MOTEL NANA-2010/உலகசினிமா/செர்பியா/ வாத்தியாருக்கு ஆப்பு...

எல்லா  ஊரிலும் மாணவர்கள்  ஒரே மாதிரியாக இருக்கின்றார்கள்.. வாத்தியாரை ஓட்டுவது என்றால் அல்வா சாப்பிடுவது போல...நான் முதன் முதலாக வகுப்பு எடுக்க போகும் போது நான்  மிகவும் மாணவர்களால் ஓட்டப்பட்டேன்..  கோபம் கொள்ளவில்லை...

நான் அப்படி பட்டவன் இல்லை என்று  என் பேச்சின் மூலமும் என் வகுப்பின் மூலமும் என்னை உணர்த்தினேன்... இன்று சென்னையில்  ஆவிச்சி பள்ளி எதிரே எடிட் ஸ்டுடியோ வைத்து இருக்கும் எனது மாணவன்  கார்த்திக் வீரா எல்லாம்  இன்று வரை மிக நட்பாக இருக்கின்றான்..2005ல் அவர்கள் வகுப்புக்கு போகும் போது என்னை ஓட்டினார்கள்.. இரண்டு நாட்கள்தான்... அதன் பிறகு சரிசெய்து விட்டேன்.. எல்லா புது வாத்தியார்களுக்கும் கல்லூரியில் செட் ஆகும் வரை இந்த பிரச்சனை இருக்கும்.2011ல் எனக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய மாணவர்கள் இருவர் 2005ல் அவர்களுக்கு வகுப்பு எடுத்து இருக்கின்றேன்.. கார்திக் வீரா , ராஜு இருவரும் இன்னும் நட்பாய் இருக்கின்றார்கள்...

வருடத்துக்கு குறைந்தது ஒரு பத்து அராத்து மாணவர்களையாவது ஆசிரியர் பெருமக்கள் செய்த பாவத்துக்கு தக்கவாறு ஆண்டவன் வகுப்புக்கு அனுப்பி வைப்பான்.

அவைர்களை சமாளித்து அவர்களை தன்வழிபடுத்துவதும், நல்வழிபடுத்துவதும்ஒரு கலை....அந்த கலை எனக்கு நிரம்ப வரும் என்பதில் நான் பெருமையாக  சொல்லிக்கொள்கின்றேன்...

நான் வாத்தியார் நீ எனக்கு அடிமை என்று ஒரு போதும் என் மாணவனை நான் நினைத்தது இல்லை

MOTEL NANA-2010/உலகசினிமா/செர்பியா படத்தின் கதை என்ன??

இவான் ஒரு கல்லூரியில் புரபசர்.... ஒரு வராலற்று படம் நடத்தும் போது
ஒரு அரத்து மாணவனுக்கு இவனுக்கும் தர்க்கம் ஏற்படுகின்றது... பேச்சு தடித்து மாணவன் ஓத்தா என்று சொல்லிவிடுகின்றான் இத்னால்  கோபம் கொண்ட இவான்  அந்த மாணவனை கன்னத்தில் அடித்து விடுகின்றான்... இந்த அடித்த நிகழ்வை பக்கத்தில் உட்கார்ந்து இருந்த மாணவி செல்போனில் வீடியோவாக எடுத்து விட.. அது அந்த ஊர் தொலைகாட்சிகளில் நம்ம ஊர் நித்யா கிளிப்பிங் ரேஞ்சுக்கு ஓட்டுகின்றார்கள்.. அது பற்றிய விவாதம் நடக்கின்றது.. கடைசியாக வாத்தியாருக்கு தண்டனையாக  கிராமத்தில் இருக்கும் ஒரு எலிமென்ட்ரி பள்ளியில் வாத்தியார் வேலை கொடுக்கின்றார்கள்...

அந்த பள்ளிக்கு பக்கத்திலேயே பன்னி மேய்க்கின்றார்கள்.. அந்த ஊரில் தங்க இடம் இல்லை.. அதனால் நானா என்ற ஓட்டலில் தங்குகின்றான்... அந்த ஊருக்கு வரும் போதே  பேருந்தில் ஜேஸ்மினா என்ற பெண்ணை சந்திக்கின்றான். அந்த பெண்தான் அந்த ஒட்டலில் தங்க இடம் கொடுக்கின்றாள்.. ஆனால் அந்த ஓட்டல் ஓனர் அந்த  பெண்ணை மடக்க பிராக்கெட் போட, இதனால்  இவானுக்கு அந்த பெண்ணுக்கும் ஒரு இது உருவாகின்றது.. முடிவு என்ன என்பதை வெண்திரையில் அவசரம் இல்லாமல் காண்க......


படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

கல்லுரியில் வேலை செய்யதவனை அனா ஆவான்னா சொல்லிக்கொடுப்பதில்  உள்ள கஷ்டத்தை காட்சியாக்கி இருப்பது தேர்ந்த ரசனை...

எல்லா ஊரிலும் ஜன்னல் ஓர சீட்டுக்கு அடித்து கொள்வது வழமைதான் போல....

மிக முக்கியமாக ஜன்னல் ஓர சீட்டு நமக்கு ஒதுக்கபட்டு இருந்தாலும் அடாவடியாக ஜன்னல் ஓரம் உட்கார பெண்கள் போட்டி போடுவது   எல்லா இடத்திலும் பொது... கடைசியில் அவள்தாள் ஜன்னல் ஒரம் உட்கார்ந்து இருப்பாள்...

நம்ம ஊரில்  வகுப்பறையில் செல்போன் அலவுட் கிடையாது.. ஆனால் அந்த ஊரில் அலவுட் போல...

இந்த படம் ரஷ்ய படஉலகவிழாவில் திரையிடபட்டது...

சென்னை எட்டாவது உலக திரைப்படவிழாவில் சென்னை உட்லன்ட்ஸ் சிம்பனியில் திரையிடப்பட்டது..படத்தின் டிரைலர்...படக்குழுவினர் விபரம்..

Director: Predrag Velinovic, Serbia - Bosnia-Herzegovina, 2010, Drama, 92 min,  Cast: Dragan Micanovic, Nikolina Djordjevic, Zijah Sokolovic, Nikola Pejakovic, Mladen Nelevic, Ljubivoje Tadic


பைனல் கிக்...
இந்த படம் பார்க்கவேண்டியபடம்தான்...உலக படம் பார்க்கும்  பொறுமை இருந்தால் மட்டுமே இந்த படத்தை பார்க்கவேண்டியபடமாக தோன்றும் இல்லையென்றால் இந்த படம் டைம்பாஸ்படமாக தோன்றிவிடும்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

6 comments:

 1. ஒட்டு போடும் கடமை முடுஞ்சுது

  ReplyDelete
 2. வாத்தியாரு கதையா...?
  சரி... ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க... நானும் அந்தப் பணி பார்த்தப்போ பழகியவர்கள் இன்னும் என்னுடன் நட்பாய்...
  நல்ல விமர்சனம்.

  ReplyDelete
 3. எதனால் இந்தப் படம் உலகத்திரைப்பட விழாக்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது சார்?

  ----செங்கோவி
  சீமானும் சீமானின் தாத்தாக்களும்(தேர்தல் ஸ்பெஷல்)

  ReplyDelete
 4. பின்னுட்டம் இட்ட நண்பர்களுக்கு நன்றி..

  சேகுமார்... நீங்க வாத்தியாரா?, இப்பதான் எனக்கு தெரியும்... வணக்கம் வாத்தியரே..

  செங்கோவி... கரகாட்டகாரன் படம் ஏன் 300 நாளைக்கு ஓடிச்சின்னு சொல்ல முடியுமா? அது போலாதான்... செர்பியாவை பொறுத்தவரை அது நல்லபடம்.....

  ReplyDelete
 5. // ஒரு அரத்து மாணவனுக்கு இவனுக்கும் தர்க்கம் ஏற்படுகின்றது... பேச்சு தடித்து மாணவன் ஓத்தா என்று சொல்லிவிடுகின்றான் //

  ஆங்கிலப் படத்தில் அந்த வார்த்தையைக் கூடவா சொல்றாங்க...

  ReplyDelete
 6. யேய் ராசா பச்ச்சகொலந்தைக்கு புரியிற மாதிரி எழுதிறிய நீ நல்லாயிரு .

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner