FASTER-2010 தமிழில் துருவன்...அவசரமாக பழிதீர்த்தல்...


நீங்கள் அவசரமாக என்னவெல்லாம்  செய்வீர்கள்...அவசரமாக சாப்பிடுவேன்.. பத்தாவது சர்ட்டிபிகேட் வந்ததும் எம்ளாய்மென்ட் எக்ஸ்செஞ்ல பதிவு பண்ணுவேன் அப்புறம்... சார் அந்த மேட்டருக்கு வேக வேகமா பண்ணதான்சார் கிக்கு.. ரைட் ... நெக்ஸ்ட்..

சார் இந்த பஸ்ல வரும் போது  சட்டுன்னு ஒன்னுக்கு வந்துடும்.. எப்படா? பஸ் நிக்கும்னு பார்த்து அவசரமா ஓடிப்போயி உச்சா  போனாதான்சார்.. நிம்மதி...

சார் எல்லாத்தை விட கொடுமை மவுண்ட் ரோட்ல  பைக்ல போகும் போது திடிர்னு வயித்தைகலக்கிடிச்சின்னு வச்சிக்கிங்க.. அப்ப வரும் பாருங்க ஒரு கோபம் ரொம்ப கொடுமைங்க அது... மத்த எல்லாத்துக்கும் கூட ஒரு தீர்வு கிடைச்சிடும்.. அந்த மேட்டருக்கு ஒரு மறைவிடம் தண்ணீர் எல்லாம் தேவை,, அதனால  அவசரமா அவசரமா டாய்லட் தேடி ஒடுவேன்.... குட் உங்க அவசரத்தை எல்லாத்தையும் சொல்லிட்டிங்க.....

சரி  நம்ம ஹாலிவுட் ஹீரோக்களுக்கு அவசரமா செய்யற வேலைகள் நிறைய.. பஸ் நின்னா வெடிக்கும்   அப்படிப்பட்ட  பஸ்சை கஷ்டபட்டு நிக்காம ஓட்டி மக்களை காப்பாத்தனும், விமானி திடிர்னு செத்துட்டா அவசரமா பிளைட் ஓட்டி மக்களை பத்திரமா தரையிறக்கனும்..எட்டு மணிக்கு ஆப்பாயில் சாப்பிடபோறேன்னு சொல்லறது போல கொலை செய்யபோகும் சைக்கோ கிட்ட இருந்து உயிரை காப்பத்தனும், நிறுத்தமுடியாத ரெயிலை நிறுத்தனும்... இதெல்லாம் நம்ம ஹாலி ஆளுங்க செய்யறதுதான்...

பட் இந்த படத்து ஹீரோ ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் ஸ்டராங்க ஒரு டீபோடு என்பது போல கொலை செய்கின்றான்..


FASTER-2010 படத்தின் கதை என்ன???

Dwayne Johnson ஒரு டிரைவர்... சிறையில் இருக்கின்றான்...  ரிலிஸ்டேட் அன்னைக்கு ஜெயிலர் சொல்கின்றார்.. உனக்கு என்கிட்ட சொல்ல ஏதாவது இருக்கான்னு கேட்கின்றார்.... நாமளா இருந்தா..என்ன சொல்லுவோம்...ஜெயிலர் அய்யா உங்க பிள்ள போல பார்த்துகிட்டிங்க... இந்த உதவியை நான் என்னைக்கு மறக்க மாட்டேன்னு சொல்லி இருப்போம்.. ஆனா நம்ம ஹீரோ வெளிய  போகும் வழி எது ? என்று கேட்கின்றான்...

சரி இவ்வளவு அவசரமா வெளியே போய் அப்படி என்னகழட்ட போறான்னு பார்த்தா???வெளியே போய் ஒரு காரை எடுத்து கிட்டு ஒரு நாளைக்கு டைமுக்கு  ஏத்தது போல  ஒரு கொலை அல்லது இரண்டு கொலை செய்கின்றான்...ஆனால் ஒரு நாளைக்கு ஒரு கொலை நிச்சயம்...சரி ஏதோ ஒருவிஷயத்துக்கு பழிக்கு பழி வாங்குறான்னு பார்த்தா?? வில்லன் சுதாரிசிச்க்கிட்டு ஹீரோவை கொல்ல ஆள் வைக்கின்றான்....அந்த ஆள் ஒரு பெரிய பணக்காரன்.. அவன் ஏன் ஹீரோவை கொலை செய்ய ஒத்துக்கிட்டான்னு கேட்டா??? உங்களுக்கே சிரிப்பா இருக்கும்...... சரி ஏன் கொலை செய்யறான்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?? அதைவிட அந்த கிளைமாக்ஸ் அற்புதம்..... சரி படம் பார்க்க ஆவலா இருக்கா இந்த படம் இப்ப சென்னையில ஓடுது.. தமிழ்ல துருவன்னு பெயர்ல ஓடுது...படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படம்  இயக்குனர் குவன்டின் ஸ்டைலில் எடுக்கப்பட்டு இருக்கும் படம்...  மேக்கிங் ஷாட்டுபியூட்டிகளில் கலக்கி இருக்கின்றார்கள்.

படத்துக்கு டைட்டிலுக்கு ஏற்றது  போல பாஸ்ட்டாகதான் இருக்கின்றது..
ஹீரோ ஜான்சனுக்கு இந்த படத்தில் உடம்பு ஏறி இருக்கின்றது...

பெரிய உடம்பு..  ஜெயிலில் அழைத்து வரும் அந்த காட்சி  ஒன்று போதும்...

ஹெலிகாப்டர்  ஏரியல் வியூ காட்சிகளில் நடக்கும் சேசிங் மற்றும் பேர்ட் ஐவியூ  ஷாட்டில் அந்த நகரம் வெகு  அழகு.....

தப்பிக்காக  அந்த கொலைகள் நடக்கின்றன என்றாலும் அந்த பாசத்தை கொஞ்சம் அழுத்தமாக காட்டி இருந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்...  பார்த்தே தீர வேண்டியபடங்கள் பட்டியலில் இணைந்து இருக்கும்.முன்பு கொலைக்கு உடந்தையாக இருந்தவன்  பின்னாளில் பாதாராக மாறிப்போய் இருப்பவனை துப்பாக்கி முனையில் அவனிடம் பேசி இப்ப உன்னை காப்பாற்றியது கடவுள் இல்லை... நான் என்று சொல்லி வசனம் பேசுவது அழகு...

 காருக்கு பின்னால் போலிஸ் கார்களின் விளக்குகள் ஹீரோ  கண்களில் தெரிவது  அழகு....


முதலில் இந்த படத்தின் இயக்குனர்  வேறு... பிறகு ஏதோ பஞ்சாயத்து நடந்து வேறு இயக்குனரை வைத்து படத்தை முடித்து இருக்கின்றார்கள்..படத்தின் டிரைலர்...   படக்குழுவினர் விபரம்..


Directed by     George Tillman, Jr.
Produced by     Tony Gayton
Liz Glotzer
Martin Shafer
Robert Teitel
Written by     Tony Gayton
Joe Gayton
Starring     Dwayne Johnson
Billy Bob Thornton
Carla Gugino
Moon Bloodgood
Oliver Jackson-Cohen
Maggie Grace
Matt Gerald
Music by     Clint Mansell
Studio     Castle Rock Entertainment
Distributed by     CBS Films
Tristar Pictures
Release date(s)     November 24, 2010 (2010-11-24)
Country     United States
Language     English
Budget     $24 million[1]
Gross revenue     $24,850,416


பைனல் கிக்..

 பரபரப்பாய் ஆக்ஷன்படம் பார்த்து நாளாச்சு என்ற வருத்தத்தை தீர்க்க வந்து இருக்கும் படம்...
அவசியம் பார்க்கவேண்டியபடம்...

=============================


நன்றி........
நண்பர் பீஆர்ஓ  சிவா 
================


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

14 comments:

 1. Good review will search for this movie

  ReplyDelete
 2. My First comment in Blog and ur blog.. Too good.. Keep it up...

  ReplyDelete
 3. நல்ல விமர்சனம். துருவன் பேரை கேட்டால் பேராண்மை படம்தான் ஞாபகத்துக்கு வருது.

  ReplyDelete
 4. எங்க ஊர்ல இந்த படத்தை தூக்கிட்டாங்க பாஸ்!!!
  டவுன்லோட் பண்ணித்தான் பார்க்கணும்!
  விமர்சனம் அருமை

  ReplyDelete
 5. கலக்கிட்டிங்க. நல்ல விமர்சனம்.

  ReplyDelete
 6. விமர்சனமும் ரொம்ப அவசரமாக டைப் செய்தது போல் இருக்கிறது.

  ஒருவேளை நான் அவசரமாக படித்தேனா என்று தெரியவில்லை?

  லகுடபாண்டி

  ReplyDelete
 7. படத்தைப் பற்றிய சுவாரஸ்யங்களை பட்டியலிட்டு
  விளக்கியதால், படம் பார்க்கும் பேராவலை
  ஏற்படுத்திவிட்டீர்கள். நன்றி  சார்!
   -கலையன்பன்.

  இது பாடல் பற்றிய தேடல்!
  சிரிச்சா கொல்லி மலைக் குயிலு!
  !

  ReplyDelete
 8. விமர்சனமும் ரொம்ப அவசரமாக டைப் செய்தது போல் இருக்கிறது.தம்பிக்காக என்பது தப்பி்க்காக என்றுள்ளது.

  ReplyDelete
 9. ஹீரோ பேர தி ராக் (The Rock)ன்னு சொல்லுங்க தல! அப்பிடி சொன்னாதான் நிறைய பேருக்கு தெரியும்! பாத்துட வேண்டியதுதான்!

  ReplyDelete
 10. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

  எஸ் விமர்சனமும் ஒரு மணி நேரத்தில் டைப் செய்து போஸ்ட் செய்தேன்..

  ReplyDelete
 11. ஹீரோ rock ண தான் எல்லாரும் கும் தெரியும் , நல்ல விமர்சனம் , படம் டவுண்லோட் பண்ணி யாசி ஆனா பாக்க முடியல

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner