிட்டு போகும்...

போலிஸ் வண்டியை நிறுத்த சொன்ன.... பேச்சை குறைச்சிட்டு அவுங்க கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லனும்.. இது ரூல் நம்பர்1.. நோட் பண்ணிக்குங்க....


வண்டியை மறிச்சதும் சட்டுன்னு வண்டி விட்டு கிழே இறங்கிடனும்... இது ரூல் நம்பர் 2... நான்தான் முன்னேயே சொன்னேன் அல்லவா?? எதிரில் இருப்பது கடவுள்... அவர்களுக்கு மரியாதை ரொம்ப முக்கியம்....

அது கொஞ்சம் கொறைஞ்சாலும் நீங்க செத்திங்க..

நல்ல  கோடைவெயில் நீங்கள் கண்ணுக்கு குளிர் கண்ணாடி  அணிந்து இருக்கின்றீர்கள்...போலிஸ் உங்களை நிறுத்தி விட்டது... உடனே வண்டியை விட்டு இறங்கி கூலிங்கிளாசை அவிழ்த்து பாக்கெட்டில் போட்டுக்கொள்வது சாலச்சிறந்தது என்பது என் கருத்து....

பாஸ் என்கின்ற பாஸ்கரன் பார்த்து இருப்பீர்கள்.. கடன் வாங்க போகும் போது கண்ணாடி அணிந்து வரும் ஆர்யாவிடம் கண்ணாடியை கழட்டு உன்பேச்சுல ஒருதிமிர் தெரியுதே ....என்ற டயலாக் நீங்க மறந்து இருக்க வாய்ப்பு இல்லை...

தமிழ்நாட்டில் தமிழ்வாணன் ,லேனாதமிழ்வாணன் இருவர் தவிர வேறு யார் கருப்பு கண்ணாடி போட்டு எதிராளியிடம் பேசினாலும் திமிர்காரன் என்ற பட்டம் எளிதில் கிடைத்துவிடும்....

சமீபத்தில் அந்த பட்டத்துக்கு சொந்தமான பிரபலம் இயக்குனர் மிஷ்கின்.....
பாரு இந்த கருப்பு  கண்ணாடியை அவுத்து  பாக்கெட்டில் வைக்க நான் எவ்வளவு உதாரணம் சொல்ல வேண்டி இருக்கு பாருங்க....கருப்பு கண்ணாடியை அவுத்து பதுசா பாக்கெட்டில் வைப்பது ரூல் நம்பர் 3......

உங்களிடம் எல்லாம் இருந்தாலும் நீங்க அவசரமாக போகவேண்டும் என்றால் கை கட்டி பேசுவது வெகு சீக்கிரத்தில் அந்த இடத்தை விட்டு அகல உதவும்...இது ரூல் நம்பர் 4....

கேட்கும் கேள்விக்கு திமிராக பதில் சொல்ல கூடாது... பேச்சில் தன்மை கொஞ்சம் மரியாதை மிக்ஸ்செய்து பேசவேண்டும்....அது ரூல் நம்பர்..5..

போலிஸ் செக்கிங்கில்  நிறுத்தபட்டு பிரச்சனை ஏற்ப்பட்டால்  அதாவது இன்ஷுரன்ஸ் டேட் பார் ஆகிவிட்டது என்று தெரிந்து பைன் போடபோகின்றார் என்று தெரியும் போது எனக்கு வட்டம் ,மாவட்டம் தெரியும்.. எங்க மாமா மாம்பலம் எஸ்ஐ, எனக்கு ஒன்னு விட்ட சித்தப்பா அவடி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் என்று சொல்லிஉதவியை நாடுபவர்கள் நாடலாம்...ஆனால்... மறித்த உடன் ஆவடி இன்ஸ்பெக்டர் எங்க அண்ணன் என்றோ... அல்லது 34 வட்ட செயலாளர் வண்டு முருகன் மச்சினி மகன் என்று ஆரம்பித்தீர்கள் என்றால்.. உங்கள் வண்டி சாவி பிடுங்கபட்டு யார் பேரை சொன்னிங்களோ.. அவர் போன் செய்தால் ஒழிய அல்லது நம்பிக்கை ஏற்படுத்தினால் ஓழிய உங்கள் வண்டி ஒரு அடி கூட நகராது...

இது எல்லாம் நான்  பார்த்தது....

இப்படித்தான் என் வண்டியை செக் பண்ணும் போது ஒரு வட்டத்தின் மகன் மாட்டிக்கொள்ள.. யோவ் ஏட்டய்யா... பையனை வண்டியை ஸ்டேஷன்ல வந்து எடுத்துக்க சொல்லு என்று கண் எதிரே அந்த மாவட்டத்தின் வண்டியை ஒரு ஏட்டு ஓட்டிக்கொண்டு போனார்....

சில நேரத்தில் உங்கள் மாமா வட்டசெயலாளராக இருக்கலாம்.. அப்போதுதான் எதாவது சின்ன வீட்டுக்கு போய் சட்டையை கழட்டி ஆணியில் மாட்டி மேட்டருக்குக்கு தயார் ஆகும் போது ,  உங்கள் மாமாவே போனை ஆப் செய்து விட்டு களத்தில் இறங்கினால் அதோ கதிதான்.... அதனால் வாயை கொடுத்து சு....தை புண்ணாக்காமல் இருப்பது ரூல் நம்பர் 6...

அதே போல் ஹெல்மெட் இல்லாமலோ அல்லது செல்போன் பேசிக்கொண்டோ வாகனம் ஓட்டி பிடிபட்டுவிட்டால்....ஒரு பத்து நிமிடத்துக்கு மேல் பெரிய அதிகாரி பாடம் நடத்திவிட்டு.. பைன் போட்டா எப்படியும் 500ரூபாய் ஆவும் ஏட்டய்யாகிட்ட 100ரூபா கொடுத்துட்டு போ.. என்று சொல்வார்கள்.... அதை முன்னாடியே வாங்கி அனுப்பினா என்ன? என்று உங்களுக்கு தோன்றும்....

வாத்தியார்  கஷ்டபட்டு தொண்டை கிழிய லெக்சர் கொடுக்கும் போது நீங்கள் குறட்டை விட்டு தூங்கி இருக்கலாம் அல்லது அவர் எதிரிலேயே கிளாஸ் விட்டு வெளியே போய் இருக்கலாம்.. அந்த பாவம் உங்களை துரத்தி இன்ஸ்பெக்டர் கொடுக்கும் லெக்சர்  மூலம் நிறைவேறும்....

சோ எனக்கு தெரிந்து ரூல்களை உங்களிடம் சொல்லிவிட்டேன்... உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்..

எல்லாத்தை விட முக்கியமான விஷயம்.. நீங்கள் படித்தவர் போல காட்டிக்கொண்டு விட்டால் அவ்வளவுதான்...

பெரிய பிடுங்கி மாதிரி பேசற..ங்கோத்தா இன்சூரன்ஸ் டேட் பார் ஆயி வண்டி ஓட்டறே என்று செம பாட்டு கிடைக்கும்....

சார் என்கிட்ட எல்லாம் சரியா வச்சி இருக்கேன்... அப்பயும் இப்படித்தான் கேள்விகேட்பாங்களா?, உங்களுக்கு நேரம் நல்லா இருந்தா அனுப்பிடுவாங்க... அப்படி இல்லைன்னா.. ஸ்பிடா வந்தேன்னு சொல்லுவாங்க.. அதுக்கு தண்டம் அழுதுட்டுதான் போய் ஆகனும்...

 சரி  உங்க வண்டியை நிறுத்தி செக்பண்ணா என்ன செய்விங்க...ஜாக்கி...

வண்டியை ஓரம் கட்டி நிறுத்துவேன்..
கருப்பு கண்ணாடியை கழட்டி முதலில் பாக்கெட்டில் போட்டு விட்டு, பர்ஸ் திறந்து அவர்கள் கேட்கும் முன் லைசென்ஸ் காண்பிப்பேன்.. அதை பார்த்து விட்டு போக சொல்லிவிடுவார்கள்..

உங்களுக்கு ஏழரை சனி பிடித்து இருந்தால்.. பிரண்ட்ஸ் ஆப் போலிஸ் என்று சில தேவாங்குகள் போலிசோடு ஒரு சின்ன கழி வைத்துக்கொண்டு போலிஸ் அக்காடமியில் டிரெயினிங் எடுத்து அக்னிநட்சத்திரம் பிரபு போல நினைத்துக்கொண்டு உங்களை படுத்தி எடுத்து விடுவார்கள்.. இன்ஸ்பெக்டர் அனுப்பினாலும்...அவர்கள் வலுக்கட்டாயமாக அட்வைசும் செய்து அனுப்புவார்கள்...

ஆனால் நல்ல பல போலிஸ்காரர்கள் இருக்கின்றார்கள். மிக மரியாதையாக நடத்துபவர்கள் இருக்கின்றார்கள்.... பட் நல்ல போலிஸ்காரர்களை விட கெட்ட போலிஸ்காரர்கள்தான் நினைவில் இருக்கின்றார்கள்..என்ன செய்ய..


செக்கிங்கில் கார்கள் மட்டும் எப்போதும் மாட்டுவது இல்லை ...தீவிரவாதிகள் ஊடுருவல் என்றால் மட்டும் கார்கள் செக் செய்யபடுகின்றன...ஒரு இருசக்கரவாகனத்தை நிறுத்தினாலோ அல்லது இரண்டுக்கு மேற்ப்பட்டதை நிறுத்தினாலே டிராபிக் ஏற்படுவதில்லை.. ஆனால் மூன்று காரை வரிசையாக நிறுத்தினால் டிராபிக் ஏற்ப்பட்டுவிடும்...இது ஒரு முக்கியகாரணமாக எனக்கு படுகின்றது..


இரண்டாவது காரணம்.... காரில் எதாவது ஒரு மாவட்டம் உட்கார்ந்து இருக்குமோ என்ற பயமும் காரணமாக இருக்கலாம்..


இறைவா ஆசி கொடு ....சீக்கிரம் கார் வாங்க வேண்டும்...

புகைபடங்கள் இணையம்...நன்றி ....இந்து..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..


குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

33 comments:

  1. ஜாக்கி,

    அப்படியே வரிக்கு வரி வழி மொழிகிறேன்.
    இறங்கி நாம போலிச சத்தாய்ச்சா அன்னைக்கு நம்ம பொழப்பு ரோட்டுல தான்.

    மரியாதையா பதில் சொன்னா விட்டுவிடுவார்கள்..

    ReplyDelete
  2. கணேஷ் நீங்க சொல்லறது உண்மைதான்.. சரிங்க ஆபிசர்ன்னு நிக்கறது நல்லது....

    ReplyDelete
  3. மங்களூர் வந்திருங்க இந்த எழவு எதும் இல்லை

    ReplyDelete
  4. இவனுங்க, டிராபிக்கை மீறி போற மாநகர போக்குவரத்தை கண்டுக்கமாட்டானுங்க.நம்ம மாதிரி இழிச்சவாயிங்களுகிட்டத்தான் இதல்லாம் பண்ணுவானுங்க. NOC certificate (Pondycherry Regd), helmet, Insurance, Black sticker இப்படியெல்லாம் கேட்டு எப்படியும் கொறஞ்சது ரூ.100 பாக்காம விடமாட்டனுங்க.

    ReplyDelete
  5. //இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.//


    அறிமுகடுத்துறதுன்னா என்னண்ணே!

    //பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.//


    இதல்லவா பிரச்சாரம்!


    //எப்படி தமிழக போலிசிடம் நடந்து கொள்ளவேண்டும் என்பதை சொல்கின்றேன்//


    இத்தன பண்றதுக்கு பேசாம சுடிதாரும் ஹெல்மெட்டும் போட்டுகிட்டா எந்த நாயும் புடிக்காதே!

    ReplyDelete
  6. என்னோடது பாண்டிச்சேரி பதிவு வண்டி. no objection certificate இல்லாததினால் ஒவ்வொரு சிக்னலிலும் தண்டம் அழ வேண்டியிருக்கு. பாண்டிச்சேரியில் இந்த சர்ட்டிபிகேட் வாங்க Rs.5000 to 10,000 லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.

    ReplyDelete
  7. மாத கடைசியில் வந்து இம்சிப்பானுங்க. நான் எங்காவது வெளியில் போனால் வீட்டுக்கார அம்மா, குழந்தைகளை எல்லாம் வண்டியில கூட்டிக்கிட்டு குடும்பத்தோட போவேன். இப்படி போனா செக்கிங் பன்றது இல்ல. ஆனா எந்த ரெக்கார்டும் வைத்திருப்பதில்லை. இப்படியே தப்பிச்சிகிட்டு வரேன் என்னிக்கு வசமா மாட்ட போறேனோ தெரியலை.

    ReplyDelete
  8. போலீஸ் என்றால் காவல்க்காரன் என்று தானே அர்த்தம் ? பொறுப்பை அதிகாரமாக மாற்றிக்கொள்ளும் 'அலுவலர்கள்' (அதிகாரிகள் அல்ல) இருக்கும் வரை ...ம், என்ன சொல்ல? இந்தியாவில் மக்களுக்கான அரசு வருவது எந்நாளோ ?

    ReplyDelete
  9. ஜாக்கி அண்னே...உங்கட்ட இருந்து எதிர்பார்த்த பதிவு இது, வழக்கம் போல் அற்புதம்...நீங்க தலை கவசம் அணிவதில்லையா? - அருண் சொக்கன்

    ReplyDelete
  10. appadi நிற்காமல் பேசினால் ஒன்றும் நடக்காது ஜாக்கி.. நான் இது வரை எவனிடமும் அபப்டி நின்றது இல்லை.. நம் மேல் தப்பு இல்லை என்றால் நான் நிச்சயம் தட்டிக் கேட்பேன். இதுவரை எவனும் என்னை ஏதும் செய்ததில்லை.

    ReplyDelete
  11. appadi நிற்காமல் பேசினால் ஒன்றும் நடக்காது ஜாக்கி.. நான் இது வரை எவனிடமும் அபப்டி நின்றது இல்லை.. நம் மேல் தப்பு இல்லை என்றால் ****நான் நிச்சயம் தட்டிக் கேட்பேன்****

    //itharkku thaan intha pathivae..

    ReplyDelete
  12. "appadi நிற்காமல் பேசினால் ஒன்றும் நடக்காது ஜாக்கி.. நான் இது வரை எவனிடமும் அபப்டி நின்றது இல்லை.. நம் மேல் தப்பு இல்லை என்றால் நான் நிச்சயம் தட்டிக் கேட்பேன். இதுவரை எவனும் என்னை ஏதும் செய்ததில்லை."
    கேபிள் ஜி சொல்வது நிச்சயம் உண்மை.அவர்களிடம் பயந்தது போல் பேசினால் ஏயிட்து விடுவார்கள்.ஆங்கிலத்தில் பேசினால் சுலபமாக தப்பிக்கலாம்.

    ReplyDelete
  13. நன்றி நண்பரே இதுவரை யாரும் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  14. இப்படித்தான் ஒருநாள் கார் ஐ ஒட்டி கிட்டே செல் லு ல பேசினப்போ ஓர் போலிசு என்னை புடுகிகிச்சு . நானும் சமர்தியாமா போலிசு vip எல்லாம் கூப்பிட்ட அந்த போலிசு யார் கிட்டயும் பேச மாட்டேன் சொல்லுச்சு அப்புறம் முன்று அயேரம் கேட்டுச்சு படி படிய கீழ இறங்கி இரு நூறு வரதுக்குள்ள ஒரு மணி நேரம் ஆச்சு .

    ReplyDelete
  15. சிக்குன டைம் பத்தி யும் கவலை கூடாது

    ReplyDelete
  16. 1. மிக முக்கியமாக வார்த்தைக்கு வார்த்தை சார் சார் என்று சொல்ல வேண்டும்.
    2. அவராக amount என்ன என்று சொல்லும் வரை கையை கட்டி நிற்க வேண்டும்.

    என்னுடய அனுபவத்தில் ஒரு முறை எல்லாம் சரியாக இருப்பினும், கடைசியில் lane மாற்றி ஒட்டியதாக கூறினர்.

    Bad Traffic Police = வழிபறி கொள்ளை

    ReplyDelete
  17. பின்னுட்டம் இட்டு அனைவரது அனுபவங்களையும் பதிவு செய்தமைக்கு நன்றி....

    ReplyDelete
  18. முக சவரம் செய்யாமல் வாகனம் ஓட்ட கூடாது என்றும் ஒரு சட்டம் இருப்பதாவும் கேள்வி.

    போலீஸ்ஸாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டுடை ஒழிக்க முடியாது.

    ReplyDelete
  19. அரு​மையாண பதிவு....

    இவர்கள் எல்லாம் வானில் இருந்து பிற்நத ​தேவ தூதுவர்கள்... மிக மிக மரியா​தையாக ஒட்டகம் ​போல் முது​கை வ​லைந்து குழகும்பிடு ​​போட​வேண்டும் இல்லாவிட்டால்... அனுபவ "பட்ட" வனுக்கு ​தெரியும் ​வேத​​னை!

    இதில் ​சில சமயம் ​செக்கிங்கு அபிசருங்க டிராபிக்ல நிக்கிற வண்டி சாவிய புடுங்கி(??) வண்டிய ஒரம் கட்டச்​சொல்லுவாங்க...

    மனித​னை நாய்க​ளை விட ​கேவலமாக நடத்தும் விதத்​தை ஒரு நாள் காவல்நி​லையம் ​சென்று பார்த்தால் ​தெரியும்/வயிறு பற்றி எரியும் (விதிவிலக்காக மிக மிக அபூர்வமாக இந்த கூடி கும்மியடிக்கும் கூட்டத்தில் அபூர்வ மனிதர்களும் உண்டு)

    என்று மாறு​​மோ இது​போல் நில​மை

    மிகமிக அரு​மையாண பதிவு...

    அல்லக்​கை,​​​பொறுக்கி, அரசியல்வியாதி அல்லது லஞ்சம் ​பெருச்சாளி ​போன்ற மகான்களிடம் எந்தவித உற​வோ ​தொடர்​போ இல்லாதவர்கள் இந்த பதிவுபடி நடந்து தங்க​ளை "​தேவதூதுவர்"களிடமிருந்து காப்பாற்றிக்​கொள்ளுங்கள்... இவர்களிடம் எதிர்தது மட்டும் ​பேசிவிடாதீர்கள்..

    ReplyDelete
  20. evalavo pannitom, itha panna matomah enna ;)

    ReplyDelete
  21. ஜாக்கி!நீங்க சொன்னமாதிரி நல்ல போலிஸ்களும் இருக்கிறார்கள்.வழிப்பறி திருடன்களால் இவர்கள் அமுங்கிப் போய் விடுகிறார்கள்.

    ஒரே வழியில் பயணிப்பவராக இருந்தால் நட்புடன் பேசியும்,சிரித்து வைத்தும்,அவசரத்துக்கு 50,100 கடன் கொடுத்தும் கூட தப்பிக்க வழிகள் இருப்பதை சென்னை பயணித்தில் கண்டேன்.

    ReplyDelete
  22. ஆமாம் ஜாக்கி, ரொம்ப விளக்கமா வழிகள் சொல்லிக் கொடுத்திருக்கீங்க.. நன்றி! அப்படியே ஒரு மாமூல் ரேட் லிஸ்ட் சொன்னா நல்லா இருக்கும் :-)) (eg: ஹெல்மட் இல்லை: ரூ 50, ஓவர் ஸ்பீட்: 100, நோ லைசென்ஸ்: 200)..

    <<>>

    உங்களை பத்தி என்னோட ப்ளாக்ல எழுதியிருக்கேன்!

    ReplyDelete
  23. உண்மைதான் நச்சின்னு சொல்லிபுட்டிகே - பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. jackie you are wrong

    if you have proper documents and abiding by rules then no one can stop and harass you.

    if any policeman stops and harass you,
    if you have guts you note down the name and number of the police personnel from the batch which will be displayed on his left pocket side

    and write a complaint to the Joint commissioner of police (Traffic) with time, date and location
    Definitely action will be taken against those erring police personnel.

    Then one important thing only traffic sergeant can challan ( receipt for fine payment) you. Those head constables, constables in white shirt and kahki pants have no right to challan you.

    But no one is giving complaint against those personnel. this is the reality

    "Truth alone triumphs"

    ReplyDelete
  25. சரியா சொன்னீங்க. அவனுங்ககிட்ட பீட்டர் வுட்டீங்க அப்பீட்டுதான். ரிப்பீட்டு ஆகாம பார்த்துக்கோணும்னா கப்பித்தனமா பேசமா வர்றது நல்லது. அந்த பிச்சக்காரபயலுகளுக்கு ஏதாவது ஒரு எலும்பு துண்ட தூக்கிப்போட்டு பேமானிப் பசங்களான்னு தள்ளிப் போய் திட்டிட்டு ஓடிருங்க.

    ReplyDelete
  26. Ippadi than en nanpar signal kavnikkal sendru vittar(signal jump). Valakkam pola valavil iruntha police nanbaridum mokkai pottu 50 fine katta vaithu vittargal. Apothu aduthu oruvar matti vittar. Avar doctor, avasaramaga sella vendum endru medical kid katti irukar. Nanbar doctoridum 50 kuduthu vittu kilambungal endru signal seithar. Nanbarathu ketta neram, Poga sonnathai mattum parthu vittar Police. Appuram enna, doctor -i anuppi vittu nanbarai doctorukum serthu fine katta solli vittar police. Pavam nanbar

    ReplyDelete
  27. இந்தப் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவல்களைத் தந்திருக்கிறீர்கள் - பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  28. Nalla thagaval... 2wheeler oottunargallukk kandippaga udavum...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner