MY WORDS. MY LIES, MY LOVE/உலக சினிமா/ஜெர்மனி/ ஒரு பிரபல எழுத்தாளனின் பொய் முகம்.


2011 வருடத்தில் இந்த தளத்தின் முதல் திரைவிமர்சனம்....

எனக்கு தெரிந்து தமிழகத்தில்  உள்ள எழுத்தாளர்களில் எழுத்தாளர்களுக்கு இந்த நாட்டில் மதிப்பில்லை என்று 1438 தடவைக்கு மேல் அதிகமாக புலம்பும் ஒரே எழுத்தாளர் சாரு என்பேன்...எனக்கும் இலக்கியத்துக்கும் ரொம்ப தூரம்...ஆனால் ஏன் இப்படி மற்ற தமிழ் எழுத்தாளர்களை விட இவர் இந்த விஷயத்தை எப்போதும் மேடைகளில் பேசி வருகின்றார் என்பது எனக்கு புரியாத புதிர்தான்.

எனென்றால் எந்த வெளிநாட்டுக்கும் போய் முக்கியமாக ஐரோப்பிய தேசத்துக்கு எல்லாம் போய் இலக்கிய சூழலை நான் அறிந்தவன் அல்ல.. அது போலத்தான் பல தமிழ் எழுத்தாளர்களும்... அதனால்தான் சாரு அளவுக்கு புலம்புவது இல்லை... சாரு மட்டும் இப்படி புலம்ப காரணம் சாரு வெளிநாட்டுக்கு போய் இருக்கின்றார்...
ஐரோப்பிய நாடுகளில் எழுத்தாளர்களை கொண்டாடுவதை பார்த்து  இருக்கின்றார்.. அது போலான இலக்கிய சூழல் தமிழ்நாட்டிலும் வர வேண்டும் என்று புலம்புவது சரிதான்... காரணம் இந்த படத்தை நான் பார்த்த பொது எனக்கு சாருவின் மேடை பேச்சுக்கள்தான் நினைவுக்கு வருகின்றது...

ஒருத்தன் ஒரே ஒரு நாவல்தான் எழுதி இருப்பான்.. பட் அவனுக்கு  ஜெர்மனியில் ரஜினிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை  இலக்கிய ரசிகர்கள் கொடுக்கின்றார்கள்..ஆனால் இங்கு  தமிழகத்தில் அப்படியே தலைக்கீழ்....

வாழ்வில்  ஒரு விஷயத்துக்கு பொய் சொல்லிவிட்டால் அந்த பொய்யை மறைக்க பொய்யை சொல்லிக்கொண்டே இருக்க  வேண்டும்... சில நேரங்களில் விளையாட்டு வினையாகி விடும்... விளையாட்டாக சொன்ன பொய் விபரிதமாக  சில நேரங்களில் மாறிவிடும்.. ஏன்டா அந்த பொய்யை சொல்லிதொலைஞ்சோம் என்று நினைத்து நினைத்து நில நேர சூழ்நிலைகள் நம்மை வருத்தபட வைக்கும்.


MY WORDS. MY LIES, MY LOVE/உலக சினிமா/ஜெர்மனி படத்தின் கதை என்ன..??

டேவிட் கேர்ன் ஒரு ஹோட்டலில் சர்வர்... அவனுக்கும் எழுத்துக்கும் ஏழாம் பொறுத்ததம்....சாம்பார் வாசனை கண்டுபிடிக்கும் அளவுக்கு இலக்கியவாசனை சுத்தமாக கிடையாது... ஹோட்டலில் சாப்பிடவரும் மேரி என்ற அழகு  பெண்ணை பார்க்கின்றான்.. அவளுக்கு இலக்கியமதான் சுவாசம் நேசம் எல்லாம்... நம்மாளுக்கு அந்த பெண்ணை பிராக்கெட் போடலாம் என்று முடிவு எடுத்து ந்த பெண்ணை பாலோ செய்தால்..

அந்த பெண் ஊரில் இருக்கும் எந்த பழைய புத்தக கடையையும் விட்டு வைக்காமல் அலைந்து திரிந்து தனது இலக்கியதாகத்தை தணித்து கொள்கின்றாள்... நம்ம டேவிட் வெறுத்து போய் ஒரு நாள் பழைய புத்தககடைக்கு பக்கத்தில் இருக்கும் பழைய மேஜையை வாங்குகின்றான்...

மேஜையில் மேல்புரத்தில் ஒரு திறக்கவே முடியாத டிராயர் ஒன்று இருக்கின்றது... அதை கஷ்டபட்டு திறந்தால் உள்ளே பழுப்பு நிறத்தில் நிறைய காகிதங்கள் இருக்கின்றன..

போர் அடிக்கும்  போது அதனை படித்து பார்த்தால் அது  ஒரு எழுத்தாளன் எழுதிய அச்சில் ஏறாத நாவல் அது... சரி ஆபத்துக்கு பாவம் இல்லை என்பது போல அந்த நாவலை அப்படியே சிஸ்டத்தில் ஸ்கேன் செய்து சூட சூட பிரின்ட் போட்டு  எழுதியவர் என்ற இடத்தில் அப்படியே நோவாமல் டேவிட் என்று  பெயரை போட்டு அதனை ஒரு பைல் போல் தயார் செய்து மேரியிடம் போய் கொடுக்கின்றான்..

எப்படி தெரியுமா கொடுக்கின்றான்..???ஏதோ என் மனதில் தோன்றியதை எல்லாம் கிரிக்கி  வச்சி இருக்கின்றேன் என்று சொல்ல..  முதலில் இவன் கிருக்கன் ஏதோ கொடுக்கின்றான் என்று அலட்சியமாக வாங்கிகொள்கின்றோள் மேரி.. மறுநாள் காலை டேவிட்டை பார்த்து விட்டு அந்த நாவலை படித்தேன் எவ்ளவு உணர்வு பூர்வமாய் எழுதி இருக்கின்றாய்?, என்று சொல்லி அழுது விட்டு அந்த படைப்பை அப்படியே ஒரு பதிப்பகத்துக்கு அனுப்பி வைக்க அந்த எழுத்தின் வலிமை இரண்டு நாளில் அந்த நாவல் புத்தகமாக வெளிவருகின்றது...

வெளிவந்த நேரம் நல்ல  நேரம் அந்த புத்தகம் சூப்பர் ஹீட்... சரி இப்படி பொய் புளிகியவனுக்கு கடவுள் தண்டனையே கொடுக்கமபட்டாரா? என்று நீங்கள் புலம்புவது தெரிகின்றது.. அந்த நாவலை எழுதியவன் என் நண்பன் என்று ஒருத்தன் வருகின்றான்.. அவன்  அந்த பழைய மேசையை இவனிடம் விற்ற கடைக்காரன்...... அப்புறம் நடக்கும் குழப்பம் சிரிப்புடன் கண்ணில் நீர்வர சிரிக்க சிரிக்க சற்றே பரபரப்புடன் சொல்லி இருக்கின்றார்கள்.. மீதியை வெண்திரையில் பாருங்கள்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

நம்ம ஊர்ல எல்லாம் ஒரு எழுத்தாளர் புக்கை வெளியிட்டு விட்டு சாதாரணமாக போய் விடுகின்றார்கள்.. ஜெர்மணியில் அப்படி இல்லை.. ஒரு ஹால் ரெடி செய்து அதில் ஒரு  சேரை போட்டு அந்த ஹாலில் ஆயிரத்துக்கு மேல் கூடியிருக்கும் மக்களுக்கு நடுவே தான் எழுதிய கதையை ஏற்ற இரக்கத்துடன்  சத்தமாக படிக்க வேண்டும்... இதுதான் அவர்கள் கலாச்சாரம்.... இப்படி எழுதியதை படிக்க வேண்டிய ஹாலில் டேவிட் படும் கஷ்ங்கள்.. ஆடியன்ஸ் கேட்கும் கேள்விகள் அதுக்கு டேவிட் சமாளிப்புகேஷன் என்று அசத்தி இருக்கின்றார்.. டேவிட் கதாபாத்திரம் ஏற்று நடித்தவர்...

மூன்றே மெயின் கதாபாத்திரங்கள் வைத்துக்கொண்டு அதை சுவாரஸ்யபடுத்தி இருப்பது சிறப்பு...


ஒரு பிரபல எழுத்தாளனுக்கு மேனேஜர் ஆக ஆள் ஆளுக்கு அடித்துக்கொள்வது நல்ல நகைச்சுவை...

அடுத்த  நாவல் தன்னுடைய பதிப்பகத்து  மூலம்தான்  இருக்க வேண்டும் என்று ஒவ்வோரு பதிப்பகமும் வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து முயற்சிக்க அந்த பழைய புத்தககடைக்காரன் எப்போதும் கொடைச்சல் கொடுக்க.. சுவாரஸ்யமோ சுவாரஸ்யம்....

டேவிட் விஷயம் தேரிந்து காதலி மேரி விட்டு விட்டு போய்விடுவாளோ  ?? என்ற பதைபதைப்பு ஏற்படுவது படத்தின் விறு விறுப்புக்கு சிறப்பு....

இந்த படம் போன வருடம் நடந்த சென்னை எட்டாவது உலக திரைப்படவிழாவில் உட்லண்ட்ஸ் தியேட்டரில் திரையிடப்பட்டது..

ரசிகர்களை சிரிக்க சிரிக்க கண்களில் நீர்வரவழைத்த படம்.. கிளைமாக்ஸ் கவிதை...


படத்தின் டிரைலர்..படக்குழுவினர் விபரம்

Director:
Alain Gsponer
Writers:
Alex Buresch (screenplay), Martin Suter (novel)
Stars:
Daniel Brühl, Hannah Herzsprung and Henry Hübchen

பைனல் கிக்..


இந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்.. அதனால் உடனே டவுன்லோட் செய்யுங்கள்..பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால் தமிழ்மணத் திரட்டியில் பெயர்  மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து வாக்களியுங்கள்..

9 comments:

 1. Story is interesting,,Will download.
  Download link please.

  ReplyDelete
 2. வணக்கம் நண்பரே ,


  புத்தாண்டு வாழ்த்துகள்

  இந்த வருடம் உங்களுக்கு இனிய வருடமாக வாழ்த்துகள்

  உங்கள் உலக திரைப்பட விமர்சனம் வெகு அருமை

  நான் கடந்த ஒரு வருடமாய் தொடர்ந்து படித்து
  வருகிரேன்

  மன்னிக்கயும் எனக்கு தமிழ் டைபிங் பழக்கமில்லை

  உங்கள் விமர்சனம் பாதி படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது

  மீதி படத்தை பார்க்க எங்கு டவுன்லோட் செய்வது


  அன்புடன்

  ReplyDelete
 3. படத்தின் கதையை மிகச் சுவாரஸ்யமாய்
  சொல்லியுள்ளீர்கள். அவசியம் பார்க்க
  வேண்டும் சார்!

  -கலையன்பன்.
  (இது பாடல் பற்றிய தேடல்.)

  ReplyDelete
 4. பதிவர்களை வெளிநாட்டுல மதிக்கிறாங்களா இல்லையா பாஸ்?...

  ReplyDelete
 5. புத்தாண்டில் சில மாற்றங்கள் தெரிகிறதே... உலகப்பட விமர்சனத்துக்கு டைட்டில் வைக்கும் விதம் புதுசு... ஓட்டுப்பட்டைகள் அருகே உள்ள வாசகம் புதுசு... ஏன் இந்த மாற்றங்கள்...?

  ReplyDelete
 6. எண்பதுகளின் முற்பகுதியில் கிட்டத்தட்ட இதே கதையோடு மோகன் நடித்து ஒரு படம் வந்தது. படம் பெயர் ருசி என்று நினைக்கிறேன். ஒரு கால் ஊனமுற்ற பெண் மோகனைக் காதலிப்பார். ஆனால் மோகனிடம் சொல்லும்முன் அவர் இறந்து விடுவார். அந்த பெண் ஒரு எழுத்தாளரும் கூட. ஆனால் எழுதியது எதையும் பதிப்பிக்காதவர். அவர் வீட்டில் கிடைக்கும் சில கதைகளையும், புதினங்களையும் வைத்து மோகன் ஒரு பெரிய எழுத்தாளர் ஆகி விடுவார். இது தெரிந்த அப்பெண்ணின் உறவினர் மோகனை பணம் கேட்டு மிரட்டுவார். முடிவு ஞாபகமில்லை. எங்காவது டி.வி.டி கிடைத்தால் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 7. i need "The Curious Case of Benjamin Button" movie review..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner